மதுரைப்பதிவர்களிடையே “ஏதுமே” நடக்கவில்லையே என்ற கவலையில் ஒரு சந்திப்பை ஏற்படுத்தினோம். புதிய பதிவர்கள் ஐவர் இணைந்தார்கள்.
நூலாய்வு செய்ய முடிவு செய்திருந்தோம். சீனா நூலாய்வு செய்ய முதலே முடிவாகியிருந்தது. ஆனாலும் புதிதாக வந்த ஜெயபாண்டியன் காந்தியைப் பற்றி தான் வாசித்த சில பகுதிகளைப் பற்றிக் கூறினார். பின் சீனாவும் தன் நூலாய்வை செய்தார். இதன் விளக்கங்களை இங்கே காணலாம்.
ஜெயமாறன் ஜெயமாறன் - ஓராண்டு பதிவராக முடித்து விட்டாராமே .. காதல் சுவை சொட்டும் கவிதைகள் .......... ம்..ம்.. வயசு ..! |
’அனிமல்’ ஜெயபாண்டியன் |
animal ஜெயபாண்டியன்: இன்னும் இரு ஆண்டுகள் கழித்து இவர்தான் மிஸ்டர். மதுரை. ஆசை அவருக்கு ... வாழ்த்துவோம் ஆசை நிறைவேற ... எதற்கு 'animal' என்ற பெயர்? தெரியவில்லை.
பிரகாஷ் குமார் பிரகாஷ்: அவர் ஏன் குண்டாகவில்லைன்னு தெரிஞ்சுக்கணும்னா .. இந்தப் பதிவைப் பாருங்க .. |
ஜெயமாறன், ஜெயபாண்டியன், கார்த்திக் கார்த்திகேயன்” பதிவுகளில் பாடம் எடுக்கிறான் ( என் மாணவன் .. அதனால் இந்த ‘ன்’!) இந்த பாடம் ரொம்ப பயனுள்ளது... ஆச்சரியமானதும் கூட .. நடந்த உண்மை நிகழ்வு .. |
நல்ல சிற்றுண்டியோடு நூலாய்வு முடித்து, பின் அடுத்து என்ன செய்யலாம் என்பதைப் பற்றிய உரையாடல் நடந்தது. வெறும் நூலாய்வு என்பதோடு நிற்காமல் தொடர்ந்து நாமனைவரும் கூட வேண்டும்; அவ்வப்போது தோன்றும் நல்ல விஷயங்களைச் செய்து வரலாமென முடிவெடுத்தோம். அதன்படி அடுத்த மாதம் முதல் ஞாயிறன்று ஒரு திரைப்படம் பார்ப்பது என்று முடிவெடுத்துள்ளோம்.
சரவணன், பிரகாஷ்,மணிவண்ணன், sri, ஜெர்ரி மணிவண்ணன்: பேச்சு மிகக் குறைவு அப்டின்னு நினச்சேன். ஆனா ‘பேனா’ எடுத்தா ஆள் மாறிவிடுவார் போலும். ஒரு சின்ன சான்று ... விஜய் ரசிகர்கள் இதைப் பார்க்காதீங்க! நொந்துருவீங்க! |
சீனா நல்ல சிற்றுண்டி ஒன்று கொடுத்தார். ஆனால் அது ஏனோ அப்படம் மட்டும் ‘கண்ணுக்கே தெரியாம” இருக்கிறது. என்ன மாயமோ ,,, என்ன மந்திரமோ!
சீனா எங்க சிற்றுண்டி கொடுத்தார்? கொடுத்தது திருமதி சீனா. அவர்களின் வழக்கமான உபசரிப்புக்கு எங்கள் அனைவரின் நன்றி.
22 comments:
புகைப்படங்கள் அசத்தல்... புதியவர்களுக்கு மட்டும் தனிப்படம் ..ம்ம்ம்ம் நாளப்பின்ன மீட்டிங்க் வரவேணமா அதுவும் சரிதான்.. பொண்ணு பார்க்கிற பசங்க ஸ்ரீ மற்றும் கா. பா படங்களை இன்னும் அழகா போட்டிருக்கலாம்...
அன்பின் அண்ணே தருமி
நல்லதொரு வர்ணனை - படங்கள் சூப்பர் - வாழ்க வளமுடன் - நட்புடன் தம்பி சீனா
கண்டு கொண்டேன்..கண்டுகொண்டேன் மதுரை பதிவர்களை...:))கலக்கலா நடந்திருக்குன்னு புரியுது பதிவர் சந்திப்பு...புகைப்படங்கள் அருமை...
//ஆனால் அது ஏனோ அப்படம் மட்டும் ‘கண்ணுக்கே தெரியாம” இருக்கிறது. என்ன மாயமோ ,,, என்ன மந்திரமோ!//
:-)))
//கண்டுகொண்டேன் மதுரை பதிவர்களை...:))//
புதிதாக ஐவர் வந்திருந்தார்கள். ஆறுபேர் என்றிருந்திருந்தால் இன்னும் நன்கிருந்திருக்குமே!
//நல்லதொரு வர்ணனை//
தம்பி,
அண்ணனை இப்படியெல்லாம் காலை வாரக்கூடாது.
தருமி ஐயா, பலரும் தெரிய அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியும் கூட!
சார் புகைப்படங்கள் அருமை
நா அந்தபக்கம் ஒரு ஓரமா உக்கார்ந்திருக்கேன்
புதியவர்களுக்கு வரவேற்பு :)
//ஒரு ஓரமா உக்கார்ந்திருக்கேன்//
உட்டுப் போச்சு தனியா படமெடுக்க :(
நல்ல அறி-முகம் !
//சீனா நல்ல சிற்றுண்டி ஒன்று கொடுத்தார். ஆனால் அது ஏனோ அப்படம் மட்டும் ‘கண்ணுக்கே தெரியாம” இருக்கிறது. என்ன மாயமோ ,,, என்ன மந்திரமோ!//
வேற ஒண்ணுமில்லை தருமி சார்...நாங்க எல்லாம் அந்த உணவை பார்த்து கண்ணு வச்சுருவோம் னு தான் எங்க கண்ணுக்கு தெரியலை னு நினைக்கிறேன்..:)
இதெல்லாம் கூட நடக்குதா. அசத்தீட்டீங்க நண்பர்களே.
சார் மிகவும் அருமை சார் எங்களை இந்த பதிவுலகத்திற்கு அறிமுகம் செய்ததற்கு நன்றி
நட்புடன் மாறன்
அது ஏன் அத்தனை சோகமாக முகத்தை வைத்துள்ளீர்கள்? சரி, நம்ம வீட்டுப் பக்கமும் ஒரு ஞாயிறு அன்று வர வேண்டும் என்ற எனது விண்ணப்பத்தையும் வைத்துள்ளேன்!
//அது ஏன் அத்தனை சோகமாக முகத்தை வைத்துள்ளீர்கள்?//
ஸ்ரீ அப்படி என்னை விரட்டிட்டார்; என்ன பண்றது சொல்லுங்க?!
இந்த பதிவர் அனுபவம் நன்றாய் இருந்தது. அனைத்து பதிவர்களின் உரையாடல், முக்கியமாக, உங்களின் ஒலி-ஒளி அனுபவம், அப்புறம் சீனா ஐயாவின் உபசரிப்பு.
இந்த பதிவர் அனுபவம் நன்றாய் இருந்தது. அனைத்து பதிவர்களின் உரையாடல், முக்கியமாக, உங்களின் ஒலி-ஒளி அனுபவம், அப்புறம் சீனா ஐயாவின் உபசரிப்பு.
இளைய வயசுல இதெல்லாமுமா எழுத வேண்டும்? என்ன பண்றது ? பெரும்பாலான மூத்த கோஷ்டிகள்(வெகு சிலர் தவிர)எல்லாம் சரியாவே இருக்கறாங்களா, இல்லவே இல்ல ! அப்புறம் ஆசிரியர்களில் (வெகு சிலர் தவிர) சரியாக பாடம் எடுப்பது இல்லை. இதெல்லாம் நம்மளை பாடப் படுத்துது, ஏதோ என்னால் முடிஞ்சது !!!!
My best wishes for Madurai bloggers!!
படங்கள் அத்தனையும் அருமை.
என்னது? நான் உங்களை விரட்டினேனா? ம்ம்ம் ......நடக்கிற கதையா?
ஸ்ரீ,
என் மூஞ்சை வச்சி வக்கீலய்யா கண்டு பிடிச்சிட்டாரே!
Post a Comment