Monday, June 23, 2014

767. மாமன்னர் அசோகர் - சில ஆச்சரியங்கள் - 3






*

மக்களைக் காப்பாற்றுவது மட்டுமே என் முழு நேரத் தொழில் என்று ஒரு மன்னன் பறை சாற்றுவது மிகவும் அதிசயமான விஷயமே. அதனை எப்படி சாத்தியப்படுத்து என்பதையும் அதன் வழி முறைகளையும் வகுத்தது அவனது முழு ஈடுபாட்டையே காண்பிக்கிறது.

மக்களைக் காப்பாற்றுவது என்று சொல்வதே ஒரு அரசனின் பெரும் மாண்பு என்கிறோம். ஆனால் அசோகர் அதையும் தாண்டி தன் நாட்டிலுள்ள விலங்குகளின் மீதும் இத்தனை கரிசனம் கொள்வது, அதுவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவனுக்கு ஏற்பட்ட முனைப்பு இன்றும் ஆச்சரியான விஷயமே!

என் நாட்டு மக்களுக்கு சேவை செய்வேன் என்பதை விட அருகிலுள்ள பக்கத்து நாட்டு மக்களின் ந்லனையும் ஏற்றுக் கொள்வது பெரும் ஆச்சரியமே.

அத்தனை காலத்திற்கு முன்பே மருந்துச் செடிகள் வைத்துப் பேணுவதும் அவைகளை நாடெங்கிலும் பரப்பி மக்கள் நலனுக்கு முனைந்த அவனது ஆர்வம் மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்றாகும்,

*****

மக்களின் மன்னன் ……

கடவுளின் அன்பிற்குரிய மன்னன் பியாதாசி இவ்வாறு கூறுகிறார்:

முன்பு அரசியல் விவகாரங்கள் பகிரப்படவில்லைஅரசனிடம் எந்த நேரத்திலும் அறிக்கைகள் கொடுக்கப்படவில்லை. ஆனால் இப்போது நான் இந்த ஆணையை அறிவிக்கிறேன்எந்த நேரமாயினும், நான் உணவு உண்டு கொண்டிருக்கும்போதோ, அந்தப் புரத்தில் இருக்கும்போதோ, படுக்கையறையில் இருக்கும்போதோ, ரதத்திலோ பல்லக்கிலோ, தோட்டத்திலோ இருக்கும்போதோ, எங்கே நான் இருந்தாலும் எந்த செய்தியும் எனக்கு உடனே தரும்படி அதிகாரிகளை நியமித்து மக்களின் நிலைமை எனக்கு உடனே வரும்படியும், நான்  எங்கிருந்தாலும் உடனே ஆவன செய்யவும் முடியும்

எப்போது நான் கொடுக்கும் நன்கொடையோ, பொது அறிவிப்புகளோ அல்லது எப்போது எந்த அவசரவேலையும் மஹாமத்திரர்கள் மேல் சுமத்தப்படும்போது ஏதேனும் அதிருப்தியோ, வாக்குவாதமோ ஏற்பட்டால் அது உடனே எனக்குத் தெரியப்படுத்த வேண்டும்இதற்காகவே நான் ஆணையிட்டிருக்கிறேன்எந்த வேலையையும் உடனே முடிக்கவும், என்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்வதிலும் எனக்கு எப்போதுமே திருப்திவராது.  

உண்மையிலேயே, எல்லோரின் நலனுமே எனது கடமை, இதற்காக என்னை வருத்திக் கொள்வதிலும், வேலைகளை உடனே முடிக்கவும் தவறமாட்டேன்மக்களின் நலனை மேம்படுத்துவதைத் தவிர வேறு எந்த வேலையும் பெரிதல்லநான் எடுக்கும் முயற்சிகள் எதுவாயினும் அவை எல்லோருக்கும் வாழக்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு வரவும், எல்லோரையும்  சொர்க்கத்திற்கு இட்டுச் செல்வதுமே என் கடமையாகத் தானிருக்கும்.

            ஆகவே இந்தக் கல்வெட்டு ஆணை நிலைத்து நிற்க இங்கு எழுதப்படுகிறதுஎனது மகன்களும், பேரன்களும், கொள்ளுப் பேரன்களும் இதை மக்களின் நலனுக்காக நிலை நிறுத்தவே இந்த ஆணை. ஆயினும்  இவைகளை பெரும் முயற்சியோடு மட்டுமே செய்யமுடியும்.


*****

                  மக்களை மட்டுமல்ல மாக்களையும் காப்பாற்றிய மன்னன்                                                                                                                                                                 கடவுள்களின் அன்பிற்குரிய மன்னர் பியாதாசி இவ்வாறு பேசுகிறார்:                                                                                                                                                                     எனது பட்டமளிப்பிற்குப் பிறகு இருபத்தி ஆறு ஆண்டுகள் கழித்த பிறகு  பல விலங்குகள் பாதுகாக்கப்படவேண்டுமென்று ஆணையிடப்பட்டதுகிளி, மைனா , அருணா, சிகப்பு வாத்து, நாட்டுவாத்து, நந்திமுக்கா, ஜெலாட்டா, வவ்வால், பெண் எறும்பு, நன்னீர் ஆமை, எலும்பில்லா மீன், வேதராயக்கா கங்காபுபுதாகா, சங்கியா மீன், ஆமை, முள்ளம்பன்றி, அணில், மான், காளைமாடு, ஓகபிந்தா, காட்டுக்கழுதை, காட்டுப் புறா, மாடப்புறா, உண்ணமுடியாத, பயன்படுத்த முடியாத நான்கு கால் விலங்குகள்  இவை அனைத்தும் பாதுகாக்கப்பட்ட விலங்குகள்குட்டியிட்டு பால்கொடுக்கும் ஆடுகள், பெண் பன்றிகள், அதேபோல் ஆறு மாதம் தாண்டாத குட்டிகள் பாதுகாக்கப்பட்டவை. சேவல்களின் ஆண்மை மாற்றப்படக்கூடாதுஉயிரினங்களை மூடி நிற்கும் உமி எரிக்கப்படக் கூடாதுகாடுகளில் மரங்கள் காரணமின்றியோ, அல்லது காட்டுப் பிராணிகளைக் கொல்லவோ, எரிக்கவோ கூடாது. மிருக இனத்தின் உணவிற்காக மாற்று உயிர் கொல்லப்படக் கூடாது. மூன்று காட்டூர்பாசிகள் சமயத்திலும் (மழைக்காலம்) மூன்று திசாக்களிலும் பதினான்காம் பதினைந்தாம் உபோசத்துகளில் மீன்கள் கொல்லப்படவோ விற்கப்படவோ கூடாதுஇதே நாட்களில் யானையும், மீன்களும் பாதுகாக்கப்பட்ட இடங்களில் அவைகள் கொல்லப்படாமல் காக்கப்பட வேண்டும்ஒவ்வொரு பதினான்கு நாட்களில் எட்டாவது நாளும், மற்றும் பதினான்காவது பதினைந்தாவது திகா, புனர்வாசு மூன்று கட்டுர்மாசிகளும் மற்ற நல்ல நாட்களிலும், காளை மாடுகளை விதையடி செய்யக்கூடாதுஅதேபோல் வழக்கமாக விதையடி செய்யப்படும் ஆடுகள், பன்றிகள் போன்ற விலங்கினங்களும் விதையடிக்கப்படக் கூடாது.   திசா நாட்கள் புனர்வாசு, காட்டுர்மாசிஸிக் நாட்களில் குதிரையும் காளைகளும் குறியிடப்படக்  கூடாது.                                                                                                                                                                                                                          கடவுள்களின் அன்பிற்குரிய மன்னன் பியாதாசி சொல்கிறார்சாலைகளில் அரச மரங்களை நட்டு மக்களுக்கும விலங்குகளுக்கும் நிழல் கிடைக்கும்படி செய்துள்ளேன்இவைகளோடு மாமரங்களையும் நட்டு வளர்த்துள்ளேன். எட்டு குரோசாவிற்கு ஒரு முறை கிணறுகள் வெட்டி பயணிகள் தங்குமிடங்கள் கட்டி, மேலும் பல இடங்களில் மனிதர்க்கும், விலங்குகளுக்கும் நீர்த் தொட்டிகள் அமைத்துள்ளேன்ஆனால் இவையெல்லாம் மிகச் சின்ன விஷயங்கள். மக்களை மகிழ்ச்சிப்படுத்த முந்திய மன்னர்கள் பலரும் இதைச் செய்துள்ளனர்ஆனால் மக்கள் தர்மத்தைக் கடைப்படிக்க வேண்டும் என்பதற்காகவே நான் இச்செயல்களைச் செய்துள்ளேன்


 HERBAL GARDEN

கடவுள்களின் அன்பிற்குரிய மன்னன் பியாதாசியின் நாட்டிலும், எல்லையைத் தாண்டியுள்ள சோழர்கள், பாண்டியர்கள், சத்தியப் புத்திரர்கள், கேரளா புத்திரர்கள் போன்ற மக்களும், தாமிரபரணி பகுதியும், கிரேக்க மன்னன் அன்டியோக்கஸ் அரசாளும் மக்களும், அன்டியோக்கஸிற்கு அருகிலுள்ள மன்னர்களின் மக்களும் கடவுள்களின் அன்பிற்குரிய மன்னன் பியாதாசி தரும் இரு மருத்துவ வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்மனிதர்களுக்கும் விலங்கினங்களுக்குமான மருத்துவம் தரப்படுகிறதுஎங்கெங்கு மனிதர்களும் விலங்குகளுக்கும் தேவையான மருத்துவச்  செடிகள் இல்லையோ அவை அங்கே தருவிக்கப்பட்டு வளர்க்கப்படும். எங்கெங்கு மருத்துவ வேர்களும், பழங்களும் கிடைக்கவில்லையோ அவைகளும் தருவிக்கப்பட்டு வளர்க்கப்படும். மனிதர்க்கும் விலங்குகளுக்கும் உதவ சாலைகள் தோறும் பல கிணறுகளை வெட்டி, மரங்கள் வைத்துள்ளோம்.   







*

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

வியப்பு மேலிடுகிறது ஐயா

Post a Comment