Wednesday, December 09, 2009

357. WHY I AM NOT A MUSLIM ... 1

*

ஏனைய பதிவுகள்:

*







*

WHY I AM NOT A MUSLIM

நூலாசிரியர்: IBN WARRAQ
PROMETHEUS BOOKS
59. John Glenn Drive
Amherst,
New York

1995




*
R. JOSEPH HOFFMANN
WESTMINISTER COLLEGE, OXFORD
என்பவர் எழுதிய முன்னுரையிலிருந்து ....


*

இந்த நூல் ஒரு நீண்ட பயணம் பற்றியது; அந்தப் பயணம், இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து அதன் நம்பிக்கைகளில் ஊறி, அதன்பின் ஒரு சிலரால் 'வெள்ளைக்காரத்தனம்' என்று சொல்லப்படும் மேற்கத்திய 'திறந்த மதம்' என்ற அமைப்பில் வாழ்ந்து, அந்த வாழ்க்கையால் பிறந்த ஐயங்களின் ஊடே பயணித்து, இறுதியில் மத மறுப்பு என்னும் புள்ளியைப் பெற்ற பயணம்.

*
இது போன்ற பயணங்கள் எல்லாமே மிகவும் தனிமைப் படுத்தப்பட்ட பயணங்களே!

*
இந்த 'மதப் பயணங்களில்' செல்பவர்கள் தாங்கள் சொல்வதையெல்லாம் கண்ணுக்குத் தெரியாத ஒரு குழு தன்னைச் செவி மடுப்பதாகவும், புரிந்து கொள்வதாகவும் நம்புகிறார்கள்.



*
DEDICATION

மதப் பாசிஸத்தையும் மீறி
நான் பெற்ற
என் தாய், மனைவி, சகோதரி, என் மகள்கள்
அவர்களுக்காக ...

*

ஆசிரியரின்
முன்னுரையிலிருந்து ...


*

இன்று தன்னை ஒரு இஸ்லாமிய நாடாகச் சொல்லிக்கொள்ளும் நாட்டில் நான் ஒரு இஸ்லாமியனாகப் பிறந்து வளர்ந்தேன்.


*
என் தாய்நாட்டின் மொழியைக் கற்றுக் கொள்வதற்கு முன்பே நான் அராபிய மொழியில் எதுவும் புரிந்து கொள்ளாமலேயே குரானை வாசிக்கக் கற்றுக் கொண்டேன். ஆயிரக்கணக்கான முஸ்லீம் குழந்தைகளுக்கு உரிய விஷயம்தான் இது.

*

சிந்திக்க ஆரம்பித்த போது மதங்கள் என் மீது ஏற்றி வைத்தவைகளை நான் ஒதுக்க ஆரம்பித்தேன். இப்போது நான் என்னைப் பற்றி நினப்பதெல்லாம், நான் ஒரு சமயத் தொடர்பில்லாத, மனித நேயம் மட்டும் கொண்டவன். எல்லா மதங்களுமே மனம் பிறழ்ந்தவர்களின் கனவுகள்; ஆய்வில் புறந்தள்ளப்பட வேண்டிய, எங்கும் எளிதாகப் பரவும் கனவுகள்தான் அவை.


*

நான் இதுவரை எந்த ஒரு நூலும் எழுதியதில்லை. ஆனால் ஷல்மான் ருஷ்டி விவகாரத்திற்குப் பிறகுதான் இந்த நூலை எழுத வேண்டும் என்ற முயற்சி எனது மனத்தில் தோன்றியது. 1930-களில் பெரும்போருக்குப் பிறகு நாஸிஸம்,கம்யூனிசம், சுதந்திரப் போராட்டங்கள், சனநாயக அமைப்புகள், காலனிய எதிர்ப்பு போன்ற பல மாற்றங்களில் தாங்கள் எவ்வாறு பங்கெடுத்திருப்போம் என்ற நிலைப்பாடு என் வயதினருக்கு வழக்கமாக எழுவதுண்டு. இதுபோன்ற பெரிய நிலைப்பாடுகளில் நாம் எந்தப் பக்கம் இருந்திருப்போம் என்ற கேள்வி எப்போதும் எழுவதுண்டு. சல்மான் ருஷ்டி விஷயமும், இஸ்லாம் பரவும் விஷயமும் எனக்கு அத்தகைய ஒரு நிலைப்பாடை நான் எடுக்க வேண்டும் என்ற சூழலைத் தந்தன. அந்தச் சூழலில் விளைந்ததுதான் இந்த நூல். அந்த விஷய்ங்களில் என் நிலைப்பாட்டை சொல்வதே இந்த நூல்தான்.

1930-களின் நிலைப்பாடை எடுக்க முடியாதவர்கள் இன்று இரு விஷயங்களில் - ஒன்று சல்மான் ருஷ்டி பிரச்சனை, இன்னொன்று போர் மேகங்கள் குவிந்து கிடைக்கும் அல்ஜீரியா, சூடான், ஈரான், செளதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அல்லலுறும் இஸ்லாமியர், இஸ்லாமியப் பெண்கள், இஸ்லாமிய அறிஞர்கள், எழுத்தாளர்கள், சாதாரண மக்கள் - இந்த இரு விஷயங்களில் தத்தம் முடிவை எடுக்க வேண்டிய நிலையை அடைந்துள்ளனர். இந்த நூல் எனது அத்தகைய முயற்சியின் ஒரு போர்க்கால நடவடிக்கையே. இப்படியெல்லாம் ஒரு நூலை எழுத வேண்டுமா என்ற நினைப்பு எனக்கு வரும்போதெல்லாம் கடவுளின் பெயராலும் இஸ்லாத்தின் பெயராலும் அல்ஜீரியாவிலும், ஈரானிலும், துருக்கியிலும், சூடானிலும் நடக்கும் கொலைவெறிகள் என்னை இந்த நூலை விரைந்து முடிக்கத் தூண்டின.

*

இஸ்லாமுக்கு தோழர்களாக உருவெடுத்த மேற்கத்திய பத்திரிகையாளர்கள், அறிஞர்கள், கம்யூனிசத்திலிருந்து மனம் மாறியோர் என்று பலரும் கொஞ்சமும் பொருந்தாத, மேட்டிமைத்தனமான, சினம் தூண்ட வைக்கும் விதமாக இஸ்லாமுக்குப் பரிந்து பேச ஆரம்பித்தார்கள். ஆனால் மிக தைரியமான சில இஸ்லாமியர்கள் தொடர்ந்து சல்மானை ஆதரித்து வந்தனர். எகிப்தின் Rose al - Yousef என்ற பத்திரிகை 1994 ஜனவரி மாதம் Satanic Verses-லிருந்து சில பகுதிகளை தங்கள் பக்கங்களில் எழுதினார்கள்.

இந்த நூலுமே இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளைத் தீவிரமாக ஆராய்ந்து, சில நியாயமான எண்ணங்களை எழுப்பி, முழு நம்பிக்கையோடு இருக்கும் இஸ்லாமியக் கொள்கைகள் மீது ஒரு துளி ஐயத்தை எழுப்புவதுமாகும். இந்த நோக்கிற்காக குற்றம் சாட்டப்பட உள்ள நிலையில், நான் ஒரு மேற்கோளை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்.

John Stuart Mill: 'நாம் மூடி மறைக்க விரும்பும் ஒரு செய்தி தவறானது என்று முன்கூட்டியே நாம் முடிவு செய்ய முடியாது; அப்படியே அது உண்மையாக இருந்தாலும் அப்படி மூடி மறைப்பது தவறானதே'.









---------
ACKNOWLEDGMENTS அதிலிருந்து சில பகுதிகள்

*
நான் ஒன்றும் பெரிய அறிஞனோ, ஆராய்ச்சியாளனோ இல்லை. நான் எழுதுவதெல்லாமே என் சொந்த சரக்கு என்றும் சொல்லப்போவதில்லை. நான் கையாண்டிருப்பது எல்லாமே மெத்த படித்த அறிஞர்களின் கருத்துக்களே. அவைகளை வாசித்து, எல்லோருக்கும் புரியும்படிக்கு எளிதாக்கி இங்கே அளித்துள்ளேன். ஒன்று முழுவதுமாக அவர்களது எழுத்துக்களைத் தந்திருப்பேன்; இல்லை, அதை அவர்களது பெயர்களோடு என்னால் முடிந்தவாறு எளிதாக்கித் தந்திருப்பேன். நிச்சயமாக இந்த நூல் என் படைப்பல்ல.’முழுவதும் காப்பியடிக்கப்பட்ட ஒரு நூல்’ என்று யாரும் இந்நூலைப் பற்றிச் சொன்னால், அதை முழு மனதோடு ஒப்புக்கொள்வேன். அதில் எனக்கு எந்த வருத்தமுமில்லை.
*

Encyclopedia of Islam-ன் முதலிரு பதிப்புகளைப் பயன்படுத்தியுள்ளேன். அதிலும் முதல் பதிப்பே சிறிது ‘திறந்த புத்தகமாக’ இருப்பதாகக் கருதியதால் அதையே மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளேன். ஏனெனில், இரண்டாவது பதிப்பில் அரசியல், சமயக் குறுக்கீடுகளால் கருத்துக்களும், சொற்களும் தங்கள் முனைப்பை அதிகம் இழந்துவிட்டிருக்கின்றன. The Dictionary of Islam – இதிலும் முதலாம் பதிப்பே மிக்க பயனுள்ளதாயிருந்தது – அதே காரணங்களுக்காக!


முன்னுரையிலிருந்து
சில பகுதி
கள்

*
இந்த நூலை வாசிக்கும்போது சிலவற்றை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு கோட்பாட்டிற்கும், அதன் செயல் முறைக்கும் உள்ள வேற்றுமைகள்; இஸ்லாமியர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும்; அவர்கள் எதை நம்பி எப்படியிருக்க வேண்டுமோ அப்படியில்லாமல் அவர்கள் நம்பிக்கைகளும் அதைக் கடைப்பிடிப்பதில் உள்ள வேற்றுமைகளும் – இந்த வேறுபாடுகள் எல்லாவற்றையும் நினைவில் கொள்ள வேண்டும்.

*
நாம் இஸ்லாம் 1, இஸ்லாம் 2, இஸ்லாம் 3 என்ற மூன்று வித இஸ்லாமைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாம் 1 -- நபியால் சொல்லிக்கொடுக்கப்பட்ட வேதம்.
இஸ்லாம் 2 -- ஹடித், ஷாரியத், இஸ்லாமியச் சட்ட திட்டங்கள் இவைகளின்படி மதாச்சாரியார்களால் புரிந்துகொள்ளப்பட்ட, வளர்த்தெடுக்கப்பட்ட, விளக்கப்பட்ட இஸ்லாம்.
இஸ்லாம் 3 -- இஸ்லாமிய நாகரீகம்; அதாவது இன்று முஸ்லீமகளால் உண்மையில் கடைப்பிடிக்கப்படும் இஸ்லாம்.

*
இந்த நூலில் இஸ்லாம் 1 & 2 மூலம் சொல்லப்படுவதற்குத் தொடர்பில்லாமலேயே இஸ்லாம் 3 அல்லது இஸ்லாமிய நாகரீகம் உயர வளர்ந்து நிலைபெற்றது என்பது தெளிவாகும்.இஸ்லாமிய தத்துவார்த்தங்கள், இஸ்லாமிய அறிவியல், இஸ்லாமிய இலக்கியப் படைப்புகள், இஸ்லாமிய கலை நுட்பங்கள் - இவை எல்லாமே இஸ்லாம் 1 & 2-களின் அடிப்படை இல்லாமலேயே வளர்ந்து செழித்தன. இஸ்லாமிய இலக்கியப் பாடல்களை எடுத்துக் கொள்ளுங்களேன். நபி தன் முதல் கால கட்டத்தில் இத்தகைய பாடல்களுக்கு எதிரானவராக இருந்தார். சுரா 26:224-ல் 'மனம்போனபடி இருப்பவர்கள் மட்டுமே இத்தகைய பாடல்களை நோக்கிச் செல்பவர்களாக இருப்பார்கள்' என்கிறார். மிஷ்கத் என்ற பழக்க வழக்கங்கள் என்ற பகுதியில் நபி, 'வயிறு முட்ட இப்படிப்பட்ட பாடல்களோடு இருப்பதைவிட சீழ்பிடித்த வயிற்றோடு இருப்பது சிறந்தது' என்கிறார். இத்தகையக் கருத்துக்களோடு உள்ள இஸ்லாம் 1 & 2 - இவைகளை பின்பற்றுவது மட்டுமே இருந்திருந்தால் அபு நுவாஸ் போன்று ஒயினைப் பாராட்டும் இலக்கியங்களையோ, மற்றும் அதிகமாக உள்ள ஒயினைப் புகழும் அராபிய இலக்கியங்களைக் காண முடிந்திருக்காது.
*

இஸ்லாமிய கலைகளைப் பொறுத்தவரை இஸ்லாமிய அருட்பொருள் சொல்லகராதியில் (மி்ஷ்கத், 7, ch, 1, pt.1) ஓவியக்காரர்களும், மனித, மிருகங்களை வரைபவர்கள் எல்லோரும் சட்டத்திற்குப் புறம்பானவர்களாக நபி சொன்னதாக உள்ளது.
*

Ettinghausen எழுதிய Introduction to Arab Painting என்ற நூலில் இஸ்லாமிய ஹாடித்களில் ஓவியக்காரர்கள் மிகுந்த அளவு கண்டிக்கப்படுகிறார்கள். அவர்கள் நம்மையெல்லாம் உருவாக்கிய கடவுளோடு படைப்பில் போட்டியிடுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்நூலாசிரியர் மேலும், 'வேத நூல்களின்படி அத்தகைய ஓவியங்களுக்கு இடமே தரவில்லை'. நல்ல வேளையாக இத்தகைய பழைய இஸ்லாமியரின் வழக்கத்தை மீறி, புதிதாக மாறிய இஸ்லாமியர்கள் இந்தத் தடையை மீறியதால்தான் நமக்கு மிக அழகான பெர்ஷியன், மொகல் சின்னச் சித்திரங்கள் பலவும் கிடைத்தன.
*

கலை நுணுக்கங்கள், தத்துவங்கள், அறிவியல் முன்னேற்றங்கள் எல்லாமே அரேபியாவில் இல்லாது போயின. எப்படியோ இலக்கியப் பாடல்கள் மட்டும் சிறிதளவாவது வந்தன.
*

Byzantine and Sassaninian art - இவைகள்தவிர வேறு எந்த அரேபிய கலைகளும் வளராது போயின.
*

பெண்கள், காஃபிர்கள், நம்பிக்கையற்றவர்கள், மதத்தைக் கேள்விக்குட்படுத்துபவர்கள், ஆண்-பெண் அடிமைகள் நடத்தப்படும் முறைகள் பேச்சளவிலும் செயலளவிலும் மிகவும் கீழான நிலையில் இருந்தன. இதற்குக் காரணம் குரானும், இஸ்லாமிய தீர்ப்பாளர்களால் சொல்லப்பட்ட விளக்கங்களுமே காரணம்.
*

இஸ்லாமிய சட்ட திட்டங்கள் முழுமையாக மனிதனைக் கட்டுப் படுத்தும் சட்டங்கள்; மனிதன் பிறப்பிலிருந்து சாகும் வரை உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் கட்டுப் படுத்தும் சட்டங்கள்.
*

பல நேரங்களில் இஸ்லாமிய ஷாரியாவைவிடவும் இஸ்லாமியப் பழக்கங்கள் கடுமையானவை. விருத்த சேதனம் (ஆண்குறியின் முன்தோலை எடுத்தல்) குரானில் சொல்லப்படாத ஒன்று. ஆனால் தொடர்ந்து, கட்டாயமாக இது நடைபெற்று வருகிறது. இதைப் பெண்களுக்குமாக சில இஸ்லாமிய நாடுகளில் நடந்தேறுகிறது.
***



*

24 comments:

பீர் | Peer said...

>>அவர்கள் எதை நம்பி எப்படியிருக்க வேண்டுமோ அப்படியில்லாமல்... இஸ்லாம் 1,2,3<<

முக்கியமான விஷயமாகப்படுகிறது.

மு மாலிக் said...

//மிஷ்கத் என்ற பழக்க வழக்கங்கள் என்ற பகுதியில் //

உங்களுடைய இந்த மொழிபெயெர்ப்பைப் பார்த்து சிரிப்புதான் வந்தது. உங்களிடம் இருக்கும் ஆங்கில வரிக்கு என்ன அர்த்தம் என ஆங்கிலம் அறிந்த முஸ்லிம்களிடமோ அல்லது, இஸ்லாமிய அறிவு உடைய முஸ்லிமல்லாதவரிடமோ தெரிந்துகொள்ளுங்கள். நீங்க அந்த புத்தகத்தை எப்படி படித்து விளங்கினீர்களோ :-)

//பல நேரங்களில் இஸ்லாமிய ஷாரியாவைவிடவும் இஸ்லாமியப் பழக்கங்கள் கடுமையானவை. விருத்த சேதனம் (ஆண்குறியின் முன்தோலை எடுத்தல்) குரானில் சொல்லப்படாத ஒன்று.//

அப்படியா ? அவ்வளவு கடுமையானதா ? :-) அது ஏனோ எனக்கு தெரியாமல் போயிடுச்சே :-) எனக்கு விருத்தசேதனம் பண்ணும்போதோ அல்லது பண்ணிய பிறகோ யாருமே சொல்லவில்லையே எனக்கு :-) எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருதே :-)



//இதைப் பெண்களுக்குமாக சில இஸ்லாமிய நாடுகளில் நடந்தேறுகிறது.//

அது "சில இஸ்லாமிய நாடுகளில்" என அடையாளப்படுத்துவதைவிட, "சில ஆஃப்ரிக்க நாடுகளில்" என அடையாளப்படுத்துவது சிறந்தது. ஆனால் இப்படி அடையாளப் படுத்தினால் அந்த வாக்கியத்திற்கு இவர் எழுதிய புத்தகத்தில் இடமில்லாமல் போய், இவரது நோக்கத்திற்கு மாறானதாகிவிடும்.

மு மாலிக் said...

பெண்களுக்கு சேதனம் செய்வது ஆஃரிக்காவில், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் போன்ற மதங்கள் காலூண்டுவதற்கு முன்னேயே, ஃபாரோக்கள் காலத்தில் இருந்துள்ளது என கி.மு 163 ல் உள்ள கிரேக்க ஏடுகள் கூறுகின்றன. பதனிடப்பட்ட பிரேதங்களான "மம்மி"களை ஆய்ந்ததிலும் இதுவே தெரிகிறது.

(ஆதாரம்: Skaine, R (2005). Female genital mutilation: Legal, cultural and medical issues. Jefferson, NC, USA: McFarland. ISBN 0-7864-2167-3)

நன்றி: விக்கிப்பீடியா

மு மாலிக் said...

தருமி,

இப்புத்தகம் எழுதப்பட்டதன் பின்னனிபற்றி நீங்கள் சுட்டியக் காட்டிய முன்னுரையைவிட மேலும் ஒரு பரிமாணத்தைக் கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

இந்த புத்தகத்தில் உள்ள முதல் அத்தியாத்தில், இதன் ஆசிரியர் கூறுகிறார்: "டேனியல் பைப்ஸின் (Daniel Pipes) "Rushdie Affairs" எனும் மிகச்சிறந்த புத்தகத்திலிருந்து உதாரணங்களைப் பயன்படுத்தியுள்ளேன்".

டேனியல் பைப்ஸ் எனும் "மிகச் சிறந்த" எழுத்தாளரின் வலைப்பதிவு இதுதான்: http://www.danielpipes.org/

அவர் தீவிர சியோனிச சிந்தனையாளரா அல்லது சிறந்த எழுத்தாளரா என்பது அவரவர்களின் மன நிலைப்பாட்டைப் பொறுத்தது.

இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கும் Prometheus Books எனும் பதிப்பகம் பற்றிக் கூட‌, அது இஸ்லாமியர்கள் பற்றியும் யூதர்கள் பற்றியும் வெளியிட்டிருக்கும் புத்தகங்களின் பட்டியலிலிருந்து, அது எத்தகையது என அறியமுடிகிறது.

இஸ்லாம் பற்றி அப்பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகங்கள் இவை:

http://www.prometheusbooks.com/index.php?main_page=index&cPath=90_32

இந்த லிஸ்டில், மூர்த்தி முத்துஸ்வாமி எனும் எழுத்தாளரின் எனும் புத்தகமும் உள்ளது. அவரது இணையதளத்திற்கு சென்றேன்:

http://www.moorthymuthuswamy.com/

அந்த இணையதளத்தில் ஃபித்னா எனும் திரைப்படத்தினைத் தயாரித்து புகழ்பெற்ற "Geert Wilders" எனும் டச்சுக்காரரின் புகழாரத்தினைப் பார்த்ததும் இந்தக் கூட்டம் பற்றி ஒரு தெளிவு கிடைக்கிறது :-)

மேலும் அந்த லிஸ்டில் "இஸ்லாத்தின் யூதவெறுப்பு" எனும் நூலின் ஆசிரியரான "Andrew G Bostom" ஃபாக்ஸ் நியூஸில் (Fox News) இஸ்லாம் பற்றி விவாதிப்பவராம் :) (http://en.wikipedia.org/wiki/Andrew_G._Bostom) அவரது நூலுக்கு முன்னுரை எழுதியவர் யார் தெரியுமா ? நீங்கள் சுட்டிக் காட்டும் இந்த "நான் ஏன் முஸ்லிம் அல்ல" எனும் புத்தகத்தினை எழுதிய இப்னு வர்ராக் அவர்களே !

மேலும் இப்னு வர்ராக் அவர்கள் எழுதிய புத்தகத்திற்கு முன்னுரையை எழுதிய Hoffman என்பவரின் ஒரு புத்தகத்தினையும் இந்த பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


மேலும் இந்த லிஸ்டில், "இஸ்லாமியப் பெண் சீர்திருத்தவாதிகள்" என கவர்ச்சிகரமாக பெயரிட்டு IDA LICHTER என்பவர் எழுதிய நூலுக்கு புகழாரம் சூட்டியிருப்பவர் யார் தெரியுமா ? டேனியல் பைப்ஸ்தான் :)

http://www.prometheusbooks.com/index.php?main_page=product_info&cPath=90_32&products_id=1911


ஒரு நெறுங்கிய குடும்பம் போன்ற கூட்டம் இது. சிந்தனையால் ஒன்றுபட்ட கூட்டம்.

யூதர்கள் பற்றி அப்பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தங்கள் இவை.
அனைத்தும் ஹோலோகாஸ்ட், யூத வெறுப்பு (antisemitism) மற்றும் இஸ்ரேல் பற்றியவை:

http://www.prometheusbooks.com/index.php?main_page=index&cPath=90_53&sort=20a&page=1

தருமி நீங்கள் கிறிஸ்தவ மதத்திலிருந்து யூத மதத்திற்கு மாறிவிட்டீர்களா ? ஆனால் அவர்கள் உங்களை யூதரென ஏற்றுக்கொள்ள மாட்டார்களே!

பாலஸ்தீனத்தில் ஆக்கிரமித்து ஏற்படுத்தப்படும் யூதக் குடியிருப்புகளில் இருக்க சம்பந்தம் தெரிவிக்காதவரையில், உங்களை யூதர் என அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், ஜாக்கிரதை.

தருமி said...

மு.மாலிக்,

உங்கள் ஆராய்ச்சி என்னிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் ...
1. //அப்படியா ? அவ்வளவு கடுமையானதா ? :-) அது ஏனோ எனக்கு தெரியாமல் போயிடுச்சே :-) எனக்கு விருத்தசேதனம் பண்ணும்போதோ..//

உங்களுக்கு எப்டிங்க அப்டியெல்லாம் தெரியப்போகுது? ஏதோ உங்கள் விசேஷ நாளில் கயிற்றால் அடித்துக் கொண்டும், கத்தியால் உடலைக் கிழித்தும் கொள்வார்களே .. அதுவே கடுமையானதில்லை என்றுதானே செய்யும் மக்கள் கூறுவதுண்டு; இல்லையா?

தருமி said...

2. //அது "சில இஸ்லாமிய நாடுகளில்" என அடையாளப்படுத்துவதைவிட, "சில ஆஃப்ரிக்க நாடுகளில்" என அடையாளப்படுத்துவது சிறந்தது. //

இதுவும் சரிதான். ஆனாலும் ..
(http://www.witchhazel.it/female_genital_mutilation.htm)-ல் சொல்லியிருப்பது: FGM is reportedly practised in more than 28 African countries ... It has been reported among Muslim populations in Indonesia, Sri Lanka and Malaysia, although very little is known about the practice in these countries. In India, a small Muslim sect, the Daudi Bohra, practise clitoridectomy.
In the Middle East, FGM is practised in Egypt, Oman, Yemen and the United Arab Emirates.

The Qur'an does not contain any call for FGM, but a few hadith (sayings attributed to the Prophet Muhammad) refer to it. In one case, in answer to a question put to him by 'Um 'Attiyah (a practitioner of FGM), the Prophet is quoted as saying "reduce but do not destroy".

அப்டியா???

தருமி said...

3. //Prometheus Books எனும் பதிப்பகம் பற்றிக் கூட‌, அது இஸ்லாமியர்கள் பற்றியும் யூதர்கள் பற்றியும் வெளியிட்டிருக்கும் புத்தகங்களின் பட்டியலிலிருந்து, அது எத்தகையது என அறியமுடிகிறது.//

ஆமாங்க .. அப்புறம் என்ன இந்த மாதிரி புத்தகத்தை நீங்களோ, ஜாகிர் நாய்க்கோ வெளியிடவா போகிறீர்கள்.
அந்தக் கம்பெனி இதே மாதிரி புத்தகங்களை வெளியிடுகிறார்கள் - சில இஸ்லாமிய பதிப்பகங்கள் இஸ்லாமிய புத்தகங்களை மட்டும் வெளியிடுவது போல். அம்புடுதான் ...

தருமி said...

4. //"இஸ்லாத்தின் யூதவெறுப்பு" எனும் நூலின் ஆசிரியரான "Andrew G Bostom" ... அவரது நூலுக்கு முன்னுரை எழுதியவர் யார் தெரியுமா ? நீங்கள் சுட்டிக் காட்டும் இந்த "நான் ஏன் முஸ்லிம் அல்ல" எனும் புத்தகத்தினை எழுதிய இப்னு வர்ராக் அவர்களே !

SO WHAT????

Anonymous said...

""""""""உங்களுக்கு எப்டிங்க அப்டியெல்லாம் தெரியப்போகுது? ஏதோ உங்கள் விசேஷ நாளில் கயிற்றால் அடித்துக் கொண்டும், கத்தியால் உடலைக் கிழித்தும் கொள்வார்களே """"""""""""
தருமி ஐயா அவர்களே உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.
உடலை வறுத்திக்கொண்டு தொழுகையை கடைபிடிக்க கூடாது என்பது இஸ்லாத்தின் நிலைபாடு.மார்க்கம் என்ன சொல்கிறது,என்ன வலியுறுத்துகிறது என்பதை அறியாத சில முஸ்லிம்கள் செய்வதையெல்லாம் நீங்கள் இஸ்லாம் என்று நினைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது.தாங்கள் தூய்மையான மார்க்கமாகிய இஸ்லாமைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென கேட்டுகொள்கிறேன்.
தங்களின் பார்வைக்கு என்னுடைய மனதில் பட்டதை இங்கு பதிவு செய்கிறேன். நீங்களே சற்று சிந்தித்து பாருங்கள் நீங்கள் மற்றவர்களின் மார்க்கங்களைப் பற்றியும் கட்டுரை எழுதியிருக்கிறீர்கள்.அதில் கேள்வியும் கேட்டு இருக்கிறீர்கள்.ஆனால் இஸ்லாமியர்கள் சலைக்காமல் தங்களால் முடிந்த அளவுக்கு பதில் அளித்தது போல் வேறு யாராவது பதில் அளித்திருக்கிறார்களா?(உங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது ஆதலால் உங்கள் மனசாட்சியை தொட்டு பதில் கூறுங்கள்).

தருமி said...

இறையடியான்,

மனசாட்சி தொட்டு சில பதில்கள்:

//சில முஸ்லிம்கள் செய்வதையெல்லாம் நீங்கள் இஸ்லாம் என்று நினைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது.//

இது எனக்குப் புரியாத ஒன்று! எதை நாங்கள் உண்மையான இஸ்லாம் என்று கொள்வது? நான் சொன்னது போன்ற நிகழ்வுகள், அதைத் தவிரவும் ஒசாமா, அல் கொய்தா, தாலிபான் போன்ற விஷயங்கள் வந்ததும் இதே போல் சொல்கிறீர்கள், அதுவும் நாங்கள் குற்றச்சாட்டு வைக்கும்போது மட்டும். மற்ற நேரங்களில் நீங்கள் அவர்களையோ அவர்கள் செயல்களையோ தனிமைப் படுத்துவதில்லை.

//இஸ்லாமியர்கள் சலைக்காமல் தங்களால் முடிந்த அளவுக்கு பதில் அளித்தது போல் வேறு யாராவது பதில் அளித்திருக்கிறார்களா?(..//

இந்த உங்கள் கேள்விக்கு என் பதில்: நிச்சயமாக இல்லை. மற்ற சமயத்தினர் சில பதில்கள் தருகிறார்கள். ஆனால் ‘எங்கள் மதத்தில் எல்லா கேள்விகளுக்கும் பதிலிருக்கிறது’ என்ற நோக்கமில்லை அவர்களிடம்; உங்களிடம் உண்டு. ஆனால் நீங்கள் இப்படி இருப்பதற்கு நான் ஏற்கெனவே அளித்த பதில்: // நீங்கள் உங்கள் முயலுக்கு மூன்று கால்கள் என்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறீர்கள். நாலு காலுன்னு எல்லா படமும், விளக்கமும், மேற்கோள்களும் கொடுத்தாச்சி. எடுப்பாரில்லை.

இதுதான் "மதம்"; "மதத் தீவிரவாதம்" என்பதுதான் என் கருத்து.//

அதுவுமின்றி …….
1. PROSTATE GLAND, SEMINAL VASICLE-லிருந்து முக்கால் சாண் தாண்டிதான் விலா எலும்புகள் இருக்கும் என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளலாம் என்று படம் வரைந்து அறிவியல் பேசினாலும் நாங்கள் எங்கள் குரானில் சொன்னதை மட்டுமே நம்புவோம் என்று சொல்வது …

2. தேனீக்கள் பழம் தின்னும் என்ற ஒரு மேற்கோளை உங்கள் குரானிலிருந்து எடுத்துக் கொடுத்தும் அதுவும் தவறென்று சொல்லிவிட்டு, பின், Then to eat of all the produce (of the earth), என்று மிகச்சிறந்த தமிழ்ப்படுத்தப்பட்ட குரானிலிருந்து என்று ஒன்றைத் தருகிறீர்கள்; அதன் பொருளே புரியவில்லை. தேனீக்கள் உலகத்தில் உள்ள அனைத்துயும் தின்கின்றன என்ற பொருள்தான் அந்த மேற்கோளில் இருக்கிறது என்பதுவும் ….

3. female genital mutilation ஆப்ரிக்க நாடுகளில் உள்ளது என்று என்னைத் திருத்திவிட்டார் மாலிக். ஆனால் நான் உங்கள் நபியின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, இதுவும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான் என்பதைச் சொல்லும் போது மெளனமாகி விடுவதும் …..

இவைகள் எல்லாமே எனது சில கேள்விகளுக்கு வந்த பதில்கள்தான். ஆனால் அந்தப் பதில்கள் எப்படிப்பட்டவை என்பதற்குத்தான் மேலே கூறிய சில சான்றுகள். கேள்விக்குப் பதில் என்று ஏதாவது சொல்வதில் பெருமையில்லை, இறையடியான். நடக்கும் விவாதங்களில் உண்மைக்கும் கொஞ்சம் மரியாதை கொடுக்க வேண்டுமே … அது சுத்தமாக நடக்கவில்லை என்றே தோன்றுகிறது.

Anonymous said...

”””””””””””””””” நான் சொன்னது போன்ற நிகழ்வுகள், அதைத் தவிரவும் ஒசாமா, அல் கொய்தா, தாலிபான் போன்ற விஷயங்கள் வந்ததும் இதே போல் சொல்கிறீர்கள், அதுவும் நாங்கள் குற்றச்சாட்டு வைக்கும்போது மட்டும். மற்ற நேரங்களில் நீங்கள் அவர்களையோ அவர்கள் செயல்களையோ தனிமைப் படுத்துவதில்லை.""""""""""
அப்படியென்றால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்துகொண்டிருக்கிறோம் என்று சொல்ல வருகிறீர்களா?

””””””””””female genital mutilation ஆப்ரிக்க நாடுகளில் உள்ளது என்று என்னைத் திருத்திவிட்டார் மாலிக். ஆனால் நான் உங்கள் நபியின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, இதுவும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான் என்பதைச் சொல்லும் போது மெளனமாகி விடுவதும் ”””””””””
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதை அனுமதியளித்திருக்கிறார்களா?அதை எனக்கு தெளிவுபடுத்துங்களேன்.

தருமி said...

இறையடியான்,
//அப்படியென்றால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்துகொண்டிருக்கிறோம் என்று சொல்ல வருகிறீர்களா?//

ஆம்

தருமி said...

//நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதை அனுமதியளித்திருக்கிறார்களா?அதை எனக்கு தெளிவுபடுத்துங்களேன்.//

பதிவிலேயே கொடுத்துள்ளேன். இருந்தும் கேட்கிறீர்கள். கொஞ்சம் இங்கே:
http://www.mwlusa.org/topics/violence&harrassment/fgm.html
Um Atiyyat al-Ansariyyah said: A woman used to perform circumcision in Medina. The Prophet (pbuh) said to her: Do not cut too severely as that is better for a woman and more desirable for a husband. (!!!!!)

This is known to be a "weak" hadith in that it does not meet the strict criteria to be considered unquestionable (classified as mursal, i.e. missing a link in the chain of transmitters in that none was among the original Companions of the Prophet.) In addtion, it is found in only one of the six undisputed, authentic hadith collections, that is in the Sunan of Abu Dawud (Chapter 1888). According to Sayyid Sabiq, renowned scholar and author of Fiqh-us-Sunnah, all hadiths concerning female circumcision are non-authentic.
எப்படி இஷ்டத்துக்கு இது வேணும் இது வேண்டாம் அப்டின்னு முடிவு பண்றீங்களோ .. தெரியலை!!


http://www.jannah.org/genderequity/equityappendix.html
While the Prophet (P) did not explicitly ban this practice, his words project a great deal of sensitivity to the instinctive needs of females and their matrimonal happiness and legitimate enjoyment.

தருமி said...

முதல் கேள்விக்கு ஏன் ஆம் என்று சொன்னேன் என்று கேட்பீர்கள். தாலிபான், புத்தர் சிலை, இரட்டைக் கோபுர உடைப்பு, அப்சல், கசாப், தாவூது --- இதெல்லாம் வேணாங்க. நம்ம ஊரு விஷயம் இதிலே பேசியிருக்கோம். அதைப் பார்த்துக்குங்க ..

தருமி said...

இரண்டாவது கேள்விக்குக் கொடுத்த பதிலில் வருவது இரண்டுமே இஸ்லாமியப் பதிவுகள்தான்.

மு மாலிக் said...

//எப்படி இஷ்டத்துக்கு இது வேணும் இது வேண்டாம் அப்டின்னு முடிவு பண்றீங்களோ .. தெரியலை!!
// --‍ தருமி

நீங்க சுட்டிக் காட்டிய பதிவுல தான் அது எப்படின்னு போட்டிருக்கே, அதைப் படிக்கலையா ?

தருமி said...

மறுபடியும் வாசித்துப் பார்த்தேன், மாலிக். வேண்டாம்னா //
This is known to be a "weak" hadith // இல்லைன்னா ஸ்டாராங் ஹாடித் அப்டின்னு சொல்லிருவீங்க போலும்.

முகமதுவுக்குத் தெரியாதவங்க சொன்னதினால வேண்டாம்னுட்டாங்களா? அப்டின்னா ஏன் //only one of the six undisputed, authentic hadith collections,// அதில வந்திச்சுன்னு கேள்வி கேட்கலாமா?

//Sayyid Sabiq, renowned scholar and author of Fiqh-us-Sunnah, all hadiths concerning female circumcision are non-authentic.// இது ஒரு டிப்ளமாசி மாதிரில்லா இருக்கு. மொத்தமா அந்தமாதிரி விஷயங்களை ஒதுக்கிடறது...

தருமி said...

//all hadiths concerning female circumcision are //

1. அப்புறம் ஏன் அதை வச்சிக்கிட்டு இருக்கீங்க?
2, என்ன மாதிரி ஆளுங்க கேட்டா அது விலக்கப்பட்டது .. not so strong அப்டின்னு சொல்லிட்டா, அது ஏன் அங்க இருக்கணும்?
3. இதில இருந்து உங்க ஹாடித்துகளும் மனித மாற்றங்களுக்கு உள்ளானதுன்னு தெரியுதே!
4.அப்போ நபி அப்படி சொல்லலைன்னு சொல்றீங்களோ?

மு மாலிக் said...

//அப்போ நபி அப்படி சொல்லலைன்னு சொல்றீங்களோ?//--தருமி.

அதிலத்தான் அதுக்கு பதில் போட்டிருக்கே. நபி சொல்லி நேரடியா கேட்டவங்களோட பேரு போடவில்லை என்று. அதுனால இந்த ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது என்று பேர். இது போன்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸுகளையும் சும்மா ரெக்கார்டுக்கு பதியப்பட்டிருக்கு. "இந்த மாதிரி ஒரு கூற்று நிலவுகிறது" என்பதைத்தான் அந்த புத்தக ஆசிரியர் சுமார் 300 வருடங்கள் கழித்து பதிவு செஞ்சி வச்சிருக்கார்.

"முர்சல்" என்ற வகையைச் சேர்ந்த ஹதீத் என்றால், 'நபி கூறகேட்டவர் யார் என்று தெரியாது' எனப் பொருள். அனைவராலும் விமர்சிக்கப்பட்ட "சாத்தானின் வரிகள்" என்பது பற்றிய ஹதீதும் இந்த வகையைச் சேர்ந்தது தான்.

தருமி, இதுக்கெல்லாம் கொஞ்சம் முயற்சி தேவை. எது சரி, எது தவறு என பார்ப்பதற்கு கொஞ்சம் முயற்சி தேவை. பேனா எடுத்தவரெல்லாம் எழுத்தாளர்; கம்பியூட்டர் உள்ளவரெல்லாம் பதிவு எழுத்தாளர்; ஆங்கிலம் தெரிந்தவரெல்லாம் எதையும் மொழிபெயர்த்து விமர்சிக்கலாம்னு கிளம்புனா இப்படித்தான். நீங்க சுட்டின பக்கத்துலேயே விளக்கப்பட்டிருந்தும் சிறிதும் முயற்சிக்காமல், கேள்விகளை அடுக்குகிறீர்கள்.

தருமி said...

//4.அப்போ நபி அப்படி சொல்லலைன்னு சொல்றீங்களோ?//

நாலாவது கேள்விக்கு பதில் சொல்லிட்டீங்க. மத்த மூணு கேள்வி?

//இந்த ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது என்று பேர். இது போன்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸுகளையும் சும்மா ரெக்கார்டுக்கு பதியப்பட்டிருக்கு.//

அப்ப இது மாதிரி நிறைய புனையப்பட்டது இருக்கு. அதாவது மனிதக் கரங்கள் பட்டது?? அதான் சொன்னேன்: வேண்டாம்னா அது -
This is known to be a "weak" hadith அப்டின்னுசொல்லுவீங்க; இல்லாட்டி ஸ்டாராங் ஹாடித் அப்டின்னு சொல்லிருவீங்க போலும்.

இந்த மாதிரி மாஜிக் எல்லாம் வச்சிக்கிட்டா பேனா எழுத்தாளர், பதிவு எழுத்தாளர், விமர்சிக்கிறவங்க பாடு ரொம்ப கஷ்டம்தான்.ஏன்னா இருக்கவே இருக்கு ஒரு ரூல்!!

தருமி said...

UFO,
உங்கள் சாப்பாட்டு பழக்க வழக்கங்களைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது. ஆனாலும், அது இங்கு தேவையில்லாததால் அதை வெளியிடவில்லை.

Alex77 said...

The problem with muslims is, they do not allow challeging the understanding of the preachings of Qurran. Children are brain washed to think Islam only is the religion of God and others are not. Islam supports violence if it is in its favour. Rules of engagement can be changed at will. Having said above, I think Islam is in its pitiable state now because of its followers. I strongly believe had Mohammed been an European, Islam would have definitely been a peaceful religion. I also beleive civilzed people don't need religions.

Unknown said...

நீங்க முதல்ல உங்க கலாச்சரத்த பத்தி ஆராங்க அப்புறம் அரேபியர்கள் , யூதர்கள் பத்தி ஆராயலாம்.

naushad said...

உங்களுடைய இந்த மொழிபெயெர்ப்பைப் பார்த்து சிரிப்புதான் வந்தது. உங்களிடம் இருக்கும் ஆங்கில வரிக்கு என்ன அர்த்தம் என ஆங்கிலம் அறிந்த முஸ்லிம்களிடமோ அல்லது, இஸ்லாமிய அறிவு உடைய முஸ்லிமல்லாதவரிடமோ தெரிந்துகொள்ளுங்கள். நீங்க அந்த புத்தகத்தை எப்படி படித்து விளங்கினீர்களோ :-)
பெண்களுக்கு சேதனம் செய்வது ஆஃரிக்காவில், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் போன்ற மதங்கள் காலூண்டுவதற்கு முன்னேயே, ஃபாரோக்கள் காலத்தில் இருந்துள்ளது என கி.மு 163 ல் உள்ள கிரேக்க ஏடுகள் கூறுகின்றன. பதனிடப்பட்ட பிரேதங்களான "மம்மி"களை ஆய்ந்ததிலும் இதுவே தெரிகிறது.

(ஆதாரம்: Skaine, R (2005). Female genital mutilation: Legal, cultural and medical issues. Jefferson, NC, USA: McFarland. ISBN 0-7864-2167-3)

உங்களுக்கு எப்டிங்க அப்டியெல்லாம் தெரியப்போகுது? ஏதோ உங்கள் விசேஷ நாளில் கயிற்றால் அடித்துக் கொண்டும், கத்தியால் உடலைக் கிழித்தும் கொள்வார்களே .. அதுவே கடுமையானதில்லை என்றுதானே செய்யும் மக்கள் கூறுவதுண்டு; இல்லையா?

Post a Comment