DAY 3
ARGENTINA - SAUDI ARABIA
அர்ஜெண்டினா 3:0 ஜெயிக்கும் என்ற நினைப்போடு பார்க்க
ஆரம்பித்தேன்.
சிறிது நேரம் ஆட்டம் பார்த்து விட்டு சில நிமிடம் கழித்து 3:1 ஆகிவிடும்னு நினச்சேன்.
போற போக்கப் பார்த்தா ... அர்ஜென்டினா ஒரு கோல் போட்டுது.
அதுவும் penalty goalதான். அதுவும் தேவையில்லாமல்
கொடுத்தது மாதிரி இருந்தது. Experts சொன்னது மாதிரி, கால்பந்து விளையாட்டை கைப்பந்து விளையாட்டு மாதிரி, ஆளை
இடிக்கக்கூடாது, தள்ளக் கூடாதுன்னு விளையாட முடியாதில்லையா?
அந்த கோலை நம்மாளு மெஸ்ஸி போட்டுட்டாரா .. சரி, நம்ம கணக்குக்கு இன்னும் இரண்டு கோல் போடணுமேன்னு யோசிக்கும் போது செளதி
அந்த இரண்டு கோலை தன் கணக்கில் போட்டு விட்டது.
எல்லாம் கூட்டி கழிச்சி பார்க்கும்போது கடைசியில் நம்ம
போட்ட கணக்கெல்லாம் தப்பா போய் 1:2 என்ற கணக்கில் மெஸ்ஸி கட்சி தோத்துப் போச்சு.
இது முதல் போட்டி தானேன்னு மனசுக்குள்ள நிறைய பேர் தங்களையே ஆறுதல் படுத்திக்
கொண்டார்கள்.
செளதி அர்ஜென்டினாவுடன் போட்டி போட்டதால் இத்தனை நல்ல
ஆட்டத்தைக் கொடுத்திருப்பார்கள் என்று தோன்றியது. ஆட்டம் வேகமாக இருந்தது.
விறுவிறுப்பு ... 85% (முதல் கோல் வாங்கும்வரை செளதி ஆடிய ஆட்டம்
சுத்தமாக அதன் பிறகு மாறியது; சீறினர்.)
மெக்சிகோ
- போலந்து
அவரு பேரு என்ன லவ்டான்சிகோ...அந்த மாதிரி!! (Lewandowski) இவரு ஒரு பக்கம்; எதிர்த்தாற்போல் மெக்சிகோ (என்னைப்
பொறுத்தவரையில் அது ஒரு பெரிய் டீம்) ஆனால் களத்தில இரண்டும் சம பலத்தோடு இருந்தன.
அதனால் தானோ என்னவோ ஆட்டத்தில் பொறி பறந்தது. நான் பார்த்த வரையில் இரு அணிகளிலும்
ஒரு குறை இருந்தது. லாங் பாஸ்கள் அதிகம் கொடுத்தார்கள். ஆனால் பல முறை இவர்கள்
கொடுத்தால் அவர்கள் எடுப்பார்கள்; அவர்கள் கொடுத்தால்
இவர்கள் பந்தை எடுப்பார்கள் என்பது போலவே மாறி மாறி நடந்தது.
சமமான ஆட்டம். அதில் ஒரு பெனல்ட்டி கிடைத்தது போலந்துக்கு.
பந்தை அடித்தவர் லெவண்டாஸ்கி. ஆனால் பந்து தடுக்கப்பட்டது. Goal keeper
Ochoa became the hero of the day.
இதற்குப் பிறகு டிவியில் வந்த காட்சிகளால், ப்ரேசில் 1986ல் காலிறுதிப் போட்டியில் தோல்வியுற்றதும் அன்று காண்பித்த காட்சிகள் மீண்டும் நினைவுக்கு வந்தன. இரண்டிலும் ஓர் ஒற்றுமை. கைத்தடி ஊன்றி வந்த ஒரு ப்ரேசில் பெரியவர் தன் கைத்தடி வளைவில் தன் நாடியை வைத்துக் கொண்டு கண்ணீரோடு உட்கார்ந்திருந்தார். நேற்று வயதான ஒரு பெரியவர் செளதி வெற்றி பெற்றதற்காக, கண்ணீரோடு அல்லாவுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தார்.
இரண்டாவது கோலாக செளதி போட்டதும் வெற்றி உறுதியானது. டிவியில்
செளதி மக்களின் ஆனந்த ஆட்டங்களைக் காண்பித்தார்கள் அதன்பின் தோற்றவர்களின் சோகத்தோற்றங்களைக்
காண்பித்தார்கள்.
அதென்னவோ தோற்றவர்களின் வருத்தங்கள் மனதில் பதிந்து நின்று
விடுகின்றன. அன்று ப்ரேசில் தோற்றதும் அந்தப் பெரியவர் வடித்த கண்ணீர் இன்னும் என்
நினைவில் அப்படியே நின்று விட்டது.
ஆட்டம் 0: 0
ஆனால் விறுவிறுப்பு:
88%
No comments:
Post a Comment