Sunday, October 08, 2023

1252. மூன்று மொழியாக்க நூல்கள் பற்றிய என் தனிப்பட்ட உணர்வுகள்


ரொமிளா தாப்பர் இந்தியாவின் பண்டைய கால வரலாற்றைப் பற்றி எழுதிய நூலை மொழியாக்கம் செய்தேன். அதில் எவ்வாறு வெளியிலிருந்து வந்தவர்கள் ஆதிக்கசாதியினராக மாறினார்கள் என்ற வரலாற்றுப் பகுதியைப் படிக்கும் போது ஏற்பட்டு மனதின் உறுத்தல் ஒரு கேள்வியை எழுப்பியது.

                                             

அடுத்து மொழியாக்கம் செய்த நூல் சூத்திரன். இதை வாசிக்கும் போதே என் மீதே எனக்குக் கோபம் வருமளவிற்கு அதிலுள்ள செய்திகள் இருந்தன. ஏன் சூத்திரர்களுக்கு சூடு, சுரணையில்லாமல் இருக்கிறோமே என்றொரு நச்சரிப்பு மனதினுள் எழுந்தது.


                                                                                            

அடுத்து செய்த மொழியாக்க நூல் பாலஸ்தீன் - இஸ்ரேல் போராட்டம். ஏற்கெனவே ஓரளவு தெரிந்த வரலாற்றை முழுவதுமாகத் தெரியும் போது உலகத்தில் மிகவும் கேவலமாகவும், கொடுமையாகவும் காலனியாட்சி செய்த, அதிலும் முக்கியமாக, இங்கிலாந்து நாடு வரலாற்றில் செய்த கொடுமைகளின் சாட்சியாகவே உள்ளது இன்றைய போர்.

இந்த மூன்று நூல்களையும் வாசிக்கும் போது, மொழிபெயர்ப்பாளன் என்பதையும் தாண்டி அதில் சொல்லப்பட்டவைகளோடு மனதளவில் ஐக்கியமாவதும். அதற்காகக் கழிவிரக்கம் கொள்வதும் , வேதனைப் படுவதும் நடந்தது.

ஒரு சின்ன கேள்வி:  மொழிபெயர்ப்பாளன் எழுதும் நூலோடு இப்படி ஒன்றிப் போவது சரியா?

ஆனால் நிச்சயமாக மொழிபெயர்ப்பில், சொல்லப்பட்டவைகள் என்னோடு நெருங்கிய ஒன்றாக இருந்தாலும், என் கருத்துகளுக்கோ என் வருந்தங்களுக்கோ அங்கே இடம் கொடுக்கவில்லை.





No comments:

Post a Comment