Monday, September 14, 2015

864. என் நூலைப் பற்றி வந்த பின்னூட்டக் கருத்து ... 4





*


 என் நூலைப் பற்றி வந்த பின்னூட்டக் கருத்து 


மதங்களும் சில விவாதங்களும் என்ற தலைப்பிட்ட தங்கள் நூலை விரும்பி, சுவைத்து படித்து அகமகிழ்ந்தேன். ஒரு கருவை வடிவமைத்து, எழுதி, நேர்த்தியான உரைநடையால் வாசிப்பவரின் கவனத்தை ஈர்தது நூலின் மையக் கருத்தினை பதிய வைப்பது எளிதான முயற்சி அன்று. ஆனால் நீங்கள் அதனை நேர்த்தியாக, செவ்வனே செய்து தமிழில் தங்கள் ஆளுமையை நிலைநாட்டி உள்ளீர்கள். நல்ல கருத்து, நல்ல முயற்சி, நல்ல நோக்கம். நீங்கள் ஒரு நல்ல சிந்தனைவாதி என்பதும் நல்ல படைப்பாளி என்பதும் யாம் அறிந்தது, ஒரு நல்ல தத்துவ ஞாநியும் கூட என்பதை இப்போது அறிகிறோம். வாழ்த்துக்கள். தமிழில் இது போன்ற மூலப்படைப்புகள் அரிது. இது போன்ற தங்கள் முயற்சிகள் மேன்மேலும் வளம் பெற வாழ்த்த வயதில்லை...hats off sir

RAM MOHAN 





 *

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் நூலினைப் படித்துக் கொண்டிருக்கிறேன் ஐயா
நன்றி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தங்களின் நூலைப் பற்றி வரும் கருத்துக்களைப் படித்து வருகிறேன். வாசகர்களின் இவ்வகையான கருத்துக்களே நூலின் மதிப்பினை உயர்த்தும். நன்றி.

Post a Comment