Saturday, September 05, 2015

861. என் நூலைப் பற்றி வந்த முதல் பின்னூட்டக் கருத்து




*


என் நூலில் தனி முகவரி ஒன்று கொடுத்து, நூலைப் படித்து முடித்ததும் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கேட்டிருந்தேன். முதன் முதல் வந்தது நண்பர் D.S.L.  அவர்களின் 'கண்ணோட்டம்'. சிறப்பான நன்றி அவருக்கு. 





முதலில் பாராட்டுகள்உங்களின் துணிவான முயற்சிக்கு. 

பொதுவாக, ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்ற நிலையில்  பெரும்பாலானோரின் வாழ்க்கை ஓட்டம் முடிந்துவிடுகிறது . ஏன் பிறந்தோம்? எதற்காக  வாழ்கிறோம்? ஏன் இறக்கிறோம்? இறந்தபின் நடப்பது என்ன? என்றெல்லாம் கேள்விகள் கேட்டு விடை காண முயல்வதுமில்லை; ஆர்வமும் இல்லை. யாரையும் குறை சொல்ல முடியாது.

கோயில், மசூதி, தேவாலயம் போன்ற வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்கிறோம். இயந்திரத்தனமாக வழிபாடு செய்கிறோம். ஏதோ கடமையை முடித்துவிட்ட  மனநிறைவுடன் வருகிறோம். மதம், கடவுள்  போன்றவற்றைப் பற்றி சிந்திப்பதும் இல்லை. நமது நம்பிக்கைகள் பல, ரத்தத்தோடு கலந்து, உணர்வோடு உறைந்துஎளிதில் மாற்ற முடியாத கற்பாறைகளாக, மனதின் அடித்தளத்தில் கிடக்கின்றன. பகுத்தறிவிற்கு, இங்கே வேலை இல்லை.

'மதங்களும், சில விவாதங்களும் மனக் குட்டையில் வரவேற்கத்தக்க சலனங்களை உருவாக்குகின்றன; அலைகளை எழுப்புகின்றன.

மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும்  கண் முன்னே நடக்கின்ற அநியாயங்களைக் கண்டும் காணாத மாதிரி நடித்தால், நம்மைவிட மோசமான வில்லன்கள் இருக்க முடியாது.   நம்மை முட்டாள்களாக்கும் மூடப்பழக்கங்களையும்  துருப்பிடித்தக் கருத்துக்களையும்  குப்பைத்தொட்டியில் போட 'தருமியின்' எண்ணங்கள் நிச்சயமாக உதவும்.

விருப்பு வெறுப்பின்றி நடுநிலைக் கண்ணோட்டத்துடன் 'தருமி' எழுப்பும் கேள்விகள் நம்மை சிந்திக்க தூண்டுகின்றன.  

'கடவுள் இருக்கின்றாரா? இருந்தால் எங்கே இருக்கிறார்? மனிதன் கேட்கிறான்'.

'கருணை பொங்கும் உள்ளம்; அது கடவுள் வாழும் இல்லம்,
கருணை மறந்தே திரிகின்றார்; தினம் கடவுளைத் தேடி அலைகின்றார்'.

மதம் தூக்கி எறியப்படவேண்டும்,

மனிதம் தழைக்க வேண்டும்.

இத்தகைய புத்தகங்கள் அந்த இலக்கை நோக்கி நம்மை வழி நடத்திச் செல்ல உதவும்.






Prof. D.Samuel Lawrence  

9940752852





 *






10 comments:

KILLERGEE Devakottai said...

இயந்திரத்தனமாக வழிபாடு செய்கிறோம்
இதுதான் உண்மை அருமையாக சொன்னீர்கள்
நூல் கிடைக்கும் முகவரி தரலாமே....
தமிழ் மணம் 1

தருமி said...

KILLERGEE,
info is here....

http://dharumi.blogspot.in/2015/09/blog-post.html

கரந்தை ஜெயக்குமார் said...

ஆன் லைனில் வாங்குவதற்கு பணம் செலுத்தியுள்ளேன் ஐயா
புத்தகம் கிடைத்ததும்,எழுதுகின்றேன் ஐயா
வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

தம +1

Unknown said...

இன்றைய அரசுகள், பற்பல கட்சிகள் பகுத்தறிவை தவிர வேறு எதை வேண்டுமானாலும் தருவார்கள். பகுத்தறிவை தந்து விட்டால் அவர்களின் சுக போக வாழ்விற்கு தடை ஏற்படும் என்பதால்.

தருமி said...

thanks, jeyakumar.
awaiting your remarks / comments / ........

சார்லஸ் said...

சார்

மதுரை தமுக்கம் மைதானம் ஸ்டால் 127 சென்றேன் . மதங்களும் சில விவாதங்களும் புத்தகம் வாங்கிவிட்டேன் . இனிமேல்தான் வாசிக்க வேண்டும் . வாசித்து முடித்த பிறகு கருத்துரையிடுகின்றேன் .

வலிப்போக்கன் said...

கால தாமதமாக அறிந்துள்ளேன்...அய்யா...தங்கள் .நூலை வாங்கி படிக்க முயல்கிறேன் அய்யா....

தருமி said...

வலிப்போக்கன்
//வாங்கி படிக்க முயல்கிறேன் ..// - அவ்வளவு கடினம் என்கிறீர்களோ?!

சும்மா சொன்னேன். படித்து தங்கள் கருத்தைக் கூற அழைக்கிறேன்.

Geetha said...

வணக்கம்அய்யா.
புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.நன்றி

Post a Comment