*
missing the trees for the lonely woman!
.... என்று மறைந்து போன ஜார்ஜின் முக நூலில் கடைசியாக வந்த படத்திற்குப் பின்னூட்டமிட்டிருந்தேன். ஏனோ அவனை நினைக்கும் போதெல்லாம் இந்தப் படம் மனதிற்குள் மின்னல் வெட்டாக வந்து போகிறது.
.... என்று மறைந்து போன ஜார்ஜின் முக நூலில் கடைசியாக வந்த படத்திற்குப் பின்னூட்டமிட்டிருந்தேன். ஏனோ அவனை நினைக்கும் போதெல்லாம் இந்தப் படம் மனதிற்குள் மின்னல் வெட்டாக வந்து போகிறது.
நேரடி மாணவனாக இல்லாவிட்டாலும் காமிரா எங்களை இணைத்து வைத்தது. படிப்பு முடிந்த பின் அவன் எடுத்த படங்கள் அத்தனை நன்றாக இருந்தன. அதைச் சொல்லும் போதெல்லாம், “உங்களிடம் படித்தது, சார்” என்று சொல்வான். பெருமையாக இருந்தது.
மகாமுனி படத்திற்காகப் பாலக்காடு சென்ற போது பெரிய காமிராவோடு நின்றான். அவன் தான் அப்படத்திற்கான making the movie videographer என்றான். நான் அங்கிருந்த 3 நாளும் ஏறத்தாழ என்னோடு கூடவே இருந்தான். என்னையும் வைத்து சில bytes எடுத்தான். என்னை எனக்கே பிடிப்பது போல் அழகாக எடுத்துக் கொடுத்தான்.
எப்போதும் தொடர்பில் இருந்தோம். locked down ஆரம்பித்ததும் சில படங்களின் தொடுப்பு கேட்டிருந்தேன். அவன் சொல்லி ஐந்தாறு நல்ல படங்கள் பார்த்தேன். அதைப் பற்றியும் பேசினோம். வேறு சில படத்தலைப்புகள் சென்ற வாரம் சொன்னான்.
கொஞ்ச காலத்திற்கு மலையாளப் படங்கள் பார்க்க மனது வராது என்று நினைக்கின்றேன் .......
*
https://www.facebook.com/sam.george.946/posts/10219610815134206?__cft__[0]=AZWvgYo9QiDaCO5KcBcQhuyN3XU3uZDsVbpH_IIVUwCywP7Hvd8nQVzyRPLmU0NkklIxwBCxQTYvTm4MnWE6SosQCpPbFUp4mudPusX8DLQigVMrqob1meYtnlrTrV1jBIs&__tn__=%2CO%2CP-R
*
No comments:
Post a Comment