ஆஹா .. இப்படி ஒரு தருணம் வேறு நடிகர்களுக்கு வாய்க்கவில்லை. இவருக்குத்தான் அந்த வாய்ப்பு வாய் பிளந்துக் காத்திருக்கிறது. அந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்துவாரா என்பது தான் நம் முன்னும், விஜய் முன்னும் நிற்கும் கேள்வி. அதில் தான் நம் எல்லோரின் ஜாதக பலனும் இருக்கிறது.
அவருக்கு முன்பு பல பேர் இருந்தாலும்
முக்கியமாக சமீபத்தில் இருந்த இரு பெருசுகள் பற்றிச் சொல்லியாகணும். அதுல மொதல்ல வந்த
பெருசு ... ரொம்ப பெரிய ஆளு சூப்பர் ஸ்டாருன்னு எல்லோரும் அவரைச் சொல்வாங்க. புலி
வருது கதை மாதிரி ரொம்ப நாளா ஒரு கதை சொல்லிக்கிட்டு இருந்தார். இந்தா வந்துட்டேன்னு
சொல்லிக்கிட்டு இருந்தாரு. ஒரு ஸ்டேஜ்ல நமக்கு இது ஒத்து வராதுன்ற ஞானம் கிடச்சிது.
மனுசன் பொழச்சிக்கிட்டாரு. உடம்பு சரியல்லைன்னு சொல்லிட்டு ஆட்டய விட்டு விலகிட்டார்.
ஆனா படம் மட்டும் அடுத்தடுத்து தொடர்ந்து வந்துகிட்டு இருக்கு. ‘ஏம்பா, உடம்பு சரியில்லைன்னு சொன்னியே ..
அதனால அரசியலுக்கு வரலைன்னு சொன்னியே. ஆனா இப்போ மட்டும் தொடர்ந்து நடிக்க முடியுதே’
அப்டின்னு யாரும் புத்திசாலித்தனமா கேட்க நம்ம கூட்டத்தில யாருக்கும்
அறிவில்லையே. அவருக்குத் தெரியும். நடிச்சா அதுவும் அவர் செய்றதுதான் இஸ்டைல் அப்டிம்பாங்க.
(நாய்க்கு பிஸ்கட் போடுறது மாதிரி சிகரெட்டைத் தூக்கிப் போட்டு உதட்டால கடிச்சாரா
... அப்பவே நம்ம ஆளுக .. அடடா, இதுல்ல ஸ்டைல் அப்டின்னாங்க.
அப்பவே நம்ம நாடித் துடிப்பு அந்த பெருசுக்குப் புரிஞ்சிருச்சி) அதுனால நாலு படத்தில
நடிச்சமா .. பிள்ளை குட்டிகளுக்குக் காசு சேர்த்தோமான்னு தோணிச்சு. அரசியல் சோலிய
முடிச்சிட்டு காசு சோலிய பாக்க வந்துட்டாரு.
ஒரு பெருசின் ஆட்டம் இப்படி முடிஞ்சிது.
அடுத்த பெருசு. திரைத்துரையில்
உள்ள அத்தனையையும் கரச்சிக் குடிச்ச ஆளு. அதோடு நிறுத்தியிருக்கலாம். அவரோட சொந்த
அண்ணனே சொன்னாரு – இவரு தேவையில்லாம அரசியலுக்குள்ள போக வேண்டாம்னாரு. பெரியவங்க சொன்னா
கேக்கணும்ல. கட்சிக்கு நல்ல பெயர் கூட வச்சாரு. அதோட சரி. கட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுத்தப்பவே
தெரிஞ்சிது இந்த ஆட்டம் ஒரு செல்லாத ஆட்டம்னு. சினேகிதன் பாவம் .. பாட்டெழுதிக்கிட்டு
இருந்தாரு. அவருக்கு ஒரு போஸ்ட். அந்த அம்மா ஸ்ரீ ப்ரியா. அவங்களுக்கு ஒரு போஸ்ட்.
ஒரு தேர்தலையும் சந்திச்சாங்க. டார்ச் லைட் வெளிச்சம் போதலை. விக்ரம் படம் வந்திச்சு
.. காசும் ஏறுச்சு. அந்தப் பெருசு மாதிரி இந்தப் பெருசும் படம் பண்ண ஆரம்பிச்சாச்சு.
நாமளும் பொழச்சோம்.
இரண்டாம் பெருசின் ஆட்டமும்
இப்படி முடிஞ்சிது.
அடுத்து வந்தாரய்யா நம்ம வெற்றி, அதாவது விஜய். சினிமாவில ஒரே டெம்ப்ளேட். அதுவும் மக்களுக்குக்
கன்னா பின்னான்னு பிடிச்சுப் போச்சு. அது எப்டின்னு யாருக்கும் தெரியலை. அட .. எங்க
வீட்லயே .. என் பேத்திகள் தமிழே பேசாதுக. தமிழ்ப் படம் பார்த்ததே அதிகமா இருக்காது.
ஆனா உங்களுக்குப் பிடிச்ச நடிகர் யாருன்னா இந்த ஆளு பேரைச் சொல்லுதுக. என்ன மந்திரமோ
என்ன மாயமோ! அட .. பக்கத்து வீட்டுப் பையன்.. புத்திசாலிப் பய. IIMல படிச்ச பயல். ஆனால் விஜய் படத்துக்கு FDFS என்பான். என்னத்த சொல்ல!
இந்த ஆளுக்கு CM பதவி மேல கண்ணு. அதுவும் சினிமாவில
இருந்த வர்ரவங்க எல்லோரும் நேரே அப்படியே CM ஆகிற கனவுல தான் வர்ராங்க. எம்.ஜி.ஆர். ஒரு ஆள் மட்டும் தப்பிப்
பொழச்சி, இன்னும் நம்ம உயரை வாங்குறார். ஏன்னா, அவர் மாதிரி எல்லோரும் CM ஆகணும்னு துடிக்கிறாங்க.
இவரு டாப்
ரேங்கில் இருந்து அப்படியே அனைத்தையும் உட்டுட்டு அரசியலுக்கு வந்திருக்காரு. சினிமா
வசனமெல்லாம் யாரோ எழுதிக் கொடுக்கிறத எழுத்தைக் கூட்டி ஒரு மாதிரி வாசிச்சாரு. 26 தேர்தல்
களத்தில் குதிக்கிறேன்னு சொல்லிட்டு குதிச்சாரு. பார்த்துக் குதிச்சிருக்கலாம். கரூர்
நிகழ்ச்சியில் மூக்கு ஒடஞ்சி போனது மாதிரி தெரியுது. ஆனா அவர் ‘படை’ பெருசா தெரியுது. அதெல்லாம் ஒட்டா மாறுமான்னு தெரியலை. அதுவும் இந்த மனுசன் காரவன்
உள்ள உக்காந்து, மணிரத்னம்
படத்தில வர்ரது மாதிரி light and dark lighting தனக்குத்தானே கொடுத்ததை ஒரு வீடியோவில பார்த்தேன். Narcist .. அப்படி ஒரு ஜாலியா
அந்த lighting
கொடுத்ததைப்
பார்த்தேன். அதன் பின்னாலிருந்த அர்த்தம் எனக்கு அனர்த்தனமாகத் தோன்றியது. சின்னப்
பிள்ளைத்தனமாகவும் தெரிந்தது.
41 பேரு
செத்தாச்சு. என்னைப் பொருத்த வரை அவருக்கு வந்த கூட்டம் அவருக்கே பூமராங் மாதிரி எதிர்த்து
அடிச்சிருச்சி. நல்ல புத்திசாலியாக இருந்து, இதாண்டா சான்ஸ் என்று சொல்லி அரசியலை விட்டு விலகி, லோகேஷ் இயக்கம், அனிருத் ம்யூசிக் அப்டின்னு போய்ட்டு காசு பார்க்க போனால் புத்திசாலித்
தனம்.
முந்திப்
போன இரு பெருசுகளும் வழியைக் காமிச்சிருக்காங்க. அந்த வழியா இவரும் போனா அவருக்குக்
காசு செழிக்கும். நமக்கு வாழ்வு பொழைக்கும்.
என்ன நடக்குமோ
...?
No comments:
Post a Comment