*
முந்திய பதிவு: கா.பா. வோடு சேர்ந்ததால் நடந்த விபரீதம் ... 1
*
SAMSARA by PAN NALIN(Nalin Kumar Pandya)
இந்திய - குஜராத் - இயக்குனர். புத்த மதம் சார்ந்த கதையமைப்பு. மூன்று ஆண்டுகள், மூன்று மாதம், மூன்று நாட்கள் தன்னந்தனியே மெளன தவம் இருந்து புத்த சந்நியாசியாக மடத்தில் இருக்கும் கதாநாயகனை காமம் வெல்கிறது. கனவுக்காமம் நிஜமாகி, கண்டு காமுற்ற பெண்ணைத் திருமணம் செய்கிறான். அழகான குழந்தை .. அன்பான மனைவி .. செல்வம் தரும் நிலம் .. எல்லாம் இருந்தும் மீண்டும் காமுற்ற வேலைக்காரப் பெண்ணோடு காமம். (இந்திய இயக்குனர் என்பதால் வாத்ஸ்யாயனரையும் தாண்டிப் போக நினைத்தாரோ என்னவோ ... 64 முறைகளையும் தாண்டி (!) அந்தக் காமத்தைக் காண்பிக்கிறார்.) பாவம் சுடுகிறது. சந்நியாசியாக முடிவெடுத்து, தலைமுடியை முண்டித்துக் கொண்டு, நீரில் மூழ்கி கால் போன போக்கில் நடக்க ஆரம்பிக்கும் அவன் முன் நிற்கிறாள் மனைவி.
இது ஒரு புத்த மதத்தை ஒட்டிய கதை. ஆனால் எனக்கென்னவோ இது புத்தத்தை மறுக்கும் ஒரு கதையாகத் தோன்றுகிறது. கணவனும் மனைவியும் சந்திக்கும் இடம் மிக அருமை. அதை மட்டும் மூன்று தடவை என்னைப் பார்க்க வைத்தது. மனைவி தன்னை புத்தனின் மனைவியான யசோதரையாக நினைத்துப் பேசும் வசனங்கள் மிக அருமை. கெளதமருக்கு வலி தெரியாது; வேதனை தெரியாது. எல்லாம் தெரிய வந்த போது எல்லோரையும், அன்பான மனைவி, குழந்தை ராகுல் அனைவரையும் ஒதுக்கி வைத்து விட்டு செல்கிறார். அவர் செய்தது தியாக மென்றால் ஒதுக்கி வைக்கப்பட்ட யசோதரையின் மன நிலை என்ன என்பதை யாரும் நினைப்பதில்லை. கெளதமரை விடவும் தியாகம் செய்தது யசோதரைதானே என்று கேட்கிறாள்.தியாகம் என்பது இருப்பதிலிருந்து ஓடுவதில்லை என்கிறாள். அழகான வசனம் ....
If your thoughts toward Dharma were of the same intensity ...
as the love and passion you have shown me ...
... you would have become a Buddha ... in this very body ... in this very life.
கீழே விழுந்து அழுகிறான். அழகான BGM.
நாயகன் எழுந்து, திரும்பி நடக்கிறான். முன்பே வழியில் பார்த்த ஒரு கல் .. அந்தக் கல்லில் ஒரு கேள்வி .. முதலில் பார்த்த போது அந்தக் கேள்வியை அப்போது நினைவில் இருத்தவில்லை. ஆனால் இப்போது அந்தக் கேள்வி அவன் முன் நிற்கிறது. கல்லைத் திருப்புகிறான். கேள்விக்கான பதிலும் இருக்கிறது.
"How can one prevent a drop of water from ever drying up?"
"By throwing it into the sea ... "
துறவு என்பது எல்லாவற்றையும் உதறிவிட்டுப் போவதில் இல்லை. தனித்து நின்றால் காய்ந்து ஒன்றுமில்லாமல்தான் போக வேண்டும் - ஒரு துளி நீரைப் போல. ஆனால் அந்த ஒரு துளி நீர் கடலோடு கலந்தால் அதற்கேது முடிவு; என்றும் எப்போதும் நிலைத்து நிற்கும்.
lovely script .........
1 comment:
எப்ப தருமி அய்யா இந்தப் படத்தை ஓட்ட போறோம்?
சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ
Post a Comment