Monday, October 09, 2006

179. அப்சலும், அறிவு ஜீவிகளும்...***

நானும் வேண்டாமென்றுதான் நினைத்தேன். ஆயினும் நட்பு நிறைந்த பதிவர்கள் சிலரும் இந்த விஷயம் பற்றி எழுதியதைப் படித்ததும் என் பொறுமை எல்லை மீறியது. நாமும் ஜோதியில் கலந்துவிட வேண்டியதுதான் என்று நினைத்துக் களத்தில் இறங்கி விட்டேன்.

எல்லாம் அப்சல் விஷயம்தான். பதிவர்கள் பலரின் மனித நேயம் இப்போதுதான் இந்த அளவு பீறிட்டு வருவதைப் பார்க்கிறேன். ஒருவனுக்கு மரண தண்டனை என்றதும் எவ்வளவு பச்சாதாபத்துடன் பரிந்து பரிந்து வரிந்து கட்டிக் கொண்டு பதிவர்கள் வரிசை கட்டி வருகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது ....

சரி, இவ்வள்வு பச்சாதாபத்தோடு வருகிறார்களே அவர்கள் எல்லோரும் இதுவரை இந்த விஷயத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இதற்கு முன்பு வங்காளத்தில் கற்பழிப்புக் குற்றத்திற்காக ஒருவனுக்கு மரண தண்டனை கொடுத்ததும் அரற்றிய கூட்டம்தானே இது. அப்போது கொஞ்சம் கீழ் ஸ்தாயியில் பாடிய பாட்டை இப்போது இன்னும் கொஞ்சம் உச்ச ஸ்தாயியில் அரற்றுகிறார்கள். நடுவில் ஏன் பாட்டை நிப்பாட்டியிருந்தார்களோ தெரியவில்லை. நிப்பாட்டாது தொடர்ந்து அந்தப் பாட்டை நடுவிலும் பாடிக்கொண்டிய்ருந்தாலாவது அவர்கள் பாட்டில் ஏதாவது அர்த்தம் இருந்திருக்கும். அதையெல்லாம விட்டு விட்டு அந்தரத்தில் பாட்டை நிறுத்திவிட்டு இப்போது மிக முக்கியமான ஒரு மனித ஜீவனுக்காகப் பரிந்து கொண்டு வருகிறார்கள்.

இப்போது நம் முன் உள்ள விஷயம் என்ன? நம் நாட்டில் இன்னும் தூக்குத்தண்டனை வழக்கில், சட்டப் படி உள்ளது. அது rarest of the rare cases-ஆக இருக்கட்டும். ஒருவன் நம் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் அளவிற்கு நம் பாராளுமன்றக் கூட்டம் நடக்கும் நேரத்தில் திட்டமிட்ட ஒரு தாக்குதலுக்கு தீவிரவாதிகளுக்கு உதவினான் என்று உயர் நீதி மன்றத்தில் நிறுவப்படுகிறது. நீதிபதிகளும் rarest of the rare cases என்ற முறையில் தூக்குத்தண்டனை விதிக்கிறார்கள். அரசியல்வாதிகளே முதல் கல்லை எறிகிறார்கள் - இந்த தண்டனையிலிருந்து அவனை விடுவிக்க வேண்டுமென்று. அடுத்த படையெடுப்பு நம் அறிவுஜீவிகளிடமிருந்து. ஒரு ஜனநாயக நாட்டில், மரண தண்டனையை இன்னும் வைத்திருக்கும் ஒரு நாட்டில் ஒரு முக்கிய தீவிரவாதத்தைச் சேர்ந்த ஒரு குற்றவாளிக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை. மரணதண்டனைக்கு எதிர்ப்பாளரா நீங்கள். கொஞ்சம் பொறுங்கள்; 20-ம் தேதிக்குப் பிறகு உங்கள் 'பாட்டை'த் தொடங்குங்கள். மரணதண்டனை வேண்டாமென முடிவெடுக்க அரசை நிர்ப்பந்தியுங்கள். மரண தண்டனை இருக்க வேண்டும் என்று நினைக்கும் என் போன்றோரும்கூட உங்களை உங்கள் போக்கில் விட்டு விடுகிறோம். ஆனால் இப்போது ஏன் இந்த கூக்குரல். குற்றவாளி எந்த மதம்; எந்த பகுதியைச் சேர்ந்தவன்; ஏன் அவன் இதைச் செய்தான் என்ற கேள்விகள் இப்போது ஏன்? இந்தக் கேடுகெட்ட சமூகநிர்ப்பந்தமே இதற்குக் காரணம் என்பதெல்லாம் இப்போது ஏன்?

இப்போதைக்கு நம் கண்முன்னால் நிற்பது அப்சலும் அவனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தண்டனையுமே. நமக்குத் தீவிரவாதியாக இருப்பவன், மற்ற ஒரு சாராருக்குப் பெரிய தியாகியாக இருக்கலாம். ஆனால் நமக்கு அவன் யார் , அவன் நமக்கு என்ன செய்தான் என்பதே இப்போதைய நமது 'ஆராய்ச்சியில்' இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு குற்றவாளியின் பின்புலம், காரண காரியம் என்று பேச ஆரம்பித்தால், இருக்கவே இருக்கிறது - human genomics. ஒவ்வொருவரின் ஜீன்களின் பட்டியல் போட்டு aggression-க்கு உரிய gene இவனுக்கு இருப்பதால்தான் இப்படி செய்தான். பாவம் அவன் என்ன செய்ய முடியும்; அவன் ஜீன் அப்படி; ஆகவே அவனைக்கு எந்த தண்டனையும் விதிக்கக்கூடாது என்றுகூட விவாதிக்கலாம். சமூகமே அவனை இக்குற்றம் செய்யத் தூண்டியது. நாம்தான் அவன் குற்றங்களூக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சொல்லலாம். சீரியல் கொலைகாரனைக்கூட அவன் ஜீன்கள் செய்த வேலையென்று அவனை விட்டு விடலாமா? ஜீன்கள் வேண்டாமென்றால், இருக்கவே இருக்கிறது கீதை: 'கொல்பவனும் நானே; கொல்லப்படுபவனும் நானே' என்பது போல எல்லாம் 'அவன் செயல்' என்று விட்டு விடலாமே.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் பின்னால் நடக்கக்கூடியவைகள் என்று ஒரு பட்டியலும் பல பதிவர்கள் கொடுத்துள்ளார்கள். அவனைக் கொன்றால் அவன் சாவுக்குப் பிறகு அவன் ஒரு தியாகியாகக் கருதப்பட்டு மேலும் பலரும் அவன் வழியில் செல்லக்கூடும் என்றொரு வாதம். உண்மைதான். இது வெட்ட வெட்ட வளரும் ஹைட்ரா தான். பெருமளவில் இதை எதிர் கொள்ள நம் அரசு இதுவரை முயலவில்லை. அடுத்து, ஒரு குற்றவாளியைத் திருத்துவதே தண்டனையின் நோக்கமாக இருக்கவேண்டுமாம்.அடித்துப் பிடித்து விளையாடும் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்கலாம். திட்டமிட்டு இது போன்ற வன்செயல்களில் இறங்குவோருக்கு இது ஏற்றதல்ல. அவர்களைக் கொன்றாலும் தீமைதான்; உயிரோடு சிறைக்குள் வைத்திருந்தாலும் தீமைதான். இதில் முதலாவதைச் செய்தால் கொஞ்சம் கூட நன்மை; வசதி. இல்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் இன்னும் பலர் அந்த ஒருவனுக்காக உயிரை இழக்கவேண்டி வரும்.

நீதிபதிகளின் தீர்ப்பில் அவர்கள் எழுதியுள்ள வாசகங்களை வைத்தும் ஒரு விவாதம். பழிவாங்குதலுக்காக தண்டனை இருக்கக்கூடாது; திருத்தும் நோக்கோடு தண்டனை தரப்பட வேண்டுமாம். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் திருந்துகிற ரகமா? இவர்களுக்கு ஆயுள் தண்டனை என்று சொல்லி ஏழெட்டு வருஷம் சிறையில் போட்டாலும், இவர்கள் திருந்தவா போகிறார்கள்? அப்படி வெறும் ஆயுள் தண்டனை கொடுத்தால் இவர்களைத் தலைவர்களாக, தியாகிகளாக கருதாமல் அவர்கள் கூட்டம் இருந்துவிடப் போகிறதா?

விசாரணை ஒழுங்காக நடத்தப்படவில்லை என்றொரு கூற்று. சொல்லுவது யார்? அப்சலுக்கு மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் மட்டுமே இந்த விவாதத்தைக் கொடுக்கிறார்கள். அது இயற்கையே. குற்றவாளி முதலில் ஒப்புதல் வாக்குமூலம் தருவதும், பின் அதை மறுதலிப்பதும் எப்போதும் நடக்கும் ஒன்று. அவன் இக்குற்றத்தில் தொடர்புள்ளவன் என்பதற்கு நான் வாசித்த வரை சான்றுகள் உள்ளன. ஒன்றுக்கு மூன்று கோர்ட்டுகள் அவனைக் குற்றவாளியாகவே முடிவெடுத்துள்ளன.

அப்சலுக்கு மரண தண்டனை கூடாது என்று வாதிக்கும் பதிவர்களிடம் ஒரு ஒற்றுமை காண்கிறேன்: நல்ல விவாதத் திறமை; பெரும் வார்த்தைப் பிரயோகங்கள். அந்தப் பதிவாளர்கள் எல்லோருக்கும் என் வேண்டுகோள்: நிச்சயமாக நான் பொறுமையிழந்து தான் இதை எழுதியுள்ளேன். நிச்சயம் உங்களில் பலரை என் வார்த்தைகள் புண்படுத்தியிருக்கும். அதற்காக மன்னித்துவிடுங்கள். ஆனாலும் ஒரு ஆதங்கம். தேவையில்லாத நேரத்தில், தேவையில்லாத ஒரு மனிதனுக்கு தேவையில்லாத வீண் விவாதங்கள் நடத்துவதாகத் தோன்றியதால் ஏற்பட்ட ஒரு ஆதங்கம்.

கடைசியாக, பாலா அவர்களின் பதிவில் வந்துள்ள ஒரு பின்னூட்டம் (நல்லதொரு பின்னூட்டம்; இருப்பினும் அந்த பின்னூட்டத்தைக் கொடுத்தவர் ஏன் அனானியாக வந்துள்ளார் என்பதை அவர் தான் சொல்லணும்.)ஒரு நல்ல கேள்வியை எழுப்புகிறது. அதுவும் தினமலரில் இப்படி ஒரு கருத்து வந்துள்ளது ஆச்சரியமே. சரி, நம் பதிவாளர்களில் நாம் உண்மையான அறிவு ஜீவி என்று நினைக்கும் ஒருவர் தடாலென்று பொதுப்புத்திக்காரராக மாறிவிடுகிறாரல்லவா, அது போல இருக்கும். இதோ அந்தப் பின்னூட்டம்; அப்சலை தூக்கிலிட வேண்டாம் என்று சொல்லும் ஒவ்வொருவரும் அதற்கு முன் பதிலளிக்க வேண்டிய ஒரு செய்தி இது:

http://balaji_ammu.blogspot.com/2006/10/blog-post_07.html


இன்று தினமலரில் வந்த ஒரு செய்தி கீழே...

-----------------------------------
ஆதரவற்ற சகோதரர்கள் இருவருக்கு விதிக்கப்பட்ட துõக்கு தண்டனையை எதிர்த்து போலீஸ் தரப்பினரே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் இன்னும் மனிதாபிமானம் சாகவில்லை என்பதை உணர முடிகிறது.

பஞ்சாபைச் சேர்ந்த சகோதரர்கள் குர்வெய்ல் சிங் மற்றும் ஜட்ஜ் சிங். கடந்த 2000ம் ஆண்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரை கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த பிறகு, அமிர்தசரஸ் கோர்ட் இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை, பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டும் உறுதி செய்தது. அதன்படி, வரும் 16ம் தேதி இவர்கள் இருவரும் துõக்கிலிடப்பட உள்ளனர்.

படிப்பறிவு இல்லாத, ஏழ்மை நிலையிலுள்ள இந்த சகோதரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யவில்லை. எந்த மனித உரிமை அமைப்பும் இவர்களுக்கு உதவ முன்வரவில்லை. இந்நிலையில், போலீஸ் தரப்பினரே இவர்களுக்காக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த மனு, இந்த வாரம் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. அதன் மூலம், இவர்களை வரும் 16ம் தேதி துõக்கில் போடுவதற்கு, இடைக்கால தடை பெற முடியும் என்று நம்பப்படுகிறது.

பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, ஐந்து போலீசார் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். அந்த வழக்கில், "முக்கிய குற்றவாளி'யாக குற்றம் சாட்டப்பட்ட முகமது அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஆர்ப்பரித்து வருகின்றன. ஆனால், ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற இந்த சகோதரர்களுக்கு எந்தவொரு மனித உரிமை அமைப்பும் உதவ முன்வரவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம்.
-----------------------------------


கீழே இந்த விஷயம் தொடர்பாக நான் வாசித்த சில பதிவுகளும், அவைகளில் நானிட்ட அல்லது பின்னூட்டமிட நினைத்த பின்னூட்டங்களும்:

kumaran ennam
http://kathalregai.blogspot.com/2006/10/blog-post_07.html

இந்த மரண தண்டனைகள் கொடுக்கப் படுவதால் ஒரு வெற்றியும் கிட்டுவதாக//

இதில் என்ன 'வெற்றி/ தோல்வி'. செய்த செயலுக்குக் கொடுக்கப்படும் தண்டனை; அவ்வளவே.
---------------

muthu thamizini
http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_116020914804334117.html

திருத்தமாக எழுதவில்லைபோல் தெரிகிறதே!

---------------------
selvan
http://holyox.blogspot.com/2006/10/184.html

முழுமையாக நான் ஆமோதித்த பதிவு

------------------------
சமுத்ரா -
http://vettri.blogspot.com/2006/10/blog-post_05.html

ஆர்பாட்டங்களில் மிஞ்சி போனால் ஐநூறு கஷ்மீரிகள் கலந்து
கொண்டு 'போராடி' இருப்பார்கள். அதுவும் ஸ்ரீநகரில் மட்டும் தான்.//
=====================

meena
http://www.tamiloviam.com/unicode/09280601.asp
தூக்கில் போடுங்கள் அப்சலை

=============
நல்லடியார்
http://athusari.blogspot.com/2006/10/blog-post_07.html

முதல் நான்கு பத்திகளும் மிக நன்றாக எழுதிவிட்டு, பிறகு வழுக்கி விட்டீர்கள். இப்போதைக்கு நம் முன் உள்ள கேள்வி அப்சலுக்கு தண்டனை சரியா இல்லையா? என்பதுதான்.
அவனை நிறுத்தச் சொல்; இவரும் நிறுத்துவார் என்பதற்கெல்லாம் இப்போதுதானா நேரம்
==========
ரோசா வசந்த்
http://rozavasanth.blogspot.com/2006/10/blog-post_116013846931461247.html
//வழக்கம் போல மிக முட்டாள்தனமான, மிக கயமைத்தனமான ஒரு வாதம் முன்வைக்கப் படுகிறது. அஃப்சலின் தூக்கு தண்டனையை எதிர்ப்பவர்கள் விளம்பரத்திற்காகவும், சுய ஆதாயத்திற்காகவும் அதை செய்வதாக சொல்வது; இன்று இருக்கும் தேசியம் சார்ந்த ஜுரத்தின் இடையில், இந்திய பாராளுமன்றத்தை தாக்கியதாக தீர்ப்பளிக்கப் பட்ட நபருக்கு ஆதாரவாக குரல் கொடுத்தால், வசையும் தேசத்துரோகி பட்டமும், உளவுத்துறையின் கண்காணிப்பும், பொதுமக்களின் கண்டனமும் வந்து குவியுமா, விளம்பரமும் ஆதாயமும் வந்து குவியுமா என்பது மேலோட்டமான சிந்தனை கொண்ட அவர்களுக்கே மிக நன்றாக தெரியும். எதிராளியின் நேர்மையை அங்கீகரிக்கும் உன்னத மனநிலையை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்றாலும், குறைந்த பட்சம் பொருந்த புளுகும் தன்மைகூட இவர்களிடம் கிடையாது என்பதற்கான உதாரணம் இது//

உங்கள் பதிவுக்கு உங்கள் வார்த்தைகளாலேயே பின்னூட்டமிட ஆவல்:

மிக முட்டாள்தனமான, மிக கயமைத்தனமான ஒரு வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது
=====================

http://kuzhali.blogspot.com/2006/10/blog-post_07.html

அப்ப அதுவும் இதுவும் ஒன்னுங்குறீங்க. வெளங்குனாப்புலதான்.
so sad. never expected such a post from you.
i strongly suggest that you remove this post.


=====================

http://nunippul.blogspot.com/2006/10/blog-post_06.html

ஆனால் அரசியல் சார்ந்த குற்றங்களுக்கு மரண தண்டனை சரியில்லை என்பது என் அபிப்ராயம்.
நாகரீகம் வளர்ந்து வரும் சூழ்நிலையில் ஒரு மனிதனின் உயிரைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இந்த கற்கால பழக்கம் தேவையா என்ன?

//தேவை//
======================

http://ravisrinivas.blogspot.com/2006/10/blog-post.html
மன்னிப்பு வழங்குவது என்பது இந்தியாவைத் தாக்குங்கள்,இந்தியர்களை கொல்லுங்கள், நாட்டில் குழப்பம் விளைவியுங்கள், சேதம் ஏற்படுத்துங்கள் என்றுதீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுவதற்கு சமம்.

i fully endorse this view.
========================
prapuraajadurai
http://marchoflaw.blogspot.com/2006/10/blog-post_07.html
தாக்குதலில் இறந்த பதினொரு நபர்களின் உயிருக்கு என்ன பதில்?’ என்ற கேள்வியில் ஆதி நோக்கமான பழிவாங்குதலே மிகுந்திருப்பதை உணர்ந்தேன்
இந்திய நாட்டின் மீதான் போர் தொடுத்தது உட்பட அனைத்து குற்றங்களுக்காகவும் முகமது அப்சல் குற்றவாளி என்று தீர்க்கப்படுவதும், தண்டிக்கப்படுவதும் சட்டரீதியில் தவறான செயல் அல்ல!//

உங்கள் முடிவு என்ன என்பதற்கு ஒரு தனி விளக்கம் தேவையாக் இருக்கிறது. why not you people call a spade a spade?

if my views on this is to be known, no other case could be more appropriate than this to have the culprit hanged.

=========================
சிறில்
http://theyn.blogspot.com/2006/10/blog-post_116017075313200990.html
===================

http://abumuhai.blogspot.com/

குற்றவாளிகளை தண்டிப்பதில் குறுக்கே நிற்கும் ''கருணை மனு'' மற்றும் ''பொது மன்னிப்பு'' போன்ற சமாச்சாரங்கள் குற்றவாளிகளை ஊக்கப்படுத்துமே தவிர குற்றங்களை குறைக்க உதவாது. நீதி தன் கடமையைச் செய்வதற்கு இதெல்லாம் தடைக்கல்லாகத்தான் இருக்கிறது!
===========================


http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_116020914804334117.html
திருத்தமாக எழுதவில்லை
=============================

http://balaji_ammu.blogspot.com/2006/10/blog-post_07.html

அரசும், சட்டமும், சமூகமும் நம்பிக்கையூட்டும் வண்ணம் செயலாற்றுவது மிக அவசியம் ! //

ஆகவே, இந்த தூக்குத் தண்டனை எனக்குச் சரியாகவே தோன்றுகிறது....என்று நான் முடித்துக் கொள்ளலாமா....?

=================

http://wethepeopleindia.blogspot.com/2006/10/blog-post.html
அப்சலுக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க ப்ளீஸ்!
=================

http://selvanayaki.blogspot.com/2006/10/blog-post_09.html


================
http://thekkikattan.blogspot.com/2006/10/blog-post_09.html

அந்த தளம் இப்போது தேவைதானா என்பது என் கேள்வி.
================



***இப்பதிவு 16.10.'06 "பூங்கா"வில் இடம் பெற்றது. (2)


*

43 comments:

Muthu said...

நல்ல பதிவு :))

Unknown said...

பார்ட்னர்

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.தேசம் பத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை துளிர்ப்பதே இப்படி சிந்திப்பவர்களை கண்டபின் தான்.இன்றைய இந்து பத்திரிக்கையில் ஜாதி,மதம் தாண்டி அனைவரும் இதே போல் குரல் கொடுத்திருந்தனர். அதை படித்த பின்னும், வலைபதிவுகளில் உங்கள் மற்றும் பலரின் பதிவுகளையும் படித்த பின் தான் நம்பிக்கையே வந்தது. தீவிரவாதத்தை தாண்டி இந்தியா வெல்லும் என்று.

இது நம் நாடு, நம் தேசம், நம் வீடு. நாம் தான் இதை காப்பாற்ற வேண்டும். வேறென்ன சொல்ல?

லிவிங் ஸ்மைல் said...

இந்த (இது தொடர்பான எந்த) பதிவைப் படிக்காமலே இந்த பின்னூட்டமிடுகிறேன்.

தண்டனையின் நோக்கம் திருத்துவது மட்டுமே... ஆனால், மரண தண்டனையில் குற்றவாளி திருந்துவதற்கான வாய்ப்பேது...?

ஆயுள் தண்டனை/இன்ன பிற ஏதேனும் தரலாம் தானே!!

அரசாகவே இருந்தாலும் ஒருவரின் உயிரைக் கொள்ளும் கிடையாது தானே...?! அவன் பல உயிர்களைக் கொன்றான் என்பதற்காக அவனைக் கொல்ல அவனது வாரிசு ஒருவன் என் தந்தயை கொன்றதற்காக இந்த அரசைக் கொள்வேன் என்று கிளம்பினால் அது எத்தகைய காமிடி என்று நினைத்துப் பாருங்கள்..

தீவிரவாதம் என்று புறப்பட்டவர்களுக்கு உயிர் ஒரு பொருட்டாக இருக்க முடியாது. எனவே, இந்த தண்டனையால் எந்த தீவிரவாதியும் திருந்திடப் போவதுமில்லை..

எனக்கென்னவோ, இந்திய அரசு மக்கள் மனதை நாட்டுப் பற்று என்ற பெயரால் திசை திருப்பி தங்களை மிகப் பொறுப்புள்ள அரசாக காட்டிக் கொள்ள விரும்புகிறது..

அப்படிப் பார்த்தால், இன்று மக்களிடம் வரியை வாங்கி; அவர்களின் உழைப்பை உருஞ்சி வயிறு வளர்க்கும் அரசியல் பொறுக்கிகளுக்கும், உலகமயமாக்கலின் மூலம் இந்தியாவையே அடகு வைக்க உழைத்துவரும் நல்லவர்களுக்கும்... சரி, எவ்வளவோ நாட்டில் அநியாயம் அக்கிரமம் அரசே officialஆக முன்னின்று செய்கிறதே....!! எந்த அரசு தூக்குத் தண்டனை தரப் போகிறது...?

** மிக கவனம் நான் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.

மனதின் ஓசை said...

நல்ல பதிவு..
முத்து பதிவில் உள்ள கருத்துக்களும் யோசிக்க வேண்டியவை என்பது என் எண்ணம். நீங்கள் கூறுவது பொல அப்சலை விட்டு விட்டு இதனை யோசித்தால் நல்லது.

bala said...

தருமி அய்யா,

ஒரு வாசகம் சொன்னலும், தருமி வாசகமா சொல்லியிருக்கீங்க.

பாலா

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

தருமி ஐயா ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க வழக்கமா ஆராய்ச்சி அதிகமாகவும், உணர்வுகள் கம்மியாகவும் வெளிப்பட்டுத்தான் உங்களின் பதிவைப் பார்த்திருக்கிறேன். ஆனால் உணர்வுப்பூர்வமாக எழுதி இருக்கிறீர்கள். ரொம்ப நல்லா இருந்தது.

என்னுடைய நிலைப் பாட்டை இன்னொரு முறை சொல்லி விடுகிறேன். அப்சலின் இந்தச் செயலுக்கு இந்த சமூகமும் ஒரு காரணமாக இருந்தால் அவன் கொல்லப்படும் சமயம் எனக்கு கொஞ்சம் வருத்தம் ஏற்படும்.

ஏனெனில் குற்றவாளிகளை தண்டிக்க நாம் எடுக்கும் தீவிரத்தை அப்பொழுது நாம் வெளிக்காட்டும் வேகத்தை குற்றவாளிகள் உருவாக ஏதுவாக இருக்கும் விஷயங்களை களைய நாம் எடுப்பதில்லை.

காஷ்மீர் என்ற சொர்க்க பூமி இன்னும் எத்தனை காலம் நரகமாகவே இருக்கப் போகிறது.

இதற்கு எதிர்வினை இந்தியாவும் அனுபவிக்கும் பாகிஸ்தானும் அனுபவிக்கும்.

சமீபத்தில் நான் படித்த ஒரு செய்தி.

1975க்குப் அப்புறமாக ஒரு மசூதி/கோயில் பிரச்சனை இருக்கும் இடத்தில் ஒரு விழா நடத்த கூட்டணி ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க தீவிரம். பா.ஜ.க தலைவர் இதனை எதிர்பார்த்துதான் மக்கள் எங்களை தேர்தெடுத்திருக்கிறார்கள் என்று பேட்டி.

http://www.hinduonnet.com/2004/12/26/stories/2004122603250400.htm

http://www.ndtv.com/morenews/showmorestory.asp?id=93550&frmsrch=1&txtsrch=karnataka%2C1975

இதை அங்கு கலவரம் நடந்து சில நூறு உயிர்கள் போன பின்னால் தான் நாம் கவனிப்போம்.

இதெல்லாம் இருக்கும் வரை அப்சல் போன்றவர்கள் இறக்கும் பொழுது இந்த சமூகத்தில் நானும் ஒரு அங்கம் வகிக்கிறேன் என்ற முறையில் எனக்கு வருத்தம் இருக்கத் தான் செய்யும்.

இதெல்லாம் என் நிலைப்பாடு இதில் சரி என்றெல்லாம் சொல்லவில்லை தவறாகவும் இருக்கலாம் இருந்தால் உணரும் சமயம் திருத்திக் கொள்வேன்.

அருள் குமார் said...

தேவையான நேரத்தில், அவசியமான பதிவு.

நன்றி.

Hariharan # 03985177737685368452 said...

தருமி சார்,

கண்டிப்பாக மரண தண்டனை நிறைவேற்றப்படவேண்டும்.

உயிரோடு வைத்திருக்கும் எந்த தண்டணையும் முப்தி முகமது சயீத்தின் மகளை விடுவிக்கவும் மற்றும் ஆயுள் தண்டனை லஷ்கர் தீவிரவாதி மசூத் ஆசார் விஷயத்தில் 1999-2000 வருஷம் காந்தஹாருக்கு இந்திய விமானக்கடத்தல் பிணைக்கைதிகள் விடுவிப்புக்கு பேரம் என்று வழிவக்குத்த மாதிரி இன்னொரு தேசிய அவமான பேரத்திற்கு வழி வகுக்கும்.

வஜ்ரா said...

//
vajra
http://vettri.blogspot.com/2006/10/blog-post_05.html

//

இது என் பதிவு அல்ல. சமுத்ராவினுடையது. திருத்திக் கொள்ளவும்.

தருமி said...

vajra,
i have made the correction. sorry.
thanks too.

Unknown said...

//தண்டனையின் நோக்கம் திருத்துவது மட்டுமே... ஆனால், மரண தண்டனையில் குற்றவாளி திருந்துவதற்கான வாய்ப்பேது...?//

தடுப்பதும் தண்டனையின் நோக்கம் தான். திருத்துவது மட்டுமல்ல.

//அரசாகவே இருந்தாலும் ஒருவரின் உயிரைக் கொள்ளும் கிடையாது தானே...?! அவன் பல உயிர்களைக் கொன்றான் என்பதற்காக அவனைக் கொல்ல அவனது வாரிசு ஒருவன் என் தந்தயை கொன்றதற்காக இந்த அரசைக் கொள்வேன் என்று கிளம்பினால் அது எத்தகைய காமிடி என்று நினைத்துப் பாருங்கள்.. //

நீதிமன்றம் முறையாக விசாரித்து நீதி வழங்கும்போது அதை எதிர்த்து எவனோ கிளம்பினால் அதுக்கு பயப்பட முடியுமா?

திருந்துசெங்கோல் வளையாமை வேண்டும் அரசனுக்கு:)

//தீவிரவாதம் என்று புறப்பட்டவர்களுக்கு உயிர் ஒரு பொருட்டாக இருக்க முடியாது. எனவே, இந்த தண்டனையால் எந்த தீவிரவாதியும் திருந்திடப் போவதுமில்லை..//

தீவிரவாதியை திருத்த இந்த தண்டனை இல்லை.

//அப்படிப் பார்த்தால், இன்று மக்களிடம் வரியை வாங்கி; அவர்களின் உழைப்பை உருஞ்சி வயிறு வளர்க்கும் அரசியல் பொறுக்கிகளுக்கும், உலகமயமாக்கலின் மூலம் இந்தியாவையே அடகு வைக்க உழைத்துவரும் நல்லவர்களுக்கும்... சரி, எவ்வளவோ நாட்டில் அநியாயம் அக்கிரமம் அரசே ஒffஇcஇஅல்ஆக முன்னின்று செய்கிறதே....!! எந்த அரசு தூக்குத் தண்டனை தரப் போகிறது...?//

நல்ல கேள்வி.அவனுக்கு நாளை தண்டனை கிடைகலாம்.கிடைக்காமலும் போகலாம். அதற்காக யாருக்கும் தண்டனை தரக்கூட்டாது என்கிறீர்களா?

//** மிக கவனம் நான் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.//

:-))

கசி said...

நல்ல பதிவு.

ஆனால் கிறிஸ்துவ பாதிரியார்களைக் கொன்றவர்களுக்கு மட்டும் மன்னிப்பு கட்டாயம் வேண்டும். அப்சலுக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும்.

enRenRum-anbudan.BALA said...

புரொபஸரின் அலசல் நன்றாகவே இருக்கிறது, புரொபஸர் அல்லவா :)

அங்கங்கே சில சாட்டையடிகளும் உள்ளன ! நான் உங்களுடன் ஒத்துப்போகும் சிலவற்றைச் சுட்ட விருப்பம். (அப்ப தானே, இவன் முழுசா பதிவைப் படிச்சான்னு இங்க சில பேர் ஒத்துப்பாங்க ;-))

1. மரணதண்டனைக்கு எதிர்ப்பாளரா நீங்கள். கொஞ்சம் பொறுங்கள்; 20-ம் தேதிக்குப் பிறகு உங்கள் 'பாட்டை'த் தொடங்குங்கள். மரணதண்டனை வேண்டாமென முடிவெடுக்க அரசை நிர்ப்பந்தியுங்கள். மரண தண்டனை இருக்க வேண்டும் என்று நினைக்கும் என் போன்றோரும்கூட உங்களை உங்கள் போக்கில் விட்டு விடுகிறோம். ஆனால் இப்போது ஏன் இந்த கூக்குரல். குற்றவாளி எந்த மதம்; எந்த பகுதியைச் சேர்ந்தவன்; ஏன் அவன் இதைச் செய்தான் என்ற கேள்விகள் இப்போது ஏன்? இந்தக் கேடுகெட்ட சமூகநிர்ப்பந்தமே இதற்குக் காரணம் என்பதெல்லாம் இப்போது ஏன்?

2. நமக்குத் தீவிரவாதியாக இருப்பவன், மற்ற ஒரு சாராருக்குப் பெரிய தியாகியாக இருக்கலாம். ஆனால் நமக்கு அவன் யார் , அவன் நமக்கு என்ன செய்தான் என்பதே இப்போதைய நமது 'ஆராய்ச்சியில்' இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு குற்றவாளியின் பின்புலம், காரண காரியம் என்று பேச ஆரம்பித்தால், இருக்கவே இருக்கிறது - human genomics.

3. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் திருந்துகிற ரகமா? இவர்களுக்கு ஆயுள் தண்டனை என்று சொல்லி ஏழெட்டு வருஷம் சிறையில் போட்டாலும், இவர்கள் திருந்தவா போகிறார்கள்? அப்படி வெறும் ஆயுள் தண்டனை கொடுத்தால் இவர்களைத் தலைவர்களாக, தியாகிகளாக கருதாமல் அவர்கள் கூட்டம் இருந்துவிடப் போகிறதா?

4. அப்சலுக்கு மரண தண்டனை கூடாது என்று வாதிக்கும் பதிவர்களிடம் ஒரு ஒற்றுமை காண்கிறேன்: நல்ல விவாதத் திறமை; பெரும் வார்த்தைப் பிரயோகங்கள். (இவர்களில் ரோசாவை முக்கியமானவராகப் பார்க்கிறேன், எதிர்த்தரப்பில், வேற யாரு, நம்ம முகமூடி தான்! முகமூடியின் பதிவை வாசீத்தர்களா, தருமி, நீங்க அது பத்தி கருத்து சொல்லணும் என்பது என் விருப்பம்)

//கடைசியாக, பாலா அவர்களின் பதிவில் வந்துள்ள ஒரு பின்னூட்டம் (நல்லதொரு பின்னூட்டம்; இருப்பினும் அந்த பின்னூட்டத்தைக் கொடுத்தவர் ஏன் அனானியாக வந்துள்ளார் என்பதை அவர் தான் சொல்லணும்.)ஒரு நல்ல கேள்வியை எழுப்புகிறது.
//
எனக்கு "கிராமத்து அரட்டை அரசியல்" மேட்டர்களை மெயிலில் அனுப்பும் அனானி தான், நீங்கள் குறிப்பிடும் பின்னூட்டத்தையும் இட்டவர் என்ற தகவலை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன் !

இறுதியாக,

//அரசும், சட்டமும், சமூகமும் நம்பிக்கையூட்டும் வண்ணம் செயலாற்றுவது மிக அவசியம் ! //

ஆகவே, இந்த தூக்குத் தண்டனை எனக்குச் சரியாகவே தோன்றுகிறது....என்று நான் முடித்துக் கொள்ளலாமா....?
//
ஏதாவது ஒரு நிலைப்பாடு எடுத்தாத் தான் என்னய உடுவீங்க போலருக்கு, என் வாயிலிருந்து வார்த்தையைப் பிடுங்கும் இந்த முயற்சிக்கு என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் :)

நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

வஜ்ரா said...
This comment has been removed by a blog administrator.
வஜ்ரா said...

//
ரோசா வசந்த்
http://rozavasanth.blogspot.com/2006/10/blog-post_116013846931461247.html
//வழக்கம் போல மிக முட்டாள்தனமான, மிக கயமைத்தனமான ஒரு வாதம் முன்வைக்கப் படுகிறது. அஃப்சலின் தூக்கு தண்டனையை எதிர்ப்பவர்கள் விளம்பரத்திற்காகவும், சுய ஆதாயத்திற்காகவும் அதை செய்வதாக சொல்வது; இன்று இருக்கும் தேசியம் சார்ந்த ஜுரத்தின் இடையில், இந்திய பாராளுமன்றத்தை தாக்கியதாக தீர்ப்பளிக்கப் பட்ட நபருக்கு ஆதாரவாக குரல் கொடுத்தால், வசையும் தேசத்துரோகி பட்டமும், உளவுத்துறையின் கண்காணிப்பும், பொதுமக்களின் கண்டனமும் வந்து குவியுமா, விளம்பரமும் ஆதாயமும் வந்து குவியுமா என்பது மேலோட்டமான சிந்தனை கொண்ட அவர்களுக்கே மிக நன்றாக தெரியும். எதிராளியின் நேர்மையை அங்கீகரிக்கும் உன்னத மனநிலையை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்றாலும், குறைந்த பட்சம் பொருந்த புளுகும் தன்மைகூட இவர்களிடம் கிடையாது என்பதற்கான உதாரணம் இது//

உங்கள் பதிவுக்கு உங்கள் வார்த்தைகளாலேயே பின்னூட்டமிட ஆவல்:

மிக முட்டாள்தனமான, மிக கயமைத்தனமான ஒரு வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது
//

ஏதோ, நீங்க சொல்லி அவருக்குப் புரிஞ்சா சரி.

நாங்க சொன்னா, நாங்கள்லாம் இந்துத் தீவிரவாதி, இந்துத்வா குழந்தை, இந்துத்வா தாத்தா என்று சொல்வார். சோறு தான் திங்கிறியா என்று கேட்பார். இல்ல, மனுசனே இல்ல என்று சர்டிபிக்கேட் கொடுப்பார்.

Anonymous said...

It's all total nonsense to give such a coverage to this guy...especially after 3 courts confirmed his wrong action. I agree your words...
/*
ஒரு ஆதங்கம். தேவையில்லாத நேரத்தில், தேவையில்லாத ஒரு மனிதனுக்கு தேவையில்லாத வீண் விவாதங்கள் நடத்துவதாகத் தோன்றியதால் ஏற்பட்ட ஒரு ஆதங்கம்.
*/

In the opposors talk, I accept the genuinity of "no-killing", but anything else in their talk is utter "bull-shit". Even that "no-killing" talk, let's start after 20th and give the benefit to a low profile case (guys killed others in family feud, etc).

-KVD.

-/சுடலை மாடன்/- said...

//நிச்சயமாக நான் பொறுமையிழந்து தான் இதை எழுதியுள்ளேன்//
//தேவையில்லாத நேரத்தில், தேவையில்லாத ஒரு மனிதனுக்கு தேவையில்லாத வீண் விவாதங்கள் நடத்துவதாகத் தோன்றியதால் ஏற்பட்ட ஒரு ஆதங்கம். //

அன்புள்ள தருமி ஐயா,

வழக்கமாக மிகவும் ஆராய்ந்து எழுதும் நீங்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டதாக நினைக்கிறேன். அதனால் தான் இது வரை உங்கள் பதிவைப் பாராட்டக் கூட வராத நான் பின்னூட்டமிடுகிறேன் :-). தற்பொழுது அப்சலின் மரணதண்டனையையொட்டி வரும் அனைத்துப் பதிவுகளையும் படித்ததில்லை. படித்த ஒரு சிலவற்றில் பின்னூட்டமிட்டது ரோச வசந்த் மற்றும் செல்வநாயகியின் பதிவுகள் மட்டும்தான். செல்வநாயகியின் பதிவு அப்சலின் மரணதண்டனை பற்றி நேரடியாகக் கருத்துச் சொல்லாமல், அதோடு தொடர்புடைய மற்ற விசயங்களை பொதுவாக விவாதித்தது.

ரோச வசந்தின் பதிவு அப்சலுக்கு மரணை தண்டனை வழங்கியே தீர வேண்டும் என்ற பொதுப்புத்தியை விமர்சித்து முக்கியமான இரண்டு விசயங்களை முன் வைத்தது. ஒன்று, மனித நாகரீக வளர்ச்சியடிப்படையில் மரணதண்டனை ஒரு கற்கால வழிமுறை என்ற அவதானிப்பால் மரண தண்டனைக்கேயான எதிர்ப்பு. நீங்கள் அதை பின்னால் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டீர்கள். சரி ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அதில் அவரது கயமைத்தனம் என்னவென்று தெரியவில்லை.

ரோசா வசந்தின் இரண்டாவது காரணம் - இராஜீவ் கொலை வழக்கு மற்றும் கிலானி வழக்குகளை வைத்து மரண தண்டனை தவறுதலாக வ்ழங்கக் கூடிய சாத்தியம் இருப்பதால், தண்டனை வழங்கியபின் அதில் பின்னோக்கிச் செல்ல முடியாது என்ற ஆதங்கத்தில் அப்சல் முக்கியமான குற்றவாளி என்று திட்ட வட்டமான ஆதாரங்களின் அடிப்படையில் உறுதி செய்யப் படாத நிலையில் எதிர்க்கிறார். மதுரையைச் சேர்ந்த உங்களுக்கு கோவலன் கதையை நினைவுறுத்த வேண்டியதில்லை. இந்த இரண்டாவது காரணத்திலும் என்ன கயமைத்தனம் இருக்கிறது என்று தெரியவில்லை. நீங்கள் அந்த காரணத்தைப் பற்றி எந்தக் கருத்தையுமே வைக்க வில்லை.

கிலானி கொலை வழக்கு சம்பந்தமான மூன்று பழைய இந்துப் பத்திரிகைச் சுட்டிகளை அளிக்கிறேன். நீங்களே முடிவு செய்துங்கள்.

1. To see how easily an innocent man can be misunderstood and suspected by circumstantial evidences and sentenced to death. -- Kashmiri Pandit's key role in Geelani's acquittal

2. After getting acquitted, Mr. Geelani said his experience at the hands of the system, which had targeted him "as a Kashmiri", had made him "stronger... to stand against oppression and to fight for the rights of the people of Kashmir." -- Will fight oppression: Geelani
ஒரு அப்பாவியைத் தண்டிக்க முனைந்ததின் விளைவு எப்படியிருக்கும் என எண்ணுங்கள்.

3. இரகு என்ற தேசபக்தி மிக்க மேதாவியின் கயமைத்தனமான வாசகர் கடிதம் இங்கே: Sir, — Before criticising the criminal justice system after his release from jail, Mr. Geelani should have remembered that he is free because of the same system which requires strict proof of guilt. - S. Raghu, Chennai


இவரைத் தூக்கிச் இரண்டு நாட்கள் மட்டுமே (இரண்டு ஆண்டெல்லாம் வேண்டாம்) சிறையில் போட்டுச் சித்திரவதை செய்திருந்தால் இந்த மாதிரி புத்திமதியை கிலானிக்கு வழங்குவாரா?

இவரைப்போல் எழுதும் வஜ்ராக்கள்-இரவி ஸ்ரீனிவாஸ்கள்- செல்வன்களின் வாதங்களை கயமைத்தனம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?

நன்றி - சொ. சங்கரபாண்டி

செல்வநாயகி said...

///தருமி ஐயா ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க வழக்கமா ஆராய்ச்சி அதிகமாகவும், உணர்வுகள் கம்மியாகவும் வெளிப்பட்டுத்தான் உங்களின் பதிவைப் பார்த்திருக்கிறேன். ஆனால் உணர்வுப்பூர்வமாக எழுதி இருக்கிறீர்கள். ரொம்ப நல்லா இருந்தது.////

இதில் உள்ளதை அப்படியே வழிமொழியமுடியவில்லை என்னால்.


///வழக்கமா ஆராய்ச்சி அதிகமாகவும், உணர்வுகள் கம்மியாகவும் வெளிப்பட்டுத்தான் உங்களின் பதிவைப் பார்த்திருக்கிறேன். ஆனால் உணர்வுப்பூர்வமாக எழுதி இருக்கிறீர்கள்.///

இதை மட்டும் வழிமொழிகிறேன். நீங்கள் இதை உணர்வுபூர்வமாக மட்டுமே அணுகுவதால்தான் இந்த நிலைப்பாட்டில் நிற்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

///இந்தத்தளம் இப்போது தேவைதானா?///

இதற்கு என் பதில்: ஆடிக்கொரு நாள், அமாவாசைக்கொருநாள்தான் இந்தப் புள்ளை எழுதும்னு அருக்காணி சொன்னா அதுக்கு ஆமாஞ்சாமி போடவேண்டீது. இப்பச் சீக்கிரமாவே இன்னொரு பதிவு எழுதியிருக்குதே புள்ளைனு பாக்காம இந்தத்தளத்துல எதுக்கு எழுதுனேன்னு கேக்கவேண்டியது:)) உங்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன் நானு:))

நாடோடி said...

//
இவரைத் தூக்கிச் இரண்டு நாட்கள் மட்டுமே (இரண்டு ஆண்டெல்லாம் வேண்டாம்) சிறையில் போட்டுச் சித்திரவதை செய்திருந்தால் இந்த மாதிரி புத்திமதியை கிலானிக்கு வழங்குவாரா?

இவரைப்போல் எழுதும் வஜ்ராக்கள்-இரவி ஸ்ரீனிவாஸ்கள்- செல்வன்களின் வாதங்களை கயமைத்தனம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?

நன்றி - சொ. சங்கரபாண்டி

சொன்னவர்: சுடலை மாடன் | 10/11/2006 03:33:00 AM//

சுடலை மாடன் வீட்ல சின்னதா ஒரு குண்டு வச்சா என்ன பண்ணுவாருனு கேட்டு சொல்லுங்க அய்யா...

தருமி said...

முத்து(தமிழினி),
செல்வன்,
மனதின் ஓசை,
பாலா(அதென்ன தருமி வாசகம் அப்டின்னா?)
KVD,
ஹரிஹரன்,
வஜ்ரா,

அனைவருக்கும் மிக்க நன்றி

தருமி said...

லி.ஸ்.வித்யா,
//தண்டனையின் நோக்கம் திருத்துவது மட்டுமே... //
உங்களுடைய இக்கருத்தில் முரண்படுகிறேன். தண்டனை என்றாலே செய்த தவறுக்கு அளிக்கப்படுவதுதான். இது தண்டனை பெற்றவனைத் திருத்துமா, திருத்தாதா, திருத்த வேண்டுமா, வேண்டாமா என்பதல்லாம் secondary. primary - தவறு செய்தவன் தண்டனை அனுபவிக்கணும்.

தருமி said...

குமரன் எண்ணம்,
"அவன் கொல்லப்படும் சமயம் எனக்கு கொஞ்சம் வருத்தம் ஏற்படும்."

நம் தனிப்பட்ட வருத்தங்களோ சந்தோஷங்களோ இங்கே நடப்ப்புகளைத் தீர்மானிக்கக் கூடாதே.

தருமி said...

கிருஷ்ணா,
//கிறிஸ்துவ பாதிரியார்களைக் கொன்றவர்களுக்கு மட்டும் மன்னிப்பு கட்டாயம் வேண்டும்.//

என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லையே.

தருமி said...

என்றென்றும் அன்புடன் பாலா ,

கண்டனம் மட்டும் சொல்வதால் நீங்கள் எடுத்ததாய் நான் நினைத்த உங்கள் நிலைப்பாடு சரியென்று தெரிகிறது. நன்றி.

//முகமூடியின் பதிவை வாசீத்தர்களா, தருமி, நீங்க அது பத்தி கருத்து சொல்லணும் என்பது என் விருப்பம்)//

ஏங்க, இப்படி மாட்டி உடுறீங்க? அந்தக் காலத்துல robert ludlum இருக்காரே அவர் கதை கொஞ்சம் வாசிச்சது உண்டு. அவர் நாவலை எடுத்தா குறைஞ்சது முதல் 50-60 பக்கம் வரைக்கும் ஒண்ணுமே புரியாது; அதுக்குப் பிறகுதான் என்ன ஏதுன்னு கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிக்கும். அது மாதிரி நான் ரொம்ப கஷ்டப்பட்டு அவர் எந்தப் பக்கம் பேசுறார்னு தெரிஞ்சிக்கிட்டதை, நான் பாட்டுக்கு - அவர் பதிவில் சைடு குத்துக்கு ரொம்ப இடம் கொடுத்ததால், மெயினான நேர் குத்து கொஞ்சம் மொட்டையாகிப் போச்சுன்னு - சொல்ல அவர் அதுக்கு ரெண்டு குத்து விட்டா நானெங்கே போறது'ங்க!

தருமி said...

சுடலை மாடன்,

//இது வரை உங்கள் பதிவைப் பாராட்டக் கூட வராத (அப்போ பாராட்ற அளவுக்குக் கூட நான் எழுதியிருந்திருக்கிறேன் என்கிறீர்கள்; அப்படித்தானே!) நான் பின்னூட்டமிடுகிறேன் :-). //

இதற்காகவே நான் உங்களுக்கு நன்றி சொல்லணும். இடித்துறைக்க வந்தமைக்கு மீண்டும் மிக்க நன்றி.

கொடுத்த சுட்டிகளுக்கு நன்றி.

//மரணதண்டனை ஒரு கற்கால வழிமுறை என்ற அவதானிப்பால் ../
இந்த அவதானிப்பை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அரக்கத்தனமான தப்பு செய்தவர்களுக்கும், இதுபோன்ற தீவிரவாதக் குற்றங்களுக்கும் மரண தண்டனையே சரியான முடிவு என்பதே என் அவதானிப்பு.


கோவலன் கதை சுட்டியிருக்கிறீர்கள். கிலானி விஷயமும் அப்படிப் பட்டதே.
நம் நீதி மன்றங்களில் சின்ன குற்றங்களுக்குத் தரப்படும் பெரிய தண்டனைகள் மீது எனக்கு எந்த கேள்வியுமல்ல. ஆனால் பெரிய குற்றங்களுக்குக் கொடுக்கப் படும், அல்லது கொடுக்கப்படாமலே போகும் போக்கின்மீது எனக்கு கேள்விகள் உண்டு. கோடி கோடியாய் ஷேர் மார்க்கட்டில் கொள்ளை அடித்த ஹர்ஷத் மேத்தாவுக்கும், பொய்ப்பத்திரங்கள் அடித்தவர்களுக்கும், நமது பல அரசியல்வாதிகளுக்கும் அளிக்கப்படாத தண்டனைகளால் எனக்கு நம் நீதித்துறையின்மீது கேள்விகள் உண்டு. போகிற போக்கில் பார்த்தால் தீவிரவாதிகளுக்கு எதிரே வரும் கேஸ்களும் நம் அரசியல்வாதிகளுக்கு எதிர்த்து வரும் கேஸ்கள் போலவே நீர்த்துப் போக வைத்து விடுவீர்கள் போலும்.

16-ம்தேதி தூக்கில் போடப்படப்போவதாக தினமலர் செய்தியாக எ.அ.பாலாவின் பதிலிலும்,என் பதிவிலும் குறிப்பிடப்பட்டுள்ள அந்த பாவப்பட்ட பஞ்சாப் சகோதரர்களுக்கு குரல் எழுப்பாத நம் அறிவுஜீவிகளுக்கு இங்கு மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை. what is their axe to grind? மைனாரிட்டுகளுக்கு ஆதரவாக -எந்தக் காரணமுமாயிருந்தாலும் குரலெழுப்புவது ஏன்? அதுPஒன்று குரலெழுப்புவது அறிவு ஜீவித்தனம் என்ற ஒரு நிலைப்பாடு நமது நடுவில் ஏற்கெனவே ஏற்பட்டுள்ளது. தூக்குத்தண்டனைக்கு எதிராகக் குரலெழுப்புவர்களுக்கு இதற்கு முன்போ பின்போ நேரமோ,காரணமோ இல்லாமல் போனதென்ன? இப்போதும்கூட நம் யாருக்கும் தெரியாமலேகூட போயிருக்கும் அந்தப் பஞ்சாப் சகோதரர்களின் தூக்குத் தண்டனை. இப்போது கூட அவர்கள் முதலில் அதற்குக் குரலெழுப்பாது, அப்சலுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் என்றால் அவர்களுக்கு ஏதோ ஒரு hidden agenda இருக்கிறது என்பது என் முடிவு, இதையே கயமைத்தனமாக நான் பார்க்கிறேன்.

கோவலனுக்கு மறுபடியும் வருவோம். நம் நீதிச் சட்டங்களின் படி தூக்குத் தண்டனை - only in rarest of rare cases; சரியா? அதாவது ஆயிரத்தில் ஒன்று என்பது மாதிரி -ஃ - 0.1 % அதில் ஆயிரத்தில் ஒன்றில் தவறான ஒருவருக்குத் தண்டனை அளிக்கப்பட்டுவிடலாம் என்றால் என்ன % ? பத்து லட்சத்துக்கு ஒரு கேஸா? இப்படியெல்லாம் கணக்குப் போடணுமா, என்ன?

தீவிரவாதமும், தீவிரவாதிகளும் மற்ற சாதாரண கேஸ்கள் மாதிரி இல்லாது தனியாக, கடுமையாகக் கையாளப்படவேண்டும் என்பது என் கருத்து. முகம் தெரிந்த ஒரு கொலையாளியை விடவும், முகம் காண்பிக்காத ஒரு தீவிரவாதக் குழுவும், அதிலிருந்து புறப்பட்டு வரும் brain-washed தீவிரவாதியும் பெருங்கேடு விளைவிக்க முடியும்.

வஜ்ரா said...

//
அவர்களுக்கு ஏதோ ஒரு hidden agenda இருக்கிறது என்பது என் முடிவு, இதையே கயமைத்தனமாக நான் பார்க்கிறேன்.
//

மதிப்பிற்குரிய ரோசாவசந்திற்கு இருக்கோ இல்லையோ, அருந்ததி ராய்க்கும், அவருடன் உட்கார்ந்திருக்கும் கீலானி போன்றவர்களுக்கும் நிச்சயம் hidden agenda இருக்கு என்பது என் எண்ணம்.

அதையே ஒரு சந்தேகத்தின் பேரில் படம் போட்டு
பதிவு போட்டேன்.

இப்பவும் நீங்கள் கேட்ட கேள்வியை சிறில் அலெக்ஸ் பதிவில் ஏற்கனவே கேட்டேன். பதில் இல்லை என்பதே என் எண்ணம்.

தர்கவாதம் வைக்கப் பட்டது, சரப்ஜித் சிங்கிற்கு தூக்கு கொடுப்பதைப் பற்றி.

மேலும்,

நா. ஜெய்சங்கர் பதிவில் நான் கேட்ட கேள்வி.

தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு தேசம், சமூகம் மீது நம்பிக்கை இல்லை. இருப்பதை அழித்து புதிய உலகு செய்வோம் என்று கோஷம் போடும் கேசுகள். நாம், இருக்கும் சமூகத்தில் முன்னேரப் பாடுபடுபவர்கள். ஒரு Open society ல் குறைகளை பயன் படுத்தி இவர்கள் ஆள் சேர்க்கிறார்கள் (மதம்/மனம் மாற்றம்). இருக்கும், சமூகக் கட்டமைப்பு சில சரி/தவறு களைச் சட்டமாக அல்லது accepted norms ஆக வைக்கிறது. இதில் திருப்தி இல்லை என்றால் பேசி, சமரசங்கள் செய்து கொண்டு, அல்லது ஒத்துளையாமை (காந்தி வழி) செய்து சமூகத்தில் (இருக்கும் சமூகத்தில்) முன்னேற்றம் கண்டு கொள்ளவேண்டும் என்பதே ஒரு முன்னேறிய கொள்கை. ஆயுதம் ஏந்திப் போராடுவது அல்ல. இதை ஒத்துக் கொள்வீர்களா? ஆம், என்றால் ஆயுதம் ஏந்திப் போராடும் கூட்டத்திற்கு ஏன் ஆதரவு? இல்லை, என்றால், முன்னேறிய சமூகத்தில் தூக்கு தண்டனை கூடாது என்று ஏன் வாதாடவேண்டும்? அவர்கள் இன்னும் முன்னேறவே இல்லையே!! Self contradictory!!

(இது தர்கவாதமே என்றாலும் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்கள்).

இவ்வளவு நடக்கிறது,

ஆனால், சம்பந்தப்பட்ட ஆசாமி, Afzal guru இதுவரை, மன்னிப்புக் கோரியதாகத் தெரியவில்லை. தன் தவறுக்கு வருந்தாத ஒருவனுக்கு ஒரு "சமுதாயம்" சொல்கிறது, அல்லது "அடம் பிடிக்கிறது" என்பதற்காக மன்னிப்பு வழங்கவேண்டுமா?

He himself has not expressed any remorse or regret for what he is been convicted of. Then why are these Pseudo-intellectuals advocating clemency?

Thekkikattan|தெகா said...

அப்ப நானெல்லாம் அறிவி-ஜீவியா :-)) உங்க வாயலே இப்பாவாவது ஒப்புத்துக்கிட்டீங்களே... ;-)))

நான் சொல்ல வந்ததே வேற தளத்தில், இரும்பு அடிக்கிற இடத்தில கொசுவுக்கு என்ன வேலை அப்படிங்கிற மாதிரி இருக்கு என் நிலைப்பாடு...

சம்பந்தம் இல்லாத கேள்வி இங்கன ஒண்ணு கேட்டு வைக்கிறேன்... என் சின்ன வயசில ஒரு சாமீயார் சொன்னாறு... திருடனா இருந்தாலும், கொலைகாரனா இருந்தாலும் சரி எல்லோருமே அவனின் பிம்பங்கள் அன்றி வேற யாரும்மல்ல அப்படின்னு சொன்னதா, ஏதோ ஒரு புத்தகத்தில எழுதி இருக்கிறதா அவர் சொன்னாரு.

இதுதான் வாழ்கையே ஒரு முரண்பாடுற்றது அப்படிங்கிறதா??

நானும் ஒரு பழைய கடவுள் (புதிய கடவுள் - இதுவரைக்கும் அப்படி நினைத்துக் கொண்டுதானிருந்தேன், பெரிய பொறுப்பான வேலையாக இருப்பதால் அதிலிருந்து இறங்கி, சதாரண மனுச நிலைக்கு வந்துடறேன் :-). எட்ற அந்த த்ருப்பாச்சி அருவாள... ;-)))

Unknown said...

//சம்பந்தம் இல்லாத கேள்வி இங்கன ஒண்ணு கேட்டு வைக்கிறேன்... என் சின்ன வயசில ஒரு சாமீயார் சொன்னாறு... திருடனா இருந்தாலும், கொலைகாரனா இருந்தாலும் சரி எல்லோருமே அவனின் பிம்பங்கள் அன்றி வேற யாரும்மல்ல அப்படின்னு சொன்னதா, ஏதோ ஒரு புத்தகத்தில எழுதி இருக்கிறதா அவர் சொன்னாரு.

இதுதான் வாழ்கையே ஒரு முரண்பாடுற்றது அப்படிங்கிறதா??//


யேசு ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று அனபை போதித்தார்.

ஒரு கிருத்துவனை இன்னொருவன் கன்னத்தில் அறைந்தான். சிறிது நேரம் கழித்து அந்த கிருத்துவன் தன்னை அடித்தவனின் கழுத்தை முறித்துக் கொண்டிருந்தான். அவனிடம் "என்னப்பா நீ இன்னொரு கன்னத்தை அல்லவா காட்டியிருக்க வேண்டும்" என கேட்டதற்கு அவனும் " என்னிடம் இருந்த இரு கன்னங்களையும் உபயோகித்துவிட்டேன். இப்போது மூளையை உபயோகிக்கிறேன்" என்றான்.

நன்றி: கால்கரி சிவா

பிரச்சனைகளுக்கு பதிலை மதத்தில் தேடுவதை விட்டு விட்டு மூளையை பயன்படுத்தி தேடுங்கள்.

நன்றி
செல்வன்

மு. சுந்தரமூர்த்தி said...

தருமி சார்,

இராணுவ வீரர்கள் விதைக்கப்பட வேண்டும், தேசவிரோதிகள் உதைக்கப்பட வேண்டும் என்று வீறாப்பாக வசனம் பேசும் அரைவேக்காட்டுக் கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு நீங்களும் ஐக்கியமாகிவிட்டது ஆச்சரியமாக இருக்கிறது.

நீங்கள் கூறும் rare of the rarest என்ற கோட்பாடு தனிமனிதர்களின் குற்றங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். சொல்லப்போனால் தனிமனிதர்கள் சம்பந்தப்பட்ட கொலைவழக்குகளில் பணபலம் படைத்தவர்கள் சட்டத்திலிருந்து எந்த தண்டனையுமின்றி தப்பியிருக்கிறார்கள் (உ-ம்: நாவரசு கொலைவழக்கில் தப்பிய ஜான் டேவிட், ஜெஸிகா லால் கொலை வழக்கில் தப்பிய மனு ஷர்மா). இத்தகைய குற்றங்களில் மரண தண்டனைப் பெறுபவர்கள் பணம் கொடுத்து சட்டத்தை வளைக்க முடியாதவர்களே. நீங்கள் உதாரணமாகக் காட்டியிருக்கும் பஞ்சாபி சகோதரர்கள் மரண தண்டனைப் பெற்றது கொலைசெய்த குற்றத்திற்காக மட்டுமல்ல. பணமில்லாத குற்றத்திற்காகவும் தான்.

ஆனால் தேசத்திற்கு எதிரான குற்றங்கள், தேசத் தலைவர்களை கொலை செய்தது போன்ற பரபரப்பான அரசியல் வழக்குகளில் மரணதண்டனை என்பது உணர்ச்சிவசப்பட்ட பொதுப்புத்தியின் எதிரொலியாகவே வழங்கப்படுகிறது. போலீஸ் பிடித்துக் கொடுத்தவர்கள் அனைவருக்குமே மரணதண்டனை மிகவும் எளிதாக கிடைத்து விடுகிறது. அதே அரசியல் காரணங்களுக்காகவே இந்த வழக்குகள் மீது ஊடக வெளிச்சமும் அதிகமாக விழுவதால் இவ்வழக்குகளில் மரண தண்டனையை எதிர்ப்பதும் அதிக கவனிப்பைப் பெறுகிறது அல்லது தீவிரமடைகிறது. இதைத் தான் ரோசாவசந்தின் பதிவு தெளிவாக எடுத்துரைக்கிறது. மற்றபடி, மரணதண்டனை எதிர்ப்பாளர்களுக்கு அரசியல் கொலை செய்தவர்கள் மீது அதீத பாசம், அவர்களெல்லாம் தேசத் துரோகிகள் என்றெல்லாம் குற்றம் கூறுவது கொஞ்சம் ஓவர். இவற்றில் வெளிப்படுவது தங்களை தேசபக்தர்களாகக் காட்டிக்கொள்ள அடுத்தவர்களை தேசவிரோதிகளாகச் சித்தரிக்கும் அய்யோக்கியத்தனம் மட்டுமே.

அப்சல் குருவைக் கொல்லாமல் சிறையில் வைத்திருந்தால் அவருடைய தீவிரவாதி நண்பர்கள் விமானத்தைக் கடத்திச் சென்று அவரை விடுவிக்க முனைவார்கள். அதனால் அவரைக் கொல்வது தான் சரி என்பது புத்திசாலித்தனமான வாதம். கொன்றுவிட்டால் அவர்கள் விமானத்தைக் கடத்தமாட்டார்கள் என்று எந்த உத்தரவாதமுமில்லை. சொல்லப்போனால் கடத்திய பயணிகளை விடுவிக்காமல் கொன்றுவிடும் சாத்தியமே அதிகம்.

சுவாமி said...

ஜோதி எங்கே? எங்கே?
//திருடனா இருந்தாலும், கொலைகாரனா இருந்தாலும் சரி எல்லோருமே அவனின் பிம்பங்கள் அன்றி வேற யாரும்மல்ல அப்படின்னு சொன்னதா, ஏதோ ஒரு புத்தகத்தில எழுதி இருக்கிறதா அவர் சொன்னாரு.
இதுதான் வாழ்கையே ஒரு முரண்பாடுற்றது அப்படிங்கிறதா??//
தூக்கு தண்டனை குடுத்த நீதிபதிகளும் அவனின் பிம்பம்தான். கடேசில அப்ஸலுக்கு கருப்பு துணி மாட்டி விசையை அழுத்துபவரும் அவனின் பிம்பம்தான்!
'மிக கவனம்': தூக்கு தண்டனையில் எனக்கு ஏற்பு கிடையாது. ஆயுள் தண்டனைதான். எவ்வளவு கொடிய குற்றமாயிருந்தாலும். அப்படி யாராவது விமானங்களை கடத்தி கைதிகளை விடுவிக்க சொன்னால், 'முடியாது, பண்ணரதை பண்ணிக்கோ' ன்னு விட்டர வேண்டியதுதான்.
மரணதண்டனைதான் சரின்னு சொல்ரவங்க கூட சித்திரவதை செய்து சாகடிக்கிரதை ஒத்துக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். ஆயுள் தண்டனை, மரண தண்டனை, கண்ணை எடுக்கிறது, கையை வெட்டுரது, சித்திரவதை பண்றதுன்னு ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு எல்லை இருக்கும். என்னோட எல்லை நல்லவன் ஒரு மரணத்திற்கு காரணமாய் இருப்பது. கெட்டவன் கெட்டவனை கொல்லலாம். கெட்டவன் நல்லவனை கொல்லலாம். நல்லவன் யாரோட மரணத்திற்கும் காரணமாய் இருக்க கூடாது.
தருமி சார், ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ வந்த பதிவுகளில் நேர்மையான வெகு சில பதிவுகளில் ஒன்று உங்களுடையது. நன்றி.

தருமி said...

தெக்ஸ்,

//...ஏதோ ஒரு புத்தகத்தில எழுதி இருக்கிறதா அவர் சொன்னாரு...//

அதுதாங்க அத்வைதம்.
நானும் கூட சொல்லியிருக்கேனே: "இருக்கவே இருக்கிறது கீதை: 'கொல்பவனும் நானே; கொல்லப்படுபவனும் நானே' என்பது போல எல்லாம் 'அவன் செயல்' என்று விட்டு விடலாமே."

தருமி said...

மு. சுந்தரமூர்த்தி,

//போலீஸ் பிடித்துக் கொடுத்தவர்கள் அனைவருக்குமே மரணதண்டனை மிகவும் எளிதாக கிடைத்து விடுகிறது.//

அப்படியா சொல்லுகிறீர்கள்? உண்மை அதுவல்ல என்றே நினைக்கிறேன்.

//மரணதண்டனை எதிர்ப்பாளர்களுக்கு அரசியல் கொலை செய்தவர்கள் மீது அதீத பாசம், அவர்களெல்லாம் தேசத் துரோகிகள் என்றெல்லாம் குற்றம் கூறுவது கொஞ்சம் ஓவர்.//

// இவற்றில் வெளிப்படுவது தங்களை தேசபக்தர்களாகக் காட்டிக்கொள்ள அடுத்தவர்களை தேசவிரோதிகளாகச் சித்தரிக்கும் அய்யோக்கியத்தனம் மட்டுமே//

இந்த வார்த்தைகள் என்னை நோக்கிச் சொல்லப்பட்டவை இல்லை என்றே நினைக்கிறேன். என் குற்றச் சாட்டுக்கள் இவையில்லையே.

தருமி said...

swami,

//தூக்கு தண்டனையில் எனக்கு ஏற்பு கிடையாது.//

உங்கள் கருத்துக்களில் இந்தக் கருத்துக்கு நான் எதிர்மறை.

மு. சுந்தரமூர்த்தி said...

//இந்த வார்த்தைகள் என்னை நோக்கிச் சொல்லப்பட்டவை இல்லை என்றே நினைக்கிறேன். என் குற்றச் சாட்டுக்கள் இவையில்லையே./

இல்லை. மரணதண்டனைக்கு எதிராக வந்த பதிவுகளுள் ரோசாவசந்தின் பதிவில் கருத்து சொல்லியிருந்தேன். ஆதரவாக வந்த ஏகப்பட்ட பதிவுகளை எழுதியவர்களுள் நிதானமாக சிந்திக்கக்கூடியவர் நீங்கள் என்பதால் இங்கே எழுதினேன். இது பொதுவாக வலைப்பதிவுகளில் நிலவும் சூழ்நிலையை மனதில் வைத்து எழுதியது.

Anonymous said...

தருமி ஐயா,

//////16-ம்தேதி தூக்கில் போடப்படப்போவதாக தினமலர் செய்தியாக எ.அ.பாலாவின் பதிலிலும்,என் பதிவிலும் குறிப்பிடப்பட்டுள்ள அந்த பாவப்பட்ட பஞ்சாப் சகோதரர்களுக்கு குரல் எழுப்பாத நம் அறிவுஜீவிகளுக்கு இங்கு மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை./////

இந்த செய்தி எனக்கு ஏற்படுத்திய அதே மாதிரி (ம உ காவலர்கள் பற்றிய) பாதிப்பு உங்களுக்கும் ஏற்படுத்தியதில் ஒத்த சிந்தனை பற்றி சிறு மகிழ்சி.

///கடைசியாக, பாலா அவர்களின் பதிவில் வந்துள்ள ஒரு பின்னூட்டம் (நல்லதொரு பின்னூட்டம்; இருப்பினும் அந்த பின்னூட்டத்தைக் கொடுத்தவர் ஏன் அனானியாக வந்துள்ளார் என்பதை அவர் தான் சொல்லணும்.)////

அனானியா எழுதியே பழக்கமாயிருச்சுங்க..அதுதான் :))) அனானியா இருக்குறதுக்கு காரணம் முத்திரை குத்தப்படுவதிலிருந்து தப்பிக்கத்தான்...:)))

நன்றி ஐயா

பாலாஜி அவர்கள் பதிவில் பின்னூட்டம் இட்ட (கி அ அ )அனானி

தருமி said...

பாலாஜி அவர்கள் பதிவில் பின்னூட்டம் இட்ட (கி அ அ )அனானி,

we have to be a "branded" item. that alone gives us some needed 'identity'. rethink...

Anonymous said...

"""பாலாஜி அவர்கள் பதிவில் பின்னூட்டம் இட்ட (கி அ அ )அனானி,

we have to be a "branded" item. that alone gives us some needed 'identity'. rethink... """""

தருமி ஐயா,

rethink செய்கிறேனோ இல்லையோ உங்கள் கமென்ட் வித் ஆப்ட் வோர்ட்ஸை வெகுவாக ரசித்தேன் :))

(கி அ அ )அனானி,

தருமி said...

பா.ப.பி.கி.அ.அ.,
என்னங்க ஒங்களோடு தொந்தரவாஅ போச்சு! அனானிகளக் கண்டுக்கக்கூடாதுன்னு பாத்தா நீங்க மறுபடி மறுபடி உங்க பின்னூட்டத்த போடறது மாதிரி பண்ணீர்ரீங்களே! மொதல்ல நல்ல விஷயம் சொன்னீங்க. அடுத்து அனானியா இருக்க்றதுக்குக் காரணம் சொன்னீங்க. கடைசியா, சில்லுன்னு ஒரு பின்னூட்டம். இப்படியே இருந்தா எனக்கு 'மூஞ்சி பாக்க' ஆச இருக்காதா? சீக்கிரம் வாங்க, நீங்களாக..

சிறில் அலெக்ஸ் said...

என்ன தருமி சார்... பொதுவா நீதிமன்றங்கள் கேவலம். மரத்தடி நாட்டமைகளை விடவும் மோசம்னு பதிவு போடுவீங்க இப்ப என்ன ஆச்சு?

அப்சல் விஷயத்துல எனக்கு தெரிந்த உண்மைகளை விடவும் கேள்விகள் அதிகம்...

படித்து பட்டம் வாங்கி உயிர்களை காப்பாற்றும் டாக்டர் தொழில் புரியும் ஒரு இந்தியர் தீவிரவாதி ஆக யார் காரணம்?

அவர் திருந்தியபின்னரும் அவரை கண்காணித்து என்றும் குற்றவாளியாகவே பாவிக்கும் மனோபாவம் எப்படிப்பட்டது?

இந்திய பிரஜைகள் இந்தியப் படைகளினாலெயே தினம் தினம் கொல்லப்படுவது எப்படி?

உங்கள் ஊரில் காஷ்மீர் போல் ஒரு நிலை வந்தால் என்ன செய்வீர்கள்?

அப்சல் வழக்கில் நீதி பெறும் அனைத்து வாய்ப்புக்களையும் பயன்படுத்தாத நிலையில், அவரை (இப்போது அவரை தூக்கில் இடவேண்டும் என சொல்லொயிருக்கும் சட்டப்படியே) மேல் முறையீட்டில் விடுதலை செய்தால் அப்போ என்ன சொல்வீங்க? சட்டம் நிலைக்கணும்னா? (The law should take it's course??)

நாட்டின் இறையாண்மையை கெடுப்பது ஒரு கட்டிடத்தின் மேலான தாக்குதல் இல்லீங்க. என் நாடு என் குடும்பத்தை குலைத்ததென நான் நம்பும்பட்சத்தில் அதை எதிர்க்கத் துணிவேனே தவிர சட்டப்படி அது செய்தது சரிதான் என சோம்பி இருக்கமாட்டேன்.

இறையாண்மை தேசியம் எல்லாம் செண்டிமெடல் பிதற்றல்களாகவே தெரிகின்றன. நீதிமன்றங்கள் பொதுமக்கள் - மெஜாரிட்டி- மனநிலையை பிரதிபலிக்க ஆரம்பித்தால் ரஜினி ரசிகர்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடலாம்.

Amar said...

//இந்திய பிரஜைகள் இந்தியப் படைகளினாலெயே தினம் தினம் கொல்லப்படுவது எப்படி?//

சிறில்.

இந்த டையலாக் மட்டும் வேண்டாம். :)

இந்திய பிரஜைகள் இந்தியப்படைகளால் கொல்லப்படுகிறார்கள் என்கிறீர்கள், எங்கே நடக்கிறது அப்படி ?

காஷ்மீரிலா? அங்கே இந்திய இரானுவத்தில் நிறைய காஷ்மீரிகளும் சேர்ந்துள்ளார்கள். ராஷ்ட்ரிய ரைப்பிஸ். நிலநடுக்கம் வந்தால் கூட இந்திய இரானுவத்தை தான் துனைக்கு அழைக்கிறார்கள் மக்கள்.

சும்மா மனித உரிமை இயக்கம் கொடுக்கிற அறிக்கையையெல்லாம் வச்சு பேச வேண்டாம். வாங்க நேரடியா காஷ்மீருக்கு போயி பார்த்துட்டு வந்திடலாம்.

யாருக்கும் தடை கிடையாது.

என்னங்க, இஸ்ரேல்காரனுக கூட அங்கே போயி பார்க்குறானுக! நாமும் ஒரு தடவை போயி பார்த்திட்டு வந்திடலாம்.

மிலிட்டரிக்காரனும் மனுசன் தான்.

உங்களையும், என்னையும் விட சாவும், பினங்களும் அவனை அதிகம் பாதிக்கின்றன.

எத்தனை மிலிட்டரிக்காரர்கள் nightmareகளால தூக்கமில்லாத வாழ்க்கை வாழ்கிறார்கள் தெரியுமா?

சும்மா இரானுவம் என்றால் மக்களை கொல்கிறார்கள் என்ற ஜல்லியடித்தல் வேண்டாம். unless under extreme provocation the IA does not kill civillians.

இதிலும் unless under extreme provocation என்ற வாக்கியத்தை வைத்துகொண்டு விதண்டாவாதம் செய்ய கூட சிலர் முன் வரலாம்.

தவறு செய்தால் உடனடியாக court martial செய்யபடுகிறார்கள்.

சாரி, இனியும் இந்த புருடா நான்சென்ஸை சும்மாவிட்டால் அமெரிக்காவில் செத்த இரானுவ வீரனின் உடலை புதைக்கும் போதும் அந்த வீரனை சபித்தும் நடக்கும் ஆர்ப்பாட்டங்களை போல கேவலங்கள் இந்த பூமியில் நடக்கும்.இடதுசாரி பிரச்சாரம் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கேவலமாக போகும்.

Anonymous said...

தருமி ஐயா அவர்களுக்கு,

தமிழ் மணத்தின் சமீபத்திய வாசகனாகிய எனக்கு, இந்த வழக்கினைப் பற்றிய வலைப்பூ விவாதங்கள் பல புதிய செய்திகளை சொன்னது. உங்களின் பின்னூட்டங்களை கிட்டத்தட்ட எல்லாப் பதிவுகளிலும் படித்து வந்த போதிலும், இந்தப் பதிவு ஒரு தொகுப்பாகவும் தெளிவான கருத்துப் பதிவாகவும் இருக்கிறது. இவ்வளவுத் தெளிவாகவும், பொறுமையாகவும் கருத்துக்களை எடுத்து வைத்ததற்கு மிக நன்றி.

இந்த விவாதம் இப்பொழுது முடிவது போல் தோன்றவில்லை.

மிகவும் நன்றி!
ஸ்ரீதர்

bala said...

//இந்திய பிரஜைகள் இந்தியப் படைகளினாலெயே தினம் தினம் கொல்லப்படுவது எப்படி?//

et tu Cyril,

Then, fall India..

சிறில் அய்யா,

எதோ சொல்ல வேண்டும் போலிருந்தது..சொல்லி விட்டேன்.

பாலா

We The People said...

சிறில் அலெக்ஸ் போன்றோர் யாரோ சில தீவிரவாத ஆதரவாளர்களின் கூற்றும், தீவிரவாதிகள் மூளைச்சலவை பேச்சுக்களை கேட்டுக்கொண்டு தன் எண்ணக்குதிரை போகின்ற போக்கில் தூள்கிளப்புறாங்க!!!

//படித்து பட்டம் வாங்கி உயிர்களை காப்பாற்றும் டாக்டர் தொழில் புரியும் ஒரு இந்தியர் தீவிரவாதி ஆக யார் காரணம்?//

இது அப்சலை கேட்க வேண்டிய கேள்வி; நம்ம கிட்ட கேட்ட என்ன பதில் சொல்லவேண்டும். ஆனாலும் எனக்கு தெரிந்தவரை, ஜிலானி போன்ற பிரிவினைவாத ஆதரவாளர்கள் கல்வி விரிவிரையாளர்களாக கல்லூரிகளில் இருந்தால், மாணவர்கள் பிரிவினைவாதமும், தீவிரவாதத்தையும் தான் பின்பற்ற வழி முறை செய்து கொடுப்பார்கள்.

//அவர் திருந்தியபின்னரும் அவரை கண்காணித்து என்றும் குற்றவாளியாகவே பாவிக்கும் மனோபாவம் எப்படிப்பட்டது?//

பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெற்ற ஒருவன் இந்திய எல்லைக்குள் நுழைய சுலபமாக வழி சரணடைகிறேன் என்று வருவதே! அப்சல் மூன்று மாதம் தீவிரவாத இயக்கத்தில் பயிற்சி முடிவு பெற்றதும் எதனால் திருந்தினான்? உண்மையில் திருந்தினான என்பது இது ஆயிரம் டாலர் கேள்வி! ஒரு மூளைச்சலவை செய்தவன் திருந்துவானா?

//இந்திய பிரஜைகள் இந்தியப் படைகளினாலெயே தினம் தினம் கொல்லப்படுவது எப்படி?//


//உங்கள் ஊரில் காஷ்மீர் போல் ஒரு நிலை வந்தால் என்ன செய்வீர்கள்?//

உண்மை என்ன என்று தெரியாமல் சொல்லுவது தவறு! அப்படி சாதாரண மக்களை கொலை செய்வது நடக்குமானால் எதற்காக இந்திய படை இதை செய்கிறது? அப்ப இந்திய ராணுவம் அங்கும் மட்டும் ஏன் செய்கிறது? ஏன் மற்ற மாநிலங்களில் இல்லை? இதனால் இந்திய படைக்கு கிடைக்கும் லாபல் என்ன என்பதையும் இந்த கதை சொல்பவர்கள் எடுத்துச்சொல்லவேண்டும். அலெக்ஸ் உங்களிடம் இதற்கான பதில் இருக்கிறதா?

அது போகட்டும் குண்டு வெடிப்பு உங்கள் வீட்டில் நிகழ்ந்து இருந்தாலும் நீங்கள் இது போன்ற வாதங்களை தீவிரவாதிகளின் சார்பாக வைப்பீர்களா??

//அப்சல் வழக்கில் நீதி பெறும் அனைத்து வாய்ப்புக்களையும் பயன்படுத்தாத நிலையில், அவரை (இப்போது அவரை தூக்கில் இடவேண்டும் என சொல்லொயிருக்கும் சட்டப்படியே) மேல் முறையீட்டில் விடுதலை செய்தால் அப்போ என்ன சொல்வீங்க? சட்டம் நிலைக்கணும்னா? (The law should take it's course??)//

எந்த வாய்ப்பு அப்சலுக்கு வழங்கப்படவில்லை என்று சொல்லமுடியுமா அலெக்ஸ்? அனைத்து நீதி மன்றத்திலும் அவருக்கு வழக்குறைஞர் இருந்தார்கள்!! அவர் உச்ச நீதி மன்றம்வரை சென்றும் அவருக்கு நீதி கிடைக்கவில்லையா?? அவர் குற்றமற்றவர் என்று அவரே சொல்லவில்லை!!! அவருக்கு எதிரான சாட்சியங்களா பாராளமன்ற வரைவுப்படம், பாராளமன்றதின் பாதுகாப்பு வளையங்கள் பற்றிய குறிப்புகள் எல்லாம் அவருடைய Laptop ஏன் இருந்தது? மேலும் பல என் பதிவில் பார்க்கவும் இவையெல்லாம் ஏன் அவர் வைத்திருந்தார்? உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் கோமாளிகளா? உச்ச நீதிமன்றதுக்கும் மேலே ஒரு மேல் முறையீடு கிடையாது!! அதனால் தான் கருனை மனு ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டுள்ளது! ஜனாதிபதி அவரை குற்றமற்றவர் என்று சொல்ல முடியாது!! அவர் கருனையால், வேண்டுமானால் அப்சலுக்கு மரணதண்டனை ரத்து செய்து ஆயுள் தண்டனைக்கு பரிந்துரை செய்யலாம், FYI அந்த முடிவும் உச்ச நீதிமன்றத்தால் மாற்றமுடியும்!!!

Post a Comment