Monday, May 23, 2011

503. கடவுள் என்னோடு பேசினார் ...!

*

தேர்தல் முடிவுகளோடு வெளிவந்த ஜூ.வி.யில் ஒரு பெட்டிச் செய்தி வந்திருந்தது. very interesting ...!

உயர்பதவியில் இருக்கும் ஒரு அதிகாரியிடம் ஏசு வந்து “3” என்று எழுதி சென்று விட்டாராம். ஏற்கெனவே போன அரசின் தண்டனைகள் அவருக்கு வந்த போது ஒரு விவிலிய வாசகம் அவருக்கு ஏசுவால் சொல்லப்பட்டதாம். அது விவிலியத்தில் உள்ள ஒரு வசனம். அதனால் அது அவர் மனதில் தானாகத் தோன்றியிருக்கலாமென நான் நினைத்தேன்.

ஆனால் இப்போது தேர்வு முடிவு வருவதற்கு முன்பே ஏசு வந்து ’3’ என்று எழுதியதை வைத்து அந்த அதிகாரி தி.மு.க.விற்கு மூன்று இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று நினைத்தாராம். (இந்தக் கடவுள்களே இப்படித்தான் ... சொல்ல வேண்டியதை, அது அரசியலாக இருக்கட்டும்; இல்லை, அறிவியலாக இருக்கட்டும். இப்படி ‘சுற்றி வளைத்துப் பேசுவதையே’ வாடிக்கையாக வைத்துள்ளார்கள். நேரடியாக எதையும் சட்டு புட்டுன்னு சொல்வதில்லை!!) ஆனால் திமுகவிற்கு மூன்றாவது இடம் என்றுதான் ஏசு சொல்லியிருந்திருக்கிறார் என்று அந்த அதிகாரிக்குப் பின்புதான் புரிந்ததாம்.. ஆனாலும் கடவுள்கள் செம புத்திசாலிகள்தான். திமுக வென்றிருந்தாலும் அந்த ‘3’ என்பது தி.மு.க. என்ற மூன்றெழுத்து என்று ஏசு சொன்னார் என்றும் சொல்லிக் கொள்ளலாம். அல்லது ‘3’ என்றது ‘மம்மி’ என்ற மூன்றெழுத்து, மூன்றாவது முறையாக பதவியேற்பதைக்கூட ஏசு சொன்னதாகவும் இப்போதும் சொல்லலாம். இதுவரை மூன்று I.A.S. அதிகாரிகளுக்கு எந்த பொறுப்பும் மம்மி தரவில்லையென்பதும் தினசரியில் வந்த ஒரு செய்தி. அந்த மூவரில் இந்த அதிகாரியும் ஒருவர். ஒருவேளை ஏசு ’மூவரில் நீ ஒருவன்’ என்பதைத்தான் இப்படி சொல்லியிருக்கலாமோ?!


ஏன்தான்  கடவுள்கள் இந்த வேலைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ என்று எனக்குப் புலப்படுவதேயில்லை. ஏதோ ஒன்றைச் சொல்கிறோமே .. அதை ஒழுங்காகச் சொல்லிட்டுப் போகலாமென்றும் இந்தக் கடவுள்களுக்கு ஏன் புரிபடுவதில்லை?

எனக்கும் முன்பு ஒரு “தெய்வ தரிசனம்” கிடைத்துள்ளது; அதைப் பற்றி இங்கு எழுதியுள்ளேன்.

இருந்தாலும் மேற்படி செய்தி கொடுத்த அதிகாரியின் முகவரி என்னிடம் இருந்ததால் அவருக்குக் கீழ்க்கண்ட மயில் ஒன்று அனுப்பினேன்:

hello mr. ....

read the excerpt in Junior vikatan about you and 'the message from Jesus' about the poll verdict.

got two questions:

1. should a man in public service wear his religion on his sleeves this much?

2. have you heard 'such stories' told by many - i know one interesting story told by one Dr. marimuthu, the father of John david (killer of navarasu),  for his conversion to christianity - jesus giving him the question paper for his final year exams!!

p.s.: just one more info: i was born as a christian 66 years ago!

இதுவரை இம்மயிலுக்குப் பதிலேதும் இல்லை.
இன்று - மே, 24 - காலை பதில் வந்து விட்டது. (மே,24; காலை: 10:40)

இந்த மயிலில் இரண்டாவது செய்தி இருக்கிறதே ... அதுவும் ரொம்ப interestisng .... நாவரசு கொலைக்கு முன்பே டாக்டர் மாரிமுத்து என்பவர் இந்துவாக இருந்து கிறித்துவனாக மாறியதாக என் துறைத் தலைவர் என்னிடம் சொன்னார். எப்படி, ஏன் மாறினார் என்பதற்கும் ஒரு ’கதை’ சொன்னார்.

படிக்காமல் ஊர்சுற்றிய மாரிமுத்துவிற்குக் கடைசி நேரத்தில் ஏசுவின் ஞாபகம் வந்திருக்கிறது. (ஏன் என்று என்னிடம் கேட்காதீங்க!) உடனே (இந்த மாதிரி ஆட்கள் என்ன செய்வார்களோ, அதையே அவரும் செய்துள்ளார்.) ’மனம் உருக’ ஏசுவிடம் ஜெபம் செய்ய, ஏசு அவர் முன்னே வந்து ஒரு வினாத்தாளைக் கொடுத்திருக்கிறார். அதோடு இதை leak செய்து விடாதே என்றும் ஒரு precautionary condition / command கொடுத்துள்ளார். ஆனாலும் பின்னால் ஒரு சாட்சி வேண்டுமே என்பதற்காக மாரிமுத்து நண்பன் ஒருவனிடம் சில கேள்விகளைக் கூறியுள்ளார். command-யை மீறியதற்குக் கடவுள் கண்ணை எடுக்கவில்லை! அடுத்த நாள் தேர்வில் அதே கேள்விகள்; கொஞ்சம் கேள்வி எண்கள் மட்டும் மாறியிருந்ததாம்! மாரிமுத்து தேர்வில் செம வெற்றி. அதோடு கிறித்துவனாக மாறி பிரச்சாரத்திலும் ஈடுபாடு கொண்டு, இந்தக் கதையையும் தன் கூட்டங்களில் கூறுவாராம்.

இதை என் துறைத் தலைவர் கூறியதும்  இதை எப்படி நம்புவது என்பது போல் சொல்லி விட்டு, சிறிது நேரம் கழித்து அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். (துறைத் தலைவரின் மகன் எங்கள் துறையில் இளங்கலையை முடித்து ஓரிரு ஆண்டுகள் ஆகியிருந்தது. நல்ல பையன்; நன்கு படிப்பான்; நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வாயிருந்தான்.) ’பாஸ் .. உங்க பையன் நம்ம துறையில் படிக்கும் போது அவனுக்கு நீங்கள் வினாத்தாள்களைக் கொடுத்திருப்பீர்களோ; நல்ல மதிப்பெண் பெற்றானே’ என்று கேட்டேன்.

மனிதர் துள்ளிக் குதித்து விட்டார்; பதறி விட்டார். ‘என்ன சாம்,  இப்படி சொல்லிட்டீங்க; நான் அப்படியெல்லாம் பண்ணுவேனா?’ என்று உருகிக் கேட்டு விட்டார். ‘பரவாயில்லை பாஸ்! கவலைப் படாதீங்க; நீங்க அப்படியெல்லாம் செஞ்சிருக்க மாட்டீங்க. ஆனா, ஒரு மனுஷனான நீங்களே இதை ஒரு பெரிய தப்பு என்று சொல்லும் ஒன்றை, எல்லாம் வல்ல கடவுள் செய்கிறார் என்றால் அதற்கு என்ன பொருள்?’ என்று கேட்டேன். அப்பவும் அவருக்கு மாரிமுத்தை கீழே விட மனதில்லை. ’அவர் அப்படித்தான் சொன்னார்’ என்றார்.

’மனிதனே செய்யக்கூடாது என்பதை ஏசு செய்கிறார் என்றால் நீங்கள் ஏசுவை மனிதனுக்கும் கீழான ஒன்றாக ஆக்கி விட்டீர்கள்; ஏசுவைக் கேவலப்படுத்துகிறீர்கள்’ என்றேன்.

மேலே சொன்ன ‘கதை’ நடந்ததில் எம்மாற்றமும், கூடுதலை குறைச்சலோ இன்றி சொல்லியுள்ளேன். ஆனால் இது போன்ற கதைகள் நிறைய கேட்டதுண்டு. ’துதி’ சங்கர் என்ற மதப் பிரச்சாரகர் - advertiser! - ஒருவருக்கும் இதே மாதிரி ஒரு கதையைப் பிறர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அது இதை விட interesting!  ஏனெனில் மாரிமுத்து விஷயத்தில் ஏசு வினாத்தாள் கொடுத்ததோடு நின்று விட்டார். முந்தின நாள் கிடைத்திருந்தாலும் மாரிமுத்து “படித்து” பாஸ் ஆகிவிட்டார்!  ஆனால் துதி விஷயத்தில் முடியவில்லை. கிடைத்த வினாவைப் படித்து விட்டு போனாலும் துதிக்கு தேர்வறைக்குப் போனதும் எல்லாம் மறந்து போயிற்றாம். மறுபடி அவர் இறைஞ்சி மன்றாட .... இப்போது ரொம்ப dramatic ஆக, ஏசுவின் தயவால் அவரது விடைத்தாளுக்கும், வினாத்தாளுக்கும் இடையில் ‘அப்படியே’ பதிலும்  வந்ததாம். இப்படித்தான் அவரது டிப்ளமா கோர்ஸில் பாஸ் செய்தாராம். (’பிட்’ அடிக்கும்போது இப்படித்தான் மாணவர்கள் இரண்டு தாள்களுக்கு நடுவே பிட் வைத்து காப்பி அடிப்பார்களே என்றெல்லாம் நீங்கள் நம்பிக்கையில்லாமல் நினைக்கக் கூடாது, சொல்லிப்பிட்டேன்!)

நாம் நம் வேலையை ஒழுங்காகப் பார்க்க, ‘கடவுள்கள்’ அவர்கள் வேலையை மட்டும் ஒழுங்காகப் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்??!! எதற்காக இந்த question leak, election result, போர்களில், விளையாட்டுகளில் வெற்றி தோல்வி, - இதிலெல்லாம் தலையிட வேண்டும்? புரியவேயில்லை!

:(

*

45 comments:

Rajasurian said...

//
நாம் நம் வேலையை ஒழுங்காகப் பார்க்க, ‘கடவுள்கள்’ அவர்கள் வேலையை மட்டும் ஒழுங்காகப் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்//

:)))))

kannan said...

i also read that article in JV and lauged ayya.

kannan from abu dhabi.
http://samykannan.blogspot.com/

சீனு said...

நானும் படித்தேன், சிரித்தேன். உமா சங்கர் இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை...அடுத்த தினகரன் ரெடி.

ஒசை said...

ஆண்டவர் "எல்லா" வேலையையும் பார்ப்பார் போலும்.

துளசி கோபால் said...

புரியாம இருந்தால்தான் கடவுள்!

எனக்கு இப்போ ஒரு 'ஜ'ந்தேகம்!

//p.s.: just one more info: i was born as a christian 66 years ago!//

கிறிஸ்துவ மதத்தில் குழந்தை பிறந்த பிறகு ஒரு வாரம், பத்து நாளில் (சரியான காலக்கெடு தெரியலை)அதுக்கு ஞானஸ்நானம் செஞ்சபிறகுதான் குழந்தை கிறிஸ்துவனாக ஆகுதுன்னு சொல்லக் கேட்டுருக்கேன். அப்படி இருக்க.... நீங்க எப்படி கிறிஸ்தியனாகவே பொறந்தீங்க??????

கோவி.கண்ணன் said...

அடுத்த முதல்வர் ஜெ தான்னு ஏசு வெளிப்படையாகச் சொல்லி இருந்தால், தேர்தலே நடத்தாமல் தேர்தல் செலவையாவது சேமிச்சிருக்கலாம்.

Kodees said...

நானும் அந்தப்பேட்டியைப் படித்தபோதே நினைத்தேன், என்ன ஒரு அபத்தமான பேட்டி என்று, ஒரு IAS அதிகாரி எப்படி தன் மதச்சார்பை இப்படி வெளிப்படுத்த முடிகிறது என்று.

முக்கியமாக இன்னொன்றும் எனக்குத்தோன்றியது - இவரிடம் ஒரு இந்து/முசல்மானும், ஒரு கிருத்துவரும் ஏதாவது வேலையாகச்சென்றால் இவர் அந்தக் கிருத்துவருக்குச் சாதகமாக நடக்கமாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
என்ன சொல்ல!

Anonymous said...

சூப்பர் சார்.

ramachandranusha(உஷா) said...

உமக்கு எத்தனை வயசானாலும் “ஞானம்” வ்ரப்போவதில்லை :-)

தருமி said...

//உமக்கு எத்தனை வயசானாலும் “ஞானம்” வ்ரப்போவதில்லை//

அப்பாடி! எனக்கு அப்படி ஏதும் வந்திருமோன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தேன். வராதுன்னிட்டீங்க...

நல்வாழ்த்துக்கு நன்றி

தருமி said...

//டுத்த முதல்வர் ஜெ தான்னு ஏசு வெளிப்படையாகச் சொல்லி இருந்தால், தேர்தலே நடத்தாமல் தேர்தல் செலவையாவது சேமிச்சிருக்கலாம்.//

அது எப்டீங்க, கண்ணன்? மிச்ச சொச்ச சாமிகளை உட்டுட்டீங்க. அவுக எல்லாத்தையும் கூட்டி வச்சி மெஜாரிட்டி பார்க்கணும்லா ...?

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

//நீங்க எப்படி கிறிஸ்தியனாகவே பொறந்தீங்க??????//

துளசி,
பொறக்கும்போது தலையில எழுதி உட்ருக்கும். அதை அப்புறம் தண்ணி வச்சி மறுபடி எழுதி உறுதியாக்குவாங்க!

'ஜ'ந்தேகம் தீந்துச்சா?

தருமி said...

Rajasurian
Kannan
சீனு
ஒசை
ஈரோடு கோடீஸ்
teabench

.............. மிக்க நன்றி

virutcham said...

அது என்னமோ தெரியலை இந்த கிறித்தவ மதப் பிரசாரகர்கள் எப்போ பார்த்தாலும் தேர்வுக்கு கடவுளின் குறுக்கு வழி உதவியை சொல்லி சொல்லி பிரசாரம் செய்கிறார்கள். நான் பள்ளியில் படிக்கும் போது மதிய நேரத்தில் கிரௌண்டில் சுதந்திரமாக நடந்து விட முடியாது. ஏதாவது கிறித்துவ மத பிரசாரம் செய்யும் ஆட்களிடம் மாட்டிக் கொண்டு முழிக்க வேண்டி வரும். ஒரே விஷயம் தான் அவர்கள் பொதுவாகச் சொல்லுவது. தான் தேர்வுக்கு சரியாக படிக்காமல் விவிலியத்தை படித்து விட்டு பாடத்தின் சில பக்கங்களை புரட்டி அதை மட்டும் வாசித்து விட்டு தேர்வுக்கு சென்றால் சரியாக அதில் இருந்து மட்டும் கேள்விகள் வந்திருக்கும் என்று சொல்லி தான் பாஸ் ஆனா கதையை கடவுளுக்கு காணிக்கையாக்கி எங்களையும் விவிலியம் படிக்கச் சொல்லி தாழ்மையோடு கேட்டுக் கொள்ளுவார்கள்.
இதை எல்லாம் எப்படி எதிர் கொள்வதென்றே அந்த வயதில் தெரியாது. இப்போ புரிகிறது இப்படித் தான் பல சிறுவர் சிறுமிகளை மதம் மாற்றி இருக்கக் கூடும் என்று.

thamizhparavai said...

:))))
ம்ஹ்ம்...ஐ ஏ எஸ் செலக்‌ஷன் நல்லாத்தான் எடுக்குறாய்ங்க போல...

suvanappiriyan said...

//ஏன்தான் கடவுள்கள் இந்த வேலைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ என்று எனக்குப் புலப்படுவதேயில்லை. ஏதோ ஒன்றைச் சொல்கிறோமே .. அதை ஒழுங்காகச் சொல்லிட்டுப் போகலாமென்றும் இந்தக் கடவுள்களுக்கு ஏன் புரிபடுவதில்லை?//

அதானே! கடவுள்கள் என்று வந்தாலே அங்கு குழப்படிதான். ஏக தெய்வம் என்று வந்து விட்டால் குழப்பம் தீரும். தெளிவு பிறக்கும். :-)

ஒன்றே குலம்: ஒருவனே தேவன்!

ரோஸ்விக் said...

aiyo aiyo.... :-))))

தருமி said...
This comment has been removed by the author.
ரோகிணிசிவா said...

:),செம போஸ்ட்

தருமி said...

//கடவுள்கள் என்று வந்தாலே அங்கு குழப்படிதான். ஏக தெய்வம் என்று வந்து விட்டால் குழப்பம் தீரும். தெளிவு பிறக்கும். :-)//

அட நீங்க வேற, சுவனப்பிரியன். நீங்க சொல்ற ஏக தெய்வமும் இந்தக் ‘கூட்டணியில்’ தானே வருகுது. கொஞ்சம் மாத்தி சொல்றேனே:

"ஏதோ ஒன்றைச் சொல்கிறோமே .. அதை ஒழுங்காகச் சொல்லிட்டுப் போகலாமென்று இந்த ’ஏகக் கடவுளுக்கும்’ ஏன் புரிபடுவதில்லை?"

சான்றுகள் கேட்க மாட்டீங்க; கேட்டீங்கன்னா நம்ம பழைய sperm விவகாரத்தை எடுத்துப் பாருங்க! அது ஒண்ணு போதுமே, நீங்க சொல்லும் "ஏகக் கடவுளின்” பயங்கரத் “தெளிவுக்கு”!!

பூமியை பாய் மாதிரி விரிச்சி, மலையையெல்லாம் நட்டு வைக்கிற விளக்கமெல்லாம் எதற்கு!

saarvaakan said...

அய்யா வணக்கம்
அடிக்கடி பதிவு போடுங்கள்.இம்மாதிரி விஷயங்களை நீங்கள்தான் எழுத‌ முடியும்.உமாசங்கரிடம் நிச்சயமாக இப்படி ஒரு செயலை எதிர்பார்க்கவில்லை.
நன்றி

தருமி said...

ஒண்ணு சொல்ல மறந்து போச்சே, சுவனப்பிரியன்.

//இந்தக் கடவுள்களே இப்படித்தான் ... சொல்ல வேண்டியதை, அது அரசியலாக இருக்கட்டும்; இல்லை, அறிவியலாக இருக்கட்டும்.//

இதை எழுதும்போது அறிவியலைச் சேர்த்தது நீங்கள் சொல்லும் ஏக இறைவனை நினைத்து தான் சொன்னேன்.

ஏன்னா ... மற்ற கடவுள்கள் எல்லாம் இப்படி அறிவியலுக்காக ரொம்ப மண்டை உடைத்துக் கொள்வதில்லை!

தருமி said...

இன்று - மே, 24 - காலை அவ்வதிகாரியிடமிருந்து பதில் வந்து விட்டது. (மே,24; காலை: 10:40)

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஏன் இந்த ஓரவஞ்சனை கடவுளுக்கு?.:)

எண்ணங்கள் 13189034291840215795 said...

‘கடவுள்கள்’ அவர்கள் வேலையை மட்டும் ஒழுங்காகப் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்//

:))

சீனு said...

//அதானே! கடவுள்கள் என்று வந்தாலே அங்கு குழப்படிதான். ஏக தெய்வம் என்று வந்து விட்டால் குழப்பம் தீரும். தெளிவு பிறக்கும். :-)

ஒன்றே குலம்: ஒருவனே தேவன்!//

அப்பா ஒரு வழியா இந்து மத கருத்தை ஏற்றுக் கொண்டாரே சுவனப்பிரியன்... :))))

தருமி said...

virutcham
தமிழ்ப்பறவை
ரோஸ்விக்
ரோகிணிசிவா
சார்வாகன்
எண்ணங்கள்
................ மிக்க நன்றி

தருமி said...

சீனு
‘அப்படி’ ஒண்ணு இருக்கோ?!

சீனு said...

//‘அப்படி’ ஒண்ணு இருக்கோ?!//

அவரு தான் ஏக தெய்வம் என்று வந்து விட்டால் குழப்பம் தீரும்னு சொல்றாரே. ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்று ஒரு கடவுளை (ஏக தெய்வம்) ஏற்றுக் கொண்டால் (சங்கரன்/விஷ்னு என்று இந்து மதத்தில் சொல்லப்படும் ஏக தெய்வம், அல்லா என்று இஸ்லாத்தில் சொல்லப்படும் ஏக தெய்வம் அல்லது பரமபிதா என்று கிருத்துவத்தில் சொல்லப்படும் ஏக தெய்வம்) தான் பிரச்சினையே இல்லையே!!! அதான் அவரு ஒத்துக்கிறாரானு செக் பன்னி பார்த்தேன்... :))

தருமி said...

நடத்துங்க, சீனு.

suvanappiriyan said...

சீனு!

//அவரு தான் ஏக தெய்வம் என்று வந்து விட்டால் குழப்பம் தீரும்னு சொல்றாரே. ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்று ஒரு கடவுளை (ஏக தெய்வம்) ஏற்றுக் கொண்டால் (சங்கரன்/விஷ்னு என்று இந்து மதத்தில் சொல்லப்படும் ஏக தெய்வம், அல்லா என்று இஸ்லாத்தில் சொல்லப்படும் ஏக தெய்வம் அல்லது பரமபிதா என்று கிருத்துவத்தில் சொல்லப்படும் ஏக தெய்வம்) தான் பிரச்சினையே இல்லையே!!! அதான் அவரு ஒத்துக்கிறாரானு செக் பன்னி பார்த்தேன்... :))//

'அல்லாஹ்' என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள். நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.' என்று முஹம்மதே! கூறுவீராக!'
-குர்ஆன் 17:110

சீனு said...

//'அல்லாஹ்' என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள். நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.' என்று முஹம்மதே! கூறுவீராக!'//

ஏன்? பரமபிதா, விஷ்னு, சங்கரன் அபடீன்னு சொன்னா என்னவாம்?

தருமி said...

எப்படி வேணும்னாலும் அழைச்சிக்கிங்கோன்னு அல்லா சொன்னார்னு சு.பி. சொல்கிறார். அதுக்கு ரெண்டு அரபி சொல் எடுத்துக்காட்டாகச் சொல்லியுள்ளார்.
புரிஞ்சுதா ...?

ராவணன் said...

நான் எந்த மனிதரிடமும் பேசுவதில்லை.இதுவரை பேசியதே இல்லை.

இப்படிக்கு,
கடவுள்.

சீனு said...

ஹி...ஹி...அவருக்கு ஹெல்ப் பன்னலாமேன்னு நானும் சில சொற்கள் கொடுத்தேன்...

தருமி said...

//அவருக்கு ஹெல்ப் பன்னலாமேன்னு//

யாருக்கு? சுவனப்பிரியனுக்கா, ‘அவரு’க்கா?

தருமி said...

//ராவணன் said...
நான் எந்த மனிதரிடமும் பேசுவதில்லை.இதுவரை பேசியதே இல்லை.
இப்படிக்கு,
கடவுள்.//

Dear ராவணன் & கடவுள்!

மயிலுக்கு மிக்க நன்றி.

அதுசரி கடவுளே ..இப்போ இப்படி மயில் அனுப்பிர்ரீங்க.. முந்தி எல்லாம் என்ன செய்வீங்க !!!

Anonymous said...

Curious to know the reason Uma shankar has provided you.......

yasir said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் பதிவைப் பார்க்க நேர்ந்தது . ஓய்வு எடுக்கச் சென்றுவிட்டீர்களோ?

yasir said...

//அது சரி கடவுளே.. இப்போ இப்படி மயில் அனுப்பரீங்க..முந்தி எல்லாம் என்ன செய்வீங்க!!!//

அதான் அற்புதவாதிகளான தூதர்களை அனுப்பிக் கொண்டே...இருந்துவிட்டு பிறகு மக்களுக்கு கேள்வி கேட்கும் அறிவு வந்தவுடன் தானாகவே நின்றுவிட்டதே.. இப்போதைக்கு விஞ்ஞானிகள் தான் மதவாதிகளின் பார்வையில் இன்றைய இறைத்தூதர்களாக காட்சி அளிக்கிறார்கள் . இதை வைத்துத் தான் இன்று வேத கதைபுத்தகங்கள் விலைபோகின்றன.r@viduthalai.in

yasir said...

//அது சரி கடவுளே.. இப்போ இப்படி மயில் அனுப்பரீங்க..முந்தி எல்லாம் என்ன செய்வீங்க!!!//

அதான் அற்புதவாதிகளான தூதர்களை அனுப்பிக் கொண்டே...இருந்துவிட்டு பிறகு மக்களுக்கு கேள்வி கேட்கும் அறிவு வந்தவுடன் தானாகவே நின்றுவிட்டதே.. இப்போதைக்கு விஞ்ஞானிகள் தான் மதவாதிகளின் பார்வையில் இன்றைய இறைத்தூதர்களாக காட்சி அளிக்கிறார்கள் . இதை வைத்துத் தான் இன்று வேத கதைபுத்தகங்கள் விலைபோகின்றன.r@viduthalai.in

தருமி said...

//Curious to know the reason Uma shankar has provided you....... //

ஒரு வேளை இதனால் இருக்கலாம்!!

Anonymous said...

நாசாமாப் போச்சு ! மனநல மருத்துவமனைகளில் இடம் இல்லாதத்தால் - பலர் வெளியே அலைகின்றார்கள். பேசாமல் நாமெல்லாம் மனநல மருத்துவமனைகளுக்கு சென்றுவிட்டு. இவர்களைப் போன்ற லூசுகளை வெளியே விட்டுவிடலாமா? ஹிஹி

Anonymous said...

//ஒரு வேளை இதனால் இருக்கலாம்!!//

I was taken aback when I read about his revelation. I could not imagine some one of this stature to utter those words.

இறை பயமும், நம்பிக்கையும், இந்த அளவுக்கு மூளையை மழுங்கடிகுமா?

Post a Comment