Monday, February 06, 2017

924. மதங்களும் ... சில விவாதங்களும், .......... தமிழ் இந்துவில் ஒரு குறிப்பு.






*


மதங்களின் அடித்தளத்தை உலுக்கி ….

ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களின் மதம் சார்ந்த நம்பிக்கை அவர்கள் பிறந்த உடனேயே அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. வீடு, உறவினர், புழங்கும் வெளி ஆகியவற்றின் மூலமும் அவரவர் மதம் சார்ந்த நம்பிக்கை ஆழமாக உறுதிப்படுத்தப்படுகிறது. இதனால் அவரவர் மதத்தை விமர்சன பூர்வமாகப் பார்க்கும் புறவயமான பார்வை இல்லாமல் போகிறது. தருமியின் இந்த நூல் பல்வேறு மதங்களையும் புறவயமான பார்வையுடன் விமர்சிக்கிறது. 

மதங்களின் புனித நூல்களின் நதிமூலம், ரிஷிமூலத்தையும் தருமி ஆராய்ந்திருக்கிறார். கேள்வியே கேட்கப்படாமல் காலம் காலமாகப் பின்பற்றப்படும் மத வழக்கங்கள், நம்பிக்கைகள் போன்றவற்றின் அடித்தளம் மீதே கைவைக்கிறார். இந்து மதம், இஸ்லாம், கிறித்துவம் இம்மதங்களின் உட்பிரிவுகள் அவற்றின் உள்முரண்கள் என்று தயவுதாட்சண்யம் பார்க்காமல் தருமி அலசியிருக்கிறார். மதவாதிகளின் கண்ணுக்குப் படாமல் அவர் தப்பிக்க வேண்டும்!

இந்த நூலில் தருமியின் கட்டுரைகள் மட்டுமல்லாமல் தமிழ்ப்படை, ஜமாலன், ஆர். கோபால் ஆகியோரின் கட்டுரைகளும் இந்த நூலில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

பெரியதொரு விவாதத்தைக் கோரும் நூல்.

-       தம்பி





தமிழ் இந்துவில் உள்ள “நூல் வெளி”யில் வரவேண்டும் என்று விரும்பிய என் நூலைப்பற்றிய குறிப்பு ஒன்று சென்ற சனிக்கிழமை – 4.2.2017 – அன்று வெளி வந்துவிட்டது.

பெரும் மகிழ்ச்சி.

குறிப்பாளர் – திரு தம்பி –நூலை முழுவதுமாக வாசித்து நல்லதொரு ஆய்வின் அடிப்படையில் கொடுத்திருப்பது அறிந்து அவருக்கு என் பாராட்டுகள். அதிலிருந்த ஆழமும் அழுத்தமும் மிகவும் பிடித்திருந்தது. மிக்க நன்றி.

lay out நண்பர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.  நல்ல top slot கொடுத்துள்ளார்கள்.








*

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா
இந்துவில் பார்த்து மகிழ்ந்தேன்

Unknown said...

தம்பியின் மதிப்புரை எல்லையற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. 'மதங்களின் அடித்தளத்தை உலுக்கும்' என்பது சரியான கணிப்பு.வாழ்த்துக்கள். மனிதன் 'மதம்'பிடித்தலையாமல், மனிதனாக வாழ இத்தகைய புத்தகங்கள் தேவை.

Unknown said...

மதத்தின் பெயரால் மதம் பிடித்தலையும் மனிதன் திருந்த, அறிவு சார்ந்த, சிந்தனையைத் தூண்டி நல்வழி நடக்க தூண்டும் புத்தகம். தங்களுடைய முயற்சி, பாராட்டத்தக்கது. தமிழ் இந்துவில் தம்பியின் மதிப்புரை நடுநிலைக் கண்ணோட்டத்தோடு சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அவர்கள் தந்த மதிப்பீட்டிற்குத் தங்களின் மதிப்பீடு மிக அருமை. பொருண்மையிலும் சரி, பக்க அமைப்பிலும் சரி உங்களின் ரசனையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

G.M Balasubramaniam said...

நல்லநூலை அடக்கி வைக்க முடியாது நான் இருக்கிறேன் என்று தலைகாட்டும்

Post a Comment