Wednesday, October 25, 2006

184. BLOGGERS' MEET AT MADURAI - 4

பலவும் பேசினோம். ஞான வெட்டியான் தன் பெயர்க்காரணம் பற்றி விளக்கினார். தான் எழுதிவரும் விஷயங்களின் lowdown ஒன்று கொடுத்தார்.பிபுரபுலிங்க லீலை, சித்தர் பாடல்கள் என்று அவர் சொன்னது என் மரமண்டைக்கு ஏறவில்லை. அந்த மாதிரி விஷயங்கள் பற்றி அக்கு வேறு ஆணி வேறு என்று பேசியவருக்கு 'உள்குத்து', 'வெளிக்குத்து', 'நேர்குத்து' போன்ற நம்முடைய bloggers' parlance பற்றி ராம் பாடம் எடுக்கும்படியாயிற்று. கற்றது கைமண் அளவு...! அதையொட்டி,வரவனையானின் ப்ளாக்கர்களுக்கான பங்களிப்பான 'சொ.செ.சூ.' க்காக ஒரு சிறப்பு நன்றி கூறப்பட்டது. வரவனையான் அந்தச் சொற்றொடரை patent / copyright எடுக்க உத்தேசித்திருப்பதாக அறிவித்தார்.

From L to R:





ராம் & ஞானவெட்டியான்



பிரபு ராஜதுரை தான் மரத்தடியில் எழுதிய 'அந்தக் காலத்தில...' நினைவுகளைத் தொகுத்தளித்தார். அவர் சொல்லச் சொல்ல நம் தமிழ் பதிவர்களின் எழுத்திலும், எண்ணங்களிலும் ஏற்பட்டு வரும் பரிணாமம் (is it retrogressive..?) கண்முன் விரிந்தது. தனிமனித சாடல், உள்குத்து வைத்து எழுதுதல், குழு மனப்பான்மை இவை எல்லாம் அப்போது இந்த அளவு இல்லை என்று தெரிந்தது. எனக்கு 'மணிக்கொடி காலம்' என்று பழைய பெரிய எழுத்தாளர்களைப் பற்றிப் பேசும்போது சொல்வார்களே அதேபோல இந்த 'மரத்தடி'காலம் என்று ஒன்று வலைப்பதிவுலகத்தில் இருந்ததாகத் தோன்றியது.







முத்து(தமிழினி) & ராஜதுரை



அப்சல் விவகாரம் தலைதூக்கியது. பிரபு ராஜதுரையின் அலசலை அடுத்து நீண்ட விவாதம். நண்பர் சைலஸும் சேர்ந்து தீவிரமாகப் பேசினோம். சைலஸின் 'தீவிரத்தை'ப் பார்த்து அவருக்கு வரவனையான் 'ப்ரொபசர் ரமணா' என்று ஒரு பட்டப் பெயர் வைத்ததாகக் கடைசியில் சொன்னார். முடிவு என்று எடுப்பதற்காகவா நாம் விவாதிப்போம். இப்போதும் அது போலவே, முடிவுக்கு வராத நீள் விவாதமாக நடந்து முடிந்தது.







ராஜ்வனஜ்; ராம் & ஞானவெட்டியான்



அடுத்து, இடப்பங்கீடு பற்றிய விவாதமாக அமைந்தது. நான் அங்கே சொன்னதைப் பொதுவில் வைக்க விரும்புகிறேன். reservation-க்கு ஆதரவாக இருப்பவர்களாவது இனி இட ஒதுக்கீடு என்பதற்குப் பதில் "இடப்பங்கீடு" என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டுகிறேன். காரணம் தெரியவேண்டுவோர் அங்கே பார்க்கவும். மறுபடியும் ball was in the court of prabu rajadurai. அடித்து ஆடினார். புதிதாக மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு முடிந்தபின் அதன் முடிவு பற்றி தன் பதிவொன்றில் விளக்கம் தர இசைந்தார். இடப்பங்கீடு எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பும், அவர்களது உள்மன எண்ணங்களும், காரணங்களும் பற்றி சிறிதே விவாதித்தோம். தூங்குவதுபோல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்ற ஏற்கெனவே தெரிந்த முடிவு உறுதி செய்யப்பட்டது.








லி.ஸ்.வித்யா, ஜிரா & மஹேஷ்


வாங்கி வைத்திருந்த மதுரை மண்ணுக்குரிய பாட்டில் பானமான Bovonto சுற்றில் வர, புத்திசாலித்தனத்தோடு முன்னேற்பாட்டோடு வந்திருந்த மஹேஷ் அதிரசம், முறுக்கு என்று அசத்திவிட்டார். அதிரசம் டாப்! அவ்ளோ soft!

வரவனையான் சுற்றி சுற்றி வந்து எங்களை எல்லாம் க்ளிக்கினார்; நீள் படமும் எடுத்தார் - அதாங்க வீடியோ. அவர் பதிவில் வரும் என்று நினைக்கிறேன். அவரையும், சுகுணாவையும் நான் எடுத்த படம் என்னவாயிற்றென்று தெரியாமல் போச்சு.அவர்கள் இருவரின் படம் வர என் பதிவுகள் கொடுப்பினை இல்லாமல் போச்சு.ஜிரா கூட்டம் ஆரம்பித்து 40-45 நிமிடங்களில் புறப்பட்டு விட்டார். விரைவில் கிளம்புவேன் என்று சொன்ன வித்யா கடைசிவரை இருந்ததே கூட்டம் சென்ற போக்கையும், சிறப்பையும் - it was so binding - உங்களுக்குச் சொல்லாதா என்ன?

ஒரு வழியாக 3 மணிக்குச் சரியாக ஆரம்பித்து 6 மணிக்கு கூட்டத்தை முடித்து, இருந்த இடத்தைவிட்டுக் கிளம்பி வண்டிகள் நிறுத்துமிடத்திற்கு வந்தோம். அங்கிருந்து, ஞானவெட்டியான், வித்யா, ராஜதுரை, ராம், மஹேஷ் விடைபெற்றுச் செல்ல மற்றவர்கள் இன்னும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதற்குள் முத்துவின் 'மேலிடத்திலிருந்து' அவர் அன்றைய மாலை ரயிலில் செல்லவேண்டியதிருப்பது பற்றிய நினைவூட்டலும், இன்ன பிற கட்டளைகளும் வந்ததால் எல்லோரும் அங்கிருந்து புறப்பட்டோம். முத்துவை அவர் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு, நான்,ராஜ்வனஜ்,வரவனையான், அவரது கவிஞ நண்பர் சுகுணாவும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வந்து மீண்டும் ஒரு 'மண்டகப்படி' (இது ஒரு மதுரை வார்த்தை. விளக்கம் கேட்டு பின்னூட்டமிடுபவர்களுக்குப் பதில் விளக்கம் கொடுக்கப்படும்). நிஜ டீ குடித்துக் கொண்டு, இன்னும் கொஞ்சம் பதிவுகள், பதிவர்கள், பதிவரசியல் எல்லாமுமாகப் பேசிக்கொண்டிருந்து விட்டு, எட்டரை மணிக்கு விடைபெற்றொம்.

நான் கூட்டத்தில் சொல்ல நினைத்து வைத்திருந்ததைச் சொல்லாமலே விட்டு விட்டேன். அது என்னவென்று பொதுவில் வைத்து விடுகிறேனே. உண்மையிலேயே பதிவர்கள் நீங்கள் பலரும் இளைஞர்கள்; நல்ல சிந்தனா சக்தியும், தங்களூக்கென்று ஒரு கருத்தும், அந்தக் கருத்தைத் தாங்க நிரம்ப விஷய ஞானமும் கொண்டவர்களாக இருக்கிறீர்கள் என்பதில் வயதில் மட்டும் நம் பதிவுலகத்திலேயே மூத்த எனக்கு நிரம்ப திருப்தி. எதிர்காலத்தைப் பற்றிய ஒரு நிம்மதிப் பெருமூச்சு. அதனாலேயே இந்தப் பதிவருலகம் ஒரு think tank ஆக உருவெடுக்க வேண்டும். நம் தமிழ் நாட்டு அரசியலுக்கும், சமுதாயத்துக்கும் ஒரு வழிகாட்டியாக இப்பதிவுலகம் இருக்க வேண்டுமென எனக்கொரு ஆசை. ஆனால், அப்சல் விஷயம் அலசப்படும்போது என் ஆசை நிராசையாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் என்று ஒரு கருத்து இருப்பதால் நாம் எல்லோரும் எல்லா விஷயத்திலுமே பலதரப்பட்டக் கருத்துக்களோடுதான் இருப்போம்; ஒருமித்த கருத்து என்பது வருவதறிது என்ற நிஜம் புரிந்தது. இப்படிப்பட்ட சூழலில் எப்படி பதிவுலகம் ஒரு think tank ஆக முடியும் என்ற வினா என் மனதில் எழுந்தது. அதனால் அக்கூட்டத்தில் நான் பேச நினைத்ததை பேசாமல் விடுத்தேன்.

உங்கள் கருத்தறிய இப்போது பொதுவில் வைக்கிறேன்: நம் பதிவுலகத்தால், இங்கு நிலவி வரும் கருத்துக் குவியல்களால் நம் சமூகத்திற்கு ஏதாவது நேரடி பயன் கிட்டுமா? என்றாவது?


ஏனைய பதிவர் கூட்ட பதிவுகள்:

*வரவனையானின் பதிவு & வீடியோ: மதுரை...மதுரை.....மதுரோய்ய்ய்ய்ய்

*முத்து(தமிழினி): மதுரை சந்திப்பு விவாதங்கள் 3

*ராம் : மதுரை வலைப்பதிவர் சந்திப்பு



.
.

51 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

//....சமூகத்திற்குப் பயன்......//

நிச்சயம் விளையும்!நிச்சயமாக...

//வலைப்பதிவர்களுள் வயதால் மூத்தவர்.....//
Objection MyLord!It is subject to verification

தருமி said...

சிவஞானம்ஜி,

objection overruled!!

நான் கொடுத்துள்ள லின்கைப் படித்து விட்டீர்களா?

போனா போகுது... i give you an option to go for appeal with enough proof.

தாணு said...

தமிழனின் பார்வையும் உங்க கோர்வையும் நல்ல சேர்ப்பு. நிறைய முகங்களை அறிமூகப் படுத்தியதற்கு நன்றி.
ஒத்த கருத்துக்கள் எல்லோருக்கும் இருப்பது எப்படி சாத்தியம்.
அதைவிட சமூக நலனுக்கு ப்ளாக் எப்படி உதவமுடியும் என்று அலசுவது நன்மை பயக்கும். ரம்யா நாகேஷ்வரன் ப்ளாக் மூலம் நிறைய சமூக சேவைகளுக்கு அடிகோலுகிறார். அதுபோல் நாமும் ஏதாவது செய்யலாம்.
அதற்கான அடித்தளமாக உங்கள் சந்திப்பு இருக்கட்டும்

ஞானவெட்டியான் said...

வலைப்பதிவர்களுள் வயதால் மூத்தவர்.....நான் என மருதலித்தால்!!!

ஒருவழியாக ஓசி modem வைத்து எழுதுகிறேன்..

தருமி said...

ஞானவெட்டியான்,

சென்ற ஆண்டு ஜூலை நடந்த பட்டமளிப்பு விழாவை இங்கே (http://dharumi.blogspot.com/2005/07/29_11.html) கண்டு களித்துவிட்டு, உங்கள் எதிர்ப்புகளைத் தெரிவியுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

பயனுள்ள எதிர்காலம் இளைஞர்களால் வரும் தருமி ஐயா.

இப்படி எங்க மருதையில நடந்த மீட்டிங்குக்கு நான் போக முடியவில்லையே என்று நினைக்கிறேன்.

மண்டகப்படிக்கு இரண்டு பொருள்
எங்க வீட்டில்.
ஒண்ணு கள்ளழகர் போல

ஒரு ஒரு இடமா நாங்க நின்னு பேசிவிட்டு கடைசியில் வாசலிலும் நின்று பேசி தோழிகளுக்கு விடை கொடுக்கும் போது அப்பா குரல் வரும் மண்டகப்படி முடிந்ததான்னு.

அடுத்தது யாருக்கும் எதுக்காகவும் திட்டு விழும்போது.சரியான மண்டகப்படியா உனக்கு இன்னிக்கு என்ற பேச்சு.

நேரில பாத்த மாதிரியே எழுதி போட்டொவும் போட்டுட்டீங்க. நன்றி.

ஞானவெட்டியான் said...

//சென்ற ஆண்டு ஜூலை நடந்த பட்டமளிப்பு விழாவை இங்கே (http://dharumi.blogspot.com/2005/07/29_11.html) கண்டு களித்துவிட்டு, உங்கள் எதிர்ப்புகளைத் தெரிவியுங்கள்.//

சென்ற ஆண்டு சூலையில் நான் இல்லையே! இப்பொழுது யார்?
மக்கள் தீர்ப்பே, மகேசன்(இருந்தால்) தீர்ப்பு!!

தருமி said...

நன்றி தாணு.
நீங்கள் சொல்வது சரியே.

G.Ragavan said...

அக்கிரமம். அநியாயம்...அநீதி....எங்கே என் பக்கத்திலிருந்து பொவொண்ட்டோ பாட்டில்? அதைப் படத்தில் காணோமே!

நண்பர்களுடனான சந்திப்பு மிகவும் அருமை. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு என்று மட்டும் இப்பொழுது தோன்றுகிறது.

அப்புறம்...அந்த அதிரசம்...அடடா! ஊர்ப்பக்கத்து அதிரசம்...உள்ள மெத்துமெத்துன்னு மேல தொலி மட்டும் மெல்லிசா...அடடா! நல்ல வேள நான் கெளம்புறதுக்கு முன்னாடியே கிடைச்சிருச்சி. :-)

துளசி கோபால் said...

நல்ல சந்திப்பாக இருந்துருக்கு. சந்தோஷம்.

நான் மரத்தடிக்கு வரக் காரணமே நம்ம பிரபு ராஜதுரைதான்.
நானே முறுக்கைத் தேடிக்கிட்டுப் போன ஆளு. கண்டு பிடிச்சுக்
கொடுத்தது பிரபுதான். இன்னிக்கு என் அறுவையைப் படிக்கிற நம்ம மக்கள்
பிரபுவைத்தான் பழிக்கணும், ஆமாம்:-))))))

மெளலி (மதுரையம்பதி) said...

//இங்கு நிலவி வரும் கருத்துக் குவியல்களால் நம் சமூகத்திற்கு ஏதாவது நேரடி பயன் கிட்டுமா? என்றாவது//

கண்டிப்பாக பயன் கிட்டும் என்றே தோன்றுகிறது...குறைந்த பட்சம் அடுத்தவர்களது கருத்தாவது தெரிய வாய்ப்பு கிடைக்கிறதே....ஆனால் இந்த நிலை மாறும்.....இந்த எதிர்கருத்துக்கள் மூலம் எங்களது சிந்தனை முறை மாற்றம் கண்டிப்பாக இருக்கும்...இருக்கிறது.

சில விஷயங்களில் (நீங்கள் சொன்ன அதே அளவுகோல் படி) வயதின் காரணமாகவே பலர் முன் நேரடியாக எதிர் கருத்துக்களை ஒத்துக்கொள்வதில்லை ஆனால் கருத்து மனதில் பதியும் போது அது அடுத்தமுறை நம்மை மாற்றும்...(இதற்கு சாட்சி பின்னுட்டங்களை பிரசுரிக்காமை)...

தருமி said...

ஜிரா,
//எங்கே என் பக்கத்திலிருந்து பொவொண்ட்டோ பாட்டில்?//

நீங்க அமுக்க பாத்ததை பாத்துட்டு நான் அமுக்கிட்டேனே...

தருமி said...

துளசி,

//நான் மரத்தடிக்கு வரக் காரணமே நம்ம பிரபு ராஜதுரைதான்.//

அட்டா, இது தெரிஞ்சிருந்தா ராஜதுரைக்கு இன்னொரு அதிரசம் கொடுத்திருப்போமே..

தருமி said...

மெளல்ஸ்,

உங்கள் பின்னூட்டத்தின் கடைசி பத்திக்கு கொஞ்சம் 'நோட்ஸ்' போடுங்களேன். அதிலும் அந்த அடைப்புக்குள் கொடுத்திருப்பது யாருக்கு? ஏன்? எதற்கு? ???

Muthu said...

படத்தை மாத்த முடியுமா முடியாதா? :))

siva gnanamji(#18100882083107547329) said...

ய்யேய்.........
objection sustained....haa...haaa
நான் 15/05/1941
ஸீனியர் சிட்டிசன் நானே.......!

Sivabalan said...

தருமி அய்யா,

//தூங்குவதுபோல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்ற ஏற்கெனவே தெரிந்த முடிவு உறுதி செய்யப்பட்டது.//

நல்லா சொல்லியிருக்கீங்க...

தொடர்ந்து எழுப்பிப் பார்ப்போம்...

சுவாரசியமான பதிவு

தருமி said...

நம்பிக்கை நட்சத்திரமாக வந்த வல்லிசிம்ஹனுக்கு நன்றி.

மண்டகப்படி விளக்கத்திற்கு நன்றி. அழகர் திருவிழாவோடு பொருத்தி இன்னும் சொல்லணுமோ வெளியூர் மக்களுக்கு?

தருமி said...

முத்து(தமிழினி) said...
படத்தை மாத்த முடியுமா முடியாதா? :))

படத்தை மாத்ததான வேணும். சரிங்க...மாத்தீட்டேங்க!! :)

தருமி said...

நன்றி சிவபாலன்

தருமி said...

சிவஞானம்ஜி,
முடி துறக்கிறேன்.

முடி சூட்டுகிறேன் உங்களுக்கு.

தல வாழ்க?
சிவஞானம்ஜி தல வாழ்க..வாழ்க...

சின்னப் பிள்ளைங்க எல்லோரும் ஒரு தடவை கைதட்டிட்டு, அய்யாவுக்கு ஒரு "ஓ" போடுங்க.

மெளலி (மதுரையம்பதி) said...

//சில விஷயங்களில் (நீங்கள் சொன்ன அதே அளவுகோல் படி) வயதின் காரணமாகவே பலர் முன் நேரடியாக எதிர் கருத்துக்களை ஒத்துக்கொள்வதில்லை ஆனால் கருத்து மனதில் பதியும் போது அது அடுத்தமுறை நம்மை மாற்றும்...(இதற்கு சாட்சி பின்னுட்டங்களை பிரசுரிக்காமை)...//

நான் கூற வந்தது,

இளவயதில் மாற்றுக்கருத்தினை ஒப்புக்கொள்ள மனம் வருவதில்லை, இதன் காரணமாகவும் பல நல்ல மாற்றுக்கருத்துக்கள் பின்னுட்டமாக வந்தாலும் அவற்றை பதிவர் ஓவ்வாததால் பிரசுரிக்காமல் விடுகின்றனர் என்கிறேன்...இதனால் பல பதிவர்கள் தங்கள் கருத்தினை தனி பதிவிட நேர்கிறது....நான் பொதுவாகத்தான் கூறினேன்....யாரையும் மனதிலிருத்தி அல்ல..

Anonymous said...

மகேந்திரா,
இந்த டி-சர்ட்டை இன்னும் எத்தனை நாளுக்குத்தான் போடுவ. கல்யாணம் ஆனாலும் இன்னும் நீ மாறலயே!.
என்ன முகத்தில புது மாப்பிள்ளை கலை, தலை தீபாவளி கலை அப்படின்னு எதையும் கானோம்.

ஞானவெட்டியான் said...

நான் இல்லை.. இல்லவே இல்லை.
சிவஞானம்ஜி வென்றுவிட்டார். இத்தோடு .....

siva gnanamji(#18100882083107547329) said...

ஆ! அதுதான் முறை!!
நன்றி தருமி அவர்களே!
நன்றி ஞானவெட்டியான் அவர்களே!

தருமி said...

சிவஞானம்ஜி,

நல்லதுங்க'ண்ணா.

சிறில் அலெக்ஸ் said...

தொடர் பதிவப் போட்டு கலக்குறீங்க..எப்படா இப்படி ஒரு சந்திப்புல எல்லாரையும் பார்க்கலாம்னு இருக்குது.

படங்கள் போட்டு கலக்கிட்டீங்க. பல சந்திப்புக்களில் இதை தவிர்க்கிறார்கள். கனமிருந்தா பயமிருக்கணும் இல்ல?

வஜ்ரா said...

உங்கள் மற்ற ஆசை போற்றத்தக்கது என்றாலும்...

இது ஏன்?
//
நம் தமிழ் நாட்டு அரசியலுக்கும், சமுதாயத்துக்கும் ஒரு வழிகாட்டியாக இப்பதிவுலகம் இருக்க வேண்டுமென எனக்கொரு ஆசை.
//

சமுதாயத்து மக்கள் என்ன மூளையற்றவர்களா? அவர்களை Guide செய்ய நாம் யார் ?

அவரவர் சொந்த மூளை என்று ஒன்று உள்ளது அல்லவா ?

Why do people think first that they can be guides for a society ?

The acceptance that there are people who are lesser beings than themselves is the first and foremost reason i can think of. A kind of complex builds in amoung a cetrain community who then start themselves calling as "intellectuals".

Do you want the blog community to become one such community.?

பொன்ஸ்~~Poorna said...

தருமி, பின்னால் திரும்பி நிற்கும் பாலச்சந்தர் ஸ்டைல் போட்டோ சூப்பர்..

எப்படியும் உங்கள் மற்ற போட்டோக்கள் கொடுப்பதை விட நேரில் பார்ப்பவருக்கு அதிக ஆச்சரியத்தை இது கொடுக்கும்;)

ஓகை said...

//உங்கள் கருத்தறிய இப்போது பொதுவில் வைக்கிறேன்: நம் பதிவுலகத்தால், இங்கு நிலவி வரும் கருத்துக் குவியல்களால் நம் சமூகத்திற்கு ஏதாவது நேரடி பயன் கிட்டுமா? என்றாவது//

கருத்தாக்கங்களின் பிரச்சார களமாகவும், பொய்கள் மாறுவேடமின்றிகூட உலவும் இடமாகவும், தரம்தாழ்ந்த தாக்குதலில் கீழ்மொழி எல்லையைக் கண்ட ஊடகமாகவும் இருந்தாலும் - தமிழ் வலையுலகின் மற்ற பல செயல்பாடுகள் எனக்கு மிகவும் நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கிறது.

இந்த கேள்விக்கு மிக நன்றி, தருமி அவர்களே!

தருமி said...

பொன்ஸ்,

//நேரில் பார்ப்பவருக்கு அதிக ஆச்சரியத்தை இது கொடுக்கும்;) //

இதுவுமா? :(

தருமி said...

பொன்ஸ்,
எப்படியோ நீங்க ஆரம்பிச்ச வைச்ச 'தர்ம அடி' தொடருது...இப்ப, சந்தோஷம்தானே...? : (

Anonymous said...

தருமி,
நல்ல தொகுப்பு, நன்றி. உங்கள் பதிவின் கடைசியில் இருந்த கேள்விக்கு பதில் சொல்ல நினைக்கிறேன்.
வலைப்பதிவுகள் நிச்சயம் நல்ல மாற்றத்தையும் பயனையும் கொடுக்குங்கிறதுல சந்தேமே வேண்டாம். வலைப்பதிவுகளால பெரிய புரட்சி நடக்கும்னு தோணல, ஆனா பல பதிவுகள் சிந்தனைய தூண்டும் விதமா இருக்கிறது மறுக்க முடியாத உண்மை. இன்னைய தேதியில மக்கள் படித்து வந்த/பார்த்து வந்த ஊடகங்கள் எல்லாம் லாப நோக்க மட்டும் தான் பார்க்குது. மக்களுக்கு தேவையான செய்திகளை/சிந்தனைய கிளறும் கட்டுரைகள், புதினங்களை போடறதே இல்ல. வலைப்பதிவுல அந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததால நிறைய நல்ல பதிவுகள் வருதுங்கறது என் எண்ணம்.
பயண்ணு பார்த்தா, பல விஷயங்கள்ள நம்மால "better judgment and better choice" எடுக்க முடியுது. அவ்வளவு எளிமையா படிக்க கிடைக்காத விஷயங்கள் படிக்க கிடைக்குது. பல "superstition" நம்ம தாண்டி போக முடியாத ஒரு தெளிவ குடுக்குது.
Downside-ண்ணு பார்த்தா, எந்த ஒரு பதிவிலிருக்கிற விஷயத்தையும் "grain of salt" ஓட தான் பார்க்கணும். உள்ளதை உள்ளபடி சொல்ற பதிவுகள் கம்மி. செய்தியோட தன் கருத்தையும் சேர்த்து சொல்றதால, செய்தியோட நம்பகத்தன்மை கொஞ்சம் குறைவு தான்.
பதிவுகள் படிக்க ஆரம்பிச்சி இந்த ரெண்டு வருஷங்கள்ள எனக்குள்ள பல நல்ல மாற்றம் ஏற்பட்டு இருக்குன்னு நினைக்கிறேன். நம்ம சமூகத்தோட பல பரிமாணங்கள் பார்க்க கிடைச்சிருக்கு. நல்லது கெட்டத பகுத்து பார்க்கக்கூடிய தெளிவு கிடைச்சிருக்கு.
ஒரே வருத்தம் இந்த குழு மனப்பான்மை தான். பல சமயம் நீங்களும் அந்த தீ-க்கு எண்ணெய ஊத்தியிருக்கீங்கறதுல கொஞ்சம் வருத்தம் தான்.

துளசி கோபால் said...

//அட்டா, இது தெரிஞ்சிருந்தா ராஜதுரைக்கு இன்னொரு அதிரசம் கொடுத்திருப்போமே..//

வெளியே சொன்னால் எல்லாருமா மொத்திருவீங்கன்னு
பயந்துக்கிட்டு பிரபு 'கப்சுப்'னு இருந்துட்டாரு போல :-)))))))))

சிஜி, உங்க பர்த்டே நோட்டட்:-)))))

கால்கரி சிவா said...

////எங்கே என் பக்கத்திலிருந்து பொவொண்ட்டோ பாட்டில்?//

நீங்க அமுக்க பாத்ததை பாத்துட்டு நான் அமுக்கிட்டேனே//

வெறும் பொவாண்டா சாப்பிட்டீங்களா? பொவாண்டாவை இன்னொன்றுடன் கலந்தல்லவா சாப்பிட வேண்டும்

தருமி said...

சிவா,
மூணு பாட்டில் வாங்குனதில ரெண்டு அங்க காலி. மீதி நீங்க சொன்னமாதிரி செஞ்சாச்சு..

தருமி said...

பார்த்தா,
ஆடிக்கொருதடவை அம்மாவாசிக்கு ஒரு தடவை வர்ரீங்க. ஆனா வரும்போது நல்லாவே விஷயங்களைக் கொடுத்திட்டு போறீங்க, நன்றி.

//ஒரே வருத்தம் இந்த குழு மனப்பான்மை தான்//
நீங்களே சொல்றது மாதிரி மற்ற ஊடகங்கள் போலல்லாமல்,(//ஊடகங்கள் எல்லாம் லாப நோக்க மட்டும் தான் பார்க்குது. //) இங்கே நான் என்ன நினைக்கிறேன் என்று எந்த சால்ஜாப்பும் இல்லாமல் நேரடியாக - hitting the bull's eye - சொல்ல முடிகிறது. எனக்கென்று ஒரு கருத்து என்னும்போது, ஒத்த கருத்துடையவர்கள் ஒன்று சேருவது எளிதாக இயல்பாக நடந்து விடுகிறது. ஒன்று சேருபவர்களிடம் நீங்கள் சொல்லும் அந்தக் 'குழுமனப்பான்மை' இயல்பாக'ஏற்பட்டு விடுமல்லவா? அது தவிர்க்க முடியாததாகவும், தவிர்க்கத் தேவையில்லாததாகவும் ஆகி விடுகிறது. இதில் தவறென்ன?

இடப் பங்கீடு பற்றி நான் எழுதுகிறேன். ஒத்தக் கருத்துள்ளோர் ஒருவரையொருவரைத் தெரிந்து கொள்கிறோம். இதில் தவறோ,தவிர்க்கப் படவோ ஏதுமுள்ளதாக எனக்குத் தெரியவில்லையே.

Santhosh said...

தருமி அய்யா,
think tank அப்படி என்றால் அனைவரும் ஒத்த கருத்து உடையவராக இருக்க வேண்டும் என்று ஏதும் இல்லையே? அப்படி ஒத்த கருத்து உடையவராக இருந்தால் அது முதலில் think tank ஆக இருந்தாலும் சிறிது நாட்களில் அது தன்னுடைய சிந்திக்கும் திறனை இழந்துவிட்டும் மாற்று கருத்து கொண்ட ஒரு குழுவே think tankஆக மாறுவதற்கு ஒரு நல்ல களமாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து. மேலும் தமிழ் பதிவாளர்கள் இது போன்ற நிலையை அடைய இன்னும் நிறைய முன்னேற்றம் வேண்டும் பெரும்பாலானோர் பொழுது போக வில்லை என்பதனால் எழுத வருகின்றனர் என்பது தான் உண்மை எனவே think tank போன்ற நிலையை அடைவது மிகக்கடினம் என்பது என்னுடைய கருத்து.

Anonymous said...

தருமி,
ஒத்த கருத்துள்ள ஆட்கள் ஒன்னா குரல் குடுக்கறது தப்பில்லே, நிச்சயம் அதை செய்யனும், ஆயிரம் பேர், லட்சம் பேருக்கு கேக்கிற மாதிரி உரக்க குரல் கொடுக்கனும். ஆனா இங்கே குழு மனப்பான்மைன்னு நான் சொன்னது (பிரபு ராஜதுரை சொன்னதும் அது தான்னு நினைக்கிறேன்), கூட்டமா ஒருத்தன எல்லாரும் கும்மிகிட்டு இருக்கும் போது, ஓ அவனா, நானும் கொஞம் கும்மிக்கிறேங்கிற மாதிரியான மனப்பான்மை தான்.
ஒரு பொது குழுமத்தில இருக்கக்கூடிய மக்கள் எல்லாரும் ஒரே மாதிரி சிந்திப்பாங்க, ஒரே சிந்தனை அளவில இருந்து பார்ப்பாங்கன்னு நாம எதிர்ப்பார்க்க முடியாது. எல்லாரும் ஒரே அளவு படிச்சி, ஒரே அளவு சிந்திச்சி ஒன்னா குழுமத்துக்கு வந்தா கூட அவங்க தன் வளர்ப்பு, வாழ்ந்த/வாழுற சூழல் அவங்களுக்குன்னு ஒரு தனி "silo"-வ உண்டாக்கி வச்சிருக்கு. அதோட வீச்சு அவங்க சிந்திக்கிறதில நிச்சயமா இருக்கும். ஆனா நல்லா படிச்சி, பகுத்து பார்க்க தெரிஞ்சி, இன்னும் பத்து பேருக்கு தெளிவ குடுக்கக்கூடிய சிந்தனை அளவுள்ள உங்களை மாதிரி ஆட்கள் இந்த கூட்டமா கும்மறதில்லேர்ந்து விலகி நின்னா ஒரு ஆரோக்கியமான தளத்த உண்டாக்கலாம், வெறும் வெட்டி பேச்சு, புலம்பல்னு இல்லாம அதுக்கு ஒரு படி மேல போகலாம், மாற்றத்த உண்டாக்கலாம். அது தானே நமக்கு வெற்றி, அதுக்காக தான நீங்க வலைபதியற முயற்சியையே ஆரம்பிச்சீங்க. அதை தான உங்க பதிவிலிக்கிற "litmus test" கேள்வி கேக்குது?

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

ha,you have changed your photo eh?the next photo will be your black negative,hm?nice sense of humour.

தருமி said...
This comment has been removed by a blog administrator.
தாணு said...

புறமுதுகு காட்டுவது தமிழர் பண்பாடா?

சோத்துக்கட்சி said...

நல்லாயிருந்தது அய்யா. நேரில வந்தமாதிரி உணரமுடிந்தது.

தருமி said...

//உங்களை மாதிரி ஆட்கள் இந்த கூட்டமா கும்மறதில்லேர்ந்து விலகி நின்னா ...//

பார்த்தா,

ஒரே மாதிரி குற்றச்சாட்டு என்மேல் - நீங்கள் இரண்டாவது ஆள்; முதலில் என்றென்றும் அன்புடன் பாலா. அதனால் ஒரு introspection. எந்தெந்த விவாதங்களில் நான் இத்தவறைச் செய்தேன் அல்லது செய்ததாக உங்களை நினைக்க வைத்தேன் என்று தெரியவில்லை. தெரிந்தால் விளக்கவோ, என்னளவில் திருத்திக் கொள்ளவோ முடியும்.தனித்து நிற்பதில் எனக்குஎப்போதும் தயக்கம் இருப்பதில்லை; ஆகவேதான் என் கட்டளைகளில் மூன்றாவது கட்டளையாக Dare to be different என்று வைத்து, அதைக் கடைப்பிடித்தும் வந்துள்ளதாக என்னைப்பற்றி நான் கணித்திருக்கிறேன். நீங்கள் சொல்வதைப் பார்க்கையில் நான் எங்கேயோ தவறிழைத்திருப்பேன் போலும். குறிப்பிட்டுக் கூறினால் திருத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும். உதவுங்கள்.

தருமி said...
This comment has been removed by a blog administrator.
தருமி said...
This comment has been removed by a blog administrator.
தருமி said...
This comment has been removed by a blog administrator.
தருமி said...

சந்தோஷ்,
//தமிழ் பதிவாளர்கள் இது போன்ற நிலையை அடைய இன்னும் நிறைய முன்னேற்றம் வேண்டும்..//

அடைய முடியும் என்ற உங்கள் கருத்தே சந்தோஷம் தருகிறது.

நன்றி

தருமி said...

சோத்துக் கட்சி,
நன்றி.
தொடுப்பு கொடுத்தமைக்கும் நன்றி.

தருமி said...

தாணு,
நான் ஒண்ணும் புறமுதுகு காண்பிக்கவில்லை; முன்னேறிப் போயிக்கிட்டு இருக்கேன் அப்படிங்கிறதை symbolic-க்காக காண்பிக்கிறேன். :(

Muthu said...

பாவம் தருமி,

என்ன கருத்து அவருக்கு இருக்கணும்னு மரியாதையாக மத்தவங்க சொல்லி தராங்க.

எது வரைக்கும் அவர் முற்போக்கு பேசலாம்,எதுக்கு மேல அவர் பேசக்கூடாது என்றெல்லாம் நண்பர்கள் சொல்லுவது உண்மையிலேயெ பாராட்டத்தக்க சேவை என்றே நான் சொல்லுவேன்

எதுக்கு அவ்வளவு கஷ்டம்?யார் கூட சேரணும் சேரக்கூடாதுன்னு,பேசணும்,பேசக்கூடாது என்று தெளிவா பெயரை சொல்லி சொன்னா புரிஞ்சிகிட்டு போக போறாரு.

(பின்னூட்டத்தை வெளியிடுவது உங்கள் விருப்பம்)

Post a Comment