
குசேலன் தமிழில் மட்டும்தானே எடுக்கப்படுகிறது? வேற ஒண்ணுமில்லை. இப்பத்தான் அந்தப் படத்துப் பாட்டு ஒண்ணு கேட்டேன்.

அதில நம்ம பெருசு குஷேலன் .. குஷேலன் அப்டின்னு ரொம்ப ஷ்டைலா ஷொல்றார். அடடா .. ரொம்பவே influence ஆயிரிச்சோ. அதாவது குஷேலன் .. குஷேலன் அப்டின்னு ஸ்டைலா சொல்றார்.

அதனால் ஒரு சந்தேகம் வந்திருச்சி. ஒருவேளை இன்னும் ஏதாவது மொழியில இந்தப் படத்தை எடுக்கிறாங்களா? இல்ல, .. பெருசு வெத்தில கித்தில போட்டுக்கிட்டு அப்படி சொல்லுதா? இல்ல, .. அப்படி சொ(ஷொ)ல்றதுதான் ரொம்ப ஷ்டைலா?

தெரியாததை தெரிஞ்சிக்கிடணுமேன்னுதான் கேட்டேன். ஏங்க, உங்களுக்குப் பதில் தெரியுமா?
25 comments:
எனக்கு தெரிந்து ஏற்கனவே ஒரு மலையாள படம்(பெயர் தெரியவில்லை) வந்தது அக்கதையை தமிழில் ரீமேக் செய்கின்றனர்!
மேலும் இதே கதையை கன்னடத்திலும் (பெயர் தெரியவில்லை), தெலுங்கிலும் தயாராகி (குசேலுடு) வருகிறது என்று காற்று வாக்கில் செய்தி உலவுகிறது.
எந்த பாட்டு??
"அதனால் ஒரு சந்தேகம் வந்திருச்சி. ஒருவேளை இன்னும் ஏதாவது மொழியில இந்தப் படத்தை எடுக்கிறாங்களா? இல்ல, .. பெருசு வெத்தில கித்தில போட்டுக்கிட்டு அப்படி சொல்லுதா? இல்ல, .. அப்படி சொ(ஷொ)ல்றதுதான் ரொம்ப ஷ்டைலா?"
தருமி அந்த பாடல் ஜப்பானின் மன நிலை பாதித்தவர்கள் மனதை சாந்தப்படுத்துவதற்காக சேர்கப்பட்ட பாடல் ;-)
இந்த வார ஆனந்த விகடனில் அட்டை படத்தில் குப்பை செய்தியை வெளிவந்துள்ளது பார் தருமி.
புதுவை சிவா
addhu "Kadhai Parrium Pozhl" padaddhodda remake..so, tamil lla dhaan Kuselan nnu vaicchu, vari villakku elaam KK koddutthu eddu irrukangga...
addhu, super start style nngga "KuSHElan", addhu illaam, avvvarkku Tamil innum theriyalliyyo ennamo !
ராம்,
பண்பலையில பெருசு அப்படி பேசுச்சு...
தருமி சார்,
தலிவரு சில வார்த்தைகளை அப்படித்தான் சொல்லுவாரு (அ) அப்படித்தான் அவரால சொல்லமுடியும். மன்னன்ல அவரு பாடுன பாட்டையே நாங்க ஏத்துக்கலையா?! :)
ஆனா பாட்டுல இருக்குன்னா பாடின ஆளைத்தான் கேக்கனும்! அந்த பாடகரு யாரு உதுத்த நாராயணனா?!
தமிழா கொஞ்சம் ஸ்டைல உச்சரிச்சா உங்கள மாதிரி பெருசுங்களுக்கேல்லாம்
பொறுக்காதே
வால்பையன்
வாலு,
//...கொஞ்சம் ஸ்டைல உச்சரிச்சா..//
அடடா .. எத்தனை தடவை சொல்றது? அது ஸ்டைல் இல்லீங்க; "ஷ்டைல்"
இளவஞ்சி,
எப்படிங்க இந்த உதுத்த நாராயணனை எல்லா இசை அமைப்பாளர்களும் பாட கூப்பிடுறாங்க; நாமளும் எல்லோரும் அதையும் ரசிச்சித் தொலைக்கிறோம்! இந்த இசை அமைப்பாளர்களுக்கு மனசாட்சியே இருக்காதா?
சென்னையில் ஷ்கூலு என்று சொல்வது சரியா,தவறா?
வால்பையன்
சிவா,
சொன்ன இரு விஷயமும்
பு(தெ)ரியலை.
சிவமுருகன்,
தகவலுக்கு நன்றி.
விஜி,
தமிழெல்லாம் அவருக்கு நல்லாவே தெரியும்னு நமக்குத் தெரியாதா?
சகரத்தை ஷகரமாக்குவது பலரும் செய்து வரும் தமிழ்க் கொலை தான் :( styleனு நினைச்சிக்கிறாங்க :(
ஷரவணன், முருகேஷன், ஷிவா, ஷந்தோஷம் - இப்படி... :(
அது ஸ்டைலுமில்ல, ஷ்டைலுமில்ல
இஷ்டைலு -எங்கே சொல்லுங்க பாப்போம்!
நாட்டின் தலையாயக் கேள்வியைக் கேட்ட உமக்கும், அதற்குப் பதில் சொல்லத் தெரியாத என்னை மாதிரி வேஷ்டுகளுக்கும் எனது கண்டனங்கள் :)
தருமி said...
"அதாவது குஷேலன் .. குஷேலன் அப்டின்னு ஸ்டைலா சொல்றார்."
சேர்க்கை சரியில்லன்னா இப்பிடித்தாண்ணே.
சந்திரமுகி படத்துல கூட வடிவேலுவ முருக்கேஸ்ஸா, முருக்கேஸ்ஸான்னுதான் கூப்புடுவாரு.படையப்பா படத்துல ஸ்ம்ஸுகிருதம் தேவபாஸைன்னு சொல்வாரு.ஏழெங்கே கஸ்டப்படக்கூடாதுன்னு ஸைஸா ஸொல்லுவாரு.
அய்யய்யோ இந்த வியாதி எனக்கும் வந்துருச்சுண்ணே.
வாயில லைட்டா ஸூடு வச்சா சரியா வந்துருரும்ணே.
ஒரிஜினல் "மனிதன்",
வெகு காலத்துக்கு முன்னால் ஒரு "மனிதன்" என் பதிவுக்கு
'எழுந்தருளி' அருளுபதேஷம் பண்ணிட்டு போனார். நிச்சயமா நீங்கள் அவரா இருக்க முடியாது. ஏன்னா, நீங்கள் ஒரிஜினல் அல்லவா!
//சேர்க்கை சரியில்லன்னா இப்பிடித்தாண்ணே.//
கரீட்டுனா கட்ட கரீட்டு'ணா!
தஞ்சாவூரான்,
ஆமா, தலையாய கேள்வி கேட்டுட்டாப்புல ஓடியாந்து சொல்லிருவீகளாக்கும்.
அதோட போன மாசம் தசா.
இந்த மாதம் குசேலன் அப்டின்றதுதான நம்ம பதிவுலக அஜெண்டா.. தெரியாதா?
ரவிஷங்கர், மோகன் கந்தஷாமி,
இரண்டு பேருக்கும் ரொம்ப தாங்ஷு:)
"வெகு காலத்துக்கு முன்னால் ஒரு "மனிதன்" என் பதிவுக்கு
'எழுந்தருளி' அருளுபதேஷம் பண்ணிட்டு போனார். நிச்சயமா நீங்கள் அவரா இருக்க முடியாது. ஏன்னா, நீங்கள் ஒரிஜினல் அல்லவா"
அய்யா ஸத்தியமா ஸொல்றேன்
நான் அவனில்லை.
//இந்த இசை அமைப்பாளர்களுக்கு மனசாட்சியே இருக்காதா?//
போங்க தருமி உங்களுக்குத் தெரியவேயில்லை.
இசைக்கு மொழி கிடையாதாம்:-)
என் சந்தேகம் என்னன்னா.....
ஒருவேளை காசு வாங்கிக்காம இலவசமாப் பாடறாரோ?
துளசி,
//இசைக்கு மொழி கிடையாதாம்//
சரி, வேணாங்க விட்டுருவோம்.
மனுஷன் பாடுறது கேட்க - அது என்ன ..? - ரொம்ப நாராசமால்ல இருக்கு!! அப்புறமும் நம்ம ஆளுக ஏன் அது பின்னாலேயே ஓடுறாங்களோ?!
துளசி,
//ஒருவேளை காசு வாங்கிக்காம இலவசமாப் பாடறாரோ?//
ஆசை .. தோசை .. அப்பளம் ..வடை..........
//ரவிஷங்கர், மோகன் கந்தஷாமி,
இரண்டு பேருக்கும் ரொம்ப தாங்ஷு:)//
நான் தைரியமா என்ன வேன்னா சொல்லலாம் ஏன்னா என்னோட பேர்ல ஷ கெடயாது.மத்த 'ஷ' இருக்குற பேர கிண்டல் பண்றீங்களே உங்க பேர்லயும் இருக்குன்றத மறந்துடீங்களா, இல்ல உங்க உண்மையான பேரு அவங்களுக்கு தெரியாததுனால எஸ்கேப் ஆய்டீங்களா ?
Post a Comment