Sunday, September 22, 2013

682. என்று வரும் மதங்களைத் தாண்டும் அந்தச் சமூகம்?



 *
இன்றைய இந்துவில் வந்த ஒரு கட்டுரையின் தமிழாக்கம். பிடித்த கருத்தாக இருந்தது. சிறிது தமிழ்ப்படுத்தி சில பகுதிகளைக் கொடுத்துள்ளேன்.


*


 http://www.thehindu.com/opinion/open-page/lets-aim-for-a-posttheistic-society/article5154603.ece  


Let’s aim for a post-theistic society 

மேலெழுந்தவாரியாகப் பார்த்தாலே மனித வரலாற்றில் மதங்களுக்காக நடந்த போர்களே அதிகம்.

மதங்களின் பிறப்பு இனம் தெரியாத அச்சத்தில் எழுந்தது. ஆனால் இன்றைய அறிவியல், இயற்கை மீது மனிதனுக்கு இருந்த பல அச்சங்களைப் போக்கி விட்டன. அந்த அச்சங்கள் இன்று பொருளற்றுப் போய்விட்டன.

வாழ்வில் நம்முடைய ஒழுக்கங்கள் மதங்களிலிருந்து பிறக்கவில்லை; ஆனால் நம்முள் குடியிருக்கும் மனித நேயத்திலிருந்தும், அடுத்தவரின் துயரைக் கண்டு துன்புறும் நமது மனத்திலிருந்தும் தான் பிறக்கின்றன. இந்த நேய உணர்வு எல்லா உயிரினங்களுக்கும் பொதுவல்ல.

 ’மதங்கள் என்பவை மனிதத்தின் உயர்நிலைக்கு எதிரானவை’ என்கிறார் நோபல் பரிசு பெற்ற ஸ்டீவன் வெய்ன்பெர்க்.

இயற்பியல் நோபல் பரிசை வெய்ன்பெர்க்கோடு இணைந்து பெற்றவர் பாகிஸ்தானின் அப்துஸ் சலாம் என்பவர். இவர் மத்திய கீழ்த்திசை நாடுகளில் கல்வியை மேம்படுத்த முயன்றார். ஆனால் அந்நாட்டுத் தலைவர்கள் இவருக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. ஏனெனில் அறிவியல் மத நம்பிக்கைகளைக் குலைத்துவிடும் என்று அவர்கள் நம்பினார்கள்.

மதங்களைத் தாங்கிப் பிடிப்போர் உலகில் நாம் காணும் துன்பங்களும் துயரங்களும் கடவுள் தனக்குப் பிடித்தோரின் நம்பிக்கையைச் சோதிக்கவே செய்கிறார் என்று சொல்வதுண்டு. கான்சரில் அவதியுறும் ஒரு சின்னக் குழந்தையின் பெற்றோரிடம் இதை அவர்கள் சொல்லிப் பார்க்க வேண்டும். கடவுளுக்கு இப்படிப்பட்ட துன்பம் தரும் பெரும் சக்தியிருந்தால் அந்தக் கடவுள் மிக மிகக் கொடூரமானது.

ஐன்ஸ்டீன் கடவுள் நம்பிக்கை என்பது முட்டாள்தனமான மூடநம்பிக்கை என்றார்.

தத்துவ மேதை காலின் மேக்கின் கடவுள் நம்பிக்கையற்றவர்களை மூன்று வகையான நாத்திகர்கள் என்று வரையறுக்கிறார்.
atheists – தங்கள் கருத்துகளை மற்றவர்கள் ஒத்துக் கொள்கிறார்களா என்றெல்லாம் கவலைப் படாதவர்கள்;
anti-theists – மதங்களை அதன் தீமைகளுக்காக வெறுத்து, அவைகளை எதிர்ப்பவர்கள்.
ஆனால் எதிர்காலம் POST-THEISTIC மக்களால் நிரப்ப்ப்படும். இவர்களுக்கு மதங்களே ஒரு பொருட்டல்ல.

 உலகத்தை அறிவால வெல்ல வேண்டும். அதைத் தவிர்த்து அடிமைத் தனமாக அச்சத்தினால் கட்டுப்பட்டுக் கிடப்பது தவறு.

கடவுள் என்ற கருத்தாக்கம் ஒரு தனிமனிதனுக்கு உகந்ததல்ல. நல்லதொரு உலகத்திற்கு அறிவு, இரக்கம், தைரியம் போன்றவை தேவை; பழையனவற்றைக் கட்டிப்பிடித்துத் தொங்குவதோ, என்றோ யாரோ சொன்னவைகளைப் பற்றிக் கொண்டு நம் அறிவை அடமானம் வைப்பதோ தேவையில்லாதது.


*

(The writer is on the faculty of the Department of Physics, Indian Institute of Science, Bangalore. Email: profvasant@gmail.com)


*

8 comments:

சார்வாகன் said...

வணக்கம் அய்யா,

/இயற்பியல் நோபல் பரிசை வெய்ன்பெர்க்கோடு இணைந்து பெற்றவர் பாகிஸ்தானின் அப்துஸ் சலாம் என்பவர். இவர் மத்திய கீழ்த்திசை நாடுகளில் கல்வியை மேம்படுத்த முயன்றார். ஆனால் அந்நாட்டுத் தலைவர்கள் இவருக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. ஏனெனில் அறிவியல் மத நம்பிக்கைகளைக் குலைத்துவிடும் என்று அவர்கள் நம்பினார்கள்./

உங்களுக்கு மார்க்கம் சொல்லிக் கொடுத்தே நமது தாவு தீர்கிறது. திரு அப்துஸ் ஸலாம் ஒரு அகமதியா முஸ்லிம்.அகமதியாக்கள் முஸ்லிம்கள் இல்லை என பாகிஸ்தானில் சட்டம் வந்ததால் மனம் வெறுத்து பாகிஸ்தான் விட்டு வெளியேறினார் ஸலாம்!!

ஆகவே நோபல் பரிசே வாங்கினாலும் அகமதியா, முஸ்லிம் ஆக முடியாது.கிளுகிளு சுவனம் கிட்டாது!!!
****
2./கடவுள் என்ற கருத்தாக்கம் ஒரு தனிமனிதனுக்கு உகந்ததல்ல. நல்லதொரு உலகத்திற்கு அறிவு, இரக்கம், தைரியம் போன்றவை தேவை; பழையனவற்றைக் கட்டிப்பிடித்துத் தொங்குவதோ, என்றோ யாரோ சொன்னவைகளைப் பற்றிக் கொண்டு நம் அறிவை அடமானம் வைப்பதோ தேவையில்லாதது./

இப்படி சுளுவாக சொன்னால் எப்பூடி?.

நாத்திகர்களுக்கு சவால்கள்

அ)கடவுள் இல்லை என அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா?

ஆ)உயிரற்ற பொருளில் இருந்து,உயிருள்ள செல் உருவாக்க முடியுமா?

இ)ஒரு செல் உயிரை ஆய்வகத்தில் பல செல் உயிராக காட்ட முடியுமா?

ஈ)அப்படியே பல செல் உயிர்களில் இருந்து மனிதன் வரை பரிணாம வளர்ச்சி அடைய வைத்து காட்ட முடியுமா?

இந்த கேள்விகளுக்கு விடை அளிக்க முடியாமல் இருக்கும் வரை, ஏகப்பட்ட ஏக இறைவன்கள் வழங்கிய ஏகப்பட்ட மத புத்தகத்கங்களை
தகேள்வி கேட்காமல் [கேட்பவனுக்கு அழகிய முறையில் ஹி ஹி கிடைக்கும்]உலக முழுதும் பரப்பூவோம்

என்னும் இறையடியார்களை குறைவாக மதிப்பிடுகிறீர்களே நியாயமா?

சிந்திக்க மாட்டீர்களா!!!!


நன்றி!!!

தருமி said...

என்ன பெரிய இழப்பு! நோபல் கிடச்சி என்னங்க புண்ணியம். கிளுகிளு சுவனம் கிட்டாது என்றாகி விட்டதே!!!

டிபிஆர்.ஜோசப் said...

உ.பியில் சமீபத்தில் நடந்த கலவரம் சில தினங்களுக்கு முன்பு நைரோபி மாலில் துவங்கி இன்றும் தொடரும் துப்பாக்கி சூடு, நேற்று பெஷாவரில் சர்ச் ஒன்றில் நடந்த படுகொலைகள்..... இவற்றையெல்லாம் பார்க்கும்போது மதங்கள் எல்லாம் மனிதர்களை கூறுபோடுவதற்குத்தான் பெரும்பாலும் பயன்படுகிறதோ என்று கூட தோன்றுகிறது. மதங்களே இல்லாத சமுதாயம் உருவானால் நல்லது என்றுதான் தோன்றுகிறது.

தருமி said...

//மதங்களே இல்லாத சமுதாயம் உருவானால் நல்லது என்றுதான் தோன்றுகிறது. //

ஜோசப்,
உங்களை மாதிரி ஆட்களைக் கூட இப்படிச் சொல்ல வைக்கும்படி நடப்பவைகளை நினைத்தால் கவலையாக இருக்கின்றது.

Anonymous said...

//கிளுகிளு சுவனம்//

சார்வாகன், சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்க வச்சிடீங்க.

Anonymous said...

//என்று வரும் மதங்களைத் தாண்டும் அந்தச் சமூகம்?"//

நம் generation-இல் அந்த கற்பனை சமூகத்தை பார்க்க நமக்கு கொடுத்து வைக்கவில்லை சார். சுமார் 500 வருடங்கள் கழித்து நாம் பெரும்பான்மையாகவும் மதவாதிகள் சிறுபான்மையாகவும் போக வாய்ப்புள்ளது.

தருமி said...

Alien A,

இல்லை .. இல்லை .. உங்களின் வயதான காலத்திலேயே இந்த மாறுதல் நன்கு நடந்திருக்கும் என்று நம்புகிறேன்.

அதற்கு ஒரு sample test!

என் பரிணாம வகுப்புகளில் முதல் வகுப்பில் எத்தனை பேர் நம்பிக்கையாளர்கள் என்றும், செமஸ்டர் கடைசியில் எத்தனை பேர் அவநம்பிக்கையாளர்கள் என்றும் கேட்பதுண்டு. பல ஆண்டுகளாக முதல் கேள்விக்கு அனேகமாக அத்தனை பேரும் ஆமாம் என்றும் இரண்டாம் கேள்விக்கு இல்லை என்றும் பதில் வந்து கொண்டிருந்தது. ஆனால் என் ஓய்வு பெறுவதற்கு முன் சில ஆண்டுகளாக - 21-ம் நூற்றாண்டில் - முதல் கேள்விக்கு நல்ல எண்ணிக்கையில் இல்லை என்ற பதிலும் இரண்டாம் கேள்விக்கு பலரும் என்றும் பதில் வந்தது.

... ஒரு நம்பிக்கைக் கீற்று ...!

Anonymous said...

//உங்களின் வயதான காலத்திலேயே இந்த மாறுதல் நன்கு நடந்திருக்கும் என்று நம்புகிறேன். //
கண்டிப்பாக சார். இன்டர்நெட் & ப்ளாக் பயன்படுத்துகிற அனைவருக்கும் அனைவருக்கும் இந்த மாறுதல் சீக்கிரமே நடக்கும். உதாரணமாக என்னையே எடுத்துக்கொள்ளலாம். தமிழ் ப்ளாக் படிக்க ஆரம்பித்த பிறகு தான் நிறைய சந்தேகங்கள் தீர்ந்தது. முக்கியமாக உங்கள் தளம், சார்வாகன், கோவிகண்ணன், வவ்வால், ஆகியோருடைய தளங்களிருந்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டிருக்கிறேன். சாதாரண அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், ஹோட்டல் மற்றும் பலசர கடைகளில் வேலை பார்க்கிற மற்றும் பார்க்கப்போகிற நம் சகோதரர்களுக்கும் இந்த இணைய வசதி கிடைத்தால் அவர்களுக்கும் சீக்கிரமே நல்ல மாறுதல் கிடைக்கும்.

Post a Comment