*
”இஸ்லாமிய சுவனம்” செல்ல விழைவோருக்கு ...
சில பதில்களும், ஒரே ஒரு கேள்வியும் ....
சில கேள்விகளுக்கு பலமுறை வரும் பதில்:
1400 ஆண்டுகளாக நாங்கள் இந்தக் கேள்விகளுக்குப் பதில் கூறி வருகிறோம். எதுவும் புதிதல்ல ... கேட்ட கேள்விகளே திரும்ப திரும்ப கேட்கப்படுகின்றன.
தரப்படும் பதில்களும் எப்போதும் ஒரே போன்று இருப்பதில்லை. மொழிபெயர்பாளர்களுக்கு ஏற்றாற்போல் பல அடைப்புக் குறிகள்; புதிய விளக்கங்கள். ஏனிப்படி என்றால் ...
//அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு குரானுக்கு பொருள் எழுதினார்கள் -தங்கள் கருத்தை பிராக்கட்டில் போட்டு. பின்னர் அறிவியல் அறிவு வளர வளர....பிராக்கட்டுகள் மாற்றப்படும் அல்லது தகர்க்கப்படும்.// என்று பதில் வரும். ஆக இதெல்லாம் ஒரு adjustment தான்.
//He is created from a drop emitted- Proceeding from between the backbone and the ribs. (86:7)
இவ்வசனம் சொல்வதன்படி விந்து சிறுநீரகத்தில் இருந்து வருவதாக அல்லவா அர்த்தப்படுகிறது. விந்து சிறுநீரகத்தில் இருந்து வரலாம் என்னும் பிழையான கொள்கையை கிரேக்கர்கள் தான் முதலில் கொண்டுவந்தார்கள். //
//தேனீ ‘பழத்தை’ச் சாப்பிட்டு தேன் கொடுக்கிறது.// இங்கே பழம் என்பது மரத்தில் உள்ள எல்லாவற்றையும் என்ற பொருள் வருகிறது என்ற புதிய விளக்கம் வரும்.
பூமியை கடவுள் விரித்தார்; மலைகளை நட்டு வைத்தார் என்பார்கள். வானம் ஏழு அடுக்குகள் என்பார்கள்; கடவுள் ஒரு சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறார் என்பார்கள். இதெல்லாமே அறிவியலுக்குள் திணிக்கப்படும் அடைப்புக் குறிகளின் துணையோடு.
female genital mutilation பற்றி முகமது கூறியுள்ளாரே - Do not cut too severely as that is better for a woman and more desirable for a husband. (!!!!!) - என்றால் அதையும் ஒப்புக் கொள்வதில்லை.
ஏன் சுராக்கள் தாங்கள் பேசு பொருள் அடிப்படையில் பிரிக்கப்படாமல் ‘நீளத்தை’ மட்டும் வைத்து முறைப்படுத்தப்பட்டன? இதனால் சுராக்களின் பொருள், காலம், இடம், context என்று எல்லாவிதத்திலும் மாறி விடுமே?
இதுபோல் கேள்விகள் பல. ஏதாவது ஒரு பதில் வரும் இவைகளுக்கு.
ஆனால் சில கேள்விகளுக்கு எப்பதிலும் ஏனோ வருவதேயில்லை.
நானும் ”sin of khalwa" விளக்கம் படித்து அதிர்ந்தேன். இரு பாலார் தனியே இருக்கக்கூடாதாம். (Being alone and privacy (khalwa) with a non-Mahram is unlawful (haram)) அப்படி இருக்க வேண்டிய சூழலில் அப்பெண் அந்த ஆணுக்கு முலைப்பால் கொடுத்தால் அது ஹராம் ஆகாதாம்! இது ஒரு மிக ‘நல்ல’ மதக் கருத்து.
ஆண்கள் சுவனத்திற்குச் சென்றால் என்னென்ன கிடைக்கும் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது; நன்றாகவே அவைகள் உள்ளன. நல்லது. ஆனால் இதிலும் பால் சார்ந்த வேறுபாடுகள் உள்ளன.
//இஸ்லாமிய மோட்சத்தில் தேன் பாயும்; பச்சைப்பசேல் என்றிருக்கும் என்பதெல்லாம் சரி. ஆனால் இது என்ன ? ஒவ்வொருவருக்கும் 'houris' எனப்படும் (perpetual virgins) 'நித்திய கன்னிகைகள்'? நம்ம ஊர் நித்திய கல்யாணி மாதிரி, முகமதுக்கு இவ்வுலகத்தில் கிடைத்ததைவிடவும் இரண்டு மடங்கு எண்ணிகையில் - மொத்தம் 72 ஹெளரிகள் - கிடைக்கும் என்பது எந்த வகையில் ஒரு கடவுள் தரும் 'பரிசாக' இருக்கும். It is not definitely in good taste.
இந்த இரு கேள்விகளுக்கும் யாரும் இதுவரை எந்த விளக்கமோ, பதிலோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை.
சுவனத்தில் ஆண்களுக்கு இவையெல்லாம் “மிக மிக நல்ல பரிசு”தான். இக்கருத்தை வைத்தே தீவிரவாதிகளை மூளைச் சலவை செய்வதாக வாசிக்கிறோம். ஆனால் இதில் எனக்கு வந்த ஐயம் வேறு மாதிரி. ஆண்களுக்கான சுவனம் இவ்வளவு ‘நன்றாக’ இருக்கிறதே ... அப்படியானால் பெண்களுக்கான சுவனம் எப்படியிருக்க வேண்டும். அவர்களுக்கு அல்லாவிடமிருந்து கிடைக்கும் ‘சுவனப் பரிசு’ என்னவாக இருக்கும்? இதை ஒரு கேள்வியாகப் பலமுறை வைத்தும் ஏதும் பதிலில்லை.
இதில் ஆச்சரியமும் வேதனையும் என்னவென்றால் இது போன்ற கோட்பாடுகளை ஒரு மதம் கொண்டிருக்கிறது என்பதோடல்லாமல், இவையெல்லாம் சரியே என்ற நம்பிக்கையும் கொண்டிருப்பது நல்ல வேதனையான வேடிக்கை!
இப்படி பதில் இல்லாத ஹூரிகள் பற்றிய விஷயம் பற்றி ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது. அதைப் பங்கிட்டுக் கொள்கிறேன்.
இக்கட்டுரை ஒரு பாகிஸ்தானிய நாளிதழில் - DAWN - NILOAR AHMED என்பவரால் எழுதப்பட்டது.
52: 20 - அழகிய கண்களைக் கொண்ட அழகியரை ...
55 : 72 - அழகிய பெண்களும் (ஹூரிகள்) ...
56 : 22 - அழகிய கண்களுடைய ஜூர் எனும் மங்கையரும் ...
56 : 34 -38 - அவர்களைக் கன்னியர்களாகவும் (லாய்லாஹ்?), தங்கள் கணவர்கள் மீது காதல் கொண்டவர்களாகவும் சம வயதுடையவர்களாகவும் ஆக்குவோம்.
இப்படியெல்லாம் கூறப்பட்டாலும், Maulana Umar Ahmed Usmani ஹூரி என்பது இரு பாலாருக்கும் பொருந்தும் என்கிறார். (அப்படியானால் சுவனம் செல்லும் பெண்களுக்கும் 72 ஆண் ஹூரிக்கள் கிடைக்கும் என்பதுதானே சரியாக இருக்கும்?)
இன்னொரு நம்பிக்கையும் உண்டு. இவ்வுலகில் நல்ல மனைவியாக இருந்தவர்கள் சுவனத்திற்கு வந்து சேரும் நல்ல ஆண்களுக்கு உரித்தான பெண்களாக மாற்றப்படுவார்கள்!!!!
குரானிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு - Hazrat Aasiya என்பவர் அரசனின் பட்டணத்து ராணி. ஆனாலும் தன் கணவனைக் கடவுளாகக் கருதாமல் ஒரே கடவுளை மட்டும் நம்பிய நல்ல பெண்மணி. இவருக்கு சுவனத்தில் என்ன பரிசு என்பது எல்லோருக்கும் உள்ள ஒரு கேள்வி.அவரும் ஒரு ஹூரியாக மாற்றப்பட்டு எந்த மனிதருக்காவது பரிசாக அளிக்கப்பட்டிருப்பாரா? அல்லது ஆண்களுக்கு ஹூரிகள் அளிக்கப்பட்டது போல் இவருக்கும் அதே பரிசைக் கடவுள் அளித்திருப்பாரா? சுவனத்தில் காலாதி காலம் இருக்க வேண்டும். அப்போது தனிமை வெருட்டும். ஆகவே சுவனத்தில் நல்ல உடனிருப்போருடன் இருக்க வேண்டும்.
குரானில் கூறப்பட்டுள்ள ஹூரி, azwaj - இருவருகே இரு பால்களிலும் இருப்பர்; அவர்களே பரிசுகளாக அளிக்கப்படுவர்.
* * * *
இக்கட்டுரைக்கு வந்த சில பின்னூட்டங்களில் எனக்குப் பிடித்த சில:
Syed Roman Ahsan says:
//..as for Aasia the wife of pharoah, since her husband claimed godhead and thus doomed to hell, she will have the honour of being blessed eternal companionship of Prophet Muhammad (pbuh). Can a chaste woman ask anything more than that? //
Aasia the wife of pharoah-க்கு சுவனத்தில் முகமதுவின் துணைவியாகும் வாய்ப்பு அளிக்கப்படும். ஒரு நல்ல பெண்ணுக்கு இதைவிட வேறு என்ன பெருமை?
* * * * *
Dark Prince
However, what amazed me was the quote - In Surah Al-Rehman, the Quran says, “The houris will be protected in tents, whom neither humans nor jinns have touched before (55: 72).”
WTF??? Tents even in heaven?? You gotta be kidding me......No FB, No Internet, No TV, Frarris, PlayStation.......Only Tent, Camels, Sex, Huries................................and wine?? No Vodka, Martini, Rum........And you call this 7th century Bedouin mini-Saudi Arabia in sky as heaven?? This is definitely a creation of a man who was short-sighted and who had never seen the world outside his tent, Kabila and Desert!!
* * * * *
jabeen says:
i wonder why this interpretation by Nilofar was not made by all the Imams,islamic scholars and researchers since the advent of Islam? Its certainly an invention of a new idea by the writer by juggling the Arabic vocabulary.
* * * * *
Syed N. Hussain,MBA, Ph.D says:
This concept mis-translated and exploited by Western Media has not only become a joke, it seeks to demean Allah to being a “sexist”. In the Eyes of God all human beings are created equal with of course certain biological differences between men and women.
* * * * *
John Loacke says:
Thus, the Houris are always female. This is why you will be incapable of finding masculine descriptions for these “companions”. The carnal focus is clearly to allude to males.
* * * * *
Raman says:
Trying to wriggle out of uncomfortable situation but it does not help as most of the Islamic scholars since 7th century have interpreted houris as females – but with the modern moral values – it becomes uncomfortable and hence try to wriggle out of the uncomfortable situation.
* * * * *
sameen tahir khan says:
It is about time someone explained this…very nice and informational article….Paradise here I come! Inshallah!
* * * * *
ஒரே ஒரு கேள்வி:
Khalwa, லாய்லாஹ் - இதுபோன்ற அறிவுக்கு மட்டுமல்லாது, மனித உணர்வுகளுக்கும் எதிரான, அசிங்கமான கோட்பாடுகளை, எல்லாம் அறிந்த இறைவன் கொடுத்தவை என்று எப்படி நீங்கள் தைரியமாக நம்புகிறீர்கள்?
-