Wednesday, August 26, 2009

332. காசியின் கேள்விகளும் தருமியின் பெனாத்தல்களும் ...

*

காசி சில பதில்கள் அப்டின்னு கேட்டு என்னென்னமோ கேட்டிருந்தார். நானும்
க.கை.நா.-க்கு இது கொஞ்சம் அதிகம்தான். இருப்பினும் முயற்சிக்கிறேன் என்று எழுதிவிட்டு, அதன்பின் காசிக்கு எந்தப் பதிலும் போடாமல் இருந்துட்டேன். விட்டார்னா அப்படியே இருந்திரலாம்னு ஒரு கணக்கு. ஆனா மனுஷன் விடலை. மறுமடல் வந்த பின்னால் ஒண்ணும் பண்ணாமல் இருக்க முடியலை. நமக்குத் தெரிந்ததை சொல்லிடுவோம்; அவர் அதை அட்ஜஸ்ட் பண்ணி ஏதாவது உருப்படியா மாத்தி கீத்தி எழுதிக்குவார்னு ஒரு நம்பிக்கையில அனுப்பினேன். ஆனால் மனுஷன் நீங்களே அதை பதிவிடுங்கள் அப்டின்னு சொல்லிட்டார். வேறு வழியில்லாததால்… நான் கொடுத்த பதில்கள்:

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

இந்த முதல் கேள்வியைப் பார்த்துட்டு அன்னைக்கி ஓடுனவன்தான்!! வசதிகள் இருக்கு அப்டின்றது மக்களுக்கு இன்னும் முழுசா போய்ச்சேரவில்லை என்றே நினைக்கிறேன். எனக்கு தெரிந்த பேராசிரியர்கள் பலருக்கும் இணையத்தில் தமிழ் என்பதே ஒரு விந்தையாக இன்னும் இருக்கிறது. அந்தச் செய்தி இன்னும் பரவ வேண்டும்.



2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம்
அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம்
தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

இன்னும் இல்லை. உதாரணமாக மின்னஞ்சல்களே இன்னும் விரிவடையவில்லை. நமது 'லெவலில்' இருப்பது மேலும் பரவ வேண்டுமே.அதிலும்அரசாளுமை விரிவாக்கப்பட்டால் மற்றவை தானாகவே விரிவடையும். ATM விரிவாக்கம் ஒரு நல்ல மாதிரி. இப்போதெல்லாம் அதைப் பயன்படுத்துபவர்கள் எல்லா 'லெவலில்' இருப்பது போல் மாற வேண்டும்.

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின்
பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த
அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும்
முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

விக்கிபீடியாவில் சமீபத்தில் நடந்த விவாதங்களைப் பார்க்கும்போது அதில் மிக பெரிய அளவில் அரசியல் இருப்பதுபோன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டது. ஆனால் கட்டாயம் விக்கிபீடியா போன்றவைகள் விரிவடைய வேண்டும். தன்னார்வலர்களின் தொண்டு அதிகமாக வேண்டும். விக்கிபீடியா விரிவடைந்தது பற்றாது என்றே நினைக்கிறேன்.மதுரைத் தமிழ் பற்றி அதிகமாகத் தெரியாது. அதுவும் அதிகமாக வளரவில்லை என்றே நினைக்கிறேன்.

இதில் நம் பதிவர்களின் பங்கு அதிகமாக ஆக வேண்டும். அவைகளில் இருக்கக்கூடிய பிரச்சனைகளைத் தீர்த்து, அவைகளை நாம் வளர்க்க கட்டாயம் ஏதும் உடனே செய்ய வேண்டும்.


4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

துண்டைத் தேடுவேன்!! தோளில் போட்டு ஓட......... !

முடியாட்டா ... இருக்கவே இருக்கு think tank. அப்படி ஒண்ணை அமைச்சிட்டு
காசிக்கு முதலிடம் போட்டுக் கொடுத்திருவேன்! அதுக்குப் பிறகு அதை அவரு பாத்துக்கட்டும். அதத்தான நம்ம வள்ளுவரய்யா சொல்லியிருக்கிறார்.

5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

மொக்கை எனக்குப் பிடிக்கும்; ஆனால் மொக்கை மட்டுமே இருப்பதுபோல் தெரிவது மாற வேண்டும்.
வெறும் பொழுது போக்காக இல்லாமல் இன்னும் கொஞ்சம் 'சரக்கு' கூடணும் என்பது ஆசை. அது படுக்கை, நீட்டு வசத்தில் நீளணும்.

6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

பரவாயில்லையே. ஐந்தில் நான்கு ஆண்டுகள் நானும் தமிழ்மணத்தோடு இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. என்னைப் பொறுத்தவரை என் ஓய்வு பெற்ற வாழ்வில் இருந்த ஒரு வெற்றிடம் நிச்சயமாகப் பலனுள்ள வகையில் மாற்றியது தமிழ்மணம் . நன்றி அதற்கும் உங்களுக்கும்.

பூங்கா போன்ற புது அமைப்புகள் தோன்றி இன்னும் சரக்கான பதிவுகள் வர ஊற்றுவிக்கப்படணும். 'நட்சத்திர அந்தஸ்து' மாதிரி பூங்கா போன்ற அமைப்புகள் இன்னும் நிறைய இருந்தால் ஒரு விதப் போட்டி மனப்பான்மையில் மேலும் நல்ல் பதிவுகள் வர வாய்ப்புகள் உண்டு.


தமிழ்மணம் பெரிய ஒரு நண்பனாகப் போச்சு. இதை உருவாக்கிய காசிக்கு என் நன்றிகள். தமிழ் இணையத்தில் அழகான இடம் பிடித்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

14 comments:

Thekkikattan|தெகா said...

அப்படியே வழிமொழிகிறேன் :)

ஜோ/Joe said...

அப்படியே வழிமொழிகிறேன்

ilavanji said...

தருமிசார்,

// பூங்கா போன்ற புது அமைப்புகள் தோன்றி //

இது முற்றிலுமாக வரவேற்று வழிமொழிகிறேன்.

ஒரு ஒத்த கருத்துடைய குழுவால் சிறப்பான பதிவுகள் ஓரிடத்தில் தொகுக்கப்பட்டு படிக்கக் கிடைக்கையில் அது பெறும் கவனமே தனி! அதுபோக படிப்பவர்களுக்கும் ஒரு நிறைவு. மாற்று கூட இப்படித்தான் இயங்கி வருகிறது.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வாழ்த்துகள்.

கண்மணி/kanmani said...

//வசதிகள் இருக்கு அப்டின்றது மக்களுக்கு இன்னும் முழுசா போய்ச்சேரவில்லை என்றே நினைக்கிறேன். எனக்கு தெரிந்த பேராசிரியர்கள் பலருக்கும் இணையத்தில் தமிழ் என்பதே ஒரு விந்தையாக இன்னும் இருக்கிறது. அந்தச் செய்தி இன்னும் பரவ வேண்டும்.//
தமிழில் நெட்டில் எழுதுகிறோம் என்றாலே விநோதமாப் பார்க்கிறாங்க.
//தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?//

ஹூம் கொஞ்சகாலம் முன்பு ........வார்த்தைகள் அதிகமாக புழங்கியபோதும் சண்டை சச்சரவு இருந்தபோதும் தமிழ்மணம் திறக்கவே பிடிக்கலை.
இப்போ நிலைமை தேவலை.
அதிலும் நண்பர் செந்தில்நாதனுக்கு உதவ பதிவர்கள் எடுக்கும் முயற்சி வலைப்பதிவின் மூலமும் சாதிக்க முடியும் எனக் நம்பிக்கையளிக்கிறது.

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....

நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.

ஊர் கூடி தேர் இழுப்போம்.

எப்படி பணம் அனுப்புவது ?

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

கிருஷ்ண மூர்த்தி S said...

தருமி ஐயா காசிக்குச் சொன்னதில் இருந்து தெரிஞ்சுகிட்டது:

ஒண்ணு. பேராசிரியார்களாக இருந்தால் எல்லாம் தெரிந்தவர்கள்னு நினைக்கிறதும் ஒரு மாயை! கற்பிப்பவன் தொடர்ந்து கற்க மறந்து தேங்கி விடுவது இன்றைய யதார்த்தம்.

ரெண்டு,''சரக்கு' கூடணும்!
சரக்கு கொஞ்சமா இருந்தாலே போதும், அலம்பல் வரும், கூடினா,படுக்கை, நீட்டல் எல்லாம் தானே வரும்!

தருமி said...

கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களுக்கு,

உங்கள் பதிலின் முதல் பத்தியில் நீங்கள் முயற்சித்த உள்குத்து தேவையில்லாத ஒன்று.

இரண்டாவதிலுள்ள (அது என்ன allegoryயா?) ஒண்ணும் புரியலை!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அய்யா கிருஷ்ணமூர்த்தி அவர்களே,
தனக்கு எல்லாமும் தெரியும்னு நினைப்பது பேராசிரியர்கள் மட்டும்தானா?உலகத்தில வேற யாருக்குமே அப்படி நெனப்பு இருந்து நீங்க பார்த்ததே இல்லையா?சரி அப்படியே இருக்குன்னு வெச்சுக்கிட்டாலும் பேராசிரியர்கள் தங்களுடைய ஒரு சப்ஜெக்ட்ல மட்டும்தான் நெனப்பாங்க.ஆனா மத்த கேசுக ஒன்னுமே தெரியலன்னாலும் எல்லாம் தெரிஞ்ச மாதிரி பீலா உடுறதை எந்த கணக்கில சேத்துப்பீங்க.கற்பிப்பவன் தொடர்ந்து கற்பதில்லையா?அய்யா சாமி ! எந்தக் காலத்துல இருக்கீங்க?நீங்க படிச்ச திண்ணப் பள்ளிக்கூடத்து வாத்தியாருகளா, இப்ப இருக்கிற பேராசிரியர்கள்.அடிக்கடி விஷயங்களை அப்டேட் பண்ணனும்.இல்லன்னா காணாமப் போயிருவோம்.சொல்லப் போனா அதிகமா அப்டேஷன் தேவைப் படுகிற துறைகள்ல இதுவும் ஒண்ணுன்னு தெரிஞ்சுக்கங்க.ஒருத்தரை எதிர்த்து மாற்றுக் கருத்து சொல்ல உங்களுக்கு உரிமை உண்டுதான்.ஆனா அதுக்காக அவர் தொழிலைச் சொல்லாதீங்க.சொன்னா என்னைய மாதிரி அதே துறையைச் சேர்ந்தவர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும்.

சரக்கு கொஞ்சமா இருந்தா அலம்பல் வருந்தான் நான் ஒத்துக்கிறேன்.நீங்க எப்படி? நிறைகுடமா?உங்களுக்கு எல்லாம் தெரியுமா இல்ல கொஞ்சம்தான் தெரியுமா? ஏன்னா உங்க ப்ளோக்ல நீங்க ஆன்மீக விஷயத்தை விட தனிமனித தாக்குதல்தான் அதிகமா பண்ணிருக்கீங்க.வால்பையன் , மற்றும் தருமி அய்யாவை தாக்கி எழுதிருக்கீங்க.நீங்க ஆத்திகம் பேசுறதுக்கு உங்களுக்கு எவ்வளவு உரிமை உண்டோ அதே அளவு நாஸ்திகம் பேச அவங்களுக்கும் உரிமை உண்டுங்கறதப் புரிஞ்சுக்கங்க.உங்களால அவங்க கேக்குற கேள்விக்குப் பதில் சொல்ல முடியலையா? பேசாம விட்டுட்டு எங்கள மாதிரி கிருஷ்ணா ராமான்னு இருந்துடுங்க.
நான் ஆஸ்திகனுமல்ல நாஸ்திகனுமல்ல, என்னோட கடவுள் தத்துவம் வேற,அதை நீங்க ஏத்துக்கணும்னு நான் சொல்ல முடியாது.உங்க தத்துவத்தை எல்லாரும் ஏத்துக்கணும்னு நீங்களும் எதிர்பார்க்கமுடியுமா?நீங்க அக்கரைல இருந்தப்ப பேசியிருப்பீங்கல்ல இதே கருத்துகளை.அப்போவும் யாரும் ஏத்துக்கலைன்னு இதே மாதிரி கோவப்பட்டுருப்பீங்க, இப்போ நீங்க இந்தக் கரைக்கு வந்ததும் அதுக்கு மாற்றுக் கருத்து சொல்லுவீங்க உடனே எல்லோரும் அதை ஏத்துக்கிடணுமா?ஆக மொத்தத்துல உங்களுக்கு சரின்னு பட்டத உடனே எல்லோரும் ஏத்துக்கிடனும் , மாற்றுக் கருத்து சொல்லக் கூடாது அப்படித்தானே?இப்போ சொல்லுங்க இங்க யாரு நிறைகுடம்னு. யாருமே இல்ல, அவங்கவங்களுக்கு சரின்னு பட்டத வெச்சுக்கிட்டு வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான்.மறுபடியும் சொல்றேன் நீங்க தொழிலைக் குறிப்பிட்டது தப்பு. சின்னப் பையன் தவறா ஏதாவது சொல்லியிருந்தா மன்னிச்சிடுங்க.நன்றி,வணக்கம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//கிருஷ்ணமூர்த்தி said...
தருமி ஐயா காசிக்குச் சொன்னதில் இருந்து தெரிஞ்சுகிட்டது:
ஒண்ணு. பேராசிரியார்களாக இருந்தால் எல்லாம் தெரிந்தவர்கள்னு நினைக்கிறதும் ஒரு மாயை! கற்பிப்பவன் தொடர்ந்து கற்க மறந்து தேங்கி விடுவது இன்றைய யதார்த்தம்.//

நண்பரே.. இந்த வார்த்தைகளால் நிங்கள் சொல்ல வருவது என்ன? ஆசிரியர்கள் ஏதும் அறியாதவர்கள் என்றா இல்லை தனிப்பட்ட முறையில் யாரையேனும் தாக்குகிறீர்களா? கற்றல் என்பது கடைசி வரை இருப்பது.. ஆசிரியர் பணி என்பது மேன்மையான ஒரு பணி.. யாரேனும் ஓரிருவரை வைத்து மொத்த ஆசிரியர் சமூகத்தையும் குறை சொல்வது அயோக்கியத்தனம்.. அப்படி என்ன தப்பை இந்த கேள்வி பதில்ல கண்டுபிடிச்சீங்கன்னு சொன்னா கொஞ்சம் உதவியா இருக்கும்..

//ரெண்டு,''சரக்கு' கூடணும்!
சரக்கு கொஞ்சமா இருந்தாலே போதும், அலம்பல் வரும், கூடினா,படுக்கை, நீட்டல் எல்லாம் தானே வரும்!//

இந்த வார்த்தைகளே போதும், உங்களுடைய தராதரத்தை சொல்ல.. இதுக்கு மேல நான் ஒண்ணும் சொல்ல விரும்பலை..

மருத புல்லட் பாண்டி said...

enna brother nammala maranthutinga

மருத புல்லட் பாண்டி said...

enna brother nammala maranthutinga

கிருஷ்ண மூர்த்தி S said...

தருமி ஐயா தனக்குப் புரியலேன்னு சொன்னதுக்கு:
/இன்னும் கொஞ்சம் 'சரக்கு' கூடணும் என்பது ஆசை. அது படுக்கை, நீட்டு வசத்தில் நீளணும்./

உங்க அஞ்சாவது பாயிண்டுக்கு, சிரிச்சுவையோடு சொல்ல வந்தது. இதுக்கும், இதுக்கு முந்தி சொன்னதுக்கும், வேறு எந்த உள்குத்து, வெளி குத்து முயற்சி எல்லாம் இல்லை!

சிரிப்பு வரல, கடுப்புத் தான் வந்ததுன்னு, இன்னைக்குப் பதிவின் பின்னூட்டங்களைப்படித்து இப்பத்தான் தெரிஞ்சுகிட்டேன். பரவாயில்ல!

அப்புறம், ஸ்ரீ, கார்த்திகைப் பாண்டியன், ரெண்டு பேருக்கும் சொல்லிக் கொள்ள விரும்புறது என்னன்னா..

மொதல்ல, வால்பையனை நான் தாக்குகிறேன் என்பது நல்ல தமாஷ்! உண்மையில், அவருடைய வேகத்திற்கு, presence of mind, இதுக்கெல்லாம் நான் ரசிகன்! இதை வெளிப்படையா நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறேன்!

மாறுபட்ட கருத்துக்கள், முரண் இயக்கத்தில் தான் எல்லாமே இயங்குகிறது என்ற கருத்தில் நம்பிக்கை உள்ளவன் நான். நாத்திகம் பேசுவதைத் தவறு என்று எப்போதும் சொன்னதில்லை. எடுத்து வைக்கும் வாதங்களில் இருந்து கேள்விகள் கேட்கிறேன், அவ்வளவுதான்!

ஆசிரியர் பணி புனிதமான பணி என்று எனக்குப் புதிதாகச் சொல்லிக் கொடுக்க முயற்சித்ததற்கு மிகவும் நன்றி!

தருமி said...

//எடுத்து வைக்கும் வாதங்களில் இருந்து கேள்விகள் கேட்கிறேன், அவ்வளவுதான்!//


கிருஷ்ணமூர்த்தி ஐயா,

கேள்விகளா ... எங்கே இருக்கு அவைகள்?

Post a Comment