என்னோடு வேலை செய்த - just இப்பதான் 35 ஆண்டுகளுக்கு முன்பு - விரிவுரையாளருக்கு ஒரே ஒரு வார்த்தை மட்டும் தகராறு; அவரால் 'நீர்க்குமிழி' என்று சொல்லவே முடியாது. 'நீர்க்குழுமி' என்றுதான் சொல்லமுடியும். எங்களுக்கெல்லாம் ரொம்ப சீனியர். என்றாலும் அவ்வப்போது இந்த வார்த்தையை வைத்து அவரைச் சீண்டுவதுண்டு. அவரும் ரொம்பவே sportiveஆக, அதைச் சொல்லச்சொன்னால் சொல்லி நாங்கள் சிரிக்கும்போது எங்களோடு தானும் சிரித்துக்கொள்வார். அவரோடு காலேஜ் காண்டீனில் அதுமாதிரி சிரித்து கலாட்டா செய்து கொண்டிருந்தபோது, சர்வர் பையன் வந்து என்ன வேண்டுமெனக் கேட்க, அதே மூடில், இன்னொரு ஆசிரியர் 'வஜ்ஜி,படை' இருக்கா என்றார். நீர்க்குழுமிக்கு அதிலிருந்து வஜ்ஜி படை target ஆனார்.
இது நடந்தது அறுபதுகளின் கடைசியென்றால், தொண்ணூறுகளின் கடைசிகளில் என் மாணவர்கள் - 4K வால்பெண்கள் - நால்வர் பெயரும் K-ல் தொடங்கும் - சுற்றுவட்டாரத்து மக்கள் பெயரையெல்லாம் spoonerism-ஆல் மாற்றி தங்களுக்குள் பேசிக்கொள்வதை என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நல்ல வேளை என் பெயர் அந்த விளையாட்டிற்கு அவ்வளவு பொருத்தமாயில்லை என்பதால் போனால் போகட்டுமென்று விட்டுவிட்டார்கள். அவர்களுக்குப் பிடித்ததாக அமைந்த இன்னெரு ஆசிரியரின் பெயர்: குமார சாமி என்பது இப்படி மாறியது: 'சுமாரா காமி'!
60-ல் ஒன்று; 90-ல் இன்னொன்று. நடுவில் வந்த இன்னொரு spoonerism பற்றி சொல்லமாட்டேன். தலை போயிடும்.
5 comments:
ரதுமி, ஸாரி, தருமி,
"நீர்க்குமுழி" அல்ல, அது "நீர்க்குமிழி" என்று எண்ணுகிறேன் !!!
ஒரு தமிழ் spoonerism --- கரிச்சுக் கொட்டாதே ...
எ.அ..பாலா
பாலா,
'spoonerism' பேச்சில் மட்டுமல்ல, spelling-லும் வரும் என்று காட்டவே அவ்வாறு 'யாம்' எழுதினோம்! இருப்பினும் நீவீர் சுட்டிக்காண்பித்தமைக்காக அதனை 'யாம்' திருத்திவிடுகிறோம். இது எப்படி...? கீழ விழுந்தாலும்...
நன்றி, பாலா. திருத்தி விடுகிறேன்.
Don't understand this. Which country is this?
Norway லேர்ந்து ஒரு துரை 'என்னடா இந்த மக்கள் spoonerism அது இதுன்னு கலாய்கறாங்களே'ன்னு பார்க்கறாரு. தருமி சார், நம்ம நாட்டு பெருமையை கொஞ்சம் அவிழ்ந்துவிடுங்க!! :-)
ரம்யா,
பதில் போட்டுட்டேன்'ல . கொஞ்சமா நம்ம 'தமிழ்' பத்தி, நம்ம ப்ளாக் பத்தி எழுதிட்டேன். பதில் வந்தா சொல்றேன்.
நன்றி
Post a Comment