Saturday, June 23, 2018

984. FIFA 2018 ... 2






*






 ப்ரேசில் - கோஸ்டா ரிக்கா 


 பொறி பறந்தது. அதுவும் ஏறத்தாழ 90 நிமிடமும் பொறி பறந்தது.

 பையன் நெய்மர் full formக்கு வந்தாகி விட்டது என நினைக்கின்றேன். நெய்மர் - மார்செல்லோ (பரட்டைத் தலை) காம்பினேஷன் நன்கு வேலை செய்தது. பந்து முழுவதும் கோஸ்டா ரிக்கா பக்கம் தான் இருந்தது, பல முறை ப்ரேசில் அடித்த பந்துகளை கோஸ்டா ரிக்கா கோல் கீப்பர் அழகாக தடுத்துக் கொண்டிருந்தார். போட்டியே ப்ரேசில் டீமுக்கும் கோஸ்டா ரிக்கா கோல் கீப்பருக்கும் என்பது போல் தான் இருந்தது.

ஆனால் அவ்வப்போது கோஸ்டா ரிக்கா ப்ரேசில் பக்கம் பந்தை எடுத்துப் பறந்தார்கள், இது மாதிரி பல போட்டிகளில் பந்தே போகாமல் இருந்து திடீரென்று எதிர்ப்பக்கம் இருந்து கோல் அடித்து விட்டுப் போய்விடுவார்கள். அது மாதிரி ஏதாவது நடந்து விடுமோ என்ற அச்சமும் தொடர்ந்து இருந்தது. 

ஏறத்தாழ காலம் முடியும் நேரம். 86வது நிமிடத்தில் இரு கோஸ்டா ரிக்கா ஆட்கள் பெளல் வாங்குவதற்காக படுத்துக் கொண்டு “ஆட்டம்” காண்பித்துக் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தார்கள். ஏற்கெனவே நெய்மர் மீது பெனல்டி ஏரியாவில் பெளல் கொடுத்து நடுவர் பெனல்டி கிக் கொடுத்து, VAR மூலம் மாற்றப்பட்டது. இப்போதோ நிமிடங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

ஏறத்தாழ ஓரிரு நிமிடங்கள் இருக்கும் போது ப்ரேசிலின் முதல் கோல் அழகாகப் போடப்பட்டது. 6 நிமிடம் ஆட்டம் நீடித்தது. அதிலும் முதல் நிமிடத்திலேயே நெய்மருக்குக் கொடுக்கப்பட்டு எளிதாகக் காலால் ஓடி வந்து தட்டி இரண்டாம் கோல் விழுந்தது.

 ப்ரேசில் கோச் ஓடி வந்த வேகத்தில் யாரும் பெளல் செய்யாமலேயே கீழே விழுந்து புரண்டு எழுந்தார். எனக்கும் அத்தனை மகிழ்ச்சி!


அர்ஜெண்டினா அடுத்த கட்டத்திற்கு வருமா?

பாவம் ... அர்ஜெண்டினா பய புள்ளைக!

குரோஷியாவுடன் விளையாடி 3 கோல் வாங்கித் தோற்று விட்டது. ஏற்கெனவே ஐஸ்லேந்தோடு விளையாடி ஆளாளுக்கு ஒரு கோல் போட்ட சமன் நிலைக்கு வீழ்ந்தது. இனி குழுவின் மற்ற அணிகளின் ஆட்டத்தின் வெற்றி தோல்விகள் மூலமாகத்தான் அர்ஜெண்டினாவின் தலைவிதி நிர்ணயிக்கப்படும், 

நைஜீரியாவும் ஐஸ்லேந்தும் விளையாடி நைஜீரியா 2 : ! கோல் கணக்கில் வென்று விட்டது. அர்ஜெண்டினாவிற்கு இன்னும் வழி இருப்பது போல் தெரிகிறது. பார்க்கலாம் ...


 *

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

களத்தில் உள்ளதுபோல் இருக்கிறது ஐயா.

Post a Comment