Thursday, August 04, 2005

42. "அநியாய EXPRESS"

காலங்காத்தால எழுந்திருச்சதும் கண்ணுமுன்னால அழகான பொண்ணு ஒண்ணு; அழகுச்சிரிப்பு; கையில் பெரிய பூங்கொத்து - நல்லாதான் இருந்திச்சு; அட, என்ன விசேஷம் நமக்குன்னு தூக்கக் கலக்கத்தில ஒரு சந்தேகம். கண்ணைக் கசக்கிக்கிட்டு பார்த்தா - நம்ம New INDIAN EXPRESS முதல் பக்கம்தான் அப்படி என்னைப் பார்த்து சிரிச்சது.

முதல் பக்கத்திலேயே Air Tel விளம்பரம். ஒருவேளை பக்கம் மாறி வந்திருக்கோன்னு, நினைச்சு திருப்பிப்பார்த்தா விளம்பரம்தான் முதல் பக்கம்! வழக்கமான தலைப்புச் செய்திகள் எல்லாம் 3-ம் பக்கத்திற்கு போயாச்சு. இது என்ன பத்திரிகை தர்மமோ? நிச்சயமா இது காசுக்காக மட்டும்தான். வேறு காரணம் இருக்கமுடியாது. அதனாலேயே .. It stinks!
இல்ல?
இப்போ அங்கTRIVIAபோங்க!

4 comments:

துளசி கோபால் said...

அட! இங்கேயும் நேத்துப் பேப்பர் 'கிறைஸ்ட்சர்ச் ஸ்டார்'லே இப்படித்தான் ஒரு முழுப்பக்கம் மொதப்பக்கத்துலேயே.

புது ஏர்லைன்ஸ்க்கு வரவேற்பு!!!!

ஆஸ்தராலியாவுக்கு டிக்கெட் ரொம்ப மலிவாத் தருவாங்களாம்!!

என்ன ஒரு மனசமாதானம்ன்னா இது ஓசியிலே வருது!!!! ஊர் முழுக்க எல்லா வீட்டுக்கும் ஃப்ரீ பேப்பர்.

தருமி said...

நாங்க காசு குடுத்துல்ல வாங்கறோம்!! இதைக் கேக்க எங்களுக்கு 'ரைட்ஸ்' இருக்குல்ல!

மாயவரத்தான் said...

ஒரு மூணு வாரம் முன்னாடி குமுதம் பத்திரிகையில் அட்டைப் படத்தை மடித்து உள் பக்கம் வைத்து வெளியில் ஒரு விளம்ப்ரத்தை மட்டும் வைத்திருந்தார்கள். 'குமுதம்' என்ற பெயர் கூட உள்ளே தான் இருந்தது நியாபகம் இருக்கிறதா?!

தருமி said...

டாக்டரைப் பார்க்கக் காத்திருக்கும்போது-அல்லது அந்த மாதிரியான நேரங்களில் வேறு புத்தகமும் இல்லாமல் போய் வேறு வழியில்லாத நேரங்களைத் தவிர - பல ஆண்டுகளாக - குமுதத்தைக் கையாலும் தொடுவதில்லை என்று ஒரு
முடிவு.

Post a Comment