Monday, February 09, 2026

1365. சூத்திரன்களே, இனியாவது புரிந்து கொள்ளுங்கள்



*

சூத்திரன்களே,

இனியாவது புரிந்து கொள்ளுங்கள்

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்... இந்தக் கதை தெரியும்தானே! எனக்கு எப்பவுமே அந்த 3% மக்கள் மீது பயங்கரமரியாதை உண்டு. அந்த அளவு அவர்கள் புத்திசாலிகள். வரலாற்றைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, இதை என்னால் எளிதாக நிருபிக்க முடியும். பொதுவாக மக்களுக்கு தங்கள் தங்கள் கடவுள்கள் மேல் அத்தனை பக்தி, பயம் எல்லாம் உண்டு. அவர்களுடைய கடவுளை ஏதாவது சொன்னாலே அனைவருக்கும் அத்தனை ஆத்திரமும், கோபமும் வந்து விடும். ஆனால் அப்படிப்பட்ட ஆழ்ந்த உறவைக் கூட இந்த மக்களால் தகர்த்தெறிய முடிந்தது. இந்து மதம் வந்தது. அல்லது ஒரு மதம் -ஆரியர்களால் கொண்டு வரப்பட்ட, புனித நூல்களும் வரிசையாக வந்தன - இருந்தது. அம்மதக் கோட்பாடுகளையும். வேத நூல்களையும் எதிர்த்து இரண்டு புதிய மதங்கள் பிறந்தன. புத்த, சமண மதங்கள் காலூன்றி வளர ஆரம்பித்தன, முதலுக்கே மோசம் என்பதை உணர்ந்த வேத மதத்தினர் மீண்டும் அரசர்களின் ஆதரவைப் பெற்று, வளர்ந்து, மற்ற இரு மதங்களையும் ஏறக்குறைய அடியோடு அழித்தனர். இதற்கு நிச்சயம் இமாலய முயற்சி தேவை; அதற்கும் மேல் அதிகப் புத்திக் கூர்மை தேவை. கச்சிதமாகச் செய்து இரு மதங்களையும் வேரோடு அழித்தனர். வரலாற்றில் இதுவே சூத்திரர்களுக்கான முதல் எச்சரிக்கை. ஏனெனில் வேத மதம் பிராமணர்களைத் தவிர ஏனையோரை சூத்திரர்களாகவே சொல்கிறது; பிராமணர்களுக்குச் சேவை செய்வதற்காகவே பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றுதான் அவர்களின் சனாதன (அ)தர்மம் சொல்கிறது.

இது மிகப் பழைய கதை. பின்பு, நாட்டில் சுதந்திரத்திற்கான போராட்டங்கள் ஆரம்பித்தன. அம்பேத்கர் போன்ற சிலர் கொடுத்த அழுத்தத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடப்பங்கீடு அரசியல் சட்டமைப்புகளில் இடம் பெற்றது. பின்னாளில் பிற்படுத்தப்பட்டோரும் இணைக்கப்பட்டனர். எண்ணிக்கையில் மிக அதிகமாக இருந்தும் எந்தவித அதிகார நிலைகளைத் தொடவும் முடியாதவர்களாக அடிமைப்பட்டுக் கிடந்த மக்களுக்கு ஓர் ஆதாரமாக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதிருந்தே தங்களைச் சமூகத்தின் உச்ச நிலையில் இருத்திக் கொண்ட மேன்மக்களுக்குஇது எரிச்சலையே அளித்தது. அதற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டையே வைத்திருந்தனர். இக்குறை தீர்க்கும்  மருந்தாக மண்டல் ஆணையம் ஒன்று நிறுவப்பட்டது. 1979ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை 1990 ஆண்டின் இறுதியில் கிடைத்தது. அதன்பிறகும் அடுத்தப் பத்தாண்டுகளுக்கு அந்த அறிக்கை காங்கிரஸ் அரசால் கண்டுகொள்ளப்படாமல் கிடந்தது. பின் 1990 ஆகஸ்ட் 13ம் தேதி புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பிரதமர் வி.பி. சிங் அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சும்மா இருக்குமா மேல்தட்டு’? வழக்குகள் போடப்பட்டன. 1992 நவம்பர் மாதத்தில் இந்திரா சாகானி vs இந்திய அரசு வழக்கின் தீர்ப்பின்படி இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மக்களுக்கான 27% இடப்பங்கீடு முறைப்படுத்தப்பட்டு செயல்முறைக்க்கு வந்தது. பின் 2006ம் ஆண்டில்தான் உயர்கல்வி நிறுவங்களுக்கும் இந்த இடப்பங்கீடு கொண்டு வரப்பட்டது.                                    

ஆனால் 1993ம் ஆண்டிலிருந்து இந்த மண்டல் அறிக்கைக்கு எதிராக ஒரு பெரும் கமண்டல அமைப்புகள்தங்கள் புரட்சியை ஆரம்பித்தன, அதுவும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இடப்பங்கீட்டை நீட்டித்ததும் கமண்டல் அமைப்புகளின் போராட்டங்கள் உச்சத்தைத் தொட்டன. தீக்குளிப்பும் நடந்தது. விளக்குமாற்றுப் போராட்டங்கள் நடந்தன. அதாவது, தெருவைக் கூட்டிச் சுத்தப்படுத்தும் கூட்டத்திற்கு உயர்கல்வி நிலையங்களில் நுழைவதை எளிதாக்குவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சுத்திகரிப்புத் தொழிலைச் செய்பவன் அதைத் தொடரட்டும்; செருப்பு தைப்பவன் அவன் குலத்தொழிலைச் செய்யட்டும்; அவர்களுக்கு உயர்கல்வி நிலையங்களில் சேர்வதற்காகப் புதிய வழிகள் திறப்பதை அவர்களால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. போராட்டங்கள் தொடர்ந்தன.  

போராட்டங்கள் ஓரளவு குறைந்தாலும் உள்ளே பெரும் நமைச்சலோடு மேல்சாதி மக்கள் தொடர்ந்து இருந்து வந்தனர். நமது வாக்கு வங்கி அரசியலில் மேல்தட்டு மக்களின் வாக்குகளுக்கு எப்போதும் அரசியல்வாதிகள் முன்னிடம் தருவார்கள். இப்போது மண்டல் பிரச்சனைகளுக்குப் பிறகு இந்த மக்களைச் சிறிதாவது திருப்திப்படுத்தும் நோக்கத்துடன், பிரதமர் பி. நரசிம்ம ராவ் 1991 ஆண்டிலேயே பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு (EWS -Economically Weaker Section) என்பவர்களுக்கு 10% கொடுக்க முன்வந்தது. இது நிச்சயமாக அதிகாரத்தின் உச்சங்களிலிருக்கும் உயர்சாதியினரைத் திருப்திப்படுத்தவே கொண்டு வரப்பட்டது. இந்தச் சலுகைகள் அரசியல் சட்டமைப்பின்படி சாதி அடிப்படையிலான இடப்பங்கீட்டில் இருந்து வர்க்க அடிப்படையிலான இடப்பங்கீடாகத் தடம் மாறியது.

ஆனால் 1992ல் நடந்த இந்திரா சகானி வழக்கின் மூலமாக உச்சநீதி மன்றம் இந்தச் சட்டத்தை நிராகரித்து நீதி வழங்கியது. இதனாலெல்லாம் நமது மேல்தட்டு மக்கள் அசந்து விடுவார்களா என்ன! 2006ம் ஆண்டில் சின்ஹோ ஆணையம் (Major General SR Sinho Commission) அமைக்கப்பட்டது. (சின்ஹோ என்ற பெயர் சின்கா என்ற பெயரின் திரிபு. உயர்சாதியினரான இவர் இந்த ஆணையத்தின் தலைவர்!! தீர்ப்பு என்னவாக இருக்குமென தெரியாதா??!!) இதன் விளைவாக 2013ம் ஆண்டு அரசியல் சட்டமைப்பின் 103வது மாற்றமாக இப்புதிய சட்டம் RSS அமைப்பின் நீட்சியான மோடியின் பாஜக அரசினால் கொண்டுவரப்பட்டது (Articles 15(6) and 16(6) are inserted  into the Constitution) இதைத்தான் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு என்று முன்பே கூறினேன். எங்கள் உச்ச நிலையை நீங்கள் எதுவுமே செய்ய முடியாது என்பதை நிரூபிக்கும் இன்னொரு எச்சரிக்கை இது.

மூன்றாவது எச்சரிக்கை இப்போது நடந்துள்ளது, இதைப் பற்றிய கட்டுரை ஒன்று தமிழ் திசையில் 4.2.26 அன்று  சொல்.. பொருள்.. தெளிவுஎன்ற பகுதியில் யுஜிசி வழிகாட்டுதலும், எதிர்ப்பும் என்ற கட்டுரை வெளிவந்துள்ளது.

(https://www.hindutamil.in/news/opinion/columns/ugc-guidelines-and-opposition-explained)

தொடர்ந்து பல உயர் கல்வி நிலையங்களிலுள்ள கீழ்த்தட்டு நிலையிலிருந்து வரும் பல மாணவர்களின் தற்கொலைகள் எண்ணிக்கையில் கூடிக்கொண்டே வருகின்றன. 2019-2024 என்ற ஆண்டுகளில் மட்டுமே தற்கொலைகளின் எண்ணிக்கை 118% அதிகரித்துள்ளது. இந்தக் கல்வி நிலையங்களில் ஆசிரியப் பணிகளில் முறையாக சாதிவாரி மூலம் பணியமர்த்துவது முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இவைகளைத் திருத்த உச்ச நீதிமன்றமே ஏற்கெனவேயுள்ள யுஜிசி வழிகாட்டுதலை (2012) மறுபரிசீலனை செய்து, மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமென்று உத்தரவிட்டது. இதனால் யுஜிசி 2025ல் அந்த மாற்றங்களை வெளிக்கொண்டு வந்தது. நமது மேல்தட்டு மக்களுக்குப் பிடிக்காத ஒன்று நடந்தால், நம்மை மாதிரி - ஒண்ணும் புரியாமல் - அவர்கள் மெளனமாக இருப்பார்களா என்ன? அவர்களின் விமர்சனங்களும், எதிர்ப்புகளும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தன. இதற்காக இன்னொரு திருத்தப்பட்ட சட்டம் ஒன்று ஜனவரி மாதம் சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல், 2026 - Promotion of Equity in Higher Education Institutions, 2026 - கொண்டுவரப்பட்டது. வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிரான பாகுபாட்டைக் களைவதே இதன் முதன்மையான குறிக்கோள் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஒரு பல்கலைக் கழகத்தில் உள்ள அனைவருக்குமான பொதுவான சட்டமாக வந்தது. சம வாய்ப்பு மையங்கள் (Equity Opportunity Centres) 24 மணி நேர உதவி எண், தகைமை நெறிக்குழுக்கள் (Equity Committee) அமைப்பது கட்டாயமாக்கப்பட்டது. புகார்கள் மீது ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். புகார்கள் உண்மையாக இருந்தால் அந்தக் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

இச்சட்டங்கள் பொதுப்பிரிவு மாணவர்களால் -அதாவது உயர்சாதி மாணவர்களால் – கடுமையாக எதிர்க்கப்பட்டது. Offence is the best way of defense என்ற உண்மை அவர்களுக்கும், அவர்களை இயக்கிய R.S.S. அமைப்புகளுக்கும் தெரியாதா என்ன? இந்த வழிகாட்டுதல் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்று சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது எங்கள் சாம்ராஜ்ஜியத்திற்குள் இவைகளுக்கு இடமில்லைஎன்கிறார்கள்! கல்வியமைச்சர் உறுதியளித்தும் இப்போராட்டங்கள் தொடர்ந்தன.

இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் ஹைதராபாத் பல்கலைக் காகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா, மும்பை முதுகலை மருத்துவ மாணவி பாயல் தத்வி ஆகிய இருவரின் அன்னையர்களால் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், யு.ஜிஒ.சியின் இந்தப் புதிய வழிகாட்டலை தலைமை நீத்பதி சூர்ய காந்த், நீதிபதி ஜெயமால்ய பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இது தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.

CJI Surya Kant made a startling observation: He further questions whether Brahmins should be blamed for the entire caste system. Did Brahmins create caste division (ஆமாம் என்பதுதானே சரியான பதில்.) in Muslims, Christians, Buddhists, Sikhs and Jains?...if Brahmin caste is such a big issue, renounce your caste today?(what is the logic here?)  Who is stopping you?. He also noted that even after becoming an IAS, IPS, CJI, President or Prime Minister, if someone still wants to think of themselves as ‘oppressed’, that’s not the fault of Brahmins, it’s their own mindset(தலைவர் லாஜிக்கே லாஜிக் தான்!!). தலைவரும் ஒரு பிராமணர்தானோ? அப்படித்தானிருக்க வேண்டும்; அதனால் தான் அவரது மனக்குரல் இத்தனை சத்தமாக வெளியே கேட்கிறது!!! (கூகுள் சாமி சொல்லிட்டார். ஷர்மா குடும்பம்; பிராமணக் குடும்பம். பாவம்... அதான் தலைவருக்கு இத்தனை ஆதங்கம். நம்ம ஊரு திருப்பரங்குன்ற நீத்பதி நாமிசாதன் மாதிரிதான் இவரும்!)

98 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் மனுஸ்மிருதியைத் தீக்கிரையாக்கினார். அப்போது அவர் சொன்னது இன்று உச்சநீதிபதிகளின் காதுகளில் விழுந்தால் நல்லது: This drastic step (மனுஸ்மிருதியை எரிப்பது..) was taken with a view to forcing the attention of Caste Hindus.  At intervals such drastic remedies are a necessity.  If you do not knock the door, none opens it.. (ஆனால் நம்ம மேல்சாதி மக்கள் என்ன சொல்லுவாங்க தெரியுமா?... Even if you ‘bang’ the door we wont allow the door to be opened.)

இதெல்லாம் நம்ம சூத்திரசாதி மக்களுக்கு என்னைக்குத்தான் புரிந்து தொலைக்குமோ?