நைஜீரியாவிலிருந்து தாய்நாடு திரும்பியுள்ள நேசமித்திரன் இன்று மதுரை வந்து எங்களைச் சந்தித்து,
தன் கவிதைப் போக்கை எங்களோடு பகிர்ந்து கொண்டார். நாங்கள் சந்தித்துப் பேசிய இரணடு மணி நேரமும் அவரது கவிதையனுபவங்களை ஒரு படைப்பாளனின் நயத்தோடு விவரித்து, தனது ஓரிரு கவிதைகளையும் விளக்கினார்.
*
மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்காக மதுரைத் தமிழ்ப் பதிவர்கள் குழாம் நடத்திய பதிவர் பயிலரங்கத்தைப் பற்றிய குறிப்புகளை என் பழைய பதிவொன்றில் கூறியிருந்தேன். அப்பயிலரங்கத்தில் மூன்றாமாண்டு (Viscom) மாணவர் நந்து தந்துதவிய இன்னும் சில நிழற்படங்கள் இப்பதிவில் ... நந்துவிற்கு நன்றி.
முகமதின் வாழ்க்கையும் அவர் ஆரம்பித்த மதத்தின் வரலாறும் பொதுவாகவே மூன்று வழிகளில் நமக்குக் கிடைத்துள்ளது. 1. குரான்; 2. முகமதின் வாழ்க்கை வரலாறுகள்; 3. ஹாடித், இஸ்லாமிய வழக்கங்கள்.
*
ஏசு எதற்காக இந்த உலகத்திற்கு வந்தாரென்று கேட்டால் கிறித்துவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எல்லா மக்களையும் பாவங்களிலிருந்து விடுவித்து, (அப்படி விடுபட்டோரை மட்டும் )