http://www.hindu.com/2011/06/30/stories/2011063065180300.htm
தலித்துகளை அடிமைப்படுத்தி முறையற்ற அடக்கு முறைகளை ஏவும் ஜாதி இந்துக்களைப் பற்றி ஒரு பதிவிட்டிருந்தேன்.
கொடுமைப்படுத்தும் சாதியினரின் பெயரைக் குறிப்பிட்டு செய்திகள் வெளியாக வேண்டும்; அதுவே கொடுமைப்படுத்தும் சாதியினரில் சிலராவது இதனால் மனமாற்றம் பெறலாம் என்று என் ஆவலை அப்பதிவில் வெளியிட்டிருந்தேன். காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்திருக்கிறது.
இன்றைய இந்துவில் ஒரு செய்தி. மதுரை யானை மலைப் பகுதியில் உள்ள கொடிகுளம் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து தொலைதூரத்தில் இருந்தும் நீரெடுக்க மக்கள் வந்தாலும், அப்பகுதியிலே வசிக்கும் தலித்துகள் அக்கிணற்றுக்கு அருகில் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளார்கள். 61 வயது அக்கினி வீரண்ணனாக இருந்தாலும், 26 வயது சுரேஷாக இருந்தாலும், இதனைச் சரியென்று சாதிக்கும் நிலைதான் அங்கு. இதில் தலித்துகள் கிணற்றுக்கருகில் வந்தால் அவர்களை தேனீக்கள் கொட்டி விடும் என்று ஒரு பழங்கதை வேறு.19 வயது கருத்தபையன் போன்றவர்கள் கேள்வி முறையில்லாமல் இதை இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் கேவலம் இன்னொரு பக்கம்.
இந்தக் கிராமத்து சாதி இந்துக்கள் கள்ளர், மூப்பர் என்ற சாதியினர். இவர்கள் தங்கள் ஊரின் ‘பெருமைக்குரிய’ கொள்கைகளை செய்தியாளர்களிடம் விளக்குவதற்கு எந்தக் கூச்சமும் இல்லாதிருக்கிறார்கள். (The caste Hindus of the village, occupied predominantly by people belonging to Kallar and Moopar community, do not hesitate to talk about the discrimination of Dalits even to journalists. )
-----------
இவர்கள் எல்லோரும் எப்போதுதான் கண் திறப்பார்கள்; அல்லது திறக்கவே மாட்டார்களா?
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனால் இவர்களுக்கெல்லாம் அறிவு வளரும்? புத்தி வரும்?
-----------------
இப்பதிவிற்குரிய பின்னூட்டங்களில் பங்களிக்க ”எல்லா சாதியினரும்” அனுமதிக்கப்படுகிறார்கள் -- கள்ளர், மூப்பர் சாதியினருக்கும் அனுமதி உண்டு !
--------------------------
I have sent an appreciation to the Hindu by the following mail:
to
the editor & Mohammmed Imanullullah (reporter)
sir
it is in relation with a news item in your paper on 30th June 2011, reported by Mr. Mohammmed Imanullullah on the status of dalits in kodikulam near yanai malai - http://www.hindu.com/2011/06/
i extend my appreciation for mentioning the names of the castes of the suppressors, which very much fulfills my yearning. this is explained in my blog:
http://dharumi.blogspot.com/
http://dharumi.blogspot.com/
*
66 comments:
வணக்கம் அய்யா,
ஒரு விஷயத்தை தவறு என்று ஒத்துக் கொண்டால் மட்டுமே அதனை தவிர்க்க முயற்சி நடக்கும்.சில சமயம் பல்ன் அளிக்கலாம்.ஒரு மனிதன் இன்னொரு மனித்னை பிறப்பின் காரணமாக தாழ்வாக் நடத்துகிறான்,அத்னை மிக இயல்பாக விளக்குகிறான் என்றால் இதனை சாதாரண்மாக் மாற்ற முடியாது.இதற்கு இரு யோசனைகள்.
1. பக்கத்திலே நாலு ஆழ்துளை கிணறு போட்டு வீதிக்கு வீதி குழாய் வைக்கலாம்.கிணறு எவருக்கும் அவ்சியமில்லை.
2.அனுமதிக்க மறுத்தால் கோகோ கோலா போன்ற ஒரு நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்தால் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் சமாளித்து தண்ணீர் முழுதும் சுரண்டி கொள்ளை இலாபம் சம்பாதிப்பார்கள். கிண்ற்றில் தண்ணீர் இருக்காது.அப்போது மக்கள் அனைவரும் சாதி வித்தியாசம் இல்லாமல் அனைவரும் த்ண்ணீருக்காக மட்டும் எதிர்த்து போராடுவார்கள். சாதிப் பிரச்சினை போய் தண்ணீர் பிரச்சினை வந்து விடும்.
முக்கியமான இவ்விஷய்த்தை ஒரு விவாதமாகியதற்கு நன்றி.
அய்யா , அவர்களுக்கு எடுத்து சொல்ல ஒருவரும் இல்லை . அது தான் இங்கே பிரச்சனையே. நம்ம திராவிட கட்சி பிராமணர்களை குறைகூறுவதை விடுத்து இந்த மாதிரி கிராமங்களுக்கு போய் விழுப்புணர்வை ஏற்படுத்தலாம். ஆனால் அவர்களுக்கு அரசியல் பண்ணுவதற்கே நேரம் இல்லை இதை எங்கே செய்ய போகிறார்கள்.
உண்மைதாங்க, மனிதநேயமற்ற ஒன்றை தாங்கிப்பிடிக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சியே இல்லாமல் சாதிப்பெருமை பேசுகிறார்கள். இது கிணற்றடியில் மட்டுமல்ல, பல கோடி பேர் காணும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட இதுதான் நிலை.
இந்தியாவின் அடிப்படை சாராம்சம் என்ன என்றால் கண்மூடிக்கொண்டு ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடலாம் - "ஏற்றத்தாழ்வு".
//நம்ம திராவிட கட்சி பிராமணர்களை குறைகூறுவதை விடுத்து ...//
மற்றைய மாநிலங்களில் எல்லாமே நன்றாக இருப்பது போலல்லவோ நீங்கள் சொல்கிறீர்கள். இதில் அரசியல் எதற்கு?
மதங்களும், அதிலும் குறிப்பாக இந்து மதமும், மூட நம்பிக்கைகளுமே இதற்கான காரணிகள் என நம்புகிறேன்.
ஊடகங்கள் எல்லாமே ஒரு தலைப்பட்சமாகத்தான் இருக்கிறது. பாரதி கண்ணன் என்ற தேவர் சாதிப்பையன் கொலைவெறியுடன் கத்தியோடு வந்த காட்சியை வெட்டிவிட்டு அவன் அடி வாங்கியதை மட்டும் திரும்ப திரும்பக்காட்டி தங்களது சாதிப்புத்தியை காண்பித்தார்கள்.பாப்பாபட்டி கீரிப்பட்டியில் தேவர்கள் மட்டுமே 10 வருடகாலமாக தேர்தல் நடத்த விடாமல் செய்தனர். உத்தப்புரத்திலோ பிள்ளைமார்கள். ஆனால் அவர்களுக்கு டாக்டர் சேதுராமன், ஏ.சி சண்முகம் போன்றவர்கள் மருத்துவ மற்றும் பண உதவிகள் செய்து அட்டவணை சாதியினருக்கு எதிராக தங்களை நிலை நிறுத்திக்கொண்டார்கள்.
கள்ளர், மூப்பர் ஜாதிகளை இழிவுப்படுத்திய உங்களை எதிர்த்து மதுரையில் போஸ்டர் இன்னும் ஒட்டவில்லையா....
இந்த அசிங்கமான ஜாதி உணர்வினை, உணர முடியுமா என்ற முயற்சிக்கு, எனக்கு தோன்றியது “இது நம்ம ஆளு” என்ற சிந்தனையின் வக்கிர செயல்பாடுதான்.
அவங்க தண்ணி புடிக்கிறாங்க என்றால்......நமக்கு (இல்லாத) மானம், கவுரவம் போய்விட்டதாக எண்ணுபவர்களை, நரகத்தின் எண்ணை கொப்பரையில் வாட்ட வேண்டும்.
'தண்ணீர் எடுக்க அனுமதிக்கவில்லை என்றால் நாங்கள் அனைவரும் இஸ்லாம் மதத்துக்கு மாறப் போகிறோம்' என்ற ஒரு அறிக்கையை சும்மா விட்டுப் பாருங்கள். கலெக்டர், தாசில்தார், எம்எலஏ முதற்கொண்டு மறுநாளே ஆஜராகி அந்த கிணற்றில் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்படுவார்.
இந்த ஒரு சாதாரண அறிக்ககைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஆட்சியாளர்களால். காரணம் இவன் அப்துல்லாவகவும், ரஹ்மானாகவும் மாறி விட்டால் பிணத்தை சுமப்பது யார்? தோட்டியாக யார் வேலை செய்வது? வயல் வேலைகளை செய்வது யார்? என்று பயந்து போய் உடன் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப் படுவர். ஒரு நிமிடத்தில் பிரச்னை தீர்ந்து விடும்.
சம்பந்தப்பட்டவர்கள் முயற்ச்சித்துத்தான் பாருங்களேன் ஒருமுறை.
//சம்பந்தப்பட்டவர்கள் முயற்ச்சித்துத்தான் பாருங்களேன் ஒருமுறை. //
நல்ல முயற்சிதான். எப்ப்டியோ உங்களுக்கும் ’இப்படிப்பட்ட கூட்டம்’ கூடும் ...!
@சுவனப் பிரியன்
/நல்ல முயற்சிதான். எப்ப்டியோ உங்களுக்கும் ’இப்படிப்பட்ட கூட்டம்’ கூடும் /
மனிதர்களில் பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பவன் மனிதனே இல்லை.இதற்கு காரணம் தன் சாதியை உயர்வாக் நினைக்கும் பெருமிதமே.இதை தவிர்க்க இஸ்லாமுக்கு மதம் மாறுவதாக கூறுவது நல்ல பலனளிக்கும் முயற்சி.சந்தேகமே இல்லை.இப்படித்தான் பல தமிழ் ச்கோதரர்கள் மதம் மாறினார்கள்.
****************
மாறியவர்கள் இதனை மறந்து வேறு வகையில் மத பெருமிதம் கொள்வது பிற்காலத்தில் வேறு சிக்கல்களுக்கு இட்டு செல்லும்.
************
நாம் குரல் கொடுத்து ஏதாவது நல்லது நடக்காதா என்றுதான் பார்க்கிறோம்!!!!!!!!!!!
இந்த சாதி என்பது எங்கே இருக்கிறது? அது மனிதர்களின் மனங்களில் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் குழந்தையாக கேட்க, பேச ஆரம்பிக்கும் நாளில் இருந்து, அவனை சுற்றி இருப்பவர்கள் அந்தக் குழந்தையிடம் நீ இந்த சாதி, நாம இந்த சாதிடா, என்று மனதிலே ஏற்றுகின்றனர்.
நமக்கு வேண்டிய சாதி, வேண்டாத சாதி ஆகிய சாதிக் குறிப்புகளும் தரப் படுகின்றன.வளர, வளர மற்ற சாதிகளுடனான மோதல் போக்கை கடைப் பிடிப்பதை வீரமாக கருதும் போக்குக்கு அவன் தள்ளப் படுகிறான்.
சாதிப் பிரிவினை மறைய நம்முடைய வழி, ஒவ்வொரு மனிதனையும் கனவான் ஆக்குவது தான்.
கண்ணியமும், சினேக மனப் பான்மையும் உடைய ஒருவன் இன்னொரு மனிதனை நோக்கும் போது, அவனுக்கு தன்னால் ஏதாவது உதவி செய்ய முடியுமா, என்றுதான் எண்ணுவான். அவனை மரியாதையுடன் எதிர் கொள்வான். எந்த அளவுக்கு ஒரு மனிதன் கனவானாக இருக்கிறானோ, அந்த அளவுக்கு சமுதாயத்துக்கு நல்லது.
எந்த அளவுக்கு கனவான்கள் ஒரு சமுதாயத்தில் இருக்கிரார்களோ அந்த அளவுக்கு அந்த சமுதாயம் நாகரீகமான சமத்துவ சமுதாயம் ஆகும்.
பீடிக்கு நெருப்புக் கேட்பதில் ஆரம்பித்த தகராறு மிக விரைவாக மிக எளிதில் கொலையில் முடிகிறது. பெரும் சாதிக் கலவரமாகவும் ஆகிறது. அந்த அளவுக்கு கட்டுப்பாடு இல்லாத, கோவத்தை அடக்க முடியாத சமூகமாக இருக்கிறோம்.
மற்றவரை தாழ்மையாக எண்ணுபவர்களை வைத்து, சக மனிதரின் வாயிலே பீ திணிப்பவர்களை வைத்து, பிற மனிதரின் தலையை வெட்டி தெருவிலே உருட்டுபவர்களை வைத்து சமத்துவ சமுதாயம் உருவாக்க முடியாது.
அன்பும், பிறரை மதிக்கும் பழக்கமும், நிதானமும், கட்டுப்பாடும், நாகரீகமும் இல்லாத மக்கள் தொகுப்பை வைத்து சாதிகள் இல்லாத நாகரீக சமத்துவம் சமுதாயம் உருவாக்க முடியாது.
வெறுப்புக் கருத்துக்களை வைத்து அல்ல, அன்பை வைத்துதான் சமத்துவ சமுதாயம் உருவாக்க முடியும். எனவே நம்முடைய திட்டம் மக்களை செம்மைப் படுத்துவது.
//நல்ல முயற்சிதான். எப்ப்டியோ உங்களுக்கும் ’இப்படிப்பட்ட கூட்டம்’ கூடும் ...! //
'இப்படிப்பட்டக் கூட்டம்' என்று இளக்காரமாக சொல்கிறீர்கள். ஐயா! அவர்கள் இப்பொழுது சமூகத்தின் பார்வையில் இந்து மதத்தால் தாழ்த்தப்பட்டவனாக கருதப்படலாம். என்னைப் பொறுத்த வரை ஆதம் என்ற ஒரு மனிதரிலிருந்து பிரிந்த ஒரு ஜீவன்தான். அவரும் என்னுடைய சகோதரனே!
தீண்டாமை கூடாது என்று பதிவிடும் தாங்களே அவர்களை இளக்காரமாக பார்ப்பதை என்னவென்று சொல்ல!
சுவனப்பிரியன்,
சார்வாகன் மிகச்சரியாக ஒன்று சொல்லியுள்ளார்.
//மாறியவர்கள் இதனை மறந்து வேறு வகையில் மத பெருமிதம் கொள்வது ...//
உடம்பு சரியாகிவிட்டது என்ற நம்பிக்கையில் - ஏ.ஆர். ரஹ்மான் போல - மாறியவர்களை விடவும், படித்து தேடிய பெரியார் தாசன்/ அப்டுல்லா மாதிரி ஆட்கள் பரவாயில்லை.
சாதிக்காக மாறாமல் மதத்திற்காக மாறினால்தான் மதத்திற்கும் பெருமை.
//இப்படித்தான் பல தமிழ் ச்கோதரர்கள் மதம் மாறினார்கள்.//
இதையும் பலர் நினைவில் வைத்துக் கொண்டால் இன்னும் பல சோகங்களும் நடக்காமல் இருக்கலாம்.
சகோதரர் சுவனப்பிரியன் அவர்களே,
இந்திய சமூகத்தில் தொழில் அடிப்படையில் மக்கள் குழு சமூகமாக இருந்து, அதுவே இறுக்கமான சாதீய சமூகமாக மாறி விட்டது அனைவரும் அறிந்ததே.
நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆலயங்களில் நுழைய எல்லோருக்கும் அனுமதி இல்லை.
இன்றைக்கு இந்தியாவில் திருப்பதி கோவிலோ, சபரி மலையோ, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலோ யாரும் என்ன சாதி என்று கேட்கப் படுவதும் இல்லை, பக்கத்தில் சாமி கும்பிடுபவர் என்ன சாதி என்று நினைப்பதுவும் இல்லை. அவனவன் ஆயிரம் கோரிக்கை, கவலையோடு பக்கத்தில் இருப்பவருடன் இடத்துப் பிடித்துக் கொண்டு சாமி கும்பிடுகிறார்.
எனவே இன்று கோவில்களே தீண்டாமையை இடித்து, மக்கள் ஒருவரை ஒருவர் தீண்டி, கசங்கி, அமுக்கிக் கொள்ளும் இடமாக ஆகி உள்ளது.
நூறு ஆண்டுகளில் இவ்வளவு தூரம் சாதீய வேறுபாடு கரைந்து இருக்கிறது என்றால் இன்னும் நூறு ஆண்டுகளில் அதிக முன்னேற்றம் இருக்கும் அல்லவா?
சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் அமைவதில் இன்னும் நாம் பயணிக்க வேண்டிய பாதை அதிகம் உள்ளது. முழுமையான சமத்துவ சமுதாயம் பட்டி தொட்டி எங்கும் அமையும் காலம் வந்தே தீரும்.
இவ்வாறாக சாதி வெறிக் கொடுமையில் இருந்து இந்திய சமுதாயம் விடுபட்டு நாகரீகத்தை நோக்கி செல்லுகிற நேரத்திலே, பிற மதங்களை சகித்துக் கொள்ளாத, பிற மதங்கள் எல்லாம் அழித்து ஒழிக்கப் பட வேண்டும், பிற மதங்களை பின்பற்றுவோர் இழிவானவர் , அவர்கள் மீது போர் தொடுத்து தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்து வரி விதிக்க வேண்டும் என்னும் மத வெறிக் கோட்பாட்டில் சிக்குவது மிகப் பெரிய ஆபத்து அல்லவா?
மத வெறிக் கோட்பாட்டில் சிக்கினால், விமான நிலையங்களில் சந்தேகத்துடனும் அச்சத்துடனும் நோக்கப் பட்டு , ஆடைகள் களையப் பட்டு , ஜட்டி , காலனி கூட விடாமல் பரிசோதனை செய்தும் சந்தேகத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது அல்லவா?
நீங்கள் ஏன் உங்கள் மார்க்கத்தில் சகிப்புத் தன்மையை கொண்டு வந்து பிற மதத்தவரை வெறுக்காமல் நோக்கும் தன்மையை, மத நல்லிணக்கத்தை கொண்டு வர முயலக் கூடாது?
மேலும் இஸ்லாத்தின் பிற பிரிவினர்களான ஷியா இஸ்லாமியர், அகமதிய இஸ்லாமியர், போரி இஸ்லாமியர் , சுபி இஸ்லாமியர் மீதே சுன்னி இஸ்லாமியர் கடும் வெறுப்புணர்ச்சியுடன் மோதி இரத்த ஆறு ஓட விடப் படுகிறதே. இதில் எல்லாம் இந்தியர்கள் சிக்கிக் கொள்ள வேண்டுமா?
திருச்சிக்காரன், சுவனப்பிரியன்,
நீங்கள் இருவருமே நான் கூற வந்த சாதிப் பிரச்சனையை தடம் மாற்றுகிறீர்கள்.
சுவன்ப்பிரியன்
என்னைப் போன்று ஒரு மத மறுப்பாளனுக்கு சாதிய இழுப்பை நீக்க மதம் மாறுவது என்பது நெருப்புச் சட்டியிலிருந்து தீயினில் விழுவது போல் தெரிகிறது.
திருச்சிக்காரன்
உங்கள் கூற்று உண்மைகளுக்கு எதிராய் உள்ளது.
//நூறு ஆண்டுகளில் இவ்வளவு தூரம் சாதீய வேறுபாடு கரைந்து இருக்கிறது என்றால் ..//
பெருநகரங்களில் நடந்த சிலவைகளை வைத்து இப்படி சொல்வது பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்தான் ...
//முழுமையான சமத்துவ சமுதாயம் பட்டி தொட்டி எங்கும் அமையும் காலம் வந்தே தீரும்.//
எப்போது? எப்படி? ஆச்சு... 21ம் நூற்றாண்டு .. கண்முன் கிணற்றில் நீரெடுக்காதே என்கிறான்.நாமும் அதை செய்தியாக்கிக் கொண்டு சோம்பி நிற்கிறோம்... நீங்கள் காலம் மாறும் என்கிறீர்கள்.
நீங்களாவது நம்பினால் சரி ...!
நான் நம்பவில்லை..........
அன்புக்குரிய சகோதரர் திரு. தருமி அவர்களே,
நான் இப்போது இட்ட பின்னூட்டத்தை பற்றி மட்டும் பதில் பின்னூட்டம் இட்டு இருக்கிறீர்கள். அதற்க்கு முன் இட்ட இரண்டு பின்னூட்டங்களில் சொல்லப் பட்ட கருத்துக்களை நீங்கள் படிக்கவில்லையோ என நினைக்கிறேன்.
கிட்டத் தட்ட எட்டாயிரம் வருடங்களுக்கு மேலாக சாதி அடிப்படையிலான சமுதாயமாக இருந்த இந்திய சமுதாயம், கடந்த ஒரு நூற்றாண்டில் எவ்வளவு தூரம் மாறி உள்ளது என்பது நிச்சயம் ஒரு ஆக்க பூர்வமான் விடயமே. 1935ம் வருடம் நசுக்கப் பட்ட பிரிவினர் துப்புரவு பணிகளை செய்வதற்கு கூட நகரத்தின் உள்ளே வரக் கூடாது என்று கும்பகோணம் நகராட்சியில் தீர்மானமே போட்டு இருக்கிறார்கள்.
இன்றைக்கு நகரங்களில் ஜாதி அடிப்படையில் ஒதுக்கப்படுகிறார்களா? என்னுடைய பிளாட்டின் பக்கத்து மற்றும் எதிர் பிளாட்டில் வசிப்பவர்கள் எந்த ஜாதி என்று இன்று வரை எனக்கு தெரியாது, அதைப் பற்றிய அக்கறையும் எனக்கு இல்லை.
இன்றைக்கு கலப்புத் திருமணங்கள் நடை பெறுகின்றன. பார்ப்பன சமூகத்தை சேர்ந்த பெண்கள் பிற சமூகத்தவரை திருமணம் செய்வது கணிசமாக உள்ளது.
கிராமங்களில் ஒதுக்கப் படுவது இருக்கிறது. அதுவும் நீங்கும், நீங்கியே ஆக வேண்டும், இது காலத்தின் கட்டாயம்.
சமத்துவ சமூகம் அமைக்கப் படுவதை மும்முரப் படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அதையே நாம் என்னுடைய முதல் இரண்டு பின்னூட்டங்களில் சொல்லி இருந்தேன்.
மற்றவரை தாழ்மையாக எண்ணுபவர்களை வைத்து, சக மனிதரின் வாயிலே பீ திணிப்பவர்களை வைத்து, பிற மனிதரின் தலையை வெட்டி தெருவிலே உருட்டுபவர்களை வைத்து சமத்துவ சமுதாயம் உருவாக்க முடியாது.
அன்பும், பிறரை மதிக்கும் பழக்கமும், நிதானமும், கட்டுப்பாடும், நாகரீகமும் இல்லாத மக்கள் தொகுப்பை வைத்து சாதிகள் இல்லாத நாகரீக சமத்துவம் சமுதாயம் உருவாக்க முடியாது.
வெறுப்புக் கருத்துக்களை வைத்து அல்ல, அன்பை வைத்துதான் சமத்துவ சமுதாயம் உருவாக்க முடியும். எனவே நம்முடைய திட்டம் மக்களை செம்மைப் படுத்துவது.
நீங்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். நாம் முயலுவோம், மக்கள் இணைவார்கள்!
//நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆலயங்களில் நுழைய எல்லோருக்கும் அனுமதி இல்லை.
இன்றைக்கு இந்தியாவில் திருப்பதி கோவிலோ, சபரி மலையோ, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலோ யாரும் என்ன சாதி என்று கேட்கப் படுவதும் இல்லை, பக்கத்தில் சாமி கும்பிடுபவர் என்ன சாதி என்று நினைப்பதுவும் இல்லை. அவனவன் ஆயிரம் கோரிக்கை, கவலையோடு பக்கத்தில் இருப்பவருடன் இடத்துப் பிடித்துக் கொண்டு சாமி கும்பிடுகிறார்.
எனவே இன்று கோவில்களே தீண்டாமையை இடித்து, மக்கள் ஒருவரை ஒருவர் தீண்டி, கசங்கி, அமுக்கிக் கொள்ளும் இடமாக ஆகி உள்ளது//
இது உண்மைகளுக்கு எதிராய் உள்ளதா?
நகரங்களில் எல்லா பிரிவினரும் பள்ளிகளில் அருகருகே அமர்ந்து படிக்கின்றனர். பிறர் என்ன சாதி என்று அறிந்து கொளவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இன்னும் சொல்லப் போனால் இன்றைய நகர்ப்புற மாணவ சமுதாயம் சாதி, மதம் இரண்டிலுமே அக்கறை காட்டுவதில்லை- இவை எல்லாம் உண்மைக்கு எதிராக உள்ளதா? நூறு ஆண்டுகளுக்கு முன் நகரங்க்ளைளும் ஜாதி பிரிவினை இருந்ததா அதிக அளவில் இல்லையா. உண்மைக்கு எதிராக உள்ளது யார் கருத்து தருமி ஐயா அவர்களே!
அதே நேரம் நான் இந்தியாவில் சாதிக் கொடுமையே இல்லை, ஒதுக்கப் படுதலே இல்லை, என நான் சொல்லவில்லையே. பல்வேறு காரணங்களுக்காக் நானே என் வாழ்க்கையில் பலராலும் கட்டம் கட்டப் பட்டு இருக்கிறேன். ஒருவர் அவமானப் படுத்தப் பட்டால், தள்ளி வைக்கப் பட்டால், இழிவு படுத்தப் பட்டால் அது எனக்கே நேர்ந்தது போல, என் முகத்தில் யாரோ காரி உமிழ்ந்தது போல கூனிக் குறுகி மன வேதனை அடைகிறேன்.
முக்கிய விடயம் மக்களை சமரசத்தில் சமத்துவத்தில் இணைப்பதுதான். அதற்க்கு ஆக வேண்டிய வழி என்ன? வெறுமனே கண்டித்துக் கொண்டும், திட்டிக் கொண்டும் இருந்தால் பலன் கிடைக்குமா?
தீர்வு பற்றி எண்ண வேண்டாமா? மக்களின் மனதில் மாற்றம் கொண்டு வந்தால் தான் உண்மையான சமத்துவம் , சமரசம் , நாகரீகம் உருவாகும்.
கண்ணியமும், சினேக மனப்பான்மையும் உடைய ஒருவன் இன்னொரு மனிதனை நோக்கும் போது, அவனுக்கு தன்னால் ஏதாவது உதவி செய்ய முடியுமா, என்றுதான் எண்ணுவான். அவனை மரியாதையுடன் எதிர் கொள்வான். எந்த அளவுக்கு ஒரு மனிதன் கனவானாக இருக்கிறானோ, அந்த அளவுக்கு சமுதாயத்துக்கு நல்லது.
எந்த அளவுக்கு கனவான்கள் ஒரு சமுதாயத்தில் இருக்கிரார்களோ அந்த அளவுக்கு அந்த சமுதாயம் நாகரீகமான சமத்துவ சமுதாயம் ஆகும்.
//1935ம் வருடம் நசுக்கப் பட்ட பிரிவினர் துப்புரவு பணிகளை செய்வதற்கு ..//
இன்றைக்கும் அந்தப் பணிகளைச் செய்வது யார்? அதே மக்கள்தானே .. அந்த வேலைக்கு அவன்தான் என்று கட்டிய முடிவு எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. இன்று மாறி விட்டதா?
//இன்றைக்கு நகரங்களில் ஜாதி அடிப்படையில் ஒதுக்கப்படுகிறார்களா?//
ஏரியாக்களே ஒதுக்கப்படுகின்றன!
//இது உண்மைகளுக்கு எதிராய் உள்ளதா?//
ஆம்!
தறுதலை said...
இதே கள்ளனும் மூப்பனும் இன்னொரு இடத்தில் கூச்சமில்லாமல் கைகட்டி ****ப் பொத்திக்கொண்டும் நிற்பார்கள்.
"நான் அடிமை, எனக்கொரு அடிமை" அதுதானே விருப்பம் கேட்காமல் வலுக்கட்டாயமாக குத்தப்பட்ட இந்து மத முத்திரையின் தத்துவம்.
------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜூலை '2011)
//இன்றைக்கு நகரங்களில் ஜாதி அடிப்படையில் ஒதுக்கப்படுகிறார்களா?//
ஏரியாக்களே ஒதுக்கப்படுகின்றன!
சென்னை அண்ணா நகர் ஏரியா எந்த சாதியினருக்கு ஒதுக்கப் பட்டுள்ளது ?
அம்பத்தூர் ஏரியா எந்த சாதியினருக்கு ஒதுக்கப் பட்டுள்ளது ?
தாம்பரம் ஏரியா எந்த சாதியினருக்கு ஒதுக்கப் பட்டுள்ளது ?
மந்தவெளி ஏரியா எந்த சாதியினருக்கு ஒதுக்கப் பட்டுள்ளது ?
அடையாறு ஏரியா எந்த சாதியினருக்கு ஒதுக்கப் பட்டுள்ளது ?
மயிலாப்பூர் ஏரியா எந்த சாதியினருக்கு ஒதுக்கப் பட்டுள்ளது ?
நீங்கள் எந்த ஏரியாவிலாவது வீடோ, பிளாட்டோ வாங்க முயன்ற போது உங்கள் ஜாதி என்ன என்று கேட்கிறார்களா?
சதுர அடிக்கு இவ்வளவு முன் பணம், குடுத்தால் யாராக இருந்தாலும் எந்த ஏரியாவிலும் வீடு வாங்கி குடி இருக்க முடியும்.
பெரிய வீடு கட்டி கீழ போர்ஷனை வாடகைக்கு விடவும் முடியும்.
//இன்றைக்கும் அந்தப் பணிகளைச் செய்வது யார்? அதே மக்கள்தானே .. அந்த வேலைக்கு அவன்தான் என்று கட்டிய முடிவு எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. இன்று மாறி விட்டதா?//
உத்தர பிரதேசத்து பார்ப்பனர்கள் பலர் டெல்லியில் துப்புரவு பனி, ரக்சா ஒட்டுதல் இப்படை எல்லா வேலையும் செய்வதாக ஒரு ஆர்டிகிள் படித்தேன்.
துப்புரவு பணிக்கு மாத சம்பளம் நாற்பதாயிரம் என்று விளம்பரம் கொடுங்கள்,அப்புறம் பாருங்கள்
//அவரும் என்னுடைய சகோதரனே!
//
அந்தச் சகோதரன் சவூதிக்குப் போனால் உங்க ஷேக்கு அவரு பொண்ண சகோதரனுக்குக் கட்டி வைப்பாரா? இல்ல அவரு உள்ளூரிலேயே ஷியா/போரா/அகமதியா முசுலீம்களின் பொண்ணைக் கட்டினால் நீங்க ஏத்துக்குவீங்களா?
கெம்பனூர் கோஷ்டியோட சேத்திக்க வேண்டியதுதான்.
ஜாதிகளை வரலாற்றை பற்றி படித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவுரங்கசீப் இஸ்லாமிய ஆட்சி காலத்தில், அப்பொழுது இருந்த இந்து???? மதத்தை காப்பாற்ற ஜாதிகள் உக்கிரம் மற்றும் தீவிர கட்டுக்க்கோபு அடைந்ததாக கூறுகின்றது.
நணபர் திருச்சிக்காரன் சொன்னதைப் போல், பணம்தான் மூலக்காரண நிவாரணி என்றால், அந்த பண பரிவர்தனை நிறுவனங்கள் கட்டுமைப்புகளிள் ஜாதி உள்ளதை யாரும் மறுக்க முடியாது.
ஏன் எனக்கு தெரிந்த, இந்தியாவில் அதிக உழியர்களை பணியில் வைத்திருக்கும் அந்த பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு நபர், இனிமேல் “நம்ம ஆட்களைதான் எடுக்க வேண்டும்” என்பதை என், காதால் கேட்டேன்.
மனங்கள் மாறாவிட்டால் இந்த ஜாதி தரித்தரம் தொடர்ந்துக்கொண்டே இருக்கும்.
//இன்றைக்கு இந்தியாவில் திருப்பதி கோவிலோ, சபரி மலையோ, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலோ யாரும் என்ன சாதி என்று கேட்கப் படுவதும் இல்லை, பக்கத்தில் சாமி கும்பிடுபவர் என்ன சாதி என்று நினைப்பதுவும் இல்லை. அவனவன் ஆயிரம் கோரிக்கை, கவலையோடு பக்கத்தில் இருப்பவருடன் இடத்துப் பிடித்துக் கொண்டு சாமி கும்பிடுகிறார்.//
//கிட்டத் தட்ட எட்டாயிரம் வருடங்களுக்கு மேலாக சாதி அடிப்படையிலான சமுதாயமாக இருந்த இந்திய சமுதாயம், கடந்த ஒரு நூற்றாண்டில் எவ்வளவு தூரம் மாறி உள்ளது என்பது நிச்சயம் ஒரு ஆக்க பூர்வமான் விடயமே.//
இன்று தமிழக கிராமம் ஒன்றில் ஒரு பூசாரி ஒரு சிறுவனை நரபலி கொடுத்துள்ளார். கிராம மக்கள் சூழ்ந்து பூசாரியை நையப் புடைத்திருக்கிறார்கள். அந்த கோவிலையும் கிராம மக்களே கொளுத்தியிருக்கிறார்கள்.
-ராஜ் செய்தி
ராமா...ராமா... கலி முத்திடுத்து :-(
அன்புக்குரிய சகோதரர் நரேன்,
வணக்கம்.
அதிகம் சம்பளம் குடுத்தால் எந்தப் பணியையும் செய்யத் தயாராக முன் வருவார்கள் என்பதையே நான் குறிப்பிட்டேன். முன்பெல்லாம் குறிப்பிட்ட பிரிவினர்தான் முடி திருத்தும் வேலையை செய்து வந்தனர். இப்போது பல பிரிவினரும் அந்த தொழிலை செய்கின்றனர்.
சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் அமைய முக்கிய காரணி மன முதிர்ச்சியே. நிதானமும், பொறுமையும் உள்ளவர்களாக எல்லோரும் இருப்பது அவசியம்.
பிறரை மதிப்பதே நாகரீகத்தின், பண்பாட்டின் முக்கிய அடையாளம் என்பதை உணர்ந்தவர் பிறரை இகழ்ச்சி செய்ய விரும்ப மாட்டர்கள். மன முதிர்ச்சி அடையாதவர்களே, பிறரை சிறுமைப் படுத்துவதில் தாம் உயர்வாக இருப்பதாக கருதுகின்றனர்.
கல்வி- ஒருவரை நல்ல மனிதனாக்கும் , பண்பட்டவனாக்கும் கல்வியே முக்கியம். வெறுமனே பிசிக்ஸ் , கணிதம், வேதியல் படிப்பது நல்ல மனிதனாக ஒருவர் உருவெடுக்க உதவாது.
அதானலே தான் கல்லூரியில் கூட ரேகிங் என்ற பெயரில் பிறரை சிறுமைப் படுத்தி மகிழ்கின்றனர்.
பணம் இருந்தால் வரும் மரியாதை அந்தப் பணத்துக்குதான்.
மகாத்மா காந்திக்கு, அண்ணல் அம்பேதகருக்கு, வ. வு.சிக்கு கொடுக்கும் மரியாதையை இக்கால அரசியல்வாதிக்கு கொடுக்க முடியுமா? அவர்களிடம் பணம் இல்லை, தியாகம் இருந்தது.
//அந்தச் சகோதரன் சவூதிக்குப் போனால் உங்க ஷேக்கு அவரு பொண்ண சகோதரனுக்குக் கட்டி வைப்பாரா? இல்ல அவரு உள்ளூரிலேயே ஷியா/போரா/அகமதியா முசுலீம்களின் பொண்ணைக் கட்டினால் நீங்க ஏத்துக்குவீங்களா?//
ஐந்து லட்ச ரியால். அதாவது ஐம்பது லட்ச ரூபாய் மணக்கொடையாக பெண்ணுக்கு கொடுக்க உங்களுக்கு வசதியிரந்தால் தாராளமாக சவுதி பெண்ணை கட்டலாம். ஒரே ஒரு கண்டிஷன். அவர் முஸ்லிமாக இருக்க வேண்டும்.
வரதட்சணை என்று பைசாவும் கிடைக்காது. சம்மதமா!
---------------------------------------------------
நரேன்!
//ஜாதிகளை வரலாற்றை பற்றி படித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவுரங்கசீப் இஸ்லாமிய ஆட்சி காலத்தில், அப்பொழுது இருந்த இந்து???? மதத்தை காப்பாற்ற ஜாதிகள் உக்கிரம் மற்றும் தீவிர கட்டுக்க்கோபு அடைந்ததாக கூறுகின்றது.//
ஆமாமாம! ஒளரங்கசீப்புக்கு முன்னால் நாமெல்லாம் அண்ணன் தம்பிகளாக சந்தோஷமாக இருந்து எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றினோம். சேர சோழ பாண்டியர்கள், மராட்டியர்கள் அனைவரும் அண்ணன் தம்பிகளாக சண்டை என்றால் என்னவென்றே தெரியாமல் சாதி பாகுபாடு இல்லாமல் வாழ்ந்தவர்கள். ஒளரங்கசீப் வந்துதான் இந்து மதத்தில் சாதியையே புகுத்தியவர். போதுமா! :-)
-------------------------------------------------------------------
திருச்சிக்காரன்!
//உத்தர பிரதேசத்து பார்ப்பனர்கள் பலர் டெல்லியில் துப்புரவு பனி, ரக்சா ஒட்டுதல் இப்படை எல்லா வேலையும் செய்வதாக ஒரு ஆர்டிகிள் படித்தேன்.//
பார்ப்பனர் கீழிறங்கி வருவது பிரச்னையே அல்ல. ஒரே மதத்தில் இருக்கக் கூடிய ராமசாமியும் முனுசாமியும் கோவிலில் மந்திரம் ஓத முடியுமா? அதுவரை இல்லாவிட்டாலும் கர்ப்பகிரஹம் வரை சென்று வழிபட தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்க முடியுமா? உடனே... எங்கள் ஊரில் சொந்த காசில் கோவில் கட்டி இருக்கிறோம். அங்கு எல்லோரையும் அனுமதிப்போம் என்று கூறக் கூடாது. நான் கேட்பது பொது கோவிலில்.
ஜெக ஜீவன்ராம் ராணுவ மந்திரியாக இருந்தும் ஒரு உயர் சாதி யினரின் சிலையை திறந்து வைத்ததை பொறுக்காமல் உடன் தண்ணீர் ஊற்றி தீட்டு கழித்தவர்கள்தான் நாமெல்லாம்.
அய்யா வணக்கம்,
சாதிக் கொடுமை செய்பவர்கள் இதனால் தங்களுக்கு பிரச்சினை வராது என்பதால் மட்டுமே செய்கிறார்கள்.
யோசிப்பது உலகாளவிய விதத்தில் இருந்தாலும் ,செயல்படுவது அச்சூழ்நிலை சார்ந்ததாக மட்டுமே இருப்பதே பிரச்சினையை தீர்க்கும்.
சாதி எப்படி வந்தது, எப்படி எபோது போகும் என்பது அவசியமில்லாதது. கொடிக்குளத்தில் நடப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
இரண்டே கெள்விகள்
1. அந்த கொடிக்குளம் ஊரில் உள்ள பிரச்சினையை இப்போது தீர்க்க முடியுமா?முடியாதா?
2. இந்த பிரச்சினை பல ஊர்களிலும் நடைமுறையில் இருந்து வெளி வராமல் உள்ளதா?
இப்போதைய அரசு அமைப்பினால் தீர்க்க முடியாது என்றால் வேறு தீர்வு அம்பேத்கார் வழங்குகிறார்.
அம்பேத்கார் தாழ்த்தப் பட்ட மக்கள் விடுதலைக்காக இரட்டை வாக்குரிமை என்ற சட்டத்தை கொண்டு வர முயற்சித்தார்.அதாவது தலித் மக்களின் பிரதிநிதிகளை, தலித் மக்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கும் முறை.இப்போது தலித் தொகுதியில் நிற்பவர் பெரும்பாலும் கட்சினரின் கைப்பொம்மையாகவே இருப்பார்.இத்னை தவிர்கவே அம்பேத்கார் முயன்றார்.இதனால் தலித் மக்கள் த்யவு இல்லாமல் எவரும் அரசு அமைக்க முடியாது.
ஆனால் காந்தியின் பிடிவாத உண்ணாவிரதத்தால் 1932ன் பூனா ஒப்பந்தத்தில் இத்னை கைவிட்டார் அம்பேத்கார்.இத்னை திருப்பி கொண்டு வருவது பற்றி யோசிக்கலாம்.
http://en.wikipedia.org/wiki/Poona_Pact
//இத்னை திருப்பி கொண்டு வருவது பற்றி யோசிக்கலாம்.//
அம்பேத்கார் கொண்டு வர முயற்சித்தது காந்தியால் தடுக்கப்பட்டது. அது நடந்து முடிந்தது. ஆனாலும் அதன்பின் அம்பேத்கார் நினைத்ததை நடத்த ஏன் தலித்துகள், தலித் தலைவர்கள் முயற்சிக்கவில்லை? இனி “யோசித்து” கொண்டு வர முடியுமா?
- அறியாமையில் கேட்கும் கேள்விகள்.
naren அவரங்கஜேப் காலத்தில் நடந்த ஒரு சமூக மாற்றம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தலைவர் அவரங்கஜேப் பற்றி குறை எதுவும் சொல்லக்கூட இல்லை. ஆனாலும், அவுரங்கஜேப் என்றதும் உங்களுக்கு ஏன் சுவன்ப்பிரியன் இப்படி ஒரு கோபம்? சதை ஆடி விடுகிறதோ? அப்படித்தானிருக்கும் ... நம்ம மதத்துக்காரரல்லவா!!!!
அவுரங்கஜேப் வாழ்க ...!
அன்புக்குரிய சுவனப்பிரியன்,
கர்ப்பக் கிரஹத்தில் எல்லோரும் அர்ச்சனை செய்வது பற்றி எல்லாம் பல கட்டுரைகள் எழுதியாகி விட்டது. இங்கேயும் முன்பே விவாதித்து இருக்கிறோம். அர்ச்சகர்கள் அக்காலத்தில் மன்னர் எழுதி வைத்த சாசனத்தைக் காட்டி இங்கே அர்ச்சனை செய்ய எங்களுக்கு பரம்பரை பாத்தியதை இருக்கிறது என்கிறார்கள்.
அந்தக் குடும்பங்களை சேர்ந்தவர்களைத் தவிர வேறு எந்த குடும்பத்தை சேர்ந்த பார்ப்பனர்களும் உள்ளே போய் அர்ச்சனை செய்ய அவர்கள் அனுமதிப்பது இல்லை.
இது நல்ல வருமானம் வரக் கூடியதாக இருப்பதால் அவர்கள் இன்னும் இறுக்கமாக இருக்கிறாகள்.
மேலும் நான் ஒரு கோவில் கட்டினால் அது பொதுவானதாக இருக்காக் கூடாது என்று இல்லை.
இது விடயமாக நாம் விவாதிப்பது என்றால் அது என் தளத்திலே நான் இது விடயமாக இட்ட கட்டுரையில் வந்து விவாதிக்கவும். இக் கட்டுரையின் பேசு பொருள் அதுவல்ல. கட்டுரையின் மையப் பொருளை விட்டு விலகி விவாதிப்பதில் எனக்கு உடன் பாடில்லை.
கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பிற மதங்களின் மீது வெறுப்புணர்ச்சியைக் காட்டவும் , தன் மத பிரச்சாரத்திற்கு தளமாக மாற்றிக் கொள்வதற்கும், வசதி செய்து தர நான் தயாராக இல்லை.
//ஐந்து லட்ச ரியால். அதாவது ஐம்பது லட்ச ரூபாய் மணக்கொடையாக பெண்ணுக்கு கொடுக்க உங்களுக்கு வசதியிரந்தால் தாராளமாக சவுதி பெண்ணை கட்டலாம். ஒரே ஒரு கண்டிஷன். அவர் முஸ்லிமாக இருக்க வேண்டும்.
வரதட்சணை என்று பைசாவும் கிடைக்காது. சம்மதமா//
What an economic untouchability?
ஒரு ஹூரிக்கே இவ்வளவு கொடுக்கனுமா. சவூதி பேங்க் ஏதாவது கடன் கொடுத்தா வேணா யோசிக்கலாம்.
இதுனாலதான் அரபி சேக்குகள் எல்லாம் இங்க வந்து கல்யாணம் பண்றாங்களா?
72 ஹூரியெல்லாம் கெடைக்கும்ண்ணு நினைக்கறீங்க.?
அப்புறம் பாஸ், என்னோட இன்னொரு கேள்விய சவுகரியமா டீல்ல வுட்டுட்டீங்க.
அன்புக்குரிய சார்வாகன் அவர்களே,
இரட்டை வாக்குரிமை விடயமாக மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் நிலைப் பாடுகளை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சாதிக் கொடுமையை தானே அனுபவித்து, பல இன்னல்களை சந்தித்து வந்தவர் அண்ணல் அம்பேத்கர். உயர்சாதிக்காரர்கள் மனம் மாற மாட்டார்கள் என்றே அவர் கருதினர். அவர் காலத்தில் அவர் இடத்தில் நான் இருந்திருந்தால் நான் கூட அப்படி நினைத்து இருக்க கூடும். எனவே அட்டவணைப் பட்டியல் பிரிவினருக்கு தனி பிரதிநிதிகள், அவரை தேர்ந்தெடுக்க தனி வாக்குரிமை கோரினார். ஏனெனில் ஒதுக்கப் பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் தேர்தலில் நின்றால் அவர்களுக்கு பிற சமூகத்தை சேர்ந்தவர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று அம்பேத்கர் கருதினார்.
ஆனால் மகாத்மா காந்தி அப்படி நினைக்கவில்லை. காலப்போக்கில் எல்லோரும் ஒன்றாவர்கள், ஒடுக்கப் பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களையும் தலைவர்களாக ஏற்றுக் கொள்ள தயங்க மாட்டார்கள் என்று காந்தி நினைத்தார்.
தனி வாக்குரிமை கொடுத்தால் சமூகப் பிரிவினை நிரந்தரமாகிவிடும் என்கிற கவலையும் காந்திக்கு இருந்திருக்கும்.
காந்தி நினைத்து போலவே இன்றைக்கு ஜனநாயக முறைப்படி நசுக்கப்பட்ட பிரிவை சேர்ந்த செல்வி.மாயாவதி பிற சமூக மக்களின் வாக்குகளையும் பெற்று தனி மெஜாரிட்டியுடன் உத்தர பிரதேச மாநில முதல்வர் ஆகவில்லையா? இன்னும் சொல்லப் போனால் அவருக்கு கிடைத்த ஓட்டுகளில் அவர் சமூக ஒட்டுக்களோடு கணிசமாக பார்ப்பனர் எனப்படும் சமூகத்தினர் ஓட்டுக்களும் இருந்தன. எனவே பெரும்பாலான மகள் ஓட்டுப் போட்டுதான் முதல்வர் ஆகி இருக்கிறார். செல்வி.மாயாவதியின் ஆட்சி எப்படி நடக்கிறது என்பது வேறு விடயம். ஆனால் காந்தி நினைத்தது நடந்து விட்டது. அதே நேரம் அம்பேத்கர் கேட்டது தவறு இல்லை. ஏனெனில் எதிர்காலத்தில் மக்கள மனம் மாறுவார்களா என்று அவருக்கு எப்படி தெரியும்.
இன்றைக்கு இரட்டை வாக்கு முறை கோரினால், வரிசையாக எல்லா சாதியினரும் வந்து தங்களுக்கும் இரட்டை வாக்குரிமை கொடுத்தே ஆக வேண்டும் என்பார்கள். நாங்களும் கஷ்டப் பட்ட சமூகம் என்பார்கள். மரங்கள் வெட்டப்படும், நாடே கிடுகிடுக்கும் போராட்டங்கள் நடக்கும். எஸ். வி. சேகர் பிராமணர்க்ளுக்கும் தனி வாக்குரிமை வேண்டும் என்று கோருவார்.
விடயம் என்னவென்றால் எல்லா மக்களையும் இணைக்கக் கூடிய முன்னேற்றக் கூடிய சிந்தனைகளை உடைய உண்மையான தலைவர்கள் வேண்டும். முன்னாள் அமைச்சர் திரு. கக்கனை பற்றி எல்லோரும் எப்படி மரியாதையுடன் நினைக்கிறாகள்!
தனி வாக்குரிமை, தனி சாலைகள், தனி மேம்பாலங்கள், தனி சந்தைகள அமைத்து வாழ முடியுமா, இணைவது தான் சிறப்பு.
அதற்க்கு வழி மக்கள் மன முதிர்ச்சி அடைந்து, மேம்பட்ட சிந்தனை உடையவராக வேண்டும். நம்மால் மக்களின் மனதில் நல்ல சிந்தனை, அன்பு, மரியாதை.... ஆகியவற்றை உருவாகக் முடியுமானால் அதுவே நாம் செய்யக் கூடியது.
எனக்கு ஒரு சின்ன சந்தேகம்,
காலம் காலமாக இவ்வளவு ஜாதி கொடுமைகளை அனுபவிக்கும் அந்த மக்கள்...
எங்கள் மதத்திற்கு வாருங்கள் ஜாதியில்லை சுவனம் கிடைக்கும், நீங்கல் பாவிகள் இரட்சிக்கப்படுவீர்கள், சேர்ந்தால் ஜாதி கொடுமை இருக்காது என்று கூவியும், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் சுவனதிற்கும், இரட்சிப்பிற்க்கும் மாறாமல் இருப்பது..
அம்மக்கள் ஜாதி தீண்டாமை என்பது ஒரு மத நம்பிக்கை சார்ந்த பிரச்சனை அல்ல அது சமுதாய பிரச்சனை என்பது அவர்களின் புரிதலோ என்னவோ.
//இன்று தமிழக கிராமம் ஒன்றில் ஒரு பூசாரி ஒரு சிறுவனை நரபலி கொடுத்துள்ளார். கிராம மக்கள் சூழ்ந்து பூசாரியை நையப் புடைத்திருக்கிறார்கள். அந்த கோவிலையும் கிராம மக்களே கொளுத்தியிருக்கிறார்கள்.
-ராஜ் செய்தி
ராமா...ராமா... கலி முத்திடுத்து :-(
//
ஜிஹாத்...ஜிஹாத்...காஃபீர்கள்...காஃபீர்கள்..என்று சொல்லி அப்பாவி மக்களை கொள்கிறார்களே.....
அல்லா... அல்லா...கியாமத் நாள் நெருங்கிடுச்சு.:-(
கிருத்துவர்கல் யூதர்கள் சதி என்று சொல்லக்கூடாது!!!
சகோ. எல்லா நம்பிக்கைகளிலும் குறைகள் இருக்கத்தான் செய்யும் அதை அந்த அந்த நம்பிக்கையுள்ள மக்கள் எதிர்க்கத்தான் செய்கிறார்கள்.
நரபலி சரி என்று எந்த இந்து மத நம்பிக்கையாளுனும் சொல்லவில்லை.
நண்பர் குஜால்!
//அப்புறம் பாஸ், என்னோட இன்னொரு கேள்விய சவுகரியமா டீல்ல வுட்டுட்டீங்க.//
//இல்ல அவரு உள்ளூரிலேயே ஷியா/போரா/அகமதியா முசுலீம்களின் பொண்ணைக் கட்டினால் நீங்க ஏத்துக்குவீங்களா?//
ஷியாவோ, சன்னியோ, போராவோ அனைவருக்கும் ஒரு குர்ஆன்தான். முகமது நபிதான் அனைவருக்குமே தூதர். ஏக இறைவனைத்தான் அனைவரும் வணங்குகின்றனர். ஹதீதுகளை தவறாக விளங்கிக் கொண்டதால் இது போன்ற பிரிவுகள். ஆனால் தீண்டாமை கிடையாது. குர்ஆனை முழுமையாக உணர்ந்த முஸ்லிம் இது போன்ற சில பிரிவுகளை சட்டை செய்ய மாட்டான். எனவே அவர்களை திருமணம் செய்து கொள்வதில் யாருக்கு என்ன பிரச்னை?
நரேன்!
//அம்மக்கள் ஜாதி தீண்டாமை என்பது ஒரு மத நம்பிக்கை சார்ந்த பிரச்சனை அல்ல அது சமுதாய பிரச்சனை என்பது அவர்களின் புரிதலோ என்னவோ. அம்மக்கள் ஜாதி தீண்டாமை என்பது ஒரு மத நம்பிக்கை சார்ந்த பிரச்சனை அல்ல அது சமுதாய பிரச்சனை என்பது அவர்களின் புரிதலோ என்னவோ.//
இந்தியாவின் மக்கள் தொகை 20 கோடிக்கு மேல் சென்று கொண்டிருக்கிறது. அனைவருமே அரபு நாட்டு இறக்குமதியா? இங்குள்ள சாதிக் கொடுமைதாங்க முடியாமல் இஸ்லாத்திற்கு ஓடியவர்கள்தானே அனைவரும்.
இப்படி ஒரு வழி இருந்தும் இன்னும் இந்து மதத்தில் தீண்டாமை ஒழிந்து விடும் என்ற நம்பிக்கையில் காலம் தள்ளிக் கொண்டிருக்கும் அந்த நல்ல உள்ளங்களின் நம்பிக்கையை பொய்க்க விடாமல் செய்வது சாதி இந்துக்களின் கைகளில் இரு;கிறது.
தருமி!
//ஆனாலும், அவுரங்கஜேப் என்றதும் உங்களுக்கு ஏன் சுவன்ப்பிரியன் இப்படி ஒரு கோபம்? சதை ஆடி விடுகிறதோ? அப்படித்தானிருக்கும் ... நம்ம மதத்துக்காரரல்லவா!!!!//
எப்படியோ தீண்டாமையை இன்னும் 1000 வருடங்கள் முன்னோக்கி சென்றாலும் ஒழிக்க முடியாது என்ற நிலையில் ஒளரங்கஜேப் தான் இதற்க்கெல்லாம் காரணம் என்று பொய்யைச் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம். வாழ்க ஜனநாயகம்! வாழ்க ஒளரங்கஜேப்பின் எதிர்ப்பு. :-)
சீக்கியர்கள் தங்கள் மத நடவடிக்கைகள் தவிர அரசியலில் தீவிரம் காட்டிப் பேரரசருக்கு எதிராக ஆலோசனைகளும் ஆயுதங்களும் தந்து கிளர்ச்சிக்கு உதவிக்குக் காரணமான குருதேஜ பஹ்தூர் கொல்லப்பட்டார், எனவே சீக்கியர்கள் எதிரி.
மூடப்பழக்க வழக்கங்களைத் தடுக்கும்பொருட்டு ஜோதிடம் பார்த்தல், பஞ்சாங்கம் தயாரித்தல், குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் தீண்டாமை போன்ற வைகளுக்குத் தடை விதித்ததார். எனவே ராஜபுத்திரர்கள் எதிரி.
காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து பொது மக்களுக்கும் சமூகத்திற்கும் தொல்லை கொடுத்த 'சத்நாமிகள் ' என்ற கூட்டத்தாரை அழித்ததால் அந்த இனம் பாதுஷாவுக்கு பரம்பரை எதிரி.
மராட்டியர்களின் நாயகனாகக் கருதப்பட்ட சிவாஜியை கைது செய்து சிறையில் அடைத்ததார். அவர் தந்திரமாகத் தப்பிச்சென்று அவுரங்கசீப்புக்கு எதிராக மராட்டிய மக்களிடம் பிரச்சாரம் செய்தகாரணத்தினால் மராட்டியர்கள் எதிரி.
ஷியா முஸ்லிம்கள் தங்கள் உடல் முழுவதும் அலகுகள் குத்திக்கொண்டும் சாட்டையால் தங்களை அடித்துக்கொண்டும், மார்பில் அடித்துக்கொண்டும் மொஹரம் பண்டிகையைக் கொண்டாடினர். அந்த பண்டிகை ஊர்வலத்திற்கு தடை விதித்ததால் ஷியா முஸ்லிம்கள் அவுரங்கசீப்புக்கு எதிரி. (முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் - கரைகண்டம் கி. நெடுஞ்செழியன்)
காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்ததோடு மட்டுமல்லாமல் இந்துக்கள் மீது ஜெஸ்யா வரியை விதித்து கொடுமைப் படுத்தியதினால் 340 ஆண்டுகளுக்குப் பின் ஆர். எஸ். எஸ், சங் பரிவார் இத்யாதி இத்யாதி எதிரி.
அவுரங்கசீப், தான் முடி சூட்டிய நாளிலிருந்து இறுதி நாள் வரை போராட்டங்களை சந்திக்க வேண்டியவராக இருந்தார். அவர் பதவி ஏற்றதும் இறந்ததும் போர்களத்தில். அவருக்கு எதிரான சதித் திட்டங்கள் பெரும்பாலும் மந்திர்களில் தீட்டப்பட்டன. எனவே அன்னை இந்திரா காந்தியின் பாணியில் Oparation Blue Star (ஆமிர்தசரஸ் பொற்கோயில்) நடத்தி எதிரிகளை ஒழிக்கவேண்டிதாகிவிட்டது. இத்தகைய அடக்குமுறைகளுக்கு இந்து மன்சூதார்களே அனுப்பப்பட்டனர். ஆனால் அதனால் சேதமடைந்த ஆலயங்களை அவுரங்கசீப் தன்னுடைய நேரடிப் பார்வையில் செப்பனிட்டதாக 'கிஸ்ஸா யே ஆலம்கீர் ' என்ற உர்து மொழி புத்தகத்தில் ஓம் ப்ரகாஷ்லால் சியால்கோட்டி எனவர் குறிப்பிட்டுள்ளார் (1909 ம் ஆண்டு லாகூர் பதிப்பு). மூல நூலான ஆலம்கீர் நாமா, ஈஸ்வர்தாஸ் நாகர் என்பவரால் பார்ஸி மொழியில் எழுதப்பட்டது.
'மனமது செம்மையானால் மந்திரம் தேவை இல்லை ' என்பார்கள். தெளிந்த அறிவும் பரந்த கண்ணோட்டமும் இருந்தால் உண்மை அதன் வடிவில் தெரியும். அவை இல்லாதவரை அவுரங்கசீப் அல்ல எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியும்.
//இங்குள்ள சாதிக் கொடுமைதாங்க முடியாமல் இஸ்லாத்திற்கு ஓடியவர்கள்தானே அனைவரும். //
இதைத்தான் நான் இரு ஆப்ரஹாமிய மதங்களுக்கும் நடந்ததாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். அதனால்தான் சார்வாகன் சொன்னதையும் முழுமையாக் ஆதரிக்கிறேன்.
சார்வாகன் சொன்னது: //மாறியவர்கள் இதனை மறந்து வேறு வகையில் மத பெருமிதம் கொள்வது பிற்காலத்தில் வேறு சிக்கல்களுக்கு இட்டு செல்லும்.//
//ஒளரங்கஜேப் தான் இதற்க்கெல்லாம் காரணம் என்று பொய்யைச் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்.//
யாரிங்க அப்ப்டிச் சொன்னது. கொஞ்சம் கோபப்படாமல் கண் திறந்து வாசியுங்கள்.
வளர்க அவரங்கஜேப்பின் ‘தாளிப்பு’!
//முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் //
இன்னும் அதை வெளிநாட்டுப் படையெடுத்து வந்தவன் நான் என்று காலங்காலமாய் சொல்வது காதில் உங்களுக்கு விழாது. ஏனெனில் ...
//மனமது செம்மையானால் மந்திரம் தேவை இல்லை ' என்பார்கள். தெளிந்த அறிவும் பரந்த கண்ணோட்டமும் இருந்தால் உண்மை அதன் வடிவில் தெரியும். //
சகோ திருச்சிக்காரன்
தலித் மக்களை அந்த கொடிக்குளம் ஆதிக்க சாதியினர் சமமாக நடத்த என்ன செய்ய வேண்டும்?.
சட்டப் படி சரி செய்யுங்கள்.இப்போதுள்ள சட்டங்களால் சரி செய்ய முடியாது என்றால் தலித் மக்களுக்கு அதிகாரம் கொடுக்கும் இரட்டை வாக்குரிமை கொண்டு வரத்தான் வேண்டும்.
*************
இந்து மதத்தவர் ஒற்றுமையாக் இருக்க வேண்டும் என்றால் தலித் மக்கள் சம்மாக,சுயமரியாதையோடு நடத்தப் படும் பட்சத்தில் மட்டுமே சாத்தியம்.சுய மரியாதை அவர்கள் உரிமை, யாரும் அளிக்கும் பிச்சை அல்ல.
**********************
ஆட்சி மாற்றத்தினால்தான் பல ஆதிக்க சாதியினர் கூட சாதியினர் உயர்வு ,தாழ்வு என்று மாறி மாறி வந்தார்கள் என்பது வரலாற்றில் இருந்து அறியலாம்.
தலித் மக்கள் ஆட்சி அதிகாரம் இழந்த புத்த,சமண சமயத்தினரே(அம்பேத்கார்). ஆகவே இரட்டை வாக்குரிமைக்காக் தலித் மக்கள் போராடுவதா இல்லையா என்பதை ஆதிக்க சாதியினர் முடிவு செய்யட்டும்.இது நிச்சயம் தலித் மக்களை அரசியல் ரீதியாக பல்முள்ளவர்களாக்,ஆட்சியை கட்டுப் படுத்துபவர்களாக மாற்றும்.
*******************
//ஐந்து லட்ச ரியால். அதாவது ஐம்பது லட்ச ரூபாய் மணக்கொடையாக பெண்ணுக்கு கொடுக்க உங்களுக்கு வசதியிரந்தால் தாராளமாக சவுதி பெண்ணை கட்டலாம். ஒரே ஒரு கண்டிஷன். அவர் முஸ்லிமாக இருக்க வேண்டும்.//
பொதுவா மஹர் என்பது இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்டதல்ல. அது திருமணத்தின்போது பொன், பொருள், நிலமாகவோ பெண்ணின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வண்ணம் மணமகன் தரும் பரிசு என அறிகிறேன். இப்படியல்லாது மணவன் எதிர்காலத்தில் தொடர்ந்து பொருளாதார உதவியாகவோ, கல்வி உதவியாகவோ மஹரை அளிக்கலாம் என்றும் அறிகிறேன். பெண் விரும்பினால் 'ஒர் ரூவா' பெற்றுக் கொண்டும் திருமணம் செய்து கொள்ளலாம் என இணையத்தில் தரவுகள் சொல்கின்றன.
எப்படி இருப்பினும் இதில் பெண்ணின் விருப்பமே இறுதியானது என்றும் அறிகிறேன்.
இந்திய முஸ்லீம் ஆணை ஒரு அரபிப் பெண் விரும்பி மஹர் இல்லாமல் (இல்லை டோக்கன் மஹர் பெற்றுக்கொண்டு) மணக்க விரும்பினால் தடையேதும் இல்லை என்பதே என் புரிதல்.
திருமண வயதில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இஸ்லாமியப் பெண் சவூதியில் இருந்தாலும் 5 லட்சம் மஹர் தர வேணுமா?
ஒவ்வொரு அரபிப் பெண்ணுக்கும் 5 லட்சம் ரியால் மஹர் தரவேண்டும் என்று யார் நிர்ணயித்தது?
சவூதி அரசாங்கமா இல்ல மத குருமார்களா இல்ல நீங்களா சும்மானாச்சிக்கும் அடிச்சுவுடுறீங்களா?
//மற்றைய மாநிலங்களில் எல்லாமே நன்றாக இருப்பது போலல்லவோ நீங்கள் சொல்கிறீர்கள். இதில் அரசியல் எதற்கு?//
இதில் அரசியல் எதுவும் இல்லை . முதலில் நம்முடைய (தமிழர்கள்).. நாம் கழுவிக்கொள்வோம். அப்புறமாக வேறு மானிலத்த பார்ப்போம்.
//மதங்களும், அதிலும் குறிப்பாக இந்து மதமும், மூட நம்பிக்கைகளுமே இதற்கான காரணிகள் என நம்புகிறேன்.//
இந்து மதத்தில் எங்கே இருக்கிறது , தேவர், கோனார், சக்கிளீயன் என்று?
இது வளர்ந்ததற்க்கு காரணம் சமுக அமைப்பினால். ஒவ்வொரு சாதி(சமூகமும்) , உணவு, பழக்கவழக்கம்,தொழில் அனைத்திலும் வேறுபட்டது . அதனால் ஒருவருக்கொருவர் திருமணம் முடிக்காமல், அவர்களூக்கு உள்ளேயே கொடுக்கல் வாங்கல் இருந்த காரணத்தால் இந்த பிளவு மேலும் பற்பல பிரிவுகளாக ஆகின. ஒரு அசைவன் சைவ பெண்ணை மணமுடிக்க முடியுமா? முடியும் . அனால் பிரச்சனை தான் வரும்.இவ்வளவு ஏன் பிள்ளை சாதியில் எடுத்தால் சைவப்பிள்ளை , அசைவப்பிள்ளை. இவர்கள் ஒருவர்க்கொருவர் பெண் கொடுக்க மாட்டார்கள். இந்த விதமாகத்தான் பலதரப்பட்ட சாதிகள் வந்தது(அவர்கள் வாழ்ககை முறைக்கேற்ப) . அதனால் அது இந்து மதத்தினால் வ்ந்தது என்பது அறிவீனம்.
தருமி ஐயா,
தயவு செய்து நான் சாதி இருக்கவேண்டும் என்று கூறுவதற்கு சப்பைக்கட்டுவதாக நினைக்கவேண்டாம். எனது கருத்து என்னவென்றால் ,இது இந்து மதத்தினால் வந்தது அல்ல. இந்தியாவில் இதன் பெயர் சாதி , அரேபியாவில்/போர்க்கிஸ்தான்/ஆஃப்ரிக்காவில் குழுக்கள்(tribe). மற்ற நாடுகளில் வேற செக்ட்(sect). அவ்வளவுதான்.. எல்லாம் ஒன்றே.
//எல்லாம் ஒன்றே.//
இல்லை
//அது இந்து மதத்தினால் வ்ந்தது என்பது அறிவீனம்.//
அப்டியா..?!
மனு சாஸ்திரம் ஏதும் இது பற்றி சொல்லவில்லையா? வர்ணம் பிரிக்கவில்லையா?
பிரம்மாவின் anatomy பற்றி என்ன நினைக்கிறிர்கள்? நான் எங்கிருந்து பிறந்தேன்? காலில் இருந்தா? இல்லை, வேறு
எங்கிருந்துமா??
//நாம் கழுவிக்கொள்வோம்.//
ஆரம்பியுங்கள் ...!
இந்து மட்டுமல்ல, பல பத்திரிக்கைகளும் இந்த முறையையே கடைபிடிக்கின்றன. இதில் ஒரு நல்ல நோக்கமும் இருக்கிறது. இவ்வாறு செய்தி போடவேண்டும் என்று ஒரு கட்டத்தில் அரசாங்கமே பத்திரிக்கைகளிடம் கோரியிருக்கலாம் என்று கருதுகிறேன்.
ஒரு கிராமத்தில் இருக்கும் இரண்டு ஜாதிகளுக்கு இடையே இருக்கும் ஒரு சண்டையை பற்றிய செய்தியை போடும் விதத்தில் போட்டால் மாநிலமெங்கும் கலவரம் வரமுடியுமே என்று அரசாங்கம் கருதியிருக்கலாம். அதே போல இரண்டு மதத்தினருக்கு இடையே இருக்கும் ஒரு சண்டையை போடும் விதத்தில் போட்டாலும் நாடெங்கும் கலவரம் வந்துவிடலாம் என்று அரசாங்கம், பத்திரிக்கைகள் கருதியிருக்கலாம்.
ஆனால், நீங்கள் சொல்வது போல பகிரங்கமாக ஒரு குழு செய்யும் அராஜகத்தை சுட்டிக்காட்டுவதில் பயனுண்டு என்றுதான் நானும் கருதுகிறேன். பொதுவாக இந்தியாவில் இருக்கும் பத்திரிக்கைகள் இஸ்லாமுக்கு எதிராகவும் கிறிஸ்துவத்துக்கு எதிராகவும் இருக்கும் செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன. கிழவியான ஒரு பெண்ணுடன் நித்யானந்தா கொண்ட உறவை வெளிச்சம் போட்ட ஊடகங்கள், பச்சை குழந்தைகளை கற்பழித்த பாஸ்டர்கள், பாதிரிகள், இமாம்களை கண்டுகொள்ளவில்லை. அதனால், பாதிரிகள் இமாம்கள் ஆகியோர் ஒரே ஒழுக்கசீலர்கள் போன்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.
இப்போது சுவனப்பிரியன் சொல்லுவதையே எடுத்துகொள்ளுங்கள்.
இஸ்லாமில் தீண்டாமை இல்லை என்று சொல்கிறார். உண்மையா? இல்லவே இல்லை. இஸ்லாமில் அதுவும் அரேபிய தீபகற்பத்திலேயே தீண்டாமை உண்டு. அங்குள்ள கருப்பினத்தவர்கள் கொஞ்சம் மாநிறமாக உள்ளவர்கள் தீண்டத்தகாதவர்களாக கருதப்படுகிறார்கள். அல்-அக்தும் al-akhdum என்று தேடிப்பாருங்கள். தெரியும். இதற்கு இஸ்லாம் அதனை ஒப்புகொள்வதில்லை என்று சுவனப்பிரியன் சொல்லுவார். அதுவும் உண்மையில்லை. ஏனெனில் இஸ்லாமிய இமாம்களே தீண்டாமையை வலியுறுத்தியிருக்கிறார்கள். இவரும் அவரும் சமமாக மாட்டார்கள். ஜிகாத் செய்பவனும் சும்மா உட்கார்ந்திருப்பவனும் சமமாக மாட்டார்கள். படித்தவனும் படிக்காதவ்னும் சமமாக மாட்டார்கள்....(அல்லாவாகிய) நானே மக்களை பிரித்து ஒருவரை உயர்த்தியும் ஒருவரை தாழ்த்தியும் வைத்தேன் என்பது போன்ற குரான் வசனங்கள் உண்டு. காபிர் தீண்டத்தகாதவன். நஜஸ் என்பது முகம்மதே சொன்னது.
அடுத்ததை பார்ப்போம்.
நானும் மெஹர் கொடுத்தால், ஒரு அரபி பெண்ணை திருமணம் செய்யலாம் என்று சொல்கிறார். இது அறவே தவறு. இஸ்லாமில் இருக்கும் ஒரு முக்கிய கருத்து காஃபா KAFA'AH (SUITABILITY AND COMPATIBILITY) IN NIKAH
‘… And Kafaa’at in lineage. Thus the Quraysh are suitable matches for one another as are the (other) Arabs suitable matches for one another.’
http://www.shariahprogram.ca/women-islam/kafaah.shtml
இதுவும் முகம்மதின் ஹதீஸ்களில் காணக்கிடக்கிறது. அதனை உலேமாக்களும் மற்ற இஸ்லாமிய அறிஞர்களும் காலம் காலமாககடைபிடித்துத்தான் வருகிறார்கள்.
இஸ்லாமிய திருமண ஜாதி முறையை சிம்பிளாக சொல்லவேண்டுமென்றால், இப்படி சொல்லலாம்.
முஸ்லீம் பெண் முஸ்லீம் ஆணைத்தான் திருமணம் செய்யவேண்டும். முஸ்லீம் ஆண் காபிர் பெண்ணை திருமணம் செய்யலாம். ஆனால் அவள் முஸ்லீமாக வேண்டும்.
அரபி ஆணும் அரபி பெண்ணும் அரபிகளையே திருமணம் செய்யவேண்டும்.
மேல்ஜாதி அரபி ஆண் கீழ் ஜாதி அரபி பெண்ணை திருமணம் செய்யலாம். ஆனால் மேல்ஜாதி அரபி பெண் கீழ்ஜாதி அரபி ஆணை திருமணம் செய்தால் செல்லாது. இப்படிப்பட்ட திருமணங்களை நீதிமன்றமே கட்டாய விவாகரத்து கொடுத்ததும் உண்டு.
முகம்மதின் குரேஷி குலமே உயர்ந்த குலமாக ஆக்கப்பட்டது. ஆகவே குரேஷியினர் குரேஷிக்குள்தான் மணம் முடிக்க வேண்டும்.
சுவனப்பிரியன் அவுரங்கசீப்புக்கு சப்பை கட்டு கட்டும்போது ஒரு கம்யூனிஸ்டின் புத்தகத்தை காட்டுகிறார். அவர் ஏன் இஸ்லாமிய ஆசிரியர்களின் புத்தகங்களை காட்டவில்லை என்று தெரியவில்லை.
http://www.archive.org/stream/cu31924073036786#page/n73/mode/2up/search/temple
பக்கம் 38, 39
ஆக்ராவில் இருந்த ஒரு மாபெரும் கோவிலை இடித்து அதிலுள்ள (அந்த காலத்திலேயே) கோடிக்கணக்கான பெருமானமுள்ள சொத்துக்களை கொள்ளையடித்த பேரரசரை பற்றியும் எதற்காக கொள்ளையடித்தார்களென்பதை பற்றியும் இஸ்லாமிய வரலாற்றாசிரியரே எழுதியது இருக்கிறது.
படித்து இன்புறுங்கள்.
http://www.sacred-texts.com/hin/m12/m12b015.htm
"Bhrigu said, 'There is really no distinction between the different orders. The whole world at first consisted of Brahmanas. Created (equal) by Brahman, men have, in consequence of their acts, become distributed into different orders. They that became fond of indulging in desire and enjoying pleasures, possessed of the attributes of severity and wrath, endued with courage, and unmindful of the duties of piety and worship,--these Brahmanas possessing the attribute of Passion,--became Kshatriyas. Those Brahmanas again who, without attending to the duties laid down for them, became possessed of both the attributes of Goodness and Passion, and took to the professions of cattle-rearing and agriculture, became Vaisyas. Those Brahmanas again that became fond of untruth and injuring other creatures, possessed of cupidity,--engaged in all kinds of acts for a living, and fallen away from purity of behaviour, and thus wedded to the attribute of Darkness, became Sudras. Separated by these occupations, Brahmanas, falling away from their own order, became members of the other three orders. All the four orders, therefore, have always the right to the performance of all pious duties and of sacrifices. Even thus were the four orders at first created equal by Brahman who ordained for all of them (the observances disclosed in) the words of Brahma (in the Vedas).
அப்போ இது என்ன . நீங்கள் இன்னும் கிருஸ்த்வர்கள் பரப்பின தவறான கொள்கையிலியே இருக்கிறீர்கள். அதை விட்டு வெளீயே வாருங்கள்.
நீங்களும், மற்றும் பலரும் சொல்வது புரானக்கதைகளைப்ப்ற்றிதான். அது கதை தான்.. அதிலும் பல ஊடுருவல்கள். அதானால் அதை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை . , எந்த பிராமனானாவது நான் பிரம்மாவின் தலையில் இருந்து வந்தவன் என்று கூறி நீங்கள் கேட்டு இருக்கிறீர்களா ??.அதே மாதிரி எந்த ஒரு ஹிந்துவாவது நான் பிரம்மாவின் மார்பில் இருந்து வந்தவன் என்று. இதல்லாம் உங்களை மாதிரியானவர்கள் சொல்லுவது தான்.
இதைதான் அறிவீனம் என்கிறேன்.
இந்த 1000 வருடம் அடிமையாக இருந்ததினால் எதில் ஊடுருவல் உள்ளது என்றே தெரியவில்லை.
மனுவைப்பற்றி தெரிந்துகொள்ள..
http://aryaamitdua.blogspot.com/2010/12/manu-ka-virodh-kyon-why-to-oppose-manu.html
//எல்லாம் ஒன்றே.//
//இல்லை//
இதற்கு விளக்கம் குடுக்க முடியுமா?
தமிழன்!
//தயவு செய்து நான் சாதி இருக்கவேண்டும் என்று கூறுவதற்கு சப்பைக்கட்டுவதாக நினைக்கவேண்டாம். எனது கருத்து என்னவென்றால் ,இது இந்து மதத்தினால் வந்தது அல்ல.//
தமிழன் என்ற பொய்ப் பெயரில் வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடிக்கும் ஆரியரே! தருமி ஐயா கேட்கும் கேள்விகளுக்கு நேரிடையான பதிலைச் சொல்லவும்.
----------------------------------------------------------------------
குஜால்!
//ஒவ்வொரு அரபிப் பெண்ணுக்கும் 5 லட்சம் ரியால் மஹர் தரவேண்டும் என்று யார் நிர்ணயித்தது?
சவூதி அரசாங்கமா இல்ல மத குருமார்களா இல்ல நீங்களா சும்மானாச்சிக்கும் அடிச்சுவுடுறீங்களா?//
பெரும்பான்மையான சவுதி வீடுகளில் திருமணம் முடிக்க ஐந்து லட்சம் ஒரு இலக்காக வைப்பார்கள். எனவே உதாரணத்திற்காகத்தான் அந்த தொகையை சொன்னேன்.
பரவாயில்லையே! ஓரளவு சட்டங்களை தெரிந்து வைத்திருக்கிறீர்களே!
4:4. நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.
2049. அனஸ்(ரலி) அறிவித்தார்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) மதீனாவுக்கு வந்தபோது, அவர்களையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் நபி(ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅத்(ரலி) வசதி படைத்தவராக இருந்தார். அவர் அப்துர் ரஹ்மானிடம், 'என்னுடைய செல்வத்தைச் சரி பாதியாக உமக்குப் பிரித்துத் தருகிறேன். (என் மனைவியரில் ஒருத்தியை விவாகரத்து செய்து) உமக்கு மண முடித்துத் தருகிறேன்!' எனக் கூறினார். அதற்கு அப்துர் ரஹ்மான்(ரலி), 'உம்முடைய குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக!' எனக்குக் கடை வீதியைக் காட்டுங்கள்! எனக் கூறினார். அவர் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்று, அவர் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்தார். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் வந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் 'என்ன விசேஷம்?' எனக் கேட்டார்கள். அதற்கவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் ஓர் அன்ஸாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்!" என்றார். நபி(ஸல்) 'அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்?' எனக் கேட்டார்கள். 'ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்!" என அவர் பதில் கூறினார். அதற்கு 'ஓர் ஆட்டையேனும் மணவிருந்ததாக அளிப்பீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Volume :2 Book :34
இந்த மனு என்பவர் ஒரு அரசர். அவர் இந்திய சமுதாயத்தை நிருவியவரோ, இந்து மதத்தை ஸ்தாபித்தவரோ அல்ல.
மனு தன்னுடைய காலத்தில் நிலவிய பழக்க வழக்கங்களைத் தொகுத்து தன்னுடய ஆட்சிக்கு சட்ட திட்டங்களை உருவாக்கிக் கொண்டார். அதுதான் மனு சாஸ்திரம் எனப் படுகிறது.
மனு சாஸ்திரம் மத நூல் அல்ல. அது அவருடைய ஆட்சிக்கான அரசியல் அமைப்பு சட்டம்.
அரசியல் சட்டங்கள் அவ்வப் போது மாறும். ஆட்சி மாறும் போது சட்டங்கள் மாறும். மனுவின் சட்ட திட்டங்களையும் ஏற கட்டியாகி விட்டது.
மனுவுக்கு முன்னும் இந்திய சமூகம் இருந்தது. மனுவுக்குப் பின்னும் இந்திய சமுதாயம் உள்ளது.
மனுவுக்கு முன்னும் இந்து மதம் இருந்தது, மனுவுக்கு பின்னும் இந்து மதம் இருக்கிறது.
மனு இந்து மதத்திற்கு மெசியாவோ, தூதரோ, அவதாரமோ, குருவோ அல்ல.
இந்திய மக்கள் யாரும் இன்று மனுவை அங்கீகரிக்கவும் இல்லை, நினைப்பது கூட கிடையாது.
99.9% இந்துக்களுக்கு மனு யார் என்று கூட தெரியாது. அவர் இராமரைப் போலவோ, அரிச்சந்திரனைப் போலவோ, சிபியைப் போலவோ, பரதனைப் போலவோ புகழ் பெற்றவரும் அல்ல.
மனு மட்டும் அல்ல, சாதி அடிப்படியில் வெவ்வேறு சட்டங்களை வகுப்பவர் யாராக இருந்தாலும் அவரை எதிர்க்கிறோம், கண்டிக்கிறோம்.
எந்த ஒரு மனிதரையும் இழிவு படுத்தும் வகையிலான கருத்துக்களை எதிர்க்கிறோம். மனுவின் கோட்பாடும் கருத்தும் தவறானது. அது இந்து மதத்திற்கு எதிரானது.
ஒவ்வொரு மனிதனும், தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்ள உதவுவதே ஆன்மீகம். எந்த ஒரு மனிதனும் மிக உயர்ந்த ஞானி ஆக முடியும் என்பதை இந்து மதம் எடுத்து சொல்கிறது.
மனிதன் இழிந்தவன் அல்ல, ஒவ்வொரு மனிதனும் சிறந்தவன், எல்லை அற்ற வலிமை உடையவன், அவன் மனதில் உள்ள அறியாமையை; மயக்கத்தை எந்த அளவுக்கு ஒருத்தன் விட்டு விடுகிறானோ அந்த அளவுக்கு அவன் தன்னுடய சிறந்த உண்மையான நிலையை நெருங்கிகிறான் என்பதே இந்து மதத்தின் கோட்பாடு. மனு அதை புரிந்து கொள்ளவில்லை.
இந்து மதத்தின் ஸ்மிரிதி எனப் படும் முக்கிய நூல்களான வேதங்கள் , பகவத் கீதை போன்ற எதிலாவது ஒரு மனிதன் பிறப்பால் உயர்ந்தவன் என்றோ , தாழ்ந்தவன் என்றோ சொல்லப்பட்டதாக காட்ட இயலுமா?
ஒரு மனிதனின் குணம், அவன் தொழிலை செய்யும் முறை, தொழில் ஆகிவற்றை வைத்தே அவனது உயர்வும் தாழ்வும் அமைகிறது என்பது தெளிவாக சொல்லப் பட்டு உள்ளது.
கள்ளச்சாராயம் காய்ச்சி பலர் சாக காரணமாயிருக்கும் தொழிலை செய்வது தாழ்மையே. கஞ்சா விற்பது தாழ்மையே. பெரிய போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் கையூட்டு வாங்கி கற்பழிப்பு கேசை மூடுவது கயமையே. ஆட்டோ ஓட்டினாலும் ஒரு பயணி பணப் பெட்டியை வைத்து விட்டு சென்றால் அதை காவல் நிலையத்தில் ஒப்படைப்பவன் மிக உயர்ந்தவனே.
குண கர்மங்களால் வேறுபாடு அமைகிறது என்பதை தெளிவாக கீதை சொல்லி இருக்கிறது. நல்ல குணங்களை கைக் கொண்டு ஒருவன் தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்ள முடியும். தீய குணங்களைக் கைக் கொண்டால் தனக்குத் தானே பகைவன் ஆகிறான் என்று கீதை தெளிவாக சொல்லி உள்ளது.
இவ்வாறாக ஒருவன் உயர்ந்தவன் ஆவதும் , தாழ்ந்தவன் ஆவதும் அவரவர் கையிலே இருக்கிறது. "கடவுளி"ன் கையில் இல்லை(அப்படி ஒருவர் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி).
மாலையின் பணி முடிந்தவுடன் ஜிம்முக்கு போவதானாலும் போகலாம். டாஸ்மாக் பாருக்கு போவதானாலும் போகலாம், டிஸ்கொதேக்கு போவதானாலும் போகலாம், யார் முடிவு எடுக்க வேண்டும்? அவரவர் தான் முடிவு எடுக்க வேண்டும்.
இதையே வள்ளுவர் "பிறப் பொக்கும் எல்லா வுயிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்" என்றும்
"வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு" என்றும் சொன்னார்.
சாதி என்பது இந்து மதத்தில் இல்லை.
வேதங்களில் எங்காவது சாதி பிரிவுகள் பற்றிய குறிப்புகள் இருக்கிறதா? அவை எல்லாம் அக்னி, வருணன் , ப்ராஜபதி இவர்களை வணங்கும் கோரும் வேள்விகளைப் பற்றியும்-(e.g)பிராஜாபதியே இதன் நமஹா, அக்னி மீளே ...., (கர்ம காண்டம்),
உயிர் என்பது என்ன, இறப்பிற்கு பின் உயிர் என்ற ஒன்று இருக்கிறதா, அது என்ன ஆகும், துன்பத்த்க்கு காரணம் என்ன, துன்பம் வாரா நிலையை அடைவது எப்படி என்பது பற்றிய உயிராராய்ச்சி (ஞான காண்டம்) செய்யும் உபநிடநிதங்கள் ஆகியவையே உள்ளது.
ஆனால்இந்திய சமூகம் சாதியாகப் பிரிந்து கொண்டது!
எத்தனை சாதிகள்... செட்டியார் சமூகத்தை எடுத்துக் கொண்டால் அதிலே நகரத்தார், கோமுட்டி செட்டி,தெலுங்கு மனை செட்டியார் ... இப்படி எத்தனை வகை.
ஆசாரியார் (விஸ்வகர்மா) பிரிவை எடுத்துக் கொண்டால் அதிலே தச்சு ஆச்சாரியார், பொற் கொல்லர் ஆச்சாரியார், இரும்பு கொல்லர்... அதிலும் உட் பிரிவுகள்..
இந்த சாதிப் பிரிவுகள் எல்லாம் வேதத்திலே சொல்லப் பட்டு உள்ளதா?
அப்படியானால் சாதி எப்படி உருவாயிற்று?
அவரவர் செய்யும் தொழில், வாழும் இடங்கள், இவற்றுக்கு ஏற்ப குழுக்களாக வாழ்ந்து தனி சாதிகளாக அமைத்துக் கொண்டனர். ஒரு வேலை செய்தவர், தன் மகனுக்கு தன் தொழிலை கற்றுக் கொடுத்தார், நெளிவு, சுளிவு அத்தனியும் சொல்லிக் கொடுத்தார். மகன் இவற்றைக் கற்றுக் கொண்டு இன்னும் தன் சொந்த திறமையைக் காட்டி தொழில் திறமையை வளர்த்தான். பிறக்கும் போதே ஒருவனுக்கு வேலை உருதியாவதால இந்த சாதியை எல்லோரும் கெட்டியாக பிடித்துக் கொண்டனர். தன் மகளை அதே தொழில் செய்தவருக்கு திருமணம் செய்து கொடுத்தார், தன மாப்பிள்ளைக்கு தொழிலில் பிரச்சினை வந்தால் தான் உதவ முடியும் என்று.
இதிலே அதிக பாதிப்புக்கு உள்ளானது அட்டவணைப் பட்டியல் பிரிவினர். தங்கள் வயலில், தொழிலில் மறுப்புக் காட்டாமல் வேலை செய்ய வேலை ஆட்கள் தேவைப் பட்டதால் பண்ணையார்கள் சாதி பிரிவை பிறப்பு அடிப்படையில் நிரந்தாமாக்குவதில் முனைப்பு காட்டி விட்டனர்.
வெவ்வேறு கால கட்டங்களி வெவ்வேறு சதிகள் உருவாகி இருக்கின்றன.எட்டாம் நூற்றாண்டுக்கு முன் ஐயர், ஐயங்கார், மாத்வா என்கிற ஜாதிகள் இல்லை. எட்டாம் நூறாண்டுக்கு பிறகு அத்வைத கோட்பாட்டை விரும்புவோர் ஐயர் என்றும், விசிச்டாத்வைத கோட்பாட்டை விரும்புவோர் அயங்க்கார் என்றும், துவதைக் கோட்பாட்டை விரும்புவோர் மாதவர் என்றும் புது சாதிகளை உருவாக்கிக் கொண்டனர்.
இதிலே தமிழ் நாட்டில் உள்ள சாதிகள், அவற்றின் உணவுப் பழக்க வழக்கங்கள், சமைந்த (பூப்பெய்தல்) சடங்கு, திருமண சடங்கு, சாவு சடங்கு இவற்றை எல்லாம் எழுதுவது என்றால், நான்கு வேதங்கள் அல்ல, நாற்பது வேதங்கள் இருந்தாலும் போறாது.
ஆனால் எந்த வேதத்திலும் சாதிகள் பற்றி குறிப்புகள் இல்லை-நான் தேடி தேடி பார்த்து விட்டேன். நான் படித்த அளவில் எனக்கு தெரிந்த அளவில் இல்லை.
//சாதி என்பது இந்து மதத்தில் இல்லை.
வேதங்களில் எங்காவது சாதி பிரிவுகள் பற்றிய குறிப்புகள் இருக்கிறதா? //
சரி விடுங்க.
உங்க இந்து மதம் தீண்டாமையை, சாதிக் கொடுமையை எதிர்க்கிறதா, அக்கொடுமைகளை தூக்கிப் பிடிப்பவர்களை கண்டிக்கிறதா?
எங்க இந்து மதம் மட்டும் அல்ல, உண்மையான் இந்து மதம் ஒவ்வொரு மனிதனும் தெய்வமே என்கிறது. சுவாமி விவேகானந்தர் சிவலிங்கத்தில் கடவுளை பார்ப்பவன் வழிபாடு ஆரம்ப நிலையில் இருக்கிறது, கடவுளை எல்லா மனிதரிடமும் பார்ப்பவரே முதிர்ச்சி அடைந்த ஆன்மீகம், உங்களை சுற்றி உள்ளவர்களை ஆராதனை செய்யுங்கள், விராட் புருஷர்கள் என்கிறார். ஒவ்வொரு மனிதரையும் அன்பு செய்து, மரியாதை செய்து , அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பது மிகச் சிறந்த செயல். நான் உயர்ந்த ஜாதி யாக இருக்கிறேன் என எண்ணி கே கொண்டு மமதை கொள்பவன் அழிவை நோக்கி செல்கிறான் என்கிறது கீதை.
தீண்டாமை என்கிற கோட்பாடு இந்து மதத்தில் இல்லை. எதற்கு ஒருவரைத் தீண்ட தயங்க வேண்டும்? எதற்கு ஒருவரை ஒதுக்கி வைக்க வேண்டும். அது அநீதியான தவறு.
இந்துமத வேதங்களில் , ச்மிரிதி களில் ஒருவரை தீண்டக் கூடாது ஏனோ, ஒதுக்கி வைக்க வேண்டும் என்றோ சொல்லப் படவேயில்லை.
அடிப்படையில் எல்லா மனிதரும் நல்லவரே. அவரவர்கள் வளரும் சூழ்நிலை, கேட்கும் பேச்சுக்கள், சுற்றி நடக்கும் செயலகள, நண்பர்கள், உறவினர்கள், நாடு...இவையே ஒருவரின் மனப் பாங்கை உருவாக்குகிறது.
என்னை விட வயது முதிர்ந்த எந்த ஒருவருக்கும் அவர் கால்களில் நீரபிசகம் செய்து, அவர் காலைக் கழுவி அவருக்கு மரியாதை செய்ய நான் தயார். இது மனிதத்துக்கு செய்யும் மரியாதை, மனிதருக்கு செய்யும் மரியாதை, அவருக்கு நம்பிக்கையை, தான் சிறந்தவர் என்கிற எண்ணத்தை தரும் செயல்.
எங்க இந்து மதம் மட்டும் அல்ல, உண்மையான் இந்து மதம் ஒவ்வொரு மனிதனும் தெய்வமே என்கிறது.
சுவாமி விவேகானந்தர்,சிவலிங்கத்தில் கடவுளை பார்ப்பவன் வழிபாடு ஆரம்ப நிலையில் இருக்கிறது, கடவுளை எல்லா மனிதரிடமும் பார்ப்பவரே முதிர்ச்சி அடைந்த ஆன்மீகம், உங்களை சுற்றி உள்ளவர்களை ஆராதனை செய்யுங்கள், விராட் புருஷர்கள் என்கிறார். ஒவ்வொரு மனிதரையும் அன்பு செய்து, மரியாதை செய்து , அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பது மிகச் சிறந்த செயல். நான் உயர்ந்த ஜாதி யாக இருக்கிறேன் என எண்ணி கே கொண்டு மமதை கொள்பவன் அழிவை நோக்கி செல்கிறான் என்கிறது கீதை.
தீண்டாமை என்கிற கோட்பாடு இந்து மதத்தில் இல்லை. எதற்கு ஒருவரைத் தீண்ட தயங்க வேண்டும்? எதற்கு ஒருவரை ஒதுக்கி வைக்க வேண்டும். அது அநீதியான தவறு.
இந்துமத வேதங்களில் , ச்மிரிதி களில் ஒருவரை தீண்டக் கூடாது ஏனோ, ஒதுக்கி வைக்க வேண்டும் என்றோ சொல்லப் படவேயில்லை.
அடிப்படையில் எல்லா மனிதரும் நல்லவரே. அவரவர்கள் வளரும் சூழ்நிலை, கேட்கும் பேச்சுக்கள், சுற்றி நடக்கும் செயலகள, நண்பர்கள், உறவினர்கள், நாடு...இவையே ஒருவரின் மனப் பாங்கை உருவாக்குகிறது.
என்னை விட வயது முதிர்ந்த எந்த ஒருவருக்கும் அவர் கால்களில் நீரபிசகம் செய்து, அவர் காலைக் கழுவி அவருக்கு மரியாதை செய்ய நான் தயார். இது மனிதத்துக்கு செய்யும் மரியாதை, மனிதருக்கு செய்யும் மரியாதை, அவருக்கு நம்பிக்கையை, தான் சிறந்தவர் என்கிற எண்ணத்தை தரும் செயல்.
ஒரு விஷயம் மட்டும் தெளிவாக் புரிகிறது.
பிரச்சினை என்ன கொடிக்குளம் கிராமத்தில் உள்ள கள்ளர்,மூப்பர் என்ற இரு பிற்படுத்தப்ப்ட்ட பிரிவு சாதியை சேர்ந்த மக்கள் (சிலர்) தாழ்த்தப்பட்ட மக்களை ஊர் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக விட மாட்டேன் என்கிறார்கள் ?
இத்னை என்ன செய்வது என்று கேட்கிறார்க் தருமி அய்யா.அவ்வளவுதான்!!!!!!!
1.இந்து மத புத்தகங்களில் சாதி இல்லை என்கிறார்கள்.அது தேவையில்லாதது.அப்ப்டி சொல்பவர்கள்.இச்செயல் இந்து மதத்திற்கு எதிரானது.மனிதத் தன்மை அற்றது என்று கூறலாமே!!!!!!.
அப்ப்டி மனித உரிமை மீறல் செய்த மக்களுக்கு கண்டனம் என்று ஒரு பதிவிட்டால் கூட நலம்.
2. இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுத்து நிலமையை சீர் செய்ய்லாம்.அத்னையும் வலியுறுத்தலாம்.
3.இதற்கு மத மாற்றம் என்பது தீர்வல்ல.அது வேறு பிரச்சினைகளை கொண்டுவரும்.மற்ற மதங்களிளும் இப்பிரச்சினை வேறுவிதமாக்வே இருக்கின்றன் என்றாலும் விவாதப் பொருளை விட்டு வேறு எங்கோ செல்வதாக தோன்றுகிறது.
அ)அப்ப்டி கொடுமை செய்யும் கொடிக்குளத்தை சேர்ந்த கள்ள ,மூப்பர் இன அடக்குமுறையாளர்களை மாற்ற என்ன செய்யலாம்? இந்த குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வாக என்ன கூறுகிறீர்கள்?.
ஆ) ஏன் மனித நேயம் விரும்பும் அனைவரும் கொடிக்குளம் கிராமத்தின் கள்ளர்,மூப்பர் இனத்தை சேர்ந்த சிலரின் சாதிவெறியை கண்டிக்கிறோம்,அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிடக் கூடாது?
caste, class, families, tribes...etc இவை போன்றவை, மனிதன் குழுக்களால் வாழும் சமுதாய சூழ்நிலைகளால் ஏற்பட்டவை.
ஜாதிக்கான தனித்துவம் என்னவென்றால் ஜாதியின் பெயரால் நடைப்பெரும் கொடுமைகள். மனிதனை மிருகத்தை விட கீழ்தரமாக நடத்தும் கொடுமைகள்.
ஜாதிகள் இல்லாத சமுதாயம் என்பது இந்தியாவில் தற்போதுள்ள சமுதாய சூழ்நிலையில் utopian dream எப்படி classless society போல.
ஆனால் செய்யமுடிந்த கனவு, கட்டாய செய்ய வேண்டியது,ஜாதியின் பெயரால் நடக்கும் ஏற்றத்தாழ்வுகள், இழிவுகள், கொடுமைகள் ஆகியவற்றை அடியொட கலைவது.
இந்து மதம் ஜாதிகளை ஏற்படுத்தவில்லை அங்கிகாரபடுத்தவில்லை என்பது ஜாதிகளை ஒழிக்க உதவும். ஆனால் ஜாதிகளுக்கு ஒரு மத அங்கிகாரம் (religious sanctity)இந்து மதம் தந்ததை மறுக்கவும் முடியாது. ஜாதியை மத சம்பந்தப் படுத்தாமல் அதன் வீரியம் இவ்வள்வு விஷமாக மாறியிருக்காது. அதை ஒத்துக்கொண்டாலும் இந்து மததிற்கு இழுக்கும் கிடையாது. ஜாதிகள் அநீதியானவை அது இந்து மதம் அல்ல என்ற கூறும் சுதந்திரம் இந்து மதம் அளித்துள்ளது.
கிருத்துவ மதத்திலும் ஜாதிகள் உண்டு.இஸ்லாமில் 200% ஜாதிகள், ஏற்றத் தாழ்வுகள் இல்லை!!!!!!. ஜாதியை சமுதாய கண்ணோட்டதுடன் பார்க்க வேண்டும்.
எப்படி எடுத்துக்கொண்டாலும் ஒவ்வொரு தனிமனிதன் முயற்சி செயல் இல்லாமல் தரித்தர ஜாதி கோட்பாட்டை ஒழிக்க முடியாது.
//நீங்களும், மற்றும் பலரும் சொல்வது புரானக்கதைகளைப்ப்ற்றிதான். அது கதை தான்.. அதிலும் பல ஊடுருவல்கள். அதானால் அதை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை .//
தமிழன், தருமி சுட்டும் இந்த பிராமணன் தலை, க்ஷத்ரியன் கை, வைஷ்யன் தொடை, சூத்ரன் கால் விஷயம் வருவது புராணக்கதைகளில் அல்ல. மகாபாரதத்துக்கும் முந்தைய நூலான ரிக்கில் வருகிறது இந்த மேற்படி சமாசாரம். புருஷ சுக்தம் என்று பெயர். ரிக் 10 .90 ஐ பார்க்கவும்.
a
இந்துமத துறவிகள் இது போன்ற ஜாதி பாகுபாடு பார்ப்பது இந்து மதத்துக்கு எதிரானது என்று கூறி வருகிறார்கள். தற்போது களத்துக்கே சென்று சுமுக நிலை ஏற்பட உதவுகிறார்கள்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=269722
சுடர் ஒளியால் சுமுக நிலை இ.ம.க., புதிய முயற்சி
அன்னூர் : "பிரச்னை ஏற்பட்ட நல்லிசெட்டிபாளையத்தில் வீடு வீடாக துறவியர் மற்றும் மடாதிபதிகள் விளக்கேற்றும் நிகழ்ச்சி நடைபெறும்' என இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. குருக்கிளையம்பாளையம் பொதுக்குழாயில், நல்லிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் தண்ணீர் பிடிக்கும் போது மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஒருவர் தாக்கப்பட்டார். சில அமைப்புகள் இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தின. இப்பிரச்னை குறித்து தேசிய மனித உரிமை கமிஷன், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்ய இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் நல்லிசெட்டிபாளையம் மற்றும் குருக்கிளையம்பாளையம் சென்றனர். அங்கு இருதரப்பினரையும் சந்தித்து, நடந்தவை குறித்து கேட்டனர். அரசு மற்றும் மற்றொரு தரப்பில் செய்ய வேண்டியவை குறித்து கேட்டனர். பின், அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது: நல்லிசெட்டிபாளையம் காலனியில் இன்னும் இரு வாரங்களில் இந்து துறவியர் பேரவை சார்பில், துறவிகள், மடாதிபதிகள் வீடு, வீடாக சென்று விளக்கேற்றி, அப்பகுதி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்ய உள்ளனர். இருதரப்பினரும் ஒற்றுமையாக வாழ, வழிபாடு நடத்தப்படும். இருதரப்பினர் இடையே ஏற்பட்ட சிறு மோதலை சிலர் பெரிதுபடுத்துகின்றனர். இந்து மதத்தில் எந்த தரப்பினருக்கும் பாகுபாடு காட்டுவதில்லை. இவ்வாறு, அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
//இந்து மதத்தின் ஸ்மிரிதி எனப் படும் முக்கிய நூல்களான வேதங்கள் , பகவத் கீதை போன்ற எதிலாவது ஒரு மனிதன் பிறப்பால் உயர்ந்தவன் என்றோ , தாழ்ந்தவன் என்றோ சொல்லப்பட்டதாக காட்ட இயலுமா?//
திருச்சிக்காரன் மனு தர்மமும் ஸ்ம்ருதி என்பது நீங்கள் அறிய வேண்டிய ஒன்று. மனுவை பாவம் யாரோ ஊர் பேர் தெரியாத அரசர் என்று சொல்லிவிட்டீர்கள். அவர் பிருகு முனிவரின் குரு என்பது ஐதீகம். மனு ஸ்ம்ருதியை உலகுக்கு அறிவித்ததே பிருகு முனிவர் தான் என்பதும் ஐதீகம். மனு ஸ்ம்ருதியை தான் ஒரே அடியாய் trivialize செய்கிறீர்கள்,போகட்டும். யாஜ்னவால்க்ய ஸ்ம்ருதி படித்திருக்கிறீர்களா? அதில் சூத்ரனக்கு வேதம் ஓதும் உரிமை மறுக்க பட்டுள்ளதை அறிவீர்களா? இந்த ஸ்ம்ருதியின் படி சூத்ரனுக்கு உபனயனமோ, வேத அறிவிப்போ கூடாது. இது உயர்வு தாழ்வு போதிபதல்லாமல் வேறு என்ன?
இன்னோரு விஷயம், வேதங்கள் ஸ்ம்ருதி அல்ல, அவை ஸ்ருதி.
நன்றி, சகோதரர் கணேசன்,
டைப் அடிக்கும் போது ஸ்ருதி என்பதற்கு பதிலாக ஸ்மிருதி என்று டைப் ஆகி விட்டது (இது எழுத்துப் பிழை என்பதை நீங்கள் உணர்ந்திருக்கக் கூடும். ஸ்ருதிதான் ஆதார நூல்கள்.
ஸ்மிருதி என்பது அவ்வப் போது பலராலும் எழுதப் படுவது.
இப்போது மீண்டும் அதே கேள்வியை முன் வைக்கிறேன் (திருத்தத்துடன்).
//இந்து மதத்தின் ஸ்ருதி எனப் படும் முக்கிய நூல்களான வேதங்கள் , பகவத் கீதை போன்ற எதிலாவது ஒரு மனிதன் பிறப்பால் உயர்ந்தவன் என்றோ , தாழ்ந்தவன் என்றோ சொல்லப்பட்டதாக காட்ட இயலுமா?//
குணம், தொழில் மற்றும் செயலை செய்யும் விதம் இதனால் தான் வேறுபாடு உண்டாகிறது என்று பகவத் கீதையிலே தெளிவாக இருக்கிறது.
Bagavath Geetha (Ch: 4, VERSE- 13)
//சதுர் வர்ணாம் மயா ஸ்ருஷ்டம் குணா கர்ம விபாகச
தஸ்ய கர்தாரமாபி மாம் வித்யகர்த்தார மவ்யம்!//
ஒருவனின் குணம் மற்றும் செயலை செய்யும் விதம் ஆகியவையே அவனுக்கு உயர்வையும் தாழ்வையும் அளிக்கின்றன.
பணம் வாங்கிக் கொண்டு கேங் ரேப் கேசை அப்படியே மூடும் போலீஸ் கயமையானாகவே இருக்கிறார்.
அதே நேரம் இரவில் போக இடமறியாமல் தன ஆட்டோவில் அமரும் பெண்ணை பாதுகாப்பாக கொண்டு விடும் ஆட்டோ டிரைவர் அந்தப் பெண்ணைப் பொறுத்தவரையில் தெய்வமே.
அதே நேரம் ஒருவன் கெட்டவனாகவே இருக்க வேண்டும் என்பதில்லை, அவனே மனம் திருந்தி தன்னை உயர்த்திக் கொள்ளலாம்.
காஞ்சிபுரம் அசிங்க அர்ச்சகர் தேவநாதன் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டான். அதற்க்கு அவன் தான் பொறுப்பு. நல்ல நண்பர்கள் இருந்தால் ஆரம்பத்திலேயே அவனை திருத்தி இருக்க வாய்ப்பு உள்ளது. இதையே நல்ல நண்பர்களுடன் சேர்ந்து இரு , "சத் சங்கத்தே நித் சங்கத்வம்" என்றார் ஆதி சங்கரர்!
அதற்க்குதான் கல்வி, பண்பாடு உதவ வேண்டும்.
இதையே வள்ளுவர் வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு என்றார்.
மனு என்பவர் இந்தியாவின் அரசராக இருந்தவர். பிருகு என்பவர் அவருக்கு பல காலம் முந்தியவர வாழ்ந்த ரிஷி என சொல்லப் படுகிறது !
நீங்கள் சொல்வது போல மனு பிருகுவின் குருவாக இருந்தாலும் பரவாயில்லை, எங்களுக்கு என்ன? பிருகு பிறப்பு அடிப்படையில் சாதி என்று சொல்லி இருந்தால் நான் பிருகுவை எதிர்க்கிறேன். மனுவும் பிருகுவும் சேர்ந்துதான் இந்து மதத்தை உருவாக்கினார்களா? பிருகு சொன்னால் என்ன? அவர் யார் சொல்ல? அவர் சொன்னால் அது அவருடைய சொந்தக் கருத்து.
இதிலே "கடவுள்"(இருந்தால்) என்ன செய்ய இருக்கிறது ?
அவரவர் நல்ல பழக்க வழக்கங்களைக் கைக் கொள்வது அவரவர் கையிலே உள்ளது.
ஆனால் தொழிலின் அடிப்படையில், இடத்தின் அடிப்படையில் எண்ணற்ற சாதிகளை உருவாக்கிக் கொண்டு விட்டனர், அவற்றை பிறப்பின் அடிப்படையில் இறுக்கி விட்டனர். அது சிறிது சிறிதாக் சரி செய்யப் பட்டு வருகிறது. இன்றைக்கு எல்லா சமூகத்தவரும் கிட்டத் தட்ட ஒன்றாகவே உள்ளனர். காலையிலே உடுப்பி ஹோட்டலில் அருகறகே இட்டிலி சாப்பிட்டு விட்டு அலவலகம் சென்று வேலை செய்து மாலையில் ரஜினி படம் பார்த்து கை தட்டுகிறான், தமன்னவைப் பார்த்து ஜொள்ளு விடுகிறான். எந்த வித்யாசமும் இல்லை, வர்ணமும் இல்லை!
கிராமங்களிலும் நகரம் போல ஆக வேண்டும்.ஆக்குவோம்!
நீங்கள் பகவத் கீதையில், குணத்தின் அடிப்படையில் வேறுபாடு (வர்ணங்கள்) இருக்கின்றன என்று சொல்லப் பட்டு இருக்கிறதா இல்லையா என்று பாருங்கள்(Ch: 4, VERSE- 13).அப்படி குணத்தின் அடிப்படையில் என்று சொல்லப் படவில்லை என்றால் சொல்லுங்கள் நானும் உங்களுடன் சேர்ந்து எதிர்க்கிறேன்!
//யாஜ்னவால்க்ய ஸ்ம்ருதி படித்திருக்கிறீர்களா? அதில் சூத்ரனக்கு வேதம் ஓதும் உரிமை மறுக்க பட்டுள்ளதை அறிவீர்களா? இந்த ஸ்ம்ருதியின் படி சூத்ரனுக்கு உபனயனமோ, வேத அறிவிப்போ கூடாது. இது உயர்வு தாழ்வு போதிபதல்லாமல் வேறு என்ன? //
இன்னார் தான் வேதம் படிக்க வேண்டும் என்று சொல்பவர்களிடம் சுவாமி விவேகானந்தர், "வேதத்தின் எந்த ஒரு பகுதியிலாவது சூத்திரர்கள் என சொல்லப் படுபவர்கள் வேதம் படிக்கக் கூடாது என்று சொல்லி இருப்பதாக உங்களால் காட்ட முடியுமா என்று சாவல் விடுகிறேன்" என்றார்.
என்னுடைய பதிலும் அதுவே.
//யாஜ்னவால்க்ய ஸ்ம்ருதி படித்திருக்கிறீர்களா? அதில் சூத்ரனக்கு வேதம் ஓதும் உரிமை மறுக்க பட்டுள்ளதை அறிவீர்களா? இந்த ஸ்ம்ருதியின் படி சூத்ரனுக்கு உபனயனமோ, வேத அறிவிப்போ கூடாது.//
யாங்க்வல்ங்க்கர் ஸ்மிருதி யில் அப்படி இருந்தது என்றால், திருச்சிக்காரன் ஸ்மிருதியில் என்ன எழுதியிருக்கிறது என்று படியுங்கள்.
http://thiruchchikkaaran.wordpress.com/2010/12/11/sacred-thread-can-be-worn-by-al/
யாருக்காவது உபநயனம் வேண்டும் என்றால் சொல்லுங்கள்.
Post a Comment