Thursday, October 03, 2013

686. நான் ஏன் இந்து அல்ல ... 4


*
*
தொடர் பதிவுகள்:   1 ......     2 .....     3 .....  4..........  5..............  6 ...........  7..................

*அத்தியாயம் 4

புதிய சத்திரியர்களின் எழுச்சியும்
அதிகார உறவுகளின் மறு சீரமைப்பும் 


*

அரசியல் அதிகாரம் சத்திரியர்களுக்கும் அவர்களுக்கு அமைச்சர்களாயிருந்து ஆலோசன வழங்குகிற பார்ப்பனர்களுக்கும் மட்டுமே என்று கடந்த கால இந்துக் கோட்பாடு கூறுகிறது.

தலித் பகுஜன்கள் ஒரு குறிப்பிட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டே வாழ வேண்டியுள்ளது. எல்லாவற்றிற்கும் முதலாவதாக  சாதி அமைப்பே ஒரு வகையான அதிகார உறவுகளை நிலைநாட்டுகிறது. (74)

தென்னிந்தியக் கிராமங்களில் எல்லாம் (வட இந்தியாவுக்கும் இது பொருந்தும்) ஆட்சியதிகாரத்தைக் கையில் வைத்திருந்த சத்திரிய வகுப்பினர் செயலற்றுப் போனதும், சூத்திர மேல் சாதியினர் புதிய சத்திரியர்களாக உருவாகி வருகிறார்கள்.

இந்தப் புதிய சத்திரியர்கள் தங்களை இந்து ஆன்மீகத்தின் ஒரு அங்கம் என்றே நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்துத்துவத்தின் ஆதரவாளர்களாக மாறி வருகிறார்கள்.

இந்துத்துவா எப்போதும் சிலரைச் சேர்த்துக் கொள்வதற்கும், சில பேரை விலக்கிக் கொள்வதற்கும் ஏற்ற கொள்கைகளையே நம்புகிறது. பார்ப்பன பனியாக்கள் புதிய சத்திரியர்களை மெதுவாகத் தம் பக்கம் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கும் கீழ்ப்பட்ட சாதியினரைப் புறக்கணிக்கின்றனர். (75)

புதிய சத்திரியர்கள் பார்ப்பனியத்தை அழிவிலிருந்து காப்பாற்றி பார்ப்பனீயம் மேலும் வலுப்பெறுவதற்கு உதவியிருக்கிறார்கள்.(76)

புதிய சத்திரியர்களுடைய நோக்கம் மனித உறவுகளைத் த்லித் மயமாக்குவதோ, ஜனநாயகமாக்குவதோ அல்ல. மாறாக, பார்ப்பனீய மயமாக்கவே முயலுகிறார்கள்.

புதிய சத்திரியர்களுக்கு நிலத்திலும் அரசியல் அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்துவதற்குக் கறிப்பிக்கப் படுகிறது. பார்ப்பனீய ‘கெளடில்யனிசம்’ இதற்கு உதவுகிறது. (77)

தலித் பகுஜன் சட்டமென்பது அதிகாரத்திலிருந்து உருவானதல்ல. அது சமுதாயத்திலிருந்து தோன்றுகிறது.

தலித் பகுஜன் பஞ்சாயத்து தனித்த சிறப்புடையது. அதன் நீதிக் கோட்பாடு தனி மனித நலன் சார்ந்ததல்ல. சமூக நலன் சார்ந்தது. (78)

தனிநபர் சார்ந்த அந்தரங்க உறவு என்பதே த்லித் பகுஜன் வாழ்வில் கிடையாது. எல்லா தனி நபர் உறவுகளும் சமூக அரசியல் பரிமாணங்களுக்கு உட்பட்டதேயாகும். (79)

குடியேற்றக் காலத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சியில் அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சில உதவிகள் செய்து அவர்கள் சொத்து சேர்க்க வழிகோலியது. எனினும் அது மிகச் சொற்பமானதே. ஆனால் அந்தச் சொற்கள் கூட குறுகிய காலத்தில் பொதுச் சொத்தாக மாறி விட்டன.  .. இத்தகைய பறிகொடுப்புக் கலாச்சாரத்தை ஊதாரித்தனம் என்று விமர்சிக்கிறார்கள்.  ... ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தனிச்சொத்து என்பது பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் வாழ்ந்த ஒரு சமுதாயம் தனக்குக் கொடையாக வழங்கப்பட்ட சொத்தை விரைவாக இழந்து நிற்பது இயல்புதான்.(80)

1947க்குப் பிறகு எல்லா மட்டத்திலும், குறிப்பாக அரசியலிலும் தொழில் நுட்பத் துறையிலும் பார்ப்பன பனியாக்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.  ... 1990ல் மேற்கொள்ளப்பட்ட மண்டல் பரிந்துரை அமலாக்கம் தலித் பகுஜன்களுக்குச் சாதகமானதாக இருந்ததால் புதிய சத்திரியர்கள் தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள இந்துத்துவத்தோடு அய்க்கியமானார்கள்.  ... பார்ப்பன - பனியா - புதிய சத்திரியர்களின் உறவு இந்தியச் சமூகத்தின் நவீனத்துவமாக அடையாளப்படுத்தப் பட்டது. (81)
... இந்த மூன்று சாதிகளின் கூட்டமைப்பு மதச்சார்பற்ற தளத்தில் நின்று சனநாயக சக்திகளை எதிர்கொள்ளத் தயாராக இல்லை.  எனவே இம்மேல்சாதிக் கூட்டு, அரசியல் அதிகாரத்தோடு ஆன்மீகத்தையும் கலக்கிறது.அவ்வாறு கலப்பதென்பது தமது சாதிய மேலாதிக்கத்தையும் ஆணாதிக்கத்தையும் அதிகாரப் பூர்வமாக உறுதிப்படுத்திக் கொள்ள உதவுகிறது. (82)

பார்ப்பனன் அரசியலதிகாரத்தை மட்டுமின்றி ஆன்மீக அதிகாரங்களையும் கொண்டிருந்தான். பனியா பொருளாதார அதிகாரங்களையும் கொண்டிருந்தான். தலித் பகுஜன்களோ எந்த ஒரு அதிகாரத்தையும் பெறாதவர்களாக ஆக்கப்பட்டிருந்தார்கள்.(84)

சிவில் சமூக அரசியல் அமைப்புகளுக்கும் மேலாக, அரசு நிறுவனங்களிலும் கிராம நிர்வாகங்களிலும் இந்து அரசியலதிகாரம் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. ... பூ மாலையில் இருக்கிற நூலைப்போல் இந்துத்துவா எல்லா அமைப்புகளிலும் ஊடாக நுழைந்து அவற்றை மேல்சாதியினரின் தனியுடைமையாக்கி விடுகிறது.(85)

விடுதலைக்குப் பிறகு பார்ப்பனர்கள் தங்கள் தந்திரத்தை அரசியல் நிறுவனங்களில் செலுத்தி, தங்களுடைய அதிகாரத்தை நிலை நிறுத்தி, தங்களின் ஆன்மிக எல்லையை அரசியல் தளம் வரை விரிவு படுத்திக் கொண்டார்கள்.... சாதியால் பிளவுபட்டுக் கிடக்கும் கிராம சமுதாயத்தில் இதன் மூலம் புதிய சத்திரியர்கள் சகல அதிகாரமும் படைத்தவர்களாக ஆகின்றனர். அவர்கள் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லா நிலங்களையும் கையகப்படுத்தித் தங்கள் கையில் வைத்துள்ளார்கள்.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக உருவான தேசீய இயக்கங்கள் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆகிய அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தியவர்கள் பார்ப்பனர்களே. ... ஆங்கில ஏகாதிபத்தியம் மேல்சாதிக்காரர்களுக்குச் சாதகமாக இருந்தது. ... (88)  ஒரு புறம் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது போலவும், தேசிய நலனில் அக்கறையுடன் நடந்து கொளவது போலவும், மறுபுறம் ஆங்கிலேயர்களின் கைக்கூலிகளாகவும் ஆதிக்க சாதியினர் இரட்டை வேடம் போட்டனர். மேல்சாதி ஆதிக்கத்தில் இவர்கள் இருப்பது தான் தனது நலனுக்கு உகந்தது என ஆங்கில அரசும் தெரிந்து கொண்டது. எனவே அவர்கள் இந்நிலையை ஊக்குவித்தனர்.

அதே சமயம் பிரிட்டிஷ் அரசாங்கம் தலித் பகுஜன்கள் ஒருங்கிணைவதற்கான அடித்தளத்தையும் உருவாக்கிக் கொடுத்தது. மகாத்மா ஜோதிபா பூலே பார்ப்பன எதிர்ப்பியக்கத்தின் முன்னோடியாவார். தேசிய அளவில் சாதி எதிர்ப்புப் புரட்சியை ஏற்படுத்தியவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆவார். (89)

காலனிய ஆட்சி இந்துத்துவமும் பாப்பனியக் கருத்தியல்களைக் கொண்ட வைதீக மேல்சாதியினரின் வளர்ச்சிக்குப் பேரளவு ஆதரவு காட்டியது. இந்தச் சூழலில் மிகவும் புரட்சிக் கோட்பாடான மார்க்சீயம், மிகவும் பிற்போக்கு சக்திகளான பார்ப்பன - பனியா -  புதிய சத்திரியர்களின் கையில் சிக்கியது. ... கம்யூனிஸ்டுகளுக்கும் கம்யூனிஸ்ட் அல்லாத பார்ப்பனர்களுக்குமான உறவு மட்டும் மிகவும் நெருக்கமானதாக இருந்தது. (90)

1990ல் உருவான மண்டல் குழு அறிக்கை அமுலாக்கத்திற்கு சாதிப் போராட்டங்களுக்கான வழியைத் திறந்து வைத்தன.

இந்த மண்டல் போராட்டம் பார்ப்பன இந்துத்துவத்தை மெல்ல அழிக்கக்கூடிய தலித் மயமாக்குதலுக்கு ஒரு முன்னோட்டமாகும். இப்படியிருக்க இந்தச் சூழ்நிலையை உணர்ந்து கொண்ட பார்ப்பனர்கள் உடனடியாகத் திரண்டு  இந்த சாதியப் போராட்டத்தை மதக் கலவரமாக திசை திருப்பி விட்டார்கள். இந்தத் திசை திருப்பலின் விளைவே 1992 டிசம்பரில் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பாகும்.(91)

புதிய சத்திரியர்கள் மெல்ல ஒரு ‘குலக்’ (?)  வர்க்கமாக உருவெடுத்தார்கள். இவர்கள் பார்ப்பனர்களுக்கும் உழைக்கும் சாதியினருக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து பழமை நிலையைப் பாதுகாக்க உதவினார்கள். உழைக்கும் சாதியினரோ மேலும் மேலும் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டனர்.

பண்டைக்காலங்களில் பார்ப்பன சக்திகள் சூத்திரர்களாக இருந்த சத்திரியர்களோடு கூட்டு சேர்ந்து கொண்டு புரட்சிகளைத் தடுத்தனர்; பவுத்த சமணப் புரட்சிகள் எவ்வாறு அழிக்கப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரியும். (92)

பார்ப்பன பனியாக்களிடத்திலேயே அரசியலதிகாரம் குவிந்து கிடப்பதால் அவர்கள் மற்ரவர்களை அடிமைத்தளத்திலிருந்து விடுதலை செய்யப் போவதில்லை. புதிய சத்திரியர்கள் இந்த ஆதிக்கக் கருத்தியலை என்றுமே புரிந்து கொண்டது இல்லை. உதாரணமாக புதிய சத்திரியர்களை உள்வாங்கத் தயாராக இருக்கும் பார்ப்பனீய அமைப்பு அவர்களை இந்துக் கோயில்களில் புரோகிதராக அனுமதிக்குமா?


சமூகப் பொருளாதார அமைப்பிற்குப் புதிய சத்திரியர்கள் செய்த நாச வேலைகள் ஏராளம். அவர்கள் இந்துத்துவத்தின் தூண்களாகிக் கொண்டிருக்கிறார்கள். (93)

**
 

No comments:

Post a Comment