Monday, June 25, 2018

985. F I F A '18 ... 3






*


23.6.18
இரவு 10:30 - 2:00
ஸ்வீடன்  vs  ஜெர்மனி

இந்த நிமிடம் வரை மிகவும் பிடித்த விளையாட்டு அணி மெக்ஸிகோ. அதனிடம் முதல் சுற்றில் ஜெர்மனி தோற்றது. அடுத்த ஆட்டம் ஸ்வீடனோடு விளையாடியது. மிகவும் முக்கிய ஆட்டம்; இதில் தோற்றால் ஜெர்மனி வண்டியேற வேண்டியது தான் என்பதால் இரவாயிருந்தாலும் உட்கார்ந்து பார்க்க முடிவெடுத்தேன்.. ஆட்டம் சுறுசுறுப்பாக ஆரம்பித்தது.

32ம் நிமிடத்தில் ஸ்விடன் ஒரு கோல் போட்டது. அதற்கு ஒரிரு நிமிடங்களுக்கு முன்பே ஸ்வீடனுக்கு ஒரு பெனல்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஸ்வீடன் பந்தை வேகமாகக் கொண்டு வந்த வீர்ரை ஜெர்மன் கோல் கீப்பர் நேருக்கு நேர் மோதி விழவைத்து கோல் போடுவதைத் தடுத்துவிட்டார். நடுவர் மட்டுமல்ல ..VAR - video aided refree - நன்றாகவே தூங்கி விட்டார் போலும். 39வது நிமிடம் ஜெர்மன் ஆட்டக்காரருக்கு நல்லதொரு வாய்ப்பு. ஆனால் அடித்த பந்து மிக மிக மெல்ல ஊர்ந்து வெளியே நகர்ந்து போனது. பாதி ஆட்டம் வரை 1 : 0 என்ற நிலையிலேயே ஆட்டம் தொடர்ந்த்து.

அடுத்த பாதியின் 48வது நிமிடத்தில் ஜெர்மன் சமன் செய்தது.  அப்படியே போய் ஜெர்மன் தோற்று விடும் அல்லது சமன் மட்டும் செய்யும் என்று தான் நினைத்தேன். (ஏன் ஜெர்மன் தோற்க வேண்டுமென நினைத்தேன் என்று எனக்கே காரணம் தெரியவில்லை!)

81வது நிமிட்த்தில் இரண்டாவது மஞ்சள் அட்டை வாங்கி, அதனால் அது சிகப்பு அட்டையாக மாற ஒருவர் வெளியேறினார். இப்போது ஜெர்மன் பத்து ஆட்களோடு விளையாடியது. பந்து மாறி மாறி இருபுறமும் போய்க்கொண்டிருந்தது.

90 நிமிடத்தில் ஆட்டம் முடியாததால் மீண்டும் அதிகப்படியாகக் கொடுக்கப்பட்ட நேரத்தில் விளையாடினர். 92 நிமிட்த்தில் ஸ்வீடன் தப்பித்தது என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் 94வது நிமிட்த்தில் ஜெர்மனிக்கு ஒரு பெளல் ஷாட் கிடைத்தது. ஸ்வீடன் கோல் சதுரத்திற்கு வெளியில், பக்க வாட்டில் எல்லைக்கு வெகு அருகே இருந்து பந்தை அடிக்க ஜெர்மனிக்கு வாய்ப்பு கிடைத்தது. அணித் தலைவர் அடித்த அடி உயரமாகப் போய் வலையில் வலது மூலையில் நுழைந்து கோலானது. ஜெர்மன்: ஸ்வீடன் = 2 : 1


ஜெர்மனிக்கு உயிர் வந்தது. இன்னும் தொடர அதற்கான வாய்ப்புகள் உள்ளன.

*****


  *

1 comment:

வருண் said...

நீங்க போன 2014 வோல்ட் கப் (கோட்சே கோல் மறக்க மாட்டீங்க) லயே அர்ஜென்டினாக்கு ரூட் பண்ணது ஞாபகம் இருக்கு.

ஸ்வீடன் ஜெர்மனி கேம் பார்த்தேன். டோனி க்ரூஸ் கோல், கோட்சே கோலை விட முக்கியமான ஒன்னு.

நான் ஜெர்மனிக்கு ரூட் பண்ணுவதால், நீங்க வருத்தப் படும்போதெல்லாம் நான் சந்தோஷப் பட்டேன். நீங்க சந்தோஷப்பட்ட போதெல்லாம் நான் சோகமா இருந்தேன்.

We know someone's happiest minute is also saddest minute for another human being in the same planet. We are the one pair of "such individuals" I think while watching the Sweden - Germany game! :)

Neither do I know why I like Germany but I do like them a lot! :)

I think, when playing against wrecked 10-men German machine, Sweden should have attacked rather than paying defense during the last 15 minutes (after defender Boateng was sent off)!

Post a Comment