Friday, July 09, 2010

412. FIFA 2010 - அரையிறுதி - ஆக்டோபஸ் 'Mr. Paul' சொல்லியாச்சில்ல .... !




*
CHENNAI ON LINE.COM - லும்,

தமிழ் ஸ்போர்ட்ஸ் ந்யூஸிலும் 

பதிந்த பதிவுதான் இது:

*


அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியலை; 1986-ல் முதல் தடவையாக தொலைக்காட்சியில் உலகக் கோப்பை பார்க்க ஆரம்பித்த காலத்திலிருந்தே, கால்பந்துன்னா ப்ரேசில் அப்டின்னு ஒரு ‘இது’வை வளர்த்தாச்சி.
அந்த அணி தோற்கும்போது ரொம்ப மனசு கஷ்டமாயிரும். அப்படி ப்ரேசில் அவுட் ஆனப்போ, மரடானோ (தனி)ஆட்டம் எல்லாம் பார்த்து, ப்ரேசில்லுக்கு அடுத்தபடியாக அர்ஜென்டினாவுக்கு விசிறியாகிவிடுவது என்பது தான் வழக்கம். இந்த தடவை ரெண்டும் போச்சா .. அப்போ அடுத்தது என்ன?

 ஏற்கெனவே இங்கிலாந்திற்கு 4; அர்ஜென்டினாவிற்கு 4  என்று சகட்டு மேனிக்கு கோல்களை அள்ளிக் கொடுத்த அணி; நல்ல ஒரு இளைஞர் அணி அப்டின்னு பெயர் வேறு;   இப்படி புகழ் மேல் புகழ் கிடைத்த ஜெர்மன் அணியாச்சேன்னு நானும் அந்த அணியின் விசிறியாக அரையிறுதி விளையாட்டு பார்க்க உட்கார்ந்தேன்.

முதல் 20 நிமிடம் பார்த்ததுமே கட்சி மாறி விட்டேன். பந்து முழுவதுமாக ஸ்பெயினிடம் தான் இருந்தது. அதுவும் பந்து ஜெர்மனியின் கோலைச் சுற்றியே வளைய வந்தது. ஏதோ பந்தை எங்கள் காலால் தொட மாட்டோம் அப்டின்னு ஜெர்மனி மாரியாத்தா கோயிலில் வைத்து சத்தியம் பண்ணிட்டு வந்தது மாதிரி பந்தையே தொட மாட்டேன்னு ஜெர்மானியர்கள் நின்னது மாதிரி இருந்தது. அட .. அவங்க தான் அப்டின்னா, ஸ்பெயின் வீரர்களும், செஸ் போர்டில் குதிரை – knight -  ஒரு கட்டத்தில் இருந்து சுத்தி சுத்தி வர முடியுமே அது மாதிரி அவங்களுக்குள்ளேயே பந்தை பாஸ் பண்ணிக் கொண்டிருந்தார்களே ஒழிய அவர்களும் கோல் போட முனைந்தது மாதிரியும் தெரியலை. 30 – 35 நிமிடம் ஆனதும் தூங்கப் போகலாமான்னு நினைக்கிற அளவுக்கு விளையாட்டு போரடித்தது. இதென்ன உலகக்கோப்பை அரையிறுதியான்னு ஆகிப் போச்சு.

முன்பே சொன்னது மாதிரி ஒரே பக்கம் பந்து இருக்கும்போது திடீர்னு பந்து எதிர்ப்பக்கம் போய் கோலாக மாறுவதும் உண்டு. அதே மாதிரி ஏறத்தாழ 15வது நிமிடத்தில் ஜெர்மானிய வீரர் ஒருவரின் லாங் ஷாட் ஸ்பெயினின் கோலுக்குப் போச்சுது; ஆனாலும் கோலாகவில்லை. மறுபடி பழைய சொதப்பல் விளையாட்டு தொடர்ந்தது.  அதே மாதிரி முதல் பாதி விளையாட்டு முடியும் நிலைக்கு கொஞ்சம் முன்னால் ஒரு ஜெர்மானியர் தனியாக பந்தை எடுத்துக் கொண்டு எதிரி முகாமுக்குள் போய் … அங்கே போய்தானா வழுக்கி விழணும்!! இதே பாதியில் ஸ்பெயினின் ஆட்டக்காரர்களின் இரு லாங் ஷாட்டுகளும் கோலாக மாறவில்லை.

இரண்டாம் பகுதி ஆட்டம் கொஞ்சம் முதலில் சுறுசுறுப்பானது. இதிலும் முதல் பத்து நிமிடங்களில் பந்து ஸ்பெயினிடமே இருந்தது. 73-ம் நிமிடத்தில் அவர்களுக்குக் கிடைத்த கார்னர் ஷாட்டை புயோல் (Puyol) துள்ளிப் பாய்ந்து தலையால் மோதி அழகான ஒரு கோலைப் போட்டார். மனுஷன் சரியான குட்டை. இருந்தும் ஓடி வந்து உயரமான வீரர்களின் உயரத்தையும் தாண்டி கோல் போட்டார்.

அடுத்து சில நிமிடங்களுக்குப் பந்து ஜெர்மானியரிடம் இருந்தது. பந்தும் ஸ்பெயினின் கோல் வட்டத்தைச் சுற்றியே இருந்தது. அதிக பலனில்லை. அப்போது ஜெர்மானிய பெட்ரோ (Pedro)  பந்தை தங்கள் பகுதியிலிருந்து ஸ்பெயினின் கோலுக்கு வேகமாக எடுத்துச் சென்றார். இரு தடுப்பாட்டக்காரர்கள் மட்டுமே அவரைத் தடுக்கு முயற்சித்தனர். இன்னொரு ஜெர்மானிய வீரர் பின்னாலேயே வந்து சேர்ந்தார். பெட்ரோ இரு தடுப்பாட்டக்காரர்கள் மத்தியில். அடுத்த ஜெர்மானிய வீரர் Torres தனித்து எதிர்பார்ப்போடு நின்று கொண்டிருந்தார். பெட்ரோ அவருக்குப் பந்தைக் கொடுத்திருந்தால் ஒருவேளை அவர் எளிதாக கோல் போட்டிருக்க முடியும். இவ்வளவு தூரம் கொண்டு வந்திட்டு எப்படி அடுத்த ஆளிடம் கொடுக்கணுமான்னு நினச்சது மாதிரி பெட்ரோ பந்தைக் கொடுக்கவில்லை. தடுப்பாட்டாளர்கள் பந்தைப் பெட்ரோவிடமிருந்து பறித்து கோலின்றி ஆக்கினர். இதனால்தான் பெட்ரோ அடுத்த சில நிமிடங்களில் வெளியே பெஞ்சுக்கு அழைக்கப்பட்டார்.

கடைசி பத்து நிமிடத்தில் ஜெர்மனுக்கு ஒரு கார்னர் கிடைத்தது. ஸ்பெயின்காரர்கள் தலையால் தடுக்க அடுத்தடுத்து கார்னர்கள் ஜெர்மனுக்குக் கிடைத்தன. அவ்வளவே … அதில் ஏதும் கோல் விழவில்லை.



நிஜமா ஆக்டோபஸ் Mr. Paul ‘சொன்னது’ மாதிரியே ஜெர்மனி ஸ்பெயினிடம் ஒரு கோல் வாங்கி தோற்றது.


11 comments:

தருமி said...

......test

ஜில்தண்ணி said...

அருமை தருமி ஐயா வணக்கம்

நானும் ஒரு பதிவு ஆரம்பித்து எழுதிக்கொண்டிருக்கிறேன்,தாங்கள் விஜயம் செய்தால் மகிழ்வேன்

www.jillthanni.blogspot.com

நன்றி !

சீனு said...

//அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியலை; 1986-ல் முதல் தடவையாக தொலைக்காட்சியில் உலகக் கோப்பை பார்க்க ஆரம்பித்த காலத்திலிருந்தே, கால்பந்துன்னா ப்ரேசில் அப்டின்னு ஒரு ‘இது’வை வளர்த்தாச்சி.
அந்த அணி தோற்கும்போது ரொம்ப மனசு கஷ்டமாயிரும்.//

ஆமா சாரி. போன உலகக்கோப்பை போட்டியின் போது ப்ரேசில் ஆடுவதை பார்க்கவேண்டுமென்று ஒரு புது டி.வி. வாங்கினேன். போச்சு. இந்த தடவையும் அதே டி.வி.யில தான் பார்த்தேன். என்ன ராசியோ.

ப்ரேசில் தோத்ததுமே அப்புறம் பாக்குறதையே விட்டுட்டேன். மனசு கேக்கலை...

சரி! செமி ஆச்சேனு பார்த்தா, 93-வது நிமிஷம் வரை டிபன்ஸே ஆடுறாங்க ஜெர்மனி. ஒன்னும் வெளங்கல. ஆட்டம் படு சுமார். செமி மாதிரியே தெரியல.

நாகை சிவா said...

பில்லி சூன்யம் வச்ச மாதிரியே ஆடினாங்க ஜெர்மன்.. வட போச்சு :(

இன்னிக்கு மேட்ச் பாப்பீங்களா?

//முதல் தடவையாக தொலைக்காட்சியில் உலகக் கோப்பை பார்க்க ஆரம்பித்த காலத்திலிருந்தே, கால்பந்துன்னா ப்ரேசில் அப்டின்னு ஒரு ‘இது’வை வளர்த்தாச்சி.
அந்த அணி தோற்கும்போது ரொம்ப மனசு கஷ்டமாயிரும். அப்படி ப்ரேசில் அவுட் ஆனப்போ, மரடானோ (தனி)ஆட்டம் எல்லாம் பார்த்து, ப்ரேசில்லுக்கு அடுத்தபடியாக அர்ஜென்டினாவுக்கு விசிறியாகிவிடுவது என்பது தான் வழக்கம். இந்த தடவை ரெண்டும் போச்சா .. அப்போ அடுத்தது என்ன?//

உண்மை :( அடுத்து ஜெர்மன் அதுவும் போச்சு... இப்போ நெதர்லாந்து சொல்ல தான் ஆசையா இருக்க... ஆனா நம் டீம் எல்லாம் வரிசை கட்டி தோற்குது.. அதனால் ஸ்பெயின் ;)

Ravichandran Somu said...

ஜெர்மனி தோற்றதால் Paul'ஐ சூப் வைத்தே ஆக வேண்டும் என்று என் நண்பர்கள் சிலர் கொலவெறியோடு அலைகிறார்கள்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

தருமி said...

ஜில்
கட்வுளைப் பற்றிய உங்கள் பதிவை நான் ஏற்கெனவே வாசித்திருந்தேன். வழக்கம்போல் பின்னூட்டமிடவில்லை. இப்போ ... வட கிடச்சிருச்சே!

தருமி said...

சீனு,

long time; noooooooo see ....

தருமி said...

சிவா,
இல்ல ... ஸ்பெயின்தான் .......

தருமி said...

சிவா,
அந்த மொட்டை ராபன் இருக்காரில்ல ... அவர் பார்த்துக்குவார்னு நினைக்கிறேன்.

தருமி said...

ரவி,
இன்னும் ஜெர்மன் ஆட்கள் (players) விட்டு வச்சிருப்பாங்கன்னு நினக்கிறீங்களா? இன்னும் உயிரோடு இருந்திருந்தா இன்னேரம் பைனல்ஸ் ரிசல்ட் வந்திருக்கணுமே!!!

தருமி said...

test for பின்னூட்டம்

Post a Comment