Monday, October 19, 2009

347. கடவுள் என்றொரு மாயை ... 12

*
தொடர்புடைய ஏனைய பதிவுகள்:

298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12



கடவுள் என்றொரு மாயை


THE GOD DELUSION


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


==========================================

அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================

Chapter 10.

A MUCH NEEDED GAP?

===========================================


நமது வாழ்க்கையில் கடவுள் என்றொன்றிற்கு மனத்தளவில் ஓரிடம் உண்டு - ஒரு நண்பனாக, தந்தையாக, மூத்த தமையனாக, நம் குற்றங்களைத் தாங்குபவராக, நம்பிக்கைக்குரியவராக. கடவுள் என்று ஒன்று இருக்கிறதோ இல்லையோ அதற்கென்று நம் வாழ்க்கையில் ஓரிடம் உண்டு. (387)

*
அந்தக் கற்பனை நண்பன், கற்பிக்கப்படும் அந்தக் கடவுள் வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு எப்போதும் நிறைய காலம் எடுத்து, பொறுமையொடு காத்திருப்பார். மனோதத்துவர்களோ, நல்லுரை கூறுபவர்களோ அந்த அளவு பொறுமையோடும், காலணா காசில்லாமல் கிடைப்பார்களா என்ன? (391)

*
மதங்களை மறுத்துவிட்டால் அதற்குப் பதிலாக எதை வைத்திருக்கப் போகிறீர்கள்?

*
மதங்கள் மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது என்பதாலேயே அது உண்மையாகி விடுவதில்லை.

*
கடவுள் உண்மையாக இருப்பின், அவரோடு இருப்பதே மகிழ்ச்சி என்பதானால், சாகும் நேரத்தில் எல்லா நம்பிக்கையாளர்களும் மகிழ்ச்சியோடுதானே இருக்க வேண்டும்? ஒருவேளை அவர்கள் நம்பியதாகக் கூறியவை எல்லாமே வெறும் வேடம்தானா?

ஏன் இரக்கக் கொலை (euthanasia) அல்லது தற்கொலை நம்பிக்கையாளர்களுக்குத் தப்பாகத் தெரிகிறது?

*
இந்த வாழ்க்கைக்குப் பின் இன்னொரு வாழ்க்கை உங்களுக்காகக் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையுள்ளவர்களுக்கு, இறப்பு என்பது இன்றைய இந்த உலக வாழ்க்கையிலிருந்து மறு வாழ்வுக்காக உங்களைக் கடத்தும் ஒரு கருவி என்பது தானே உண்மையாக இருக்க வேண்டும்?

*
இந்த வாழ்க்கை மரணத்தோடு முடிகிறது என்ற நம்பிக்கையுள்ளவர்கள் தான் இரக்கக் கொலைக்கோ, உதவப்படும் தற்கொ்லைக்கோ (assisted suicide) எதிர்ப்பு காண்பிக்க வேண்டியவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அடுத்த ஜென்ம வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவர்கள்தானே இவைகளை ஆதரிக்கிறார்கள்.

*

................................ கடவுள் என்றொரு மாயை என்ற நூல் பற்றிய இந்தக் கட்டுரை இத்துடன் நிறைவு பெறுகிறது!!


http://www.mylivesignature.com/signatures/54487/287/FE27BF4CB271859C180DCF19676DCCD3.png



*


*

9 comments:

வால்பையன் said...

அதுகுள்ள முடிஞ்சிருச்சா!?

இதே மாதிரி அடுத்த புத்தகத்தை தொடருங்கள் சார்! நிறைய பாயிண்ட்ஸ் இங்க இருந்து தான் எனக்கு கிடைக்குது!

தருமி said...

வரிசையா நிக்குது ...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நியாயமான கேள்விகள்தான்.ஆனால் பதில் சொல்லத்தான் யாரையும் காணும்.லிங்கை யாருக்காவது அனுப்பி விடுங்க.

கிருஷ்ண மூர்த்தி S said...

பதில் சொல்ல ஆட்கள் இருக்கிறோம் ஸ்ரீ! கேட்பதற்குத் தயாராக இருக்கிறீர்களா, என்ன!

ஏன், எப்படி, எதனால், யாரால், எப்பொழுது என்பது மாதிரியான அடிப்படைக் கேள்விகளின் மீது தர்க்க ரீதியாகப் பேசி, உண்மையைப் புரிந்து கொள்ளத் தொடங்கும் கடவுளை ஒப்புக் கொள்கிற தரப்பும், கடவுளை மறுக்கிற தரப்பும், சீக்கிரமே, எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு விட்டு வேறு திசைக்குப் போய்விடுகிறதாக மட்டும் இல்லை, ஒரு வரட்டுப் பிடிவாதத்தோடு, வேறுவேறான விளிம்புநிலைக்கே(extremes) போய்விடுவது தான், இங்கே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

ரிச்சர்ட் டாகின்சும் அந்தத் தவறைத் தான் தனது புத்தகம் முழுவதிலும் செய்திருக்கிறார் என்பது தான் நான் இந்தப் புத்தகத்தின் மீது முன்வைக்கிற முக்கியமான விமரிசனமே!

"பகுத்தலும் அறிதலின் ஒரு பகுதியே. ஆனால் அறிவியல் முறை பகுத்தல்களை மட்டும் கொண்டு பூரணத்தை உணரமுடியாது. ஒரு பாடலை கேட்கும் பொழுது எண்ணற்ற எண்ணங்கள் , படிமங்கள் தோன்றி மறைகின்றன. அவற்றை எல்லாம் dopamine, serotonin, neuro transmitterஐ மட்டும் கொண்டு விவரிக்க இயலாது. the experience is very dense and has lot of subtleties which can't be reduced just to exterior dimensions. "
இப்படி ஒரு செழுமையான வாதம், வெறும் ஹிட்ஸ் கணக்கை மட்டுமே வைத்துச் சொல்லப்பட்டது அல்ல-உள்ளடக்கத்தை வைத்து மட்டுமே சொல்கிறேன், இங்கே நடந்திருக்கிறது:

http://andaiayal.blogspot.com/2008/07/blog-post_11.html

பின்னூட்டங்களில் பராகா என்ற அரவிந்த் இப்படி சுயமாக யோசித்து எழுதிய சுவாரசியமான பகுதி முதல் கொண்டு ஏராளமான குறிப்புக்களை தர முடியும்.

Anna said...

Mr. Krishnamoorthy said:

"பதில் சொல்ல ஆட்கள் இருக்கிறோம் ஸ்ரீ! கேட்பதற்குத் தயாராக இருக்கிறீர்களா, என்ன!"

I for one would love to hear your answers to the raised questions in the post.

Anna said...

Mr. Krishnamoorthy said:

"ஒரு பாடலை கேட்கும் பொழுது எண்ணற்ற எண்ணங்கள் , படிமங்கள் தோன்றி மறைகின்றன. அவற்றை எல்லாம் dopamine, serotonin, neuro transmitterஐ மட்டும் கொண்டு விவரிக்க இயலாது. the experience is very dense and has lot of subtleties which can't be reduced just to exterior dimensions. "

How else can you explain it? Coudl you elaborate on that? Are there any other evidence that suggest that its more than what happens in the brain?


"Even though its common knowledge these days, it never ceases to amaze me that all the richness of our mental life - all our feelings, our emotions, our thoughts, our ambitions, our love life, our religious sentiments and even what each of us regards us his own intimate private self - is simply the activity of these little specks of jelly in your head, in your brain. There is nothing else."

Professor V S Ramachandran, Director for the Center of Brain and Cognition, University of California, San Diego.

Have a look at these videos. It's amazing what you can learn from rare brain disorders.

http://www.charlierose.com/view/interview/10468

http://atheistplanet.blogspot.com/2009/09/beyond-belief-06-vs-ramachandran.html

தருமி said...

thank you, the analyst, for the treasure cove.

கையேடு said...

வெற்றிகரமா தொடரை முடிச்சிட்டீங்க போல.

தருமி said...

கையேடு,
ஆமா .. அடுத்து அடுத்து போகணும்ல ..!

Post a Comment