*
கல்லூரிக்கு வேலைக்குப் போன பின் நண்பர்களோடு காசில்லாத நேரத்தில் விளையாடுவதற்காகவே செஸ் பழகினோம். இரண்டு வருஷம் அடிக்கடி விளையாடுவோம். இந்தியன் எகஸ்பிரஸில் வரும் white wins in two moves எல்லாம் போட்டுப் பழகினோம். அதன் பின் செஸ் பக்கம் போகவேயில்லை. பின்னாளில் மகள்கள் இருவருக்கும் சொல்லிக் கொடுத்தேன். ம்ம்..ம்.. ஒண்ணும் தேறலை. உட்டுட்டேன்.
ஏறத்தாழ ஒரு இருபது, இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் என் நண்பன் ஒருவனோடு அவனது நண்பரைப் பார்க்கப் போயிருந்தோம். அவர்கள் இருவரும் அப்போது தான் I.P.S.ஆப்பீசர்களாக ஆகியிருந்தார்கள். கொஞ்ச நேரம் ஏதேதோ பேசினோம். போரடித்தது. அடுத்த என்ன செய்யலாம் என்று யோசித்த போது நண்பனின் நண்பர் செஸ் விளையாடுவோமா என்று கேட்டார். எனக்கு ரொம்ப தெரியாதுன்னேன். ’கொஞ்சம் தெரியுமல்ல .. அதை வைத்து விளையாடலாம்’ என்றார். நீங்கள் இரண்டு பேரும் விளையாடுங்கள். நான் வேடிக்கை பார்க்கிறேன் என்றேன். அட .. மூன்று பேரும் விளையாடலாம் என்றார் அந்த நண்பனின் நண்பர். அது எப்படியென்றேன். நான் இரண்டு பேரோடும் விளையாடுகிறேன் என்றார். அதிலும் நான் blind chess விளையாடுகிறேன் என்றார். அது என்னங்க என்றேன். நீங்கள் சாதாரணமாக விளையாடுங்கள்; நான் முதுகைக் காண்பித்துக் கொண்டு உட்காருகிறேன். போர்டை பார்க்காமலேயே விளையாடுகிறேன் என்றார். அது எப்படிங்க என்றேன். வாங்க விளையாடுவோம் என்று களத்தில் குதித்தார்.
முதுகைக் காண்பித்து உட்கார்ந்தார். நாங்கள் இருவரும் ஆளுக்கொரு போர்டில் விளையாட உட்கார்ந்தோம். மனுஷன் திரும்பியே பார்க்காமல், மனசுக்குள்ளேயே நினைவு வைத்து எங்கள் இருவரோடும் அடுத்தடுத்து விளையாடினார். அசந்து விட்டேன். எபடிங்க மனசுல அம்புட்டையும் ஞாபகம் வச்சி விளையாடினாரோ ... கொஞ்ச நேரம் விளையாடினோம்.
நமது அடுத்த மூவ் என்று யோசிப்பதற்குப் பதில் அவர் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தேன். நம்ப முடியாத அளவிற்கு அவர் அடுத்தடுத்த மூவ்களை மிகச் சரியாகச் செய்தார். அம்புட்டு ஆச்சரியம். கொஞ்ச நேரம் பார்த்தேன். என்னடா மனுசனுக்கு இம்புட்டு ஞாபக சக்தியான்னு நினச்சிக்கிட்டே ... இப்படி பண்ணிப் பார்ப்போமா என்று நினைத்து, எனது பீஸ் ஒன்றை இடம் மாற்றி வைத்தேன். அடுத்து அவர் இரண்டு மூவ் சொன்னார். இரண்டாவது மூவில் நான் ’இல்லைங்க .. அந்த இடத்தில் என் பீஸ் இருக்குது’ என்றேன். அப்டியா என்றார், கொஞ்சம் யோசித்து விட்டு முதலில் சரியாக இருந்த இடங்களைப் புட்டு புட்டு வைத்தார். சொல்லிட்டு .. நீங்க ‘விளையாடிட்டீங்களா?” என்று கேட்டுச் சிரித்தார்.
உண்மையைச் சொன்னேன். ஆச்சரியம் தாங்காமல் எப்படிங்க இதெல்லாம் என்றேன். பழக்கம் தான் என்றார். செஸ்ஸில் எந்த அளவிற்குப் போனீர்கள் என்றேன். கோவை மாவட்ட அளவு வரை போய் போட்டிகளில் வென்றிருக்கிறேன் என்றார்.
இது எனக்கு அடுத்த அடி! வெறும் மாவட்ட அளவில் விளையாடும் ஆளே இப்படி ரெண்டு பேரை வைத்து blind chess விளையாட முடிந்தால், பெரும் நிலைகளுக்குச் சென்றவர்கள் எப்படி ஆடுவார்கள்.
நினைக்கவே தலை சுற்றுகிறது!
ஆமாம் ... உங்களில் யாரேனும் இந்த blind chess விளையாடுவீங்களா? அப்படி யாரும் இருந்தால் இந்த மாயா ஜாலம் எப்படி என்று கொஞ்சம் சொல்லுங்களேன்.
ஆனந்த் ஒரு ஆட்டம் கூட ஜெயிக்காமல் போய்ட்டாரே .... :(
*
16 comments:
வணக்கம்
கடந்த கால நினைவு சுமந்த பதிவு...அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் ...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தருமிய்யா,
வெறும் போர்டு மட்டும் வச்சுக்கிட்டு ,காயின் இல்லாம ஆடும் ஆட்டத்திற்கு "பிளண்ட் ஃபோல்ட்" செஸ் என்று பெயர். சர்வதெச அளவில் டொர்னமென்ட் நடக்குது,ஆனந்த் அதில் கூட ஆடி இருக்கார்.
#தலா அரைமணி நேரம் காலக்கெடுவில் ஆடுவதற்கு ரேபிட் செஸ்,
#தலா 5 நிமிடம் மட்டும் வச்சு ஆடுவது லைட்னிங் செஸ்.
# ஒரு மணி நேரத்துக்கு மினிமம் -15 next hrs onards 12 move, மூவ் என தலா 3 மணிந்நேரமும்,
கடைசியில் சடன் ஃபினிஷ் தலா 30 நிமிடம் வச்சும் ஆடுவது ரெகுலர் செஸ்.
நீங்க சொன்ன முதுகு திருப்பி ஆடுவது "பிளைண்ட் ஃபோல்ட்" சொல்றிங்கனு நினைக்கிறேன்,ஆனால் அதிலும் மூவ்களை வாயாலவது நீங்க சொல்லி இருக்கனுமே சொல்லாமல் எல்லாம் ஆட முடியாது.
1)e4-e5
2)d4-d6
3)Nc3-Nf6
4)Bg5-Be7
horizontal rows ,a- h
vertical column -1-8
என ஸ்கோர் எழுதிக்கொண்டு தான் பிளைன்ட் ஃஃபோல்டிலும் ஆடுவார்கள்.
ஸ்கோர் எழுதி நியாபகம் வச்சுக்க கத்துக்கிட்டால் பிளைண்ட்ஃபோல்ட் செஸ் ஆடலாம்.
//மூவ்களை வாயாலவது நீங்க சொல்லி இருக்கனுமே //
சொன்னோமே ,,,,
என் மைத்துனன் ஒருவன் கூட மாவட்ட அளவில் விளையாடியவன். அவனும் இதே போல விளையாடி அசத்தி இருக்கிறான்.
ஸ்டாப்வாட்ச் வைத்து நமது 'மூவ்'களுக்கு காலக்கெடு வைத்து வேறு விளையாடுவார்கள்! காலக்கெடு அவர்களுக்கும் உண்டுதான். அவர்கள்தான் உடனே உடனே 'மூவ்' செய்து விடுவார்களே!
//சொன்னோமே ,,,,//
பதிவில சொல்லலையே அவ்வ்,
அப்படி ஆடுவது ஆட்டத்திறனை அதிகரிக்க பலரும் செய்யும் பிராக்டிஸ், அதையே வச்சு டோர்னமெண்டும் நடக்குதுனு சொல்லி இருக்கேனெ.
நானே காயின்ஸ் இல்லாம ஸ்கோர் எழுதியே கொஞ்சம் சுமாரா பிளைன்ட்ஃபோல்ட் ஆட முடியும்.,அதுவும் சில வகை ஓப்பனிங்ல தான் கொஞ்சம் பழக்கம் இருக்கு.
பெரிய கிராண்ட்ம்மாஸ்டர்னா அவருக்கு எத்தனை கேமோட ஸ்கோர் மனப்பாடமா இருக்கு அவ்ளோ பெரிய ஆளு :-))
நீங்க நினைக்கிறாப்போல ஆன் தி போர்ட் தின்க் பண்ணிலாம் ஆடுவது எல்லாம் மிடில் கேம் போன பின் தான் எப்பவாது புது வேரியேஷன் கொண்டு வந்தால் இல்லை எனில் கட கடவென காய தள்ளிக்கிட்டே போவார்கள்.
ஒரு சர்வதேச ஆட்டக்காரரை தியரிடிக்கலா ஆடினா வின் செய்யவே முடியாது ,ஆட்டம் டிரா ஆகிடும், நடுவில வைல்ட் ஆ, தியரிக்கு அப்பால் ஆடனும், அது போல ஆடினால் தான் ரிசல்ட் கிடைக்கும், அப்படி ஆடுவதில் தான் சமார்த்தியமே இருக்கு.
சர்வதேச ஆட்டங்கள் எல்லாம் லாஸ்ட் 30 மின்ஸ் சடன் ஃபினிஷ்ல , யாருக்கு 30 மின்ஸ் சீக்கிரம் காலியாகுதோ அவங்க தான் தோத்தாங்க என்பதில் முடியும், அல்லது டைம் பிரஷரில் தப்பா ஆடி தோப்பாங்க.
ஒவ்வொரு மூவ் செய்ததும் ஒரு டிஜிட்டல்/அனலாக் கிளாக் தட்டுவாங்க பாருங்க ,அதுக்கு தான், செஸ்ல டைம் ரொம்ப முக்கியம்.
கிரிக்கெட், செஸ் இந்த ரெண்டு விளையாட்டிலும் ஒரு பிட்டு கூட நமக்கு இது வரைக்கும் தெரியாது.
ஆட்டையில நம்மை சேத்துக்குவீங்களா?
ஆனந்த் சொந்த மண்ணில் ஜெயிக்க வேண்டுமென்ற டென்சனில் விளையாடி இருப்பாரோ ?
த.ம 2
பிளைன்ட் செஸ்.
அகக் கண்ணால் கண்டு ஆடும் ஆட்டம்
தங்கள் நண்பர் பாராட்டப்பட வேண்டியவர்
// ஆனந்த் ஒரு ஆட்டம் கூட ஜெயிக்காமல் போய்ட்டாரே .... :(//
ரெண்டு நாளா நான் சாப்பிடவேயில்லீங்க. அம்புட்டு வருத்தம்?
Professor Sir,
There was (not sure if is still there) a famous tournament called AMBER super GM chess tournament which Vishy Anand has won 5 times and on 2 occasions, he won in both the categories separately, Blindfold and rapid sections. Nobody else has achieved that feat.
Please have a look at my posts in my blog on Anand.
http://balaji_ammu.blogspot.in/2013/11/blog-post_17.html
http://balaji_ammu.blogspot.in/2012/06/blog-post.html
http://balaji_ammu.blogspot.in/2013/11/deccan-chronicle.html
(My article appeared in Deccan chronicle)
வவ்வால் - Your chess awareness is very good. Do you play the game also ?
//சொன்னோமே ,,,,//
பதிவில சொல்லலையே அவ்வ்,//
//அடுத்து அவர் இரண்டு மூவ் சொன்னார். //
வவ்வால், பாலா,
பெர்ய விளையாட்டுக்காரர்களா இருக்கிறீர்கள். அள்ளித் தெளித்த விவரங்கள் ஆச்சரியமாக உள்ளன.
//நீங்க நினைக்கிறாப்போல ஆன் தி போர்ட் தின்க் பண்ணிலாம் ஆடுவது எல்லாம் மிடில் கேம் போன பின் தான் எப்பவாது புது வேரியேஷன் கொண்டு வந்தால் இல்லை எனில் கட கடவென காய தள்ளிக்கிட்டே போவார்கள்.//
வவ்வால், முதல் மூவிலிருந்தே யோசிக்க மாட்டார்களா? பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது....
எ.அ.பாலா,
ஏதோ சுமாரா ஆடுவேன் , படிக்கிற காலத்தில் ஆல் இந்தியா யுனிவர்சிட்டு சவுத் சோன் செலக்ட் ஆகிருக்கேன்,அம்புட்டுத்தேன்.
-------------
தருமிய்யா,
சொல்லிட்டு அத வச்சு ஆடினார்னு இப்போ சொல்லுரிங்க, அப்புறம் எப்படி ஒரு காயை மாத்தி வச்சேன்னு சொல்லுறிங்க அவ்வ்?
சொன்னதை தான் நகத்தி இருக்கனும், நீங்க அவர் மேஜிக்கில ஆடுறானு நினைச்சுட்டிங்களோ, மூவ் எல்லாம் சொல்வதை நான் சொன்னப்போல ஸ்கோர் வடிவில் நியாபகம் வச்சிருப்பார்.
ஸ்கோர் எழுத தெரியும், நல்லா வாய்ப்பாடு போல நியாபகம் வச்சுக்க முடியும்னா, காயின்ஸ் வைக்காம ஆடலாம்,அதான் பிளைன்ட் ஃபோல்ட்" செஸ்."
நீங்க முதுகை திருப்பிக்கலாம், இல்லா வேற ரூம்ல இருந்து போன் செய்துக்கூட ஆடலாம்..
இப்போ நெட்லாம் வந்தப்பிறகு இணையத்தில ஆடுறாங்க,அதெல்லாம் வரும் முன்னரே "அமெச்சூர் ஹேம் ரேடியோல " ஒரு நாட்டுல இருந்து இன்னொரு நாட்டுல இருக்கவங்க கூட மூவ் சொல்லி ஆடுறவங்களை கூட பார்த்திருக்கேன்,ஆனால் போர்டு வச்சு காயின் செட் செய்து ஆடிப்பாங்க. நெட் இல்லாத இடத்தில எஸ்.எம்.எஸ் மூலம் ஆடுறவங்களும் இருக்காங்க அவ்வ்!
# // முதல் மூவிலிருந்தே யோசிக்க மாட்டார்களா? பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது....//
நீங்க ஏதோ செஸ் பழகியதா சொன்னிங்க ,ஆனால் எல்லாத்தையும் என்னனு கேட்டுக்கிட்டு இருக்கிங்களே அவ்வ்.
மாப்பிள்ளை வினாயகர் சோடா கம்பெனிக்கு போயிருந்தாலே நல்லா பழகி இருக்கலாமே.
எதிராக ஆடுறவங்க , ஆடுன கேம் ,அதுல தோத்தது,ஜெயித்தது எல்லாம் அத்துப்படியா மனப்பாடமா வருவாங்க, ஆரம்பத்துல யோசிக்கிறது , எந்த ஒப்பனிங் சூஸ் செய்றதுனும், பதிலுக்கு எந்த டிபென்ஸ் சூஸ் செய்யனும் தான் ,மத்தப்படி ..மூவ் எல்லாம் 1 இல்- ஆரம்பிச்சு என்ட் கார்டு வரைக்கும் பிரிப்பேர்டு ஆ வருவாங்க, எனவே நடுவில ... கொஞ்சம் வைல்ட்ஆகா, அவுட் ஆஃப் தி சிலபஸ் ஆக ஆடினாத்தான் ரிசல்ட் வரும்.
ஆனந்துக்கு வயசாச்சி என்பதால் நியாபக சக்தி கம்மியாகி இருக்கும்,இளைஞரான கார்ல்சன் ஆனந்தோட அத்தினி கேமையும் கரைச்சு குடிச்சிட்டு வந்திருப்பார் ,அதான் போட்டு தாக்கிட்டார். நியாபக சக்தி அதிகம் இருக்கவங்க வெற்றிப்பெற அதிகம் வாய்ப்புள்ள கேம் இது, சிந்திச்சு ஆடுறது என்பது ... எல்லாம் கப்சா, அப்படி சிந்திச்சு ஆடுனதுலாம் கடந்த காலத்தில்... ஒவ்வொரு மூவ்கும் பதில் மூவ் என்னனு மனப்பாடம் செய்ததில் இருந்து பழைய "ஹிஸ்டரிய ரீகால்" செய்து தான் ஆடுவாங்க!
# என்சைக்கிளோ பீடியா ஆஃப் செஸ் ஓப்பனிங்ஸ்னு ஒரு புக் இருக்கு ,நெட்ல கள்ளத்தனமான பிடிஎஃப் கூட கிடைக்குது , டவுன் லோட் செய்து முயற்சித்து பார்க்கவும்!
பால பாடமா அதுல இருக்க கேம் எல்லாம் டப்பா அடிச்சா தான் அடுத்தக்கட்டத்துகே போக முடியும் அவ்வ்!
//நியாபக சக்தி அதிகம் இருக்கவங்க வெற்றிப்பெற அதிகம் வாய்ப்புள்ள கேம் இது, //
நிச்சயமா தெரியுது நான் தொட்டதே தப்புத்தான் என்று. நமக்கு அம்புட்டு ஞாபக சக்தி!
//நீங்க ஏதோ செஸ் பழகியதா சொன்னிங்க ,//
பழகுனோம் அப்டின்னு தான சொன்னோம். ஏதோ வெட்டி, குத்தி கொஞ்சம் விளையாடினோம்.
//மாப்பிள்ளை வினாயகர் சோடா கம்பெனிக்கு போயிருந்தாலே நல்லா பழகி இருக்கலாமே.//
கொஞ்சம் வெளிய நின்னு வேடிக்கை பார்த்திருக்கேன். அம்புட்டு தான்
உங்கள் நண்பரை ஜெயலலிதா அவர்களுடன் விளையாடஸ் சொல்லுங்கள் உங்கள் நண்பர் தோத்துதான் போவார். ஜெயலலிதா அவர்கள் செஸ் காய்களுக்கு பதிலாக அமைச்சரை வைத்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்
Post a Comment