Tuesday, July 26, 2011

516. WHY I AM NOT A MUSLIM ... 21

*



*

ஏனைய முந்திய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
பதிவு - 9
பதிவு - 10
பதிவு - 11
பதிவு - 12
பதிவு - 13
பதிவு - 14
பதிவு - 15
பதிவு - 16
பதிவு - 17
பதிவு - 18
பதிவு - 19


Image and video hosting by TinyPic





CHAPTER  16

FINAL ASSESSMENT OF MUHAMMAD


முகமதுவிற்குத் தன்னுடைய குறைகள் என்னவென்று தெரியும்; அவரால் தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொள்ள முடியும்....... Tor Andrae(343)

முகமதுவிற்கு நல்ல ‘முகராசி’ உண்டு. அவரது சிரித்த முகத்தைப் பற்றியும், மக்களிடையே இருந்த நல்ல பெயரைப் பற்றியும், இதனால் அவர் பின்னே மக்கள் கூட்டம் திரண்டதற்கும் பல சாட்சியங்கள் உண்டு. போரிடுவதிலும் நல்ல கெட்டிக்காரர். Montgomery Watt என்ற மேற்கத்திய அறிஞருக்கு முகமதுவின் மேல் மிகுந்த மரியாதை. அவர், ‘முகமதுவிற்கு ஒரு ஞானியின் பார்வை இருந்தது. மெக்காவிலுள்ள மக்களிடம் சமயங்களை அடிப்படையாக வைத்து வளர்ந்து வந்த சமுதாயப் போராட்டங்கள் பற்றியும் நன்கு தெரிந்து வைத்துள்ளார். இந்தப் போராட்டங்களை அவரால் ஓரளவாவது தீர்க்க முடிந்தது’ என்கிறார். மேலும், ‘இந்த புரிந்துணர்வுகள் அவரை ஒரு நல்ல தலைவராக்கியது. இந்தத் தலைமை சமுதாயக் குழுத் தலைமையாக இல்லாமல் ஒரு சமயத் தலைமையாக இருந்தது’ என்கிறார்.

Goldziher என்ற வரலாற்றறிஞர், முகமதுதான் முதன் முதல் மெக்காவாசிகளிடமும், அரேபிய பாலைவனத்தின் முரட்டு மனிதர்களிடமும் மன்னிப்பதே மிக நல்ல பண்பு என்பதையும், அதைவிட நமக்குத் தீங்கு செய்தவர்களிடமும் இப்பண்பினைக் காண்பிப்பது அவர்களுடைய ('muruwwa' ) பண்புக்கு எதிரானதல்ல; அதுவே அல்லாவின் பாதையில் நடப்பதற்கான ஒப்பற்ற வழியாகும் என்ற தத்துவங்களைச் சொன்னார்.

மன்னிக்கும் மாண்பு பற்றியெல்லாம் சொல்லி, சமுதாயப் போராட்டங்களல்ல,  இஸ்லாமே நம்மையெல்லோரையும் இணைக்கும் உயர்ந்த வழி என்றுணர்த்தினார். அல்லாவின் முன்னால் நாமெல்லோரும் ஒன்று என்றும் கற்றுக் கொடுத்தார். 

ஆனாலும் முகமதுவே இந்த உயர்ந்த குணங்கள் ஏதுமின்றிதான் முதலில் இருந்தார். யூதர்கள், மெக்காவினர், மற்றைய எதிரிகள் எல்லோரிடமும் மிகவும் கொடூரமாக இருந்தார். புக்காரி சொல்லும் ஒரு நிகழ்வு:  Ukl என்ற குழுவினர் முகமதுவிடம் வந்து தாங்கள் இஸ்லாமிற்கு மாறிவிட்டதாகச் சொன்னார்கள். அவர்களுக்கு மதீனா பிடிக்காமல் போய், உடல் நலம் குறைந்தார்கள். முகமதுவும் அவர்களுக்கு ஒட்டகப்பால் கொடுத்து உடல் நலம் பெறச் செய்தார்.

இதன் பின் அவர்கள் மறுபடியும் மனம் மாறி இஸ்லாமிற்கு எதிரானவர்களாக ஆனார்கள். அவர்களை மீண்டும் மதீனாவிற்குப் பிடித்திழுத்து வருமாறு ஆணை பிறப்பித்து, அவர்கள் பிடிபட்டதும் அவர்கள் கை, கால்களையும் திருட்டுக் குற்றத்திற்காக வெட்டி, கண்களையும் பிடுங்கி எறியச் சொன்னார். அவர்கள் அனைவரும் குருதியிழந்து இறந்தார்கள். (345)

இதே போல் William Muir என்பவர், Badr போரில் வீழ்த்தப்பட்ட குவாரிஷ் இன மக்களை மிகக் கொடூரமாகக் கொன்றதைக் குறிப்பிடுகிறார். கைபார் இளவரசன் தன் குழுவின் புதையலைக் காண்பிக்க வேண்டுமென்பதற்காக மனிதத் தன்மையின்றி  கொலை செய்யப்பட்டு, பின் அவனது மனைவி முகமதுவின் கூடாரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாள். (346)

முகமதுவின் உண்மைத்தனம்:
அவர் ‘தெரிந்தே’ பொய்யுரைத்தாரா, இல்லை, உண்மையிலேயே அவர்  கடவுளிடமிருந்து வஹி அருளப்பெற்றாரா? 
அவர் பல நல்ல பண்புகளைப் பெற்ற மனிதர் என்னும்போது அவர் இந்த அருள் வரும் விஷயத்தில் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருப்பாரா?
ஆனாலும், அவருடைய பிந்திய வாழ்க்கையில் அவர் தன் சுய நன்மைக்காக, தன் குடும்ப சிக்கலை நீக்க சில  வஹிகளைப் பெற்றதாகச் சொல்லியுள்ளார்.
ஆனால் மெக்காவில் இருக்கும்போது அவர் வெகு நிச்சயமாக தான் கடவுளிடம் பேசுவதாக உறுதியாக நம்பியுள்ளார். ஆனால் மதீனாவில் அவரது பழைய பண்புகள், வஹி எல்லாமே மாறியுள்ளன. 
Muir, ‘சுவனத்திலிருந்து வஹி மிகத் தாராளமாக அவரது அரசியல் தேவைகளுக்காகவும், மதத்திற்காகவும் இறக்கப்பட்டன. அது மட்டுமின்றி, அவரது அதீத சுய விருப்பு வெறுப்புகளுக்காகவும் இறக்கப்பட்டன. பல மனைவியர், காப்டிக் மேரியுடன் (Mary, the Coptic bondmaid)  கொண்ட தொடர்பு - இவைகளையெல்லாம் சரியென்று சொல்ல  சுராக்கள்  இறங்குகின்றன. இன்னும், வளர்ப்புப் பையனின் மனைவி மேல் ஆசை என்பதற்கு முதலில்  கடவுளின் சினமும், பின் வளர்ப்பு மகனின் திருமண முறிவும், இவரது திருமணமும் நடைபெறுகின்றன - கடவுளின் கோபத்துடனே.  இந்த வஹிகள் எல்லாம் கடவுளிடமிருந்துதான் வந்தன என்பது முகமதுவின் நம்பிக்கை என்றால் அந்த  தீர்ப்பு கேள்விக்குரியதே.

முகமதுவிற்கும் உமருக்கும் நடந்த சில நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது வஹி இறங்குவது மிகச் சாதாரண நிகழ்வாகப் போய்விடுகிறது. முகமது அவரது எதிரியான Abdallah Ibn Ubbay -விற்காக தொழுகிறார். அதனைப் பற்றிய கேள்வியை உமர் எழுப்பியதும் உடனே அதற்கான வஹி இறங்குகிறது. (347)

அடுத்தும் இன்னும் மூன்று முறைகள் உமர் முகமதுவிடம் கேள்விகள் எழுப்பும்போது உடனடியாக வஹி வந்து விடுகின்றன - முகமதுவின் எண்ணங்களே வஹியிலும் உள்ளது. 

குரானில் யார் சொல்லும் வசனம் சரி என்ற கேள்வி எழுவதால் நம்பிக்கையாளர்களுக்குள்  சில சச்சரவுகள் எழுவதுண்டு. ஆனால் அச்சமயத்தில் முகமது குரான் தனக்கு ஏழு விதமாகச் சொல்லப்பட்டது என்று கூறுவதுண்டு. (Koran had been revealed in no fewer than seven textss.)


நல்வழிக்கான மாற்றங்கள்:
பிறந்த பெண்பிள்ளைகளை உடனே புதைக்கும் பழக்கத்தை முகமது மாற்றினார். ஆனால் இஸ்லாமிற்குப் பிறகே பெண்களின் நிலை மிக மோசமானது. அவர்கள் ஏற்கெனவே கொண்டிருந்த மேன்மையான, அறிவு பூர்வமான நிலையை அவர்கள் இழந்தார்கள். Perron என்பவர் தானெழுதிய Femmes Arabes Avant et Depuis L'Islamisme - நூலில் இதையே கூறுகிறார். (348)


முகமது ஆயிஷாவைத் திருமணம் செய்தது ஒரு தவறான முன்னுதாரணம். கருத்து மாறுபாடுகளுக்கு மாறுதல் செய்தல் என்பது இன்னொரு தவறான முன்னுதாரணம். 
16 : 93-ல் கருத்து மாறுபாடு சரியென்று சொல்கிறார்.
5  : 91-ல் கருத்து மாறுபாட்டிற்கு ஈடு செய்தல் வருகிறது.

முகமதுவின்  வாழ்க்கையே பல மாறுபாடுகளோடு உள்ளது. அரசியல் வெற்றிக்காகவும், அதிகாரத்திற்காகவும் தன்னுடைய கொள்கைகளை விட்டுக்கொடுக்கவும் தயாராக இருந்திருக்கிறார். சான்றாக, ”கடவுளின் தூதன்” (Apostle of God) என்ற தனது தகுதியை ஒரு போரின் ஒப்பந்த சாசனம் எழுதும்போது தவிர்த்தார். விக்கிரக ஆராதனையை ஒழித்தார். ஆனாலும் பழைய அராபிய பழக்க வழக்கங்களையும், ‘கறுப்புக் கல்லை’ முத்தமிடுதலையும் தொடந்துள்ளார். சூதாட்டங்கள் வேண்டாமென்றார்; ஆனால், கெட்ட சகுனங்கள், கண்ணேறுபடுதல் இவைகளை ஒப்புக் கொள்கிறார். முதலில் வரும் சுராக்களில் பெற்றோரை மிக உயர்ந்த பதவியில் வைத்துள்ளார்; ஆனால் பின் வரும் பகுதிகளில் இளைஞர்கள் தங்கள் பெற்றோருக்காகத் தொழ தேவையில்லை என்கிறார். 


குரானின் ஆரம்ப சுராக்களில் அமைதியாக இருக்கும் நிலை மாறி, பின் வரும் பகுதிகளில் பொறுமையற்றதனம் தெரிகிறது. 


Margoliouth, ‘முகமதுவின் வாழ்க்கையில் நடக்கும் தொடர்ந்து சிந்திய குருதியைப் பார்த்து, இன்றைய நம்பிக்கையாளர்களுக்கும் சிந்தும் குருதி சுவனத்தின் வாசல் கதவுகளைத் திறக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள்’ என்கிறார். (349)


குரானின் வசனங்கள் யாவும் கடவுளிடமிருந்து வந்தவை என்பது முகமதுவின் மிகவும் மோசமான ஒரு கோட்பாடு. ஏனெனில் இதனால் புது அறிவு சார்ந்தவைகளோ, சுதந்திரத் தன்மைகளோ ஏதும் கிளைத்தெழ முடியாது போகிறது. (350)
 


No comments:

Post a Comment