Sunday, February 16, 2020

1084. நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்



*

இந்த ஆசிரியர் வேலை “ஒருவிதமான” வேலை தான்!
இன்று ஒரு திருமண விழாவில் பல பழைய மாணவர்களைச் சந்தித்தேன். நல்ல வயதான ஒருவர் என்னை நோக்கி கை குவித்து கொண்டே விரைந்து வந்து - நான் அவர் என் பழைய மாணவர் என்றே நினைக்கவில்லை. - காலைத்தொட்டு விட்டு எதிரில் அமர்ந்தார். அவர் சொன்ன பிறகே தெரிந்தது அவர் என் பழைய மாணவர் என்று. அவரை முகநூலில் தொடர்ந்து பார்த்தும் வந்திருக்கிறேன். அதில் கோட்டும் சூட்டும் போட்டு அசத்தலாக இருப்பார். இன்று நேரில் பார்த்த போது எனக்கு முற்றிலுமாக அடையாளமே தெரியவில்லை. பயங்கரமான அதிர்ச்சியைக் கொடுத்து விட்டார்.
பல பழைய மாணவர்கள். எல்லா விதத்திலும் மாறிய தோழர்களாக பலரைப் பார்த்தேன். உடை, உருவம், பருவம் எல்லாம் மாறி இருந்தன. ஆனால் நாங்கள் பேசியதெல்லாம் பழங்காலக் கதைகள். இனிமையான பொழுது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நின்று கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். (கால்வலி வீட்டிற்குப் போன பிறகுதான் தெரிந்தது!!)
இன்னொரு மாணவன். அப்போதிருந்த மனோ நிலையில் முற்றிலும் மாறி புதிய ஆளாக மாறி இருந்தான். சைனாவிலிருந்து வந்திருந்தான். பேசுவதற்கு நிறைய இருந்தது. காலம்தான் தடுத்து விட்டது. பிறகு பேசுவோமெனப் பிரிந்தோம்.
இன்னொரு மாணவி - பல்துறையில் தொடர்ந்து பணியாற்றும் பெரும் பேராசிரியை - இப்போது உங்களின் ’கடவுள் என்னும் மாயை’ வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னது மலர் தூவிச் சென்றது போல் தோன்றியது. அம்பேத்கார் புத்தகம் வாங்குவது எப்படி என்று ஒரு பேராசிரியரிடமிருந்து ஒரு கேள்வி. இன்னொரு பேராசிரியர் அம்பேத்கர் பற்றிய சிறிய நூலொன்று இருக்கிறது; தருகிறேன் என்றார்.
வீட்டிற்கு வந்து அரசுப் பணியில் இருந்த ஒரு நண்பரிடம் இன்றைய நிகழ்வுகளைப் பற்றி மகிழ்ச்சியோடு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். ‘கொடுத்து வைத்தவர் நீங்கள்’ என்றார். ஏன் என்றேன். எங்கள் அலுவலகங்களில் ஓய்வு நாளன்று பெரிய விழாக்கோலம் மாதிரி எல்லா மரியாதையையும் செய்து அனுப்புவார்கள். ஆனால் அடுத்த நாளே நாம் பணி செய்த இடத்திற்குச் சென்றாலோ. நம்மோடு பணி செய்தவர்களைக் கண்டாலோ பழைய உறவுகள் மறைந்து, அயலான் போல் நம்மைப் பார்ப்பார்கள் என்றார். உங்கள் பணியில் தான் பழைய மாணவர்களின் அன்பு எப்போதும் உங்களுக்குத் தொடர்ந்து கிடைக்கும்.

ஆசிரியர்கள் நீங்கள் ‘ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்’ என்றார்.

உண்மை தான் …




*




19 comments:

தருமி said...

Veluchamy Ravi உண்மை தான்

தருமி said...

Senthil Kumar உங்களிடம் மாணவர்களாக இருந்ததற்கு நாங்கள் பாக்கியசாலிகள் Sir

தருமி said...

Rajalakshmi Sridhar Salute

தருமி said...

Kavitha Thinakaran
... salute

தருமி said...

Helenchristina Samuel நேற்று உங்கள் முகத்தில் தெரிந்த நிறைவான புன்னகையே இதற்கு சான்று

தருமி said...


VathilaiPraba அருமை சார்! நானும் உங்களின் பழைய மாணவன் எனும் முறையில் மகிழ்கிறேன்! ❤️

தருமி said...

Evanjelin Manoharan அருமை அருமை பேராசிரியரே! வாழ்த்துக்கள்!

தருமி said...



Kalyanima Kathir Sir.. very happy to see ur words.. really u r our special.. person..always.. thank u sir for everything..

தருமி said...


Arul Yesudoss நானும் ஒரு நாள் தங்களிடம் சில மணித்துளிகள் செலவிட சந்தர்ப்பம் கிடைத்தது. நேரம் தான் போதவில்லை.

தருமி said...

Ganesh Thangam Teacher is different among all professions but you are something different sir

தருமி said...

Anbudurai ... இது எல்லா ஆசிரியர்களுக்கும் கிடைப்பதில்லை!

G.M Balasubramaniam said...

ஆசிரியர்கள் உண்மையிலேயே ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் சிறுவயதில் ஆசிரியனாகக் கனவுகண்டிருக்கிறேன்

தருமி said...

Dorey Daniel That’s true sir. Teachers never age! God bless you 😊

தருமி said...

Winkins Santosh Amazing write up sir!!! But not all teachers are blessed sir!!! நீங்க வேற level!!!

Leonardo said...

Yes, teachers are blessed!
- until they retire they get to be with and interact with young minds; and company of the young keep them young.
- after the retirement too, they enjoy the respect of the students.

But being a teacher is hard work:
To earn the respect of students or colleagues, you've to be up-to-date with the subject and be a step ahead in knowledge; you've to be aware of the current affairs; you've to have some skill in extra curricular activities/hobbies/games;should've decent dress sense. There is much more to be an effective teacher than what has been enumerated above, (say,a pleasant countenance)
The bottom line is, it is hard work being an attractive teacher like Sam G and no wonder past students respect him for it.
And we cannot generalize saying that 'the teachers are a blessed.'
And Sam,
'ஆசிரியர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்' என்றால், யாரால் என்று கூறமுடியுமா?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மாணவர்கள் நண்பர்களைப் போல பழகுதல், பேசுதல் என்பதானது......உண்மையில் இந்த அனுபவம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. பதிவினைப் படித்ததும் நானும் உங்கள் மாணவனைப் போல இருந்து உரையாடிய உணர்வு.

தருமி said...

kid .. lovely .. only in this profession we will have beautiful .. memorable throwback. :)

chin up and let's feel proud to be a teacher.

தருமி said...

Savadamuthu ... மாணவர்களாகிய நாங்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் தான். உங்களைப் போன்ற ஆசான்கள் இருந்ததால் .. மிக்க மகிழ்ச்சி திரு.சாம் ஆசான் அவர்களே ....

தருமி said...

//'ஆசிரியர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்' என்றால், யாரால் என்று கூறமுடியுமா?// உங்க சாமி தான் அப்டின்னு சொல்லணுமா, ப்ரி?
அவன் பணக்காரன் என்றால் அவனிடம் பணம் இருக்குன்னு அர்த்தம். யாரு கொடுத்தான்னு கேக்க மாட்டோமில்ல .. அது மாதிரி ஆசீர்வதிக்கப்படவர்கள் என்றால் ஆசீர்வாதம் / பாராட்டு / மதிப்பு உள்ளவர்கள் என்று தானே பொருள் கொள்ளணும், ப்ரி!

Post a Comment