Sunday, March 18, 2012

557. WHY I AM NOT A CHRISTIAN ... 2



முந்திய பதிவு ...


*
CHAPTER 3

WHAT I BELIEVE



1925-ல் ரஸ்ஸல் இதே தலைப்பில் எழுதிய ஒரு சிறு நூலின் தொகுப்பே இந்தக் கட்டுரை.

கிறித்துவத்தின் அடிப்படை உண்மைகளான கடவுள், (நித்தியம்) அழிவின்மை என்ற இந்த இரண்டுமே அறிவியலோடு எந்த தொடர்பும் இல்லாதவை.

கடவுள் இல்லையென்பதை என்னால் நிரூபிக்க முடியும் என்றெல்லாம் நான் நடிக்க விரும்பவில்லை. அதே போல் சைத்தானும் இல்லையென்பதை என்னால் நிரூபிக்க முடியாது. கிறித்துவர்கள் சொல்லும் கடவுள் இருக்கலாம்; அதே போல் பழங்காலத்திய கிரேக்க, எகிப்திய, பபிலோனிய கடவுள்களும் இருக்கலாம்.  இந்தக் கடவுள் நம்பிக்கைகளில் எது மேலோங்கியது என்றெல்லாம் கூற முடியாது. (44)

நமக்கு சாவின் மீதான பயம் இல்லாவிட்டால் அழிவின்மை பற்றிய நம்பிக்கை தோன்றியிருக்காது.
அச்சமே மதங்களின் அடிப்படைக் கருத்தாக உள்ளது. மக்களின் வாழ்விலும் இந்த அச்சம் நிரந்தேயுள்ளது.

கடவுளால் இந்த உலகம் ஆளப்படுகிறது; ஆனால் அந்தக் கடவுளை உங்கள் ஜெபங்களால் நீங்கள் மாற்ற முடியும் என்றால் கடவுளின் 'எல்லையில்லா ஆளுமையில்' நீங்களும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். அந்தக் காலத்தில் பல அதிசயங்கள் எல்லாம் உங்கள் ஜெபங்களின் எதிரொலியாக நடந்து வந்துள்ளன. கத்தோலிக்க கிறித்துவத்தில் இந்த அதிசயங்கள் இன்னும் நடந்து வருகின்றன; ஆனால் பிரிவினைக்காரர்களிடம் இந்த 'சக்தி' இப்போது இல்லாமல் போய் விட்டது. (46)

இயற்கையின் விந்தைகளை இந்த உலகத்துக்கு மட்டுமேயானதாக ஆக்கிவிடக் கூடாது. ஏனெனில் இந்த உலகம் பால்வீதியின் கோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுப்பில் உள்ள ஒரே ஒரு விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு கோள். இயற்கையின் விந்தைகள் அனைத்தையும் இந்தச் சிறு கோளுக்குள் இருக்கும் சின்னச் சின்ன ஒட்டுண்ணிகளான நம்மோடு இணைத்துப் பார்ப்பது வேடிக்கையானது. (47)

அழகான நல்ல வாழ்க்கை என்பது அன்பால் உருவாக்கப்பட்டு, அறிவால் அணைகாக்கப்படுவது தான். (48)

அறிவு பூர்வமான ஒரு மனிதன் வேதநூல்களாலோ, மதங்களின் படிப்பினைகளாலோ எப்போதும் அசைந்து விடமாட்டான் எனபது நிச்சயமான உண்மை. (54)

ஒரு குழந்தை உருவாவதிலிருந்து மடிவது வரை வாழ்க்கையின் ஒவ்வொரு புள்லியிலும் கண்மூடித்தனமான நம்பிக்கைகள் பல நுழைந்து, வாழ்க்கையையே பல நேரங்களில் கேள்விக்குரியதாக்கி வேதனைகளைத் தருகின்றன. (55)
------------------------


இந்நூல் ரஸ்ஸலின் பல சொற்பொழிவுகளின் தொகுப்பு. இதில் வரும் அடுத்த பகுதிகள் மதங்களோடு நேரடித் தொடர்பு இல்லாதவை. ஆகவே இப்பகுதிகளைத் தாண்டி, நூலின் இறுதிப் பகுதிக்குச் செல்கிறேன்.
--------------------------

CHAPTER  14

CAN RELIGION CURE OUR TROUBLES?

நமக்கு நேரும் தீமைகளை மதம் வேரறுக்குமா?

மதக் கொள்கைகள் இல்லாத ஒரு சமூகத்தில் நேர்மை மலருமா என்றொரு கேள்வியுண்டு. மத நம்பிக்கையாளர்கள் நம்புவது போல் எனக்கு அந்த நம்பிக்கை கிடையாது. மத நம்பிக்கையாளர்களை விடவும் நம்பிக்கையற்றவர்கள் பல விதங்களில் நேர்மையோடு இருப்பார்கள் என்பது என் எண்ணம். (இதற்கு என் வாழ்க்கையில் ஒரு நேரடி அனுபவம் உண்டு. "நானும் சத் சபையும் .." என்ற தலைப்பில் பிறகு எழுதுகிறேன்!!) (154)

மதங்கள் உண்மையானவை; ஆகவே அதனை நம்ப வேண்டும் என்று சொல்லும் ஒருவரை நான் மதிக்கிறேன். ஆனால், மதங்களை நம்பியேயாக வேண்டும்; ஏனெனில் அது நல்லது செய்யும். மதம் உண்மையா என்பது போன்ற கேள்விகளை கேட்பதே தேவையில்லை என்பவர்களை நான் மறுத்து ஒதுக்குகிறேன்.

நிறைய கிறித்துவர்கள் கம்யூனிசத்திற்கும் கிறித்துவத்திற்கும் மிகுந்த வேறுபாடுகள் உண்டு. கம்யூனிசத்தில் உள்ள தீமைகள் ஏதும் கிறித்துவத்தில் கிடையாது என்றெல்லாம் சொல்வதுண்டு. இது ஒரு மிகப் பெரிய தவறு. O.G.P.U.(Russianl political force) -க்கும் கிறித்தவத்தின் மதத் தீவிரவாததிற்கும்(inquisition) நிறைய வேறுபாடு ஏதுமில்லை.
INQUISITION

கம்யூனிஸ்டுகள் வரலாற்றைத் திரிபு செய்வதுண்டு. அது போலவே மறுமலர்ச்சிக் காலம் வரை கிறித்துவமும் அதையே செய்ததுண்டு. இப்போது கிறித்துவம் கம்யூனிசத்தை விடவும் மோசமில்லாமல் இருப்பதற்கான காரணமே கிறித்துவத்திற்குள்ளிருந்த எழுந்த போராட்டமும், council of Trent (13 December, 1545, -- 4 December, 1563) குழுவின் முனைப்புமே காரணம். (157)

CHAPTER  15

RELIGION AND MORALS

மதங்களும் நெறிகளும்

கடவுள் மேல் நம்பிக்கையில்லாதவர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியோ, நற்பண்புகளோ இருக்காது என்றும் பலர் சொல்வதுண்டு. நான் பார்த்த வரையில் நம்பிக்கையாளர்கள் நம்பிக்கையற்றவர்களை விடவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியாது.

பண்புகள் என்று பார்த்தால் அவை இரக்கமும் அறிவுசார்ந்தவைகளுமாகும். அறிவுசார்ந்தவைகள் எப்போதும் மதக் கோட்பாடுகளால் தடை செய்யப்படுகிறது. இரக்கம் மதச்சார்பான பாவம், தண்டனை போன்றவைகளால் தடை செய்யப்படுகிறது. (162)



*



4 comments:

Vetirmagal said...

' மத நம்பிக்கையாளர்களை விடவும் நம்பிக்கையற்றவர்கள் பல விதங்களில் நேர்மையோடு இருப்பார்கள் என்பது என் 'எண்ணம்.'

எனக்கும் அந்த மாதிரிதான் பல சமயங்களில் தோன்றுகிறது. கடவுளிடம் முறையிட்டு , தன் கவலைகளை அவர் மீது சுமத்தும் வழி இல்லாததால், அவர்களுக்கு நெறி முறைகள், எல்லைகள், அவர்களே வகுத்து கொண்டு வாழ்கிறார்கள், என்று நினைக்கிறேன்.

வணக்கம்.

சார்வாகன் said...

வண்க்கம் அய்ய‌
இப்புத்த்கம் ஆங்கிலத்தில் படித்து இருந்தாலும் உங்களின் தமிழாக்கம் மிக இயல்பாக இன்னும் ஆழமாக புரிதல் ஏற்படுத்துகிறது.
இபோது மதவாத சகோக்களின் பிரச்சார உத்திகள் சில ருல்லனின் கருத்தை ஒட்டியே!!!!!!!!
1.// கடவுள் இல்லையென்பதை என்னால் நிரூபிக்க முடியும் என்றெல்லாம் நான் நடிக்க விரும்பவில்லை.//

கடவுள் இல்லை என்று நிரூபிக்க முடியாததால் கடவுள் உண்டு.
2// இந்தக் கடவுள் நம்பிக்கைகளில் எது மேலோங்கியது என்றெல்லாம் கூற முடியாது//
இதுக்குத்தான் விவாதம் போட்டு நிருபிக்கிறோம்,மத புத்தக்த்தில் அறிவியல்,பரிணம் எதிர்ப்பு என்றெல்லம் போட்டுத் தாளித்து விடமாட்டார்களா!!!!!
விவாதம் என்றால் பிற மதங்களை கேவலமாக் விமர்சித்து ,தன் மதம் விமர்சித்தால் ஹி ஹி அன்போடு கவனிப்பார்கள்..
3.//அச்சமே மதங்களின் அடிப்படைக் கருத்தாக உள்ளது. மக்களின் வாழ்விலும் இந்த அச்சம் நிரந்தேயுள்ளது.//
ஆம் இறையச்சம் இல்லாததால் அனைத்து தவறுகளும் நடக்கின்றன.இறையச்சம் கொண்டவர்கள் செய்தது,செய்வது,செய்யப் போவது அனைத்துமே சரி என்பதன் அடிப்படையின் மீதே அனைத்தும் நிர்ணயிக்கப் படுகிறது.
4//அழகான நல்ல வாழ்க்கை என்பது அன்பால் உருவாக்கப்பட்டு, அறிவால் அணைகாக்கப்படுவது தான்//
அப்படி மட்டுமல்ல.இறைவன் நாடாவிட்டால் இது உங்களுக்கு கிடைக்காது.இறைவன் நாடியவர் மட்டுமே அழியாப் பெருவாழ்வு பெற இயலும்.
5.//அறிவு பூர்வமான ஒரு மனிதன் வேதநூல்களாலோ, மதங்களின் படிப்பினைகளாலோ எப்போதும் அசைந்து விடமாட்டான் எனபது நிச்சயமான உண்மை.//
இவர்களுக்கு நரகம் தயாராக உள்ளது!!!!!!!!
6//ஒரு குழந்தை உருவாவதிலிருந்து மடிவது வரை வாழ்க்கையின் ஒவ்வொரு புள்லியிலும் கண்மூடித்தனமான நம்பிக்கைகள் பல நுழைந்து, வாழ்க்கையையே பல நேரங்களில் கேள்விக்குரியதாக்கி வேதனைகளைத் தருகின்றன//
இறை நம்பிக்கையாளருக்கு குழப்பமே கிடையாது.வேதனைகளும் குறைந்த கால் இவ்வுலக் வாழ்வின் சோதனைகளே.
கேள்விகள் அனைத்திற்கும் பதிலாக பல் வேதங்கள் அனுப்பினாலும் நிராகரிப்போர்,குழப்பப் விளைவிப்போருக்கு இன்னும் அதிக வேதனை உண்டு!!!!!!
அவருக்கு உண்மையா மாற்றப்படாத வேதமும்,அவருக்கு விள்க்க மேதைகளும் கிடைகாததினால்தான் இறை மறுப்பாளர் ஆனார் என்பதற்கும் ஆதாரம் உண்டு.அது அவரின் கருத்துகளிலேயே தெரிகிறது!.இன்னும் தருமி அய்யாவின் மொழி பெயர்ப்பிலும் தெரிகிறது.இறைவன் நாடுவது போல் தெரிகிறது!!!!!!.

இன்னும் நிறைய கருத்துகள் சொல்லி ரஸ்ஸலையே இறை நம்பிக்கையாளர் போல் கருத்து திரிபு செய்ய முடியும் என்பதை மிக தாழ்மையாக் தெரிவிக்கிறோம்.
நன்றி

shakiribnu said...

அடிமை முறை தவறு என்று இஸ்லாம் அல்லது கிறிஸ்துவம் அல்லது யூதத்தின் எந்த ஒரு புத்தகத்திலும் பார்க்கவியலாது.

அடிமை முறையை ஒழித்தது மத சிந்தனையை தாண்டிய மனிதாபிமானம்தான். அடிமை முறையை ஒழிக்க அமெரிக்க அரசியல்வாதிகள் முனைந்த போது முதலில் எதிர்த்ததும் பாதிரியார்கள்தான். அடிமை முறையை ஒழிக்க இஸ்லாமிய நாடுகளை ஐக்கிய நாடுகள் கேட்டுகொண்ட பிறகும் 1965இல்தான் அடிமைமுறை சவுதி அரேபியாவில் நீக்கப்பட்டது. இன்னமும் மௌரிட்டானியாவில் இருக்கிறது.

இதுவும் மதத்தை தாண்டினால்தான் மனித நேயம் வளரும் என்பதற்கு அத்தாட்சி

naren said...

இந்த பதிவு ஒரு கேள்விக்கு நச் என்று பதில் சொல்லுகிறது.

மதம் நம்பிக்கையல்ல உண்மை என்பதை விமர்சனம் செய்யும்போது, கேட்க படும் எதிர் கேள்வி “ இது சரியில்லையென்றால் மாற்று கொள்கை என்ன? உங்கள் கொள்கை என்ன?”. இந்த மதம் சரி என்பதற்கு மாற்று கொள்கை மதம் பற்றி விமர்சனங்கள் வைக்கப்பட்டு கடைசியில் நிற்கும் இடம் “மத கோட்பாடுகள் இல்லையென்றால் மனிதன் மனிதனாகவே வாழமாட்டான்ம், மிருகமாக வாழ்வான்”. எளிமையாக அறம்(morals) இல்லாமல் போய் விடும் என்கிறார்கள்.

இதற்கு ரஸ்ஸல் பதில் சொல்கிறார், மதம் இல்லாவிட்டாலும் மனிதன் மனிதனாக(moralistic) வாழ முடியும் என்கிறார்.
////////////////
பண்புகள் என்று பார்த்தால் அவை இரக்கமும் அறிவுசார்ந்தவைகளுமாகும். அறிவுசார்ந்தவைகள் எப்போதும் மதக் கோட்பாடுகளால் தடை செய்யப்படுகிறது. இரக்கம் மதச்சார்பான பாவம், தண்டனை போன்றவைகளால் தடை செய்யப்படுகிறது
//////////////////////

Post a Comment