Wednesday, August 07, 2013

674. தருமி பக்கம் – நம்ம ஊர் அரசியல் ... (3)





*

அதீதம் இணைய இதழில் வந்த கட்டுரையின் மறுபதிப்பு ....

*


அடுத்த ஆண்டு வரப்போகும் தேர்தலுக்கு இப்போதே இந்து நாளிதழ் வரிந்து கட்டிக் கொண்டு ’ஜோஸ்யம்’ சொல்லி, ’செய்திகளை முந்தி தரும் பத்திரிகை’யாகி விட்டது. இதில் எனக்குப் புரியாத ஒன்று உண்டு. பல கட்சிகள் பெயர் இருக்கிறது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயர்கள் எங்கே என்று தேட வேண்டியதுள்ளது. அட .. நம்ம காப்டன் கட்சி பெயர் வந்தாலும் வருது; ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பெயர் அதிகமாகக் காணோம். இந்தக் கட்சிகளும் ’அந்தக் காலத்தில்’ இருந்து வந்துள்ள அரசியல் கட்சிகள் தான். ஆனாலும் இரண்டு மாநிலங்கள் தவிர - கேரளா, வங்காளம் - மற்ற இடங்களின் ஏன் அவர்களுக்கு எந்த முகவரியும் இல்லாது போயிற்று?

நமது மன்மோகன் சிங் போன்ற ஒரு மோசமான பிரதமரை இது வரை நான் பார்க்கவில்லை. Mr. Spout  என்று பெயர் வாங்கிய நரசிம்ம ராவ், அல்லது தூங்கிப் புகழ் பெற்ற தேவ கெளடா, தண்ணீரிலிருந்து மின்சாரம் எடுப்பதால் தண்ணீரின் ‘சத்து’ குறைவதால் விளைச்சல் குறைவு என்று ஒரு துணை பிரதமர் கூறினாரே அவர் - இவர்களையெல்லாம் விட மன்மோகன் மோசம். எப்பவும் பதில் தெரியாமல் poor student கடைசி பெஞ்சில எழுந்திரிச்சி நிக்கிறது மாதிரியே எப்பவும் நிக்கிறார். என்ன கேட்டாலும் ‘அப்பூடியா?’ என்கிறார். அதைவிட மோசம் .. இவர் வாத்தியார் .. ஆனால் வகுப்புல மானிட்டர் சொன்னா தலைய ஆட்டுற வாத்தியார் மாதிரி இவர். என்ன நடந்தாலும் ‘மம்மிட்ட கேட்டுக்கங்க’ அப்டின்னு சொல்லி விடுவார். நல்ல மார்க் எடுத்து மக்காட்டம் முதல் பெஞ்சு மாணவன் மாதிரி இருக்கிறார். இலங்கை விஷயத்தில் நல்லாவே இன்னும் ‘போட்டுப் பாத்துக்கிட்டு’ இருக்கிறாங்க என்பது என் நினைப்பு.

இந்த காங்கிரஸ் கட்சி கடந்த ரெண்டு மூணு வருஷத்தில எடுத்த பெயர் மாதிரி எந்த அரசும் எடுத்ததில்லை.பல ‘gates’ திறந்தாச்சு. ஆனா அது எல்லாம் கொஞ்சம் கூட அவங்களை மாற்றவேயில்லை. எனக்கென்னன்னு போய்க்கிட்டு இருக்காங்க. அன்னா ஹசாரே ஏதாவது மாற்ற்ம் கொண்டு வருவாரோன்னு ஒரு சின்ன எதிர்பார்ப்பு வந்துட்டு உடனே பறந்தும் போய் விட்டது. அதுவும் ஊழல் அப்டின்னாலும் என்னா ஊழல். அவங்க சொல்ற எண்ணிக்கைகளையெல்லாம் பார்த்தால், கேட்டால் பயமா இருக்கு. இம்புட்டு காசை ஆட்டை போட்டுட்டு எப்படி நிம்மதியா இருக்காங்களோன்னு தோணுது. எம காதகப் பசங்க .... எல்லாம் கூட்டு களவாணிகள் மாதிரி இருக்காங்க. கல்மாடின்னு ஒரு சுளை விழுங்கி. எல்லாத்தையும் விழுங்கி விட்டு இன்னும் பதவின்னு அலையிறாரு... இப்படி எத்தனை எத்தனையோ .. பட்டியல் அதிக நீளம் ! 

அடுத்த கட்சி B.J.P. - தமிழ்ப் பெயர் மறந்து போச்சு! தேர்தல் வந்தா அயோத்தியா கொட்டு கொட்ட ஆரம்பிச்சிருவாங்க. பதவிக்கு வந்தா - நல்ல வேளை கொடுத்த வாக்குறுதிகளை - அதையெல்லாம் மறந்திருவாங்க. ஆனால் இந்த தடவை புது ஹீரோ களத்தில இறங்கியிருக்கிறார். கோட்டைக்குள் குத்து வெட்டு வேறு நடக்குது. இவங்களும் ஊழலில் லேசுப்பட்ட ஆளுங்க இல்லைன்னும் நிரூபிச்சாச்சு. வித்தியாசமான அரசியல் கட்சின்னு சொல்லி ஆரம்பிச்சாங்க. இப்போ எல்லா ‘கழுதையும் ஒண்ணு தான்’ அப்டின்னு காமிச்சிட்டாங்க.

நம்ம ஊர்ல காங்கிரசிற்கும், B.J.P.க்கும் எந்த மவுசும் இல்லைன்னு இருக்கிறது ரொம்ப சந்தோஷம். பா.ம.க., தே.தி.மு.க. - ரெண்டு கட்சிக்கும் பால் ஊத்தியாச்சின்னு நான் நினைக்கிறேன். பாவம் வைகோ. ‘பேரு பெத்த பேரு; தாவ நீலு லேது’ அப்டின்னு இருக்கார்.

மீதி இருக்கிறது ரெண்டு ’செட்’ கட்சிகள் - இரண்டு திராவிடக் கட்சிகள்; இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள்.

வேற வழியே இல்லைன்னு தி. கட்சிகள் பக்கம் போய் தான் ஆகணுங்களான்னு கேக்குற அளவுக்கு இரண்டு கட்சித் திருவிளையாடல்கள் இருக்கு. பேரன் பேத்திக்குன்னு சொத்து சேர்க்கிறது ஒரு கட்சிக்கின்னு சொன்னா, அடுத்த கட்சிக்கும் அதில ஒன்ணும் குறைச்சல் இல்லை. ஒருத்தர் பேரன் பேத்திக்கு சேர்க்கிறார்; அடுத்தவர் யாருக்கு சேர்க்கிறாரோ .. உடன் பிறவாததற்கோ? அதோடு சின்ன பிள்ளை விளையாட்டு மாதிரி ’நீ-கட்டுன-மண்-வீட்ட-நான்-இடிப்பேன்னு’ ஒரு விளையாட்டைப் புதுசா ஆரம்பிச்சிருக்காங்க. அது கொஞ்சம் கூட நல்லா இல்லாத ஒரு விளையாட்டா இருக்கு. அதையும் நம்ம மக்கள் கண்டு கொள்வதேயில்லை.

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள். பெயரைத்தவிர இரு கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம்னு எனக்கு அந்த நாளிலிருந்து புரியவில்லை. யார் யார் எந்தக் கட்சி அப்டின்றது கூட சரிவர தெரியாது. தேவையில்லாம தனித் தனி வீட்டுக் குடித்தனம்.

ஆனால், இருக்கிற கட்சிகளில் நல்லது நாலு சொல்றது மாதிரி உள்ள கட்சி இந்த இரண்டும் தான். ஊழல் தகராறு வெள்ளமாகப் புரண்டு ஓடவில்லை என்பது சந்தோஷம். வெட்டித்தன ஆடம்பரம் இல்லாத கட்சி ஆட்கள். டிவியில் பார்த்த ஒரு காட்சி: ஒரு தடவை தமிழ்நாட்டில் இருந்து எல்லா கட்சி ஆட்களும் எதற்கோ டில்லி சென்றார்கள். விமான நிலையத்தில் மற்றக் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் குவிந்து வழக்கமான ஆடம்பரம் காண்பித்துக் கொண்டிருக்க, கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏறத்தாழ கையில் மஞ்சள் பையோடு போவது மாதிரி மிக எளிமையாகச் சென்றார்கள். படை பட்டாளங்கள் ஏதுமில்லை. இப்படி எல்லா ‘தலை’களும் இருக்கக்கூடாதான்னு அன்று எனக்குத் தோன்றியது.

தலித் பிரச்சனைகளுக்கு முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது தலையிடுவது, சமீபத்தில் நடந்த சாதிப் போராட்டங்களில் தங்கள்  இருப்பைக் காண்பித்தது, அரசியலில் கொஞ்சம் நாணயத்தோடு இருப்பது என்று பல நல்ல விஷயங்கள் இவர்களிடம் இருக்கின்றன. ஆனாலும் அவ்வப்போது ’அங்கங்கே’ என்று கூடாரம் போடுவது எரிச்சலைத் தருகிறது. திராவிடக் கட்சிகளோடு சேர்ந்து பத்து இடத்தில் வெற்றி பெறுவதை விட, தங்கள் தன்மானத்தைக் காத்துக் கொண்டு தனியாக நின்று நாலைந்து இடங்களில் வென்றாலும் போதும் என்று நினைத்தால் நல்லது.

எனக்கு ஒரு கேள்வி.

இருப்பதில் கொஞ்சம் மரியாதை கொடுக்க வேண்டிய கட்சியாக இருக்கும் இந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஏன் இந்தியாவில் அதிக மரியாதை நாம் கொடுப்பதில்லை?

நம் மாநிலத்தில் தி. கட்சிகளின் பின்னால் தான் நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமா? அதிலும் தி. கட்சிகளின் பின்னால் ஓடுவது மட்டுமில்லாமல் அதன் மேல் நம் எல்லோருக்கும் இருக்கும் ‘பக்தி’யைப் பற்றி நினைத்தால் அது பெரிய வெட்கக்கேடு என்று தான் தோன்றுகிறது. எனக்கு ‘மஞ்சள்’ பிடிக்காது; அதனால் ‘பச்சை’ பிடிக்கும். அல்லது vice versa !!

இது தான் தமிழ்நாட்டு அரசியல் தியரி!!

ம்..ம்.. ஒண்ணும் தேறப்போறதில்லை ...




*

8 comments:

டிபிஆர்.ஜோசப் said...

ஒன்னும் ஒப்பேறப் போவதில்லைன்னு சொல்லிட்டு போனா எப்படிங்க? அப்ப யாருக்குத்தான் உங்க ஓட்டு? இல்ல, இந்த தடவையும் ஓட்டுச் சாவடி பக்கமே போகப்போறதில்லையா?

ஆனா நீங்க சொல்ற எல்லா விஷயமும் என்னோட பார்வையோட ஒத்துத்தான் போவுது கம்யூனிஸ்டுங்கள பத்தி சொன்னத தவிர.

அவங்க இதுவரைக்கும் ஆட்சி பண்ண மாநிலங்கள்ல எதையாச்சும் உருப்படியா செஞ்சாங்களா என்ன?

தருமி said...

//அவங்க இதுவரைக்கும் ஆட்சி பண்ண மாநிலங்கள்ல எதையாச்சும் உருப்படியா செஞ்சாங்களா என்ன?

ஜோதி பாசு பற்றி எனக்கு நல்ல கருத்துண்டு.

எல்லாவற்றையும் விட ஊழல் அக்கிரமங்கள் அதிகமாகக் கேள்விப்படலையே!

அ. வேல்முருகன் said...

வாழ்க்கையில் இந்நாள் வரை அவர்களுக்காக எனது கையை கரையாக்கிக் கொண்டதில்லை. அந்த உரிமையை தெரிந்தே இழந்தேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேனேயன்றி வருத்தப்படவில்லை

தருமி said...

வேல்முருகன்,
உங்க ஓட்டை யாரு யாருக்குப் போட்டாங்களோ .. தெரியலையே. ரொம்ப தப்பான ஆளுக்குப் போயிருந்தா ... அதைவிட நம்மளே போட்டுரலாமே!

அது சரி ..//இன்னும் இருவரை இதே தலைப்பில் எழுத அழைக்க வேண்டுமாமே .. ஒருவர்
விஜய் முத்தையா; இன்னொருவர்: அ. வேல்முருகன்: // -- இதைப் பார்த்தீங்களா? - http://dharumi.blogspot.in/2013/07/672.html

கரந்தை ஜெயக்குமார் said...

ஜோதி பாசு பற்றி எனக்கம் நல்ல கருத்துண்டு

அ. வேல்முருகன் said...

யாரு தப்பான ஆளு என்று எந்த அளவுகோலை கொண்டு கணிப்பது.

எரிகின்ற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி.

அப்புறம் வரிசையில் நிற்கும் போதே வேறொருவன் ஓட்டு போட்ட கதையெல்லாம் உண்டு நமது சனநாயக நாட்டில்

Anonymous said...

தமிழக அரசியலை பொறுத்தவரை அதீத ஆட்டுமந்தை தனம் தான் எப்போவுமே அதிகாரத்தை நிர்ணயம் செய்யும் ! ஒன்னு சினிமா கவர்ச்சியை நம்பனும் இல்லை மொழி, இனம், ஜாதி. இதை தவிர வேறு எதுவுமே இங்கு இல்லை. என்ன தான் பொதுநலம் பேசினாலும் இங்கு தனக்குன்னு வந்துட்ட சுயநலமாக சிந்திப்பதுவே நமது உண்மையான குணம். தமிழ்நாட்டின் இன்னொரு நல்ல குணம் மதத்தை வீட்டிலும் வழிபட்டிடதிலும் தவிர நம்மவர்கள் பெரிதாக வெளியில் சிந்திப்பதில்லை. இன்றைய உலகமயமாக்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவ்வளவு கம்பீரமாக உலாவ முடியாமல் தடுமாறுவதை நீங்கள் ஜால்ரா (தா) பாண்டியனை கொண்டே முடிவு செய்யலாம்.

வேகநரி said...

நீங்க சொன்ன நம்ம ஊர் அரசியலை பற்றி நிறைய யோசிச்சுக்கிட்டிருக்கேன் ஐயா. உங்க பின்னோட்டகாரர்களின் கருத்துக்கள் நல்ல பயனுள்ளவை.
இருப்பதில் எளிமையான கட்சியாக ஓரளவிற்க்கு மக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சியாக உள்ள (தமிழக பாண்டியனை தவிர்ந்த) இந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஏன் இந்தியாவில் அதிக மரியாதை நாம் கொடுப்பதில்லை? இவர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்றினா எப்படி நடந்துவாங்க என்ற பயம் தான் என்று நினைக்கிறேன்.அதே நேரம் இந்தளவுக்கெல்லாம் நம்ம மக்கள்சிந்திப்பாங்களா என்றும் குழம்புகிறேன்.
ஒரு செய்தி பார்த்தேன் வெனிசுலா நாட்டு அதிபர் தனது முன்னைய தலைவரின் இறந்த கல்லறையில் சென்று படுப்பாராம். அவரிடமிருந்து நல்ல சிந்தனைகள் தனக்கு கிடைக்கும் என்று வெனிசுலா நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடுரோ ஒரு கம்யூனிஸ்ட்காரர் தானே? அல்லது அது மாதிரியானவர் தனே?
//shanmuga said...
தமிழ்நாட்டின் இன்னொரு நல்ல குணம் மதத்தை வீட்டிலும் வழிபட்டிடதிலும் தவிர நம்மவர்கள் பெரிதாக வெளியில் சிந்திப்பதில்லை.//
இந்த நல்ல குணத்தை தமிழக அரசு ஆதரிக்காம தேர்தல் வெற்றிக்காக மதத்தை பொது விடயமாக்குவற்கு மதவாதிகளுக்உதவி செய்வதே
பிரச்சனைகள் மேலும் உருவாக்கி மத அடிப்படைவாதிகள் பலம் பெறுவதற்கு உதவுகிறது.

Post a Comment