Thursday, June 19, 2014

760. பொறி பறந்தது …







*


  NEDERLAND 3 - 2 AUSTRALIA 



 இது விளையாட்டு … என்ன வேகம் .. என்ன தீர்மானம் … பார்க்கவே மிக நன்றாக இருந்தது. ஒவ்வொரு வினாடியும் எந்த மந்திரம் நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு. விளையாட்டின் தீவிரம் ஒவ்வொருவரையும் கட்டி வைத்தது. சென்ற உலகக் கோப்பையில் எனக்குப் பிடித்த ஆட்டக்காரர் ராபன் என்ற நெதர்லாந்துக்காரர் தான். இந்த வருடமும் அவரோ, அல்லது அவரோடு உடன் விளையாடும் பெர்ஸியோ அதே போல் வந்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

20வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ராபன் முதல் கோலைப் போட்டார். அதிலிருந்து சரியாக இரண்டே நிமிடங்களில் ஆஸ்த்ரேலியா மறு கோலைப் போட்டு சமன் செய்தது. ஏகவே மிக வேகமாக இருந்த விளையாட்டின் தீவிரம் இன்னும் அதிகரித்தது. முதல் பகுதி ஆட்டம் முடிந்தது.

இரண்டாவது பகுதி ஆரம்பித்த பின் ஆஸ்த்ரேலியாவிற்கு hand ballக்காக ஒரு பெனல்டி கிடைத்தது. ஆசி தலைவர் அடித்த பந்து ஆசியின் இரண்டாவது கோலாக ஆனது. . அழுத்தம் அதிகமானது, அடுத்த எட்டாவது நிமிடத்தில் நெதர்லாந்து பதிலளித்தது. இந்த கோலை பெர்ஸி அடித்தார்.

இந்த சமன்நிலை சிறிது நேரமே இருந்தது. அடுத்த கோலும் நெதர்லாந்து அடுத்த பத்து நிமிடத்திற்குள் போட்டு 3-2 என்றானது. மீதி நேரமும் யார் கோல் போடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் அளவிற்கு பந்து அங்குமிங்கும் என்று இரு பக்கமும் பறந்தது. ஆயினும் இந்த கோல் கணக்கிலேயே ஆட்டம் இறுதிக்கு வந்தது.

நடுவரின் தீர்ப்பும் மிகவும் சரியாக இருந்தது.

ஆயினும் பெர்ஸி இரு மஞ்சள் கார்டுகள் வாங்கியதால் அடுத்த ஆட்டம் அவர் ஆட முடியாது. நெதர்லாந்து இன்னும் நீண்ட தூரம் இப்போட்டியில் கலந்திருக்கும் என்பது வெகு நிச்சயம்.



 மூன்று வினாடி முத்தம்
 (தலைப்புக்காக சுஜாதாவிற்கு நன்றி) 


எப்படி எட்டி எட்டிப் பார்த்தாலும் தொலைக் காட்சியில் பார்வையாளர்கள் மிஞ்சிப் போனால் மூன்று வினாடிகள் வர முடியும் என்றே நினைக்கிறேன். ஆனால் எங்த வித்தியாசமும் இல்லாமல் பார்வையாளர்கள் தாங்கள் தொலைக்காட்சியில் தெரிகிறோம் என்றதும் என்ன மகிழ்ச்சி. எட்டி எட்டிப் பார்த்து தங்கள் முகம் ஒளிக்காட்சியில் அந்தச் சின்ன மூன்று வினாடிகள் விழ எவ்வளவு ஆரவம் காட்டுகிறார்கள்!


 நம்ம ஊரிலும் செய்தித் தொகுப்பில் இது போல் தலைகாட்டும் மக்களை நிறைய பார்க்கலாம். அதுவும் ஏதாவது ஒரு கோர்ட் சம்பந்தமான விஷயத்தை ஒரு பெரிய வக்கீல் சொல்லும் போது, பக்கத்திலிருக்கும் சின்ன வக்கீல்கள் எட்டிப்பார்ப்பதைப் பார்க்கும் போது நிறைய வேடிக்கையாக இருக்கும்.




 *

6 comments:

வேகநரி said...

தமிழ்மணத்தில் இந்தியர்களுக்கு ஏன் கால்பந்து மோகம் இல்லை? - வத்திகுச்சி என்று இருந்திச்சு. தருமி ஐயா தான் கால்பந்து போட்டிகள் பற்றி அழகான நேர்முக வர்ணணை தந்துக் கொண்டிருக்காரே ஏன் இவர் இப்படி சொல்கிறார் என்று அவர் பதிவை படிக்க போனா படிக்க முடியல்ல துள்ளிக் கொண்டேயிருக்கு.

தருமி said...

//துள்ளிக் கொண்டேயிருக்கு.//

என்ன ஆச்சு?

தருமி said...

ஓ! வத்திக்குச்சியின் வலைப்பூ துள்ளுகிறதோ? நான் அதனை வாசிக்கும் போது அப்படியில்லையே........ இப்போது அப்பதிவைத் தேடிப் பார்த்தேன்; கிடைக்கவில்லை.
அவர் எழுதிய தத்துவம் எனக்குச் சரியாகப் படவில்லை. விளையாட்டாக எழுதியுள்ளார் என நினைக்கிறேன்.

தருமி said...

http://vathikuchi.blogspot.com/2014/06/blog-post_20.html#comment-form

துள்ளவில்லையே!

வேகநரி said...

தகவலுக்கு நன்றி ஐயா.
தமிழ்மணத்தில் வத்திக்குச்சியை கிளிக் செஞ்சா வத்திக்குச்சி என்று தோன்றி அடுத்த வினாடி படிக்க முடியாம மறைந்து விடுகிறது. பின்பு தொடர்ந்து அதே மாதிரி நடக்கிறது. வேறு சிலரனிதும் பதிவுகளுக்கும் முன்பு சில சமயம் இதே மாதிரி நடந்திருக்கு.
ஆனா உங்க பதிவு மட்டும் எப்பவுமே பளிச் என்று இருக்ககே!
கடவுளானவர் உங்க கூடவேயிருந்து உங்களை பாதுகாக்கிறார் :)

V said...

என் பதிவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி ஐயா! கால்பந்தை பற்றி எழுதிய பதிவு இத்தனை கவனத்தை பெரும் என்று எதிர்பார்க்கவில்லை.
நான் அதை விளையாட்டாகவே எழுதினேன். அதை பதிவிலேயே குரிப்பிட்டும் இருந்தேன்.
மதங்களை பற்றிய தங்கள் பதிவுகள் அருமை. அதிலும் குரானை பற்றி நீங்கள் எழுதி இருந்த பதிவில் தங்கள் துணிச்சல் தெரிந்தது. படித்தபோது நேரமின்மையால் கருத்திட முடியவில்லை.

Post a Comment