Tuesday, February 04, 2014

709. யூதாஸின் நற்செய்தி .... 3

*




*


ஏழு பதிவுகள்: 



***




*


THE GOSPEL OF
JUDAS

Edited by
RODOLPHE KASSER
MARVIN MEYER
GREGOR WURST

 ***



யூதாஸின் நற்செய்தி


Passover-க்கு முந்திய 3 நாட்களில் ஏசு யூதாஸிடம் தனியாகப் பேசுகிறார். (19)

ஏசு உலகத்தின் அதிசய பக்கங்களைப் பற்றி தன் சீடர்களிடம் பேச ஆரம்பித்தார்.(20)

ஒரு நாள் சீடர்கள் ஜெபித்துக் கொண்டிருந்த போது அவர்களைப் பார்த்து ஏசு சிரிக்கிறார். ஏனென்று சீடர்கள் கேட்க, ஏசு, ‘நீங்கள் ஜெபிப்பது நீங்களாகவே செய்யவில்லை; ஆனால் இதன் மூலம் உங்கள் கடவுளைப் புகழ்வதாக நினைத்துச் செய்கிறீர்கள்’ என்றார்.
சீடர்களோ, ‘நீர் தானே கடவுளின் மகன்’ என்கிறார்கள். அதற்குப் பதிலாக ஏசு, ‘உங்களுக்கு எப்படி என்னைத் தெரியும்? உண்மையாகவே உங்களிடமிருந்து வரும் எவரும் என்னைத் தெரிந்து கொண்டவர்களில்லை’ என்றார். (21)

கோபமுற்ற தன் சீடர்களிடம் ஏசு, ‘உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? உங்களுள்ளே உள்ள கடவுள் உங்கள் ஆன்மாவிற்குக் கோபத்தைக் கொடுக்கிறார். உங்களில் யாராவது ஒருவர் தன்னை முழு மனிதனாக நினைத்தால் அவன் என் முன் வரட்டும்’ என்றார். எல்லோரும் எங்களுக்கு அந்த தைரியம் உள்ளது என்றார்கள், இருந்தும் யாரும் அவருக்கு முன் வரவில்லை. அப்போது யூதாஸ் அவருக்கு முன்னே வந்து நிற்கிறார். ஆனால் அவரும் ஏசுவை கண்ணோடு கண்ணாகப் பார்க்காமல்,  முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு நின்றார்.
யூதாஸ் ஏசுவிடம், ’நீர் யாரென்பதும், எங்கிருந்து வந்தவர் என்பதும் எனக்குத் தெரியும். நீர் என்றும் அழியாத பார்பெலோவிலிருந்து (Barbelo) வந்திருக்கிறீர். உம்மை அனுப்பியவரின் பெயரைச் சொல்லவும் எனக்கு எந்தத் தகுதியும் இல்லை’ என்றார்.(21,22)
(Barbelo is the divine Mother of all, who often is said to be the Forethought  (pronoia) of the Father, the Infinite One. )

இதன் பின் ஏசு யூதாஸ் இஸ்காரியோத்துடன் தனியே பேசுகிறார். ‘மற்றவர்களிடமிருந்து நீ தனித்திரு; உன்னிடம் என் ராஜ்ஜியத்தின் மர்மங்களைச் சொல்லுவேன்என்கிறார். (22)
அடுத்த  நாள் ஏசு தன் சீடர்களின் முன் தோன்றுகிறார். எங்களை விட்டு விட்டு எங்கே சென்று விட்டீர்கள் என்று கேட்ட தன் சீடர்களிடம், ‘இன்னொரு புனிதமான குழுவினரிடம் சென்று வந்தேன்என்கிறார்.

சீடர்கள், ‘எங்களை விடப் புனிதமான, உயர்வான அந்தக் குழு எங்கேயுள்ளது? அதுவும் இந்த உலகத்தைச் சார்ந்ததுவா?’ என்று கேட்கிறார்கள்.
ஏசு அவர்களைப் பார்த்து உரத்துச் சிரிக்கிறார். அவர்களை நீங்கள் யாரும் பார்க்க முடியாதென்கிறார். இதைக் கேட்டு சீடர்கள் குழப்பமடைந்து, பேச ஏதுமின்றி நிற்கிறார்கள். (25)

சீடர்கள் ஒரு பெரிய கோவிலைக் காண்கிறார்கள்; அதனை விவரிக்கிறார்கள்:
ஒரு பெரியகோவிலைத் தாங்கள் கண்டதாகவும் , அதன் பீடத்தின் முன் பன்னிரு குருக்கள் தங்கள் பலிப்பொருளோடு காத்திருப்பதாகவும் கூறினார்கள்.

ஏசு அந்த குருக்கள் எப்படியுள்ளனர் என்று கேட்கிறார்

அவர்கள் தங்கள் குழந்தைகளைப் பலியிட தயாராக உள்ளனர்; மற்றவர்கள் தங்கள் மனைவியர்களைப் பலியிடத் தயாராக உள்ளனர். அவர்கள் தங்களை மிகவும் தாழ்த்திக் கொண்டுள்ளனர். சிலர் மற்ற ஆண்களோடு உறவு கொண்டுள்ளனர்; சிலர் கொடுஞ்செயல்களோடு தொடர்பு கொண்டுள்ளனர்; பலர் பெரும் பாவங்களைச் செய்து கொண்டிருந்தனர்; சட்டத்துக்குப் புறம்பானவர்களாக இருந்தார்கள். பீடத்தின் முன்னாலிருந்த அனைவரும் உம்முடைய பெயரை முன்னெடுத்து வைத்தார்கள்.

இதைச் சொல்லி விட்டு சீடர்கள் மன உளைச்சலோடு, அமைதியாக நின்றார்கள்.(26)

யூதாஸ் ஏசுவிடம், ‘நானும் ஒரு காட்சி கண்டேன்’ என்று சொல்ல, அதைப் பற்றிச் சொல்ல யூதாஸை அழைக்கிறார்.

யூதாஸ் ஏசுவிடம், ‘என் காட்சியில் எல்லா சீடர்களும் என் மேல் கல்லெறிவது போல் கண்டேன். .. ஒரு பெரிய வீட்டின் முன் நான் நிற்கிறேன். அந்த வீட்டின் நடுவில் பெருங்கூட்டமாக மக்கள் நிற்கிறார்கள். என்னை அழைத்துச் செல்லும் என்று நான் உம்மை நோக்கி முறையிடுகிறேன்’ என்றார்.

ஏசு பதிலாக, ‘ நீ கண்ட வீட்டினுள் நுழைய சாதாரணமானவர்களுக்குத் தகுதியில்லை. அவ்வீடு மிகவும் புனிதமானவர்களுக்கானது’ கூறுகிறார்.

யூதாஸ் தன் விதியைப் பற்றி கேட்கிறார்:
... ‘நீ பதின்மூன்றாவது ஆளாக மாறி, ஏனையோரை ஆட்சி செய்வாய். இறுதி நாளில் நீ உயர்த்தப்படுவதால், மற்றவர்கள் உன்னைச் சபிப்பார்கள்.

அதன் பின் ஏசு யூதாஸிடம் பிரபஞ்சம், நரகம், ’புரட்சியாளன்’ என்ற பொருள் கொண்ட ‘நெப்ரோ’ என்ற சம்மனசு, சக்லாஸ் என்ற இன்னொரு விண் தூதர், மோட்சம் பற்றி விளக்குகிறார். 

மோட்சத்தினை ஆளும் பன்னிருவரில் ஐந்து பேரின் பெயர்களை ஏசு கூறுகிறார். முதல் தூதர் சேத்; இவர் கிறிஸ்து என்றழைக்கப்படுகிறார்.

மனிதனைப் படைத்தல்:
சக்லாஸ் தன் கீழ் உள்ள வானதூதர்களிடம்,’மனிதர்களைப் படைப்போம்’ என்கிறது. பின் ஆதாமும், ஏவாளும் படைக்கப்படுகிறார்கள். ஏவாள் மேகங்களின் ஊடே  ஸோ – Zoe – என்றழைக்கப்படுகிறாள்.

யூதாஸ் காட்டிக் கொடுத்தல்:
’ஆனால் நீ மற்றவர்கள் எல்லோரையும் தாண்டிச் சென்று, என்னை உடுத்துபவரை நீ பலியிடுவாய்’ என்று ஏசு சொல்கிறார்.

ஏசு ‘உன்னிடம் எல்லாவற்றையும் சொல்லி விட்டேன். உன் கண்களை வானை நோக்கி உயர்த்தி, மேகங்களையும், அதனூடே இருக்கும் ஒளியையும், விண் மீன்களையும் பார். உன்னை வழிநடத்தும் விண் மீனே உனது விண் மீனாகும்’ என்றார்.

யூதாஸ் ஏசுவைக் காட்டிக் கொடுக்கிறார்:
அவர் ஜெபிப்பதற்காக ஒரு பெரிய அறைக்குள் நுழைந்ததும் பெரிய குருமார்கள் முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அவர் ஜெபிக்கும் போதே அவரைக் கைது செய்ய பலர் தயாராக இருந்தனர். ஏனெனில் அவரை எல்லோரும் பெரும் போதகர்  என்று எண்ணிக் கொண்டிருந்தனர். 

அவர்கள் நேரே யூதாஸிடம் வந்து, ‘நீ இங்கு என்ன செய்கிறாய்? நீ ஏசுவின் சீடன் தானே?’ என்று கேட்டார்கள். 

யூதாஸ் அவர்கள் கூறிய படியே தனது பதிலைச் சொன்னார்.

அவருக்கு பணம் கொடுக்கப்பட்டது. அவர் ஏசுவை அவர்களிடம் கையளித்தார்.

**********************





*



10 comments:

Unknown said...

விவிலியத்தில் மற்ற நான்கு நற்செய்திகளைவிட, யூதாஸ் நற்செய்தி மிகவும் ஆழமான கருத்துகளையும், தத்துவங்களையும் கொண்டுள்ளது.
இதனை அறிமுகப்படுத்தி, மொழிபெயர்த்து தந்த உங்களுக்கு நன்றி.

சார்வாகன் said...

வணக்கம் அய்யா,
முந்தைய பதிவில் நீங்களும் ,சகோ வவ்வால் நடத்திய விவாதம் குறித்தும் சில விடயங்களை சொல்லி விடுகிறேன்.
யூதாஸ் சுவிசேசம் புரிய ஞானவாதக் கிறித்த‌வம் பற்றிய புரிதல் அவசியம்.
http://en.wikipedia.org/wiki/Christian_Gnosticism

ஞானவாதக் கிறித்துவம் என்பது இயற்கையை பெண் போல் உருவகித்து, மனதை கட்டுப்படுத்தி தியானித்து இயற்கையுடன் ஒன்றான சுந்த்னை கொள்ளுதல் எனலாம். இதன் பல வடிவங்கள், சூஃபி, அத்வைத தத்துவங்களாக பல இடங்களில் பரிணமித்தன.
பதிவின் இவ்வரிகள் இக்கருத்தினை மெய்ப்பிக்கின்றன.!!!!!!!!!!!
/யூதாஸ் ஏசுவிடம், ’நீர் யாரென்பதும், எங்கிருந்து வந்தவர் என்பதும் எனக்குத் தெரியும். நீர் என்றும் அழியாத பார்பெலோவிலிருந்து (Barbelo) வந்திருக்கிறீர். உம்மை அனுப்பியவரின் பெயரைச் சொல்லவும் எனக்கு எந்தத் தகுதியும் இல்லை’ என்றார்.(21,22)
(Barbelo is the divine Mother of all, who often is said to be the Forethought (pronoia) of the Father, the Infinite One. )/
divine Mother என்பதை இயற்கை அன்னை என பொருள் கொள்வதே சரி!!!

//இன்னொரு புனிதமான குழுவினரிடம் சென்று வந்தேன்’ என்கிறார்.//
எந்த குழு ஞானவாதக் குழுதான் ஹி ஹி!!!

அக்காலத்தில் புத்தகம் எழுதுவது என்பது மிகவும் கடினமான, அதிக செலவு பிடிக்கும் விடயம்.ஆகவே கருத்துகளை வலியுறுத்த புத்தகம் எழுதி கருத்து மோதல் நடத்துவர். மாற்று விளக்கம் கொடுப்பார்கள்.
அனைத்து சுவிசேஷங்களுக்குமே எழுதியவர்களை சரியாக அடையாளம் காண இயலாது.

ஆகவே 4 புதிய ஏற்பாட்டு சுவிசேஷம் கடவுளை அப்பா என்கிறது, மகன் இயேசு மூலம் மட்டுமே மீட்பு என்கிறது. ஞானவாதம் கடவுளை அம்மா என்கிறது!!!!,ஒவ்வொருவரும் இறைநிலை அடையலாம் என்கிறது!!

இரண்டுக்கும் ஆன போட்டியில் புதிய ஏற்பாட்டு சுவிசேசக் குழு அரசியல் அதிகாரம் கைப்பற்றியது. எதிர்க் குழுவினரை,புத்தகங்களை இல்லாமல் செய்தனர். என்றாலும் ஞானவாதப் பிரிவினர் அந்த புத்தகங்களை பாதுகாக்க முயற்சி செய்து ,இபோது கிடைத்த்வையே சாவுக் கடல் சுருள்கள்.
ஆகவே எந்த புத்த்கமும் சான்று அற்றவை என்னும் போது , ஞானவாதப் பிரிவினர் புத்தகத்தை மட்டும் சான்று உண்டா என வினவுவது சரியா?

அப்புறம் பாருங்கள் யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்தான் என்பதால் யூதர்கள் மீது பலமுறை இனப்படுகொலை நடத்தப் பட்டது.
இதனைத் தவிர்க்க யூதாஸ் நல்லவன் என காட்ட யூதர்கள் எழுதியது யூதாசின் சுவிசேசம் என சொல்ல முடியும்.இந்தப் பிரச்சாரம் தோல்வியில் முடிந்தது என்பதை சொல்லத் தேவையில்லை.
(cond)

சார்வாகன் said...

// (இந்தக் கஷ்டமெல்லாம் வேண்டாம் என்று தான் கடவுள் பயங்கர முன் ஜாக்கிரதையாக தன் கடைசி நபியை அனுப்பி வைத்துள்ளார் போலும்!!)

இதை ஒட்டியும் இன்னொரு கேள்வி: ஏசுவின் காலத்திற்குப் பின் வந்த நபியின் வாழ்க்கை, யுத்தம், கல்யாணம், வஹி வருதல், மரணம் எல்லாம் தேதிவாரியாக எழுதப்பட்டுள்ளதாக்க் கூறும் போது ஏன் கிறித்துவ வரலாற்றில் இது போன்ற “நாட்குறிப்புகள்’ இல்லாமல் போனது?! //

இதே போல் இஸ்லாமில் இரு நூற்றாண்டுகளுக்கு பிறகு தொகுக்கப் பட்ட ஹதித்(நபிமொழி)களில் , திரு முகமதுவின் சொல் செயல்கள் தேதிவாரியாக உள்ளது என்பதன் ஏற்க முடியுமா?

இதிலும் உம்மையாதுகளூம்(661_750)CE, அப்பாசித்துகளின்(750_1258 CE) கருத்து மோதலில் பல் ஹதிதகள் உருவாக்கப்பட்டன. அப்பாசித்துகள் உம்மையாதுகளை அழித்து ஆட்சியைக் கைப்பற்றிய பின் (800_900 CE)தொகுக்கப்பட்டன ஹதித்கள் என்றால் அவை யாருடைய கருத்தினை பிரதிபலிக்கும்???. ஷியாக்களின் ஹதித் தொகுப்புகள் வேறு விடயம் சொல்கின்ற‌ன.

நான் சொல்ல வருவது இரு( அல்லது அதற்கு மேல்) மத குழுக்கள் போட்டியிடும் போது பல மாறு பட்ட கருத்துகள் புத்த்கம் ஆகும்,அரசியல் அதிகாரம் கைப்பற்றும் குழு எதிர்க் குழுவின் கருத்துகளை இல்லாமல் செய்யும். தப்பிப் பிழைக்கும் கருத்துகள் சில சாவுக் கடல் சுருள்,சனா குரான் போல் கிட்டுகின்றன. இதனால்தான் நல்ல ஹதித்,யூதன் இட்டுக் கட்டிய ஹதித் என்ற மதப் பிரச்சார மழுப்பல்கள் வருவது ஆகும்.


நன்றி!!!!

சார்வாகன் said...

ஹதிதுகளை மறுக்கும் குரான் மட்டும் பிரிவினரின் கட்டுரை படியுங்கள்!!!

http://www.quran-islam.org/articles/part_1/history_hadith_1_(P1148).html

நீங்கள் எழுதியதை மறு பரிசீலனை செய்வீர்கள்!!!
Thank you

சீனு said...

யூதர்களின் மேல் காலங்காலமாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டு இந்த நூல் மூலம்ம் விலகுமா?

டிபிஆர்.ஜோசப் said...

ஏசுவுடன் இருந்தவர்களுள் ஒரு சிலர் எழுதி வைத்ததைத்தான் இன்றும் இறை வாக்கு என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். நபிகள் நாயகத்திற்கு இறைவன் கூறியவற்றைத்தான் குரானிலும் எழுதி வைத்துள்ளனர். குரானிலும் ஏசுவைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஏசு பிறந்து வளர்ந்து மரித்ததற்கு சரியான சரித்திர சான்றுகள் இல்லையென்றாலும் குரானில் காணப்படும் அவரைப் பற்றிய குறிப்புகள் அப்படியொருவர் இவ்வுலகில் வாழ்ந்திருந்தார் என்பதற்கு சாட்சியங்களாக உள்ளன. ஆனால் அவர் உண்மையிலேயே இறைவனின் மகனாக இருந்தாரா என்பது தான் சர்ச்சைக்குரிய விஷயம். யூதாசின் வேதாகமத்தை நானும் படித்திருக்கிறேன். அதை அவர்தான் எழுதினாரா என்கிற சர்ச்சையே இன்னும் ஓயவில்லை. இந்த சூழலில் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்ன :))

தருமி said...

//இந்த சூழலில் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்ன :)) //

சூழலை முற்றும் தெரிந்துகொள்வது தானே சரி, ஜோசப்.

//அதை அவர்தான் எழுதினாரா என்கிற சர்ச்சையே இன்னும் ஓயவில்லை//
ஐரினியஸ் என்ற பிஷப் எழுதிய புத்தகத்தில் இந்தப் பெயரும் நூலும் இடம் பெற்றுள்ளன என்ற தகவல் இனி வரும் பதிவுகளில் வருகிறது.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

வவ்ஸ்,
மன்னிக்கணும். இது இரண்டாம் பதிவாக இல்லாமல் மூன்றாம் பதிவாக இருந்திருக்க வேண்டும். தவறுதலாக இரண்டாம் பதிவை போடாது இதை முந்தி பதிவிட்டு விட்டேன். அப்பதிவை இப்போது மூன்றாம் பதிவாக இட்டு விடுகிறேன். இந்தப் பதிவுக்கு வந்த உங்கள் பின்னூட்டத்தை இங்கு இட்டு விடுகிறேன்.

பின்னால் இதனை மூன்றாம் பதிவு என்று எண்ணிட்டு, இப்போது போடப் போகும் பதிவை இரண்டாம் பதிவாக ஆக்கிவிடுகிறேன்.

குழப்பங்களுக்கு மன்னிக்க .......

தருமி said...

வவ்வால் said...
தருமிய்யா,

முந்தைய யூதாஸ் பதிவையே திரும்ப போட்டு இருக்கீங்களே , மறு ஒளிபரப்பா :-))

இலவச இணைப்பா யூதாசின் நற்செய்தி பிடிஎஃப் கிடைச்சது ,நானே தேடிப்படிக்கணூம்னு நினைச்சேன்,நன்றி!

# ஐரினியஸ் குறிப்பிட்டார் என்பது விக்கியில கூட சொல்லி தான் இருக்கு.

கிருத்துவ "தொன்மத்தில" எல்லாவற்றுக்கும் ஆதாரம் "இன்டெர்னல் சோர்ஸ்" தான் ,அதாவது பைபிள் மற்றும் அது சார்ந்தவங்களே ஆதாராம் :-))

எக்ஸ்டெர்னல் கிராஸ் ரெபரன்ஸே இல்ல்லை, ஒரு வேளை எனக்கு தெரியாம இருக்கலாம்.

# கிருத்து சொன்ன பல "எடுகோள்கள்" எல்லாம் ஏற்கனவே கிரேக்க,ரோமானிய தொன்மங்கள், மற்றும் தத்துவ ஞானிகள் பிரசங்களில் வேறு வகையில் வந்திருக்கு.

அவை எல்லாம் கிருத்துவின் காலத்துக்கு முன்னரே சொல்லப்பட்டவை.

கிருத்து என ஒருவர் இருந்தார் என்பதாக கொண்டாலும், முன்னரே உள்ளவற்றின் மூலம் அறியப்பெற்றும் சொல்லி இருக்கலாம், மேலும் அதனை வைத்தே ஆதாரமாக மற்றவர்களும் படைப்புகளை உருவாக்கியிருக்கலாம்..

# கிருத்துவின் காலத்துக்கு முன்னரே உருவான இறைமார்க்க ஞானியான புத்தரின் கதையிலும் ஒரு யூதாஸ் கதாப்பாத்திரம் உண்டு, தேவதத்தா என்பவர் ,புத்தரின் சீடராக இருந்து பின்னர் நானும் புத்தர் தான் என சொல்லிக்கொண்டு பிரசங்கம் செய்ததாக போகிறது.

கிருத்து உரையாடியது ,மற்றூம் சீடர்களுடன் பழகியது போலவே தான் புத்தரின் இறைஞான வாழ்க்கை போயிருக்கு. மேலும் புத்த மத நூல்களில் கூட புத்தர் என்பது பெயராக பாவிக்கப்படலை, தத்தகதா - வந்தவர் /சென்றவர் என்று தான் உள்ளது, புத்தரே அப்படித்தான் சொல்லிப்பாராம்.

ஏசுவின் உண்மையான பெயரென அறியப்படும் ஜோஷ்வா/ஜெஹோவா வை ஓரங்கட்டிட்டு ஏசுக்கிருத்து (காக்கும் இறைத்தூதர்) என எழுதியதும் அப்படியான ஒன்றாகவே கருத முடியும்.

புத்தர் ஞானம் பெற்ற பின் நீண்ட காலம் வாழ்ந்து நிறைய பிரசங்கம் செய்து ,பரப்பினார்,ஏசுவுக்கு அந்த வாய்ப்பில்லை, சுமார் 32 வயசு தான் சிலுவையில் அறையும் போது.

கிரேக்கம்,ரோமானியம், எகிப்திய மதக்கொள்கை, சொராஷ்ட்ரம்,புத்தம்,ஜைனம் , என கிருத்துவத்துக்கும் முன்பே பல தெளிவான எடுகோள்களை உருவாக்கி வச்சுட்டாங்க,,எனவே எல்லா பிற்கால ஞான மார்க்கத்திலும் அதன் சாயல் இருக்கலாம்.

கிரேக்க ரோமானியர்களே ,எகிப்தியர்களிடம் இருந்து தான் "கொள்கை" கடன் வாங்கியிருக்கனும், கிரேக்க,ரோமானிய மன்னர்களின் வரலாற்று ஆவணங்கள் எகிப்திய பூசாரிகளின் பாதுகாப்பில் தான் இருக்குமாம், மேலும் தேவ வாக்கு கேட்க எகிப்திய பூசாரிகளிடம் வருவார்களாம், இதெல்லாம் கிமுல இருந்தே இருந்த நடைமுறை.

இப்படி உலகம் முழுக்க இருக்க எல்ல மதத்தொன்மங்களிலும் ஒற்றுமைகள்,வேற்றுமைகள் எனக்காட்ட பல இருக்கு ,இதில் யாரு ஒரிஜினல்னு சொல்வது? பேசுறவங்க வாதத்திறமையை வச்சுத்தான் ஒரிஜினாலிட்டியை நிலைநாட்ட முடியும் அவ்வ்!

ஒரே ஒரு அவ்வ் தான் சொல்லி இருக்கேன் :-))

Post a Comment