Wednesday, October 16, 2013

689. நான் ஏன் இந்து அல்ல ... 5
*


*
தொடர் பதிவுகள்:   1 ......     2 .....     3 .....  4..........  5..............  6 ...........  7..................

*

* அத்தியாயம்   4

சமகால இந்து மதம்


மேற்படிப்புக்கு நான் தள்ளிவிடப்பட்ட போது ஒவ்வொரு நிலையிலும் கல்வி எனக்கு அன்னியமாக இருந்தது. மேலும் மேலும் அது பார்ப்பனிய மயமாகவும் ஆங்கில மயமாகவும் இருந்தது.

வரலாற்றுப் புத்தகம் முழுக்க சத்திரியர்களின் கதைகளே ஆக்கிரமித்திருந்தன. தலித் பகுஜன்களின் வாழ்க்கை இன்று வரை பாடத்திட்டத்தில் இடம் பெறவில்லை. நாமெல்லாம் வரலாற்றிலிருந்து புறக்கணிக்கப்பட்டு விட்டோம்.(94)

பார்ப்பனிய  பாடங்கள் திட்டமிட்டு மெளனம் சாதித்த போது ஆங்கிலப் பாடங்கள் அதற்கு எதிர்மாறாக இருந்தன. அவைகள் ஐரோப்பாவில் இருக்கிற வர்க்கங்கள் பற்றிக் குறிப்பிட்டன. ஏழை பணக்கார வர்க்கங்களின் கலாச்சாரம் குறித்துப் பேசின. ஆங்கிலப் பாடப்புத்தகம் டிக்கன்ஸ் போன்ற எழுத்தாளர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது. அரசியல், அறிவியல் பாடத்தில் பல்வேறு வர்க்கங்களின் பண்பாடும், விடுதலை குறித்த கருத்துகளும், சமத்துவம் மற்றும் சமத்துவமின்மை போன்ற கருத்துகளும் இடம் பெற்றிருந்தன.

வர்க்கச் சமுதாயங்களில் அங்கும் கூட முரண்பாடுகள் இருந்த போதிலும் நமது இருப்பை மவுனமாக்கும் சதி என்பது சாதியச் சமுதாயங்களை விட அங்கு குறைவு என்பது தான். தெலுங்குப் பாடப்புத்தகத்தில் அடக்கி வைக்கப்பட்ட மெளனம் இடியைப் போல பயங்கரமானது.

உயர்கல்வி அமைப்புகளில் நான் ஆதிக்க சாதி ஆசிரியர்களையே எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ... அவர்களே சாதி வெறியர்களாக இருந்தார்கள்.(95)

இந்து ஆசிரியர்களின் கருத்துப்படி நாங்கள் பல்கலைக் கழகத்தில் இடம் பெறவே தகுதியற்றவர்கள்.

கல்வியின் தரத்தைக் குறைப்பதற்குப் பதிலாக எங்களுக்கு எங்களுடைய சூழ்நிலையிலேயே புதிய வாழ்க்கை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்கள். அவர்களுடைய கருத்துப்படி  நாங்கள் தெலுங்கிலோ ஆங்கிலத்திலோ புலமை பெற முடியாது.

நாங்கள் எங்களுக்கு எதிரான, ஆங்கில மயமாக்கப்பட்ட பார்ப்பனீய வகுப்பறைகளில் உட்கார்ந்திருக்கிறோம். எங்களுடைய பெற்றோர்களின் உபரியை உறிஞ்சி உருவாக்கப்பட்ட வகுப்பறைகள் அவை.

நகர மையங்களுக்கு நாங்கள் வந்த போது ‘பிராமண உணவு விடுதி’ என அங்கே பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. உணவும் கூட பார்ப்பன சுவைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டவையாகவே இருந்தன. ... நமது ருசிக்கேற்ப உணவு அளிக்கக்கூடிய குருமா, கவுடா ஓட்டல் ஒன்று கூட நான் பார்த்ததில்லை. பார்ப்பன பனியா ருசியே எல்லோருக்குமான ருசியாக மாற்றப்பட்டிருந்தன.(96)

இங்கும் அங்குமாய் ஒரு சில தலித் அதிகாரிகள் இருந்தார்கள். அதுவும் கூட டாக்டர் அமபேத்கர் அவர்கள் வாங்கித் தந்த இட ஒதுக்கீட்டின் முலம் தான் நிகழ்ந்தது. தலித் அலுவலர்கள் மீது அலுவலகத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டது.

நாங்கள் மாணவர்களாக இருந்த போது மகாத்மா பூலே பற்றியோ, டாக்டர் அம்பேத்கர் பற்றியோ யாரும் சொல்லவேயில்லை. எங்களுக்கெல்லாம் காந்தி, சுபாஷ், நேரு போன்றவர்களைப் பற்றித்தான் கூறினார்கள்.(98)

சுதந்திரத்திற்குப் பின் ... காங்கிரஸ் தலித் பகுஜன் நலன்கள் குறித்துப் பேசி வந்தது.  காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த மேல் சாதியினருக்கும் தலித் பகுஜன்களுக்குமான உறவு ராமனுக்கும் அனுமனுக்குமிடையில் உள்ள உறவாக இருந்தது.  அனுமன் தென்னிந்திய தேசியத் தலைவனான ராவணனை எதிர்த்த ராமனுடைய படையில் சேர்ந்த தலித் ஆவான். ராமனுடைய பேரரசுக்காக அவன் இரவு பகலாக உழைத்தான்.; போராடினான. இருந்தும் கூட அனுமன் நிர்வாகத்தில் ஒதுக்கப்பட்டவனாகவும், ஏவல் புரிவோனாகவுமே நடத்தப்பட்டான்.  ... இன்றைய அரசியல் நடைமுறைகள் அன்றைய இராம ராஜ்ஜியப் பாணியில் வளர்க்கப்பட்டன.(99)

ஏழையாக இருந்தாலும் ஒரு ‘மேற்’சாதிக்காரன் தன்னை மேலானவனாகவே கருதிக் கொள்கிறான். பணக்கார ‘மேற்’சாதியானும் அப்படித்தான் நினைத்துக் கொள்கிறான். பணம் சேர்ப்பதன் மூலமாகவே ஒரு தலித் பகுஜனின் அந்தஸ்து என்பது உயர்ந்து விடுவதில்லை.(100)

தலித் பகுஜன் மக்கள் கம்யூனிசத் தலைமையிலிருந்து மூன்று வகைகளில் வேறுபட்டவர்களாகவே இருந்துவந்தார்கள். ... ஒன்று: கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை மேல்சாதி வசமாக, குறிப்பாக பார்ப்பனர்கள் கையில் இருந்தது.. இரண்டு: அவர்கள் அன்றாட வாழ்வில் இந்துக்களாகவே வாழ்ந்து வந்தார்கள்.மூன்றாவதாகக் கட்சியிலிருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் ஏழையாகவே இருப்பார்கள். ஆனால் தலைவர்களோ பணக்காரப் பின்னணியிலிருந்து  உருவானவர்கள். கம்யூனிஸ்ட் கட்சியில் மக்கள் கூட்டம் என்பது தலித் பகுஜன் கூட்டமாகவே இருந்தது. இருந்தும் அவர்கள் தலைமைக்கு அழைக்கப்படவேயில்லை.  ... கேரளாவில் பொது மக்களிடம் கொடூரமாக நடந்து கொண்ட நம்பூதிரிகளே தலைவர்கள் ஆனார்கள்.  ... இவ்வாறு நாடு முழுவதும் பார்ப்பனர்கள் எல்லோரும் தலைவர்கள் ஆனார்கள். மேல்சாதித் தலைவர்கள் ஒரு குழுவாகவும், தலித் பகுஜன் மக்கள் தொண்ட்ர்களாகவும், கட்சி உறுப்பினர்களாகவும் இரண்டு அடுக்காகச் செயல்பட்டார்கள். டாக்டர் அம்பேத்கர்தான் இந்த் உண்மையை முதன் முதல் அறிந்து கொண்டு செயல்பட்டவர்.

எல்லா இந்துக் கடவுள்களும் பிரம்மா, விஷ்ணு தொடங்கி தசாவதாரம் வரை தலித் பகுஜன்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய கடவுள்களாக இருந்தார்கள். ... இந்திய கம்யூனிச இலக்கியங்கள் எதுவும் இந்தக் கடவுள்களை விமர்சனம் செய்ததே இல்லை.(101)

மாற்றுக் கலாச்சாரம் குறித்து கம்யூனிஸ்டுகள் பேசியபோதும் கூட, அந்த மாற்றுக் கலாச்சாரம் இந்து வாழ்க்கை முறையிலிருந்து விலகியதில்லை. இது இந்தியக் கம்யூனிஸ்ட்டுக்கே உரித்த குணமாகும். (102)

1990-ல் இருந்தே இந்து சாதியினருக்கும் தலித் பகுஜன் சாதியினருக்கும் இடையேயிருந்த முரண்பட்ட கலாச்சார வேறுபட்டைக் கூர்மையாக அறிய முடிந்தது.

நான் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய போது விஞ்ஞானக் கல்வியும் மேலைநாட்டு அறிவும் எந்த வகையிலும் இந்துக்களைப் பகுத்தறிவாளர்களாக மாற்றவில்லை என்பதை உணர்ந்தேன்.

தலித் பகுஜன சாதியிலிருந்து வரும் இளைஞர்கள் தகுதி குறைந்தவர்கள் என்றும் அவர்கள் பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணியாற்ற தகுதியற்றவர்கள் என்றும் 1990களில் கூட (மண்டல் இயக்கம் நடைபெற்றபோது) அவர்களால் வாதிட முடிந்தது. (103)

மேல்சாதியினருடைய புத்தக அறிவு தலித் பகுஜன்களின் உழைப்பு சார்ந்த அறிவை விட உயர்வானது என்று தலைகீழாக நினைக்கும் மேல் சாதிக்காரனை எப்போதும் திருத்த முடியாது. (104)

நகர்மயமாதல் அதிகரித்து வரும் இந்நாட்களில் பார்ப்பனர்கள் நகர்ப்புறங்களில் குவிந்து வருகின்றனர்.

மூவாயிரம் ஆண்டுகளாக தலித் பகுஜன் படிப்பதற்குக் கடுமையான எதிர்ப்பு இருந்து வந்தும் கூட அவர்களின் முதல் சந்ததியினர் கல்வி கற்ற போது ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியல் அறிஞர்கள், நிர்வாகிகள், ஆகியோரின் திறமை, முன்னேற்றம் என்பன நம்ப முடியாத அளவிற்கு இருந்தன.  ... தலித் பகுஜனங்களின் திறமை பார்ப்பனின் திறமையை விட எந்த விதத்திலும் குறைவானதாய் இல்லை. பல மடங்கு உயர்வாகத்தான் உள்ளது. (105)

பார்ப்பனியம் மனித சிந்தனையை வருணாசிரம அடிப்படையில் மேல் கீழாகப் பிரித்தது. (106)

முதலாளித்துவச் சந்தை சீரழிந்த சாதிச் சந்தையாக மாறிவிட்டது. பம்பாய், தில்லி, கல்கத்தா, ஐதராபாத் போன்ற பெரு நகரங்களில் கூட எந்த தலித் பகுஜனும் தொழில் தொடங்கத் துணிவதில்லை. சென்னை மட்டும் விதி விலக்கு. தி.மு.க. ஆட்சியில் இருந்ததன் விளைவாக இருக்கலாம். (107)

முதலாளித்துவ உற்பத்தியில் கூட சாதி ஆதிக்கம் செலுத்துகிறது. இதையே சாதிமயமான மூலதனம்  என்கிறோம். இவ்வகையான சாதி மயமாக்கப்பட்ட மூலதனம் மனிதத் தன்மையற்ற சுரண்டலிலேயே முடியும்.(108)

குடியேற்ற ஆட்சி அகற்றப்பட்ட இந்தியாவில் அரசியல், பொருளாதார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மற்றும் நிர்வாக அமைப்புகள் அனைத்திலும் சாதி ஒழிந்து சம உரிமை ஏற்படும் என்று எதிர்பார்த்தோம்.  ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை.

தலித் பகுஜன்கள் பலர் தங்களை சமஸ்கிருத மயமாக்கிக் கொண்டார்கள். தங்களுடைய சொந்தப் பெயரை மாற்றிப் பாப்பனியப் பெயரைச் சூட்டிக் கொண்டார்கள். முத்தையா மூர்த்தியானார். கோபய்யா கோபால கிருஷ்ணன் ஆனார்  ... ஒருவன் என்ன பெயர் வைத்துக் கொண்டாலும் ஒரு சில நாட்களுக்குள் அந்த நபரின் சாதியைத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு பார்ப்பனர்கள் நடந்து கொள்கிறார்கள். (110)

சமஸ்கிருதமயமாகும் செயல்கள் சாதி அடையாளத்தையோ சாதி அடிப்படையிலான அவமானத்தையோ எந்த அளவிலும் குறைத்து விட வில்லை.

தலித் பகுஜன்களின் சம்ஸ்கிருதமயமாகும் போக்கு இந்துக்களின் காட்டுமிராண்டித்தனத்திற்குத் தீர்வு அல்ல என்பதைப் பின்னாளில் உணர்ந்தார்கள்.(111)  இதே காரணத்திற்காகத்தான் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்து கலாச்சாரத்திற்கு எதிரான கலாச்சாரத்தை உருவாக்க முயன்று ஐந்து லட்ச்ம் தலித் மக்களோடு பவுத்தத்தைத் தழுவினார்.  ஈவெரா பெரியாரும் ஒரு மாற்றுக் கலாச்சாரமாக திராவிடக் கலாச்சாரத்தை உருவாக்கி பார்ப்பனியத்தையும் இந்துக் கலாச்சாரத்தையும் இந்துக் கடவுள்களையும் அம்பலப் படுத்தினார். (112)

*

6 comments:

Anonymous said...

வணக்கம்
ஐயா

பதிவு அருமை வாழ்த்துக்கள் தொடருகிறேன்....

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Somasundaram Hariharan said...

//சமஸ்கிருதமயமாகும் செயல்கள் சாதி அடையாளத்தையோ சாதி அடிப்படையிலான அவமானத்தையோ எந்த அளவிலும் குறைத்து விட வில்லை//

ஆனால் அதுதான் பிற்படுத்த மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் சம்ஸ்கிருத பெயர்களையும், பண்டிகைகளையும் ஆரவாரத்துடன் கொண்டாடிவருகிறார்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

பெரியார் இல்லையேல் இன்றைய நமது நிலையினை நினைத்தால் நெஞ்சம் நடுங்குகிறது ஐயா

டிபிஆர்.ஜோசப் said...

பணம் சேர்ப்பதன் மூலமாகவே ஒரு தலித் பகுஜனின் அந்தஸ்து என்பது உயர்ந்து விடுவதில்லை.(100)//

உண்மைதான். ஆனால் அவனுக்கு சாமான்ய பகுஜனுக்கு ஏற்படும் அவமானங்கள் அந்த அளவுக்கு ஏற்படுவதில்லை. பணம் அவன் ஒரு பகுஜன் என்பதையும் கூட மறக்க வைத்துவிடுவதை நான் பார்த்திருக்கிறேன். பணமும் அதை விட படிப்பும் பதவியும் இத்தகையோர் வாழ்க்கையில் ஒரு நல்ல மாறுதலை ஏற்படுத்துவதும் உண்மை.

தருமி said...

//பணம் அவன் ஒரு பகுஜன் என்பதையும் கூட மறக்க வைத்துவிடுவதை நான் பார்த்திருக்கிறேன். //

உங்களை மாதிரி ஒரு பகுஜன் (let us assume so now ..)
என்னை மாதிரி ஒரு உயர்சாதி (let us assume so now ..) வீட்டுக்கு வந்து விட்ட போன பின் அந்த இடத்தை நான் கழுவி, தீட்டு கழித்தது உங்களுக்குத் தெரிந்தால் உங்கள் மனது எப்படியிருக்கும்?

நல்ல நட்போடு இருந்த எதிர்த்த வீட்டு உயர்சாதி மக்கள் இப்படி செய்ததைப் பார்த்த என் தந்தை அந்த உறவை முடித்துக் கொண்டார் - என் மிகச் சிறு வயதில். என்னையும் அந்த வீட்டிற்குச் செல்லக்கூடாது என்று தடுத்தார். (நாங்கள் இருந்த தெருவில் அந்த உயர்சாதியினரை விட நாங்கள் பொருளாதாரத்தில் உயர்ந்திருந்தோம்!!!)

எங்க அப்பா கூட பரவாயில்லை; பாவப்பட்ட ஜகஜீவன் ராம், ஜனாதிபதி நாராயணனும் வந்து சென்ற பின் கோவிலுக்கே தீட்டு கழித்தது மறந்து விட்டதோ?!

sermathi said...

they are fools wasting their time/energy in cleaning their house.
in today's world, people will take revenge on them by visiting such higher caste person's house often !!!

Post a Comment