Monday, September 30, 2013

நான் ஏன் இந்து அல்ல ...3





*
*
தொடர் பதிவுகள்:   1 ......     2 .....     3 .....  4..........  5..............  6 ...........  7..................

*


*







அத்தியாயம்  2

திருமணம், சந்தை மற்றும் சமூக உறவுகள் 

 குருமா குடும்பங்களில் திருமணம் என்பது சாதியிலிருக்கிற எல்லோர் முன்னிலையுலும் மேற்கொள்கிற ஒரு ஒப்பந்தமாகிறது. இதில் ஆணுக்குத் தருகிற விலையோ பெண்ணுக்குத் தருகிற விலையோ (வரதட்சணை) முக்கிய இடத்தை வகிப்பதில்லை.(56)

திருமணம், சாவு போன்ற சந்தர்ப்பங்களில் தான் புரோகிதர் த்லித் பகுஜன்களோடு தொடர்பு கொள்கிறார். மற்ற நேரங்களில் எந்தக் காரியத்திற்கும் வருவதில்லை.(57)

புரோகிதருக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பு என்பது எள்ளளவும் ஆன்மீகம் சார்ந்தது அல்ல.(58)

புரோகிதருக்கும் மக்களுக்குமிடையே நிலவுகிற இந்த மனிதாபிமானமற்ற உறவு வெறும் பொருளாதாரச் சுரண்டலோடு நின்று விடுவதில்லை. இன்னும் ஆழமான சமுதாயப் பரிமாணங்களையும் அது கொண்டிருக்கிறது. தலித் பகுஜன மக்கள் ஆன்மா அற்றவர்களாகவும், தன்னுணர்வு அற்றவர்களாகவும், தான் நம்புகிற கடவுளுக்கு நெருக்கமற்றவர்களாகவும் வைத்திருப்பது புரோகிதர்களுடைய நலனுக்கு உகந்ததாக இருக்கிறது.(59)

தலித் பகுஜன் குடும்பங்களில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை காலையிலேயே அவர்களின் எஜமானர்கள் தீர்மானிக்கிறார்கள். ... அவர்களது வேலை பிரார்த்தனையுடனோ அல்லது நீராடி முடித்தவுடனோ தொடங்குவதில்லை.(61)

பார்ப்பன, பனியா, சத்திரிய இந்து கடவுளிடத்தில் உணவுக்காகவும், அறிவுக்காகவும் நலத்திற்காகவும் வேண்டுகிறான். கடவுள் என்பவர் அவர்கள் கேட்கும் அனைத்தையும் கொடுக்க வல்ல பொலிகாளை போன்றவர்.  புரோகிதர் அனைத்து வேலைகளையும் கடவுளிடமே விட்டு விடுகிறார்.(62)

ஆண்கள் இல்லாத நேரத்தில் ஒரு குருமாப் பெண் ஆடு மேய்க்கிற வேலையையும் செய்கிறாள். ஆனால் ஒரு பார்ப்பனப் பெண் எப்படியிருந்தாலும் புரோகிதர் வேலையைச் செய்ய முடியாது.  ஒரு தலித் பகுஜன் பெண் தனது சாதியிலும் அதன் இயங்கு தளத்திலும் தனது அரசியல் பொருளியல் மற்றும் சமூக இருப்பை உறுதி செய்ய முடியும்.(64)

பார்ப்பன, பனியாக்களின் தத்துவம் தெய்வீகமானது. தலித் பகுஜன் தத்துவத்திற்கு எதிரானது. தலித் பகுஜன் தத்துவம் இது தான்: ‘கை வேலை செய்யாவிடில் வாய் உண்ண முடியாது’ என்பதே அது.(64)

உழைக்கும் சாதியினராகிய இந்த மக்களுக்குப் பகவத் கீதை என்ற இந்துத்துவ நூல் ஒன்று தமக்கு எதிரான கோட்பாட்டுடன் இருக்கிறது என்பதே தெரியாது. ... மக்கள் உழைக்க வேண்டுமே தவிர அதன் பயனைப் பெறக்கூடாது என்ற ஒரு கோட்பாட்டை அது நிலை நாட்டுகிறது.  ... உடல் உழைப்பு கேவலமானது; அது கூடாது என்று கூறுகிற புரோகிதக் கூட்டம் ஒரு பக்கம் தலித்துகளின் உழைப்பைச் சுரண்டிக் கொண்டு போகிறது.(65)

ஒரு பனியா என்பவர் உட்கார்ந்த நிலையிலிருக்கும் ஒரு தெய்வீக ஞானி!
... ஒரு பனியா தீவிர இந்துத்துவவாதியாக இருக்கிறான். அவன் விற்கும் பொருள்பொருள்கலீஹ் விலைகள் சாதிக்கேற்றவாறு கூடவோ குறையவோ செய்யும்,.(68)

தலித் பகுஜன் கடவுளர்களின் கதைகளில் ஒன்றில் கூட காமம் ஒரு முக்கியப் பொருளாக இருந்ததில்லை. ... ஆனால் மேல் சாதியினர் சமூகத் தளத்திலும் அன்றாட வாழ்க்கையிலும் காணக்கிடைக்காத பாலியல் கதையாடல்களைத் தெய்வீகத்தளத்தில் தேடத் தொடங்கி விடுகின்றனர்.((&))

சுருக்கமாகச் சொல்வதென்றால், தலித் பகுஜன் ஆண் பெண் உறவு இயற்கைக்கு மாறானதல்ல. எழுத்தறிவில்லாததாலும் ஆன்மீகத் தொடர்பு இல்லாததாலும் ஆண் பெண் உறவு என்பது சூழ்ச்சியற்றதாகவும், சுரண்டலற்றதாகவும் உள்ளது. ... பாலியல் உறவு உடல் தேவையாக மட்டும் இருக்கிறது. காவிய சுகமளிப்பதாக இல்லை.(71)  ... தெய்வீகத் தன்மை வாய்ந்த உறவை விட இயற்கையான உறவு உறுதியானதாக இருக்கிறது. அந்த உணர்வு தனித்துவமானது. புறச்சக்திகளுடைய உருவாக்கத்தால் வருகின்ற பயத்தோடு கூடிய உறவிலிருந்து இது வேறுபட்டது.

உலகிலேயே இந்தியாவிலுள்ள தலித் பகுஜன்கள் மட்டும் தான் மதத்தின் இறுக்கமான வரையறைக்கு அப்பாற்பட்ட சமூக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். உதாரணமாக அவர்களது திருமண ஒப்பந்தத்தை எடுத்துக் கொள்ளலாம். அது அடிப்படையில் மனிதர்களுக்கு இடையிலான ஒப்பந்தம். ... ஒரு மனைவி தன் கணவரைக் கடவுளாகக் கருத வேண்டியதில்லை.  தன் கணவனுக்குக் காலை மாலை பாத பூஜை செய்ய வேண்டியதில்லை. கணவனை சக மனிதனாக நடத்த அவளுக்கு உரிமை உண்டு.(72)

இந்துத்துவா தனது ஆன்மீக எல்லைக்குள் மனித சமூகத்தை ஈர்க்கக்கூடிய ம்னித உறவுகளை வளர்த்து இருந்தால் அது உலக மதமாக புத்த மார்க்கத்துக்கும், இஸ்லாமிய கிறித்துவ மதங்களுக்கும் முன்பாகவே மாறியிருக்கும்.

இந்துத்துவா பார்ப்பன பனியா சத்திரியர்களுக்கான தனிநபர் சொத்தாக மாற்றியது. மற்ற சூத்திர சாதிகள் - கம்மா, ரெட்டிகள், வேலமா (ஆந்திரா); மராத்தா, பட்டேல், ஜாட், ராஜ்புத் பூமிகார் (வட இந்தியா); முதலியோர் மெல்ல மெல்ல புதிய சத்திரியர்களாக மாறி இந்துத்துவத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள்.(73)








*






 

3 comments:

Anonymous said...

மிக அருமையான, உன்னதமான உண்மையை ஆசிரியர் எடுத்து வைக்கின்றார். தலித் சமூகம் எதார்த்த வாழ்வியலையும், உழைப்பையும் உறுதி செய்யதோடு, அது எதனையும் சுரண்டிப் பிழைக்கவில்லை, சுயமாய் உழைத்து வாழ்ந்தன. இந் நூலை முழுமையாக வாசிக்க விழைகின்றேன்.

G.M Balasubramaniam said...


“ எப்பொருள் யார் யார்வாய்க் கேட்ப்ல்னும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.”

தருமி said...


G.M B. ஐயா
என்னைப் போல் மெய்ப்பொருள் கண்டமைக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.

Post a Comment