Saturday, March 08, 2014

721. இந்து மதம் எங்கே போகிறது? --- 1




*

***



***



இந்து மதம் எங்கே போகிறது?

அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

அந்தக் கால ஆப்ஹானிஸ்தான். மக்கள் பல பயங்களினூடே சுற்றும் பார்த்தார்கள்; அவர்களின் சிந்தனைக்குள்ளும் சூரியன் உதித்தது.  இதன் விளைவு – தெய்வம் கண்டுபிடிக்கப்பட்டது. வெளிச்சம் தான் தெய்வம் என்றான் உற்றுப் பார்த்தவன். இங்கிருந்த
ஆரியர்களில் ஒரு பகுதிதான் ஐரோப்பாவுக்கு நகர்ந்தது. 

இயற்கை தான் கடவுள்.
உற்றுப் பார்த்தவன் பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுக்கு ‘ரிஷி’ என பெயர். ரிஷி என்றால் பார்ப்பான் ... பார்ப்பான் .. பார்த்துக் கொண்டே இருப்பான் என்று பொருள்.
நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என கண்டுபிடித்தவர்கள் அடுத்ததாய் ... அதற்கு நாம் கட்டுப்பட்டு வாழ்வதெப்படி என்பதையும் வகுத்தார்கள். உண்டாயிற்று வேதம்.(16)

வேதம் ஒரு கட்டுப்பாடு மிக்க கலாச்சாரத்தைக் கொண்டு வந்தது. ஆரிய இனத்தவர்கள் என்று வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும் இம்மனிதர்களிடையே இப்படித்தான் வேதம் பிறந்தது. 

இந்த நல்லெண்ண சிந்தனை வளர்ந்து மெருகேறியது தான் சமூக அமைப்பு; கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்ற ஒரு கட்டுமானம் வேண்டும். அது ஆளப்பட வேண்டும். வேதம் சொன்ன நெறிமுறைகளை வைத்து வாழக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.(17)


ஆள்பவனையும் ஆளப்படுபவனையும் வேதம் சொல்லும் நெறிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து அவர்கள் தடம் பிறழாமல் காப்பதற்காக இரு பிரிவு.
ஆள்பவன் ஷத்திரியன் ஆனான். உழைப்பவன் வைசியன் ஆனான். வேதத்தைக் கற்று நீதி நெறிப்படுத்தியவன் பிராமணன் ஆனான். 
ஷத்திரியனும் வைசியனும் வியர்வை சிந்தி உழைக்கப் போய் விட்டார்கள். வேதம் பிராமணர்கள் கைக்குப் போனது. ... வேதம் அவர்கள் கைக்குப் போனதும் வேத மதம் பிராமண மதமாயிற்று.
இதெல்லாம் முழுக்க முழுக்க ஆப்ஹானிஸ்தானில் நடந்த்தாகத்தான் வேத காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன. 
ஆரிய மதம் வேத மதமாகி, வேத மதம் பிராமண மதமாகி கால வெள்ளத்தில்  அவர்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்க  .. அப்போது இங்கு 450 மதங்கள் இருந்தனவாம். இவைகளில் எது இந்து மதம்?(18)




இந்தியாவில் இருந்த 450 மதங்களில்
எது இந்து மதம்?
படிப்படியாக பார்ப்போம்

அன்று ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். ஆப்ஹானிஸ்தானை விட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது கூட வந்த பெண்கள் கம்மி. ஆனால் மநு ஸ்மிருதியைக் கையோடு கொண்டு வந்தனர். (19)

பிராமணன், ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை மநு பிளவாக்கியது. 
‘சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே; தர்மோபதேசம் பண்ணாதே; சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு.(20)

வைதீகக் கட்டுப்பாடுகள் சர்வாதிகரமாக விதிக்கப்பட்டன. ‘கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறார். இதுபடி கேள்; இல்லையேல் நீ பாபியாவாய்...’ என மந்த்ரங்களால் மிரட்டப்பட்டனர் மக்கள். (21)
இப்படிப்பட்ட ஒரு ‘சாஸ்திர ஏகாதியப்பத்திய’ சூழ்நிலையில் தான் இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு குரல் புறப்பட்டது. 
’வேதத்தை  சாதத்திற்குப் பயன்படுத்தாதீர்கள்; பேதம் வளர்க்காதீர்கள். கொடுமை தான் உங்கள் கொள்கையென்றால் வேதம் வேண்டாம்; மநு வேண்டாம்; கடவுள் வேண்டாம்; கர்மாக்கள் வேண்டாம்; மனித தர்மம் மட்டும்தான் வேண்டும்.’ – என இந்தச் சூழ்நிலையில் மிக மிக மிக வித்தியாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.(22)

பிராமணர்கள் நெருப்பு வளர்த்து பல யாகங்கள் செய்தார்கள். மக்கள் பேசியது ப்ராகிருத மொழி. ஆனால் இவர்கள் அவர்களுக்குப் புரியாத சமஸ்கிருத மொழியில் மந்தரம் செய்தார்கள்; புத்தர் இதைப் பார்த்தார்.

 அசுவத யாகம் ஒன்றினை பிராமணர்கள் செய்து வந்தார்கள். மிகவும் கேவலமான யாகம் அது. ராணியை கேவலப்படுத்தும் யாகம் அது. இது போதாதென்று, அடுத்த கட்டமாக, யாகத்தில் பங்கு கொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கி பிறகு அழைத்துச் செல் என்றார்கள். (24)
புத்தர் வேள்விச்சாலைக்கே சென்று ஒரு கேள்விப் பொறியைப் போட ... யாகத்தை விட பெரு நெருப்பாய் கிளம்பியது இந்த ஒரு நெருப்பு. (25)
’இந்த வைதீக கர்மாக்களை நம்பாதே; ஒருவனுக்கு  இழப்பும் ஒருவனுக்குப் பிழைப்பும் கொடுக்கும் மோசடி வித்தை இது.’ பிராகிருத மொழியில் பிளந்து கட்டியது புத்தர் குழாம். (26)
பிராமணர்களின் மிகபெரிய பலமே யாரிடம் எது நல்லதாக இருக்கிறதோ அதை தங்களுக்கு ஸ்வீகாரம் செய்து கொள்வது தான். புத்த இயக்கத்திடமிருந்து ஜீவகாருண்யத்தை மட்டுமா ஸ்வீகரித்தார்கள்.

மடங்களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந்து தான் பெற்றார்கள்.(26)
புத்த மதத்தினர் மெல்ல வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கு வந்தனர். பிராமணர்களும் பின் தொடர்ந்தனர். (27)

தீபவெளிச்சத்தில் பூக்களால் நடத்தப்பட்டது தான் தமிழனின் முதல் வழிபாடு. பூ + செய் = பூவால் செய். இது இணைந்து தான் பூசெய் .. பூசை என இப்போதைய வார்த்தையின் வடிவம் தோன்றியது. (28) இதனை திராவிட மொழியியல் ஆராய்ச்சியாளர் எஸ்.கே. சட்டர்ஜி தனது ஆராய்ச்சி நூலில் எடுத்துக் காட்டுகிறார். 
வழிபாடு மட்டுமல்ல பக்தியிலும் தமிழினம் தான் முன்னோடியாக இருந்திருக்கிறது. 
’நாயகன் - நாயகி பாவம்’ என்ற பக்தி வடிவத்தை உலகுக்குக் கொடுத்ததே தமிழ் இனம் தான். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் புத்தம் மற்றும் சமணக் கொள்கைகள் தமிழ்நாட்டில் பரவின. சமணக் கொள்கைகள் தெற்கே திருநெல்வேலி வரை பரவி விட்டது. நாகப்பட்டினம் வரை புத்தம் புகுந்து விட்டது. 
வட இந்தியாவில் புத்திசத்தால் எதிர்க்கப்பட்ட வேத பிராமணர்கள் நகர்ந்து நகர்ந்து தென்னிந்தியாவைத் தொடுகின்றனர். அவர்களில் ஒருவர் தான் மகேந்திர பல்லவ ராஜா என்றும் கருத இடமுள்ளது. 
பல்லவ ராஜாக்கள் வேதத்தை,  வேத நெறிமுறைகளை இங்கே விதைத்து வைத்தனர். புத்த போதனைகளால் எதிர்க்கப்பட்ட  வேத போதனைகள் இங்கே பிராமணர்களால் மறுபடியும் தலை தூக்கின. (30)



கடவுளுக்காக கைகூப்ப வைத்த பிராமணர்கள் படிப்படியாக தமிழர்களின் உரத்த வழிபாட்டிற்குள்ளும் ஊடுருவினார்கள். 

நாம் பேசுவதையே தெய்வத்திடம் பேசினால் அதற்குக் கேட்குமா?  நாங்கள் சில மந்திரங்கள் சொல்கிறோம்; அதை உச்சரித்தால் தான் உன் சிலைக்கு தெய்வ சக்தி வரும். (33) 

சமஸ்கிருந்த மந்திரங்களை அச்சிலை முன்னர் கூறத் தொடங்கினார்கள். புதிதாக இருக்கிறதே என்று கேட்க ஆரம்பித்த தமிழர்கள் இன்றுவரை கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.




32 comments:

Anonymous said...

நான் ஆரம்பகாலங்களில் மிகவும் விரும்பி வாசித்த நூல்களில் இதுவும் ஒன்று. உண்மையாகவே இந்து மதத்தை பாமரனும் புரியும் வண்ணம் பகுத்தறிவோடு தாத்தாச்சாரியார் எழுதி உள்ளார். இந்து வெறி பேசும் அரைவேற்காடுகள் முதலில் இப்புத்தகத்தை வாசிக்க வேண்டும்.. அனைவரும் வாசிக்க வேண்டும்.

Paramasivam said...

புத்தகம் வாசிக்க ஆவலாய் உள்ளேன். பதிப்பகத்தார் பெயர் மற்றும் தொலைபேசி எண் தெரிந்தால், தெரிவித்தால், உதவியாக இருக்கும். பதிவிற்கு நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இது தொடராக நக்கீரனில் வந்த போதும் படித்தேன். புத்தகமாகவும் மீண்டும் படித்தேன்.
ஒரு இந்துவாக அடையாளப்படுத்தப்படுபவன் எனும் வகையில் எனக்கு இந்நூல் பல தெளிவுகளைத்
தந்தது. தாத்தாச்சாரியார் தொடர் எழுதும் போதும் மறுப்புரைகள் பெரிதாக எழவில்லை.
குறிப்பாக அக்காலத்தில் துக்ளக் சோவிடம் சிலர் இது பற்றிக் கேட்டதாக ஞாபகம். அவரும் மழுப்பிவிட்டார்.
தெய்வத்தில் குரலை மாய்ந்து மாய்ந்து படித்துப் பூரிக்கும் அனைவரும் இதையும் ஒரு தடவை படிக்கவேண்டும்.ஏதேதோ எல்லாம் அரசாங்கம் இலவசமாகக் கொடுக்கிறதே!
இப் புத்தகம் ஒன்று அனைத்து தமிழருக்கும் இலவசமாகக் கொடுக்கலாம்.
சங்கரமடத்தின் சுயநலம், அரசியல், இனப்பற்று அப்பட்டமாக எழுதியுள்ளார்.
சங்கரராமன் போல் இவரைப் போட்டுத் தள்ளாமல் எப்படி விட்டு வைத்தார்கள் என்பதே இன்றும் எனக்கு ஆச்சரியம்!

R.Puratchimani said...

ஆரியன் வந்தானாம் இவனை சூத்திரன் என்றானாம் இவன் அடிமையானானாம்....
இது ஏற்றுக்கொள்ளும்படியா உள்ளது?

@இக்பால் செல்வன்

இந்த புத்தகத்தில் அப்படி என்ன பகுத்தறிவை கண்டுவிட்டீர்கள். விளக்கினால் நானும் அறிந்துகொண்டு பிறருக்கும் அறிவிப்பேன்.

R.Puratchimani said...

ஐயா நீங்கள் தந்துள்ளது என்ன திருத்திய பதிப்பா?

http://thathachariyar.blogspot.in/2010/10/450.html#comment-form

இரண்டிற்கும் ஏன் இவ்வளவு வேறுபாடு?

பொய்யை எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள் என்று திருத்திவிட்டார்களோ? :)

R.Puratchimani said...

//ஆப்ஹானிஸ்தானை விட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது கூட வந்த பெண்கள் கம்மி. ஆனால் மநு ஸ்மிருதியைக் கையோடு கொண்டு வந்தனர். (19)//

//’......கொடுமை தான் உங்கள் கொள்கையென்றால் வேதம் வேண்டாம்; மநு வேண்டாம்; கடவுள் வேண்டாம்; கர்மாக்கள் வேண்டாம்; மனித தர்மம் மட்டும்தான் வேண்டும்.’ – என இந்தச் சூழ்நிலையில் மிக மிக மிக வித்தியாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.(22)//

புத்தர் வாழ்ந்தது கி.மு. நான்காம் ஐந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்கிறார்கள். மனுஸ்மிருதி வந்தது கி.மு இரண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்கிறார்கள்...

//A range of historical opinion generally dates composition of the text any time between 200 BCE and 200 CE.[4] //
http://en.wikipedia.org/wiki/Manusm%E1%B9%9Bti


கதை சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டாம்? இந்த குருட்டறிவாளர்கள் எப்பவுமே இப்படித்தானோ? :)

வவ்வால் said...

தருமிய்யா,

அடுத்து இந்து மதமா?

ஆனாலும் அரேபிய மதம் அளவுக்கு "இந்து மதத்துக்கு மார்க்கெட் வேல்யு" இல்லை போல ,கூட்டமே காணோம் அவ்வ்!

யூதாஸ் பத்திப்பதிவுப்போட்டதுக்கு நாம ரெண்டு பேரு தான் "ரகசிய பேச்சு வார்த்தை நடத்தினோம்" :-))

பரவாயில்லை இப்போ இக்பால் வந்திருக்கார் ,முத்தரப்பு பேச்சு வார்த்தையாக்கிடலாம்!!!

#//அந்தக் கால ஆப்ஹானிஸ்தான். மக்கள் பல பயங்களினூடே சுற்றும் பார்த்தார்கள்; அவர்களின் சிந்தனைக்குள்ளும் சூரியன் உதித்தது. இதன் விளைவு – தெய்வம் கண்டுபிடிக்கப்பட்டது. வெளிச்சம் தான் தெய்வம் என்றான் உற்றுப் பார்த்தவன். இங்கிருந்த
ஆரியர்களில் ஒரு பகுதிதான் ஐரோப்பாவுக்கு நகர்ந்தது. //

அக்னிஹோத்திரம் எதுக்கு குறிப்பாக ஆப்கானிஸ்தான் என்கிறார்?

ஒரு வேளை மறைமுகமாக ஆரியர்கள் இந்தியர்களே என்பதை நிருவப்பார்க்கிறார்ரா?

புராண வகையில் முதன் முதலில் இந்தியா நிலப்பரப்பின் அளவு,எல்லைகள்,மக்கள் பற்றிய விவரணங்களை மகாபாரதம் தான் குறிப்பிட்டுள்ளது.

மகாபார முன் சருக்கத்தில் "இந்தியாவை பற்றி பாரத வர்ஷா என்ற விவரனையில் சொல்லப்படும் போது ,ஆப்கான் இந்தியாவை சேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானின் அக்காலப்பெயர் காந்தாரம் , அதன் இளவரசி தான் திருதராஷ்டிரனின் மனைவி காந்தாரி.

# மேலையுலக "இந்தோலாஜிஸ்ட்"களின் ஆய்வுப்படி ஆரியர்கள், இரான் -இராக் ஆகியப்பிரதேசங்கலை சேர்ந்தவர்கள், அவர்கள் வந்தப்பாதையை ஆர்யவர்தா என்று குறிப்பிட்டு காட்டியும் உள்ளார்கள்.

ஆப்கானில் இருந்து ஆர்யர்கள் வந்தார்கள் என சொன்னால் ,அவர்களும் இந்தியாவின் பூர்வ குடிகளே,வந்தேறிகள் அல்லனு ஆகிடுமே.

#//வேதம் அவர்கள் கைக்குப் போனதும் வேத மதம் பிராமண மதமாயிற்று.
இதெல்லாம் முழுக்க முழுக்க ஆப்ஹானிஸ்தானில் நடந்த்தாகத்தான் வேத காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன. //

இரான் ,இராக் பகுதியில் (மெசபரோமியா) யூப்ரடீஸ்-டைகரிஸ் நதிக்கிடையே தான் வேதக்கலாச்சாரம் தோன்றியதாக சொல்லப்படும் ஆய்வு என்னாவது?

பண்டைய புராண நதி சரஸ்வதி என்பதே யூப்ரடீஸ் தான் என்கிறார்கள்.

காஸ்பியன் கடல் தான் காஷ்யபர் என்ற ரிஷியால் உருவானது என்கிறார்கள்.

இரானில் ராமாயண சித்திரங்கள் கூட கிடைத்துள்ளன.

#// அசுவத யாகம் ஒன்றினை பிராமணர்கள் செய்து வந்தார்கள். மிகவும் கேவலமான யாகம் அது. ராணியை கேவலப்படுத்தும் யாகம் அது. இது போதாதென்று, அடுத்த கட்டமாக, யாகத்தில் பங்கு கொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கி பிறகு அழைத்துச் செல் என்றார்கள். //

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய உபபாண்டவத்தில் விலாவாரியாக இதனை சொல்லி இருக்கார் அவ்வ்!

எஸ்.ரா இந்து மதத்தை கேவலப்படுத்திட்டார்னு அப்போ சிலர் பொங்கினார்கள்!

//பிராமணர்கள் நெருப்பு வளர்த்து பல யாகங்கள் செய்தார்கள். மக்கள் பேசியது ப்ராகிருத மொழி. ஆனால் இவர்கள் அவர்களுக்குப் புரியாத சமஸ்கிருத மொழியில் மந்தரம் செய்தார்கள்; //

பிராகிருத மொழி தான் சமஸ்கிருதம் முன்னரே இருந்தது என அசோகர் பற்றிய பதிவில் கூறினேன், கணேசன் என்பவர் கல்வெட்டு ஆராய்ச்சியா செய்தீர் என கிண்டல் தான் செய்தார் அவ்வ்!

அசோகர் காலத்தில் சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவேயில்லை.

பிரம்மியின் இருந்து தான் வடமொழி எல்லாம் உருவானது என்பதும், பிரம்மி ஆர்யர்கள் கொன்டு வந்தது என்பதுமே "கட்டுக்கதை".

பிரம்மி என்ற பெயரே , ஜியார்ஜ் ஃபூயுலர் வைத்த பெயர் ,அதற்கு ஆதாரம் மாக்ஸ் முல்லர் :-))

பிராகிருதம் - இடமிருந்து வலம் ,கரோஷ்தி வலமிருந்து இடம் என்ற பொருளில் பிரின்செப் காலத்தில் பெயர் வைத்தார்கள், மற்றவர்கள் ,பிரம்மி என பெயர் வைத்து ,பிரம்மன் கொடுத்து எழுத்து பழமையானது என ஆக்கிவிட்டார்கள்.

ஆனால் வடமொழி எழுத்து எல்லாமே ஆசிய மைனரில் இருந்து தான் வந்திருக்க வேண்டும். இதில் சிக்காதது "திராவிட எழுத்துக்களே", அதனால் தான் இன்று வரையில் சிந்து சமவெளியில் கிடைக்கப்பட்ட 'சித்திர எழுத்துக்களை" யாராலும் டிசைபர் செய்ய இயலவில்லை.

வவ்வால் said...

புரட்டுமணி,

ஏனிந்த அவசரம்?

மனுஸ்ருமிதிக்கு முன்னரே "புருஷ சூக்தம்" என உருவாக்கி வைத்திருந்தார்கள், அதில் தான் மூவர்ணம் ,அதை தான் குறிப்பிட்டிருக்க வேண்டும்,ஆனால் மநு என தவறாக குறிப்பிட்டிருக்கலாம்.

மற்றபடி புத்தர் காலத்தில் வேத அநாச்சாரங்கள் தலை தூக்கியதாலே அவர் புதிய கொள்கையை வகுத்தார் என்பது வரலாறு.

மேலும் பிறப்பால் வருவது வர்ணாசிரம தொழில் என்பதெல்லாம் ஆரம்பத்தில் இல்லை, ஒருவன் தனது தொழிலை மாற்றலாம் என்றே இருந்தது, பின்னாளில் தான் திணிக்கப்பட்டது.

# தயானந்த சரஸ்வதியின் ஆர்ய சமாஜம் ,வேத மதத்தின் திரிபுகளை சீர்திருத்த என்றே உருவாக்கப்பட்டது.

ஆர்ய சமாஜத்தில் சேர்ந்து ஒருவர் பிராமணராக கூட மாறிக்கொள்ளலாம். அதற்கும் சடங்கு வைத்துள்ளார்கள்,ஏன் எனில் ஆதிகால வேத மத வழிமுறை அப்படித்தான் இருந்தது. நடுவில் தான் பிறப்பால் என மாற்றிவிட்டார்கள்.

ஷதிரியன் பிராமணன் ஆக முடியும் என்பதை சொல்லும் புராணம் தான் விசுவாமித்திரர் கதை.

ஆனால் அப்புறம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா ரூல்ஸை அவாள் மாத்திப்புட்டா அவ்வ்!

தருமி said...

என்னிடம் உள்ள நூல் மூன்றாம் பதிப்பு - 2008. முதல் பதிப்பு டிசம்பர் 2005

வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை 600014
போன்: 28484242
விலை ரூ. 100

தருமி said...

வ்வ்ஸ்,
//ஆனாலும் அரேபிய மதம் அளவுக்கு "இந்து மதத்துக்கு மார்க்கெட் வேல்யு" இல்லை போல ,கூட்டமே காணோம் அவ்வ்!

யூதாஸ் பத்திப்பதிவுப்போட்டதுக்கு நாம ரெண்டு பேரு தான் "ரகசிய பேச்சு வார்த்தை நடத்தினோம்" :-))//

இதில் ஒரு சின்ன சந்தேகம். சகோஸ் கூட்டம் பத்தி சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் ஒரு சின்ன முடிவு: இனி எப்போதாவது இஸ்லாமியப் பதிவு போட்டால் சகோஸ்கள் யாராவது அந்தப் பக்கம் வந்தால் முதலில் 720 வது பதிவு படித்து பதில் சொல்லி விட்டு இங்கு வாருங்கள் என்று சொல்லி விடலாம் என நினைக்கிறேன்.

இந்து மதத்து மார்கெட் வேல்யூ பற்றித் தெரியும். இதற்கு கேள்விகளோ பதில்களோ வராதுன்னு தெரியும். ஆனால் யூதாஸ் பக்கம் யாரும் வரவில்லை; கருத்துப் பகிர்வு இல்லை என்பது கொஞ்சூண்டு ஆச்சரியம் அளித்தது. ஒருவேளை religion is very personal எங்கள் நம்பிக்கையோடு மட்டும் தொடர்புள்ளது என்ற கருத்து அவர்களிடம் இருக்குமோ. அப்படியாயின் மகிழ்ச்சியே ...

தருமி said...

//எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய உபபாண்டவத்தில் விலாவாரியாக இதனை சொல்லி இருக்கார் //

it sounded so awful. அதான் உட்டுட்டேன்.

அ. வேல்முருகன் said...

ஒருமுறை படித்தாகி விட்டது. இப்போதும் படித்து வருகிறேன்.

Jayadev Das said...

\\ஆப்ஹானிஸ்தானை விட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது \\ இது நடந்தது எந்த வருடம்? வரலாற்று விர்ப்பன்னர்கள் உண்டா?

Jayadev Das said...

இது நடந்தது எந்த வருடம்? வரலாற்று விர்ப்பன்னர்கள் அவ்வாறு சொன்னதற்கு ஆதாரம் உண்டா?

Jayadev Das said...

பட்டை பட்டையா உடம்புல நாமத்தை போட்டுக்கிட்டு பூனூலோட இருந்தாலும்,உங்களுக்கு வேண்டியதை எழுதிட்டா உடனே அந்த நபரை தலைமேல தூக்கி வச்சிகுவீங்க போல..................

தருமி said...

//....,உங்களுக்கு வேண்டியதை எழுதிட்டா உடனே அந்த நபரை தலைமேல தூக்கி வச்சிகுவீங்க போல.................. //

yes, so what?

R.Puratchimani said...

//வவ்வால் said...
புரட்டுமணி,

ஏனிந்த அவசரம்?

மனுஸ்ருமிதிக்கு முன்னரே "புருஷ சூக்தம்" என உருவாக்கி வைத்திருந்தார்கள், அதில் தான் மூவர்ணம் ,அதை தான் குறிப்பிட்டிருக்க வேண்டும்,ஆனால் மநு என தவறாக குறிப்பிட்டிருக்கலாம்.//

வணக்கம் வவ்வால் நலமா? :)

யாரு தவறாக குறிப்பிட்டுள்ளார் என்கிறீர்கள்? தருமி ஐயாவா? அல்லது இதை எழுதிய ஆசிரியரா?
"புருஷ சூக்தம்" என்பதற்கும் மனுஸ்மிருதிக்கும் வித்தியாசம் தெரியாதவரின் புத்தகம் தான் பகுத்தறிவு புத்தகமோ ?
நீங்கள் அவருக்கு சப்பை கட்டு கட்ட வேண்டாம் ...நன்றாக படித்து பாருங்கள் ...ஆசிரியர் செய்ததுதான் புரட்டு .........ஆனால் நீங்கள் என்னை கேவலப்படுத்த பார்க்கிறீர்கள்...பரவாயில்லை உங்களை நான் நண்பராகத்தான் பார்க்கிறேன் :) அவசரம் எனக்கல்ல உங்களுக்கோ அல்லது அந்த ஆசிரியருக்கோ இருக்கலாம்.

R.Puratchimani said...

வவ்வால் உங்களுக்கு நன்றாக தெரிகிறது இந்த புத்தகத்தில் எவ்வளவு வரலாற்று பிழைகள் என்று. இது பற்றி வேறு நான் என்ன சொல்ல?...இந்த புத்தகத்தை படித்தால் நீங்களே நிறைய பிழைகளை, புரட்டுகளை, பொய்களை சுட்டிக்காட்டலாம் :)

Ant said...

இன்றளவும் இந்து மத்தை காப்பாற்றி வருவது எளிய மக்களின் நம்பிகைகளும் பழக்க வழங்கங்‌களுமே! பெரும்பான்மையினர் சிறுதெய்வ பழிபாட்டை முறையாக பின்பற்றி வருவதை காணலாம். படிப்பறிவு, பொருளாதாரம் மற்றும் வெளியுலக தகவல் தொடர்பு சிறு தெய்வ வழிபாட்டிலிருந்து பணக்காரசாமிகளை நோக்கி திரும்ப வைத்துள்ளது. பிராமணர்கள் இந்து மதத்தின் காவலர்களாக காட்டிக் கொள்வாதும் அவர்களை அத்தகையவர்களாக சித்தரிப்பதும் உண்மைநிலைக்கு மாறானது. வழிபாடு செய்யாதவர்கள் அணைவரும் கடவுள் மறுப்பாளர்கள் கிடையாது அவர்கள் கடவுளை அல்லது கடவுள் வழிபாட்டை பற்றி எந்தவித நாட்டமும் இல்லாதவர்கள். அதே வேளை கடவுள் மறுப்பு என்பது இறைநம்பிக்கை குறித்தான உறுதியான முடிவாகும். இருப்பினும் இந்து மதம் கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் திருமண உறவை முடிவு செய்வதில்லை மாறாக சாதி அடிப்படையில் அது அமைகிறது. ஒரே சாதியாக இருந்தாலும் பழக்க வழக்கங்கள் அடிப்படையில் தான் திருமண உறவு மேற்கொள்ள படுகிறது. புதிய தகவல்கள் பல மூலங்களிலிருந்தும் கிடைப்பது பலமணிநோரம் செலவிட்டு நுாலத்தில் புத்தகத்தை புரட்டி பெறும் தகவல்களுக்கு சமம். நன்று.

வருண் said...
This comment has been removed by the author.
தருமி said...

வருண்,
இங்கு ‘நடப்பதைப்’ பார்ப்போமா?

வருண் said...

புரச்சி மணியை விட்டுப்புட்டு "இங்கு நடப்பது" னு இந்தப் புத்தகத்தை விமர்சிக்க சொன்னீங்கனா..

***கடவுளுக்காக கைகூப்ப வைத்த பிராமணர்கள் படிப்படியாக தமிழர்களின் உரத்த வழிபாட்டிற்குள்ளும் ஊடுருவினார்கள்.

நாம் பேசுவதையே தெய்வத்திடம் பேசினால் அதற்குக் கேட்குமா? நாங்கள் சில மந்திரங்கள் சொல்கிறோம்; அதை உச்சரித்தால் தான் உன் சிலைக்கு தெய்வ சக்தி வரும். (33) ***

ஆரியர்கள் திராவிடர்களை திட்டம்போட்டு ஏமாற்றினார்களா என்னனு எனக்குத் தெரியவில்லை. அது தேவையுமில்லை!

இங்கே இவர் சொல்லியிருப்பது ஒரு தியரிதான். புத்தக விற்பனைக்காக ஒரு யுக்தியோ என்னவோ..இதை எழுதியவ்ரே ஒரு பிராமணராகக் கூட இருக்கலாம். வியாபார நோக்கத்தில் பிராமணரையே விக்கிறாரோ என்னவோ? It is called survival. Sell anybody to survive. That's also brahminical attitude I would say!

எனிவே, வரலாறுல்லாம் எதுக்கு?

இன்றுகூட நம் மக்களுக்கு ஆரியர்கள்தான் உயர்வாகத் தெரிகிறார்கள். அவர்களை தலைவணங்க, காலில் விழுந்து வணங்க தயாராகத்தான் இருக்கிறார்கள். இன்னிக்கு ம் அவர்கள் மைனாரிட்டிதான், மாடு சாப்பிடாத வைக்க புல்லு மட்டும் சாப்புட்றவா தான் அவா.

இன்னைக்கு நம்மை ஆள்வது ஒரு பிராமணர்தான். "அவா" தான் எல்லாம். இதுவும் வரலாறு ஆகப் போது.

ஆக, காலங்காலமாக, மெஜாரிட்டியான இவனே மைனாரிட்டி அவர்களை உயர்வாக் நினைக்கும்போது சந்த்ரப்ப சூழ்நிலையை பயன்படுத்தி அவன் ஏன் தன்னை உயர்த்திக்க மாட்டான்???

ஒரு சில நண்பர்களிட்ம பேசினால், சர்வீஸ் கமிஷன்கூட இப்போலாம் "ஃபார்வேட் க்ளாஸ்" மட்டும் பாஸ்பண்ண முடியும் வகையில் கேள்வித்தாள்களை வேண்டுமென்றே கடினமாக்கி வேலை கிடைக்காத அளவுக்கு ஆக்கி உள்ளார்கள் என்கிறார்கள். சோ ராமசாமியின் அறிவுரையில் பிராம்ணர்கள் முன்னேற பலவகையில் வழி நடக்கிறது..

தப்பு யார் மேலே? இன்று நடப்பதையும் பிராமனர்கள் எங்களை ஏமாத்திப்புட்டாங்கனு நாளை நூறு ஆண்டுகள் பிறகு இன்னும் ஒரு தருமி எழுதிக்கிட்டேதான் இருக்கப் போறார்.

ஏனென்றால் நம்மாளு திருந்தப் போவதே இல்லை!

ஆக, இது ஒரு தொடர்கதை. :)

suvanappiriyan said...

//ஆப்ஹானிஸ்தானை விட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது கூட வந்த பெண்கள் கம்மி. //

அப்போ இந்துத்வா ஆட்சி வந்தால் பழைய சொந்தங்களான தாலிபான்களுடன் சுமூகமான உறவைப் பேணலாம். பழையபடி தாலிபான்கள் அனைவருக்கும் பூணூல் மாட்டி விடலாம். மதரஸாக்கள் பூட்டப்பட்டு அங்கெல்லாம் குருகுல பள்ளிகள் திறக்கப்படலாம். வாழ்க இந்து மதம். வளர்க இந்துத்வா. :-)

குலசேகரன் said...

சிலர் இங்கு எழுதியதைப்போல மனு வேதகாலத்து நூலன்று. வேதமதம் பலரால் தங்கள் ஆதாயத்துக்காக மாற்றப்பட்ட காலத்தில் எழுந்த நூலே அது. மனு சொன்ன அனைத்தையும் என்றோ நிராகரித்துவிட்டார்கள். எனவே don't flog the dead horse.

தெயவத்திரு தாத்தாச்சாரியார் சுவாமிகள் எழுத்துக்களின் வன்மம் தொனிக்கிறது. பிராமணர்கள் சமூஹத்துரோகிகள் என்று ஒரேயடியாக இறங்கி எழுதிவிட்டார்.

அப்படிவராது. ஒரு மதம் தோன்றும்போது பலபல நற்கொள்கைகளை எடுத்துச்சென்று மக்கள் வாழ்க்கையைச்செம்மைப்படுத்தவே எழும். பின்னர் அது பரவலானபின், பலர் அம்மதத்தை தங்கள்தங்கள் நலனுக்காகப்பயனபடுத்திவிடுவர். இது மதங்கள் வரலாற்றில் மட்டுமன்று, பல நிறுவன வரலாறுகளிலும் அரசியல் கட்சிவரலாறுகளிலும் நடப்பதுதான்.

புத்தமதம் சிலபல கொள்கைகளினால் வேதமதத்திலிருந்து விலகி தன்பாதையை வகுத்துக்கொண்டது. அவ்வளவுதான். இங்கே புரட்டு. அதைக்களைய இவர்கள் வந்தார்கள் என்பதுதான் புரட்டு.

புத்தமதம் கர்மவினையையும் அவதாரங்களையும் ஏற்பது. இக்கட்டுரை அதை மாற்றிச் சொல்கிறது. கடவுள் நம்பிக்கையுள்ளோர் புத்தமதம், சமணத்தில் சேரவியலாது. இம்மதங்கள் கடவுள் இருப்பதை ஏறபதில்லை.

நல்லவை, கெட்டவை எங்குமே உண்டு. நல்லவை எடுத்து நமக்குப்பயனபடுத்தினால் அம்மதத்தால் பலனுண்டு. அதே சமயம் அம்மதத்தில் நம்பிக்கை கொண்டோர் கெட்டவைகளையும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டேயிருக்கவேண்டும். இந்துமதத்தில் அப்படி உண்டு. பிறமதங்களில் இல்லை.

எனவேதான் இந்துக்கள் அனைவரும் சங்கர மடத்தை ஏற்பதில்லை. பெரியவாளில் ஜாதீய உணர்வுப்பிரச்சாரத்தை ஏற்பதில்லை. வைணவர்கள் ஜாதீயத்தை ஏறபதில்லை. எந்த ஜீயரும் ஏற்பதில்லை.

ஏற்பவர் உண்டு ஏற்காதவரும் உண்டு. இருவரும் உள்ள ஜனநாயக மதம்தான் இது. ஏற்காதவரை நாமென்ன செய்ய முடியும்? நான்-வெஜிட்டேரியனை சாப்பிடுவோரை சாப்பிடாதே என்று வெஜிட்டேரியன் சொல்லமுடியுமா? விலகி நின்று கொள்ளலாம். அது சாத்தியமமன்றோ!

தருமி என்ற நாஸ்திகருக்கும் மதங்களைப்பற்றியேன் கவலை ?

தருமி said...

சு.பி.,

முதலில் 720 வது பதிவு படித்து பதில் சொல்லி விட்டு இங்கு வாருங்கள்

தருமி said...

//நாஸ்திகருக்கும் மதங்களைப்பற்றியேன் கவலை ? //

மதங்களைப் பற்றிக் ‘கவலை’ பட நிறைய qualifications இருக்கோ?

வவ்வால் said...

தருமிய்யா,

நான் முதலில் பார்க்கும் போது ,ஒரே ஒரு பின்னூட்டம் மட்டும் இருக்கவே "மார்க்கெட் வேல்யூ" போயிடுச்சோனு நினைச்சுட்டேன்,பரவாயில்லை நம்ம கொண்டைகளுக்கும் புதிய ஆன்மீக எழுச்சி ஏற்பட்டிருக்கும் போல ,ஆர்வமா வந்திருக்காங்க, நல்ல "கவனிப்பு" கொடுக்கலாம் :-))

#// 720 வது பதிவு படித்து பதில் சொல்லி விட்டு இங்கு வாருங்கள் என்று சொல்லி விடலாம் என நினைக்கிறேன்.//
420 செக்‌ஷன் போல , மார்க்கப்பந்துகளுக்கு 720 செக்‌ஷன் போட்டிங்க போல அவ்வ்!

முதல் 720 கேசா நம்ம சுபி.சுவாமிகளே வந்திருக்காக , ஆனாலும் சளைக்க மாட்டார்,எல்லால் சொல்லியாச்சு,சொல்லியாச்சுனு "தேய்ஞ்ச ரெக்கார்ட்" தான் ஓட்டுவார் :-))

#//it sounded so awful. அதான் உட்டுட்டேன்.//

அவ்ளோ கொடுமையாவா இருக்குது அவ்வ்!

இணையத்துல கூட சில ஸ்கேன் காப்பிகள் கிடைச்சுது, இப்பவும் இருக்கானு தேடிப்பார்க்கணும்.

--------------------------

பாகவதரே,

//பட்டை பட்டையா உடம்புல நாமத்தை போட்டுக்கிட்டு பூனூலோட இருந்தாலும்,உங்களுக்கு வேண்டியதை எழுதிட்டா உடனே அந்த நபரை தலைமேல தூக்கி வச்சிகுவீங்க போல................//

இறைச்சி உண்பவரை நாய்னு ஒரு பக்கம் சொல்லிக்கிட்டு ,மாட்டுக்கறி திண்ணாலும் ஆன்மிகவாதினு மார்க்கப்பந்துக்களின் காலில் விழுந்து கூப்பிட்டீரே அது போல தான் :-))

இங்கே கருத்தினை தான் பார்க்கிறோம்,அதில் சரியானவற்றை மட்டுமே எடுத்துக்கொள்கிறோம்.

-------------------------

புரட்சி மணி,

வணக்கம்,நலமே! நலமா?

புரட்டுவது தானே புரட்சி!

பழைய கொள்கைகளை புரட்டி எடுப்பது புரட்சி என சொன்னால் தப்பா?

#ஆனால் நீங்களோ பழைய கொள்கைகளில் புரண்டு எழுவேன் ,அதுவே இன்பம் என நினைக்கிறீர்கள் அவ்வ்!

தவறாக குறிப்பிட்டது ,அக்னிஹோத்திரம் தான், புருஷ சூக்தமே மநுவாக மாறியது என்பதால் ,அப்படி சொன்னாரோ என்னமோ.

எவ்ளோ குற்றமிருக்கோ அவ்ளோ குறைச்சுக்க வேண்டியது தான்!

யார் என்ன சொன்னாலும் உண்மைகளை அலசி ஆய்வதே பகுத்தறிவு.பெரியார் சொன்னார்னு அப்படியே காப்பியடிப்பதும் இல்லை,அனைத்துக்கும் ஒரே அளவு கோள், தர்க்க ரீதியாக அணுகுதலே நமது நோக்கம்.

# அக்னிஹோத்திரம் எழுதிய நூலை பற்றிய கருத்தினை பகிர்ந்திருக்கிறார்கள்,நம்ம கருத்தினை சொல்கிறோம்.தருமிய்யா ,இது தான் "உண்மை" மறுப்பேச்சில்லாமல் கேளுண்ணா சொல்லுறாங்க. நம்ம கருத்தினையும் சொல்வோம்.

R.Puratchimani said...

வவ்வால் said...
//புரட்டுவது தானே புரட்சி!//

:)

ராவணன் said...

வடக்கிலிருந்து தெற்கு வந்ததா? தாத்தாச்சாரியாரியின் கற்பனை பிராமண மதத்தைத் தூக்கி நிறுத்த வருவது.

…மேற்கிலிருந்து கிழக்கு வந்தது என்பது அரேபிய மதங்களின் கற்பனை.

…தெற்கில்தான் வாசல்...கிழக்கில்தான் உதயம் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள்.

தருமி said...

ராவணன்
நான் ‘திசை’ மாறிப் போனேன்....! - உங்கள் பின்னூட்டம் வாசித்து.

வவ்வால் said...

ராவணன்,

லெமுரியாவிலிருந்து எஸ்கேப்பானவரா இருப்பார் போல அவ்வ்!

Mahesh said...

உங்களின் இந்து மதம் எங்கே போகிறது? 9பதிவுகலையும்
வாசித்த கைய்யோடு
தாத்தாச்சாரியார்ஓட
இந்து மதம் எங்கே போகிறது? படிக்க
ஆரம்பிச்சிருக்கேன்.
நல்ல புத்தகம்.
அறிமுக படுத்தியமைக்கு
நன்றி சார்.

Post a Comment