Wednesday, September 03, 2014

786. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்






*







*

இதுவரை வந்த jinglesல் எனக்கு மிகவும் பிடித்தது லியோ காபிக்கு வரும் வீணையிசை. அது ஏ.ஆர். ரஹ்மானின் இசை என்று நினைக்கிறேன். அதற்கு அடுத்து பிடித்த இசை: விஜய் டிவியில் ஜூனியர் சூப்பர் சிங்கர் விளம்பரத்தில் வரும் ...

காலு கிலோ கருப்புப் புளி
மஞ்சத் தூளுடா... என்ற பாட்டு தான்.

படத்தில் வரும் பாடல்களுக்கு இசை யாரென்று தெரிந்து கொள்ளலாம். ஆனால் விளம்பரத்திற்கு வரும் jinglesக்கு இசை யாரென்று தெரிந்து கொள்ள விரும்பினால் தெரிந்து கொள்ள முடியுமா? (மணிஜியிடம் கேட்க வேண்டுமென்று வெகு நாளாக நினைத்த விஷயம்.)

*********

ஆமா ... அதென்ன விளம்பரத்தில் வரும் ஆண்கள் எல்லோரும் உடம்புல ஒரு முடி கூட இல்லாம இப்படி வழு வழுன்னு மொழுக்குன்னு இருக்காங்க.


*************

 அந்தக் கொசு அட்டை விளம்பரம் இருக்கே -பையன் காலுக்கடியில் அட்டையை எரித்து வைத்ததும் கொசுவெல்லாம் ஆட்டம் க்ளோஸ் - ரொம்ப அட்டகாசம். இல்லை...!?

*****************

பழைய ராஜா பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் சில சமயம் அப்படியே ஜிவ்வென்றிருக்கிறது. ஆனால் சில சமயம் ’அடப் பாவி மனுஷா .... இப்போவெல்லாம் அந்த திறமையெல்லாம் எங்கே அய்யா போச்சு?” என்று உரக்கக் கத்தணும்போல் இருக்குது. தி.மு., தி.பி. என்று பிரிக்கலாமோ? தி = திருவாசகம். அதன் பிறகு ஒரு பாட்டும் பிடிக்கலை.

கெளதம் படம் ஆஹா ...ஒஹோ என்றார்கள். தேறவில்லை.
பிரகாஷ் ராஜின் சமையல் படம் .. அதுவும் அப்படித்தான்.  ஒன்றும் பிடிக்கவில்லை.
தாரை தப்பட்டையாவது தேறுமா என்று பார்ப்போம்.(எனக்கென்னவோ நம்பிக்கையில்லை.)

இதனால் தான் ஜெயகாந்தன் ஒரு காலத்திற்குப் பின் எழுதுவதை சுத்தமாக விட்டு விட்டரோ?

******

common wealth என்பதே எனக்குப் பிடிக்காத  ஒரு விஷயம். நேற்றைய ‘அடிமைகள்’ இன்று பழைய எஜமானனோடு கூடிக் குலாவும் ஒரு விஷயம். ஏன் அடிமை நாடுகள் இன்றும் இப்படி பஜனை பாட வேண்டும் என்று தெரியவில்லை.

இதில் இன்னொரு விஷயம். ஆஸ்த்ரேலியா, கனடா இதில் இருக்கின்றன. ஆனால் ஏன் அமெரிக்கா மட்டும் இந்தக் குழுவில் இல்லை. பதிலிருந்தால் சொல்லுங்கள் ... தெரிந்து கொள்கிறேன்.

*******

பல அப்பா நடிகர்களின் பிள்ளைகளும் தொடர்ந்து நடிகர்களாகிக் கொண்டே இருக்கின்றனர். ஆயினும் அப்பாவை யாரும் ‘பீட்’ பண்ணவே இல்லை --






இருவரைத் தவிர ... (சீனியர்) கார்த்தி,  சூர்யா.

மற்றவர்கள் அனைவரும் அப்பாவை நல்ல நடிகர்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

********



4 comments:

G.M Balasubramaniam said...

/ஆமா ... அதென்ன விளம்பரத்தில் வரும் ஆண்கள் எல்லோரும் உடம்புல ஒரு முடி கூட இல்லாம இப்படி வழு வழுன்னு மொழுக்குன்னு இருக்காங்க./ ஒரு வேளை இதுதான் evolution-ஓ. ஏதோ ஒரு நினைப்பு. சின்னச் சின்னக் கேள்விகள் ரசிக்க வைக்கின்றன.

மணிஜி said...

ச்ச்ச்ச்

மணிஜி said...

அனில் என்றொரு நண்பர்...மொரிஷியசில் இருக்கிறார்.. என் விளம்பரங்களுக்கும் அவர்தான் இசை

தருமி said...

//என் விளம்பரங்களுக்கும் அவர்தான் இசை//

என் கேள்வி - இதை எப்படி நாங்கள் கண்டுபிடிப்பது?
உதாரணமாக, இப்போது centre fresh என்றொரு விளம்பரப் படம் - மிக மிக கிறுக்குத்தனமான - விளம்பரப் படம் வருகிறது. இதை எடுத்த மஹானுபவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது?

இது மாதிரி கிறுக்குத் தன விளம்பரங்களில் எப்படி முன்னணி நடிகர்கள் கலந்து கொள்கிறார்கள் -- காசுக்குத் தானா?

Post a Comment