Monday, February 21, 2011

479. ஒளரங்கஜேப் ( & Co.)நல்லவரா, கெட்டவரா... ?

*
அரசியலையும் மதங்களையும் இணைக்க வேண்டாமென ஸ்ரீராம ராஜ்யம் வேண்டாம் என்ற பதிவில் சில காரணங்களைக் கூறியிருந்தேன்
. அது ஒரு பக்கம். இப்போது பதிவர் திருச்சிக்காரன் ஒரு பதிவில் அவுரங்கசீப் ஆட்சியில் கட்டாய மத மாற்றம் நடந்ததா? என்று ஒரு கேள்வியை எழுப்ப, அதற்குப் பதிலாக சுவனப்பிரியன் என்ற பதிவர் திருச்சியும் தஞ்சையும் ஒளரங்கசீப்பும்!
என்றொரு பதிவிட்டார். இந்த இரு பதிவின் விளைவாக நானும் என் “பங்கிற்கு” 
புரிந்து கொள்ளுங்கள் என்று ஒரு பதிவிட்டேன்.

அப்பாடா .. ! ஒரு வழியாக இப்பதிவின் ‘வரலாற்று வழிகளை’ச் சொல்லியாயிற்று. 

என் பதிவில் நான் வைத்தது இரு கோட்பாடுகளே! 
***   அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை நாம் மதத்தின் காரணத்திற்காக பெருமைப்படுத்துவது தவறு. எந்த கிறித்துவனும் மதத்தைக் காரணமாகக் கொண்டு நம்மை அடக்கி ஆண்ட கிறித்துவ ஆங்கிலேயனைப் பெருமைப் படுத்தியது கிடையாது. அதுபோலவே நம்மை அடக்கி ஆண்ட இஸ்லாமிய படையெடுப்பாளர்களை இஸ்லாமியர்கள் பெருமைப்படுத்துவது  பிறந்த நாட்டுக்கு செய்யும் ஒரு பச்சைத் துரோகம்.

***   இஸ்லாமியத்தில் ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியான வரி என்பது பற்றி நான் சொன்னது:   ஆளுக்கொரு, சாதிக்கொரு, சமயத்துக்கொரு வரி என்பது அரசல்ல... அராஜகம்! மதம் அதற்குத் துணையாக இருந்தால் அந்த மதம் ஒரு அராஜக மதம். 

இந்த இரண்டில் இரண்டாவது காரணத்தை இஸ்லாமியர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதில் ஏதும் ஐயமில்லை. ஆனாலும் மதத்தின் இறுக்கத்தால் முதல் காரணத்தைக் கூட கண்டுகொள்ளாமல் செல்வது வருத்தத்திற்குரிய ஒன்று. 

இந்த இரண்டாவது குறைபாடு - மதங்களே மக்களைப் பிரிப்பது பற்றிய இஸ்லாமியக் கோட்பாடுகள் - பற்றி Why I am not a Muslim என்று நூலில் நான் பார்த்த சில விளக்கங்களை இங்கு தருகிறேன்.

திம்மி (dhimmis) - இஸ்லாமை நம்பாதவர்கள். இந்த திம்மிகளைப் பற்றிய  வரலாற்று நூல்கள் பல உண்டு.Norman Stillman என்பவரது நூல்The Jews of Arab Lands: A History and Source Book (1979).அந்நூலில் -- மத்திய கிழக்கில் அரேபியர்கள் நுழைந்தது மகிழ்ச்சிகரமான காரியமல்ல. இறப்புகளும் அழிவுகளும் பெருமளவில் நடந்தன. அந்நாட்டினரின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன; பலரும் கொல்லப்பட்டார்கள். ஜிஸ்யா, ஹராஜ் (jisya & kharaj ) என்ற இரு வரிகளும் வறுமையில் வாடிய விவசாயிகளுக்கு முதுகை முறிக்கும் பெருஞ்சுமைகளாக ஆகின. (226)

யேமனில் யூதர்கள் 1165,1678, ஏடனில் 1198, டப்ரிஸில் (Tabriz) 1291.1318, பாக்தாதில் 1333-1344, பெர்சியாவில் 1617, 1622, ஷா அப்பாஸ் காலத்தில் பெர்சியாவில் 1653 -1666 - இந்த ஆண்டுகளில் யூதர்கள் இஸ்லாமிற்கு கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டார்கள். 


யூதர்களைத் தவிர கிறித்துவர்கள், இந்துக்கள், ஜோராஸ்ட்ரியன்கள், போன்ற மற்ற மதங்களிலிருந்தும் இஸ்லாமிற்கான கட்டாய மாற்றம் நடந்தன. (227)


முஸ்லீமல்லாதவர்களுக்கான தனி வரிகள்:
KHIRAJ -- நிலங்கள் உரிமையாளர்களிடமிருந்து பறிக்கப்பட்டு அந்த நிலங்களுக்கான வரியே இது. போரின் தோல்வியடைந்தவர்களுக்கு நிலத்தில் மேல் எந்த உரிமையும் கிடையாது என்பது இஸ்லாமியக் கோட்பாடு.



JISYA  --  குரன்  9:29-ல் சொல்லப்பட்ட இந்த வரியை தண்டிக்கும் முறை மிகக் கேவலமானது. 9:29-ல் சொல்லப்பட்டதற்கான விளக்கத்தில் இந்த வரி வரிகொடுப்பவனை மிகவும் தரம் தாழ்த்தி, வெட்கப்படுத்தி, கழுத்தில் ‘துண்டைப் போட்டு’ வரி கொடு என்று கத்தி வசூலிக்க வேண்டும்.


மற்ற வரிகள்: வியாபார வரி, பயண வரி இதுபோன்ற பல வரிகள் திம்மிகளை நசுக்கப் பயன்பட்டன. 


எந்த திம்மியும் ஒரு இஸ்லாமியன் மேல் எந்த வித உரிமையையும் கோர முடியாது. குரான் 3:28 மூலம் திம்மிகளுக்கு எந்த வித சமூகப் பொறுப்பும் மறுக்கப்படும். 


ஆளுக்கொரு சட்டம்:  
* எந்த ஒரு வழக்கிலும் ஒரு இஸ்லாமியனுக்கு எதிரான  திம்மியின் எந்த சாட்சியமும் எடுபடாது. 
* இஸ்லாமியர்கள் திம்மிகளை விட மேம்பட்டவர்கள்.
* ஒரு இஸ்லாமியனுக்குச் சட்டப்படி ஏதேனும் தண்டம் விதித்தால், அந்தக் குற்றம் ஒரு திம்மிக்கு எதிரான குற்றம் என்றால் தண்டம் ஏதும் இல்லை.
* திம்மி ஒரு இஸ்லாமியனாக ஆனால் அவனது சாட்சி வழக்கில் கேட்கப்படும். (229)
* ஒரு இஸ்லாமியன் கிறித்துவ, யூதப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒரு திம்மி ஒரு இஸ்லாமியப் பெண்ணைக் கல்யாணம் செய்யக்கூடாது. (இப்பவும் இந்த வழக்கம் நமம ஊர்ல இன்னும் இருக்கே; ‘பம்பாய்’ படத்திற்கு எதிராக வந்த தகராறுகள் எல்லாம் இந்த வகைதானே!)
* 717-720-ல் ஆட்சி செய்த உமார் அபிட் அல் அஸிஸ் (Umar b.Abd al-Aziz) 8-வது நூற்றாண்டில் திம்மிகளுக்கு விதிக்கப்பட்ட விதிகள் நிறைய ... எல்லாமே ரொம்ப interesting!(ஏறத்தாழ தலித்துகளுக்கு வேத காலத்தில் விதிக்கப்பட்ட விதிகளைப் போலவே நிறைய உள்ளன.) 
அவைகளில் ஒரு சில ...
* இஸ்லாமியர் வந்தால் எழுந்து நின்று மரியாதை தரவேண்டும்.
* குதிரையில் சேணம் இல்லாமல் ஓட்ட வேண்டும். (செருப்பு போடாதே என்று இங்கே  இன்னும் சொல்கிறார்களே, அதுபோல்.)
* எந்த வித ஆயுதங்களையும் வைத்திருக்கக் கூடாது.  
* தலையின் முன் முடியை சிறைத்திருக்க வேண்டும்.
* இஸ்லாமியரின் வீடுகளை விட பெரிதாகக் கட்டக் கூடாது ....... இப்படி இன்னும் பல ......... (230)


அடிமைப்படுத்துதல் .. இது ஒரு பெரிய நீண்ட அட்டவணை .. சில ,,
* 881 - 7000 கிரேக்கர்கள்
* 903 - தெஸோலினிக்கா - 22,000 கிறித்துவர்கள்
*1064 -  ஜார்ஜியா, ஆர்மினியா ... திம்மிகள் அனைவரும் கொல்லப்பட்டார்கள்.
* 300 ஆண்டுகளாக கிறித்துவர்கள் மீது "devshirme" என்ற ஒரு சட்டத்தை சுல்தான் ஓர்க்ஹான் (1326-1359) ஏற்படுத்தினான்.  இதன் மூலம் கிறித்துவக் குழந்தைகளில் ஐந்தில் ஒரு பகுதியை கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றி அவர்களைப் போர்ப்படை வீரர்களாக மாற்றியுள்ளார்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் இஸ்லாமில் இல்லாதவர்கள் தங்கள் பிள்ளைகளோடு வந்து பொது இடத்தில் நிற்க வேண்டும். அதிலிருந்து பிள்ளைகளை இஸ்லாமியர்கள்  தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். இதில் கையூட்டும் நிறைய நடந்ததாக வரலாறு சொல்கிறது. 1656-ல் இந்த சட்டம் நிறுத்தப்பட்டது. 



வணங்குமிடங்கள்:  
* 853-ல் காலிப் முட்டாவக்கில் எல்லா கிறித்துவ கோவில்களையும் தரைமட்டமாக்கினான்.
* 1321-. எகிப்தில் உள்ள எல்லா கிறித்துவ கோவில்களுக்கும் அதே கதி.
* ஆர்மீனியன் கிறித்துவர்கள் 704-705 ஆண்டுகளிலும், பின் 852-855 ஆண்டுகளிலும்  இஸ்லாமியரின் கட்டுக்குள் கஷ்டப்பட்டார்கள்.


ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒவ்வொருவகையான பயங்கரங்கள் நிகழ்த்தப்பட்டன.
 8-ம் நூற்றாண்டு - சிந்துவில் ..
 9-ம் நூற்றாண்டு - ஸ்பெயின் கிறித்துவர்கள் ...
10-ம் நூற்றாண்டு - காலிப் அல் ஹக்கிமின் ஆளுகையில் திம்மிகள் ...
11-ம் நூற்றாண்டு - க்ரினடா, பெஸ் (Grenada & Fez) இங்குள்ள யூதர்கள் .... இதே காலத்தில் இந்துக்கள் இந்தியாவில் மகமுதுவினால் (Mahmud)  தொல்லையை அனுபவித்தார்கள்...
12-ம் நூற்றாண்டு - Almohads of North Africa தொல்லை கொடுத்தனர். 
13- நூற்றாண்டு - டமாஸ்கஸ் கிறித்துவர்கள்
14 & 15-ம் நூற்றாண்டு - பயங்கரவாதி  Timur the Lame - இவனது ’திருவிளையாடல்’ வரலாற்று ஆசிரியர்களையே பயத்தில் உறைய வைத்தது.
'Zafer Nameh'  என்ற நூலே தைமூரின் முரட்டுத்தனத்தை இன்றும் நமக்குப் புரிய வைப்பது. இந்நூலில் ‘குரானில் நம்பிக்கையில்லாதவர்களின் மீது படையெடுத்து அவர்களை அழிப்பவர்களுக்கு மிக மதிப்பான சுவனம் கிடைக்கும்’ என்பது சொல்லப்பட்டுள்ளது. தைமூர் இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய அரசர்கள் இந்துக்கள் மீது சிறிது இரக்கத்தோடு இருந்தது பிடிக்காது போயிற்று. அதற்காகவே அவன் இந்தியா மீது படையெடுத்து வந்தான். ஆயிரக்கணக்கான இந்துக்களைச் சிறை பிடித்த பின் அவர்களால் தன் படைகளுக்கு எதிர்ப்பு வரலாமென்ற அச்சத்தில் பிடிபட்ட அத்தனை இந்துக்களையும் சிரச்சேதம் செய்து, அவர்களின் தலைக்குவியலின் மீது தன் வெற்றிக் கொடியை நட்டான். 


ஜோராஸ்ட்ரியர்கள்: 'Tarikh-i Bukhara' 944-ல் Bukhara-வைப் பற்றி எழுதப்பட்ட நூலில் புக்காராவில் இருந்த மக்கள் ஒவ்வொரு முறை இஸ்லாமியப் படையெடுப்பை ஒட்டி இஸ்லாமுக்கு மதமாறுவார்கள். இவ்வாறு நான்குமுறை மதம் மாறிய மக்கள் உண்டு. (235)

இன்னும் கொஞ்சம் இந்த தலைப்பில் செய்திகள் உண்டு. ஆனால் இவை போதுமே என்றெண்ணுகிறேன்.


(எத்துணை வரலாற்று சான்றுகள் கொடுத்தாலும், இஸ்லாம் வாளினால் பரப்பப்பட்டது என்பதை அவர்கள் ஒத்துக் கொள்ளப்போவதில்லை. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதானே!)










41 comments:

Unknown said...

ஒளரங்கசீப் நல்லவரோ கெட்டவரோ எனக்கு தெரியாது ஆனால் மோடி நல்ல நிர்வாகத்திறமை உள்ளவர் என்று நான் சொன்னதற்க்கு என்ன பின்னூட்டம் வந்ததது என்று பார்க்க விரும்பினால்http://krvijayan.blogspot.com/2011/02/blog-post_17.html படிக்கவும். ஆம் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்.

மதுரை சரவணன் said...

அய்யா பார்த்து வாள் ....? உங்க தைரியத்தைப்பாராட்டவே வேண்டும். அடுக்கடுக்கான வரலாற்றுச் சான்றுகள்... வியக்க வைக்கிறது எப்படி உங்களால்...படிக்க நேரம் இருக்கிறது..? விரைவில் அடுத்தப் புத்தகத்திற்கு தயாராகுங்கள்..

தணல் said...

New information. Thanks for sharing.

saarvaakan said...

ஒரு சாராருக்கு நல்லவர்களாக தெரியும் அவுரங்கசீப், ஹிட்லர், மோடி, இராஜபக்சே போன்றவர்கள் மற்றவர்களுக்கு தீயவர்களாக‌ தெரிகிறார்கள்.

விருப்பு வெறுப்பு என்பது எப்படி ஏற்படுகிறது?

பிறருடைய கொள்கைகளையும் ,வலிகளையும் தன் இனம்,மதம், சாதி கண்ணோட்டத்தில் பார்ப்பதால்தான்.

அடுத்து திரு விஜயன் இராஜபக்சே ஒரு சிறந்த நிர்வாகி என்ற கட்டுரை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
_

வரலாற்றில் மதங்கள் என்பது அரசியல் கொள்கையாகவே பயன்படுத்தப் பட்டுள்ளன. அவுரங்கசீப்பும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
மதவாதிகள் செயலை நியாயப் படுத்துவது இம்மாதிரியான செயல்களை ஊக்குவிப்பதாகும்.

thiruchchikkaaran said...

அவர்கள் தங்கள் மார்க்கத்தை பின்பற்றிக் கொள்வதை யாரும் தடுக்கவில்லை. அவர்கள் வழி பாட்டு முறைகளை இகழவில்லை. அவர்களை மத வரி கட்டும்படி சொல்லவில்லை.

இன்னும் சொல்லப் போனால் அவர்களின் மதத்தில் உள்ள நல்ல விஷயங்களை பாரட்டுகிறோம், நல்லிணக்கத்தில் இணைகிறோம்.

ஆனால் பிற மதத்தவரை அவமானப் படுத்தி ஜிசியா வரி வாங்குவதை ஆதரிக்காதே , பிற மத வழி பாட்டு முறைகளை வெறுத்து இகழாதே என்றால் உடனே நம்மை தீவிரவாதி, அம்பி, ஆர். எஸ். எஸ். அம்பி என்று திட்ட ஆரம்பித்து, இணையப் பக்கம் எழுத வராதே என மிரட்டுவார்கள்.

அவரங்கஜேபுக்கு இருந்த அதிகாரம் இவர்களிடம் இருந்தால் என்ன நடக்கும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

Chittoor Murugesan said...

இதையும் பாருங்க!
http://kavithai07.blogspot.com/2009/06/blog-post_6423.html

Robin said...

//அவரங்கஜேபுக்கு இருந்த அதிகாரம் இவர்களிடம் இருந்தால் என்ன நடக்கும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.// அதே அதிகாரம் ஆர்.எஸ்.எஸ். அம்பிகளிடம் இருந்தால் என்ன நடக்கும் என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

Unknown said...
This comment has been removed by a blog administrator.
கபீஷ் said...

எத்தன தடவை சொல்லணும் ஒளரங்கஜேப் வைரத்தின் வைரம். உங்களுக்கு புரியறா மாதிரி சொல்றேன் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர்

கபீஷ் said...

//காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதானே!)// தருமி ரொம்பத்தான் தில்லு ஜாஸ்தியா போச்சு. மக்கள்ஸ் யாரும் நோட் செய்யல போல. எடுத்துக்கொடுத்தாச்சு. மக்களே நல்லா கவனிங்க இவர

தருமி said...

//ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர்//

அவரு மட்டுமா? இல்லை, & Co. சேர்த்தா?

கபீஷ் said...

//. ஆயிரக்கணக்கான இந்துக்களைச் சிறை பிடித்த பின் அவர்களால் தன் படைகளுக்கு எதிர்ப்பு வரலாமென்ற அச்சத்தில் பிடிபட்ட அத்தனை இந்துக்களையும் சிரச்சேதம் செய்து, அவர்களின் தலைக்குவியலின் மீது தன் வெற்றிக் கொடியை நட்டான்// தைமூரும் ரொம்ப நல்லவரா இருந்திருக்காரே

கபீஷ் said...

//அவரு மட்டுமா? இல்லை, & Co. சேர்த்தா// இந்த அண்ட் கோவுல இருக்கற தைமூர் ரொம்ப நல்லவர் மத்தவங்கள பத்தி படிச்சிட்டு சொல்றேன். செங்கிஸ்கான் பத்தி என்ன நினக்கறீங்க. எனக்கு ரொம்ப பிடிச்ச கான் செங்கிஸ்கான்

கபீஷ் said...

//யூதர்களைத் தவிர கிறித்துவர்கள், இந்துக்கள், ஜோராஸ்ட்ரியன்கள், போன்ற மற்ற மதங்களிலிருந்தும் இஸ்லாமிற்கான கட்டாய மாற்றம் நடந்தன. // அன்பை ஏன் தப்பா புரிஞ்சுகிட்டார்

சீனு said...

//அதுபோலவே நம்மை அடக்கி ஆண்ட இஸ்லாமிய படையெடுப்பாளர்களை இஸ்லாமியர்கள் பெருமைப்படுத்துவது பிறந்த நாட்டுக்கு செய்யும் ஒரு பச்சைத் துரோகம்.//

விடுங்க பாஸு. அடி வாங்குறது நமக்கு சகஜம் தானே. இவங்க எப்பவுமே இப்படித்தான்.

கபீஷ் said...

என் ஒரு கமெண்ட் காணோம் ரிலீஸ் செய்யலன்னா அதுசரி கிட்ட பஞ்சாயத்து போகும்

NO said...

//செங்கிஸ்கான் பத்தி என்ன நினக்கறீங்க. எனக்கு ரொம்ப பிடிச்ச கான் செங்கிஸ்கான்//

Ghengis Khan was not a Muslim.

"Khan" was a title given to nomadic clan leaders of Mangolia. He followed something called Shamanism and some superflous Buddhism.

Surprisingly, Ghengis for all his quality of destruction and ravage, was very tolerant of other religions. He invited almost all religious representatives to Karkorum (the capital he built in Mangolia) that included Christians Muslims and many.

For all his terrible campaigns, he never once had any religious motivation whatsoever.

கபீஷ் said...

//இன்னும் கொஞ்சம் இந்த தலைப்பில் செய்திகள் உண்டு. ஆனால் இவை போதுமே என்றெண்ணுகிறேன்.
// அப்படில்லாம் எண்ணப்டாது

குடுகுடுப்பை said...

ஒளரங்கசீப்பு நல்லவர் என்பதற்கு என் பின்னூட்டமே ஆதாரம். நீங்க கொடுத்த ஆதாரமெல்லாம் வரலாற்றுத்திரிப்பு.

NO said...

// அதே அதிகாரம் ஆர்.எஸ்.எஸ். அம்பிகளிடம் இருந்தால் என்ன நடக்கும் என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.//

வாட்டிகன், மார்டின் லூத்தரின் உண்மையான கிருத்துவ சபை, கான்ஸ்டன்ட்டின் போன்றவர்களின் ஆட்சியில் என்ன நடந்ததோ அதை போல நடக்கும்!!!!!

ஸ்ரீ ராம ராஜ்யமும் வேண்டாம், இயேசு ராஜ்யமும் வேண்டாம், உண்மையான தூதரின் காலிபட் ஆட்சியையும் வேண்டாம், மார்ச்ஸ்சிய ஸ்டாலினிய கொலைகார ஆட்சியையும் வேண்டாம், திராவிட டுபாகூர் ஆட்சியையும் வேண்டாம்!! வேண்டியது எந்த கடவுளார்களுக்கும், மதங்களுக்கும், மத சடங்குகளுக்கும் சார்பிலாத ஆட்சி மட்டுமே. அதாவது Secular Humanism as propounded by Thomas Paine, Jefferson, John Adams and a few others!!


As I understand the Christian religion, it was, and is, a revelation. But how has it happened that millions of fables, tales, legends, have been blended with both Jewish and Christian revelation that have made them the most bloody religion that ever existed?
-- John Adams, letter to FA Van der Kamp, December 27, 1816
The question before the human race is, whether the God of nature shall govern the world by his own laws, or whether priests and kings shall rule it by fictitious miracles?
-- John Adams, letter to Thomas Jefferson, June 20, 1815

The Christian religion begins with a dream and ends with a murder. The age of ignorance commenced with the Christian system. [Thomas Paine]

The New Testament, they tell us, is founded upon the prophecies of the Old; if so, it must follow the fate of its foundation. [Thomas Paine]

The declaration which says that God visits the sins of the fathers upon the children is contrary to every principle of moral justice. [Thomas Paine, The Age of Reason]

There are matters in the Bible, said to be done by the express commandment of God, that are shocking to humanity and to every idea we have of moral justice..... [Thomas Paine]

All national institutions of churches, whether Jewish, Christian, or Turkish, appear to me no other than human inventions, set up to terrify and enslave mankind, and monopolize power and profit.

The story of Jesus Christ appearing after he was dead is the story of an apparition, such as timid imaginations can always create in vision, and credulity believe. Stories of this kind had been told of the assassination of Julius Caesar...[Thomas Paine]

Millions of innocent men, women and children, since the introduction of Christianity, have been burnt, tortured, fined and imprisoned; yet we have not advanced one inch towards uniformity. -Thomas Jefferson, Notes on Virginia, 1782

Christianity neither is, nor ever was a part of the common law. -Thomas Jefferson, letter to Dr. Thomas Cooper, February 10, 1814

Quote from Anonymous - The root of all problems in this world was the absence of a lunatic asylum in middle east two thousand years ago!!

NO said...

// அதே அதிகாரம் ஆர்.எஸ்.எஸ். அம்பிகளிடம் இருந்தால் என்ன நடக்கும் என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.//

வாட்டிகன், மார்டின் லூத்தரின் உண்மையான கிருத்துவ சபை, கான்ஸ்டன்ட்டின் போன்றவர்களின் ஆட்சியில் என்ன நடந்ததோ அதை போல நடக்கும்!!!!!

ஸ்ரீ ராம ராஜ்யமும் வேண்டாம், இயேசு ராஜ்யமும் வேண்டாம், உண்மையான தூதரின் காலிபட் ஆட்சியையும் வேண்டாம், மார்ச்ஸ்சிய ஸ்டாலினிய கொலைகார ஆட்சியையும் வேண்டாம், திராவிட டுபாகூர் ஆட்சியையும் வேண்டாம்!! வேண்டியது எந்த கடவுளார்களுக்கும், மதங்களுக்கும், மத சடங்குகளுக்கும் சார்பிலாத ஆட்சி மட்டுமே. அதாவது Secular Humanism as propounded by Thomas Paine, Jefferson, John Adams and a few others!!


As I understand the Christian religion, it was, and is, a revelation. But how has it happened that millions of fables, tales, legends, have been blended with both Jewish and Christian revelation that have made them the most bloody religion that ever existed?
-- John Adams, letter to FA Van der Kamp, December 27, 1816
The question before the human race is, whether the God of nature shall govern the world by his own laws, or whether priests and kings shall rule it by fictitious miracles?
-- John Adams, letter to Thomas Jefferson, June 20, 1815

The Christian religion begins with a dream and ends with a murder. The age of ignorance commenced with the Christian system. [Thomas Paine]

The New Testament, they tell us, is founded upon the prophecies of the Old; if so, it must follow the fate of its foundation. [Thomas Paine]

The declaration which says that God visits the sins of the fathers upon the children is contrary to every principle of moral justice. [Thomas Paine, The Age of Reason]

There are matters in the Bible, said to be done by the express commandment of God, that are shocking to humanity and to every idea we have of moral justice..... [Thomas Paine]

All national institutions of churches, whether Jewish, Christian, or Turkish, appear to me no other than human inventions, set up to terrify and enslave mankind, and monopolize power and profit.

The story of Jesus Christ appearing after he was dead is the story of an apparition, such as timid imaginations can always create in vision, and credulity believe. Stories of this kind had been told of the assassination of Julius Caesar...[Thomas Paine]

Millions of innocent men, women and children, since the introduction of Christianity, have been burnt, tortured, fined and imprisoned; yet we have not advanced one inch towards uniformity. -Thomas Jefferson, Notes on Virginia, 1782

Christianity neither is, nor ever was a part of the common law. -Thomas Jefferson, letter to Dr. Thomas Cooper, February 10, 1814

Quote from Anonymous - The root of all problems in this world was the absence of a lunatic asylum in middle east two thousand years ago!!

தருமி said...

//குடுகுடுப்பை said...

ஒளரங்கசீப்பு நல்லவர் என்பதற்கு என் பின்னூட்டமே ஆதாரம். //

எந்த பின்னூட்டம்? இந்தப் பின்னூட்டமா?

Unknown said...

479. ஒளரங்கஜேப் ( & Co.)நல்லவரா, கெட்டவரா... ???

அதற்கு ஆதாரம் கொடுங்கள், இவை அனைத்தும் தங்களின் சொந்த கருத்துக்களே, எதற்குமே ஆதாரம் இல்லாத பதிலுக்கு தகுதி இல்லாத குற்ற சாட்டுகள்.

Robin said...

//As I understand the Christian religion, it was, and is, a revelation. But how has it happened that millions of fables, tales, legends, have been blended with both Jewish and Christian revelation that have made them the most bloody religion that ever existed?//
கிறிஸ்தவ மதத்தை கட்டுக்கதை என்று இந்து மதத்தை சேர்ந்த NO பேசுவது நகைமுரண்.

suvanappiriyan said...

“The image of Islam is being tarnished by a small group of people and that Muslims must come forward to present before the world the correct picture of their divine faith.”

“The enormity of their ignorance of the Islamic history and its code of conduct is mind-boggling. We should be united in fighting these elements for the cause of Islam”

“Muslims should go to lengths to follow the basics, which say ‘be kind to your neighbors, keep smiling when you meet others, pray and do charity.’ We should serve humanity, we should not show hostility toward others, even to the followers of other faiths. This is what Islam stand for. We should present before the world a model through our behavior, nature and presentation.”

“The Prophet Mohamed (peace be upon him) never used his sword to spread Islam: rather he spread the religion through his virtues, behavior, tolerance, and righteousness. And this is what is needed to change todays destroyed image of islam”

ஏ.ஆர்.ரஹ்மான் மெக்காவில் வைத்து 'அரப் நியூஸ' க்கு அளித்த பேட்டி.

//அவரங்கஜேபுக்கு இருந்த அதிகாரம் இவர்களிடம் இருந்தால் என்ன நடக்கும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.//-Tiruhchikkaran

//அதே அதிகாரம் ஆர்.எஸ்.எஸ். அம்பிகளிடம் இருந்தால் என்ன நடக்கும் என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.//- அருமையான பதில் ராபின்!

//அடுத்து திரு விஜயன் இராஜபக்சே ஒரு சிறந்த நிர்வாகி என்ற கட்டுரை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.//- நன்றி சார்வாகன்.

//ஒளரங்கசீப்பு நல்லவர் என்பதற்கு என் பின்னூட்டமே ஆதாரம். நீங்க கொடுத்த ஆதாரமெல்லாம் வரலாற்றுத்திரிப்பு.//- குடுகுடுப்பை! தருமியை நன்றாகவே புரிந்து கொண்டீர்கள். :-)

குடுகுடுப்பை said...

தருமி said...
//குடுகுடுப்பை said...

ஒளரங்கசீப்பு நல்லவர் என்பதற்கு என் பின்னூட்டமே ஆதாரம். //

எந்த பின்னூட்டம்? இந்தப் பின்னூட்டமா?
//
ஆமாம், இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத உங்களிடம் விவாதம் செய்து ஹஹா ஹீஹீ.

குடுகுடுப்பை said...

//ஒளரங்கசீப்பு நல்லவர் என்பதற்கு என் பின்னூட்டமே ஆதாரம். நீங்க கொடுத்த ஆதாரமெல்லாம் வரலாற்றுத்திரிப்பு.//- குடுகுடுப்பை! தருமியை நன்றாகவே புரிந்து கொண்டீர்கள்.
//

இது சுவனப்பிரியன் அவர் பதிவில் போட்டிருக்கிறார். உண்மையாவே அவருக்கு புரியலையா?

தருமி said...

//இவை அனைத்தும் தங்களின் சொந்த கருத்துக்களே, //

ஹா...ஹா... :)

//எதற்குமே ஆதாரம் இல்லாத பதிலுக்கு தகுதி இல்லாத குற்ற சாட்டுகள்.//

அதைச் சொல்லவா இம்புட்டு கஷ்டப்பட்டு வந்தீங்க?

ஒழுங்கா பதிவை வாசிங்க’ ஆதாரம் தெரியும்!

சீனு said...

தருமி சார்,

அவரே சொல்லிட்டார். அதனால உண்மையாத்தான் இருக்கும். அதுவே ஆதாரம் தான்... :)

தணல் said...

//ஸ்ரீ ராம ராஜ்யமும் வேண்டாம், இயேசு ராஜ்யமும் வேண்டாம், உண்மையான தூதரின் காலிபட் ஆட்சியையும் வேண்டாம், மார்ச்ஸ்சிய ஸ்டாலினிய கொலைகார ஆட்சியையும் வேண்டாம், திராவிட டுபாகூர் ஆட்சியையும் வேண்டாம்!! வேண்டியது எந்த கடவுளார்களுக்கும், மதங்களுக்கும், மத சடங்குகளுக்கும் சார்பிலாத ஆட்சி மட்டுமே. //

My dream too. Laws governing a nation should not be based on religion in this age where people of all religion are residing together. They should be more secular allowing people to have their individual beliefs, not superimposing them on others, and not trying to invalidate others'.

I read somewhere that this Timur himself has boasted and documented about how he killed the so called Hindu people letting their blood flow and destroyed their monuments.

Just because some murderer is a muslim, I do not understand how people here try to defend them. They would try to defend Kasab as well. Oh my god!

தருமி said...

//அதுவே ஆதாரம் தான்... :)//
சீனு,
ஆகா .. ஆதாரம் குடுத்தாச்சு அப்டின்னு போய்ருவாங்க ..!

தருமி said...

குகு
////குடுகுடுப்பை said...

ஒளரங்கசீப்பு நல்லவர் என்பதற்கு என் பின்னூட்டமே ஆதாரம். //

உங்களுக்கு சுவனப்பிரியன் செர்டிபிகேட் கொடுத்துட்டார். தெரியுமா? (http://suvanappiriyan.blogspot.com/2011/02/blog-post_17.html )

thiruchchikkaaran said...

@ராபின்,

இந்த தளத்திலே ஆர். எஸ். எஸ். அம்பி என்றெல்லாம் சாடப் பட்டது யார் என்று தெரியாமல் எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன்.

யாரும் தங்கள் மார்க்கத்தை பின்பற்றிக் கொள்வதை நாங்கள் தடுக்கவில்லை. அவர்கள் வழி பாட்டு முறைகளை இகழவில்லை. அவர்களை மத வரி கட்டும்படி சொல்லவில்லை.

இன்னும் சொல்லப் போனால் அவர்களின் மதத்தில் உள்ள நல்ல விஷயங்களை பாரட்டுகிறோம், நல்லிணக்கத்தில் இணைகிறோம்.





ஆர். எஸ். எஸ். அம்பிகளின் மத வாதத்தை மட்டும் எதிர்க்க வேண்டும், அவரங்கஜேபின் மத அடக்குமுறைக் கொடுக்கோன்மையை ஆதரித்து, நிலை நிறுத்த முயலுவோரை ஆதரிக்க வேண்டும் என்பது உங்கள் கொள்கையா, அதை தெளிவாக சொல்லுங்களேன்.

எந்த வகையான மதச் சார்பு அரசாங்கமும் வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்.

மத ரீதியில் தனிமைப் படுத்தி திம்மிகளை அவமானப் படுத்தி வரி வசூலிப்பது தவறா இல்லையா, அதை இன்றைக்கும் ஆதரிப்பது சரியா, என்பதுதான் இந்தக் கட்டுரையின் முக்கிய பொருள்.

அதைப் புரிந்து கொள்ளுங்கள்.

மத ரீதியாக பணிந்து ஜிசியா வரி கட்டும் படி வற்புறுத்துவது உங்களுக்கு ஒப்பான ஒரு கோட்பாடாக இருந்தால் அதை வெளிப்படையாக சொல்லலாமே!

சீனு said...

//“The Prophet Mohamed (peace be upon him) never used his sword to spread Islam: rather he spread the religion through his virtues, behavior, tolerance, and righteousness. And this is what is needed to change todays destroyed image of islam”//

முகம்மது அவர்கள் ஒரே இரவில் தொள்ளாயிரம் யூதர்களை கொன்று அன்று இரவே கொல்லப்பட்டவர்களின் மனைவிமார்கள், தங்கைகள், மகள்களுடன் உறவு கொண்றாறென்று அரேபியாவில் பள்ளிக் குழந்தைகள் பெருமையோடு படிப்பது தெரியுமா? அரபியில் குரான் படித்திருக்கிறீர்களா?

இதை நான் சொல்லவில்லை. Wafa Sultan என்ற இஸ்லாமிய பெண்மனி.

தருமி said...

சீனு,
எங்கேயிருந்துதான் தோண்டி எடுக்குறீங்களோ!

ஆனால் இந்தக் கேள்வியை நீங்கள் ஏற்கெனவே கேட்டு “மக்கள்” பதில் சொல்லவேயில்லைன்னு நினைக்கிறேன்.
இல்ல ... ?

NO said...

//As I understand the Christian religion, it was, and is, a revelation. But how has it happened that millions of fables, tales, legends, have been blended with both Jewish and Christian revelation that have made them the most bloody religion that ever existed?//
//கிறிஸ்தவ மதத்தை கட்டுக்கதை என்று இந்து மதத்தை சேர்ந்த NO பேசுவது நகைமுரண்//

Please read properly and dont confuse me with John Adams!

குறும்பன் said...

பின்னூட்டம் நல்லா இருக்கு.

தருமின்னு பேர் வைச்சாலே இடங்காடா தான் கேள்வி வரும்போல் இருக்குது.

உங்க கேள்வி எதுவும் செல்லாது, செல்லாது.... முசுலிம்கள் அனைவரும் ரொம்ப நல்லவங்க. அதனால அவங்க ராசா அவுரங்க சீப் ரொம்பபபபப நல்லவர்.

தருமி said...

//குறும்பன் said...

பின்னூட்டம் நல்லா இருக்கு. //

ச்சே! பதிவு அம்புட்டு மோசமா???

Robin said...

//Please read properly and dont confuse me with John Adams!//

பார்ப்பன மதத்தைப் பற்றி வேதங்களை நன்கு கற்ற ஒருவர் எழுதி வைத்திருக்கிறார்.

http://thathachariyar.blogspot.com/

இதைப் பற்றி விரிவாக எழுத எனக்கே அருவருப்பாக இருக்கிறது என்பதால் தவிர்க்கிறேன்.

ஆர்.எஸ்.எஸ். என்றவுடன் நோ ஓடிவருவது ஏன்?

Ganesan said...

கேஆர் விஜயனின் பதிவை படிச்சதுல அவர் என்ன சொல்ல வரார்னு விளங்கல. ஒரு பக்கம் முஸ்லிம்களுக்கும் ரத்தம், வலி எல்லாம் உண்டுன்னு ஒத்துக்குறார், குஜராத் கலவரத்தை நியாய படுத்தலே என்கிறார். இன்னொரு பக்கம் மோடியை சிறுபான்மையினரின் எதிரி என்கிறார்களே என்று வருத்தமும்படுகிறார் (?)

ஒரு அரசாங்கத்தின் தலைமை தனது ஆட்சின் கீழ் உள்ள ஒரு இனம் கொல்லப்படும் போது பாதுகாப்பு அளிக்காமல் வேடிக்கை பார்க்குமானால் அந்த தலைமை அந்த இனத்துக்கு எதிரானது என்று தானே சொல்ல முடியும்? அவரோட கட்சிகாரர் வாஜ்பாயீயே மோடியை ராஜ தர்மம் தவறியவர்னு சொன்னாரே.

தருமி said...

ராபின்,
//விரிவாக எழுத எனக்கே அருவருப்பாக இருக்கிறது //

இதை ரொம்ப ஜாக்கிரதையா எழுதணும். எங்கெல்லாம் அருவருப்புன்னு யார் யாருக்கு தெரியுமோ!

Post a Comment