Friday, June 06, 2014

753. கடவுளின் கட்டளைகள் பொய்த்துப் போனதோ?







*



 கடவுளின் வார்த்தைகள் கேள்விக்குரியதாகலாமா?

 குரானில் எந்த தவறான செய்திகளும் இல்லையென்பது நம்பிக்கையாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. விவாதங்களில் குரானில் ஒரே ஒரு தவறு காண்பித்தாலும் இது கடவுளின் வார்த்தையல்ல என்பதை ஒப்புக் கொள்வோம் என்பார்கள் நம்பிக்கையாளர்கள். ஆனால், அல்லாவால் குரானில் கொடுக்கப்பட்ட ஒரு சத்தியம் முறியடிக்கப்பட்டதை கீழே வரும் ஒரு வரலாற்று உண்மை சொல்கிறது.

மக்கா ஒரு பாதுகாப்பான நகரம்; அல்லாவினால் காக்கப்படும் நகரம் என்பது அல்லாவினால் குரானில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி.

குரான் 2:125 ’வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்’

 குரான் 29:67 ’அன்றியும் சூழ உள்ள மனிதர்கள் இறைஞ்சிச் செல்லப்படும் நிலையில் நாம் பாதுகாப்பான புனிதத்தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா?’’

 குரான் 3:97 ‘எவர் அதில் நுழைகிறாரோ அவர் பாதுகாப்பும் பெருகிறார்.’ 


ஆனால் இந்த பாதுகாக்கப்பட்ட நகரத்தில் முகம்மது போர் நடத்தியிருக்கிறார். முகம்மது நடத்திய போரிலேயே அந்த நகரத்தின் பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டுவிட்டது. அபயமளிக்கும் அந்த நகரம் பற்றிய அல்லாவின் வாக்குறுதி முகம்மதாலேயே பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது.

மேலும் … புஹாரி ஹதீஸ் எண் 112 ‘மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் எவருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை; எனக்குப் பின்னர் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை. ’

குரான்,ஹதீஸ் இரண்டுமே இப்படி கூறினாலும், 35 ஆண்டுகளுக்கு முன்பு மக்கா பள்ளி முற்றுகையிடப்பட்ட போது அல்லா எந்த பாதுகாப்புப் படையையும் அனுப்பவில்லை; சவுதி அரசே பிரான்ஸிலிருந்து ரகசிய தாக்குதல் படையையும் நரம்பை செயலிழக்கச்செய்யும் ரசாயனக் குண்டுகளையும் வரவழைத்தது என்பது தான் உண்மை.

1979 நவம்பர் 20 ஆம் தேதி, வெளியுலகிற்கு பரவாமல் இருக்க கடும் முயற்சிகளை சவுதி அரசு எடுத்தபோதிலும் நியூயார்க் டைம்ஸ் நாளேடு மக்கா பள்ளி ஈரானியர்களால் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியிட்டது. அமெரிக்க அரசு (ஜிம்மி கார்ட்டர்) சவுதியின் பாதுகாப்புக்கு ஒரு போர்க்கப்பலை அனுப்பிவைத்தது. ஒரு வார காலத்திற்கும் அதிகமாக நடைபெற்ற இந்த முற்றுகைப் போருக்கு எதிராக சவுதி ராணுவம் கவச வாகனங்களுடன் போராடியது. முற்றுகையை முறியடிக்க முடியாமல் நாட்கள் நீளவே பிரான்ஸிடம் உதவி கோரப்பட்டது.

 பிரான்சு படையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேர் மக்கா வந்தனர். இஸ்லாமியர்கள் மட்டுமே அங்கு நுழைய முடியும் என்பதால் அவர்கள் ஒப்புக்காக, தற்காலிகமாக இஸ்லாமியர் ஆக்கப்பட்டனர். அவர்கள் நவீன ஆயுதங்கள், குண்டுகளுடன் தாயிப் நகரில் சவுதி ராணுவத்திற்கு பயிற்சியளித்து, பின்னர் சுவர்களைத் துளையிட்டு நரம்புகளை செயலிழக்கச் செய்யும் குண்டுகளை வீசி … ஒருவழியாக போர் முடிவுக்கு வந்தது.

நான் தான் புதிதாக வந்திருக்கும் மஹ்தி – மெசைய்யா – என்று இப்போரை ஆரம்பித்த முகம்மது அப்துல்லா - - Mohammed Abdullah al-Qahtani போரில் இறந்து விட்டிருக்க, அவரது மைத்துனனுமான ஜுஹைமானும் எஞ்சிய சிலரும் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.

 இப்போர் அமெரிக்காவின் தூண்டுதலால் நடந்தது என்று உலகத்தின் பல பாகங்களில் அமெரிக்க அலுவலகங்கள் முன்னால் போராட்டங்கள் வெடித்தன. (இந்தியாவில் அப்போது எதுவும் நடக்கவில்லை; அப்போதிருந்த இஸ்லாமியர்கள் இப்போதைய வஹாபிகள் போல் இருந்திருக்க மாட்டார்கள் போலும்!)
மெசையா என்று தன்னை அழைத்துக் கொண்ட Mohammed Abdullah al-Qahtani 

 போராட்டக்காரர்கள் 63 பேர் பொதுவிடத்தில் சிரச்சேதம் செய்யப்பட்டனர். சவுதி அரசர் காலட் - Khaled – இப்போராட்டத்தை சாதாரணமானது என்று அறிவித்தார். இப்போராட்டத்திற்கு தீர்ப்பாக இஸ்லாம் மேலும் தீவிரமாக்கப்பட வேண்டும் என்றார். தினசரிகளில், தொலைக்காட்சிகளில் பெண்கள் வருவதைத் தடை செய்தனர். இசை தடை செய்யப்பட்டது. பள்ளிகளில் அதிகமான அளவு மதக் கல்வி சேர்க்கப்பட்டது. மேலை  நாகரிகம் தடை செய்யப்பட்டு பெண்களின் கல்வி முடக்கப்பட்டது. (அப்படியென்ன இந்த மதத்திற்கும், பெண்களுக்கும் ’ஏழாம் பொருத்தம்;!)

 காப்பாற்றப்பட்ட நகரம் என்று அல்லாவால் அழைக்கப்பட்ட இந்த நகரத்தில் எப்படி ஒரு போர் மூண்டது? குரான் முழுமையான வேத நூல் என்பவர்களின் நம்பிக்கைகளின் மீது எழும் ஒரு பெரும் கேள்வி இது.


 http://middleeast.about.com/od/terrorism/a/me081120b.htm http://en.wikipedia.org/wiki/Grand_Mosque_Seizure













*

நன்றி ... செங்கொடி


*

4 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
வரலாற்று பதிவு பல ஆதாரத்துடன் சொல்லியுள்ளீரக்ள்... அறியாத தகவலை அறிந்தேன் வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்

த.ம +1வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

குறும்பன் said...

இது இசுலாமை பலிக்க மேற்குலம் அதாவது காபிர்கள் செய்த சதி. மெக்கா அல்லாவினால் காக்கப்படும் நகரம் அதனால் தான் அதை நாசபடுத்த வந்தவர்கள் ஒழிந்தார்கள்.

Unknown said...

இஸ்லாமியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் ஒரு இடத்தை பாதுகாப்பது பெரிய விசயமே இல்லை. அந்நியர்கள் யாரும் அனுமதிக்கப்படுவது தடை செய்யப்பட்டதிலிருந்தே அல்லாஹ் மீது அவர்களே நம்பிக்கையிழந்துவிட்டனர்,அல்லது அல்லாவே பயந்துவிட்டான் என்றே பொருளாகும்...!!!

Post a Comment