*
நம்மளோ ஒரு கம்ப்யூட்டர் கைநாட்டு. ஏதோ கட்டை விரல் பதிப்பது மாதிரி கொஞ்சம் கொஞ்சம் தமிழில் தட்டச்சி ... காலம் கொஞ்சம் ஓடி விட்டது.
முதலில் ... ஆஹா! கம்ப்யூட்டரில் தமிழா என்ற வியப்பு.
பின் ஈ-கலப்பை என்றார்கள். பிள்ளையார் சுழி அதில் தான். அட .. பரவாயில்லையே.. அப்டின்னு ஆங்கில எழுத்துகள் மூலம் தமிழில் தட்டச்சியாச்சி. ஆமா, ஜெயமோகன் சொன்ன மாதிரி ”தமிங்கிலீஸை” தட்டச்சி எளிதாக தமிழில் எழுதியாயிற்று.
பின் ஈ-கலப்பை என்பதை விட N.H.M. writer பற்றிச் சொன்னார்கள். அதுவும் கை வந்தது. இதில் ஒரு லாபம் N.H.M. converter. மற்ற எழுத்துருவிலிருந்து மாற்ற வசதி .. அப்படி .. இப்படி என்றார்கள். அதையும் ஒரு கை பார்த்தாச்சு.
வண்டி ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று ஒரு ப்ரேக் விழுந்திருச்சு! ரெண்டு நாளா ஒரே போராட்டம். இப்போதும் N.H.M.-ல் தான் தட்டச்சுகிறேன். ஆனால் இந்த N.H.M. திடீரென்று ஒரு ’சாதி’ போராட்டத்திற்குள்’ என்னைத் தள்ளி விட்டது.
சில ’சாதி’க்கு சரியாக வருது. இப்போ பாருங்க ..ப்ளாக், ஈ மெயில், notepad இதுகளில் N.H.M. சரியாக வேலை பார்க்கிறது. ஆனால் word document-ல் எழுத மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. எத்தனை தடவை என் கணினியில் Alt + 2 அடிச்சிப் பார்த்தாச்சு. சில தடவைகள் கணினியில் இருந்த மென்பொருளை கழித்துப் பின் புதியதாக N.H.M. தரவிறக்கிப் பார்த்தேன். அப்படியும் தமிழில் எழுதுவேனான்னு அடம் பிடிக்குது. ஆனால் ப்ளாக் போன்ற மற்றவைகளைத் தன் ‘சாதியாக’ நினைத்து ஒழுங்காகத் தட்டச்ச உதவுகிறது. ஏன் word document-ல் எழுத முடியவில்லை.
அநாதை ரட்சகனாக தமிழ்வாசியிடம் கேட்டேன். அவர் புதிய மந்திரம் ஒன்று கொடுத்தார். அது கூகுள் ஆண்டவர் போட்ட பிரசாதம். ஆனால் இதில் சில சொற்கள் ஆங்கிலத்தில் வர, அதில் தேவையானதை நாம் டிக் போட வேண்டியதிருக்கிறது. இதை விட N.H.M. எளிதாயிருந்தது. N.H.M. ரொம்ப பிடிச்சிது. அதை வச்சே ரொம்ப காலம் ஓட்டியாகி விட்டது.
இப்போது N.H.M. writer, word document-ல் எழுத மாட்டேன் என்பதை எப்படி வழிக்குக் கொண்டு வருவது?
அதோடு converter இருப்பதும் பெரிய உதவியாக இருந்தது. N.H.M. writer மாதிரியே கூகுள் பிரசாதமும் unicode தானா. ஒரே கட்டுரையை பாதியை N.H.M. writer-லும், மீதியை கூகுள் பிரசாதத்தின் மூலமும் எழுதினால் இறுதியில் எல்லாம் ஒன்றாக இருக்குமா? இல்லை .. அந்த இரண்டும் இரு வேறு வேறு ஒட்டாத சாதிகளா?
மக்களே ..... உதவுங்கள்.
*
இப்போ இன்னொரு பிரச்சனை. இப்பதிவு பதிவர்களிடையே வேகமாகப் போகணும்னு நினச்சேன். ம்ம்.. நின்ச்சது எங்க நடக்குது. தமிழ் மணத்தில் இணைத்தால் கீழே வர்ரது மாதிரி வருது. தமிழ் மணப் பக்கத்தில் வரமாட்டேங்குது.
ஏண்டாப்பா ... இப்படி ஒரு ரெட்டைத் தாழ்ப்பாள்!!!!
Your Blog is Aggregated under FREE Aggregation Category
ஏண்டாப்பா ... இப்படி ஒரு ரெட்டைத் தாழ்ப்பாள்!!!!
7 comments:
'அழகி' தட்டச்சு மென்பொருள் உபயோகியுங்கள். என்னை பொறுத்த மட்டில் NHM Writer-ஐ விட சிறப்பானது.
// ஒரே கட்டுரையை பாதியை N.H.M. writer-லும், மீதியை கூகுள் பிரசாதத்தின் மூலமும் எழுதினால் இறுதியில் எல்லாம் ஒன்றாக இருக்குமா? //
இது அழகிக்கும் பொருத்தமா?
நானும் உங்க மாதிரி கம்ப். கைநாட்டுத்தான். எனக்குத் தெரியலைங்க.
ஆனா எப்படியோ கம்ப்யூட்டரிலும் சாதிச் சண்டையைத் துவக்கிட்டீங்க. பாராட்டுகள்.
தமிழ்மணம் சர்வரில் ஏதோ ப்ராப்ளம் போலிருக்கிறது. இன்றைய த.ம. முகப்பில் 'தகவல் திரட்டப்படவில்லை' என்று வருகிறது! எல்லாருமே ரெண்டு நாள் ரெஸ்ட் எடுங்கன்னு சொல்லிட்டாங்க.. எதுக்கு டென்ஷன்.... take rest.... go to movies.... ரெண்டும் இல்லையா மெட்றாஸ் கிளம்பி வந்து பேரப் பிள்ளைங்கள பாத்துட்டு போங்க :))
தருமிய்யா,
நாமளும் ஒரு கத்துக்குட்டி தான் எனக்கு தெரிஞ்சத சொல்லுறேன் ,பயனாகுதானு பாருங்க,
//இப்போது N.H.M. writer, word document-ல் எழுத மாட்டேன் என்பதை எப்படி வழிக்குக் கொண்டு வருவது? //
பிரச்சினை வருவது எதில்?
M.S word or wordpad?
M.S word 2007 0r 2010?
எதுவும் சொல்லாமல் கேளுங்க ,அப்புறம் நாம தோராயமா எதாவது சொன்னால் ,அதெல்லாம் தெரியாதா என நக்கல் விடுறது அவ்வ்!
2007 எனில்,
வேர்ட் பைல் திறந்து இடது மூலை(லெஃப்ட் கார்னர்) இல் தெரியும், விண்டோஸ் ஐகான் கிளிக் செய்யவும்,
அதில் , வேர்ட் ஆஃப்ஷன்ஸ்- >லாங்வேஜ் செட்டிங்
Primary editing language என்ன எனப்பார்க்கவும்,
தமிழ் என இருந்தால் ஆங்கிலம் என மாற்றவும்,ஏன் எனில் நாம் ஆங்கிலத்தில் தான் உள்லீடு செய்கிறோம்.
தமிழ் என்பதன் மேல் கிளிக் செய்து , ரிமோவ் கொடுத்துவிடவும்.
2010 வேர்ட் எனில்,
ஒரு வேர்ட்- 2010 டாக்குமென்ட் திறந்து கொள்ளவும்,
ஃபைல் -மெனுவில் ஹெல்ப்க்கு கீழே ஆப்ஷன் மெனு கிளிக் செய்யவும்.
வரும் செட்டிங் விண்டொவில் லாங்வேஜ் -கிளிக் செய்யவும்,
அதில்,
எடிட்டிங் லாங்வேஜ் - கீ போர்ட் லே அவுட் என தேர்வில் இருக்கனும்,
அதன் கீழ் எடிட்டிங் லேன்வேஜில் english(u.s0 or english (u.k) இதில் எதேனும் ஒன்று தேர்வு செய்யப்பட்டிருக்கனும்.
அப்படி இல்லை எனில் , அதற்கு கீழ் அடுத்துள்ள கட்டத்தில் உள்ள மெனு வில்
ஆட் எடிட்டிங் லேங்வேஜ் ஆப்ஷன் மூலம் டிராப் டவுன் மெனுவில் மேற்கொண்டதை தேர்வு செய்துக்கொள்ளவும்.
அப்புறம் மறக்காம தேவை இல்லாத எடிட்டிங் லேங்வேஜ்,& லே அவுட் இருக்குமெனில் வலப்புறம் உள்ள ரிமூவ் ஆப்ஷன் மூலம் நீக்கிவிடவும்.
அப்படி இல்லைனா ...இங்கிலீஷ் தேர்வு செய்து டிஃபால்ட் ஆக வைக்க உள்ள ஆப்ஷனை பயன்ப்படுத்தவும்.
இப்படி செஞ்சும் சரியாகலைனா ,எம்.எஸ் வேர்டு ரி இன்ஸ்டால் தான் செய்யனும்னு நினைக்கிறேன்.
இதான் காரணமா, செய்தால் சரியாகுமானு எல்லாம் உத்திரவாதம் இல்லை,எனக்கு தெரிஞ்சதை சொன்னேன் ,சரியானால் சந்தோஷம்!
குறிப்பு:
ஆப்ஷன் பக்கத்தில் எல்லா செட்டிங்க்ஸ் ,ஆப்ஷன் ,எடிட்டிங் சம்பந்தமா எல்லாம் இங்கே மாற்றி அமைக்கலாம்,அதற்கான மெனு தேர்வு செய்து செய்ய வேண்டியது தான்.
---------------
ஹி..ஹி தமிழ்மணம் டிபெண்டன்சி சிண்ட்ரோம் எல்லாருக்கும் இருக்கும் போல தெரியுதே அவ்வ்!
---------------------------------------
நானும் நேற்று பிட் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முடியாமல் குழம்பினேன். சரி எல்லோருக்கும்தான் பிரச்சனை என்பதில் பெரிய ஆறுதல்:))! ஓரிரு நாட்களில் சரிசெய்வார்கள் என நம்புவோம்.
/ஒரே கட்டுரையை பாதியை N.H.M. writer-லும், மீதியை கூகுள் பிரசாதத்தின் மூலமும் எழுதினால் இறுதியில் எல்லாம் ஒன்றாக இருக்குமா? /
இதற்கு ஒரு வழி இருக்கிறது. எதற்கும் ஒருமுறை வேலை செய்யுமா என பரிசோதித்துப் பார்த்து விட்டு மடல் செய்கிறேன்:)!
வவ்வாலுக்கு இதில் கொஞ்சம் நன்றி சொல்லியுள்ளேன்.
Post a Comment