Friday, September 04, 2020

1108. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 7


ஏனைய பதிவுகள்:

                             (Fig: 2)Columns 9, 10, 11, and 12 of the cancel-sheet
                                                           in Codex Sinaiticus.             
                        

வரலாறு மிகவும் முக்கியம், நம்பிக்கையாளர்களே!

 

பொதுவாக, எனது கிறித்துவ மதக் கட்டுரைகளை “பெரிய” நம்பிக்கையாளர்கள் வாசிப்பதில்லை. இருப்பினும் இந்தக் கட்டுரையை வாசிக்கக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், நிச்சயமாக ஒரு சாதாரண கிறிஸ்தவனுக்கு, கிறிஸ்துவ நம்பிக்கையாளனுக்கு கீழ்க்கண்டவை அனைத்துமே நிச்சயமாக மிகப் புதியதாகவும், ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கக் கூடியவைகளாகவே இருக்கும் என்று நினைக்கின்றேன். இந்த வேண்டுகோளின்படி வாசிப்பவர்கள் அனைவரும் பெரிய மனது செய்து இதில் சொல்லிய விஷயங்கள் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயங்களா  அல்லது தெரியாதவைகளா என்று மட்டும் சொன்னால் அது என் புரிதலுக்குத் துணையாக இருக்கும். 

இக்கட்டுரையில் நூலாசிரியர் மாற்கு 16:9-20 என்ற வசனங்களில் 16:8 மட்டுமே உண்மையான வசனங்கள் என்றும், 9-20 வசனங்கள் பிற்சேர்க்கை என்கிறார். அதை உறுதிப் படுத்த நானும் சில ஆய்வுகளைச் செய்தேன். ஆய்வுகளில் கிடைத்த செய்திகளை இக்கட்டுரையில் நடுவே நான் தந்துள்ளேன்.

 

இயேசுவின் திருத்தூதர்களாகிய அப்போஸ்தலர்களும் அவர்கள் செய்த பணிகளும் (65) 

இயேசு தன் அப்போஸ்தலர்கள் /திருத்தூதர்களான பன்னிருவரையும் அனுப்புகையில் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால், “நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும் காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரேல் வீட்டாரிடத்தில் போங்கள்”. (மத் 10:5,6) 

அதாவது, இயேசுவும் புறஜாதியாரிடம் போகவில்லை; தம்முடைய சீடர்களும் அவர்களிடம் சென்று பணியாற்ற இயேசு அனுமதிக்கவில்லை. ’மெசியா’ என்பவர் இஸ்ரேயலர்களுக்கு மட்டுமே சொந்தமானவர்.(66) 

நம்புகிற யூதர்களும் நம்பாத யூதர்களும்

’கிறிஸ்து’ , மற்றும் ‘கிறிஸ்தவர்’ என்னும் சொற்கள் கி.பி. 49க்குப் பின்னரே நடைமுறைக்கு வந்தன. இந்தச் சொல்லைப் பயன்படுத்தியவர், 36 வாக்கில் பைபிளில் அறிமுகமாகிற பவுல் என்பவர் ஆவார்.

இயேசுவை புற ஜாதியாருக்கும் அறிமுகப்படுத்திட வேண்டும் என்ற பவுலின் தீர்மானத்துக்குப் பின்னரே இந்த இரு சொற்களும் பயன்பாட்டுக்கு வந்தன.(67)

மெசியா செய்ய வேண்டிய பணிகளுள் எதையும் இயேசு செய்யவில்லை என்பதால் இயேசுவை மெசியா என நம்பாதவர்கள் ‘நம்பாத யூதர்கள்’ஆயினர். பழைய ஏற்பாடு அறிவிக்கும் மெசியா இன்றுவரை வரவில்லை என்றும், விரைவில் வந்து விடுவார் என்றும் இன்றுவரை அவர்கள் நம்பி காத்திருக்கிறார்கள். இன்றைய யூதர்கள் அவர்களே; அவர்களுடைய மதம் யூத மதம். அவர்களுக்கு என சொந்தமாக யெகோவா என்ற கடவுள் இருக்கிறார்.

பழைய ஏற்பாட்டு நூல்களில் யூதர்கள் இழந்த நாட்டினைத் திரும்பப் பெறுதல் என்பதே “விடுதலை” அல்லது “இரட்சிப்பு” எனப்பட்டது. ஆனால் புதிய ஏற்பாட்டில் அது ”பரலோக ராஜ்ஜியம்” என்று கடவுள் சார்ந்த விஷயமாக மாற்றப்பட்டது. (68)

அதனால் தான் இயேசு உயிரோடு எழுப்பப்பட்ட காலத்தில் கூட, தங்களுடைய நாட்டின் விடுதலை எப்போது தங்களுக்குக் கிடைக்கும் என்றுதான் அவரிடம் விசாரித்தார்களே தவிர, ”ஆன்மீக விடுதலை” பற்றி அம்மக்கள் பேசவில்லை. (அப். நட. 1:6) (69)

யூதர்களுக்கு மட்டும் மெசியாவாக இருந்த இயேசு பின்பு புறஜாதியினர் நலனில் அக்கறை கொண்டவராக மனம் மாறியதாகவும், “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் தன்னுடைய நற்செய்தியை அறிவிக்குமாறும்” தன் சீடர்களுக்கு கட்டளை இட்டதாகவும் பைபிளில் எழுதப்பட்டுள்ளது. (மாற் 16:15)  ஆனால் மாற்கு 16:9-20 வரை உள்ள 12 வசனங்கள் உண்மையானவை அல்ல என்றும், Codex Sinaiticus, Codex Vaticanus ஆகிய முக்கியமான பைபிள் பிரதிகளில் இந்த வசனம் இல்லை என்றும், பிற்காலத்தில் யாரோ எழுதி இவற்றைச் சேர்த்துள்ளனர் என்றும் அறிகிறோம். .. (இதற்கான மேல் விவரங்களுக்குக் கீழே சில இணைய தள முகவரிகளைத் தந்துள்ளேன். பழைய பைபிளின் படங்களும் 16:9-20 இல்லாத பகுதிகளும் அதில் உள்ளன. ஆனாலும் இந்த கிறித்துவ இணைய தளங்கள் இதில் கொஞ்சம் “மழுப்பு வேலை” செய்வதாகவே வாசிக்கும் போது எனக்குத் தோன்றியது.) தமிழ் புரோட்டஸ்டாண்ட் மொழி பெயர்ப்பு, கத்தோலிக்க மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் இந்த வசனங்கள் இல்லை. ஏமாந்து போன சீடர்கள் இதனால் இரண்டாம் வருகைக் கொள்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள். (யோவான் 16:20) (73) 

உடனே நடக்கும், தங்கள் வாழ்நாளிலேயே கிடைத்துவிடும் (மாற்கு 9:1; மத் 16:20) என்று சீடர்கள் நம்பியிருந்தும் இரண்டாம் வருகை இன்னும் நடைபெறவில்லை.(74)

 பவுலின் அறிமுகம் அல்லது மனமாற்றம், அப்போஸ்தலர் எனப்பட்ட திருத்தூதர்களுடன் அவர் இணைந்து பணியாற்றியது, எருசலேம் சங்கக்கூட்டம்,  பழைய ஏற்பாட்டை அவர் ரத்து செய்தது, அதனால் இயேசுவின் உண்மையான சீடர்களோடு ஏற்பட்ட மோதல், இவற்றால் எழுந்த புதிய சூழ்நிலை காரணமாக பரலோக வாழ்வு இஸ்ரேலியர்களுக்கு மட்டுமே உண்டு என இயேசுவின் சீடராகிய யோவான் நூல் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் …  இவையெல்லாம் பைபிள் வரலாற்றில் ஒரு பின் இணைப்பாகவே உள்ளன. (75)

பவுல் மனமாற்றமும் அதிலுள்ள முரண்பாடுகளும்

அப். நட. 26:12-14; அப்.நட. 9:3-7; அப்.நட. 22:9  -- இரண்டாவது வசனத்தில் கடவுளின் குரலைக்கேட்டவர்களால், மூன்றாவதாகக் கூறப்பட்டுள்ள வசனத்தில் குரலைக் கேட்க முடியாமல் போயிற்று.

யூதர்கள் இயேசுவை மெசியா என ஏற்க மறுத்துவிட்டனர். எனவே புறஜாதியாரிடமாவது அவரைப் பற்றிய பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம் என்பதே பவுலின் கொள்கையாக இருந்தது. (80)

கி.பி 49ல் எருசலேம் சங்கம் (The Council of Jerusalem) கூடி புறஜாதியினரிடம் இயேசுவைப் பிரச்சாரம் செய்யலாம் என பவுலுக்கு ஒப்புதல் வழங்கியது. அதன் பின்னரே கிறிஸ்து என்ற சொல்லை பவுல் பயன்படுத்தினார். (82)

 எருசலேம் சங்கக் கூட்டத்தில் பல விவாதங்கள் நடந்தன. அதில் யூதர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் பணி பேதுருவுடையது; புறஜாதியினருக்கு நற்செய்தியை அறிவிக்கும் பணியைத் தாமே செய்ய வெண்டும் என எருசலேம் சங்கம் முடிவு செய்ததாக பவுல் எழுதினார். (கலாத்தியர் 2:7) புற ஜாதியாருக்கு விருத்தசேதனம் தேவையில்லை என ஒரு சலுகையாக வழங்கப்பட்டது.

பின்பு பவுல் பழைய ஏற்பாடே தேவையில்லை என்று பிரச்சாரம் செய்தார். (அப்.நட. 21:20,21) இதனால் மீண்டும் பல சண்டைகளும் ஆரம்பித்தன.(87) 

புதிய ஏற்பாட்டில் 27 நூல்கள் உள்ளன. அவற்றில் 14 கடிதங்கள் பல்வேறு தரப்பினருக்கும் பவுல் எழுதியவை. இரண்டு லூக்கா எழுதியவை.  மேற்கண்ட  நூல்களில் இயேசுவை ஜாதிய எல்லைக்குள் இருந்து வெளியே மீட்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நூல்களை எழுதிய பவுலும் லூக்காவும் இயேசுவுக்கு நேரடியாக தொடர்பில்லாத அந்நியர்கள். இருவரும் அவரைப் பார்த்தது கூட இல்லை. இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி தங்கள் சொந்தக் கொள்கைகளை அவர்கள் வளர்த்துக் கொண்டார்கள்.

தாயின் வயிற்றில் இருந்தபோது என்னை தமக்கென ஒதுக்கி வைத்து தனது அருளால் என்னை அழைத்த கடவுள் என்று பவுல் எழுதியுள்ளார். (கலாத்தியர் 1:15,16) பின் ஏன் கி.பி. 36 வரை அவர் இயேசுவிற்கு எதிராக படை நடத்தினார்?

அப்.நட. 21:21-24; அப். நட. 21:26 - வசனங்கள் நமக்குப் பல செய்திகளை தருகின்றன.(90)

 

பவுல் - விருத்த சேதனம்

ஆதியாகமம் 17.9-11 - விருத்த சேதனத்தின் முக்கியத்துவத்தைப் பேசுகிறது. ஆனால் பவுல் ரோமர் (2:26-29)  உள்ளத்தால் செய்யும் விருத்த சேதனமே சிறந்தது என்கிறார்.                             மேலும் கலாத்தியர் (5:2) - விருத்தசேதனம் செய்து கொண்டால் கிறிஸ்துவால் உங்களுக்குப் பயனே இல்லை என்கிறார்.

தம் பணிக்கு இடையூறாக இருந்த விருத்தசேதனம், மோசேயின் சட்டம் மற்றும் பழைய ஏற்பாட்டை ரத்து செய்தால் மட்டுமே பிறகு ஜாதியினரிடம் இயேசுவை பிரச்சாரம் செய்வது சாத்தியமாகும் என அவர் கருதினார். இந்த மாற்றத்தை அவரால் நிறைவேற்றவும் முடியவில்லை.ஆனால் மற்றொரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்தார். மெசியாவை கிறிஸ்துவாக மாற்றினார். (93)

 

கிரேக்கத்தில் “கிறிஸ்டோஸ்” (Christos) என்ற சொல் ஜாதிகளைத் தாண்டிய “எல்லோருக்கும் ஏற்புடைய கடவுள்” என்ற பொருள் கொண்டதாகும். இயேசுவை’கிறிஸ்து; என்று அறிமுகம் செய்தார். இதற்கு சீடர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது.ரோமர் 1:2-5 வசனங்கள் மூலம் ஒரு சமரச ஏற்பாட்டிற்கு முயன்றார்.

 

இயேசு தன் இறப்பிற்குப் பின் கிறிஸ்து ஆகி விடுகிறார். அவரே அனைவருக்கும் உரியவர். “கிறிஸ்துவுக்கே தாம் பணியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறேனே தவிர, மெசியாவுக்கல்ல என்று பவுல் தெளிவாகக் கூறுகிறார். தனது நற்செய்தியிலும் இயேசுவின் சாதனை, போதனை பற்றி பவுல் பேசமாட்டார். இயேசுவின் மரணத்திலிருந்து தான் தொடங்குவார்.  தமக்கு  எதிராகப்   பிரிந்துள்ளவர்களிடம் வன்முறைப் பிரயோகம் செய்யவும் தயங்க மாட்டேன் என்று கூறினார்.(1 கொரிந்தியர் 4:21) (96)    

 

இயேசு மரணத்திற்குப் பின் கிறிஸ்துவாக மாறினார். அந்த இரண்டாவது இயேசுவே தம்முடைய இயேசு என்று பவுல் தெளிவுபடுத்தினார். (2 கொரிந்தியர் 11:4,5)                              

 

******

மாற்கு 16:9-20 பற்றிய சில கட்டுரைகளின் இணைய தள முகவரிகள்:

http://www.curtisvillechristianchurch.org/MarkOne.htm  - 

Codex Vaticanus does not contain Mark 16:9-20 but following Mark 16:8 and preceding Luke 1:1 it contains prolonged blank space, including an entire blank column. (Fig:1)

 


                                         (Fig:1) இப்படத்தில் 16:8 வசனங்களுக்குப் 

                     பின் சில வெற்றிடங்கள் உள்ளன.


(Fig: 2)Columns 9, 10, 11, and 12 of the cancel-sheet
in Codex Sinaiticus
.

http://apologeticspress.org/apcontent.aspx?category=13&article=704

One textual variant that has received considerable attention from the textual critic concerns the last twelve verses of Mark. Much has been written on the subject in the last two centuries or so. Most, if not all, scholars who have examined the subject concede that the truths presented in the verses are historically authentic—even if they reject the genuineness of the verses as being originally part of Mark’s account

********

https://www.thegospelcoalition.org/article/was-mark-16-9-20-originally-mark-gospel/  

 For example, between 16:8 and 16:9, the ESV includes these words: “Some of the earliest manuscripts do not include 16:9–20.”

Christians have known for centuries that Mark 16:9–20 might not have originally been part of Mark’s Gospel.

One brother in Christ, a monk named Ephraim who lived in the 900s, we still have several manuscripts he made. Some still have his signature. We can identify others by his handwriting and craftsmanship. Ephraim wasn’t the original author of these particular words. He regularly copied marginal notes that were already in the manuscripts he was using, and this note was one of them. And Ephraim’s manuscript isn’t the only copy of Mark that has this note between 16:8 and 16:9. There are at least 11 others in Greek. The note probably predates 10th-century Ephraim by a few hundred years.

One important fourth-century Old Latin manuscript has a short addition after verse 8 and then ends without verses 9 to 20. A valuable Old Syriac manuscript from the fourth century also ends Mark at 16:8. A Sahidic Coptic manuscript (probably from the fifth century) ends Mark’s Gospel at 16:8 as well. In 1937, E. C. Colwell identified 99 Armenian manuscripts of Mark (of 220 surveyed) ending at 16:8, and a further 33 containing 16:9–20 but with notes expressing doubt about the verses’ authenticity.

****** 

புதிய ஏற்பாடு எழுதப்படுதல்

கி.பி. 52 வாக்கில்தெலோனிக்கருக்கு தம் முதல் கடிட்தத்தை பவுல் எழுதினார். காலத்தால் முதலில் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டு நூல் இதுவே. அதனைத் தொடர்ந்து தம்முடைய 14 கடிதங்களையும் பவுல் கி.பி. 65க்குள் எழுதி முடித்து விட்டார். ஆனால் இயேசுவின் திருத்தூதர்களோ அல்லது மற்றவர்களோ, இதுவரை புதிய ஏற்பாட்டு நூல்கள் எதனையும் எழுதத் தொடங்கிருக்கவில்லை.

பவுலின் நூல்களில் மூன்று விஷயங்கள் தெளிவாக அழுத்தம் விட்டிருந்தன: 

·         விருத்த சேதனம்,  திருச்சட்டம்,  பழைய ஏற்பாடு ஆகியவை தேவையில்லை. (அப். நட.21:28; ரோமர் 10:4; மற்றும் 7:6) 

·         உயிரோடு வாழ்ந்த காலத்தில் இயேசுவில் தூய ஆவி இல்லை. அவர் மரணம் அடைந்த பின்னரே அவரில் பரிசுத்த ஆவியாகிய தூய ஆவி இறங்கியது. அதனாலேயே அவர் மரணத்திலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்தார். (2 திமோத்தேயு 2:8,9;  மற்றும் 2 கொரிந்தியர் 11:4,5; மற்றும் 5:15,16) 

·         இயேசுவை ’கிறிஸ்து’ எனவும், மரணத்துக்குப் பின் கிறிஸ்துவாக மாறிய பின்னரே அவர் அனைவருக்கும் உரிய கடவுள் ஆனார் என நிறுவினார். (1 கொரி 2;2) 

இக்கொள்கைகளை உண்மையான சீடர்கள் மறுத்தனர். இதனால் அவர்கள் நற்செய்தி நூல்களை எழுதினர். கி.0இ. 66ல் மாற்கு முதலாவதாக எழுதினார். லூக்காவைத் தவிர ஏனைய 3 பேர்களும் பவுலுக்குப் பதில் சொல்லுவதற்காகவே நூல்கள் எழுதினார்கள். அப்பதில்களில் முக்கியமானவை:

  1. 1.    மத் 5:17-19 - உலகம் அழியும்வரை பழைய ஏற்பாடு அழியாது என்றும், பவுலின் பிரச்சாரம் இயேசுவின் கொள்கைகளுக்கு மாறானது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.(98)
  2. 2.    எசாயா 7:14 இந்த இறைவாக்கு கி.மு. 700 யூதேயா நாட்டு ஆகாஸ் மன்னனுக்காகச் சொன்னது. மெசியாவிற்கு உரியதல்ல. ஆனால் இதை அவ்வாறு மாற்றி எழுத சீடர்கள் துணிந்தனர். இதனால், இயேசுவின் பிறப்பின் மீதுள்ள மர்மம் நீங்கும்; பிறக்கும்போதே இயேசுவின் பரிசுத்த ஆவி இருந்ததாக நிறுவ முடியும். இயேசு பிறந்ததும், திருமுழுக்கு பெற்ற பொது அவரில் பரிசுத்த ஆவி இறங்கியதாகவும் மத்தேயு எழுதுகிறார். (மத் 1:18; மத் 3:16)
  3. 3.    இயேசுவே மெசியா, கிறிஸ்து அல்ல என்றனர் சீடர்கள். (99) மத் 10:5,6; யோவான் 4:6-9; யோவான் 4:16-18; மத் 15:25;  மத் 15:24; போன்ற வசனங்கள் இயேசு சமாரியர்களை வெறுத்தார் எனவும், இஸ்ரேயலியர்களுக்காகவே கடவுளால் அனுப்பப்பட்டிருப்பதை வலியுறுத்தவே இந்த வசனங்கள்.(101) 

திருத்தூதர்கள் என்னும் அப்போஸ்தலர்கள் பன்னிரண்டு பேர் மட்டுமே. இருந்தும் பவுல் தன்னைத்தானே அப்போஸ்தலர் என அறிவித்துப் பலருக்கும் கடிதம் எழுதுகிறார். அக்கடிதங்களின் முதல் அதிகாரத்தின் இரண்டு வசனங்களைப் படித்தால் அவர் தம்மை ஒரு திருத்தூதனாக முன்னிலைப்படுத்தியிருப்பதைக் காணலாம். (103) இந்தக் காரியத்தை வைத்து யோவானும் பவுலும் தங்கள் எழுத்துகள் மூலம் பொருதிக்கொள்கிறார்கள் என்பதற்கான அத்தாட்சி திருவெளிப்பாடு 2:2; 1 கொரிந்தியர் 9:2 என்பதில் இருப்பதை நூலாசிரியர் விளக்குகிறார். (104)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


No comments:

Post a Comment