Wednesday, October 22, 2014

794. தமிழ்மணம் மாறுமா ... மாற்றுவோமா?

*

தமிழ்மண பதிவர்கள் அனைவருக்கும் (தமிழ்மண பொறுப்பாளர்களுக்கும் சேர்த்து) தீபாவளி வாழ்த்துகள்.

 தமிழ்மணத்தில் வரும் சில பதிவுகள் மிகவும் கீழ்த்தரமானவைகளாக இருப்பதைப் பற்றி பல பதிவர்கள் பல முறை தொடர்ந்து எழுதியும் இது வரை தமிழ்மண பொறுப்பாளர்கள் எந்த வித எதிர்வினையும் செய்யவில்லை. ஒரு அடிப்படை நாகரீகம் கருதியாவது ஏதாவது ஒரு பதிலோ, பதிவோ கொடுத்திருக்கலாம். அந்த அளவு basic courtesy கூட காண்பிக்காமல்  பதிவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் ‘மரியாதைக்கு’  மிக்க நன்றி. அந்த அளவில் தான் நமது உறவும் இருந்து வந்திருக்கிறது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் தான்.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.


கீழ்த்தர பதிவர்களையும் பதிவுகளையும் எதிர்க்கும் பதிவர்களுக்கு மட்டும்:


எனக்குத் தோன்றும் சில வழிகள்:

1.  புதிய ஒரு பதிவுத் தொகுப்பை - compiler - ஆரம்பித்து, தமிழ்மணத்தின் போக்கை எதிர்க்கும் பதிவர்கள் அனைவரும் அங்கே சென்று விடலாம். இதற்குத் தேவை தொகுப்பை தயாரிக்கத் தெரிந்த சில பதிவர்கள்.  யாரும் அப்படிப்பட்ட பதிவர்கள் இருக்கிறீர்களா? ஆட்டைக்கு வருகிறீர்களா?

2. மேலே சொன்னது நடக்கும் வரை ஏதாவது ஒரு நாளைக் குறிப்பிட்டு (1.11.14 ???)அன்று பதிவர்கள் எல்லோரும் பதிவு எதுவும் போடாமல் ஒரு நாளை ‘மொட்டை’ நாளாக ஆக்கி விடலாம்.

3. தமிழ்மணப் பொறுபாளர்களின் கேட்காத காதுகளுக்கு இச்செய்தி போய்ச் சேர வேண்டும். ஆகவே இப்பதிவையோ, இது போன்ற பதிவையோ முதலில் உங்கள் இணைய இதழில் எல்லோரும் ஏதாவது ஒரு நாளில்  ( 28.10.14) வெளியிடுங்களேன். PLEASE ......


இச்செய்தி பரவ முதலில் சில பதிவுகள் இதை மறுபதிப்பிடலாமே! மறு பதிவிடுவோர் பின்னூட்டத்தில் அதன் இணைப்பைக் கொடுத்தால் நலம்.


Ref: -  http://vishcornelius.blogspot.com/2014/09/blog-post_11.html 
           http://muudarulakam.blogspot.com/2014/10/blog-post_21.html
            http://www.pulavarkural.info/2014/10/blog-post_22.html

திரு.காசி,

அழகாகப் பெற்று, பண்புடன் வளர்த்த  உங்கள் ’குழந்தையை’த் தவறான ஆட்களிடம் இப்படி ஒப்படைத்து விட்டீர்களே?! *

22 comments:

‘தளிர்’ சுரேஷ் said...

நல்ல யோசனை! பூனைக்கு மணி கட்ட நான் ரெடி! மற்றவர்கள் ஒத்துழைப்பார்களா?

தருமி said...

நன்றி தளிர். அப்படியே இதே போன்ற பதிவொன்றை நீங்களும் இட்டு விடலாமே1

தருமி said...

தளிர்
நூற்றுக்கும் மேல் பதிவர்கள் இதைப் பார்த்தும் நீங்கள் மட்டுமே ஒதுவரை ஒத்துழைத்துள்ளீர்கள்.

முயற்சிப்போம் ........

உலகளந்த நம்பி said...

பலனை எதிர்பாராமல் தமிழ்ப்பணி செய்கிறது தமிழ்மணம் என்பதில் சந்தேகமில்லை. இன்னுமொரு மாதம் போல அவகாசம் தரலாம் என்பது என் பணிவான கருத்து.

இன்றைய பதிவுகளில் ‘அது’ மாதிரி பதிவுகள் இல்லை என்பதைக் கவனியுங்கள். இதற்குத் தமிழ்மணத்தின் நடவடிக்கைகூடக் காரணமாக இருக்கலாம்.

மாறுதல் ஏதும் நிகழாவிட்டால், தங்கள் யோசனையை அமல்படுத்தலாம் என்பது என் எண்ணம்.

தவறாக ஏதும் சொல்லியிருந்தால் மன்னியுங்கள் அய்யா.

நன்றி.
kari kalan said...

தருமி அய்யா, பூனைக்கு மணி கட்ட நானும் தயார். என்ன செய்யலாம் என்று முடிவு செய்து தெரிவித்தால், நானும் பங்கேற்கிறேன். தமிழ் மணத்தை சுத்தப் படுத்துவோம். தமிழ்மண நிர்வாகிகளை தட்டி எழுப்புவோம்.

kari kalan said...

பின் தொடர......

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் செய்ய வேண்டிய பணி ஐயா
தங்களின் வழியில் நானும்

கரந்தை ஜெயக்குமார் said...

தம 2

தருமி said...

//இதற்குத் தமிழ்மணத்தின் நடவடிக்கைகூடக் காரணமாக இருக்கலாம்.//

கரடியா கத்திக்கிட்டு இருக்கோமே... basic courtesy என்றால் ஒரு positive reaction செய்யலாமே...!

விசுAWESOME said...

தருமி ஐயாவிற்கு "தீப ஒளி" வாழ்த்துக்கள். சில நாட்களுக்கு முன் நான் இந்த விஷயத்தை பற்றி ஒரு பதிவு வெளி இட்டேன். அந்த பதிவு வந்த பிறகு இந்த மாதிரியான பதிவுகள் வருவது நிறுத்த பட்டது. தற்போது கடந்த சில நாட்களாக இவைகள் மீண்டும் தொடர்கின்றன.

என் அறிவிற்கு எட்டிய ஒரு விண்ணப்பம்.: இன்னும் ஒரு வாய்ப்பு தரலாம். இவர்கள் திருந்தாவிடில் நாம் ஒரு தளத்தை ஆரம்பித்து நம் பதிவுகளை அங்கே போடலாம்.
இந்த விஷயத்தில், உமது ஆணை எமது கடமை.

Bagawanjee KA said...

இன்று முதல் தமிழ்மணத்தில் மாறுதல் தெரிகிறது பலான பதிவுகள் இல்லை !

தருமி said...

// இந்த விஷயத்தை பற்றி ஒரு பதிவு வெளி இட்டேன்//


இதன் தொடர்பை தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. கொஞ்சம் தொடுப்பைத் தாருங்கள்.
உங்கள் பதிவு. கோடங்கி பதிவு, உலகளந்த நம்பி பதிவு இவைகள் எல்லாமே உந்து சக்தியானதால் இப்பதிவை இட்டேன். நன்றி.

விசுAWESOME said...

செப் 11ம் தேதி அன்று நான் எழுதிய பதிவு. அதை அன்றே தமிழ் மனதில் இணைத்தேன், அங்கேயும் வந்தது. அது வந்த பின் 2 நாட்களுக்கு அசிங்கம் எதுவும் இல்லை, பின்னர் மீண்டும் "பழைய குருடி, கதவை திறடி" கதை ஆரம்பித்தது. பதிவின் தலைப்பு : "பிரிவோம் - சந்திப்போம்" நேரமோ?

http://vishcornelius.blogspot.com/2014/09/blog-post_11.html

தருமி said...

கோடங்கியின் தொடுப்பு கிடைத்தால் அதையும் சேர்த்து விடுவேன்

Amudhavan said...

உங்கள் குரலுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. தமிழ்மணம் 'அப்படிப்பட்ட' பதிவுகளுக்குத் தடை விதித்துவிட்டதாக அறிவித்திருக்கிறது. நல்ல சமயத்தில் குரலெழுப்பி சாதித்திருக்கிறீர்கள்.

தருமி said...

http://blog.thamizmanam.com/archives/405#comment-53222

தமிழ்மணத்தில் வெளிவரும் பதிவுகளில் சில பதிவுகள் தரமற்ற தகவல்களை வெளியிடுவதாக பதிவர்கள் எங்களிடம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அத்தகைய பதிவுகள் தமிழ்மணத்தில் இருந்து தற்பொழுது நீக்கப்பட்டுள்ளன‌.
தமிழ்மணம் தானியங்கியாக பதிவுகளை திரட்டும் ஒரு மென்பொருள். தமிழ்மணத்தில் உள்ள எந்தப் பதிவும் மட்டுறுத்தப்படுவதில்லை. தானியங்கியாக பதிவுகள் திரட்டப்படும் சூழலில் அனைத்து பதிவுகளையும் நிர்வாகத்தால் கவனிக்க முடியாத சூழ்நிலை சில நேரங்களில் நேர்ந்து விடுகிறது. இந்த கவனக்குறைவுக்கு பதிவர்களிடம் தமிழ்மணம் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது.
அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு ஆக்கப்பூர்வமான தகவல்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் இடமாக தமிழ்மணம் இருக்க வேண்டும் என்பதே தமிழ்மணத்தின் நோக்கம். தரமற்ற சிலப் பதிவுகளால் தமிழ்மணம் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நேர்ந்த சங்கடங்களுக்கு தமிழ்மணம் வருந்துகிறது.
தமிழ்மணம் மேல் அக்கறை கொண்டு தமிழ்மணத்தின் நிர்வாகத்திற்கு இந்தப் பிரச்சனையை கொண்டு வந்த அனைத்து பதிவர்களுக்கும் தமிழ்மணம் தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
நன்றி,
நிர்வாகம்,
தமிழ்மணம்

கரந்தை ஜெயக்குமார் said...

தரமற்ற பதிவுகளை நீக்கிய தமிழ் மணத்தினைப் பாராட்டுவோம்

சார்லஸ் said...

தருமி சார்

நல்ல பதிவர்கள் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டீர்கள் அல்லவா ! இனிமேல் கீழ்த்தரமான பதிவுகள் வாராது என நம்புவோம்.

உலகளந்த நம்பி said...

மிக்க நன்றி தருமி அய்யா.

தருமி said...

உலகளந்த நம்பி
//இளமை ஊஞ்சலாடும் 70 வயதுக் கிழவனான என் தேகத்தைச் சூடேற்றி ...//

நானும் இதே மாதிரி 70 வயதுக்காரன் தான். பின் ஏன் நமக்குள் “அய்யா” பட்டங்கள்?

உலகளந்த நம்பி said...

நன்றி நண்பரே...மிக்க நன்றி.

தருமி said...

உலகளந்த நம்பி ,

அப்படி வாங்க வழிக்கு ...!

Post a Comment