Thursday, June 26, 2014

768. மாமன்னர் அசோகர் - சில ஆச்சரியங்கள் - 4


*

அசோகரின் கல்வெட்டுகளில் நாம் காணக்கூடிய சில ஆச்சரியங்கள் .....

தன்னை ஒறுத்து, தன் பழம் வழிகளிலிருந்து முற்றிலும் மாறி தன் மக்களுக்கு முன் தானே ஒரு முன் மாதிரியாகி நிற்கும் மன்னனின்  ஓர் அரசாணை….

கடவுள்களின் அன்பிற்குரிய மன்னன் பியாதாசி எழுதிய தர்ம அரசாணைஎன் நாட்டில் எந்த உயிரினமும் கொல்லப்படவோ, பலி கொடுக்கப் படவோ கூடாது.
முன்பெல்லாம் கடவுள்களின் அன்பிற்குரிய பியாதாசின் அடுப்பங்கரையில் ஆயிரக்கணக்கான மிருகங்கள் உணவிற்காகக் கொல்லப்பட்டனஆனால் இந்த அரசாணை எழுதப்படும் போது மூன்றே மூன்று மிருகங்கள் - இரண்டு மயில்களும், ஒரு மானும் மட்டுமே - கொல்லப்படுகின்றனமான் தினமும் கொல்லப்படுவதில்லைகாலப்போக்கில் இந்த மூன்று உயிர்களும் கூட கொல்லப்படாது.

----------------------


நம் நாட்டுக் கலாச்சாரத்தில் தொன்மையான பொருட்களுக்கு எந்த வித தனி மரியாதையையும் நாமோ, நம் அரசுகளோ கொடுப்பதில்லை என்பது ஆகி வந்த ஒரு விதி. இங்கே நம் நாட்டின் முதன் முதல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வரலாற்றுத் தடயம் யாருக்கும் தெரியாமல் “காணாமல் போய்விட்டது” என்ற உண்மை நம்மைச் சுடுகிறது; வெட்கப்பட வைக்கிறது.

1892ல் டாக்டர் வில்லியம் ஹோயி  வடக்கு பீகாரில் உள்ள கோரக்பூர் பகுதியின் கமிஷனராக இருந்து வந்தார்ரப்தி நதி அருகில் பல மண் மூடிப் போன திண்டுகளை அவர் ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது, அருகிலிருக்கும் சோஹ்கவுரா  என்ற கிராமத்திலிருந்து ஒரு வயதான பெரியவரிடம் பேசியுள்ளார்அப்பெரியவர் ஒரு சின்ன தாமிரத் தகடு ஒன்றினை இந்த ஆற்றுப் படுகையில் கண்டெடுத்ததாகவும், அதனை அங்கிருந்த ஜமீன்தாரிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். சில மாதங்கள் கழித்து அந்த ஜமீன்தாரின் மகன் ஹோயியின் அலுவலகத்திற்கே வந்து அந்தத் தகட்டினை அன்பளிப்பாகத் தந்திருக்கிறார்.

 அந்த சோஹ்கவுரா தகடு" தாமிரத்தால் ஆனதல்ல, பித்தளையால் செய்யப்பட்ட தகடுபித்தளை என்பதே ஆச்சரியத்திற்குரிய ஒன்று. அத்தகடுஇஞ்ச் நீளத்திலும் 1’ 3/4  இஞ்ச் அகலத்திலும் இருந்தது. தகடு மிகவும் நல்ல நிலையில் இருந்தது. அதையும் விட அந்தகட்டில் இருந்த எழுத்துகளும், குறியீடுகளும் மிகவும் சிறப்பான, சீரான புடைப்பு எழுத்துகளோடு இருந்தன.


 அசோகரது ப்ராமி எழுத்துகளில் நான்கு வரிகளில் எழுத்துகள் இருந்தன. அதற்குமேல் முதல் வரிசையில் ஏழு குறியீடுகள் இருந்தன. இரண்டு வேறு வேறு வகைச் செடிகள், சுற்றுச் சுவடுக்குள் தூண்களோடும், கூரைகளோடும்  மூன்று மாடிக் கட்டிடங்கள், இரண்டு ஈட்டி போன்ற ஓர் ஆயுதம், உலக உருண்டையும், அதன் மேல் காளைபோன்ற உருவமும், நடுவில் பிரமிட் போன்ற ஸ்தூபியும், மூன்று அரைவட்டக் கூம்புகளும், அதற்குமேல் ஒரு கொம்பு வைத்த நிலவும் இருந்தனஅந்த இரு கட்டிடங்களைத் தவிர ஏனைய குறியீடுகள் பழைய நாணயங்களின் புடைப்புகளில் பார்க்க முடியும்.

 ஹோயி, ஸ்மித் இருவரும் இணைந்து வங்காள ஆசியக் கழகத்தின் பதிவுகளில் சோஹ்கவுரா பித்தளைத் தகடு பற்றிய தங்கள் ஆய்வுகளைப் பதிப்பித்தார்கள். ஆனால் அவர்கள் அத்தகடு மௌரியன் காலத்துத் தகடு என்பதை மட்டுமே உறுதியாகக் கூறினார்கள்அதற்கு மேல் எந்த விவரமும் தர இயலவில்லை.

ஆனாலும் அந்தத் தகட்டில் உள்ள எழுத்துக்களைப் புகைப்படம் எடுத்து, பேராசிரியர் புஹ்லெருக்கு அனுப்பினார்அவர் தகட்டில் உள்ள எழுத்துகள் ப்ரகிரிதி எழுத்துகள் என்றும், மேலும் அதில் உள்ள செய்திகளின் பொருளும் கூறினார். இத்தகடு ஸ்ரவஸ்தியில் உள்ள சமய அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட உத்தரவு அது.  ’வம்சகிரஹா என்ற இடத்தில் உள்ள இரு கிட்டங்கிகளில் தானியங்கள், பருப்புகள், உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால், விரைந்து அவர்கள் தேவைகளைத் தாமதமின்றி அனுப்ப வேண்டும்என்ற ஆணை அதுவாசகங்கள் புரிந்து கொள்ளப்பட்டு வாசிக்கப்பட்டு விட்டாலும், முதல் வரிசையில் உள்ள குறியீடுகள் பற்றிய விளக்கங்கள்அன்றும் தெரியவில்லை;  இன்றும் தெரியவில்லை.

 சோஹ்கவுரா தகடுகள் ஒரு புதிய, பெருமைக்குரிய சான்று. வெறும் படங்கள் மூலம் செய்திகளைப் பரிமாறிக் கொண்ட நம் முன்னோர் முதல் முறையாக எழுத்துகள் மூலம் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்கின்றார்கள் என்பதற்கான சான்றாக இது இருந்தது.   
       
  சோஹ்கவுரா பித்தளைத் தகடும், மஹாஸ்தான கல்தகடும் ஒரே காலத்திய ஆவணங்கள்இரண்டுமே மௌரிய சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவைஇவை அக்காலத்திய சிறப்பான ஆட்சி முறைக்குச் சான்றுகளாக நிற்கின்றனஆட்சிமுறையின் தகவல் மாற்றங்களுக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு

டாக்டர் கோயி சோஹ்கவுரா தகட்டினை வங்காள ஆசிய ஆய்வுக் கழகத்திடம் ஒப்படைத்தார். ஆய்வுக்கழகத்தில் அப்போதிருந்த நிலையில் பொருட்கள் முறையாகப் பேணப்படாமல் இருந்தனஇந்த வரலாற்று முக்கியமான சான்றும், சில ஆண்டுகள் கழித்து காணாமல் போய் விட்டதாகச் சொல்லப்பட்டது. ஒரு வேளை இன்னும் பல ஆண்டுகள் கழித்து அத்தகடு, ஆய்வுக்கழகத்தின் தலைமைச் செயலகம்  கல்கத்தாவில் உள்ள பார்க் தெருவில் உள்ள கட்டிடத்தின் உள்ன ஏதோ ஒரு பழைய அலமாரிக்குள் இருந்து மீண்டும் கண்டுபிடிக்கப்படலாம்! ஆயினும் தற்போது காணாமல் போய்விட்டது என்று சொல்லப்படுவது மிகவும் பெரிய சோகத்திற்குரியதுஏனெனில் முதன் முதல் இந்திய வரலாற்றில் இது போன்ற பித்தளைத் தகடு அதுவரை மட்டுமல்ல, இன்று வரை வேறெங்கும் கண்டெடுக்கப்பட்டதேயில்லை என்ற உண்மை சோகத்தைப் பெரிதாக்குகிறது


___________________


’Living together’ என்பது இன்று நமக்கு மிகவும் புதியதானது. இன்னமும் இதற்கு சமுதாய சம்மதம் கிடைக்கவில்லை. ஆயினும் இந்தப் ‘புரட்சிகர’ செயலை இரண்டாயிரத்திச் சொச்சம் ஆண்டுகளுக்கு முன்பே அசோகர் தன் வாழ்நாளில் கடைப்பிடித்துள்ளார் என்பது இன்னொரு பெரிய வரலாற்று ஆச்சரியம்.


ஒரு கல்வெட்டு பங்குரேரியா என்ற ஒரு சின்னகிராமத்தில் கிடைத்ததுஇது நர்மதா நதியின் வடக்குக் கரையில் உள்ளதுஏறத்தாழ எண்ணூறு மைல் நீளத்திற்கு இந்தியாவின் அகலமான நடுப்பகுதியில் மேற்கு நோக்கி ஓடுகிறதுநாட்டின் குறுக்கே இப்படி ஓடுவதால் இந்நதி இந்தியாவை வட இந்தியா, தென்னிந்தியா என்று இரு பகுதிகளாகப் பிரிக்கின்றதுஇந்நதி ஒரு பள்ளத்தாக்கில் பாய்ந்து செல்கிறதுஇதன் வடக்கே விந்திய மலைத் தொடரும்,தெற்கே சாத்புரா மலைத்தொடர்களும் உள்ளன. பங்குரேரியா கிராமம் இப்பள்ளத்தாக்கில் உள்ளதுஒரு புறம் நதிக்கரை; இன்னொரு புறம் விந்திய மலைத் தொடரிலிருந்து தனித்து நீட்டிக் கொண்டுவரும் ஒரு மலை என்ற இரண்டிற்கும் நடுவில் நிற்கிறது இக்கிராமம்.  இம்மலைத் தொடரில் பல இயற்கைக் குகைகள், மலைக் குடியிருப்புகள் உள்ளனநாக்பூர் பகுதியின் இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் குழுவினர் மிகப் பழங்காலத்து  மக்கள் குடியேற்றத்திற்கான சான்றுகளை இந்த மலையில் தேடிவரும்போது இக்கல்வெட்டைக் கண்டுபிடித்தனர்.

  இக்குழுவினர் பங்குரேரியாவின் அருகில் பள்ளத்தாக்கிற்குள் சரிந்து நிற்கும் மலைத்தொடர் இருக்கும் பகுதியில் ஒன்பது சிறிய ஸ்தூபிகளைக் கண்டனர்இந்த ஒன்பதில் மிகப் பெரிய ஸ்தூபி இருப்பதிலேயே உயரமான ஸ்தூபியாகவும் இருந்ததுஇதன் உச்சிக்கு மேலே ஒரு கல்லால் ஆன குடியிருப்பு ஒன்று இருந்ததுஇப்பகுதியில்தான் அக்கல்வெட்டு இருந்ததுஇக்கல்வெட்டு  MRE - சிறு மலைக் கல்வெட்டு - சீரில்லாமல் பொறிக்கப்பட்டிருந்ததுஇக்கல்வெட்டின் ஆரம்ப வரிகள் வாசிக்கக் கூடியவைகளாக இல்லைஆயினும் முடிந்த அளவு வாசிக்கப் படும்போது அது  MREs -களில் இருக்கும் வழக்கமான வரிகளாக இல்லை. அதற்குப் பதிலாக சம்வா என்ற இளவரசருக்கு  அசோகர் எழுதியது போன்ற வரிகளாக அவை இருந்தனசம்வா என்ற சொல் சமஸ்கிருதத்தில் உடன் செல்பவன் அல்லது நட்பு கொண்டவன்என்ற பொருள் கொண்டதுஇந்த இளவரசர் அசோகரின் மகன்தானா என்பது ஆய்வுக்குட்பட்ட ஒன்று. ஏனெனில் இப் பெயர் வேறெங்கும் இதுவரை காணப்படவில்லைஇருக்கும் சான்றுகளை வைத்துப் பார்க்குபோது இம்மலைக் குடியேற்றத்தில் புத்தக் குருமடம் ஒன்று இளவரசர் சம்வாவின் தலைமையின் கீழ் இயங்கி வந்துள்ளதுஇந்தக் குருமடத்தில் இருந்த சந்நியாசிகள் தனித்தனி அறைகளில் தங்காமல், முதலில் இருந்த வழக்கம் போல், இம்மலையின் பொதுவான இடங்களைத் தூங்குவதற்குப் பயன்படுத்தினர்.   இந்தக் குகைக் குடியிருப்பிற்கு அருகில், அதன் இடதுபக்கம் இன்னொரு குகைக் குடித்தன இடம் இருந்ததுஇது அதே தாழ்ந்த பாறையில் இருந்தது. இக்குகையின் வாயிலருகே பாறையின் முகப்பில் மிகப் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தனஇந்த எழுத்துக்கள் வழக்கமாக உளி, சுத்தியலால் கொத்தப்பட்டு எழுதப்படாமல், அதற்குப் பதிலாக மிகவும் செப்பனின்றி எழுதப்பட்டிருந்தன. எழுத்தைச் செதுக்கியவர் வெறும் உளியை, ஒரு குச்சியின் உச்சியில் செருகிக் கொண்டு எழுத்துக்களை முரட்டுத்தனமாகக் கொத்தி எழுதியதுபோல் இருந்ததுஇதில் இருந்த வாசகங்கள் மற்ற கல்வெட்டுகளில் உள்ளவைபோல் திருத்தமாக எழுதப்பட்டவை அல்லஆயினும் ஆட்சி செலுத்தும் மன்னரின் உத்தரவின் பேரில் எழுதப்பட்டது அதுஎழுத்தியலில் மிகவும் பெயர் வாங்கிய பேராசிரியர் ஹாரி ஃபாலிக் இந்த வாசகங்களை மொழி பெயர்த்துள்ளார்.
         
  ப்யாதாசி நாமா
    ராஜகுமாரா வா
    சம்வாசிமானே
            இமாம் தேசம் பாபுனித
            விகார(யா) அத்தய்(யி)

ஃபால்க்கின் மொழிபெயர்ப்பில் . . . .

   ”மன்னன் (பட்டமளிப்புக்குப் பின்) ப்யாதாசி என்றழைக்கப்படுகிறார்.அவர்  (முன்பு) இந்த இடத்திற்கு ஒரு மகிழ்ச்சி சுற்றுலாவில் ஓர் இளவரசனாக வந்திருந்தார்அவரோடு திருமணம் ஆகாமல்  உடன் வாழ்ந்த பெண்ணுடன் வந்திருந்தார்”.

 பங்குரேரியா விந்திய மலைத் தொடரிலிருந்து நாற்பத்தி ஐந்து மைல் தொலைவில் உள்ளதுபுத்த புனித இடங்களும், சாஞ்சியும் இருக்கும் மாவட்டம் இதுதான்இது தான் அசோகரின் முதல் மனைவி பிறந்த இடம். பங்குரேரியாவில் இருந்த செப்பனில்லாத சாதாரணக் குறிப்புகள் தன் வாலிபப் பருவத்தில் வருகை தந்த இடங்களைத் தன் ஆட்சிகாலத்தில் பேரரசர் மீண்டும் வந்தபோது அவரின் ஆணையின் பேரில் பொறிக்கப்பட்ட வாசகங்களே அவை. உஜ்ஜயினின் அரசு அதிகாரியாக, தன் தோழியோடு இளம்வயதில் வந்து பார்த்த இடங்களே இவைஇந்த தோழி அவர் மனைவியாக ஆகி, அசோகரின் மூத்த மகனும், மகளுமான மஹிந்தா, சங்கமித்ராவைப் பெற்றெடுத்தார்

மலையில் இருந்த அந்தச் சாதாரணக் கல்வெட்டு தனி மனிதன் ஒருவனின் மனிதத் தன்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதுஅது வெறுமனே மனதைத் தொடும் கல்வெட்டு மட்டுமல்லஒரு பெரும் மன்னன் தன் உயர் நிலையிலிருந்து கீழிறங்கி, சாதாரணன் போல் தன்னை உணர்ந்து, வாழ்ந்த நேரம் அது.


*


2 comments:

G.M Balasubramaniam said...

நிறையவே ஆராய்ச்சி செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

படிக்கப் படிக்க சுவாரசியம்
நன்றி ஐயா

Post a Comment