Wednesday, September 17, 2014

787. JIHADI COLLECTION (10)




*


 * JUST A PERSONAL COLLECTION *


***
JIHADI COLLECTION .... (10)
*
பழைய தொடர்புள்ள பதிவுகள்  -


மதங்களைப் பற்றி நான் எழுத ஆரம்பித்தேன். கிறித்துவ மதத்தைப் பற்றி முதலில் எழுதிய போது அதிக எதிர்ப்புகள் எதையும் நான் சந்திக்கவில்லை. அடுத்து இந்து மதம் பற்றி எழுதிய போது சில எதிர்ப்புகளைச்சந்தித்தேன்.  இஸ்லாம் பற்றி எழுத ஆரம்பித்த போது பலத்த எதிர்ப்புகள் வந்தன. ஆனால் சின்னாளில் அத்தகைய எதிர்ப்புகள் யாராவது ஒரு பதிவரிடமிருந்து மட்டுமே வந்தன. அது அவர்களின் கட்டுக்கோப்பையும்உள் தொடர்பையும் காண்பித்தது. வரிசையாக சில இஸ்லாம் பதிவர்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து சந்தித்தேன்அதற்குப் பதில் சொல்ல நிறைய வாசிக்க வேண்டிய கட்டாயமும் வந்தது.

இப்படி வந்த  பதிவர்களில் பலர் மிகுந்த ஆவேசத்துடனும்கோபத்துடனும் விவாதித்தார்கள். ஆனால் முதலில் வந்த பதிவர்களில் ஒருவரான சுல்தான் மிகுந்த பொறுப்புடனும்பொறுமையுடன் விவாதங்களில் ஈடுபட்டார். மற்றவர்கள் அப்படியில்லை. 

இறுதியில் விவாதத்தை மேற்கொள்ளும் பொறுப்பை சுவனப் பிரியன் ஏற்றுக் கொண்டார். இவரும் சுல்தான் போலவே விவாதங்களை மரியாதையோடு நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் எனது முந்திய பதிவில் அவர் தன் “சுய ரூபத்தைக்” காண்பித்தார். அப்பதிவின்பின்னூட்டத்தைப் பாருங்கள்.  உங்களுக்கே அது தெள்ளெனத் தெரியும். அவரது வார்த்தைகள்  எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும்அச்சத்தையும் கொடுத்தன. ஆச்சரியம் - இதுவரை  அவர் கட்டிக் காத்த பொறுமை காணாமல் போனதுஅச்சம் - நாளை நம் இந்திய சமுதாயம் பற்றியது.

இதற்கு மேல் நான் என்ன சொல்ல ....



ஆனந்த விகடன் -17.8.14
இந்தியாவில் அல் கொய்தா
பாரதி தம்பி

 ***ஐ எஸ்  எஸ் அமைப்பு  தனது இஸ்லாமியப் பேரரசின் வரைபடத்தில்  இந்தியாவையும் கொண்டு வந்துள்ளதுஇப்போது அல் கொய்தாவும் அந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்த்திருக்கிறது.எஸ்.எஸ்அமைப்பு உலகளாவிய அளவில் கொடூரமான தீவிரவாத அமைப்பாக வளர்ந்து வருகிறதுஅல்கொய்தாவின் புகழை அது விஞ்சிவிட்ட்துஇந்த நிலையில் தனக்கும் பலம் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக அல் கொய்தாவும் போட்டிக்கு வெளியிட்ட அறிவிப்பு தான்இந்தியாவில் கிளை தொடங்கியுள்ளதாக வெளியான செய்தி என்கிறார்கள் போர் செய்தியாளர்கள்.

***எழுத்தாளர் எச்பீர் முகமதுஅல் கொய்தா – அரபிப் பெயரைக் கொண்டிருப்பதால் அப்பாவித்தனமாக அதன் விபரீதம் புரியாமல் அரபு அல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த மாதிரியான ஆயுதக் குழுக்கள் மீது அனுதாபம் கொள்கின்றனர்அந்தத் தாக்கம் இந்தியாவிலும் குறிப்பிட்ட அளவில் இருக்கிறதுகுறிப்பாக தூய்மைவாத சிந்தனையைக் 
கொண்டவர்கள் பலரும் அதற்குப் பலியாகி விடுகின்றனர்.

***இந்தியர்கள் ஆகிய நமது அச்சம் எல்லாம்மத்திய கிழக்கு அமைதியற்ற பிரதேசம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது போலஇந்தியாவை இவர்கள் மாற்றிவிடக் கூடாது என்பது தான்.


THE HINDU - 15.8.14 

***Mufti Abul Qasim Nomani, director of the seminary said, ‘இஸ்லாம் வன்முறையற்ற ஒரு மதம்உலகெங்கும் அமைதி தழைக்க உழைக்கும் மதம்அமைதியை நாடும் இம்மதத்தினர் ஒரு போதும் தீவிரவாதிகளின் கைப்பொம்மையாக மாற மாட்டார்கள்.

***மத்திய உள்துறை அமைச்சர் நாடு முழுவதும் விழிப்போடு இருக்க வேண்டுமெனக் கேட்டுள்ளார்பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்ச நிலையில் இருக்கும்படி ஆணையிட்டுள்ளார்.


 THE HINDU -  15.8.14



This image taken from a video 
released by the Islamic State (IS) purportedly shows footage of
 British aid worker David Haines.

பிரித்தானிய David Haines .எஸ்..எஸ்கொடூரமாகக் கழுத்தை வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்இதைக் காண்பித்த தொலைபேசிக் காட்சியில் இதே போல் இன்னொரு பிரித்தானியரும் விரைவில் கொல்லப்படுவார் என்ற செய்தியும் வந்துள்ளது.

THE HINDU  -  13.8.14

ஜிகாதி தீவிரவாதிகளின் வளர்ச்சியினை இந்தியா கண்டும் காணாமலும் இருந்து விட முடியாதுநம் நாட்டின் அமைத்திக்கு அது எந்த பங்கமும் கொண்டு வராமல் இருக்க நாம் விழிப்போடு இருக்க வேண்டும்.
 ***.எஸ்..எஸ்அல்கொய்தாவிலிருந்து பிரிந்த சில ஆண்டுகளிலேயே மிகவும் கொடூரமான ஒரு குழுவாகவும்மிகவும் தீவிரவாத அடிப்படைத் தன்மையோடு இருப்பதாகவும் வளர்ந்து விட்டதுஇஸ்லாமியப் பேரரசு – அது என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும் – ஒன்றினை வளர்த்தெடுக்க இக்குழு முழு முயற்சியோடு முனைந்துள்ளதுஇந்த முயற்சியில் ஐ.எஸ்..எஸ்பல இளைஞர்களைத் தன் பக்கம் இழுத்திருப்பதும் கண்கூடுபின் லேடன் கொல்லப்பட்ட 2011க்குப் பிறகு வீழ்ந்த இயக்க வெறி மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது.
***கல்யாணியில் உள்ள மருத்துவரின் மகனும்மகாராஷ்ட்ராவில் பொறியாளனாகப் படித்துக் கொண்டிருந்த அரீப் மஜ்ஜீத் ஈராக்கில் நடந்த போர்க்களத்தில் மாண்டு போனான் என்ற செய்தி நமக்கு மிகவும் ஆச்சரியமான,அதிர்ச்சியான ஒரு செய்தி.
***இந்திய முஜாகெதீன் நடவடிக்கைகளைக் கவனித்து வந்தால் கடந்த சில ஆண்டுகளில் கர்நாடகாதமிழ்நாடுமகாராஷ்ட்ரா.பிமாநிலங்களில் இருந்து பல இளைஞர்கள் வெளி நாட்டுத் தொடர்புகளோடு இருப்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறதுஇந்தக் குழு லஸ்கர்--தொய்பாவோடும்பாகிஸ்தானின் I.S.O.வோடும் தொடர்புடையது என்பதும் தெரிந்ததே.
***மத்திய கிழக்குப் பகுதிக்கு அடிக்கடி பயணம் செய்வோர்கள் மிகுந்த கண்காணிப்பில் இருக்க வேண்டியவர்களாக உள்ளார்கள்.
***நமது மாநிலக் காவல் துறைகளின் ஆளுமை இதுவரை ஒரு பெரும் கேள்விக்குறியாகவே உள்ளதுபெரும் தீவிரவாதச் செயல்களை விரைந்து கண்டுப் பிடிப்பதிலோஅவைகளை முறியடிப்பதிலோ அவைகளின் திறமைகள் கேள்விக்குரியதே!
***நாட்டின் பல பகுதிகளிலிருந்து கிடைக்கும் பல செய்திகள் நம் இளைஞர்கள் பலர் மத்திய கிழக்கு நாடுகளின் போதனைப்பிடிக்குள் இருக்கின்றார்கள் என்பதைத் தெளிவாக்குகிறது.
 (Dr. R.K. Raghavan is a former CBI Director, and D. Sivanandhan, a former Commissioner of Police, Mumbai, and former DGP, Maharashtra.)

வினவு - 12.8.14

***தங்களை உண்மையான இஸ்லாமிய விடுதலை இயக்கமாகச் சித்தரித்துக் கொண்டு தங்களை யாராலும் வெல்ல முடியாது என்ற பிரச்சாரத்துடன் இணையத்தின் மூலமாக சன்னி முஸ்லிம்களை இவ்வியக்கத்தினர் ஈர்க்கின்றனர்.
***இராக்கிலிருந்து மீண்டு வந்த இந்தியச் செவிலியர்கள் அளித்த பேட்டியைக் குறிப்பிட்டுஇஸ்லாத்தின் நெறிப்படி நடப்பவர்கள்தான் பெண்களைக் கண்ணியமாக நடத்துவார்கள் என்றும்.எஸ்இயக்கத்தினர் இஸ்லாமிய மார்க்க நெறிப்படி நடக்கும் புனிதப் போராளிகள் என்றும் சில சன்னி மார்க்க முஸ்லிம்கள் இந்த இயக்கத்தினரை ஆதரிக்கின்றனர்
***அல் கய்தாவைவிட இன்னும் மூர்க்கமாக இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதாகக் காட்டிக் கொண்டு இப்போது புதிதாக ஐ.எஸ்என்ற சன்னி மார்க்க இயக்கம் முளைத்துள்ளது. 
***யார் இந்து என்று இந்துவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்கும்பல் கூறுவதைப் போலத்தான்யார் முஸ்லிம் என்பதை இந்த ஐ.எஸ்பயங்கரவாத இயக்கத்தினரும் வரையறுக்கின்றனர்ஷியாசன்னிசுஃபி என வேறுபட்ட இஸ்லாமிய மார்க்கங்கள் இருந்த போதிலும்வாஹாபி சன்னி மார்க்கம் மட்டும்தான் உண்மையான இஸ்லாமிய மார்க்கம் என்று கூறிஇதர இஸ்லாமிய மார்க்கத்தினரின் மசூதிகள் மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தி அவற்றைத் தரைமட்டமாக்கியுள்ளனர். 


 THE HINDU  -  11.8.14

A jihadi battle of brands

***
 ***ராணுவ வெற்றிகளைக் கணக்கிடும்போது ஐ.எஸ்..எஸ்உச்சத்தில் இன்று நிற்கிறதுஆனால் அல்கொய்தா இன்னும் தன் பழைய வெளிச்சத்தில் தான் நிற்க வேண்டியதுள்ளதுசமீபத்திய தொலக்காட்சியில் வந்த செய்தி அல்கொய்தாவின் தலைமையின் ஆதங்கத்தைத் தெளிவாகக் காண்பிக்கிறதுஉலக ஜிகாதிய அமைப்பில் தான் பின் தங்கி விட்டதையும்அதை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்கிற அதன் அவசரத்தையுமே இது காட்டுகிறதுஜிகாதியர்களுக்கு நடுவே உள்ள போட்டிபுதிய ஜிகாதிகளைச் சேர்க்கும் அவசரம்பணம் திரட்டுவதில் தீவிரம் என்ற எல்லாவற்றிற்கும் இது ஒரு அவசர விளம்பரம்.

***இரு ஜிகாதி குழுக்களுக்கும் நடுவே உள்ள போட்டியை இது மிகத் தெளிவாகக் காண்பிக்கிறதுபெரும் தீவிரத்தோடு தங்களுக்கு எதிரான இஸ்லாமியர்களையும் தாக்கி அழிக்கும் ஐ.எஸ்..எஸ்ஒரு புறம்இன்னொரு பக்கத்தில் இஸ்லாம் அல்லாத காபிர்களை மட்டும் தாக்கி அழிக்கும் அல் கொய்தாஇப்போட்டி ஒன்றும் புதிதல்ல. 2005லேயே  மெசபொட்டோமையாவில்  இப்போட்டி ஆரம்பித்து விட்டது.

***இப்போது இந்த இரு குழுக்களும் புதிய ஜிகாதிகளைச் சேர்ப்பதிலும்பணம் திரட்டுதலிலும் போட்டியிடுகிறார்கள்இஸ்லாமியர்களை இழுப்பதிலும் போட்டி தான். 2011ல் ஒசாமா கொல்லப்பட்ட பின் அல் கொய்தா இப்போட்டியில் பின் தங்கியே உள்ளது.
***இந்தியாவில் வேரூன்றி நிற்கும் சூபியினரையும் தம்முள் இழுக்க அல் கொய்தா விரும்புவது அவ்வளவு எளிதில் நடக்கக் கூடியதல்லசரியாகக் கையாளப்படாவிட்டால் இந்த ஜிகாதிப் போட்டியில் இந்தியா எதிர்வினையாற்றக் கூடும்.


*****
THE HINDU - 10.8.14

***அல்கொய்தாவின் இந்த அறிக்கை இந்தியாவிற்கு ஒரு எச்சரிக்கை மணி.

*** தோல்வியடைந்த அல்கொய்தா இப்போதைக்கு ஒரு அடிபட்ட வேங்கைஅதனால் அதன் ஒவ்வொரு செயலும் அச்சுறுத்தும் பரிணாமத்தில் வளர்ந்துள்ளது.

***ஜிகாதி Sayed Zabiuddin Ansari கொடுத்த வாக்குமூலத்தின்படியும்ஒசாமாவிற்கும் Hafiz Saeedக்கும் நடுவில் இருந்த தொடர்பு மோலமும்  2008ல் நடந்த மும்பைக் கலவரத்தில் அல்கொய்தாவின் முக்கியப் பங்களிப்பு தெளிவாகத் தெரிகிறது. 2010ல் புனேவில் நடந்த குண்டு வெடிப்பிற்கு அல் கொய்தா உரிமை கொண்டாடினாலும் அங்கு வைத்த குண்டு ஒரு இந்திய முஜாஜிகிதியின் மூலம் தான் வைக்கப்பட்டது.

***Then there’s the fact that al-Qaeda views India as a ripe opportunity — both as a source of recruits and as a target in its own right. India has a large and marginalised Muslim population; a history of periodic communal violence; and a weak state along its periphery.
***இந்தியா புதிய ஜிகாதிகளை உருவாக்க தகுந்த இடம் என்றும்இங்கிருந்து இளைஞர்கள் பலரைத் தங்கள் பக்கம் எளிதாக இழுக்க முடியும் என்றும் அல்கொய்தா நம்புகிறது.
***இதுவரை  80 இந்திய இளைஞர்கள் ஜிகாதிகளாக சிரியாஈராக் சென்றுள்ளனர்பிரிட்டனிலும்பிரான்சிலும் இருந்து சென்றுள்ளவர்களோடு கணக்கிடும்போது இது மிகக் குறைவே.

*** இதுவரை ஈராக் செல்ல விசாவிற்காக 6000 இந்திய இஸ்லாமியர்கள் விண்ணப்பத்திள்ளுனர்ஆயினும் இதில் பெரும்பான்மையோர் ஷியா முஸ்லீம்கள்சன்னி ஜிகாதிகளுக்கு எதிராகப் போராடவே இவர்கள் விண்ணப்பத்திருக்கிறார்கள்.
***ஒஸாமா இருந்த காலத்தை விடவும் இப்போது இந்தியா பெரும் ஈர்ப்பைக் கொண்டுள்ளதுஇன்று உலகில் வளர்ந்து வரும் நாடுபொருளாதாரத்திலும்ராணுவ வளர்ச்சியிலும் பெரும் வளர்ச்சி கண்டு உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.

***India is now a far more attractive target than it was when Osama bin Laden first appeared on the scene. It is a rising economic and military power with global resonance, a major partner of the United States, and an increasingly connected, porous nation.
***** 


The Hindu 6.8.14

***இதுவரை அல்கொய்தா தன் கரங்களை இந்தியாவிற்குள் நீட்டாமல் இருப்பதற்கான காரணம் இந்நாட்டின் ஜனநாயக அமைப்பும்மதச் சார்பின்மையும்பன்முகச் சமுதாய நிலையும் தான்.
***அல்கொய்தாவின் இவ்வறிக்கை போலியில்லை என்று அரசு கருதுகிறதுநம் நாட்டு இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்கவே அல்கொய்தா இதன் மூலம் முயல்கிறதுஅல் கொய்தா இந்தியாவில் ஜிகாதி கொள்கைகளை எளிதாகப் பரப்ப முடியும் என்று கருதுகிறது.
***அல்கொய்தாஅல்கொய்தாவிலிருந்து கிளைத்த ஐ.எஸ்என்ற இரு குழுவினரின் பகைமை இதன் மூலம் வெளிப்படுகிறதுஅல்கொய்தா தன்னிலிருந்து வளர்ந்த ஐ.எஸ்ஸை ஒதுக்கி அதனோடு உள்ள அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்கிறது.
***இஸ்லாமிய சமுகத்தில் அதிருப்தியோடு உள்ளவர்களின் நடுவே தன்னை வளர்த்துக் கொள்ள முடியுமென அல் கொய்தா நம்புகிறது.
****


https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEik4sLQ3kvdNADCvV03SFQCLojme8YU1M22W65eEorXcHGUCAUhJd1BhsjAyLhT42GlnsIwKr4GNhhkwuI_mfeNa8R0Rj0OD65IO-oiOQ_2slexjW8niXrngDRmOpbkNny5SI6Csu6ejTZ522VvxPpABzg7ZkdcSmY1Ip-trVaMH3Jb_iG6L_jrID8iaUGR


2 comments:

இராய செல்லப்பா said...

அன்புடையீர்,
வணக்கம். நலமா?

இன்றைய ‘செல்லப்பா தமிழ் டயரி’ யில் புதிய பதிவு ‘அபுசி-தொபசி-45’ வெளிவந்துள்ளது. அதில் தங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அன்புகூர்ந்து படிக்க வேண்டுகிறேன்.

கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்:
http://chellappatamildiary.blogspot.com/2014/09/107-45.html

படித்து, கருத்துரை வழங்கினால் மகிழ்ச்சியடைவேன்.

அன்புடன்,
இராய செல்லப்பா
(Y.Chellappa) சென்னை.

தருமி said...

Chellappa Yagyaswamy, thanks a lot .....

Post a Comment