Monday, September 18, 2006

176. மாங்கா மடையர்களா...?

இன்று (18.08.'06) மதியம் ஒன்றரை மணி சன் டிவி செய்திகளில் ஒன்று: சென்னையில், விமான நிலையம் அருகில் விளம்பரப் பலகைகளுக்காகப் பொருத்தப்பட்டிருக்கும் மின் விளக்குகள் விமானப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக விமான நிலையம் கொடுத்த புகாரில், அந்த விளக்குகளுக்குத் தொடர்புகள் மாநகராட்சியால் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் விளம்பரதாரர்களால் போடப்பட்ட வழக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு, மாநகராட்சிக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. அதுவரைகூட சரி. இரண்டு பக்கம் கேட்டு நீதி வழங்க வேண்டியதுதான்.

ஆனால், அதுவரை விளக்குகளைத் துண்டிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்துமுள்ளது.

விளக்குககளைத் துண்டிப்பதற்கான காரணம்: அதிகப் படியான ஒளியால் ஏற்படக்கூடிய குளறுபடியை நீக்க; விமானப் பாதுகாப்பிற்காக. இதைக்கூட எண்ணாமல் தற்காலிகத் தடைவிதிக்கிறது நீதி மன்றம் என்றால், அந்த மாதிரி தீர்ப்பு வழங்கும் மேதாவிகளைத் தலைப்பில் சொன்னது போல் சொன்னால் என்ன தப்பு...? நான்கு நாட்கள் விளம்பரங்கள் விளக்கில்லாமல் இருந்துவிட்டால் என்ன குடிமுழுகிப் போகும்?
ஒருவேளை இந்த விளக்குகளின் அதீத வெளிச்சத்தால் ஏதும் அசம்பாவிதம் நடந்தால்...? Cann't these judges fix up priorities first?

இந்த நீதிமன்றங்களும், அங்கிருந்து வரும் இது போன்ற தீர்ப்புகளும் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

37 comments:

ஜோ / Joe said...

அதானே!
ஆமா! மாங்காய்க்கும் மடையனுக்கும் என்ன சம்பந்தம்?

Hariharan # 26491540 said...

//இந்த நீதிமன்றங்களும், அங்கிருந்து வரும் இது போன்ற தீர்ப்புகளும் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை//

வேறென்ன சொல்ல முடியும் தருமி சார்
இம்மாதிரி நீதிமன்றங்களில் நீதியரசர்கள் நீதி வியாபாரம் செய்கிறார்கள்.

//Cann't these judges fix up priorities first?//


முன்னுரிமை பணத்திற்கு வழங்கியிருக்கின்றனர் தீர்ப்பளித்த நீதியரசர்கள்.

In these places justice is not given judgements are put on big SALE and bought by capable institutions!

மாங்கா மடையர்கள் வழக்கம் போல் பொதுஜனம் தான்!

அன்புடன்

ஹரிஹரன்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
முத்து(தமிழினி) said...

பழைய நீதிமன்ற அவமதிப்பு கேஸே முடியலை...அதுக்குள்ளயா?:))
தலைப்பை மாத்திடுங்க அப்பு.. அப்புறம் ரவி சீனிவாஸ் வந்து மெரட்டுவாரு...ஒவ்வொரு கேசுக்கும் ஒவ்வொரு ஞாயம்னு எவனாவது கிளாஸ் எடுப்பான்..தேவையா உமக்கு?

வணக்கத்துடன் said...

//இந்த நீதிமன்றங்களும், அங்கிருந்து வரும் இது போன்ற தீர்ப்புகளும் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை.//

இப்பொதைய நிலையில் அவற்றை 'நீதி மன்றம்' என விளிக்காமல் இருக்கலாம். :-)

மதுரையம்பதி said...

நன்றாக சொன்னீர்....இது பற்றி விமானநிலைய அதிகாரிகள் முதலில் தமிழக அரசிடம் புகார் தெரிவித்து, அவர்கள் மின்சாரத்தினை நிருத்தாததால் விமானநிலைய அதிகாரிகள் ஹய் கோர்ட் சென்று அத்தடையை வாங்கினர்...இப்போது அதுக்கும் தடையா? எல்லாம் அரசியல்...

புலிப்பாண்டி said...

//உங்கள் கொள்கைகள் மலிந்துகிடக்கிற ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில்தான் இன்று இஸ்லாம் வேகமாக பரவி வருகிறது.//
இப்படி ஒரு பொய்யை வெகுநாளாக சிலர் பரப்பி வருகின்றனர்..முஸ்லிம்களை சமூகத்திலிருந்து ஒதுக்குவது, எதிரே வந்தாலே காத தூரம் தள்ளிப் போய்விடுவது, தனியாக மாட்டினால் அடி வெளுப்பது, நாட்டிற்குள் நுழைய விடாமல் விரட்டுவது, முஸ்லிம்களின் குடியேற்றத்தைத் தடுப்பது என்பது போன்றவையே வேகமாகப் பரவி வருகின்றன..முஸ்லிம்கள் அருகில் போகவே தயங்கும் அய்ரோப்பியன் முஸ்லிமாக மதம் மாறி வருகிறான் என்பது....ஹி..ஹி...சும்மா "டமாஸ்" பண்ணாதிங்கண்ணே..

நீதி"அரசர்"கள் எல்லாம் தூக்கத்துலயே ஸ்டே குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க..மருத்துவர்கள் காசை வாங்கிகொண்டு மருத்துவ சான்றிதழ் குடுக்கற மாதிரி...

விழுப்புரத்தில் என் நண்பனின் அப்பா (வக்கீல்) சொன்ன தகவல்..ஒரு தீர்ப்புக்காக நீதி"அரசர்" ஒருவருக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் "ஒரு மூடை அரிசி"..:)

தம்பி said...

காமெடி தீர்ப்பு!

சென்னையில் வேறு இடங்களா இல்லை! எனக்கு தெரிந்து இந்தியாவிலே சென்னையில்தான் அதிக அளவில் விளம்பரப்பலகைகள் இருக்கின்றன. விமான நிலையத்தின் அருகில் உள்ள பலகைகளை முழுவதுமாக அகற்ற சொல்லி வந்திருக்க வேண்டிய தீர்ப்பு. கேலிக்குரிய நீதியை வழங்கியிருக்கிறது.

ஆவி அம்மணி said...

அதானே! சொன்னால் என்ன தப்பு?

Narayanaswamy.G. said...

தலைவரே,

இதுல உங்களுக்கு சந்தேகம் வேற இருக்கா?

சென்னை விமான நிலையத்துல இறங்கும் விமானங்கள் ஏற்கெனவே le Meridien Hotel மொட்டை மாடியை பயங்கர closeupla காமிச்சுட்டுதான் இப்பொல்லாம் land ஆகுது.

இதுல கோர்ட் ஆசாமிகள் கொடுமை வேறயா?

இதுல கொடுமையிலும் பெரிய கொடுமை, பாதி வக்கீல்களுக்கு இங்கிலீஷ் 2 வரிக்கு மேல தெரியரதில்லை.

குழலி / Kuzhali said...

இந்த மாங்கா மடையர்கள் பற்றி நிறையவே பேசலாம்.... முதலில் நீதித்துறை சரிசெய்யப்படவேண்டும்.

நன்றி

வணக்கத்துடன் said...

ஏன் சார், வாரம் ஒரு முறை தான் பின்னூட்டத்தை மட்டுருத்துவீங்களா? :-)

Dharumi said...

மாங்காய்க்கும் மடையனுக்கும் என்ன சம்பந்தம்?
ஆமா!
அதானே!

Dharumi said...

//நீதியரசர்கள் நீதி வியாபாரம் செய்கிறார்கள்.//
அதுவும் இது சரியான "சில்லறை" வியாபாரமால்ல தெரியுது.

Dharumi said...

//பழைய நீதிமன்ற அவமதிப்பு கேஸே முடியலை...அதுக்குள்ளயா?:))//
ரொம்ப நாளைக்குப் பிறகு எனக்கு வந்த பின்னூட்டத்தைப் படித்ததும் சிரித்தது இந்தப் பின்னூட்டத்துக்குத்தான்!!:)

புரிஞ்சுக்கிறவங்க புரிஞ்சிக்கிடட்டும் அப்டிங்கிறீங்களா?

Dharumi said...

வணக்கத்துடன்,
//அவற்றை 'நீதி மன்றம்' என விளிக்காமல் இருக்கலாம்//
நம்ம எப்படி கூப்பிட்டா என்ன? நடக்கிறது நடந்துகிட்டேதான் இருக்கும். இல்ல..?

Dharumi said...

மெளல்ஸ்,
அப்படி ஒரு பழைய flshback வேற ஒண்ணு இருக்கா. சேதிக்கு நன்றி.

Dharumi said...

புய்லிப்பாண்டி,
175-ம் பதிவுக்கும், 176-ம் பதிவுக்கும் ஒரே பின்னூட்டமா போட்டுட்டீங்களா? இப்ப நான் எதுக்குன்னு பதில் சொல்றது?

Dharumi said...

தம்பி,
இது காமெடி / கேலிக்குரிய நீதியாக இருந்தால் பரவாயில்லையே! கேள்விக்குரிய நீதியாக அல்லவா இருக்கிறது.

Dharumi said...

அமானுஷ்ய ஆவி,
அதெல்லாம் இருக்கட்டும்...இப்படி ஒரு படம் போட்டு எங்கள மாதிரி பூஞ்ச மனசுக்காரங்களை பயமுறுத்துறீங்களே.
:)

உங்கள் மேல் அந்த நீதியரசர்களிடம் ஒரு பிராது கொடுத்தால் என்ன செய்வார்கள் என நினைக்கிறீங்க?

Dharumi said...

//வக்கீல்களுக்கு இங்கிலீஷ் 2 வரிக்கு மேல தெரியரதில்லை. //

நாராயணசாமி,
இதுக்கும் நம்ம நீதியரசர்களின் 'நீதி பரிபாலனத்திற்கும்' என்ன தொடர்பு?

Dharumi said...

குழலி,
சரி செய்யப்படவேண்டிய, மாற்ற வேண்டிய, அழிக்கப்பட வேண்டிய விஷயங்கள்னு நம்ம லிஸ்ட் ரொம்ப நீளமாஆஆஆ
போஓஓஓய்க்கிட்டேஏஏஏ
இருக்கிறதுதான் இப்போதைய பெரிய சோகம்...

Dharumi said...

கோவிச்சுக்காதீங்க வணக்கத்துடன். காலையில இருந்து நெட் தொடர்பு கிடைக்க மாட்டேன் அப்டின்னுடுச்சி..ஹி...ஹி.. எவ்வளவு நேரமா freecell விளையாடிக்கிட்டே ட்ரை பண்ணினேன் தெரியுமா...?

Dharumi said...

Siva,

You are absolutely correct. Foolish fellows in the responsible position !

Dharumi said...

சிவா,
உங்க பின்னூட்டம் அனானியாக வந்ததாக தவறாக நினைத்து விட்டதால் ஒரு குழப்படி. மன்னிக்கவும்.

செந்தில் குமரன் said...

நான் முதன் முதல்ல உங்க பதிவைப் படிச்ச உடனே நியாயம்ன்னு தோணுச்சு அப்புறம் இன்னைக்கு வந்து பின்னூட்டம் எல்லாம் பார்த்தேன் இதுதான் சான்ஸ்ன்னு எல்லாரும் நீதித் துறையை ஒரு வாங்கு வாங்கிருக்காங்க. அது சரின்னு எனக்குப் படலை அதனால தர்க்க சாஸ்திரம் யூஸ் பண்ணலாம்ன்னு எனக்குத் தெரிந்த தர்க்க சாஸ்திரத்தை யூஸ் பண்ணி இருக்கேன். இந்த லைட் வந்து எந்த அளவு தொந்தரவா இருக்குன்னு நாம எப்படி முடிவு செய்ய முடியும்? விமானம் இறங்குவதற்கு எந்த அளவு இடைஞ்சலா இருக்குன்னு நமக்குத் தெரியுமா? அதனால் ஆபத்து இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறதே அது எந்த அளவு உண்மை? இந்த விளக்குகளால் ஆபத்து ஏற்படலாம் என்று stay கொடுக்கும் முன் வாதிடப்பட்டதா அது கணக்கில் எடுத்துக் கொண்டுதான் இந்த stay கொடுக்கப் பட்டதா என்று நமக்குத் தெரியுமா?

இதெல்லாம் தெரியாமல் we are jumping into conclusions. இது சரியா?

G.Ragavan said...

இதுல மாங்கா மடையங்கன்னா அந்த விமான நிலையத்துக்காரங்கதான்...நீதிபத்திக்கு தள்ள வேண்டியத தள்ளியிருந்தா அவங்களுக்குச் சாதகமா தீர்ப்பு வந்திருக்குமுல்ல...அத விட்டுட்டு ஐகோர்ட்டு நோஸ்கோர்ட்டுன்னு போயி இப்பிடியா நோஸ்கட் வாங்குறது! இந்த நாட்டுலதான் இவங்களும் இருக்காங்கன்னு நெனைக்கும் போது ரொம்பவே வியப்பா இருக்கு!

ENNAR said...

இரண்டு பாக்க வாதங்களையும் கேட்டுத்தானே முடிவு சொல்லவேண்டும் (மேலும் ஆட்சியாளர்களின் பரிந்துரையையும் பார்க்கவேண்டும் அல்லது நீதியரசராக இருக்க முடியாது)
இருந்தாலும் நாம் நீதிமன்றங்களை இந்த அளவிற்கு விமர்சிக்கக் கூடாது,

asalamone said...

ஆமாங்கய்யா, உங்களுக்கு தற்பொழுதுதான் தெரிய வருகிறதா நீதி தேவனின் லீலைகள்?
என்றைக்கு இந்திய (கூடி மகான்கள்) குடிமகன்கள் அயோத்தியில் இருக்கும் மஸ்ஜித் யை
கை வைத்தார்களோ அன்றிலிருந்து நீதி அரசர்கள் போடும் நீதியை இவ்வுலகமே பார்த்து
கொண்டு தான் இருக்கிறது. போங்கய்யா உங்கள் நீதி அரசர்களை நீட்டான (Neat) அரசர்கள் தான்
இனி தேவை நம் நாட்டுக்கு

asalamone

Dharumi said...

குமரன் எண்ணம்,
"எல்லாரும் நீதித் துறையை ஒரு வாங்கு வாங்கிருக்காங்க"
அதிலேயே தெரியுதா ஏதோ நெருப்பு இருக்கு; அதுதான் இப்படி புகையுதுன்னு'?

Dharumi said...

ஜிராவா இப்படி ஒரு வழி சொல்றாரு...?

Dharumi said...

என்னார்,
"நீதிமன்றங்களை இந்த அளவிற்கு விமர்சிக்கக் கூடாது, //
இதை முழுமையாக நான் மறுக்கிறேன். அவைகள் என்ன அப்படியான 'புனிதப் பசுக்கள்'? கடவுளர்களே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவைகளாக நினைப்பத்ல்லை; நீங்கள் இந்த நீதிமன்றங்களுக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்கவேண்டுமா என்ன?

Dharumi said...

asalamone ,
எங்கேயோ போய்ட்டீங்க! தென்னமரத்துல தேள் கொட்டினா...பழமொழிதான் நினைவுக்கு வருது.

செந்தில் குமரன் said...

தருமி ஐயா நான் வைத்த சில விவாதங்களுக்கு பதில் இல்லையே?

கால்கரி சிவா said...

தெருவில் இருக்கும் விளக்கிற்கும் விமான ஒடு பாதையில் இருக்கும் விளக்கிற்கும் ஏக பட்ட வித்தியாசங்கள் உள்ளன.

மேலும் சென்னை ஏர்போர்ட்டில் ILS என படும் அதி நவீன இன்ஸ்ட்ரூமெண்ட் லாண்டிங் சிஸ்டம் உள்ளது.

ATC என படும் ஏர் ட்ராபிக் கண்ட்ரோலிடம் ஏக பட்ட உபகரணங்கள் இருக்கின்றன.

இவைகளை மீறி இந்த போர்டுகளில் விமானம் முட்டினால் அந்த விமானிதான் மாங்கா மடையனாக இருக்க முடியும்.

சில மாங்கா மடய விமானிகள் சென்னைக்கும் வந்துள்ளனர்.

உதாரணமாக ஒரு சவூதி விமானி ஒரு இந்திய ஏர் ட்ராபிக் கண்ட்ரோலரின் வார்த்தைக்கு மதிப்பளிக்காமல் தாம்பரத்தில் உள்ள விமான படை ஓடுதளத்தில் விமானத்தை இறக்கினார்.

இந்த விமான ஒடுதளம் மிக சிறியது. விமானம் அங்கிருந்து கிளம்ப முடியாது அதை உடைத்துதான் வெளியெ எடுத்தார்கள்

எங்கேயோ யாருக்கோ சரியான முறையில் காசு வெட்டபடவில்லை அதனால் தான் கேஸ் இப்போ நீதிஅரசர்களின் காட்டில் மழை

Dharumi said...

நாம பேசுன விஷயம் நீதித் துறைக்குத் தெரிந்து விட்டது போலும். தீர்ப்பு Air Port authorities-க்குச் சாதகமாக வந்ததாக தெரிகிறதே! :)

Dharumi said...

குமரன் எண்ணம்,
உங்களை ஏன் முன்னெச்சரிக்கை முனுசாமின்னு சொல்லக் கூடாது? just kidding. right. hope you take it in a lighter vein. சரி விஷயத்துகக்ு வருவோமா?
////இதுதான் சான்ஸ்ன்னு எல்லாரும் நீதித் துறையை ஒரு வாங்கு வாங்கிருக்காங்க.//
ஏன்னு யோ்சிச்சு பாருங்க...அவ்வளவு pent-up feelings மக்களுக்கு. நாட்டு நிலம அப்படிங்க!

//இந்த லைட் வந்து எந்த அளவு தொந்தரவா இருக்குன்னு நாம எப்படி முடிவு செய்ய முடியும்?//
ஆமாங்க...ஆமா... அத நாம முடிவு செய்ய முடியாது. ஏர்போர்ட் காரங்கதான் முடிவு செய்யணும். நீங்களும், நானுமோ, இல்ல வாதிடும் வக்கீல்களோ, நம் நீதியரசர்களோ இல்லை.

//அதனால் ஆபத்து இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறதே அது எந்த அளவு உண்மை?//
அதையும் அவங்கதான சொல்லணும். அதோடு, ஆபத்து ஏதாவது ஏற்பட்டு அதன் மூலம் அந்த ஆபத்து இருக்கிறது என்பதை "உறுதி செய்துவிட்டு'" அதன் பிறகா முடிவெடுக்க முடியும்?

சரிதானே!

Post a Comment