Friday, January 24, 2014

704. நான் ஏன் இந்து அல்ல .... 6
*
தொடர் பதிவுகள்:   1 ......     2 .....     3 .....  4..........  5..............  6 ...........  7..................

*                                        4 ......      5 ......


*
 அத்தியாயம்  5

 இந்துக் கடவுள்களும் நாமும் :
நமது பெண் தெய்வங்களும்  இந்துக்களும்5
உண்மையில் வன்முறை என்பது இந்துத்துவத்தின் முக்கியச் சாதனம். இந்துக் கடவுள்கள் ஆயுத பாணிகளாக இருப்பதற்கு இதுவே காரணம்.


பார்ப்பனக்கோட்பாளர்கள் தெய்வீக ஊக்கம் அல்லது தெய்வீகக் கட்டளை எனும் பேரால் அடிமைத் தனத்தைத் திணித்து, அதை மீறுவது பாவம் என்றும் போதித்து வந்துள்ளனர். … ஆனால் எந்த மதமும் அடிமைகளைத் தொடர்ந்து அடிமைகளாக வைத்திருப்பதில் வெற்றியடையவில்லை.(114)

இந்துத்வா, தலித் பகுஜன்களையும் இந்துக்கள் என்றே கூறி வந்துள்ளது.ஆனால் அதே நேரத்தில் அந்தக் கடவுள்கள் எல்லாம் வெளிப்படையாகவே தலித் பகுஜன்களுக்கு எதிரானதாகவே இருந்து வருகின்றன.

தலித் பகுஜன்கள் எதிர்க்கும் போதெல்லாம் இந்தியப் பார்ப்பன சக்திகள் தங்கள் கடவுள் உணர்வுகளைக் கிளப்பி அதனை ஒடுக்குகின்றன. 1990ல் மண்டல் அறிக்கை நடைமுறைப்படுத்தப் பட்ட போது அகில இந்திய அளவில் இந்துக்கள் நடத்திய கலகம் இதற்கு ஒரு தெளிவான எடுத்துக் காட்டாகும்.

இந்தியாவின் ஆதிக்குடிகளான ஆதி திராவிடர்களை அழித்த அன்னிய ஆரிய நாடோடிகளின் தலைவனான இந்திரன் வேதங்களில் சிறப்பிக்கப் படுகிறான்.(115)
பிரம்மா .. என்ற இந்த அறிவுக் கடவுள், தலித் பகுஜன் மக்களைத் தாக்குவதற்குரிய ஆயுதம் உடையவனாக இருக்கிறான்.

இவனுடைய முகத்தில் பிறந்தவர்கள் பார்ப்பனர்கள் என்றும், மார்பில் சத்திரியர்கள் என்றும், தொடையில் பிறந்தவர்கள் வைசியர்கள் என்றும், பாதத்தில்  பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும் சொல்லிக் கொண்டு பார்ப்பனர்கள்  சாதிய ஏற்றத் தாழ்வை உருவாக்கினார்கள்.(116)
வேதங்கள் பார்ப்பனியத்தின் பல்வேறு விதமான கொடூரமான உணர்வுகளின் வெளிப்பாடாக உள்ளன.

இலக்கியங்கள்  அனைத்தும் தலித் பகுஜன்களுக்கு எதிரானது தான்.
பார்ப்பனர்கள் பெண்களைப் படிக்க எழுத அனுமதிக்காதபடியால் கல்விக்கரசி என்று அழைக்கப்படுகிற சரஸ்வதி எந்த நூலும் எழுதவில்லை.

பிரம்மா எல்லா விதத்திலும் பார்ப்பனன் என்பதோடு எல்லா விதமான உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருந்தவன்.(117)

தலித்பகுஜன்கள் கல்வி கற்காதவாறு பார்த்துக் கொள்வது பார்ப்பனப் பெண்களின் வேலையாகவும் , சொத்து சேர்ந்து விடாதபடி பார்த்துக் கொள்வது சத்திரியப் பெண்களின் வேலையாகவும் நியமித்தது பார்ப்பனீயம். இத்தகைய செயல்கள் தலித் பகுஜன்களைப் பார்ப்பனீய அமைப்பிற்குள் உள்வாங்கி, அதே நேரத்தில் இழிவானவர்களாக வைத்துக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.(120)

மலை சாதி மக்கள் இந்து மதத்தை ஏற்றுக் கொள்ளச் செய்ய பிரம்மா, விஷ்ணு போன்ற கடவுள்கள் போதுமானதாக இல்லை. எனவே சிவனையும், பார்வதியையும் கடவுளாக உருவாக்கி விட்டார்கள்.(122)

சிவசேனாவுக்கும், பாரதீய ஜனதாவுக்குமிடையே உள்ள பிரிவு என்பது சைவ, வைணவப் பிரிவுகளின் வெளிப்பாடாக இருந்தாலும் இராமன் உருவத்தைக் காட்டி ஓட்டுப் பெறுவதில் இருவரும் ஒன்றுபட்டே நிற்கிறார்கள்.

விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் புத்தரும் ஒருவராகப் பிற்காலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இந்து மதத்தின் உள்வாங்கல் தந்திரத்திற்கு இது ஒரு உதாரணம்.(123)

வாமன அவதாரம்: இந்து, பார்ப்பனீயத்தில் நம்பிக்கையற்று ஒரு சாதியற்ற சமுதாயத்தைப் படைக்க விரும்பிய தலித் பகுஜன் அரசனான பாலி சக்கரவர்த்தியைக் கொல்வதற்காகவே வாமன அவதாரம் எடுத்தததாகக் காட்டப்படுகிறது.

ஒரு தலித் பகுஜன் ராஜ்ஜியம் இந்துத் துரோகத்தால் வெல்லப்பட்டது.(124)

கிருஷ்ணன்: திடீரென்று கிருஷ்ணன் விஷயத்தில் மட்டும் ஏன் ஒரு சமரசம் செய்யப்பட்டது? சத்திரியனாகப் பிறந்திருந்தாலும் கூட கர்ணன் ஒரு தலித் பகுஜன் குடும்பத்தினரால் வளர்க்கப் பட்டது கண்டனத்திற்கு உள்ளான போது, இதே பின்னணியில் வளர்ந்த கிருஷ்ணன் ஏன் கண்டிப்படவில்லை.(124)  ... இதற்கெல்லாம் விரிவான விளக்கங்களும், விவாதங்களும் தேவை. (125)

உதாரணமாக 1999-93ல் நடந்த மண்டல் அறிக்கை அமுலாக்கப் போராட்டத்தையும், ராம ராஜ்ஜிய எதிர்ப்புப் போராட்டத்தையும் சொல்லலாம். இவற்றை மையமாக வைத்து பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தும் மையப்பகுதியில் தலித் பகுஜன்கள் பெருங் கலகங்களை நடத்தினார்கள்யாதவர்கள் முன்னின்று நடத்திய இந்தப் போராட்டத்தின் வாயிலாகத் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கும், பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கும் இடையே ஒரு கூட்டணி உருவானது. இந்தப் போராட்டத்தில் மண்டல் அறிக்கையைத் தயாரித்த மண்டல் (ஒரு யாதவர்) முலாயம்சிங் யாதவ், ராம்ராஜ்ஜியத்தை எதிர்த்து மண்டல் ராஜ்ஜியத்தை ஆதரித்த லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் இந்து பார்ப்பனியம் உருவாக்கிய மேலாண்மையை உடைக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் யாவரும் அறிந்ததே. இதற்கு எதிராக லோத்தா சாதியைச் சேர்ந்த கல்யாண்சிங், உமாபாரதி என்று இரு தலைவர்களைப் பார்ப்பனிய பாரதீய சனதா கட்சி தன் பக்கம் சேர்த்துக் கொண்டது. தேர்தல் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கல்யாண்சிங் முதல்வரானாலும், உண்மையான அதிகாரம் பார்ப்பனப் பண்டிதர்களிடமே இருந்தது.(126-7)

எப்படியாவது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடையே இருந்த உறவை உடைப்பதற்குப் பார்ப்பன இந்துத்துவ சக்திகள் சிந்தித்து ஒரு பயங்கரமான நிலை எடுத்தார்கள். அதன்படி பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதிக்கு ஆதரவளித்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் கூட்டை உடைத்தார்கள்.
யாதவர்களின் தலைமையிலான பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் அட்டவணைச் சாதியினருக்கும் இடையிலான கூட்டைச் சிதைப்பதற்கும்  பாரதிய சனதா பெரு முயற்சிகளை மேற்கொண்டது.

மாயாவதி முதலமைச்சரானதும் மதுராவில் உள் ஆலயம் பற்றியும், பாபர் மசூதி பற்றியும் பார்ப்பனர்களின் திட்டத்திற்கு எதிரான நிலை எடுத்தார். பார்ப்பனர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் பெரியார் ஈவேராவின் சிலையை லக்னோவில் நிறுவுவதில் வெற்றி கண்டார். தலித் பகுஜன்களுக்கு எதிரான இந்துக் கடவுள்களின் தன்மைகளை யாரைவும் விட பெரியார் அதிகமாகத் தோலுரித்துக் காட்டியவர். (127)


சத்திரியர்களைப் போல யாதவர்களையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள பார்ப்பனியம் தயாராக இருக்கவில்லை.

கிருஷ்ணனின் கதையாடல் தந்திரமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இளைஞனான கிருஷ்ணன் யாதவ கலாச்சாரத்தில் வளர்ந்தவன். ஆனால் வளர்ந்து பெரியவனான ‘அரசியல் கிருஷ்ணன் தன்னை யாதவனாக அடையாளம் காட்டிக் கொள்வதில்லை. அவனது செயற்பாடுகள் சத்திரியனுக்கு உரியதாக இருந்தது. பார்ப்பனத் தர்மத்தைக் காப்பதாகவே இருந்தது. ..  அவனுடைய மனைவிகள் அனைவரும் சத்திரியப் பெண்களாகவே இருந்தார்கள். கிருஷ்ணனுடைய எட்டு மனைவிகளும் சத்திரியர்களே.(128) 

கிருஷ்ண அவதாரம் என்பது பார்ப்பனிய அரசியலுக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
கிருஷ்ணனின் திட்டம் என்பது பலமான வருணாசிரம உடன்பாட்டு முறையை உருவாக்கவும், தலித் பகுஜன்கள் பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டு அதைப் பாதுகாக்கவுமான திட்டமுமாகும்.

மகாபாரதக் கதை கெளடில்யக் கற்பனையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. பொதுச்சொத்து தனிச்சொத்தான காலம் அது.

சிறுபான்மையரான பாண்டவர்கள் (பார்ப்பனர், சத்திரியர், வைசியர் கூட்டு என்பது மொத்தத்தில் பதினைந்து சதவிகிதம் தான்) பெரும்பான்மையினரான கெளரவர்களை எதிர்த்து நடத்திய யுத்தம். ஐந்து பாண்டவர்கள் நூறு கெளரவர்களை எதிர்த்து நடத்திய யுத்தம். நூறு கெளரவர்களும் பார்ப்பனியத் தர்மத்துக்கு எதிராக பெரும்பான்மை தலித் பகுஜன்களுக்கு ஆதரவாகவும், அதே சமயத்தில் ஐந்து பாண்டவர்களும் சிறுபான்மையினரான பார்ப்பனர்களின் தர்மத்திற்கு ஆதரவாகவும் நின்று நடந்த போராட்டம். நிலத்திற்க்கவும் அரசாட்சிக்காகவும் நடத்திய போராட்டத்தில் கிருஷ்ணன் சிறுபான்மையினருக்கே ஆதரவாகப் போராடுகிறான்.  அது மட்டுமல்ல, பெரும்பான்மையினருக்கு எதிராகச் சூழ்ச்சியையும், நயவஞ்சகத்தையும் நெறியற்ற பார்ப்பன தர்மங்களையும் பயன்படுத்துகிறான். சிறுபான்மையினரைவெற்றியடையச் செய்கிறான். பெரும்பான்மையான கெளரவர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள். (129)

ஒரு நல்ல முடிவிற்காக எந்த விதமான வழிமுறைகளையும் கையாளலாம் என்பது கிருஷ்ணனின் கொள்கை. சிறுபான்மையினரின் தர்மத்தை ஆதரிப்பது மூலம் வன்முறை, காட்டுமிராண்டித்தனம், துரோகம் ஆகியவற்றை கிருஷ்ணன் நியாயப் படுத்துகிறான். துரோகத்தனத்தால் தான் கர்ணன் கொல்லப்படுகிறான்.

... கிருஷ்ணன் எதிர்த்தரப்பினர் யாராக இருந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும் என்று வற்புறுத்துகிறான். ஏனெனில் அவர்கள் பார்ப்பனீயத் தர்மத்திற்கு எதிராகக் கலகம் செய்தவர்கள். பார்ப்பனக் கோட்பாட்டை ஆதரிக்கும் முகமாக வன்முறையையும், வர்ண தர்மத்தையும், கர்மவினைக் கோட்பாட்டையும் கீதையில் போதித்தான்.
நிலத்திற்காகவும் அரசதிகாரத்திற்காகவும் நடந்த இந்தப் போராட்டத்தில் பெரும்பான்மையினரைத் தோற்கடித்த பிறகு கீதையின் மூலம் ஒரு பலமான பார்ப்பனிய அமைப்பை உருவாக்கி, தலித் பகுஜன் எழுச்சியும் எதிர்ப்பும் வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. (130)

எப்படியோ விடுதலை பெற்ற இந்தியாவில், எழுச்சி கொண்ட தலித் பகுஜன் கருத்தியலுக்குப் பார்ப்பனிய காந்தியமும், நம்பூதிரிபாட்டின் கம்யூனிசமும் பிரச்சினையானது. செத்துக் கொண்டிருந்த இந்துத்துவத்தை நவீனப்படுத்தி உயிர்ப்பித்தவர் காந்தி. பார்ப்பன கம்யூனிஸ்டுகள் தம் பங்கிற்கு தலித்துகள் கிளர்ந்தெழுந்து விடாமல் அடக்கி வைத்தார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியத்தை காந்தி இந்து மயமாக்கினார். இந்து மயமாக்கப்பட்ட தேசியத்தைப் பார்ப்பன கம்யூனிஸ்டுகள் பார்க்கத் தவறினர். (131)

கிருஷ்ணனையும் கீதையையும் உருவாக்கிய பிறகு சத்திரியர்களுடைய ஆதிக்கமும் கூடத் தொடர இயலவில்லை. பார்ப்பனர்களுக்கு எதிராக ஒருவர் கூட சுட்டு விரலை நீட்ட முடியாதபடிக்கு வருணாசிரமம் கோலோச்சியது. வட இந்தியாவில் எல்லாப் பிரிவினரும் நம்பிக்கை இழந்த நிலையில் அடிமைகள் ஆக்கப்பட்டார்கள்.  பார்ப்பனர்கள் தலித் பகுஜன்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த தென்னிந்தியாவிலும் தங்களுடைய ஆதிக்கத்தைப் பரப்ப நினைத்தார்கள்.

ராமாயணக் கதையில் ... தலித் பகுஜன் ஆட்சியை வீழ்த்துவதற்கான சூழ்ச்சியை ரிஷிகள் வகுக்கவும் ராமன் அந்தப் பொறுப்பை நிறைவேற்றவும் முடிவெடுக்கப்பட்டது. விஸ்வாமித்திரனும், வசிஷ்டனுமே இராமாயணக் கதையை இயக்கிய முக்கிய சக்திகளாவர். இவர்கள் இராமனின் குல குருக்கள். அவர்களது வார்த்தைகளை யாரும் மீறக் கூடாது. (132)

தென்னிந்தியாவில் வாழ்ந்த தலித் பகுஜன் சமூகத்தைப் பார்ப்பன மயமாக்க மேற்கொண்ட நடவடிக்கைகளின் கதையே இராமாயணம். அதோடு பார்ப்பன ஆணாதிக்கத்தையும் உருவாக்க முனைந்த கதை. இந்த நோக்கத்தோடு தான் பார்ப்பன ரிஷிகள், ராமன், சீதை, செட்சுமணனோடு வந்து இங்குள்ள மலைவாழ் பழங்குடி மக்களின் பலராட்சியையும், சுதந்திர பகுஜன்களின் அரசுகளையும் அழித்துச் சிதைத்தார்கள். புகழ்பெற்ற தலித் பகுஜன் தலைவியாகிய தாடகையைக் கொன்று அவளது அரசைப் பார்ப்பன மயமாக ஆக்கினார்கள். புகழ் பெற்ற சம்புகனைக் கொன்று அவனது ஆட்சியைப் பறித்துக் கொண்டார்கள். கிஷ்கிந்தாவை ஆண்டு வந்த மலைவாழ் பழங்குடி இன அரசன் வாலி இராமனுடைய ஆதிக்க நடவடிக்கைகளுக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

இராமன் அதே மலைஜாதி தலித் பகுஜன்களை ஒன்று சேர்த்து எப்படியோ இலங்கையை அடைந்து இராவணனைத் தாக்கிக் கொன்றான்.  தலித் பகுஜன்களின் அரசு இராவணனோடு வீழ்ச்சியுற்று தென்னிந்தியா, பார்ப்பன ஆரியர்களால் வெற்றி கொள்ளப்பட்டது. இராவணன் இறந்த பிறகு பல பார்ப்பன ரிஷிகள் வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்குக் குடிபெயர்ந்தார்கள். சாதியற்ற சமூகமாக இருந்த தென்னிந்தியாவில் பார்ப்பனர்கள் நுழைந்து அதைச் சாதி அடிப்படையிலான சமூகமாக மாற்றி பார்ப்பனிய ஆணாதிக்கக் கருத்தியலைப் புகுத்தி தங்களுடைய அதிகாரத்தை நிலை நிறுத்தினார்கள்.

இவ்விதமாக தென்னிந்தியாவில் பார்ப்பனீயம் மேலிருந்து புகுத்தப்பட்டது. … தென்னிந்தியச் சிவில் சமூகத்தில் பார்ப்பனீயத்திற்குக் கடுமையான எதிர்ப்பு இருந்தது. … பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தை (13-ம் நூற்றாண்டில்) பசவா நடத்தினார். பதினேழாம் நூற்றாண்டில் வேமனாவின் இயக்கமும், வீரப்பிரும்மாவின் இயக்கமும், பின்னர் பூலேயின் இயக்கமும், நாராயண குருவின் இயக்கமும் உருவாயின.  இருபதாம் நூற்றாண்டில் அம்பேத்கர், பெரியார் இயக்கங்களும் உருவாயின. பார்ப்பன எதிர்ப்புணர்வு தென்னிந்தியாவிலிருந்து பரவியது. வட இந்தியாவில் உருவான பகுஜன சமாஜ் கட்சி என்பது தென்னிந்தியாவில் இருந்து பரவிய பார்ப்பன எதிர்ப்பு அரசியல் கலாட்சாரத்தின் நீட்சியாகும். (134)

(பகுஜன) பொச்சம்மா ஆலயத்தின் காரணமாக ஒரு சிறு இனக்கலவரம் கூட தோன்றியதாகச் சொல்ல முடியாது. இந்த மாதிரி கலகங்கள் இராமன், கிருஷ்ணன், நரசிம்மன், ஆலயங்களில் இருந்து தான் ஆரம்பமாகின்றன. அதே போல் முஸ்லிம்களின் மசூதியிலிருந்தும் தோன்றியிருக்கின்றன.(138)

கட்டமைசம்மா அம்மனின் கிருபையால் பயிர்கள் செழித்து வளர்கின்றன . இப்போது இந்த நம்பிக்கை சிறிது சிறிதாக்க் குறைந்து வருகின்றது. இப்போது பயிர்களின் தரம் ரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் பொறுத்ததே  என்று மக்கள் (நம்பத்)புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள். (139)

இந்து மதமே எல்லோருக்குமான மதம் என்று சொல்லும் போது தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியவர்களுக்குப் பொதுவான அம்சம் இந்து மதத்தில் என்ன இருக்கிறது என்று கேட்க வேண்டும்.(147)


*


No comments:

Post a Comment