Monday, June 13, 2016

894. அமினா - (சந்தேகமான பார்வையோடு) ஒரு ஆய்வு







*

Abu Khalid's Review on AMINA in his facebook


*

 'ஆமினா' என்ற 368 பக்க நாவலை இரண்டே தினங்களில் படித்து முடித்தேன்..

ஒரு நைஜீரிய முஸ்லிம் பெண் போராளியின் உணர்ச்சிகரமான வாழ்க்கைக் கதையாக இது வரையப்பட்டிருக்கிறது.. நாவலாசிரியர்: முஹம்மது உமர். தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் : தருமி.[?]

 இஸ்லாத்தின் அடிப்படைகளான சமத்துவத்தை.. நீதிபோதத்தை..அன்பு, கருணை..மனிதநேயத்தை.. சாந்தி..சமாதானத்தை.. எல்லாம் தூக்கி ஓரத்தில் போட்டுவிட்டு.. சாரற்ற சக்கையாக.. உயிரற்ற பிணமாக.. தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற கிரியைகளை மட்டும் சடங்கு போல செய்து வருகிற முஸ்லிம் சமூகம்.. அதனால் பாதிக்கப்படுகிற மக்கள்.. அதிலும் குறிப்பாக பெண்கள்.. என்று சமூக அவலங்களை இந்த நாவல் நம்முடைய பார்வைக்கு கொண்டு வருகிறது..

மேற்கத்திய ஆதிக்க சக்திகளால் நிர்மாணிக்கப்பட்ட பொம்மையாட்சி.. அதன் மூலம் நாட்டின் இயற்கைவளங்கள் சுரண்டப்படுவது.. அதன் காரணமாக நாட்டின் பெரும்பான்மை மக்களை ஏழைபாழைகளாக.. அரசு வரிகளை சுமப்பவர்களாக ஆக்கப்படுவது.. அதே சமயம் ஆதிக்க சக்திகளின் அடிவருடிகளான ஆளும் வர்க்கமோ, கார்பரேட் பண முதலைகளோ கொஞ்சமும் இறையச்சமோ, மனசாட்சியோ இல்லாமல்.. தவறாக சேர்க்கப்பட்ட பெரும் செல்வத்தில் கொழிப்பது.. இவற்றையெல்லாம் இஸ்லாத்தின் பெயராலேயே நியாயப்படுத்துவது..இவற்றையெல்லாம் இந்த நாவல்.. வன்மையாக கண்டிக்கிறது..

 ஆங்காங்கே இஸ்லாத்தின் உண்மையான கொள்கைகளை எடுத்து வைத்தாலும்.. அவை முழுமையான முறையில் சொல்லவில்லை என்கிற குறை தவிர..[ இதனை தருமியே மெனக்கெட்டு செய்திருக்கலாம்.!] நாவல் நன்றாகவே பெயர்தாங்கி முஸ்லிம்களை வறுத்தெடுக்கிறது.. +




*




4 comments:

வேகநரி said...

முஹம்மது உமர் நைஜீரிய இஸ்லாமிய பெண் போராளி பற்றிய தகவல்களுக்கு மிகவும் நன்றி.
இந்தியாவில் பெரும்பாலோர் பொருட்படுத்தாம விட்டாலும், நீங்களும் என்னை மாதிரி ஜரோப்பா கால்பந்து தொடரை பார்த்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

தருமி said...

வேகநரி,

unable to watch. even the usual sports channels are not available now to me... pestering the cable man for that. i could not see even the french open. so sad nadal left in the middle and serena still fails to make a very much expected victory.

regarding euro open watched some mathces since i am now in chennai... for three days. saw crotia vs turkey. latter was so lucky with its cross bars. saw ireland and sweden. self goal by ireland helped sweden to tie the match. saw tow more matches too.
fire is missing anyway.......

தருமி said...

வேகநரி,
நல்ல வேளை … மதுரை வந்தேன். விளையாட்டுச் சேனலும் வந்து சேர்ந்து விட்டது. பார்க்கக்கூடிய நேரத்தில் தான் விளையாட்டுகள். பார்த்து வருகிறேன்.

வேகநரி said...

//பார்த்து வருகிறேன்.//
நீங்க பார்த்து வருவது எனக்கும் உற்சாகமே. நன்றி.

Post a Comment