***
ஏழு பதிவுகள்:
***
யூதாஸும் ஞான மரபும்
Marvin Meyer
ஐரினியஸ், யூதாஸின் நற்செய்தி காயினைட் குழுவினரால் எழுதப்பட்டது என்கிறார்.
பழமைக் கிறித்துவத்திற்கு எதிரான இந்தக் குழுவின் நான்கு பேரை ஐரினியஸ் நற்செய்திகளில் காணும் குணக்கேடானவர்களாகச் சொல்கிறார். அந்த நால்வர்: காயின் (Cain), ஈசாவ் (Esau), கோரா (Korah), சோதோம் மக்கள் (the people of Sodom). ஒருவேளை காயினைட் என்ற பெயர் கிறித்துவ எதிரிகளோடு போட்டி போட்டுக் கொண்டிருந்த ஐரினியஸ் போன்றோர் வைத்த பெயராக இருக்கலாம். (137)
நாக் ஹமீதியில் கண்டெடுக்கப்பட்ட சில நூல்களில் – Secret Book of John, the Nature of Rulers, Holy Book of the Great Invisible spirit (the Egyptian Gospel) – காயினைப் பெருமைப் படுத்தும் பகுதிகள் உண்டு.
Holy Book சோதோமின் மக்களை புரட்சிக்காரர்கள் என்று பேசுகிறது.
தங்களை ஞான மரபு என்றழைத்துக் கொண்டவர்கள் தங்களுக்கு உலக ஞானத்தை விட கடவுளைப் பற்றிய ஞானமும், mystical ஞானமும் மிகுந்தவர்களாகவும் கடவுளோடு ஒட்டிய உறவும் கொண்டிருந்ததாகக் கருதினர். யூதாஸின் நற்செய்தியில் ஞானம் – gnosis- என்ற சொல் இரு முறை பயன்படுத்தப் பட்டுள்ளது. (50,54)
நாக் ஹமீதில் உள்ள Secret Book of John என்ற நூல் சேத்திய ஞானமரபு -Sethian Gnostic – சார்ந்த நூல். யூதாஸின் நற்செய்தியும் இதைப் போலவே சேத்தியன் வகையோடு சேர்ந்துள்ளது. (139)
’ என்றும் அழிய முடியாத ராஜ்ஜியமான பார்பெலோ’ என்பது சேத்தியன் ஞான மரபில் வழக்கமாக வரும் சொற்றொடர்.
பார்பெலோ என்ற சொல்லின் ஆரம்பம் எது என்று தெரியவில்லை. ஒருவேளை ‘கடவுள்’ என்ற பொருள் தரும் நாலெழுத்து சொல் ‘YHWH’ அல்லது யெஹோவா (Yahweh) அல்லது ஆங்கிலத்தில் Jehovah என்பதிலிருந்து வந்திருக்கலாம். ஹீப்ரு மொழியில் ‘சொல்லில் அடங்கா கடவுள்’ என்று இதற்குப் பொருள் கொள்ள முடியும். (140)
சேத்தியன் மரபுப் படி பல சமயங்களில் தெய்வீகத்தைத் தங்களுக்குள் கொண்டிருக்கும் மனிதர்கள் இந்த உலகைப் படைத்த சிறு கடவுள்களை விடவும் மேலானவர்கள். (142)
யூதாஸின் நற்செய்தி சேத்தியன் கிறித்துவ மரபுகளை உள்ளடக்கியதாக உள்ளது. யூதாஸின் நற்செய்தியில் கடவுள் என்று வரும் சொல் எல்லாமே உலகத்தைப் படைக்கும் சிறு கடவுள்களையே குறிக்கிறது.(143)
இந்தக் கடவுள்களைத் தாண்டியவர் ‘பெரிய கடவுள்’ – Great One – என்றும் குறிப்பிடுகிறது. இதே மரபு Secret Book of John என்ற நூலிலும் காணப்படுகிறது. ’Great One’ என்ற ‘பெரிய கடவுள்’ காண முடியாத ஆன்மா.(Nag Hammadi Codes 11: 2-3) (144)
சேத்தியன் மரபின் படி Autogenes என்பது பார்பெலோவிலிருந்து தோன்றியது. ஆனால் இத்தோன்றல் தனித்திருக்கும் ஆற்றலுடையது. Autogenes என்பது auto-generated என்பது யூதாஸின் நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. (146)
வேறு சில சேத்தியன் நூல்களில் இந்த Autogenes-ன் தோற்றம் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.
Secret Book of John –ல் ’Great One’விற்கும், பார்பெல்லோ என்ற தாய்க்கடவுளுக்கும் நடுவில் ஆன்மா இணைப்பால் பிறந்ததுவே Autogenes என்றும் சொல்லப்படுகிறது.
யூதாஸின் நற்செய்தியில் நான்கு ‘ஒளிப் பிரவாகிகள்’ – luminaries – Autogenesக்குக் கீழே பணி புரிகிறார்கள். இவர்களுக்குத் தனித் தனிப் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. (147)
இக்கட்டுரை மேலும் பல சேத்தியன் கோட்பாடுகளை விளக்குகிறது. இதில் உள்ள நான்கு ஒளிப் பிரவாகிகளின் பெயரைக் கொடுக்கிறது.
கடவுளின் கட்டளையை மீறும் ஆதாம், ஏவாள், சோபியா – இவைகளின் கதைகள் கொடுக்கப்படுகிறது.
இவ்வுலகின் படைப்பாளிகளான Nebro, Yaldabaoth, Saklas … அவர்களின் பண்புகள் ... உலகை ஆளும் பன்னிருவர்களும் அவர்களுக்கு உதவியான வான தூதர்களும் ... மனிதனும் உலகமும் படைக்கப்படுதல் ... இதுபோன்ற பலவகையான கோட்பாடுகளும், Nag Hammidi-ல் உள்ள பல்வேறு நூல்களில் சொல்லப்பட்டவைகளும் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளன.
யூதாஸின் நற்செய்தியில் சேத் ஒரு நல்ல ஆட்சியாளரென்று சொல்லப்படுகின்றது. அவரது வழியினரோ பெரும் பரம்பரையினர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
நற்செய்திகளின் வழியே பார்க்கும் போது ‘முதல் குடும்பத்தினர்’ ஒப்பேறாத ஆட்களாக (the first family is highly dysfunctional !!!) இருப்பது போல் தோன்றுகிறது. பெற்றோர்களுக்கும் கடவுளுக்கும் நடுவில் சண்டை; ஏதனை விட்டுத் துரத்தப் படுகிறார்கள்; காயில்-ஏபேல் நடுவில் சண்டை; அடுத்து ஒரு மகன்; ஆதாமைப் போன்றவன் இந்த மகன். (157)
சேத் ஆதாமின் ‘அடுத்த ஒரு விதையாக’ இருப்பதால் allogene என்ற பெயர் அவருக்களிக்கப்படுகிறது. (158)
யூதாஸ் நற்செய்தியில் ஏசு ஒரு ஆசிரியராகவும், வெளிப்படுத்துபவராகவும் தெரிகிறார். தெய்வீகத்திலிருந்து வந்து மீண்டும் தெய்வீகத்திற்குள் செல்லப் போகிறார். அவர் யூதாஸிற்குப் போதனை செய்கிறார். யூதாஸோடு சேர்த்து சேத்தின் வழித்தோன்றல்களுக்கும் போதனை தருகிறார்.
ஏனைய சேத்தியன் நூல்களிலும் ஏசு இதே போன்று போதனை செய்கிறார். தன்னை பார்பெல்லோ, ஆட்டோஜீன்கள் என்ற சுயம்பிகள், சேத் என்று அனைவருக்கும் இந்தப் போதனை அளிக்கிறார்.
Secret Book of John என்ற நூலில் கிறிஸ்து சுய விளம்பிகளோடு அடையாளப்படுத்தப் படுகிறார்.
இதில் மேலும் ஏசு பார்பெல்லோவின் மகனாகக் காண்பிக்கப்படுகிறார்.
Holy Book of the Great invisible spirit-ல் சேத் ஏசு சேத்தின் அவதாரமாக இருக்கிறார்.
Book of Allogenes-ல் ஏசு சேத்தின் இன்னொரு பக்கமான அல்லோஜீன் என்ற புதிய மனிதராகக் காண்பிக்கப்படுகிறார். (168)
யூதாஸின் நற்செய்தியில் ஏசு பார்பெல்லோவோடு தொடர்பில் இருப்பதாகக் காண்பிக்கப் படுகிறார். (169)
****
முற்றும்
*
8 comments:
தருமிய்யா,
சீக்கிரமா எல்லாத்தொடர்ச்சியும் வெளியிட்டமைக்கு நன்றி!
ஏன் எனில் எங்கே ஆரம்பிப்பது என குழப்பம், நான் ஒன்னு சொல்ல அடுத்து வருது சொல்ல , குழப்பிடும்னு தான் முழுசா படிச்சுட்டு பேசலாம்னு இருந்தேன்.
# கிருத்துவ மத வரலாறு என்பதை விட பலவும் தொன்மங்கள் என சொல்வதே சரியாக இருக்கும்.
ஆப்ரிக்க தேசத்தில் ,எத்தியோப்பியா, எகிப்தில் கூட கிருத்துவ தொன்மங்கள் இருக்கு.
கிருத்து ஒரு கருப்பினத்தவர் ,எத்தியோப்பியாவை சேர்ந்தவர்னு ஒரு விவாதமும் நடக்குது.
கூடவே கிரேக்க தாக்கமும் உண்டு.
// பார்பெலோ என்ற சொல்லின் ஆரம்பம் எது என்று தெரியவில்லை. ஒருவேளை ‘கடவுள்’ என்ற பொருள் தரும் நாலெழுத்து சொல் ‘YHWH’ அல்லது யெஹோவா (Yahweh) அல்லது ஆங்கிலத்தில் Jehovah என்பதிலிருந்து வந்திருக்கலாம். ஹீப்ரு மொழியில் ‘சொல்லில் அடங்கா கடவுள்’ என்று இதற்குப் பொருள் கொள்ள முடியும்.//
பார்பெலோ என்பது கிரேக்க ஆதித்தாய் என்பதில் இருந்து உருவாகியதாக படித்த நினைவு.
கடவுளையும்,மனிதர்களையும் பெற்றவர். அனைத்துக்கும் ஆதி மூலம்.
இந்து வேத தொன்மங்களிலும் அதிதி என்ற ஆதித்தாய் கான்செப்ட் இருக்கு.
அக்னிக்கும் அதிதிக்கும் பிறந்தவர்கள் தான் அனைத்து கடவுள்களும், புருஷாவில் இருந்து மற்ற எல்லாம். அதனால் தான் புருஷசூக்தம் என்கிறார்கள்.
# காப்டிக் ல இருந்து பல மூலங்கள் கிடைக்குது என உங்கள் தொடரிலும் சொல்லி இருப்பதில் இருந்து பார்த்தால் கூட கிருத்துவத்துக்கும் எகிப்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு தெரிய வரும்.
தொடரும்....
தொடர்ச்சி...
# எத்தியோப்பியாவில் உள்ள டானா என்ற மிகப்பெரிய ஏரி தான் நைல் நதியின் பிறப்பிடம், அந்த ஏரியில் பல சிறு தீவுகள் உள்ளன அவற்றில் பல கிருத்துவ மடாலயங்கள் உள்ளன, அவற்றில் மிகப்பழமையான கிருத்துவ நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன, அவற்றை பாதுகாக்க என , பிரம்மச்சாரி சாமியார்கள் இருக்காங்களாம், ஒரு முறை மடத்துக்குள்ள போயிட்டால் வெளியிலே வராமல் சாகும் வரை இருக்கணும் ,அவங்கப்பாதுகாப்பில் ஏசுவே எழுதின புனித நூல் முதல் மோசசின் களிமண் டேப்லட் வரைக்கும் பாதுகாப்பில் இருக்குனு பேச்சு உலாவுது.
சுமார் 4 ஆம்ம் நூற்றாண்டை சேர்ந்த படங்களுடன் கூடிய எத்தியோப்பிய பைபிளை சமீபத்தில் வெளியிட்டிருக்காங்க.
எனவே எத்தியோப்பிய கிருத்துவ மடங்களை ஆராய்ந்தால் யூதாசின் நூல் போல பல பழமையான நூல்கள் கிடைக்கலாம்.
# கிருத்துவ மதத்தின் வரலாற்றில் மர்மங்கள் உருவானதில் வாடிகன்/ரோமானியர்களின் பங்கு பெருமளவு.
ஏசுவின் 12 சீடர்களில் 7 பேர் யூதர்களே , மேலும் பன்னிரண்டு பேரில் 11 பேரைக்கொன்றது ரோமானிய ஆட்சியாளர்களே ஆனால் யூதர்கள் மேல் பெரும்பழி, ஏசுவை சிலுவையில் அறைந்ததும் ரோமானிய கவர்னர் பாண்டியஸ் பைலேட் தானே ,காட்டிக்கொடுத்தது யூத சதினு வரலாற்றில் அழுத்தம் வேறு இடத்தில் கொடுத்துவிட்டு ,ரோமானியர்கள் கிருத்துவத்தினை கைப்பற்றிவிட்டார்கள் எனலாம்.
ரோமன் கத்தோலிக் கிருத்துவம் என்றால் பொருள் கூட அப்படித்தான், கிருத்துவம் முழுவதும் ரோமானியர்கள் என வரும்.
அதனால் தான் வாடிகனுக்கு எதிராக்க பல பிரிவுகள் உருவாச்சு.ஆப்பிரிக்க ஆர்தோடாக்ஸ், ஜெர்மானிய லுத்ரன் சர்ச் லாம் ஆரம்பத்தில் இருந்தே வாடிகனுக்கு எதிரானவர்கள்.
யூதாசின் நற்செய்தியை முன்னெடுப்பதும் லுத்ரன் சர்ச் காரங்களா இருக்கணும், ஆய்வில் ஈடுப்பட்டிருப்பது எல்லாம் ஜெர்மானியர்கள்.
இதுக்கு அடிப்படை என்னனு பார்த்தால் ஏசு இருந்தக்காலத்திலே(இருந்தார் எனக்கொண்டு) 12 சீடர்களில் யூத சீடர்கள், யூதமல்லாதவர்கள் என ரெண்டுப்பிரிவு இருந்துச்சாம், செயிண்ட் பால், தாமஸ் எல்லாம் தனி அணி, செயிண்ட் பீட்டர் தலைமையில் யூத சீடர்கள் தனி அணி.
செயிண்ட் பீட்டர் தலைமையில் யூத சீடர்கள் கோஷர் உணவை சாப்பிட்டு தனியா தூங்குவாங்களாம், ஏசுவின் மறைவுக்கு பின்னர் பாப்டிசம் செய்யும் போது யூத சடங்குகளை செயிண்ட் பீட்டர் பிரச்சாரம் செய்ததால் ,செயிண்ட் பால் போர்க்கொடி தூக்கினார்னுலாம் இருக்கு.
அதனால் பீட்டர் பேரால் உருவான வாட்டிகன் மற்ற சீடர்களால் பரப்பட்ட ,உருவான சர்ச்சுகளை அழிக்க ரகசியப்பிளான் எல்லாம் போட்டிருக்கு,எனவே யூதாசின் நற்செய்தினு ஒன்னு இருந்திருந்தால் அழிக்க தான் முயன்று இருப்பார்கள், அதனால் அக்காலத்தில் எல்லாமே மர்மமாகத்தான் நடந்திருக்கணும்.
# வரலாற்றின் மிக சமிபக்காலம் என 15 ஆம் நூற்றாண்டில் கூட ர்ரொமன் கத்தோலிக்கத்தினர் மற்ற கிருத்துவப்பிரிவை அழிக்க முயன்றதுக்கு இந்தியாவிலேயே சான்று உள்ளது.
இந்தியாவுக்கு வழிக்கண்டுப்பிடிக்கிறேன்னு வந்த வாஸ்கோட காமா ,கொச்சின் வந்ததும் செய்த முதல் காரியம் , தோமாக்கிருத்துவர்களின் சர்ச்சுக்கு நெருப்பு வச்சு கொளுத்தி ,அவர்களின் பைபிளை எரிச்சு ,கன்னியாஸ்திரிகளை கற்பழிச்சுட்டாராம், அப்போ தான் இறைப்பணி செய்யமாட்டாங்களாம் அவ்வ்!
இதனால் அப்போதைய ஸமோரின் கிங்க் ,வாஸ்கோடகாமாவை நாடுக்கடத்த உத்தரவுப்போட்டு , போர்ச்சுக்கீசியருக்கும், ஸமோரின் ராஜாவுக்கும் சண்டை நடந்துள்ளது.
# இதெல்லாம் எதுக்கு சொல்கிறேன் என்றால் யூதாசின் நற்செய்தி என ஒன்று இருந்துச்சோ இல்லையோ அப்ப ஒரு மாற்று நூலை செயிண்ட் பீட்டருக்கு எதிரானவர்களின் அணி கண்டிப்பாக முன்னெடுத்து சென்று இருக்கணும், அப்படியான ஒன்று தான் இப்ப கண்டெடுக்கப்பட்டிருக்கலாம்,அதனால் தான் யூதாசின் காலத்துக்கு ஒத்து வராமல் போயிருக்கலாம்.
# செயிண்ட் பீட்டர் இம்புட்டு வேலை செய்திருந்தாலும் ,ரோமானிய சக்ரவர்த்தி நீரோ தலைகீழாக பீட்டரை சிலுவையில் அறைந்து கொன்றார் ,ஆனால் அதே செயிண்ட் பீட்டரை தான் கிருத்துவத்தின் அடிநாதமாக வச்சு காண்ஸ்டன்டைன் ,ரோமன் கத்தோலிக்கத்தை உருவாக்கினார் அவ்வ்!
உங்க பின்னூட்டங்களைப் படித்தால் “அவ்வு”ன்னு தான் சொல்லத் தோன்றுகிறது; மிக பிரமிப்பாக உள்ளது உங்கள் வாசிப்பின் அகலம் மட்டுமல்ல ... அதை நினைவுக்குக் கொண்டு வந்து இங்கே அடுக்கடுக்காக அடுக்கிக் காண்பிக்கிறீர்களே!
கட்டாயம் சில பகுதிகளுக்குரிய தொடுப்பு கொடுங்கள்.
1. எத்தியோப்பிய ஏரியின் நடுவில் உள்ள அந்தக் குருமடங்களை நடத்தி, கண்காணித்து வருபவர்கள் யார் ..யார்? எந்தக் குழுவினர்? ஏன் இந்தப் பாதுகாப்பு? ஏன் எதுவும் என்னைப் போன்றவர்களுக்கு இவையெல்லாம் தெரியாமல் போகிறது?
2.//# கிருத்துவ மதத்தின் வரலாற்றில் மர்மங்கள் உருவானதில் வாடிகன்/ரோமானியர்களின் பங்கு ..//
முதலில் ரோமானியர்கள் எதிரிகளாக இருந்து. பின் மதத்தைக் கைக்கொண்டு விட்டார்களா?
3. வாஸ்கோட காமாவின் ‘அழிச்சாட்டியம்’ ??
4. //ஆய்வில் ஈடுப்பட்டிருப்பது எல்லாம் ஜெர்மானியர்கள்.//
சானா குரான் பற்றி கூட ஜெர்மானியர்கள் தான் முனைப்பெடுத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு கால கட்டத்தில் மெளனமாகி விட்டார்களே; ஏன்?
இவைகளுக்கான தொடர்பு தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
என் எண் & முகவரி: 99521 16112 / dharumi2@gmail.com
கட்டாயம் ஒரு முறை பேசுங்கள். அல்லது மயிலுங்கள்.
தருமிய்யா,
நன்றி!
உண்மையில் இதெல்லாம் உங்க பதிவ படிச்சதால மீண்டும் மனசுல கிளறிவிட்டுச்சு , அவ்வப்போது சிறிதாக சிறிதாக படிச்சு வச்சது இப்போ தோராயமாகவே சொல்லி இருக்கேன் ஹி...ஹி!
ஏற்கனவே நாம ஆர்வமா படிக்கிற ஏரியாவா பார்த்து நீங்க பதிவு போட்டதும் வசதியா போயிடுச்சு அவ்ளவு தான்.
# முடிந்த வரையில் தொடுப்புகள் தேடி எடுத்து கொடுக்கப்பார்க்கிறேன் , ஏன் எனில் எல்லாம் எப்பவோ படிச்சது , பல பிடிஎஃப் நூல்கள், மேலும் நான் புக்மார்க் செய்து வைத்து இருந்தாலும் எல்லாம் குப்பைக்கூடையில இருக்காப்போல இருக்கும் அவ்வ்!
# எத்தியோப்பிய கிருத்துவ அணி ஒரு தனி அணி, செயிண்ட் பீட்டர் போல ஒரு ஏசுவின் தூதர் ,பேரு மறந்துடுச்சு, அவர் உருவாக்கிய சர்ச் படி செயல்படுது, இன்னும் சொல்லப்போனால் அவருக்கு புனிதர் பட்டமே இல்லைனு வாட்டிகன் இப்ப கூட மறுக்குதாம், அவர் ஏசுவின் தூதரே அல்லனும் சொல்லுறாங்க !
எத்தியோப்பிய அணி கணக்கின் படி ஏசுவுக்கு 72 சீடர்கள், இந்த 12 -13 சீடர் எண்ணிக்கை எல்லாம் ரோமானிய கிருத்துவ அணி உருவாக்கினது!!!
இண்டெர்நெட் ஆர்கைவ்ஸ்ல கூட இலவசமாக புக்கு இருக்குங்கய்யா, அந்த புக்கு பேரு தேடிப்பார்த்து சொல்லுறேன்.
யூதர்கள் கருப்பின கலப்பில் உருவானவர்கள் என ஒரு கூற்று , அதனால் தான் ஹிட்லர் கூட பியூர் பிளட் என தன்னை சொல்லிக்கொண்டு யூத வெறுப்பினை ,ஏசுவைக்கொன்றவர்கள் என சும்மாச்சுக்கும் ஒரு காரணம் சொல்லி காட்டினார் என்கிறார்கள்.
இதுக்கு கிருத்துவ தொன்மங்களின் படியே சான்று காட்ட முடியும், மோசஸ் ,எகிப்தியர்களீடம் அடிமையாக இருந்த யூதர்களையே மீட்டு ,யூத இனத்தினை உருவாக்கினார் , எனவே கருப்பின கலப்பில் தோன்றிய வம்சாவழியினராக யூதர்கள் இருக்க வாய்ப்புள்ளது.
#//முதலில் ரோமானியர்கள் எதிரிகளாக இருந்து. பின் மதத்தைக் கைக்கொண்டு விட்டார்களா?//
அதே தான் , ஒன்று அழிச்சிடனும் இல்லைனா அணைச்சிடனும் என்ற ராஜதந்திரத்தின் படி யூதர்களிடம் இருந்து கிருத்துவத்தை கைப்பற்றி ரோமானிய மயமாக்கிட்டாங்க!
//. வாஸ்கோட காமாவின் ‘அழிச்சாட்டியம்’ ??//
வாஸ்கோட காமா "ஆர்மி கிரைஸ்ட்" என்ற அமைப்பின் தீவிர உறுப்பினர், அவரது கடல்வழிப்பயணத்தின் முக்கிய நோக்கமே கிருத்துவத்தை பரப்புவது தான்.
இதுக்கும் ஒரு புக்கு இருக்கு ,தமிழில் கூட "கொடுங்கோலனா வாஸ்கோடகாமா? என்பது போல தலைப்பில் மொழிப்பெயர்த்து போட்டாங்க.
# http://www.rediff.com/news/jun/09gama.htm
# http://en.wikipedia.org/wiki/Vasco_da_Gama
# http://www.nasranifoundation.org/articles/ikkako.html
//Many “New Christians” who had fled the Inquisition in Portugal also became its victims in India. Hundreds were burned at the stake in the cathedral square, and thousands sought refuge in Muslim territory. Finally, the inquisitors turned on the St. Thomas Christians who had been so eager to give their allegiance to Vasco da Gama and his nation. In 1599, on the grounds that they practiced a heretical form of Eastern Christianity, they were converted en masse to Catholicism. Their books were burned, their ancient liturgical language was banned, and their priests were imprisoned and targeted by assassins. As the dungeons and torture chambers filled up, the inquisitors awarded themselves their victims’ property and connived with the colonial government to terrorize them into submitting to Portuguese control.”
— Nigel Cliff, Holy War//
https://www.smalldemons.com/persons/explorers/Vasco_da_Gama/see_all/Mentioned_In__75__Books
இவற்றிலேயே வாஸ்கோட காமாவின் அழிச்சாட்டியங்களை சுட்டி காட்டியிருக்கிறார்கள்.
இந்தியாவுக்கு வந்து 500 ஆண்டு ஆனதை ஒட்டி ,வாஸ்கோட காமாவினை புனிதர் ஆக்க சிலர் முயற்சித்து ,அதற்கு வாட்டிகனும் ஒப்புதல் கொடுக்க முற்பட்ட போது தான் இதனை பிரச்சினையாக்கியதாக செய்திகள் முன்னர் படிச்சிருக்கேன், இந்தியாவிலும் 500 ஆம் ஆண்டு கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தான் தெரிவிச்சாங்க.
தொடர்ச்சி...
தொடர்ச்சி...
# தோமா கிருத்துவர்கள்,இந்துக்கள்,முஸ்லீம்கள் என அனைவரையும் மதம் மாற்ற வன்முறையை பயன்ப்படுத்தி இருக்கார்,ஆண்களைக்கொன்று விட்டு பெண்களை மனைவியாக்குதல் அதில் முக்கியமானது அவ்வ்!
# பழைய ஜெர்மானி, ஸ்கான்டிநேவியப்பகுதி இது தான் ஒட்டு மொத்த ஐரோப்பிய இனக்குழுவுக்குமே "தாய்மடி" ஆனால் யூதர்கள்,ரோமானியர்கள் அதுல இருந்து வேறுபட்டு "இன உருவாக்க" வரலாற்றை சொல்லிக்கொள்வதால் ,ஜெர்மானியர்களூக்கு எப்பவுமே ஆகாது!
அப்பப்ப எதுனா ஆராய்வதும் ,அப்புறம் அப்படியே கிடப்பில் போடுவதும் நடந்துக்கிட்டே தான் இருக்கு.
என்னோட அவதானிப்பு என்னவெனில் எந்த இனக்குழு ஆதிமூலம்னு தெரிஞ்சிக்க ஜெர்மானியர்கள் எப்பவுமே ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது தான் ,இதன் விளைவே மார்க்ஸ் முல்லர் ,ஃபுல்லர்னு இந்திய வேத ஆராய்ச்சில இறங்குனது!
# தொடர்பு கொள்ள முயல்கிறேன், அலைப்பேசி எண்ணை பொதுவில போட்டுட்டுங்களே , மிஸ்டு கால்,ராங்க் தொல்லை வரப்போகுது!
தருமி சார்,
ஏசு இறந்தபின் (உயிர்த்தெழுந்த பிறகு மத நம்பிக்கையின் படி) முதல் நூற்றாண்டு முதல் அவரைப் பற்றிய பல கதைகள் புனைவுகள் இப்போதைய மத்திய ஆசியா பகுதியில் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. அதில் ஒன்று இந்த யூதாசின் நற்செய்தியாக இருக்கலாம். பலதரப்பட்ட கதைகள் அவரை வேறு வேறு வடிவங்களில் நமக்குக் காட்டுகிறது. கடவுளாக,கடவுளின் மகனாக,வெறும் ஒளித்தோற்றமாக, அரூபமாக, வெறும் மனித தோற்றமாக என பல அடுக்குகளில் ஏசுவை பற்றிய கதைகள் விரிகின்றன. இவ்வாறு ஏகத்துக்கும் விதம் விதமாக ஏசுவை அறிவித்தால் ஏற்படும் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவரவே Nicaea சபையில் கான்ஸ்டன்டைன் தலைமையில் ஒரு குழு கூடி பல "போலி விவிலியங்களை" தடை செய்தது. இதில் Arius என்பவரின் கருத்துக்கும் தடா போடப்பட்டது. இவ்வாறு அணை போடப்பட்ட கிருஸ்துவ கருத்துக்கள் வேறு மாதிரியான மதத்தை உள்ளடக்கி இருக்கலாம்.
உண்மையில் பவுல் கிருஸ்துவத்தின் இரண்டாவது தோற்றுவித்தவாரக அடையாளப்படுத்தப்படுகிறார். பீட்டர் மற்றும் பவுல் இருவரும் சந்தித்துக்கொண்ட சந்தர்ப்பங்கள் வெகு சிலவே.வவ்வால் கூறியது படி இரண்டு சபைகளுக்கும் கருத்து முரண் இருந்திருக்கலாம். ஐம்பதுகளில் the dead sea scrolls என்ற புதிய சர்ச்சை கிளம்பியது. இன்னும் வெளிவராத பல புத்தகங்கள் இருக்க வாய்ப்பிருப்பதாகவே படுகிறது. ஆனால் வாடிகன் சபை (ரோமன் கத்தோலிக்க சபை) அதிகார பண பலத்தில் ஏகத்தும் உப்பி இருப்பதால் தனகெதிரான எல்லா ஆதாரங்களையும் அழிப்பதில் வெகுவாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. விவிலியத்தின் திருவெளிப்பாடு புத்தகத்தில் ஏழு தலை மிருகம் என்ற குறிப்பு இந்த சபையை குறிப்பதாக கூட சொல்லப்படுவதுண்டு. அந்த மிருகத்தின் மேல் அமர்ந்திருக்கும் ஸ்திரீ கத்தோலிக்க சபை என்று கூறுகிறார்கள் சிலர். மிக நல்ல பதிவுகள் எழுதியது குறித்து பாராட்டுக்கள்.
Post a Comment